புதுடெல்லி: அக்டோபர் 2, 2018, இது ஸ்வச் பாரத் எனப்படும் “தூய்மை இந்தியா” திட்டம் தொடங்கிய நான்காம் ஆண்டையும்; ஐந்தாம் ஆண்டில் இலக்கு எட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய கடைசி ஆண்டையும் குறிக்கிறது.

இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், நிதி அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து, தூய்மை இந்தியா திட்டம் இணையற்ற வெற்றி என்ற பிரதமரின் கருத்தை அறிவித்து வருகின்றன. அதேநேரம், இந்திய தலைமை தணிக்கையாளர் (CAG) அதாவது, அரசின் தலைமை கணக்காளர், குறைந்தபட்சம் இரண்டு மாநிலங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். நிர்வாகத்தில் கணக்கு பொறுப்பில் உள்ள பல்வேறு தரப்பினரும் கூட, இவ்விஷயத்தில் முன்னெச்சரிக்கையாகவே உள்ளனர்.

இத்தகைய கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன? விரிவான புள்ளி விவரங்களையும், நம்பகத்தன்மையையும் பொறுப்பான அதிகாரிகள் மட்டுமே இதை உறுதிப்படுத்த முடியும்.

இரு பிரிவுகள்

பொதுவாக அரசின் தூய்மைப்பணிகளுக்கு இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டம் உண்மையில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்துக்கென இரு மாறுபட்ட வகையில் உள்ளது. ஒவ்வொன்றும் சுயமாக மேலாண்மை தகவல் அமைப்பை (MIS) கொண்டுள்ளன. 2014 அக்டோபரில் இத்திட்டம் தொடங்கிய பின், தூய்மை இந்தியா திட்டம்- கிராமப்புறம் (SBM-G) விரைவில் நிறுவப்பட்டது. அதேநேரம் தூய்மை இந்தியா திட்டம் - நகர்ப்புறம் (SBM-U) குறைந்த ஒதுக்கீடுகள், உத்தரவுகள், நிச்சயமற்ற களம் போன்றவற்றால் தனது பணிகளை மெதுவாகவே தொடக்கியது.

இந்த வேறுபாடுகள், வெளிப்படைத்தன்மைக்கான அதன் வழிமுறைகளில் எதிரொலித்தது. கிராமப்புற திட்டமானது விரிவான, மாறுபட்ட அதிக செயல்திறன் கொண்டதாகவும், கணக்கிடப்படும் வகையில் பலமான கழிப்பறைகளை உருவாக்கியது.

இதேபோல், கிராமப்புற திட்டத்தில் மற்ற தேவைகளும், வேறுபட்ட பகுப்பாய்வுகள் நடத்தி, விரிவாக வழங்கப்பட்டன. இது மொத்த செலவினங்களால் மட்டும் தெரிவிக்காமல், மாதங்கள், கூறுகள் நிதி மூலதனங்களால் பகுக்கப்பட்டன.

இதற்கு நேர்மாறாக, நகர்ப்புற தூய்மை திட்டத்தில் வடிவமைப்பு நுட்பம் அல்லது நிர்வாகம் சிறியதாகவே இருந்தது.

கடந்த இரு ஆண்டுகளில், இந்த இரு திட்டங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. சில மாற்றங்கள் மனித நலன், விருப்பங்களை பொருத்து செய்யப்பட்டிருந்தன. மற்றவை திட்டத்தின் கொள்கை, நோக்கங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தன. இதன் கிராமப்புற திட்டமானது நிலையான வழிகாட்டுதல்கள், சிறந்த கூறுகளை கொண்டிருந்தன.

மாயமாகும் கழிப்பறைகள்

தூய்மை இந்தியா திட்ட நகர்ப்புற செயலாக்கத்தில், உண்மையில் 10.4 மில்லியன் தனிநபர் இல்ல கழிப்பிடம் (IHHL) கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பிப். 2017ல் மாநிலங்கள் கழிப்பறை தேவைகளை மறுபரிசீலனை செய்தன; இதனால், 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் இலக்கு, 36% குறைத்து, 6.64 மில்லியன் என்று குறைக்கப்பட்டது. உதாரணமாக ஆந்திர பிரதேசம் தனது இலக்கை 52% ஆக குறைத்தது. எனினும் சில மாநிலங்கள் ஆரம்பத்தில் கூறப்பட்ட இலக்குகளிலேயே கட்டுமானம் மேற்கொண்டதாக கூறின.

