வாரிசு அரசியலில் காங்கிரஸுக்கு குறைந்ததல்ல பாஜக: மக்களவை தரவுகளே சாட்சி
மும்பை: கடந்த இருபது ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை (காங்கிரஸ்) போலவே “வாரிசுகள்” இடம் பெற்றுள்ளனர். 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பாராளுமன்றத்தில் இருந்து இன்று வரை 4,807 மக்களவை உறுப்பினர்களின் வாழ்க்கை விவரங்களை உள்ளடக்கிய ஒரு புதிய தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் இது தெரிய வருகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் மக்களவையில் காங்கிரஸ் கட்சியில் 36 வாரிசு எம்.பி.க்கள், அதை பின் தொடர்ந்தவாறே பா.ஜ.க.வில் 31 வாரிசு எம்.பி.க்கள் இடம் பெற்றிருந்தனர். 1999 ஆம் ஆண்டில், 13 வது மக்களவை துவக்கத்தில், காங்கிராஸ் உறுப்பினர்களில் 8% பேர் (எம்.பி.க்கள்) அல்லது முன்னாள் உறுப்பினர்களின் வாரிசு அல்லது அவர்களை திருமணம் செய்தவர்களாகவே இருந்தனர்; பா.ஜ.க.வில் இது 6% என்றிருந்தது. 2009 ஆம் ஆண்டில் வாரிசு அரசியல் அதிகபட்ச எண்ணிக்கையாக, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வில் முறையே 11% மற்றும் 12% உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்வாகியிருந்தனர்.
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து நீண்ட காலமாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சியில் நேரு-காந்தி குடும்பத்தின் பிரதான நிலை இந்திய அரசியலில் உறவினர் ஆதிக்க கொள்கையை அடையாளப்படுத்தியது. இருப்பினும், வாரிசு அரசியல் அனைத்து முக்கிய கட்சிகளிலும் பொதுவாக காணப்படுகிறது என, அமெரிக்காவின் ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் மன்ஹெய்ம் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் தரவு தொகுப்பை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.
"இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால் அரசியல் வாரிசுகள் கட்சியில் குறுக்கு வழியில் இடம் பிடிப்பதான்," என்று, ஹார்வர்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவரும், தரவுத்தளங்களை தொகுத்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவருமான சித்தார்த் ஜார்ஜ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "செய்தி ஊடகங்களை நீங்கள் பார்த்து, வாசித்திருந்தால், இந்த கருத்திற்கு நீங்கள் வரமாட்டீர்கள்" என்றார் அவர்.
"பா.ஜ.க.வில் வாரிசுகள் இளம் தலைமுறையினராக [காங்கிரஸ் விட] உள்ளனர். ஆனால் புள்ளிவிவர அடிப்படையில் மற்றும் வயது ஒப்பீட்டளவில் வாரிசு உள்ளது" என்றார் ஜார்ஜ்.
வாரிசு அரசியல் என்பதில் இக்கட்டுரையானது எந்தவொரு அரசியல்வாதியின் தந்தை, தாய் அல்லது மனைவி ஆகியோர் மக்களவை உறுப்பினராக இருப்பின் அவர்களை இது குறிப்பிடுகிறது. எனவே இக்கட்டுரைக்கு பயன்படுத்தப்பட்ட தரவுகள் அரசியல்வாதிகளின் பிற வாரிசுகள் குறித்த விவரங்களை இதில் குறிப்பிடவில்லை. அதேபோல் மாநிலங்களவை உறுப்பினரான உள்ளவர்களின் வாரிசு விவரங்களும் பகுப்பாய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே, இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் வாரிசு அரசியல் "அதாவது மகன், மகள் மற்றும் மனைவி ஆகியோருக்கு இடையேயான உறவு அரசியல் தான் 75% க்கும் மேலாக உள்ள நிலையில்" இது, உண்மையான வாரிசு புள்ளி விவரங்களை குறைத்தே மதிப்பிடுகிறது என்று ஜார்ஜ் கூறினார்.
