பெங்களூரு: உயர் கல்விக்கான நிதி 28% அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் பள்ளிக் கல்விக்கோ 3% சரிந்து ரூ.39,000 கோடி என்று உள்ளதாக, அரசின் பட்ஜெட் தரவுகள் தெரிவிக்கின்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) செலவினம் 0.53% முதல் 0.45% வரை என்ற நிலையான சரிவைக் காட்டுகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சிக்கான நிதி 87% குறைந்துள்ளது; அதாவது, 2014-15ஆம் ஆண்டில் ரூ.1,158 கோடியாக இருந்தது, 2019-20ஆம் ஆண்டில் ரூ.150 கோடியாக சரிந்து, குறைந்த முன்னுரிமை தரப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது.

திறன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வேகமான வளர்ச்சிக்கு கல்வி முக்கிய பங்களிப்பு செய்கிறது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு பட்டியலில் ஒரே நேரத்தில் கல்வி இடம் பெறுகிறது. மாநில அரசுகளின் வருவாயில் அதிகம் செலவிடப்படும் துறைகளில் கல்வித்துறை மிகப்பெரிய ஒன்றாகும்; மாநிலங்களின் பட்ஜெட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் சம்பளங்களுக்கு பெரும் தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது.

ஆறு முதல் 14 வயதிலான அனைத்து குழந்தைகளுக்கும் உலகளாவிய கல்வியை வழங்குவதை நோக்கமாக கொண்ட சர்வ சிக்‌ஷா அப்யான் (எஸ்.எஸ்.ஏ - அனைவருக்கும் கல்வி) திட்டம்; நடுநிலைக்கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சியை ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரீய மத்யமக் சிக்‌ஷா அப்யான் (RMSA) எனப்படும் தேசிய நடுநிலை கல்வி இயக்கம் ஆகியவற்றை மத்திய அரசு 2018 ஏப்ரலில் சமக்ர சிக்‌ஷா (முழுமையான கல்வி) திட்டத்தில் இணைத்தது.

நடுநிலை மற்றும் உயர் கல்விக்கான தேவை பொது நிதிகளால் பெருமளவில் கவனிக்கப்படாமல் இருக்கும் நிலையில், மலிவு என்று கருதி தனியார் கல்விக்கு முடியாதவர்கள், பெண்கள் இதை நம்பியுள்ளனர்.

பட்ஜெட் மூலம் வழங்கப்படாமல் வரி வாயிலாக தரப்படும் கல்வி நிதி

கல்விக்கான நிதி பட்ஜெட் வாயிலாக ஒதுக்கப்படாமல் வரிகள் மூலமாக வழங்கப்படுவது எங்களது பகுப்பாய்வில் வெளிப்படையாக தெரிந்தது. செஸ் எனப்படும் இந்த வரி (விகிதத்தில் வரி கணக்கிடப்படுகிறது) ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பொதுவாக சேகரிக்கப்படும் இது, ‘செஸ் ' என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

இது நேரடி வரிகள் (மாநகராட்சி வரி, வருமான வரி) மற்றும் மறைமுக வரிகள் (ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி - செஸ்ஸுக்கு இழப்பீடாக ஜிஎஸ்டி மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது; சேவை வரிகளின் முந்தைய செலவுகள் அகற்றப்பட்டுவிட்டன) ஆகியவற்றின் ஒரு பகுதியாக வசூலிக்கப்படுகிறது.

கல்வி வரி என்பது 2004-05ஆம் ஆண்டில் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது; தற்போது, மாநகராட்சி வரி, வருமான வரி, சுங்க வரி இனங்களில் கல்வி செலவுகள் சேகரிக்கப்படுகின்றன. கல்வி வரி மற்றும் உயர் கல்வி வரி ஆகியன சீரமைக்கப்பட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரி என்ற பெயரில் 2018-19 ஆம் ஆண்டு முதல் 4% என, வருமான வரி செலுத்துவோரிடம் வசூலிக்கப்படுகிறது.

மத்திய அரசு 2018-19 ஆம் ஆண்டில் இருந்து, மொத்த இறக்குமதி வரியில் 10% சமூகநல செலவுகளுக்கு வசூலிக்கும் முறையை அறிமுகம் செய்தது.

கல்வி செலவினங்கள் 2015-16ஆம் ஆண்டு முதல் குறைந்து வரும் நிலையில், 2018-19 (திருத்தப்பட்ட மதிப்பீடுகள்) மற்றும் 2019-20 (பட்ஜெட் மதிப்பீடுகள்) எதிர்பார்க்கப்பட்டதைவிட கீழே உள்ளது. எதிர்பார்த்த செஸ் வரி தொகுப்பை விட முன்மொழியப்பட்ட பட்ஜெட் குறைவு என்பதை சுட்டிக் காட்டுகிறது.

இதன் பொருள் பொது கல்வியியை உருவாக்க, வலுப்படுத்த வேறு எந்த வருவாயும் இல்லை என்பதாகும். மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத இந்த செஸ் வரி மூலம் கிடைக்கும் வருவாய் ஒருவேளை வேறு இடங்களுக்கு திருப்பி விடப்படலாம் என்பதை இது குறிக்கிறது.

லாபகரமான வரிகள் மத்திய அரசுக்கு கிடைக்கின்றன; மற்றும் கல்வி என்பது ஒன்றாக பட்டியலிடப்பட்டு உள்ளது; இது மத்திய அரசின் பங்கை நாடு முழுவதும் கல்வி மேம்படுத்துவதற்கு நிதியுதவி அளிப்பதை வலியுறுத்துகிறது.

ஜி.எஸ். டி அறிமுகமான பிறகு மாநில அரசுகள் நிதி திரட்டுவது தடுக்கப்பட்டு, மத்திய அரசை சார்ந்திருப்பது அதிகமாகியுள்ளது. உள்ளீட்டு வரி கடன் மற்றும் சிக்கல்கள், மாநிலங்கள் செஸ் வரி இழப்பீடுகள் பெறுவதில் ஏற்படும் தாமதம் செலவிங்களை உண்டானது.

(மதுசூதன் ராவ் பி.வி. & ஜோத்ஸனா ஜா ஆகியோர் முறையே பெங்களூருவில் உள்ள பட்ஜெட் அண்ட் பாலிசி ஸ்டடீஸ் மைய ஆராய்ச்சி ஆலோசகர் மற்றும் இயக்குனர்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.