யமுனா நகர்: அசோக்குமார் தனது பொன்னான நாட்களை (அச்சே தின்) தெளிவாக நினைவு கூர்கிறார்: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத போதும் இந்தியாவின் பிளைவு தலைநகரில், மாதம் ரூ.15,000 சம்பளத்தில் ஒரு பாதுகாப்பான வேலையை பெற்றார். அவரும் அவரது மனைவியும் ரூ. 4,000 சேமித்தனர்; அவருக்கு சில புகார்கள் இருந்தன.

இதெல்லாம், பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பரில் அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பயன்பாட்டிலிருந்த 86% இந்திய ரூபாய் திரும்பப்பெறுவதற்கு முன்பு வரை தான். "நான், நவம்பர் மாத சம்பளத்தை ஜனவரியில் பெற்றேன்; அப்போது முதல் எனக்கு சரிவு ஆரம்பமானது," என்றார் குமார்; அவர் - ஒரு பழைய ஸ்வெட்டர் மற்றும் தேய்ந்த செருப்பு அணிந்திருந்தபடி - வடக்கு ஹரியானாவின் பவாரா சவுக்கில் வெளிப்படையான வேலைவாய்ப்புக்கான பகுதியில் சோகத்துடன் காத்திருந்தார்.

பிறகு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) - அதன் மோசமான நிறைவேற்றும் முறைக்காக இது விமர்சிக்கபட்டது - 2017 ஜூலையில் நடைமுறைக்கு பின், குமாரின் வேலை உட்பட அவர் நிறுவனத்தில் 110 முதல் 200 வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன. பணப்புழக்கம் இல்லாதது, பிளைவுட் பொருட்களுக்கு 28% ஜி.எஸ்.டி. போன்றவை இங்கு பணி புரிந்த பல ஆயிரம் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் பிற வடக்கு மாநில - தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது.

பிளைவுட் தொழிலில் 2016 ஆம் ஆண்டில் 16,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் இருந்தது; இப்போது ரூ. 12,000 கோடியாக உள்ளதாக, அகில இந்திய ப்ளைவுட் உற்பத்தியாளர் சங்க தேசியத் தலைவர் தேவேந்திர சாவ்லா தெரிவித்தார். சுமார் 350 பிளைவுட் நிறுவன யூனிட்டுகள் மூடப்பட்டுவிட்டன, அதே போல் 500 அலகுகள் மூலப்பொருட்களை வழங்கியும், நூற்றுக்கும் மேற்பட்ட யூனிட்டுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது; மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். யமுனா நகரில் 1,000 பிளைவுட் தொழிற்சாலைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குமாருக்கு ஒரு தாய், மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வேலைக்கு ஒரு முதலாளியிடம் செல்ல காத்திருந்த அவர் - தனது மாத வேலை நாள் ஏழு அல்லது 10 நாட்களாக சரிந்துவிட்டதாக அவர் கூறினார்; அவரது மாதாந்திர வருமானம் மூன்றில் ஒரு பங்காக ரூ.4,000-6,000 என சரிந்துவிட்டது. அவரது மனைவி இப்போது வீட்டுக்கு உதவியாக வேலை செய்து ரூ. 6,000 ஈட்டி வருகிறார்; ஆனால் அவர்களின் "துன்பம்" முடிவதற்கு போதுமானதாக இல்லை என்றார் அவர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் சம்பளம் தாமதமாகின; திடீர் பண நெருக்கடிக்கு தொழிற்சாலைகள் ஆளாகியதாக, மகாவீர் பிளைவுட் நிறுவன் உரிமையாளர் அன்கூர் ஜெயின் தெரிவித்தார். "பிளைவுட் தொழிலில், ஒவ்வொரு நாளும் மரத்தை வாங்க வேண்டும். மூலப்பொருட்களை வாங்குவதற்கு போதிய நிதி எங்களிடம் இல்லை. நாங்கள் ஏற்கனவே வாங்கியுள்ள மூலப்பொருளுக்கு பணம் செலுத்த முடியாது" என்றார் அவர்.

வேலையை தேடி குமார், பவாரா சவுக் - பவுண்டைன் சதுக்கத்திற்கு -- வந்த போது, ஒருவாரம் காத்திருந்தது தினசரி ரூ.300 கூலிக்கு சுமை தூக்கும் பணி தான் கிடைத்தது. இந்த பணிக்காக அவர் தினமும் தனது மண் குடிசை வீட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள நகரப்பகுதிக்கு பஸ் அல்லது சைக்கிளில் சென்றாக வேண்டும்.