சிறிய மற்றும் பிராந்தியக் கட்சிகளில் கூட, முக்கிய குடும்பங்களின் கைகளில் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் இருப்பது தெரிகிறது. உண்மையில், அண்மைக்காலங்களில் அதிகாரத்தில் இருப்பதால் அவை வாரிசு அரசியலில் செல்வாக்கு கொண்டுள்ளன. 2009இல் ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று எம்.பி.க்களில், இருவர் தேசிய மாநாட்டு கட்சியின் (NCP) வாரிசுகள் (பாரூக் அப்துல்லா மற்றும் மிர்ஸா மெஹ்புப் பேகம்); இது மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும் போது அதிகபட்ச விகிதமாக 67% இருந்தது. அதே காலகட்டத்தில் ராஷ்டிரிய லோக்தள் எம்.பி.க்களில் 40% பேர் மற்றும் ஷிரோமணி அகாளிதளம் கட்சியின் 25% பேர் வாரிசுகளாக இருந்தனர்.
பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே சமநிலை
காங்கிரஸ் கட்சியின் தலைமையில் காந்தி குடும்பத்தினர் முக்கிய ஆதிக்கம் செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுவதற்கு காரணம், அது மிகப்பெரிய பரம்பரையாக உள்ளது தான் என்று, இங்கிலாந்தில் உள்ள லண்டன் பொருளாதார அறிவியல் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளியில் உள்ள வெளியுறவு கொள்கை ஆய்வு அமைப்பான எல்.எஸ்.இ. ஐடியாஸ் (LSE IDEAS) ஆராய்ச்சியாளர் அர்ஜுன் சாவ்லா தெரிவித்தார். "தற்போது காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியலை கொண்டு பா.ஜ.க. அரசியலாக்க முடிகிறது. ஏனென்றால் அந்த கட்சியில் வாரிகளின் எண்ணிக்கை குறைவு; முக்கிய பிரபல தலைவர்களின் குடும்பங்களில் வாரிசுகளிடம் அரசியல் ஒப்படைக்கவில்லை," என்று சாவ்லா கூறினார். மேலும், இது பாஜகவிற்கு ஒரு சிறந்த இயந்திரமாக இருந்து, அது தாக்கப்படும் போது தற்பாதுகாப்பிற்கு உதவுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வாரிசு அரசியல் மீண்டும் தேசிய அளவில் விவாதமாக பேசப்பட்டு வருகிறது; பா.ஜ.க. தேசிய தலைவர் அமீத் ஷா, காங்கிரஸ் தலைமையிலான "55 ஆண்டுகள்" ஒரு குடும்பத்தின் கீழ் மற்றும் "55 மாதங்கள்" மோடியின் கீழ் என இரண்டிற்கிடையே கோடிட்டு கூறியுள்ளார். கடந்த வாரம் முகநூலில் பதிவிட்ட நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸின் "பரம்பரை ஆட்சித்தன்மை” தான் அக்கட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறியிருந்தார். அதே வேளையில், இந்தியாவில் வாரிசு அரசியல் இல்லாத மூன்று முக்கிய கட்சிகளில் பா.ஜ.க.வும் ஒன்றாகும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
கட்சிக்குள் மற்றும் அதிகாரத்தில் மேல் மட்டத்தில் வாரிசுகளை வளர்க்கும் நிலையிலும் (அமைச்சர் மேனகா காந்தி மற்றும் பியூஷ் கோயல்; இவரது தந்தை கட்சியின் பொருளாளர்; தயார் மூன்று முறை எம்.எல்.ஏ.) 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் இதை வெற்றிகரமாக பா.ஜ.க. பயன்படுத்தி கொண்டது. இது ஒரு மென்மையாக நடவடிக்கை என்று கூறும் சாவ்லா "அவர்கள் வெற்றிகரமாக மக்களின் கோபத்தை தூண்ட, சிந்தனையை கிளறுவதற்கு ரத்த உறவுகள் மற்றும் பெயரின் இறுதி பகுதிதீர்மானிப்பதாக இருக்கிறது" என்றார்.
