உலகில் எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட எல்லா உயிர்களையும் தொட்ட கோவிட்-19 ஆண்டாக, வரலாற்றில் இந்த ஆண்டு இடம் பிடித்துள்ளது.. இந்தியாஸ்பெண்ட் தளத்தில் நாங்கள் தடமறிதல் பகுதியை கொண்டு, நான்கு மாதங்களுக்கு கோவிட் வழக்குகள் மற்றும் அதன் போக்குகள் குறித்த தினசரி இரண்டு முறை புதுப்பித்து செய்திகளை வெளியிட்டோம், இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள், கல்வி மற்றும் வாழ்வாதாரங்கள் - குறிப்பாக பெண் தொழிலாளர்கள் இடையே கோவிட்-19 ஏற்படுத்திய தாக்கத்தை மதிப்பீடு செய்தோம்.

ஆனால், கோவிட்-19 உடன் தொடர்பில்லாத பல அருமையான பணிகளையும் நாங்கள் செய்தோம்: சுற்றுச்சூழல் அனுமதி மற்றும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அவை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றிய ஐந்து பகுதித் தொடர்; காவல் மற்றும் நீதி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆழமான ஐந்து கட்டுரைகள்; பொதுத்தரவுகளில் உள்ள இடைவெளிகள் மற்றும் அவை கொள்கை வகுப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றிய மற்றொரு தொடர்; மற்றும் பணியாளர்களில் பெண்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட விசாரணை ஆகியன அடங்கும்.

நாங்கள், மனநல ஆரோக்கியம் குறித்த தொடரை (முதல் கட்டுரையை இங்கே பார்க்கவும்) மற்றும் சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் சிந்தனை பற்றிய பதினைந்து வார செய்திமடலான ரிசர்ச்வைர் (ResearchWire) ​​ஆகியவற்றையும் தொடங்கினோம்.

உங்கள் விடுமுறை வாசிப்பு பட்டியலில் நீங்கள் சேர்க்கக்கூடிய இந்த திட்டங்களில் சிலவற்றை இங்கே காணலாம்:

காவல்துறை மற்றும் நீதி சீர்திருத்தங்கள்

காவல்துறை , நீதித்துறை மற்றும் சிறைத்துறை சீர்திருத்தங்கள் குறித்த சிறப்பு கட்டுரைகள் திட்டத்தில், இந்தியாவின் சட்டம் ஒழுங்கு இயந்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் - கொள்கை மட்டத்திலிருந்து, களத்தில் இருந்து தீர்வுகளை கொண்டு வருகிறோம்.

காவல்துறை சீர்திருத்தங்கள் தொடர்பான 14 ஆண்டுகள் உச்சநீதிமன்ற உத்தரவுகளை ஒரு மாநிலமும் பின்பற்றவில்லை. ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து பேர் போலீஸ் அல்லது நீதிமன்றக் காவலில் இறக்கின்றனர்,ஆனால் தரவு பற்றாக்குறையால், இந்த வழக்குகளில் சிலரே குற்றவாளிகளாக்கப்படுகின்றனர். மேலும், போலிஸ் காவலில் உள்ள ஐந்து பேரில் மூன்று பேரின் மரணங்கள், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நிகழ்கின்றன. கேரள காவல்துறையில் பெண்களின் குறைந்த விகிதம் 2019 அறிக்கையில் அதன் காவல்துறையின் செயல்திறனைப் பற்றிய தரவரிசையை பாதித்தது.

10 கைதிகளில் ஏழு பேர் விசாரணை கைதிகள், ஒவ்வொரு மூன்றாவது விசாரணை கைதியும் தலித் அல்லது ஆதிவாசி, அவர்களால் பெரும்பாலும் ஜாமீன் பெற முடியாது. இந்தியாவின் மக்கள் தொகையில் 80% க்கும் அதிகமானோர் இலவச சட்ட உதவிக்கு தகுதியுடையவர்கள், ஆனால் 1995ம் ஆண்டு முதல், 1.5 கோடிக்கும் குறைவான மக்களால் மட்டுமே இதை அணுக முடிந்தது. சிறையில் அடைக்கப்பட்ட தாய்மார்களுடன் சிறைகளில் வசிக்கும் சுமார் 2,000 குழந்தைகள், ஒரு இயல்பான குழந்தைப்பருவத்தை பெறுவதற்கு போராடுகிறார்கள்.

பாலியல் குற்றங்களுக்கான மரண தண்டனைகள் அதிகரித்து வருகின்றன, ஆனால் பெரும்பாலான பலாத்கார வழக்குகள் விசாரணையில் சிக்கியுள்ளன. ஆயினும்கூட, கடந்த ஆண்டு விரைவு நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்ட ஐந்து வழக்குகளில் நான்கு, முடிவு செய்ய ஒன்று முதல் 10 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளப்பட்டன.