குமார், இந்தியாவில் சரிவை சந்தித்துள்ள மக்களின் விகிதாசார பங்கீட்டை - ஒரு பெரிய உழைக்கும் மக்கள் தொகையில் இருந்து பெறும் பொருளாதார வளர்ச்சியை - பிரதிபலிக்கிறார். அவரது தந்தை இறந்த பிறகு பள்ளி படிப்பை பாதியில் விட்டு வெளியேறும்படி கட்டாயத்து ஆளானார். ஒரு பாதுகாப்பான அரசு வேலையும் அவருக்கு இயலாத ஒன்றானது. 10ஆம் வகுப்பு தாண்டாத தனக்கு வேலைக்கான வாய்ப்பு ‘மட்டுப்படுத்தப்பட்டது’ என்பதை குமார் ஒப்புக் கொள்கிறார். வேறு எந்த நாட்டிலும் இல்லாதவாறு, 2005-06 முதல் 2055-56 வரை இந்தியாவின் மக்கள்தொகை நீளும் வாய்ப்புள்ளது. ஆனால் வீழ்ச்சி விகிதம் என்பதன் பொருள், பல மாநிலங்கள் வாய்ப்புகளுக்கான கதவை மூடுவதாகும் என்று, 2018ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மக்கள்தொகை நிதி (UNFPA) அறிக்கை கூறுகிறது. இது ஏற்கனவே கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து கிளம்பும் போது இன்று வேலை பெற்றிட வேண்டும் என்று நினைப்பேன்” என்று கூறும் குமார், "இல்லையென்றால், வீட்டிற்கு நான் வெறும் கையுடன் தான் செல்ல வேண்டும்” என்றார்.

இது, நாடு முழுவதும் உள்ள தொழிற்பேட்டைகளில் இருந்து - திறமையில்லாத மற்றும் பகுதி திறமையான தொழிலாளர்கள், ஒப்பந்த வேலைகளை பெற கூடும் இடங்களில் இருந்து - வழங்கப்படும் 11 பகுதி கொண்ட கட்டுரையின் ஒன்பதாம் பாகம் ஆகும்; இது இந்தியாவின் அமைப்புசாரா துறை வேலை நிலவரங்களை கண்காணித்துள்ளது. (முந்தைய கட்டுரைகள் இந்தூர், ஜெய்ப்பூர், பெரும்பாவூர், அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு மற்றும் பதிந்தாடா பகுதி நிலவரம் குறித்து எழுதப்பட்டவை).

இந்தத் துறையானது இந்தியாவின் வேலையில்லாத, அரைகுறையான கல்வி உள்ள மற்றும் தகுதி வாய்ந்த ஆனால் வேலையில்லாத மக்களை உறிஞ்சி, தொழிலாளர் தொகுப்பில் 92% பங்களிப்பு செய்வதாக, அரசு தரவுகளை பயன்படுத்தி வெளியான, 2016 சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வு தெரிவிக்கிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம், நம்பிக்கைகளிய கருத்தில் கொண்டு, இந்த தொடரானது பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் உருவான வேலையிழப்பு குறித்த தேசிய சர்ச்சை, 2017 ஜூலையில் அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு பிந்தய சூழல்களை ஆராய்கிறது. 2018 உடனான நான்கு ஆண்டுகளில், மூன்றில் ஒரு பகுதியினர் வேலை இழந்ததாக அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்பு, தன்னிடம் உள்ள 3,00,000 உறுப்பினர் அலகில் 34,700 பேரிடம் கேட்ட கருத்தின் அடிப்படையில் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2018 இல் மட்டும், 11 மில்லியன் வேலைவாய்ப்பு இழப்பு, பெரும்பாலும் ஒழுங்கற்ற கிராமப்புற துறைகளில் ஏற்பட்டுள்ளது என்று சி.எம்.ஐ.இ. தரவுகள் தெரிவிக்கின்றன.