இதன் விளைவாக, 2016 நவ. முதல், 2017 நவ. மாதத்திற்குள் ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மேலாண்மை தகவல் அமைப்பில் (MIS) இருந்து 208,781 நகர்ப்புற வீட்டு கழிப்பிடங்கள் மறைந்து போனது தெரிய வந்தது. இதில் ஆந்திர பிரதேசத்தில் பாதியளவு எண்ணிக்கையில் (131,530) கழிப்பிடங்களின் எண்ணிக்கை குறைந்தன; மற்ற மாநிலங்களிலும் கணிசமான வேறுபாடுகள் இருந்தன. உதாரணத்துக்கு, உத்தரப்பிரதேசம் 37,000, சத்தீஸ்கர் 13,000 கழிப்பறைகளை ஓராண்டில் இழந்தன.

இத்தைகைய திடீர் திருத்தத்திற்கு எந்த விளக்கமும் தரப்படவில்லை. புள்ளி விவரத்தின் தரம், வெளிப்படை தன்மை காரணமாக இந்த பிரச்சனை குறிப்பிடத்தக்கதாக இல்லை. ஆனால் இன்னும், நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்ட இன்னமும் ரூ.6000 மானியம் வழங்கப்படுகிறது.

இது, குறைந்துவிட்ட கழிப்பறைகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, உறுதியற்றதாக இருக்கும் காரணத்தால் கூட எண்ணிக்கையில் விடுபட்டிருக்கலாம். இதே காலகட்டத்தில் சமுதாய மற்றும் பொது கழிப்பறைகளின் (CTs and PTs) எண்ணிக்கை, ஐந்து மாநிலங்களில் 36,754 ஆக குறைக்கப்பட்டன. இதில் முதன்மையானதாக தமிழ்நாடு (32,780) உள்ளது.

கடந்த 2017 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், 10 மாநிலங்களில் சமுதாய மற்றும் பொதுக்கழிப்பிடங்களின் 13,640 ஆக குறைக்கப்பட்டன. இதனால், திட்டத்தின் உண்மையான நோக்கம் நிச்சயமற்றதாகவே தோன்றியது. மேலாண்மை தகவல் அமைப்பு (MIS) அறிக்கையின் ஒரு பக்கத்தில், 2017 டிசம்பர் வரை, அனைத்து 51,734 வார்டுகளிலும் வீடுதோறும் கழிவு சேகரிப்பு 100% எட்டப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே அறிக்கையின் மற்றொரு பக்கத்தில் இந்த விகிதம் 67% (அதாவது, 82,607இல் 55,913) என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தியாவில் 37% கழிவுகள் மட்டுமே மறுசெயல்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது. 2018 ஜனவரி வரை, திடக்கழிவு மேலாண்மை (SWM) நிதியில் 29% ஆன, ரூ.7,366 கோடி மட்டுமே மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற அதிக கழிவுகளை உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு, தூய்மை இந்தியா திட்டத்தில் 5%-க்கும் குறைவான நிதியே, 2018 ஜனவரி வரை விடுவிக்கப்பட்டிருந்தது. 2018 செப்டம்பர் வரை, தூய்மை இந்தியா திட்டத்தில் நகர்ப்புறங்களுக்கு நடப்பு நிதியாண்டில் விடுவிக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் எதுவுமில்லை.

மறைந்துபோகும் புள்ளி விவரம்

தூய்மை இந்தியா நகர்ப்புறத் திட்டம், அதன் கிராமப்புற திட்டத்தை போல் விரிவான புள்ளி விவரங்களை கொண்டிருக்கவில்லை. விவரங்களை சேர்ப்பதற்கு பதில் இம்முயற்சி குழப்பத்தையே உண்டாக்கும்.

தூய்மை இந்தியா கிராமப்புற திட்டம் எப்போதும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதையே கொண்டிருக்கிறது. அது தந்த முக்கியத்துவமற்ற விவரங்களை செயல்படுத்தவும், இடைவெளியை அடையாளம் காணவும் அனுமதிக்கிறது. எவ்வாறாயினும் கடந்தாண்டு கிராமப்புற திட்டமானது எதிர் திசையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த 2018 ஜனவரியில், கணக்கில் கொள்ளும் நடவடிக்கையில் அதன் குறியீடுகள் அப்படியே இருந்தன; முந்தைய 2016-17ஆம் ஆண்டுக்கான விவரங்கள் எடுக்கப்பட்டன. அதிலிருந்து 2018 செப்டம்பர் வரையிலான பெரும்பாலான குறியீடுகள், இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது இது பலவற்றை விடுவித்து, மிகச்சிறிய தகவல்களையே நமக்கு தெரிவிக்கிறது.

