மும்பை: பிரபலமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) - திரைப்பட கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் -குறைவான வருகை பதிவு, குறைவான விவாதங்களில் பங்கேற்றார்; குறைந்த எண்ணிக்கையில் கேள்விகளைக் கேட்டனர்; ஆனால், 16ஆவது மக்களவையி மற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரியை விடவும் அவர்கள், தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி உள்ளனர் என்பது இத்தகைய 19 எம்.பி.க்களின் பணிப்பதிவுகளை நாங்கள் பகுப்பாய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

சராசரியாக, 19 பிரபலமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், 16வது மக்களவையில் 66% வருகை பதிவு கொண்டுள்ளனர்; மற்ற எம்.பி.க்களின் சராசரி இது, 80% என, பாராளுமன்ற தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு செய்ததில் தெரிகிறது.ஆறு பிரபல எம்.பி.க்கள் மட்டுமே 80% அல்லது அதற்கு மேல் வருகைப்பதிவு தந்தனர். பாரதிய ஜனதா கட்சி எம்.பியும், முன்னாள் சினிமா நட்சத்திரமுமான ஹேம மாலினி - தற்போதைய பிரசாரத்தின் போது நிலத்தில் இறங்கி உழவு செய்தது போல் படம் எடுத்தவர் - 39% வருகையை மட்டுமே கொண்டிருக்கிறார்.

பாராளுமன்ற விவாதங்களில், பிரபலமான பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற விகிதம் 22 ஆகும்; இதில், 16வது மக்களவை சராசரி 67 ஆகும். ஒரே ஒரு எம்.பி மட்டுமே அதிக விவாதங்களில் (107 விவாதங்களில் பங்கு) பங்கேற்றுள்ளார். சராசரியாக, பிரபல எம்.பி.க்கள் 101 கேள்விகளை கேட்டுள்ளனர்; இது, பிற எம்.பி.க்களின் சராசரி கேள்வி எண்ணிக்கை 293 ஆகும். பாரதிய ஜனதா எம்.பி.ஆக இருந்தவரும், முன்னாள் சினிமா நட்சத்திரமுமான சத்ருகன் சின்ஹா இப்போது காங்கிரசில் இணைந்துள்ளார். இவர், எந்த விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை; கேள்விகளையோ கேட்கவில்லை.

அதேநேரம், பிரபல எம்.பி.க்கள் தங்களது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியை (MPLADS) செலவிடுவதில் மற்ற எம்.பி.க்களை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்; 2019 ஏப்ரல் 5ஆம் தேதியின்படி, இதில் இவர்களின் சராசரி 87.6% மற்ற எம்.பி.க்களின் சராசரி 82.9% ஆகும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஆண்டுக்கு தங்களுக்கென ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடியை, தங்கள் தொகுதிக்குட்பட்ட மாவட்டங்களில் வளர்ச்சிப்பணிகளுக்கு கலெக்டர் வாயிலாக செலவிட்டுள்ளனர்.

சினிமா பிரபலங்கள், அரசியலில் பொதுவானவர்கள்; மற்றும் சமூக ஊடகங்களில் அவர்கள் அதிக கவனத்தை ஈர்ப்பதால்.தேர்தல் பிரச்சாரத்தில் அவர்களை பார்க்க முடிகிறது; தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நடப்பு 2019 மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் சினிமா பிரபலங்களில் திரை நட்சத்திரங்கள் சன்னி தியோல், ஊர்மிளா மடோண்ட்கர் மற்றும் பிரகாஷ் ராஜ், பாடகர் ஹான்ஸ் ராஜ் ஹான்ஸ் ஆகியோர் அடங்குவர்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கெடுத்த19 பிரபலங்களின் செயல்திறனை -அதாவது விவாதங்கள், கேள்விகள், தனிநபர் மசோதா, அரசு மசோதாமற்றும் பலவற்றை இந்தியா ஸ்பெண்ட் மதிப்பிட்டது.

இந்த எம்.பி.க்கள் தங்களது தொழிலாக குறிப்பிட்டுள்ள - 'நடிகர், நகைச்சுவை நடிகர்', 'படத்தில்/டிவி/ நாடக நடிகர்', 'கலைஞர்', 'பாடல் கலைஞர்', 'போஜ்பூரி பாடகர்', 'திரைப்படக் கலைஞர்', 'செயல்பாட்டு கலைஞர்' என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

Source: Lok Sabha 1, 2, 3; MPLADS
குறிப்பு: அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்களின் அலுவல் இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை. மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதி பாஜக எம்.பி. பாபுல் சுப்பிரியோ, 2014, நவம்பர் 9 இல் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜூலை 12, 2016இல், கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சரானார். *சுப்ரியா அமைச்சராகும் முன்புவரை, சபையின் 33 நடவடிக்கைகளில் 15 என்றளவில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். குஜராத்தின் சோட்டா உதய்பூர் பாஜக எம்.பி.
ராம்சிங் பாட்டாலியாபாய் ரத்வா (நளின கலைஞர்) இதில் சேர்க்கப்படவில்லை.

சராசரிக்கு கீழ் வருகை

16 வது மக்களவை, 2014 ஜூன் முதல், 2019 பிப்ரவரி வரை மொத்தம் 331 அமர்வுகளை கொண்டிருந்தது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வருகை 80% என்று, பி.ஆர்.எஸ். அவை நிகழ்ச்சிகளின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. பிரபல எம்.பி.க்களின் சராசரியாக 66% வருகை கொண்டிருந்தனர்.