நம்பிக்கை விடிவெள்ளி பவாரா சவுக்

யமுனா நகரில் உள்ள பவரரா சவுக், குமாரை போல் ஒவ்வொரு நாளும்1,500-2,000 தொழிலாளர்கள் பார்க்கிறது.இவர்களில் பலரும் ஹரியானா முழுவதும் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான உத்திரப்பிரதேசம் உள்ளிட்டவற்றில் இருந்தும் பிளைவுட் யூனிட்டுகளில் பணிபுரிந்தனர்; அவை, தொழிலாளர்களை நசுக்கின அல்லது வெறுமனே மூடப்பட்டன. அந்த மையத்தில் உள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை "இருமடங்காகவும், மும்மடங்காகவும்" இருந்தது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. செயல்படுத்தப்பட்ட பின்னர் சரிந்ததாக தொழிலாளி ஒருவர் கூறினார்.

பவரரா சவுக், தினமும் 1,500-2,000 தொழிலாளர்களை பார்க்கிறது. இவர்களில் பலரும் ஹரியானா, அண்டை மாநிலமான உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்; பிளைவுட் யூனிட்டுகளில் பணிபுரிந்தனர்; அவை, தொழிலாளர்களை நசுக்கின அல்லது வெறுமனே மூடப்பட்டன.

நகரின் பிற பகுதிகளை விட தொழிலாளர்களை கொண்ட இந்த உழைப்பு மையம் முன்னதாகவே எழுந்துவிடுகிறது. சுமார் 6 மணிக்கு தொழிலாளர்கள் அங்கு வந்து வேலை தேடலை தொடங்குகின்றனர் - முன்னரே வருபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. யமுனா நகர் பஸ் நிலையம் மற்றும் ஜகத்ரி ரயில் நிலையத்துடன் இணைக்கும் சாலைகள் என, நகரின் மையப்பகுதியில் சவுக் அமைந்துள்ளது. ஒப்பனை மற்றும் துணிகளை விற்பனை செய்யும் பல கடைகள், பெரும்பாலும் நாக்-ஆஃப் பிராண்டுகள், மற்றும் பிறவகை நகரில் உள்ளன. குறுகிய பாதைகளில் மிதிவண்டிகள், டோங்காஸ் (குதிரை வண்டிகள்) மற்றும் ஸ்கூட்டர்கள் ஆகியன நிரம்பியுள்ளன.

சிறு குழுக்களாக நிற்கும் தொழிலாளர்கள் கடந்து சொல்லும் ஒவ்வொருடிரக் அல்லது ரிக்சாவை எதிர்பார்ப்புடன் பார்த்து காத்திருந்தனர். கடைசியாக ஒரு பணிக்கான ஒப்பந்தக்காரர் வந்தார்; அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவர்களை கட்டுப்படுத்திய அவர், தொழிலாளர்களை இளையவர், சிறந்தவர் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுத்த்தார். இவ்வாறு தேர்வானவர்கள் கட்டுமான வேலை, வர்ணம் பூசுதல், மரம் மற்றும் சுமை ஏற்றுதல்/ இறக்குதல் ஆகியவற்றில் பணிகளில் ஈடுபட்டு, ஒருநாள் கூலியாக ரூ.300 பெருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு அந்த தொழிலாளர்கள் ஒருநாளைக்கு ரூ. 500- ரூ. 600 சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தனர் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், சுந்தர்லால், 45, பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொழிற்துறையை தாக்கும் வரை, பிளைவுட் உற்பத்தி தொழில் மூலம் மாதம் ரூ.12,000 வரை வருவாய் ஈட்டி வந்தார். தற்போது இது பாதியாக - ரூ. 4,000 முதல் ரூ. 5.000 - என்று கூலி குறைந்துவிட்டது.

சுந்தர்லால், 45, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு வரை பிளைவுட் உற்பத்தி தொழிலில் மாதம் ரூ.12,000 வரை சம்பாதித்தார். இப்போது இது பாதியாக - ரூ. 4,000 முதல் ரூ. 5.000 - என்று குறைந்துவிட்டது.

ஐந்தாம் வகுப்பு தாண்டாத லால், ஒரு அழுக்கு குர்தா-பைஜாமா மற்றும் தேய்ந்த செருப்புடன் சவுக் பகுதிக்கு, வேலை தேடி கடினமாக தினமும் பயணத்தை மேற்கொள்கிறார். அவரது குடிசை வீடு, உத்தரப்பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் சர்சாவாவில் உள்ளது; இது இங்கிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது. அவர் தொழில் மையத்திற்கு பஸ்சில் செல்வதற்கு மட்டும் ரூ. 25 டிக்கெட்டிற்கு செலவிட வேண்டும். ஆனால், அவருக்கு தினமும் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. அவர் சிறப்பாக கருதுவதே மாதத்திற்கு 10-12 நாட்களுக்கு தினக்கூலி ரூ. 250- 300 என்று, ஏற்கனவே ஈட்டிய வருவாயில் பாதியை கூட பெறுவதில்லை.