இவ்வாறு தகவல்கள் நீக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று யூகிக்க முடிகிறது என்ற போதும், எது நீக்கப்பட்டது, எது சேர்க்கப்பட்டது என்பதை ஆய்வு செய்வது பயனுள்ளதாக இருக்கலாம்.

நிதி செலவினம், கைகளால் கழிவுகளை அள்ளச்செயும் சுகாதாரமற்ற கழிப்பறையை மாற்றுதல் மற்றும் கழிப்பறை கட்டுமானம் குறித்த விவரங்கள் என, நீக்கப்பட்ட வெளியீடு தொடர்பான புள்ளி விவரங்கள், இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன. தற்போது இணையதள அறிவிப்பானது நான்கை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றன. அதாவது கழிப்பறை கட்டுமான இலக்கு எட்டப்பட்டது, பதிவேற்றம் செய்யப்பட்ட கழிப்பறைகளின் புகைப்படங்கள எண்ணிக்கை (உண்மையான புகைப்படமாக இல்லாமல் போனாலும், திறந்தவெளி கழிப்பறை இல்லாத கிராமங்கள் என்று அறிவிக்கப்பட்டவை மற்றும் துப்புரவாளர்களின் (இயக்க பணியாளர்கள்) எண்ணிக்கை ஆகியன இடம் பெற்றுள்ளன.

தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் நன்கு தெரிந்தது தான். இந்தியாவில் 94% கழிப்பறைகள் உள்ளன. 6,00,000 கிராமங்களில் 4,70,000 கிராமங்கள் திறந்த வெளி கழிப்பிடம் (ODF) இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது 4,96,000 திட்ட துப்புரவாளர்கள் உதவியுடன் செய்யப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட தகவல்கள், இன்னும் சுவாரஸ்யத்தையே ஏற்படுத்துகிறது. உதாரணமாக, செயல்பாடு மாற்றும் முயற்சிக்காக, 2014-15ல் ரூ.157 கோடி செலவிடப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதற்கு, 2015-16ல் ரூ.147 கோடி; 2016-17ல் ரூ.124 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் திட்ட இயக்கத்தின் கீழ் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை முறையே 40,030; 1,35,652 மற்றும் 1,67,090 என்று அதிகரித்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதன் பொருளானது, தூய்மை இந்தியா கிராமப்புற திட்டத்தில். 2014-15ஆம் ஆண்டில் கிராமத்திற்கு தலா ரூ.33,382 செலவிட்டு, பல மில்லியன் குடும்பத்தினரிடையே, கழிப்பிடம் தொடர்பான மனமாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. இதற்கான தொகையானது 2015-16ல் கிராமத்திற்கு ரூ.10,837; 2016-17ஆம் ஆண்டில் ரூ.7,421 ஆக குறைந்திருந்தது.

இது குறித்து, சிஏஜி போன்ற சுதந்திரமான மதிப்பீடுகள் பொறுப்புள்ள அரசுக்கு அவசியமானது; ஆனால் அவை மட்டுமே ஒரு துணை பாத்திரத்தை மட்டுமே வகிக்கிறது. இதன் முக்கியத்துவம், நிர்வாக புள்ளி விவரங்களை அடிப்படியாக கொண்டு இருப்பது தான். இந்த புள்ளி விவரங்கள், உள்ளீடு குறித்த தகவல்கள், வெளியேற்றத்திற்கான செயல்பாடுகள் என முழு கட்டமைப்பிற்கான நடவடிக்கையை தெரிவிப்பதாக இருக்க வேண்டும். எதுவானாலும் இத்திட்டம் வெற்றி பெற்றது என எதுவாக கூறப்பட்டாலும் அதை நம்புவது கடினமான ஒன்று.

(தேஷ் பாண்டே, கொள்கை ஆராய்ச்சி மையத்தின் பொறுப்பேற்பு திட்ட மூத்த ஆராய்ச்சியாளர் ஆவார்)a

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.