"இப்போது அந்த பேச்சானது கொள்கையின் பிரத்யேக விவரங்களுடன் குறைவாக உள்ளது அல்லது அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. அரசின் அறிக்கை அட்டையாகும். ஆனால் 'காம்-தார் vs நாம்-தார்' போன்ற பழைய இருமைகளுக்கு [செயல்படுபவர்கள் vs ஒரு பெயரை கொண்டவர்கள்] இது ஒரு புத்திசாலி மற்றும் தூண்டக்கூடிய உத்தி " என்று சாவ்லா கூறினார்.
நவீன அரசியலில் பெருகி வரும் ‘வாரிசு’ கலாச்சாரம்
கடந்த 2009இல் தொடங்கிய 15ஆவது மக்களவையில் தான் வாரிசுகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது; பல்வேறு அரசியல்வாதிகளின் வாரிசுகள் 53 பேர் எம்.பி.க்களாக இருந்தனர்; இது மக்களவையில் மொத்த எண்ணிக்கையில் 9.5% ஆகும். இந்த விகிதம் 2014இல் 8.6% என முறிந்தது; ஆனால் நாடாளுமன்ற இடங்களை வாரிசுகள் ஆக்கிரமித்து வரும் போக்கு அதிகரித்து வருவதையே தரவுகள் காட்டுகின்றன. 1994 ஆம் ஆண்டில், 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 2014 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்த விகிதம் காணப்படுகிறது.
தங்களது முன்னோடிகள் அரசியலில் இறங்கி தீவிர பங்களிப்பு செய்து வரும் நிலையில் அவர்களின் வாரிசுகளும் அதே துறையில் இறங்குவது வியப்பு அளிக்கக் கூடியது அல்ல என்றும் இதை "கால நேரத்தின் முழுவதுமான இயந்திர செயல்பாடு" என்று ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஜார்ஜ் குறிப்பிட்டார். ஆயினும்கூட, அரசியல் அதிகாரத்தின் தாக்கம் ஒரு சில குடும்பங்களில் கவனம் செலுத்துவது கவலையாக உள்ளது.
"அரசியலில் நுழைந்து கொண்டிருக்கும் வாரிசு தலைமுறைகள் இயல்பிலேயே மோசமான அல்லது அசாதாரணமானர்கள் அல்ல;ஆனால் இது நமது அரசியல் பிரதிநிதிகள் குடிமக்களிடம் இருந்து வெகுதூரம் செல்வதை அர்த்தப்படுத்துகிறது” என்று, புதுடெல்லியை சேர்ந்த சிந்தனை அமைப்பான கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ராகுல் வர்மா விளக்கினார். “சட்டங்களை தங்களுக்கு சாதகமாக வளைக்க ஒரு தரப்பான மக்கள் உள்ளனர்; இது ஜனநாயகத்திற்க கேடானது” என்றார் அவர்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், அரசியல்வாதிகள் உண்மையில் சாதாரண மக்களின் எண்ணைங்களை நினைத்து பார்ப்பார்கள் என்றும்; 58% பேர் தேர்தலால் பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடாது எனவும் கூறியதாக, 2019 மார்ச் 26இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.
அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஒரே குடும்பத்தை வாரிசுகள் அரசியலில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதில் இந்தியா தனித்துவமானது அல்ல. உண்மையில், உலகெங்கிலும் அரசியலானது வாரிசுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற பிற உயர் தொழில்களுடன் ஒப்பிடுகையில் அரசியலில் தந்தை ஈடுபட்டிருந்தால் அவரது மகன் அதில் இறங்குவது, தனி நபரை விட 110 மடங்கு அதிகமாக உள்ளது என்று, 2018 ஆய்வு தெரிவிக்கிறது.