ஐந்து உறுப்பினர்களை கொண்ட லாலின் குடும்பம், இந்த வருவாயை கொண்டு போராடி வருகிறது. தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கே ரூ.200 செலவாகிறது. லாலின் மனைவி விவசாய கூலிப்பணிகளுக்கு சென்று வருவதன் மூலம் மாதம் ரூ.2000- ரூ. 3000 வரை ஈட்டுகிறார். அவரது இரு மகள்களும் வீட்டுப்பணிகளை கவனித்துக் கொள்ள மகன், ஒரு டீக்கடையில் வேலை பார்த்து, மாதம் ரூ.3000 சம்பாதிக்கிறார்.

லால் "வேறு வழியில்லை" என்றார்; அதனால், குறைந்த ஊதியங்களை ஏற்றுக்கொள்வதாக கூறினார். ஏனெனில் தொழிலாளர் சந்தையில் இதற்கும் அல்லது இதைவிட குறைவான கூலியை ஏற்க பலர் தயாராக உள்ளனர். "நான் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யாவிட்டால் என் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது?" என்று அவர் கேட்டார். அவரது வீட்டில் பெரும்பாலான நாட்களில், காய்கறிகள் அல்லது தால் (பருப்பு) வாங்க முடியாமல் வெறும் உப்புடன் ரொட்டி சாப்பிடுகின்றனர்.

வேலை குறித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை

ஹரியானா வரும் 2019 அக்டோபரில் ஒரு புதிய மாநில அரசை தேர்வு செய்யும். 2014 மாநில சட்டமன்ற தேர்தல்களில், மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க. மொத்தமுள்ள 80 சட்டசபை இடங்களில் 47இல் வெற்றி பெற்றது; பூபேந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் கட்சி; ஓம்பிரகாஷ் சவுதாலா தலைமையில் இந்திய தேசிய லோக்தளம் கட்சி ஆகியவற்றை தோற்கடித்தது.

வேலைவாய்ப்பு நெருக்கடி மற்றும் விவசாயிகளின் துயரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில், பா.ஜ.க. சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் வேண்டுகோள் நிறைவேற்றும் வகையிலான ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இளைஞர்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி, 12 வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 6,000 மற்றும் கல்லூரி பட்டதாரிகளுக்கு ரூ. 9,000 மாத உதவித்தொகை வழங்குவதாக கூறியது. புதிய தொழில்களை தொடங்க விரும்புவோருக்கு ரூ .1 கோடி வரை கடனுதவி; ஒருநாளின் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 300 என்றும் பாஜக உறுதியளித்தது.

ஆனால், 2014 -2 018ஆம் ஆண்டுகளில் பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்களில் பதிவுசெய்த 1,521,854 இளைஞர்களில் வெறும் 647 (0.042%) பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது என்பது, ஆர்.டி.ஐ.யில் பெறப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பெரும்பாலும் ஜிந்த், ஃபரிதாபாத், ரோதக் மற்றும் யமுனாநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்.

ஹரியானாவின் வேலையின்மை விகிதம் நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்ததாக, 19% உள்ளது; முதலிரண்டு இடங்கள், சண்டிகர் (22.7%), திரிபுரா (22.9%) என்று, 2019 மார்ச் மாதம் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வழங்கிய தரவு காட்டியது. அக்டோபர் 2016ல் - பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பதற்கு ஒரு மாதம் முன்பு - வேலையின்மை விகிதம் 9.8%; இது 2016 டிசம்பரில் 15.4% ஆக உயர்ந்தது. ஒரு வருடம் கழித்து, அக்டோபர் 2017 ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 14.3% ஆகவும்; அக்டோபர் 2018இல் 18.7% ஆகவும் உயர்ந்தது. 2018 டிசம்பரில் வேலையின்மை விகிதம் 24.5% என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