செயல்படாத சுற்றுச்சூழல்

இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ச்சிப் பாதையில், சுற்றுச்சூழல் மற்றும் மனித செலவினங்கள் குறித்து, ஐந்து பகுதித் தொடரில் ஆராய்ந்தோம்.

வளர்ச்சிக்கு அதிகமான பல்லுயிர் வெப்பப்பகுதிகளை இந்தியா திறக்கும்போது, ​கோவிட்-19 போன்ற விலங்கு வழியே பரவும் நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவும் போது முரண்பாடுகள் எழுகின்றன. 2014 மற்றும் 2020ம் ஆண்டுக்கு இடையில், சுற்றுச்சூழல் அனுமதிக்காக பெறப்பட்ட 2,500-க்கும் மேற்பட்ட திட்டங்களில் 87% -க்கு சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEF & CC) ஒப்புதல் அளித்தது. இவற்றில், 278 திட்டங்கள் வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக செயல்படுத்த முன்மொழியப்பட்டன.

சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான மேற்குத் தொடர்ச்சி மலையில், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஜூலை 2014 முதல் 76 திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேற்கில் கோவாவை கிழக்கில் பெல்காமுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 4A என்ற சிறிய சாலை அகலப்படுத்தும் திட்டத்தின் உதாரணத்தைப் பயன்படுத்தி, காடு வழியாக சாலை அமைப்பதன் தாக்கங்களை நாங்கள் ஆராய்ந்தோம்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர், உத்தரப்பிரதேசத்தில், 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான நிலக்கரி ஆலை, இந்தியாவின் ஏற்கனவே அதிகப்படியான வினியோகம் செய்யப்பட்ட தொகுப்புகளுக்கு அதிக மின்சாரம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆலை டெல்லியின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டை அதிகரிக்கும், ஏற்கனவே உலகின் 20 மாசுபட்ட நகரங்களில் ஆறு இந்தியாவில் உள்ளன. மத்திய பிரதேசத்தில் வனவிலங்கு பெருவழி பாதையில், பல்லாயிரக்கணக்கான மரங்கள் உள்ளன, அங்கு ஆலையின் சுரங்கம் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது, இது நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் ஆதிவாசி குடும்பங்களை வெளியேற்றும்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் கார்வார் கடற்கரை சாலை பகுதி, இந்தியாவின் 13 "மோசமான பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில்" ஒன்றாக வகைப்படுத்தப்பட்டது. இப்போது மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுக விரிவாக்க திட்டம், இந்த கடற்கரையை அச்சுறுத்துகிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பண்டேல்கண்டில் விவசாயம் அதிகரித்து வருவதால் வெப்பநிலை அதிகரிக்கும், மழை குறைகிறது, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது மத்திய அரசின் ரூ.18,000 கோடி கென்-பெத்வா நதி இணைப்பு திட்டம், இந்த பிராந்தியத்தின் செல்வத்தை உண்டாக்கும் என்று உறுதி அளிக்கிறது, ஆனால் வல்லுநர்கள் இந்த திட்டம் பிராந்தியத்தின் நீர் நெருக்கடியை தீர்க்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். மலிவான, காலநிலை மாற்றத்தை மீளக்கூடிய மாற்று வழிகள் உள்ளன, இருப்பினும் காடுகள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதிக்கிறது.

தரவு இடைவெளிகள்

தரவு ஊடகவியலாளர்களாகிய நாங்கள், வழக்கமாக தரவு கிடைக்கும் தன்மை, அணுகல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் சிக்கல்களை எதிர்கொள்கிறோம். எங்களது நடப்பு தொடரில், அளவிடப்படாத அல்லது பொதுவில் பகிரப்படாத எண்களை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம், இது கொள்கை வகுத்தல் மற்றும் கண்காணிப்பை பாதிக்கிறது.

இந்தியாவில் ஊட்டச்சத்து விஷயத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன, தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் மோசமான நிலையில் உள்ளனர். இருப்பினும், இந்தியாவின் ஊட்டச்சத்து ஆய்வுகள் தனிப்பட்ட சமூக குழுக்களுக்கு போதுமான தரவுகளை எளிதில் அணுகக்கூடிய வடிவத்தில் பகிரங்கமாகக் கிடைக்கவில்லை.