ஒரு இளம் நாட்டாக இருப்பதும் கூட அரசியலை வாரிசுகள் ஒரு குறிப்பிட்ட அளவில் எதிர்பார்க்கின்றனர். மேலும் அதிகரித்து வரும் குடும்ப அரசியல் இன்னும் சிறிது காலம் தொடரக்கூடும் என்ற வர்மா "100 ஆண்டுகளில் சுமார் 20-25 தேர்தல்களை நீங்கள் கடந்துவிட்டால், இந்த போக்கு குறையும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்" என்றார். "இதற்கு ஒரு உதாரணமாக அமெரிக்காவை நீங்கள் பார்க்கலாம். வருங்காலத்தில் எப்படி வாரிசு அரசியல் விகிதம் சரியும் என்பதை எதிர்பார்க்கலாம்" என்றார்.
இந்த தேர்தல் காலத்தில், அப்துல்லா, பாதல் மற்றும் பட்நாயக் போன்ற முக்கிய அரசியல் குடும்பங்கள், தங்களது வாரிசுகளுக்கு கட்சி வேட்பாளர் பட்டியல்களில் இடம் தருவதை தொடர்கின்றன. நிறுவப்பட்ட குடும்பங்கள் வளர்ந்த பின், தங்கள் பதவிக்காலத்தில் சொத்துக்கள், செல்வங்களை மேலும் அதிகரிக்க செய்வது மற்றொரு காரணமாகும்.
தேர்தலில் போட்டியிடுவது என்பது மோசமான மதிப்பு குறைவான வணிகமாகும், மேலும் அதிகம் செலவிட வேண்டியுள்ளது. 2014 தேர்தலில், முக்கிய போட்டியாளர்களுக்கு ரூ. 1 கோடியில் இருந்து, ரூ.16 கோடி வரை செலவழித்தனர். இது, சட்டப்படை அனுமதிக்கப்பட்ட தொகையை விட 50 மடங்கு அதிகமாகும். நிதி மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு பரம்பரையான அரசியல் அல்லது 'பிராண்ட்' மூலதனம் பங்களிக்கும் வேட்பாளர்களிடம் இருந்து முதலீடு செய்யும் டிக்கெட் தொகையானது அரசியல் கட்சிகளின் கவர்ச்சிகரமான வாய்ப்பு ஆகும்.
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை, 1957ஆம் ஆண்டில் 42 என்று உச்சநிலையில் இருந்து 2014 இல் வெறும் 3 என்று வீழ்ச்சியை சந்தித்தது. இது தேர்தல் செலவினங்கள் அதிகரித்து வருவதை காட்டும் அறிகுறியாகும் என, எல்.எஸ்.இ. ஐடியாஸ் சாவ்லா கூறினார். "இந்தியாவில் பரம்பரை வாரிசு அரசியலுக்கான காரணம், நமது சமுதாயத்தில் ஜனநாயகம் செயல்படும் முறை, அதன் கட்டமைப்பு செயல்பாடுமே” என்றார்.
இந்தியாவின் ஏழ்மை மாநிலம் அதிக வாரிசுகளை தேர்ந்தெடுத்தது
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஏழ்மையான மாநிலமான உத்தரப்பிரதேசம் (UP), கடந்த 1952இல் இருந்து மக்களவைக்கு 51 வாரிசு அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்துள்ளது. அடுத்த இடத்தில் 27 வாரிசுகளுடன் பீகார், தலா 10 எம்.பி.களுடன் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் உள்ளன.
நேரு-காந்தி குடும்பத்தின் அனைத்து நான்கு தலைமுறைகளும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் உத்தரப்பிரதேசம் நன்கு பிரபலமானது. அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. மிக அதிக எண்ணிக்கையில் வாரிசுகளை இங்கு கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 51 வாரிசுகளில் 17 பேர் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள்; 15க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸில் இல்லை. (காங்கிரஸ் (ஐ) இல் ஆறு, இந்திய தேசிய காங்கிரஸில் ஒன்பது, பகுஜன் சமாஜ் கட்சியில் நான்கு பேர்).
