'டிஜிட்டல் கற்றல் இடைவெளியைக் குறைக்க, குழந்தைகளின் மனநலத்திற்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும்'
இந்தியாவின் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, 18 மாதங்களுக்கு மேல் பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளுக்கு, அடிப்படைகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்.;
மும்பை: கோவிட் -19 தொற்றுநோய், 18 மாதங்களுக்கும் மேலாகப் பரவி, இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான மாணவர்களை, கல்விப் பணியில் இருந்து வெளியேற்றிவிட்டது. புதிதாக மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதோடு, விளையாட்டுப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன, மாணவர்கள் வெளியேறினர், பள்ளிகள் முற்றிலும் இயங்காமல் முடங்கிவிட்டன. பல பெற்றோர்களால், இனி பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாது. இந்தியாவின் கல்வி அமைப்புகளில் நிலவும் டிஜிட்டல் பிளவு, எவ்வாறு ஒரு தவறான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை, பல ஆய்வுகள் காட்டுகின்றன. அமர்த்தியா சென்னின் பிரதிச்சி (இந்தியா) அறக்கட்டளையின் 21 அரசுப் பள்ளிகளின் சமீபத்திய ஆய்வில், டிஜிட்டல் பிளவு காரணமாக கொல்கத்தாவில் 40% தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்குக் கூட வரமுடியவில்லை என்று கூறியுள்ளது. வேறு பல ஆய்வுகள் மற்ற மாநிலங்களில் இதே போன்ற காட்சியை காட்டுகின்றன.
இப்போது இந்தியா, இரண்டாவது கோவிட் -19 அலையில் இருந்து மீண்டு வெளிவந்து, குறைந்த தீவிரம் கொண்ட மூன்றாவது அலையை நோக்கி நகரும் சூழலில், பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறுகையில், பள்ளிகள் எதிரெதிர் வகையில், குறிப்பாக கோவிட் -19 நேர்மறை விகிதம் 5%க்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் திறக்கப்பட வேண்டும். பள்ளிகளைத் திறக்க வேண்டு என்பதற்கான அழைப்புகள், பல பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
குழந்தைகள் பள்ளியை விட்டு விலகும் பிரச்சனையை நாம் எப்படி எதிர்கொள்வது? குழந்தைகள், குறிப்பாக இளம் வயதினர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை எந்த அளவுக்கு ஒரு பிரச்சனையாக நாம் பார்க்கிறோம்? மற்றொரு சவால் என்னவென்றால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை, பெற்றோர்கள் பாதுகாப்பாக உணரவில்லை, மேலும் ஆசிரியர்கள் தாங்களே பள்ளிக்கு செல்வதில் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். எதிர்கால கோவிட் -19 பரவலுக்கு அல்லது பிற பொது சுகாதார நெருக்கடிகள் ஏற்பட்டால், திட்டம் பி அல்லது சி என்னவாக இருக்க வேண்டும்? இவை அனைத்தையும் பற்றி விவாதிக்க, டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்த பொருளாதார நிபுணரும், பிரதம் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ருக்மணி பானர்ஜி உடன் பேசினோம். இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ரோட்ஸ் கல்வியாளர், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பெற்றவர். அதேபோல், இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் (பிஎஃப்ஐ) நிர்வாக இயக்குனர் பூனம் முத்ரேஜா உடன் நாங்கள் பேசினோம்; பாலினம் சார்ந்த பிரச்சனைகள், வளர்ச்சி, இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் கொள்கை மற்றும் ஆலோசக அமைப்புகள் ஆகியவற்றில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. பிஎஃப்ஐ 2014 இல் தொடங்கப்பட்ட முத்ரேஜா என்ற, பிரபலமான டிரான்ஸ்மீடியா முன்முயற்சியான 'மெயின் குச் பி கர் சக்தி ஹு' ('நான், ஒரு பெண், எதையும் சாதிக்க முடியும்') உருவாக்கியவர்.
டாக்டர் பானர்ஜி, பள்ளி திறப்புகளுக்கான விஷயத்தில் இந்தியர்களாகிய நாம் இன்று எங்கே நிற்கிறோம்? கோவிட் -19 தொற்றுநோயால் பள்ளிகளை மூடுவது ஒரு பெரிய பிரச்சனையை வெளிப்படுத்துகிறது, அதில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியத்தை நாம் உணரவில்லை, எனில் தேர்வுகள்தான் முக்கியமா?
