நூஹ் (ஹரியானா), புதுடெல்லி, மும்பை: அவர் தனது கிராமத்தின் தலைவராக இருக்கலாம்; ஆனால் 22 பேர் உள்ள தனது குடும்பத்திற்கு ரொட்டி தயாரிப்பது இன்னமும் அவரது பொறுப்பு தான்.

ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஹுசைன்பூர் கிராமத்தில் உள்ள குடும்ப வீட்டில் சிறிய மண் அடுப்பில் (சல்வா), திறமையாக வட்ட வடிவில் ரொட்டியை உருட்டி போட்டு தயாரிக்கும் பர்ஹுனா (அவர்,ஒரு பெயரை தான் பயன்படுத்துகிறார்), திருமணச் சூழல் மற்றும் தேர்தலை நினைவுபடுத்திய போது புன்னகைக்கிறார்.

அது, 2016ஆம் ஆண்டின் முன்பகுதி. ஊராட்சி தேர்தல்கள் நடக்கும் சூழல் இருந்தது. ஹரியானா அரசு அந்த நேரத்தில் ஒரு புதிய தகுதி நிலையை அறிமுகம் செய்தது. தேர்தலில் போட்டியிட, பெண்கள் எட்டாவதும், ஆண்கள் மெட்ரிக்குலேஷன் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதை நிரூபிக்க வேண்டும்.

அந்த ஆண்டு, ஹுசைன்பூர் இடம், பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதுதான்பிரச்சினை: கணவரின் குடும்பத்தில் எந்தப் பெண்ணும் பள்ளிக்கு சென்றதில்லை.

எனவே பர்ஹூனாவின் மாமனார் தனது மகனுக்கு மணமகளைத் தேடத் தொடங்கினார். அவரது ஒரே நிபந்தனை: கல்வி ஆகும். "அவர் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை", என்ற பர்ஹூனா, இளங்கலை பட்டம் பெற்றதற்காக தன்னை புகழ்ந்ததாக கூறினார்.

குடும்பத்தில் ஒரு சமையல் எரிவாயு அடுப்பு உள்ளது, அதில் தான் காய்கறிகள், பருப்பு தயாரிக்கப்படுகின்றன. ஆனால் ரொட்டி தயாரிக்க மண் அடுப்பு தான் சிறந்தது; அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன - மதிய உணவுக்கு 70 ரொட்டி தேவைப்படும்; இரவும் அதே எண்ணிக்கையில் தயாரிக்க வேண்டும் என்று பர்ஹுனா தெரிவித்தார்.

ரொட்டி தயாரித்தல் மற்றும் அவரது ஆறு மாத குழந்தையை பராமரிப்பது ஆகியவற்றிற்கு இடையில், கிராமத் தலைவராக (சர்பஞ்சாயத் ) ஊராட்சி கூட்டங்களில் பங்கேற்க அவருக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை. மேலும், இரண்டு நாத்தனார்கள் ஒருசில வாரங்களில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள். அதற்காக அவரது இரண்டு மாடி வீடுகள் வர்ணம் பூசப்பட்டு வருவதால், அவரால் வீட்டை விட்டு வெளியே வர நேரம் இல்லை. எனவே, ஊராட்சி கூட்டங்களில் தனது மாமனார் கலந்து கொள்வதாக, பர்ஹுனா தெரிவித்தார்.

ஆனால், நேரம் கிடைக்கும் போது பர்ஹுனா, ஊராட்சி கூட்டங்களில் கலந்து கொள்கிறார். "நான் சாலை வசதி செய்துவிட்டேன்; தனி நபராக கிராமத்து அரசு பள்ளி பிரச்சினை பற்றி பேசியிருக்கிறேன். இது நான் ஆர்வம் காட்டும் பகுதிகளாகும்” என்றார்.

குறைந்த அளவில் அரசியல் பிரதிநிதித்துவம் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு பிரச்சனையாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 6.9% முஸ்லீம் பெண்கள் உள்ள நிலையில், தற்போது ஆயுள் முடியும் மக்களவையில் 543 இடங்களில் நான்கு பேர் அல்லது 0.7% பேர் மட்டுமே முஸ்லீம் பெண் உறுப்பினர்கள்.