பிரபல நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகபட்சமாக நடிகர் ஜார்ஜ் பேக்கர் (98%) வருகையை கொண்டிருந்தார். அசாம் மற்றும் வங்கமொழி திரைப்பட நடிகரான பெக்கர், ஆங்கிலோ-இந்திய உறுப்பினராக பா.ஜ.க. சார்பில் ஜூலை 23, 2015 அன்று மேற்கு வங்கத்தில் இருந்து நியமிக்கப்பட்ட எம்.பி. ஆவார். அவர் பொறுப்பேற்ற ஆகஸ்ட் 10, 2015 அன்று முதல் நடந்த 228 அலுவல் நாட்களில் 223 இல் அவர் பங்கேற்றிருந்தார்.

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் தொகுதியில் இருந்து பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான சரத்குமார் பன்சோட், மராத்தி திரைப்பட நடிகர் மற்றும் இப்போது ஒரு வழக்கறினர்; அவர், 93% வருகை (337 நாட்களில் 307 முறை) என்று பதிவாகியுள்ளது.

சிறந்த வருகை பதிவேடு கொண்டுள்ள வேறு சில பிரபல எம்.பி.க்கள் திரைப்பட கலைஞரும், போஜ்பூரி பாடகருமான சோட்டல் (88%), தெலுங்கு நடிகர் முரளி மோகன் மகந்தி (85%), மற்றும் திரைப்பட நடிகர் கிர்ரன் கெர் (84%) ஆவர்.

மேற்கு வங்கத்தின் காடெல் தொகுதியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் பிரதிநிதித்துவம் தரப்பட்ட வங்காள நடிகர் தீபக் (தேவ்) அதிகாரி, குறைந்தபட்சமாக (11%) கலந்து கொண்டார். குறைந்த வருகை உள்ள பட்டியலில் உள்ள மற்ற எம்.பி. பாலிவுட் நடிகர் ஹேமமாலினி (39%), வங்காள நடிகர் தபஸ் பால் (47%), வங்காள நடிகர் சந்தியா ராய் (53%) மற்றும் பஞ்சாபி நடிகரும், காமெடியனுமான பகவான் மான் (56%) ஆகியோர்.

நாடாளுமன்ற அலுவலில் குறைவாக பங்கேற்றவர்கள்

பிரபலங்களில் பட்டியலில், சண்டிகரின் பாஜக எம்.பி. கிர்ரன் கெர், அதிகபட்ச (335) கேள்விகளை கேட்டார்; இது, 16வது மக்களவையின் சராசரியான 293ஐ விட அதிகம்.

ஆந்திராவின் ராஜமுந்திரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தெலுங்கு திரைப்பட நடிகர் முரளி மோகன் மகாந்தி, அடுத்த அதிகபட்சமாக 267 கேள்விகள் கேட்டார். அதற்கடுத்த இடங்களில் போஜ்புரி பாடகர் மற்றும் நடிகர் மனோஜ் திவாரி (258),ஜார்ஜ் பேக்கர் (255), மற்றும் முன்னணி மலையாள திரைப்பட நடிகர் இன்னொசண்ட் (217) ஆகும்.

வங்க சினிமாவில் தனது படைப்புகளால் முதன்மையாக அறியப்படும் நடிகர் மூன் மூன் சென், ஒடிசா திரைப்பட நடிகர் சித்தந்த் மஹாபத்ரா மற்றும் நடிகர் சத்ருகன் சின்ஹா ஐந்து ஆண்டு காலங்களில் ஒரு கேள்விகூட கேட்கவில்லை. 16வது மக்களவை விவாதங்களில் பங்கெடுத்தவர் சராசரி 67 என்று உள்ள நிலையில் பகவன்மன் அதிகபட்சமாக 107 விவாதங்களில் பங்கேற்றார். மன்-ஐ தொடர்ந்து முரளி மோகன் மகாண்டி (55), கிர்ரன் கெர் (44), அப்பாஸ் (40), ஜார்ஜ் பேக்கர் (33), தேசிய சராசரியை விட குறைவாக கொண்டுள்ளனர்.

அதேநேரம், சத்ருகன் சின்ஹா எந்த விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை; மூன் மூன் சென் ஒன்றில் பங்கேற்றார். இது, 19 பிரபல எம்.பி.க்களில் குறைந்த பட்சமாகும்.

எம்.பி. தொகுதி நிதியை சிறப்பாக பயன்படுத்தியோர்

16ஆவது மக்களவையில், எம்.பி. தொகுதி வளர்ச்சிக்கான நிதி (MPLADS) 85% பயன்படுத்தப்பட்டுள்ளது; 15% - அதாவது, மொத்தம் ரூ. 12,051.36 கோடியில் ரூ. 1,806.08 கோடி- பயன்படுத்தப்படவில்லை என்று, 2019 ஏப்ரல் 6இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

19 பிரபல நாடாளுமன்ற உறுப்பினர்களில், 2019 ஏப்ரல் 5ஆம் தேதிப்படி, தொகுதி வளர்ச்சி நிதியை அதிகம் (98.8%) பயன்படுத்தியவர், சந்தியா ராய். இவருக்கு அடுத்ததாக பிரபல எம்.பி.க்கள் பட்டியலில் தீபக் (தேவ்) அதிகாரி (96.7%), அடுத்த இடங்களில் வங்காள நடிகர் சதாப்தி (பானர்ஜி) ராய் (95.6%), கிர்ரன் கெர் (91.2%) மற்றும் சத்ருகான் சின்ஹா (91.1%) உள்ளனர். பாபுல் சுப்ரியோ, தொகுதி வளர்ச்சி நிதியை குறைவாக (74.1%) பயன்படுத்தி இருக்கிறார்.

(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் மூத்த கொள்கை ஆய்வாளர். இந்தியா ஸ்பெண்ட் உடன் பணிபுரியும் பைஸி நூர் அகமது தரவுகள் உள்ளீட்டுடன்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.