பீகாரில், காங்கிரஸ் கட்சியில் 50%க்கும் கீழ் (12) வாரிசுகள் அரசியல் அதிகாரத்தில் உள்ளனர்; அடுத்தது பா.ஜ.க.வில் இருந்து நான்கு பேர்; ஜனதா கட்சியில் இருந்து மூன்று பேர். மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப்பில், அங்குள்ள பிரதான பிராந்திய கட்சிகளிலும் வாரிசு அரசியல் பெரும்பாலும் காணப்படுகிறது. அதன்படி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மூன்று, பஞ்சாப்பில் அகாலிதளம் கட்சியில் நான்கு அரசியல் வாரிசுகள் உள்ளனர்.
பெரும்பாலான வாரிசு தலைவர்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது; தற்போதுள்ள 543 தொகுதிகளில் 80 இம்மாநிலத்தில் உள்ளதால், இங்கு வாரிசு அரசியல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் அமைந்து விடுகின்றன. இருப்பினும், பீகார் (38) விட நான்கு தொகுதிகள் கூடுதலாக மேற்கு வங்கம் 42 தொகுதிகளை கொண்டிருக்கிறது. இருப்பினும், 1952 முதல் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக வாரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒருசில மாநிலங்கள் மற்றவற்றை விட வரையறையின்றி ஏன் அதிக வாரிசு தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றன என்று உத்தரப்பிரதேசம், பீகார் ஆகியவற்றை ஆய்வு செய்த போது, சாதி சார்ந்த அரசியல் செயல்பாடுகளாக இருக்கலாம் என்று தெரிந்ததாக, சாவ்லா தெரிவித்தார். குறிப்பிட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் நடவடிக்கை அல்லது இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் வடிவமாக ஒரு பொருளாதார வர்க்க நடவடிக்கைகளை மீண்டும் அவர்களுக்கே வாக்களித்து வந்திருக்கலாம்.
"ஜாதி அடிப்படையிலான அரசியலுக்கும், உன்னதமான அரசியலுக்கும் பீகாரில் சாதி அடிப்படையிலான வாக்கெடுப்புகளின் ஆதாரங்களுக்கும் இடையே உயர்ந்த அளவு தொடர்பு உள்ளது" என்று சாவ்லா கூறினார்.
சாதி அடிப்படையிலான அரசியலும், வாரிசு அரசியலும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இடையே ஒரு உயர் நிலை தொடர்பு உள்ளது; அது சாதி அடிப்படையில் வாக்களிக்க செய்கிறது என்ற சாவ்லா, "இங்கே நீங்கள் அந்த சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு தலைவராய் இருக்கின்றீர்கள் எனில், முழு சமூகமும் பின்னர் அந்த தலைவரின் சந்ததியினருடன் அடையாளம் காணப்படுகின்றனர்" என்றார்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முலாயம் சிங், 1992இல் சமாஜ்வாதி கட்சியை தொடங்கினார்; இப்போது அந்த மாநிலத்தின் முதல்வராக அவரது மகன் அகிலேஷ் யாதவ் இருப்பது, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் சாதி சார்ந்த அரசியலுக்கு சிறந்த உதாரணமாகும். வரவிருக்கும் தேர்தலில் உத்தரப்பிரதேசம், பீகாரில் செல்வாக்குள்ள, ஜாதவ் மற்றும் யாதவ் சாதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பகுஜன் சமாஜ் கட்சியுடன், சமாஜ்வாதி கூட்டணி வைத்துள்ளது.