சுதந்திரம் பெற்ற பின் 5 மக்களவைகளில் முஸ்லீம் பெண் எம்.பி.க்களே இல்லை

சுதந்திரத்திற்கு பின் உருவான மொத்தம் 16 மக்களவைகளில், ஐந்தில் முஸ்லீம் பெண் உறுப்பினர்களே இல்லை; அவர்களின் எண்ணிக்கை பாராளுமன்றத்தின் 543 இருக்கைகளில் நான்கை கடக்கவில்லை.

இந்தியாவின் முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட 14 மக்களவை தொகுதிகள் உள்ளதாக, மாயங்க் மிஸ்ராவின் நவம்பர் 2018 அறிக்கையை வெளியிட்டு தி குயிண்ட் தெரிவித்தது. அத்துடன், முஸ்லீம்கள் 40%-க்கும் அதிகம் கொண்ட 13 தொகுதிகள் உள்ளன. முஸ்லீம்கள் 20% க்கும் அதிகமானோர் உள்ள பாராளுமன்ற தொகுதி எண்ணிக்கை, 101 ஆகும்.

மொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 14.3% என்று, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆனால், பதவி முடியும் மக்களவையில் 543 இல் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) -அதாவது 4% - மட்டுமே முஸ்லீம்கள்.

முக்கிய அரசியல் கட்சிகள், முஸ்லீம் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த தயக்கம் காட்டுகின்றன. 2009ஆம் ஆண்டு தேர்தலில் 543 எம்.பிக்கள் 30 பேர் (5.52%) மட்டுமே முஸ்லீம் என, புதுடெல்லியை சேர்ந்த செமினார் இதழில் வெளியான பிரெஞ்சு அறிஞரும், கட்டுரையாளருமான கிறிஸ்டோப் ஜேஃப்ரலாட் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. அந்தத் தேர்தலில் 832 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே இருந்தனர், இதில் கிட்டத்தட்ட பாதி பேர் அல்லது 47.12% பேர் சுயேச்சையாக போட்டியிட்டவர்கள்.

கடந்த 2014 தேர்தலிலும் இந்த விஷயங்கள் சிறப்பாக அமையவில்லை; பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 3,245 வேட்பாளர்களில் 320 பேர் (9.8%) மட்டுமே முஸ்லீம்கள். பாரதிய ஜனதா நிறுத்திய 428 வேட்பாளர்களில் 7 பேர் (அல்லது 2%) மட்டுமே முஸ்லீம்கள் என, 2019இல் ஜேஃப்ரலாட் எழுதிMajoritarian State: How Hindu Nationalism is Changing India என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒருவரும் வெற்றிபெறவில்லை. காங்கிரஸ், மொத்தமுள்ள 462இல் 27 முஸ்லீம் வேட்பாளர்களை- 6%க்கும் குறைவு - நிறுத்தியது. இது 2009 இல் 31 என்பதைவிட குறைவாகும்.

முஸ்லீம் அல்லாத கட்சிகளில், சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி.), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மட்டுமே 15%க்கும் மேலாக முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தின; அவை முறையே, 18.4%, 20.7%, மற்றும் 15% ஆகும்.

ஆனால் முஸ்லீம் பெண்கள் - முஸ்லீம் மற்றும் பெண் என்ற - இரட்டை பாகுபாடு எதிர்கொள்கிறார்கள். "ஒட்டுமொத்த பாகுபாடு அடிப்படையில் - ஒரு முஸ்லீம் மற்றும் ஒரு பெண்ணாக இருப்பதில் - நிச்சயமாக ஒரு கூட்டு விளைவு உள்ளது," என்று அசோகா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியரும், திரிவேதி அரசியல் தரவுக்கான மையம் (TCPD) இணை இயக்குனருமான கில்லஸ் வெர்னியர்ஸ் கூறினார். "அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் நுழைவுக்கான வழக்கமான தடைகள், முஸ்லீம் பெண்களுக்கு இன்னும் வலுவாக உள்ளது" என்றார் அவர்.