"திறன் குறைந்த தொழிலாளர்கள் பிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் போல் வேலை செய்வது தவறு" என்று, மாநிலத்தில் தொழிலாளர் உரிமைக்காக தன்னிச்சையாக பணியாற்றிய ஒரு ஆர்.டி.ஐ. ஆர்வலரான பி.பி. கபூர் தெரிவித்தார். இதற்கு காரணம், அரசின் "தவறான" கொள்கைகள் மற்றும் தொழிலாளர்களின் நலனில் கவனமின்மை என்று அவர் கண்டறிந்தார். தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை கூட பெறவில்லை. பணம் சம்பாதிக்கப்படவில்லை; நல்ல மருத்துவ வசதிகளை இழந்தனர் மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டால் மறுவாழ்வுக்கான வாய்ப்புகள் தரப்படவில்லை.

ஹரியானா தொழிலாளர் அமைச்சர் நாயக் சிங் சைனி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். "தொழிலாளர் நலனில், அவர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது," என்றார் அவர்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (MGNREGS) கீழ் மேலும் ஏராளமான இளைஞர்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறப்பு ஏற்பட்டால் தொழிலாளர்களுக்கு இழப்பீடு உள்ளது; வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்குத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது சார்ந்தவர்கள் மற்றும் இலவச மருத்துவ சேவைகளை வழங்கப்படுகிறது. ஜனவரி - ஜூன் இடையே 2017 குறைந்தபட்ச ஊதியமும் திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு ரூ. 318.46 என்று இருந்தது 2019 ஜனவரி - ஜூன் இடையே ரூ. 339.51 ஆக அதிகரித்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். (ஆறு மாதத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன).

ஹரியானா கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (BOCW) வாரியத்தின் கீழ், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம், வீட்டுத் திட்டங்களுக்கான கடன்கள், தொழிலாளர் காப்பீடுகள் மற்றும் அவர்களை சார்ந்து உள்ளவர்களின் மகப்பேறு நன்மைகள், குழந்தைகள் கல்விக்கான நிதி உதவி மற்றும் பல செய்யப்பட்டுள்ளன. 2018 செப்டம்பர் வரை 7,76,000 தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், பயனாளிகளின் எண்ணிக்கை தெளிவாக இல்லை.

நூறு நாள் வேலை உத்தரவாத திட்ட இணையதளத்தின் ஏப்ரல் 27, 2019 தரவுகளின்படி, 1.6 மில்லியன் தொழிலாளர்களில் 6,38,000 (40%) பேர் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளனர். இத்திட்டத்தில், 100 நாள் வேலை என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில், 2018-2019 நிதியாண்டில் சராசரி வேலை நாட்களின் எண்ணிக்கை 33.73 ஆகும். சராசரி தினசரி ஊதியம் ரூ 281.27; இது மாநிலங்களின் குறைந்தபட்ச ஊதியத்தை விட17.51% குறைவாக இருந்தது.

பவாரா சவுக்கில், தொழிலாளர்கள் அனைவரையும் எதிர்பார்ப்பது அரசு அது எந்த அரசானாலும், பல்வேறு துறைகளில் உள்ள தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஊதியங்களை உயர்த்தவும் / தரப்படுத்தவும் வேண்டும் என்பதாகும். வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய உத்திகளை கொண்டுள்ள, மாநிலத்தின் பிளைவுட் தொழிலுக்கு "புத்துயிர்" தருவதாக உறுதி தரும் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க தொழிலாளர்கள் தயாராக உள்ளனர்.

தடுமாற்றத்தில் ஒரு வளர்ந்துவரும் வேலை மையம்

ஹரியானாவின் யமுனா நகர், யமுனை நதியின் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு, 1980ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இரு பிளைவுட் தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன.

கடந்த 90களின் முற்பகுதியில், வேளாண் பரப்பளவு உயர்த்தப்பட்ட போது, யமுனா நகரில் பிளைவுட் தொழிற்சாலைகளும் வளர்ச்சியடைந்தன; 2014 ஆம் ஆண்டில், அது தனது உச்சத்தை அடைந்தது என்று, சாவ்லா கூறினார். இந்த நகரம் நாட்டின் பிளைவுட் சந்தையில் 60 சதவிகிதத்திற்கும் மேலாக பங்களிப்பு செய்தது; ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வருகைக்கு பின் அதன் சரிவு தொடங்கியது என்றார் அவர்.