சாதி மற்றும் வாரிசு அடிப்படையிலான அரசியலை எடுத்துக் கொண்டால், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகியவற்றிற்கும் இடையே தொடர்புகள் இருப்பதற்கான வாய்ப்புகளை கூறலாம். கடந்த மூன்று மக்களவை பதவிக்காலத்தில் தலித்துகள் ("பின்தங்கிய வகுப்பினர்") மற்றும் மலைவாழ் மக்கள் (பழங்குடியின வகுப்பினர்) வாரிசுகள் மற்றும் சாதி அரசியலில் “முன்னேறிய வகுப்பினரை” விட மிகவும் பின்தங்கியே உள்ளனர் என்று, நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியரான கங்கன் சந்திரன் எழுதிய Democratic Dynasties: State, Party and Family In Contemporary Indian Politics என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதாக, ஸ்க்ரால் செய்தி தெரிவிக்கிறது.
2014 மக்களவையில் சாதி மற்றும் வாரிசுகளில் ‘முன்னேறிய’ வகுப்பு எம்.பி.க்களின் விகிதம் 27.23% என்பதற்கு மேல் இல்லை; இதனுடன் ஒப்பிடும் போது பட்டியலின மக்களின் (தாழ்த்தப்பட்ட சாதி) விகிதம் 8.4%; மலைவாழ் சமூகத்தினர் (பழங்குடியினத்தவர்கள்) எம்.பி.க்கள் விகிதம் 16.67% ஆகும்.
கடந்த 1952 ஆம் ஆண்டில் இருந்து சாதி மற்றும் அரசியல் மாதிரிகள் பற்றிய மாநில வாரியான பகுப்பாய்வில் வடக்கு-தெற்கு பிளவு பற்றி தெளிவற்ற நிலை உள்ளது. ஒரு குடும்பம் வணிகம் சாதாரணமாக நாட்டிற்கும் பொதுவானது என்ற அரசியலை தோற்றுவிக்கிறது. அதே நேரம் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ( நேரடி கூட்டாட்சி பகுதிகள்) வாரிசு அரசியல் இல்லை, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவாவை சொல்லலாம். இதில் கோவாவில் மட்டும் விதி விலக்காக, தற்போது பா.ஜ.க தலைமையிலான கோவா அரசின் அமைச்சராக உள்ள விஸ்வஜித் ராணே, முன்னாள் கோவா முதல்வர் பிரதாப் சிங் ராணேவின் மகன் (இது தரவுத்தளத்தால் கைப்பற்றப்படவில்லை) ஆவார்.
வடகிழக்கு மாநிலங்களில், அஸ்ஸாம் மட்டுமே குடும்ப வாரிசு அரசியலை அனுபவித்து வரும் ஒரே மாநிலமாக உள்ளது. அதிகமான வாரிசு அரசியல் தலைவர்களை கொண்டுள்ள அந்த மாநிலம், ஒட்டு மொத்த மாநிலங்களின் தரவரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது.
மிக நீண்ட குடும்ப வாரிசு
கடந்த 1952 முதல் நீண்ட நாட்களாக அரசியல் வாரிசாக இருந்து வந்தவர், சோம்நாத் சாட்டர்ஜி. இவர் மக்களவைக்கு 10 முறை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒன்பது ஆண்டுகள் சேவை புரிந்துள்ளார். அத்துடன் 2004இல் மக்களவை சபாநாயகராகவும் இருந்துள்ளார். அவரது தந்தை என்.சி. சாட்டர்ஜி மேற்கு வங்கத்தின் புர்த்வான் தொகுதியில் இருந்து மூன்று முறை (முதல், மூன்றாவது மற்றும் நான்காவது மக்களவை) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பின் நடந்த இடைத்தேர்தல் மூலம் அவரது மகனான சோம்நாத் சாட்டர்ஜி அந்த இடத்தை பிடித்தார்.
நீண்டகால வாரிசு தலைவர்களை கொண்டிருந்த முதல் 10 பேர் பட்டியலில் காங்கிரஸ் கட்சி மூன்று, பா.ஜ.க.வில் இருந்து இரண்டு மற்றும் ராஷ்டிரீய லோக்தள் மற்றும் பாரதிய நவசக்தி கட்சியில் இருந்து தலா ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.