மக்களவையில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு பல சான்றுகள் இருந்தபோதிலும், சுதந்திரம் பெற்றதில் இருந்து உருவான 16 அவைகளில், முதலாவது உட்பட் ஐந்தில் முஸ்லீம் உறுப்பினர்கள் இல்லை; மற்றும் அதன் சிறந்த எண்ணிக்கை என்பது, 4 ஐ கட்டவில்லை.

Source: Lok Sabha, Trivedi Centre for Political Data, Indian Legislators Dataset

"முஸ்லீம் பெண்களின் வேட்பாளர் எண்ணிக்கை சுதந்திரத்திற்கு பிறகும் காலப்போக்கிலும் படுபாதாள நிலையில் என்ற மோசமான நிலையில் தான் உள்ளது" என்று, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஸோயா ஹசன் தெரிவித்தார். "மேலாதிக்க கட்சிகள், வலதுசாரிகள், முஸ்லீம்களை அரசியல் பிரதிநிதித்துவத்தில் இருந்து ஒதுக்கி வைக்கின்றன; மற்றும் மிகக்குறைந்த வேட்பாளர்களை நிறுத்துகிறது.இதில் முஸ்லீம் பெண்கள் எண்ணிக்கை மேலும் குறைவாக உள்ளது” என்றார்.

தற்போதைய தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில், பா.ஜ.க. ஒரு முஸ்லீம் பெண்ணை மட்டுமே நிறுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் ஜங்கிபூரில் இருந்து மபுஜா காதுூன் என்பவரை அது நிறுத்தி உள்ளது. அவர் தான் மக்களவைக்கு பா.ஜ.க. முதல் பெண் முஸ்லீம் வேட்பாளர் ஆவார்.

வெளியேறும் மக்களவையானது இரண்டு பெண் முஸ்லீம் எம்.பி.க்களை மட்டுமே கொண்டிருந்தது: மம்தாஸ் சங்கமிதா. இவர், மருத்துவர் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் (டி.எம்.சி.) வேட்பாளர்; மாசாம் நூர், மால்தஹாவில் இருந்து இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் எம்.பி.ஆக தேர்வு செய்யப்பட்டவர். இரண்டு முஸ்லீம் பெண்கள் 2018இல் இருந்து தான் மக்களவை உறுப்பினர்களாக உள்ளனர். சஜ்தா அஹ்மத், 2018இல் டி.எம்.சி. சார்பில் பிப்ரவரி 2018 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தின் கைரானா தொகுதியில் இருந்து 2009இல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற தபசும் ஹசன், 2018 மே மாதம் இடைத்தேர்தலில் ராஷ்டிரீய லோக்தளம் சார்பில் இரண்டாம் முறையாக தேர்வானார்.

டி.சி.பி.டி.யின் முந்தைய ஆய்வானது, 2019 பொதுத்தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 1,279 வேட்பாளர்களில் 111 பெண் வேட்பாளர்கள் என்கிறது. அதில் இருவர் மட்டுமே முஸ்லீம் பெண்கள். இரண்டாம் கட்ட தேர்தலில், டி.சி.பி.டி. ஆய்வின்படி, மொத்த வேட்பாளர்கள் 1,202 பேரில் 156 பெண்கள் இருந்தனர். இதில் ஏழு பேர் - அதாவது டி.எம்.சி மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து தலா இருவர்; ஆர்ஜேடி, பாஜக மற்றும் எஸ்.பி.இல் இருந்து தலா ஒருவர் - முஸ்லீம் பெண்கள்.

மும்முறை தலாக்கிற்கு தடை; நம் ஆண்களை கொல்கின்றனர். அது எந்த அர்த்தத்தை தரும்?

முஸ்லிம் பெண்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது, மும்முறை தலாக் கூறுவது போன்றவற்றில், அவர்களின் பிரதிநிதித்துவம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. அரசியல் கட்சிகளால் சிவப்பு கடிதம் தரப்படுகிறது.

முஸ்லீம் பெண்களை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தண்டனைக்குரியது, அதற்கு மூன்றாண்டு சிறை மற்றும் அபராதத்திற்கு வகை செய்யும் மசோதா, விவாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு டிசம்பரில் மக்களவையில் நிறைவேறியது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், ஸ்ம்ருதி இரானி மற்றும் மீனாட்சி லேகி. மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ரஞ்சித் ரஞ்சன், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சுஷ்மிதா தேவ் பேசினர். ஆனால் இந்த விவாதத்தில் இல்லாதது, முஸ்லீம் பெண்களின் குரல் தான்.