மோகன் லால், 65, யமுனா நகரில் உள்ள பிளைவுட் தொழிற்சாலைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்தவர். ஒட்டு பலகைகளை வெட்டுவதில் நிபுணத்துவம் பெற்ற இவர், இன்று கிழிந்த சட்டை மற்றும் கால்சட்டைகளுடன் கட்டுமான இடங்களில் தனக்கு வேலை தேடி வருகிறார்.

மோகன் லால், 65, யமுனா நகர் பிளைவுட் ஆலைகளில் 30 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர். ஒட்டு பலகைகளை வெட்டுவதில் கைதேர்ந்த இவர், தற்போது கட்டுமான இடங்களில் வேலை தேடி வருகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு மாதம் ரூ.16,000 சம்பாதித்த் இவர், தற்போது ரூ.3,000- 5,000 சம்பாதிக்கவே போராட வேண்டியுள்ளது.

லால் ரூ.16,000 சம்பாதித்து வந்தவரை, அவரது குடும்பம் கொஞ்சம் வசதியாக வாழ்ந்து வந்தது; , ஞாயிற்றுக்கிழமைகள், மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விடுப்பு எடுத்து அனுபவித்தார். அவர்கள், யமுனா நகரின் பழைய ஹமீதா பகுதியில், அடிப்படையான ஆனால் வசதியுள்ள ஒரு படுக்கையறை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

லாலில் வாழ்க்கையில் சூறாவளி வீசியது. அவர் பணி புரிந்து வந்த பிளைவுட் தொழிற்சாலை மூடப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலை இழந்து, பணமில்லாத சூழலால் அவரது குடும்பம், சஹரான்பூரின் சர்சாவா பகுதி குடிசை பகுதிகளுக்கு தற்காலியகமாக இடம் பெயர்ந்தது. இது, பவாரா சவுக்கில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது. பிளைவுட் யூனிட்டுகளில் வேலை தேடி சலித்து போன அவர், பிறகு,தினக்கூலி தொழிலாளியாக பணியாற்றத் தொடங்கினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்து ஓராண்டுக்கு பிறகும் கூட அவரால் மாதத்திற்கு ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு, நாளொன்றுக்கு 250 - 300 ரூபாய்க்கு தான் வேலை கிடைக்கிறது. அவரது மாத வருமானம் 3,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் என்று சரிந்து போனது. அவரது மகன்கள் தனித்தனியாக வாழ்கிறார்கள்; ஒருவர் அரசு பள்ளியில் துப்புரவாளர்; மற்றொருவர் இரவு சந்தையில் காவலாளி. அவரது மனைவியோ நோய்வாய்ப்பட்டு, வேலை செய்ய இயலாத நிலையில் உள்ளார்.

வேலை தேடுபவர்களின் சொர்க்கம் என்று அறியப்பட்ட யமுனா நகர் அதன் புகழை இழந்துவிட்டது என்று, ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்களின் நலனுக்கு போராடும் பெஹர் அமைப்பின் தலைவர் சதீஷ் திமான் தெரிவித்தார். "ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு தவறிவிட்டது," என்ற அவர், வேலைவாய்ப்பு திட்டங்கள் வெற்றி என்ற அரசின் கூற்றுக்களை மறுத்தார்.

ஒரு யூனிட் மூடப்பட்டது; மற்றொன்று மூடப்படலாம்: உரிமையாளர்

அங்கூர் ஜெயின், ஹரியானாவில் ஆறு பிளைவுட் உற்பத்தி தொழிற்சாலை யூனிட்டுகளின் உரிமையாளர்; இவர், யமுனா நகரில் உள்ள 40% எஞ்சிய பிளைவுட் தொழிற்சாலைகள், 2019 மார்ச் மாதம் மூடப்படலாம் என்றார். அவர் 129 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார், ஆனால் பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு அவர்களில் பாதி பேரை நீக்க வேண்டியதாயிற்று. இந்த ஆண்டு, அதிகரித்துவரும் இழப்புக்களால் தனது ஆறு யூனிட்டுகளில் ஒன்றை மூடிவிட வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்; அதுதவிர மேலும் ஒன்றை மூடிவிடவும் வாய்ப்புள்ளது. 49 வயதான அவருக்கு, கல்லூரியில் படிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்; அவர்களது பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டிய ‘நெருக்கடியில்’ அவர் உள்ளர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டியை அவசர கோலத்தில் நிறைவேற்றியது ஆகிய இரண்டும் பிளைவுட் தொழிற்துறையை பெரும் பீதிக்குள்ளாக்கிவிட்டன என்று, பல தொழிற்சாலைகளுக்கு நிதி ஆலோசகராக இருப்பவரும், பட்டய கணக்காளருமான நீரஜ் கார்க் தெரிவித்தார்.