இதேபோல், இந்திய அரசால் அதிகாரபூர்வ தரவு ஆதாரங்களில் பாலினம்-பிரிக்கப்படாத தரவு மற்றும் பிற பாலின தொடர்பான இடைவெளிகள் உள்ளதால், பெண்கள் மற்றும் அவர்களின் வேலைவாய்ப்பு, சொத்து உரிமை, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிரச்சினைகளைக் கண்டறிவது கடினமாக உள்ளது.

பணியிடத்தில் @ பெண்கள்

கோவிட்-19 தொற்றுநோய் இந்திய பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதங்களை - இது ஏற்கனவே உலகின் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது- மேலும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது. கோவிட்-19 ஊரடங்கு விதிக்கப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 13% குறைவான பெண்களே பணிக்கு திரும்பினர் அல்லது வேலை தேடுகிறார்கள், இது ஆண்களில் 2% குறைவாக உள்ளதாக ​தரவு காட்டுகிறது. நகர்ப்புற பெண்கள் பேரிழப்புகளைக் கண்டனர்.

அடுத்த பல மாதங்களில், எங்களது பணியிடத்தில் @ பெண்கள் என்ற தொடரின் இரண்டாம் பகுதியில், அவர்களின் பொருளாதார மற்றும் சமூக திறனை கட்டவிழ்த்துவிடுவதற்காக, இந்தியப் பெண்களுக்கு தொழிலாளர் தொகுப்பில் சேர எவ்வளவு அதிகாரம் அளிக்க முடியும் என்பதை ஆராய்வதற்கான உண்மைகள், அனுபவங்கள் மற்றும் உந்துதல்களின் அடுக்குகளை நாங்கள் மீண்டும் தோலுரிப்போம்.

மனநல புத்தாய்வு

தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களது வாழ்க்கை, பெரும் சூறாவளியாக மாறியது. தொற்றுநோய்கள் மனநல சுகாதார நிலைமைகளை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது, மேலும் இந்தியாவின் மனநல சுகாதார அமைப்பு, கோவிட்-19 நெருக்கடியின் போது சிகிச்சை வழங்கத் தவறிவிட்டது.

தி ஹெல்த் கலெக்டிவ் இணைந்து எங்கள் மனநல புத்தாய்வின் ஒரு பகுதியாக, நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்கள் எவ்வாறு சமாளித்தன என்பதை இந்தியாஸ்பெண்ட் ஆய்வு செய்தது. கோவிட்-19 நெருக்கடியால் உண்டான, ஏற்கனவே மிகைப்படுத்தப்பட்ட மற்றும் ஆதாரமற்ற மனநல சுகாதார அமைப்பில் வெளிவந்த காட்சி, நிறுவனங்களையும் நோயாளிகளையும் சிக்கலில் தவிக்க விட்டது, மத்திய அல்லது மாநில அரசுகள் சிறிய ஆதரவளித்தன.

அடுத்தடுத்த கட்டுரைகளில், இந்தியாவில் மனச்சிதைவு நோயுடன் வாழ்வது பற்றியும், தொற்றுநோய் மற்றும் அதன் வீழ்ச்சிகளின் போது எத்தகைய மனநல நிவாரணத் திட்டங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் தெரிவிப்போம்.

ரிசர்ச்வைர்

இந்தியாஸ்பெண்டில், தரவுகளை பயன்படுத்தி கட்டுரைகளை வெளியிட்டு வர நாங்கள் எப்போதும் பாடுபட்டுள்ளோம், அந்த முயற்சியில், ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் ஆகியவற்றைப் பிரித்து, தரவுகளில் இருந்து பொருளைப் பெறுகிறோம், மேலும் இந்த கடுமையை களத்தில் இருந்து வரும் மக்களின் கட்டுரைகளுடன் பூர்த்தி செய்கிறோம்.

ஜூலை மாதம், நாங்கள் ரிசர்ச்வைர் (ResearchWire) தொடங்கினோம், இது இந்தியாஸ்பெண்டின் முதல் தொகுக்கப்பட்ட செய்திமடல் - இந்தியாவின் சுகாதாரம், கல்வி, பாலினம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் குறித்த சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் சிந்தனையின் பதினைந்து மாத மின்னஞ்சல் தொகுப்பு இது.

இந்த ஆண்டு செய்திமடலின் 10-க்கும் மேற்பட்ட பதிப்புகள், பலவிதமான ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்து கொண்டோம், உதாரணமாக, இந்தியாவின் சிக்கலான உணவு மதிப்பு அமைப்புகளில் கோவிட்-19 இன் தாக்கம், வளர்ச்சிக்கும் ஊழலுக்கும் இடையிலான தந்திரமான உறவு, வடக்கில் இருப்பதை விட தென்னிந்தியாவில் ஒரு பெண்ணாக இருப்பது ஏன் நல்லது என்பன அடங்கும்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.