"உடனடியாக மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்யப்பட்டதாக தனிப்பட்ட எந்த ஒரு பெண்ணும் எனக்கு தெரியவில்லை," என்று கிராமத்தலைவரான பர்ஹுனா கூறினார். "இது எங்கள் கிராமத்தில் நடக்காது" என்றார்.

மும்முறை தால்கிற்கு எதிரான நிலைப்பாடு காரணமாக முஸ்லீம் பெண்கள் பாஜகவுக்கு வாக்கு அளிப்பார்களா? "மும்முறை தலாக் தடை செய்ததன் மூலம், அரசு ஒரு நல்ல காரியத்தை செய்திருக்கிறது," என்றார் பர்ஹுனா. "மும்முறை தலாக் கூறி விவாகரத்தை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை; அரசு எங்களின் மத விஷயத்தில் தலையிடக் கூடாது" என்றார்.

பெண்கள் தங்கள் மார்க்கம் படி அல்லது அவர்களது விருப்பத்தின்படி வாக்களிக்க வேண்டும் என்ற அவர், ஆனால் கும்பல் அடக்குமுறை போன்ற பிரச்சினைகள் அவர்களின் மனதில் எடை போட செய்யும் என்றார்.

ஹரியானாவின் நூஹ் மாவட்டம் ஜெய்சிங்பூர் கிராமத்தில் உள்ள பெஹ்லு கான் கல்லறை இது. பசுக்களை கடத்தியதாக சந்தேகத்தின் பேசில் ஏப்ரல் 2017இல் ஒரு கும்பலால் கான் கொல்லப்பட்டார். முஸ்லீம் பெண் வாக்காளர் மனதில், இத்தகைய கும்பல் அடக்குமுறை சிக்கல்களை ஏற்படுத்தும்.

நூஹ் மாவட்டத்தில், பஹ்லு கான், ரக்மார் கான் மற்றும் உமர் கான் ஆகியோர் பசுக்களுக்கு எதிரான வன்முறைகளில் கொல்லப்பட்டது, இருண்ட ஒரு பாலை போன்றது. உனத் கிராமத்தில் 75 முதல் 80 வயதுள்ள, எழுதப்படிக்க தெரியாத ஜமீலா, குடும்பத்தின் எருமை மாடுகளை பராமரித்து வருகிறார். "நாங்கள் பால் விவசாயிகள் ஆனால் பசுக்களை வாங்க பயப்படுகிறோம். நாங்கள் வெளியில் இருந்து எருமைகளை இங்கே வாங்கி வர முடியாது” என்கிறார். "உங்களை யாரும் திருப்பி அனுப்ப முடியும்" என்றார்.

கடந்த 2017 ஆகஸ்டில் உச்ச நீதிமன்றம் மும்முறை தலாக்கிற்கு விதித்த தடை பா.ஜ.க.விற்கு சாதகமாக இருக்குமா? தனது அழுக்கு படிந்த கட்டிலில் அமர்ந்த வாறு கீழே பார்த்து ஜமீலா கூறும்போது, அவர்கள் மும்முறை தலாக்கை தடை செய்கிறார்கள்; ஆனால் எங்கள் ஆட்களைக் கொன்றார்கள். அது என்ன அர்த்தம்? எங்களது சமூகம் அவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அவர்களுக்கு எப்படி வாக்களிக்க முடியும்? " என்றார்.

படத்தில் உள்ள ஜமீலாவுக்கு (வலது புறம்) 75- 80 வயது இருக்கும். எருமைகளை பராமரிக்கிறார். "நாங்கள் பால் விவசாயிகள்; ஆனால் பசுக்களை வாங்க பயப்படுகிறோம். வெளியில் இருந்து எருமைகளை இங்கே வாங்கி வர முடியாது” என்ற அவர் "உங்களை யாரும் திருப்பி அனுப்ப முடியும்" என்றார்.