பிளைவுட் தொழிலில் சரிவானது கட்டுமானத்துறையையும் கடுமையாக பாதித்துள்ளது என்று கார்க் தெரிவித்தார். முன்னதாக, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, உத்திரப் பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இங்கிருந்து பொருட்கள் வழங்கப்பட்டன. இருப்பினும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கட்டுமான துறையையும் கடுமையாக பாதித்தது; இதனால், பிளைவுட் தேவைகள் 40% வரை குறைந்தது என்று அவர் கூறினார்.

ப்ளைவுட் விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - பண மதிப்பிழப்புக்கு முன், மூல மரத்தின் விலையானது குவிண்டாலுக்கு ரூ.150 ஆகும். இது தற்போது ரூ.700 வரை சென்றுவிட்டதாக, யமுனா நகரில் உள்ள 46 வயது பிளைவுட் வியாபாரி அர்ஷு மேத்தா கூறினார்

முன்பு, மாநில வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ், கிடைக்கும் மரத்தின் அடிப்படையில் பிளைவுட் தொழிற்சாலைகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன. 2011 மற்றும் 2017 இடையே, பிளைவுட் உற்பத்தி யூனிட்டுகள் தொடங்க, எந்த உரிமமும் வழங்கப்படவில்லை. இருப்பினும், 2018 இல் பாஜக அரசு மரத்தின் இருப்புகளை கணக்கிடாமல், பிளைவுட் ஆலை திறப்புக்கு உரிமம் தருவதற்கான விண்ணப்பங்களை வழங்க முன்வந்தது.

மாநிலத்தின் தேவை மற்றும் விநியோகம் பொருத்தமானதாக இல்லை; ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளில் போதுமான நெட்டிலிங்கம் மற்றும் பாதுகாடா (யூகலிப்டஸ்) மரங்கள் நடப்படவில்லை; இது மரங்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது; விலை உயர்வுக்கு காரணமானதாக மேத்தா தெரிவித்தார்.

மேத்தா மட்டுமே தனது ஒரேயொரு யூனிட்டில் இருந்து 22 நிரந்தர தொழிலாளர்கள், 43 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் 50 பிற தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியிருந்தது. மற்றொரு யூனிட்டில் உற்பத்தி பாதியாக குறைந்தது. வேலையாட்கள் குறைப்பு மட்டும் நடக்கவில்லை; பணியில் இருந்தவர்களுக்கு சரியாக சம்பளமும், சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை. மேத்தாவின் தொழிற்சாலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை முன்பு வரை தொழிலாளர்கள் மாதம் ரூ.15,000 வரை சம்பாதித்தனர்; இன்னும் சிலர் கூடுதல் நேர வேலை பார்த்து ரூ.4,000 சம்பாதித்தனர். இப்போது, அவரது தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானோர் பணி இழந்துவிட்டனர். தற்போது பணியில் இருப்பவர்கள் சம்பள வெட்டு பெற்றுள்ளனர்; கூடுதல் நேர பணி வாய்ப்பு போன்ற நன்மைகளை இழந்துவிட்டனர்.

கடந்த 2017இல், 28% ஜி.எஸ்.டி-க்கு எதிராக 1,100 க்கும் மேற்பட்ட பிளைவுட் யூனிட் ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி 18% ஆக குறைக்க அரசு ஒப்புக் கொண்டது.

எனினும், யமுனாநகரின் பிளைவுட் தொழில்துறை இன்னும் மீண்டெழவில்லை.

இது, ஒன்பதாவது கட்டுரை. முந்தைய கட்டுரைகள்: இந்தூர், ஜெய்ப்பூர், பெரும்பாவூர், அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு மற்றும் பதிந்தாடா .

(தாகூர், சண்டிகரை சார்ந்த தன்னிச்சையான எழுத்தாளர் மற்றும் 101Reporters.com உறுப்பினர். பான் - இந்தியா நெட் ஒர்க் அடிப்படை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.