நீண்டகால வாரிசு அரசியல்வாதிகளின் முதல் 10 பேர் பட்டியல்
Source: New dataset compiled by researchers from Harvard University, US, and the University of Mannheim, Germany
நீண்டநாட்கள் வாரிசுகளாக அரசியலில் பணிபுரிந்தவர்களில் 40% பேர், நாடாளுமன்றத்தில் தங்களது மரபுரிமையாக தொடர்ந்து இடம் பெற்று வந்தனர் - முன்பு அவர்களது தந்தை, தாய் அல்லது மனைவி போட்டியிட்டு வென்ற அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உடைக்கப்படாத இந்த வாரிசு சங்கிலி பிணைப்பில் அடுத்த தலைமுறையினர் அடுத்தடுத்து அதிகாரத்தில் இருப்பது என்பது சராசரி 10 முறை அல்லது தோராயமாக 40-50 ஆண்டுகள் ஆகும்.
நீண்ட காலமாக ஒரு தொகுதியில் அரசியல் வாரிசே போட்டியிடுவது என்பது, எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை தீர்மானிப்பது கடினமாக உள்ளது. குறைந்தபட்சம் ஆரம்ப கட்டங்களில், ஒரு வாரிசை ஏற்படுத்த ஒரு அரசியல்வாதிக்கு "வலுவான நிறுவனரின் முயற்சி" தேவை என்று 2018 ஆய்வு தெரிவிக்கிறது. அடுத்த தலைமுறையின் போது, நிறுவனரின் ஊக்குவிப்பு அகலும் போது, அங்குள்ள அரசியல் வாரிசுகளின் வளர்ச்சிக்கு மோசமாக இருப்பதை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஒரு தேர்தல் கால துயரில் ஒரு வம்சாவளியை பிரதிநிதித்துவப்படுத்தும் கிராமங்களில், அதன் செல்வச்செழிப்பு தரம் 12% புள்ளி குறைவாக இருந்தது (சமுதாய உறுப்பினர்கள் தொடர்புடைய பொருளாதார நிலைக்கு எதிராக அளவிடப்படும் செல்வமாந்து உள்ளூரில் தீர்மானிக்கப்பட்ட அளவு).
தனது கட்சியில் வாரிசு அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு உறுப்பினர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் அவரது அரசியல் வாரிசு போட்டியிட தடை விதித்துள்ளது.
இத்தகைய பல தேவையற்ற அணுகுமுறை சரியானதல்ல என்ற வர்மா, ஆட்சிமுறை சட்டங்களுக்கு பதிலாக இந்தியாவின் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றார். "விஷயங்களை தடை செய்வது என்பது ஜனநாயகத்தில் ஒரு கெட்ட வார்த்தை; இது அவர்கள் செய்த குற்றங்களுக்கு யாரோ தண்டிக்கப்படுவதாக அர்த்தம், "என்று அவர் கூறினார். "ஆனால் உங்களது அரசியலை இன்னும் வெளிப்படையாகச் செய்தால், மற்றவர்கள் தகுதி அடிப்படையில் பங்கேற்க, போட்டியிட அது அனுமதிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
தேர்தலுக்கான நிதி பிரச்சார சட்டங்களின் அதிக சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்த வர்மா, செல்வந்தர்கள், அரசியல் வாரிசு வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக பரிந்துரைகளை இன்னும் பொறுப்புணர்வுடன் செய்ய வேண்டும் என்றார். "இது கட்சிகள் முழுவதும் நடக்கும். இப்பகுதிகளில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதால் மட்டுமே ஒரு திறந்த அரசியல் சூழலை நாம் உருவாக்க முடியும்" என்றார் அவர்.
(சங்கேரா, இந்தியாஸ்பெண்ட் எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.