வாக்காளர்கள் எளிய தீர்மானங்களை வைத்து தேர்தல் முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று, கில்லஸ் வெர்னியர்ஸ் கூறினார். "சில முஸ்லீம் பெண்கள் பா.ஜ.க. மீது சற்று மேம்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், இது கடந்த இரண்டு வருடங்களில் நடந்தவை எல்லாவற்றையும் அழித்துவிடாது” என்றார். மேலும், மும்முறை தலாக் மீதான தடை என்ற பா.ஜ.க.வின் முயற்சி, ஒரு குறுகலான சமூக நடைமுறை, முஸ்லீம்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய ஒரு பரந்த மனப்பான்மை மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.

"கும்பல் தாக்குதல் மற்றும் வெறுப்பு பேச்சுகள் போன்றவற்றை ஈடுகட்ட, முஸ்லீம் பெண்களுக்கு பாலியல் நீதி பற்றிய பேசப்படுகிறது " என்று, அப்பகுதி பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான முகமது ஆரிப் தெரிவித்தார். “நூஹ் மாவட்டத்தி. மும்முறை தலாக் விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தாது” என்றார் அவர்.

மும்பையின் பாந்த்ரா கிழக்கில் உள்ள பாரதீய முஸ்லீம் மகிலா ஆந்தோலன் (பி.எம்.எம்.எம்.ஏ) அலுவலகம், உடனடியாக வரும் மூன்றுமுறை தலாக் வழக்குகளின் எண்ணிக்கையை கண்காணித்து வருகிறது. உச்சநீதிமன்றம் இந்த நடைமுறை சட்டவிரோதமானது என்று 2017இல் அறிவித்த பிறகு, இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது.

Source: Bharatiya Muslim Mahila Andolan, Mumbai

"எங்களுக்கு உரிமை வழங்குவது பற்றி பேசுபவர்களுக்கு இஸ்லாமில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளைபற்றி எதுவும் தெரியாது" என்று திருமணச்சடங்கு நடத்துவதற்கு பி.எம்.எம்.எம்.ஏ அலுவலகத்தில் பயிற்சி பெற்ற பெண் ஜுபைதா காதூன் கூறினார்.

திருமணச்சடங்கு நடத்தி வைக்க பி.எம்.எம்.எம்.ஏ அலுவலகத்தில் பயிற்சி பெற்ற ஜுபைதா காதூன், "எங்களுக்கு உரிமை வழங்குவது பற்றி பேசுபவர்களுக்கு இஸ்லாமில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளைபற்றி எதுவும் தெரியாது" என்கிறார்.

"மும்முறை தலாக் மட்டுமே நாங்கள் போராடும் ஒரே பிரச்சினை அல்ல," என்ற பி.எம்.எம்.ஏ. நிறுவனர் நூர்ஜஹான் ஸபியா நியாஸ், பலதார மணம் மற்றும் ஹலலா (தனது முன்னாள் கணவனை மறுமணம் செய்ய விரும்பும் ஒரு விவாகரத்தான மனைவி முதலில் ஒரு இடைக்கால திருமணத்தை முடிக்க வேண்டும்) ஆகியனவும் தான். துரதிருஷ்டவசமாக, நீதிமன்றம் எங்களது மும்முறை தலாக்கினை மட்டுமே கேட்டது; மற்ற இரண்டு பிரச்சினைகளை அல்ல" என்றார்.

இன்னும் இதை ஏற்காத நியாஸ், தற்காலிக தலாக் செய்ய முயன்றவர்கள் மீது இது ஒரு நடுக்க விளைவை இருந்தது மற்றும் இதன் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் சரிந்தன என்றார். "குறைந்தபட்சம் [நரேந்திர] மோடி அரசு நடைமுறையில் உள்ள ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் ஆண்கள் இன்னும் இரண்டாவது மனைவியை கொண்டு வர முடியும் முஸ்லீம் பெண்கள் இதனால் தொடர்ந்து பயப்படுகிறார்கள்" என்றார்.

உடனடி மும்முறை தலாய், பலதார மணம் மற்றும் ஹலலா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான சட்டம் தேவை. ஆனால், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் (யு.சி.சி), ஒரு தீர்வாக இல்லை. "யு.சி.சி. முழு நாட்டிற்கும் பொருந்தும். முதலில் நீங்கள் 80% உள்ள ஹிந்துக்களிடம் அவர்கள் இதை விரும்புகிறார்களா என்று கேட்க வேண்டும்" என்று நியாஸ் கூறினார்.

முஸ்லீம் பெண்களுக்கு அவர்களுடைய மதம் மற்றும் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட சமூக மற்றும் சட்ட சீர்திருத்தத்திற்காக பி.எம்.எம்.ஏ. உள்ளது. 1955 ஆம் ஆண்டு இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் ஒரு முழுமையான முஸ்லீம் குடும்ப சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தான் அது விரும்புகிறது. இது, முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரம் மற்றும் கண்ணியத்துடன் வாழ உதவும் என்றார் நியாஸ்.

"சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளாகியும் இதில் எந்த சீர்திருத்த எண்ணமும் அரசுக்கு வராதது ஒரு பரிதாபகரமானது," என்ற நியாஸ் "அவரவர் போக்கில் இந்த விவகாரத்தை தனியாக விட்டுவிடுவது தான் வசதியானது. ஆனால் முஸ்லீம் பெண்கள் ஏன் பயந்து கொண்டு வாழ வேண்டும்? எங்களுக்கு அரசியலமைப்பு உரிமைகள் கிடையாதா? என்றார்.

கடந்த மாதம் பி.எம்.எம்.ஏ. 2019 தேர்தலுக்கான கோரிக்கைகளை வெளியிட்டது. அரசியல் கட்சிகள் தேசியவாதத்தின் பெயரில் எந்த பிரிவினைவாத சித்தாந்தத்தைக் காட்டிலும் அரசியலமைப்பு தேசியவாதத்தை ஆதரிக்க வேண்டும் என்று அது விரும்புகிறது. வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் மத ரீதியான துவேஷங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மற்றும் "கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் பல வலதுசாரி குழுக்கள் மற்றும் தனிநபர்களால் உமிழப்பட்ட வெறுப்பை" நிறுத்த வேண்டும் என்று அது விரும்புகிறது. சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் "குணப்படுத்தும் தொடுதல்" மற்றும் "ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் சமமான குடிமக்களாக இருக்க வேண்டும்" என அது கோரியுள்ளது.

அவர்களின் ஏழு அம்ச கோரிக்கையில் ‘மும்முறை தலாக்’ பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.

'அமைதி. எங்கள் அனைவருக்கும் அதுதான் தேவை'

டெல்லி ஜமியா நகரின் குறுகிய தெருவில் உள்ள ஒரு சிறிய பெண்கள் குழு ஒருவித பயத்தில் தாங்கள் வாழ்வது போல் பேசுகிறார்கள். ஜூன் மாதம் 2017 ஆம் ஆண்டு டெல்லி-மதுரா ரயிலில் ஜுனாத் அடித்து கொன்றதில் இருந்து, ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளம் மூன்று பையன்கள் மற்றும் ஒரு பெண் என நான்கு குழந்தைகளின் தாயான செரீனா பேகம், தனது குழந்தைகள் பாதுகாப்பாக வீடு வந்து சேரும் வரை தம்மால்தூங்க முடியாது என்கிறார்.

"நீங்கள் ஒரு தாடி வைத்திருந்து ஒரு குர்தா பைஜாமா அணிந்து, ஒரு குறிப்பிட்ட வழியில் இருந்தால், அந்த தெருவில் நீங்கள் ஒரு இலக்காக குறி வைக்கப்படுவீர்கள்," என்ற சரேனா, "நான் இந்த இடத்தைவிட்டு வெளியேறும் போது பர்தா அணிவதைத் தவிர்க்குமாறு என் கணவர் அறிவுறுத்தினார். நான் வெளியே நிற்பதை அவர் விரும்பவில்லை" என்றார்.

ரோகிணி பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றும், டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பட்டதாரியான சுபைரா (அவர் ஒரு பெயரை பயன்படுத்துகிறார்),இந்த தேர்தலில் தனது எதிர்பார்ப்பு பற்றி பேசினார். 'அமைதி. எங்கள் அனைவருக்கும் அதுதான் தேவை' என்றார்.

ஆயிஷா (அவர் ஒரு பெயரை பயன்படுத்துகிறார்), ஜாட் இனத்தவர் ஆதிக்கம் உள்ள கஜியாபாத் கிராமத்தில் வசிக்கிறார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அவர் பாதுகாப்பற்ற சூழலை உணரவில்லை. இப்போது, யாரும் அவரை பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும், வீட்டை விட்டு வெளியேறும்போது அவருக்கு பயமாக இருக்கிறது. “இந்த வழியில் தான் மக்கள் உங்களை பார்க்கிறர்கள். நாங்கள் அடுத்த இலக்காக இருக்கலாம்” என்றார். அவர்கள், குடும்ப பால் தேவைக்காக ஒரு மாடு வளர்க்கின்றனர்; இந்து நண்பர்களும் அவர்களுக்கு உள்ளனர்.

எலக்டீரியன் மற்றும் எம்ப்ராய்டிரியர்களின் மனைவியர், எல்லா இடங்களிலும் உள்ள வாக்காளர்களைப் போலவே, தங்களது மனதில் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர் - பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் வேலைவாய்ப்பு இல்லாதது வரை. கடந்த காலத்தில், அந்த பகுதியில் நல்ல வேட்பாளர் என்று பார்த்து அவர்களுக்கு வாக்களித்ததாக கூறினர். "அரவிந்த் கெஜ்ரிவால் எங்களுக்கு எந்த வேலையும் செய்யவில்லை; ஆனால் பள்ளிகளையும், மருந்தங்களையும் அவர் மேம்படுத்தினார். இங்கு சாலை வசதிகளை செய்து தந்தார்; மின் கட்டணம் குறைந்தது’ என்ற ஆயிஷா, “அரசியலுக்கு வருவதற்காக அவர் நல்ல பணியை உதறித் தள்ளினார்” என்றார்.

இப்போது சமூக ஊடகங்கள், தேசியவாதம், வன்முறை சம்பவங்கள் மற்றும் பா.ஜ.க வேட்பாளர்களின் - சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பயங்கரவாத சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரகியா தாகூர் போன்றோரின்- திட்டம் என கலவைகள் நிரம்பிய புதிய கவலை எழுந்துள்ளது.

"இது ஒரு விஷயம் அல்ல, அது விஷயங்களின் கலவையாகும்" என்று கூறும் ஜாமியா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் டோலி சித்திக், "தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை; எங்களின் தேசபக்தி (நாட்டுப்பற்று) மீது தொடர்ச்சியான கேள்வி எழுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் எங்களை 'பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்' என்று கூறப்படுகிறது " என்றார்.

சமூக ஊடகங்கள் அக்கம்பத்தினரால் பராமரிக்கப்படும் குடிமக்களுடைய முகமூடியை அகற்றிவிட்டன. சுபைரா, தனது கணவரின் குழந்தை பருவ நண்பரான ஒரு இந்துவை பற்றி பேசினார். இருவரும் ஒன்றாக வளர்ந்தார்கள், ஒருவருக்கொருவரின்பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. இப்போது அந்த நண்பர், முஸ்லிம் தேசியவாதம் பற்றிய கேள்விகள், போலி செய்திகளை பார்வேர்ட் செய்து வருகிறார். "என் கணவர் அவருடன் முரண்டுபிடிக்கவில்லை. ஆனால், முகநூலில் அவரை பின்தொடர்வதை நிறுத்திவிட்டார்” என்றார்.

பெண்களின் இந்த குழுவினருக்கு, வாழ்வாதாரம், உயிர் பிழைப்பது என்பதே ஒரு போராட்டம் போல தெரிகிறது. “இந்த நகர எல்லையை கடந்து, நீங்கள் இந்த மொஹல்லா (பகுதி) இடத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டால் அது நமக்கு பாதுகாப்பாக இருக்காது," என்றார் சரேனா. “எங்களின் ஒரே நோக்கம் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே” என்றார்.

(நமீதா பண்டாரே, இந்தியா எதிர்கொள்ளும் பாலின பிரச்சினைகள் பற்றி அடிக்கடி எழுதி வரும் டெல்லி பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.