ஆர்பி: நாம் ஒரு வருடம் முழுவதும் பல்வேறு விஷயங்களை முயற்சித்துள்ளோம். ஒரு நாடாக, குடும்பங்களாக மற்றும் தனிநபர்களாக, திடீரென்று [தொற்றுநோய்] அகன்று, பள்ளிகள் திறக்கும் ஒரு பொன்னான தருணத்திற்காக நாம் காத்திருந்தோம். நான் நினைக்கிறேன், இப்போது ஒவ்வொரு மட்டத்திலும், அது நடக்கப் போவதில்லை என்பதை நாம் உணர்கிறோம் என்று. இந்த முழு செயல்முறையிலும், பலகட்ட நிலைகள் இருக்கும். [கோவிட் -19 வழக்குகளில்] ஆன் மற்றும் ஆஃப் இருக்கலாம், எனவே நாம் பார்த்த நிகழ்வுகளுக்கு ஒரு நெகிழ்வான பதில் தேவை. ஒரு டிஜிட்டல் பிளவு உள்ளது, ஆனால் நமக்கு முன்பும் நிறைய பிளவுகள் இருந்தன. இந்த டிஜிட்டல் பிளவானது, ஏற்கனவே இருந்த பிளவுகளுடன் சேர்ந்து, அவற்றில் சிலவற்றை மோசமாக்கி இருக்கலாம். ஆனால், கோவிட் -19 க்கு முன்பே, பல ஆண்டுகளாக நாம் மிக அதிகமான சேர்க்கை விகிதங்களையும், மிகக் குறைந்த கற்றல் நிலைகளையும் கொண்டிருந்தோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. எனவே நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, நம்மிடம் சில மோசமான பிரச்சனைகள் இருந்ததையும் மறந்துவிடக் கூடாது. பள்ளிகளைத் திறக்க அதிக நிர்ப்பந்தம் இருக்க வேண்டும் என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன், ஏனென்றால் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இப்போது திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை முன்னாலும், மத்தியிலும் வைப்பது மிகவும் முக்கியம். மேலும், இதைப் பற்றி நமக்கு மிகவும் தீவிரமான விவாதம் தேவை என்று சொல்வதற்கு அதிக பொது நிர்ப்பந்தம் இல்லை என்பது, எனக்கு கவலையாக இருக்கிறது, அத்துடன் விவாதம் தேவை.
பள்ளிகள், ஆண்டு காலண்டரில் செயல்பட்டு வந்தன, ஆனால் இப்போது, மற்ற பல துறைகளைப் போல காலாண்டுகளாகப் பிரிப்போம். அக்டோபர் முதல் தசரா வரை, நம் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கல்வி அனுபவம் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும். தொலைதூர வகையான கற்றலை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும் போது திட்டம் A முழுமையான ஊரடங்கு ஆகும்; திட்டம் B என்பது தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் அறிவித்து வரையறுக்கப்பட்ட நடமாட்டத்திற்கு அனுமதி இருக்கும் போது, பள்ளிகள் திறந்திருக்கும் மற்றும் ஆசிரியர்கள் வருகிறார்கள். ஆனால் குழந்தைகள் அல்ல; மற்றும் திட்டம் சி, எல்லாம் திறந்திருக்கும். நம் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே மிக முக்கியமான குடையாக இருக்க வேண்டும். [தொற்றுநோய்] சூழ்நிலைக்கேற்ப நாம் திட்டம் A இல் இருந்து B க்கும் பின்னர் சவுகர்யமாக இருப்பதை உணர்ந்தால், C க்கும் மாறலாம் என்பதை உணரத் தொடங்க வேண்டும், இது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மாறலாம். நான் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் ஒரு கட்டுரையை எழுதி உள்ளேன். பள்ளி திறப்பு விவகாரத்தில், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பும், கலந்துரையாடலும் தேவை. கொள்கை உத்தரவுகள் மற்றும் கட்டமைப்புகள் இன்னும் தொலைவில் இருந்து வரலாம், நீங்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்ளும்போது மட்டுமே, ஒருவருக்கொருவர் பேச முடியும், நீங்கள் [பள்ளிகளை மீண்டும் திறப்பதில்], குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு முன்னோக்கி செல்ல முடிவு செய்யலாம்.
ஆசிரியர்கள் பள்ளியில் இருப்பார்கள், ஆனால் குழந்தைகள் இல்லாத சில காலங்களில் நாம் உண்மையில் இந்த திட்டம் B நிலைமை இருந்தால், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உரையாடலைத் தொடங்க ஒரு சிறந்த தருணம் என்று ஒரு இறுதி புள்ளி கூறுகிறது. பள்ளிக்கு வர பெற்றோரை அழைக்கவும், அவர்கள் வசதியாக உணர்ந்தால், குழந்தையை அழைத்துச் செல்லவும். ஏனென்றால், குழந்தைகளைச் சந்திக்க ஆசிரியர்களும், ஆசிரியர்களைச் சந்திக்க குழந்தைகள் இருப்பது எனக்குத் தெரியும். மீண்டும் இணைத்தல், மறுசீரமைத்தல் போன்ற செயல்முறைகளைத் தொடங்க வேண்டும், ஏனென்றால் கற்றலை விட பள்ளிக்கு நிறைய இருக்கிறது. நாம் கட்டியெழுப்ப வேண்டிய இந்த சமூக உறவுகள், நம்பிக்கை, வேடிக்கைகள் அனைத்தும் உள்ளன.
பூனம் முத்ரேஜா, பள்ளிகளை மீண்டும் திறக்கும் பிரச்சினையில் உங்கள் நிலைப்பாடு என்ன என்ற விரிவான கருத்தை எங்களுடன் பகிருங்கள்.
பி.எம்: ருக்மணி சொன்ன எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒரு திட்டத்தை, அதாவது D ஐ சேர்க்க விரும்புகிறேன், அதுபற்றி நான் பின்னர் வருவேன். ஒட்டுமொத்தமாக மூடப்படுவது ஒரு பெரிய தவறு என்று கருதுகிறேன், ஆனால் குறிப்பாக பள்ளிகளுக்கு. நான் இதை ஆரம்பத்திலேயே சொன்னேன், அதைப் பற்றி எழுதினேன். கோவிட் -19 இன் போது, பழங்குடிப் பகுதிகளில் கூட நாம் எல்லாப் பள்ளிகளையும் மூடியது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. முதல் அலையில், கோவிட் -19 எங்கே இருந்தது? இது பெரிய நகரங்களில் குறுகியதாக பரவியது. நாம் ஏன் எல்லா இடங்களிலும் பள்ளிகளை மூடினோம்? ஏன் இந்த உத்தி? கல்வி அமைச்சர் சிறிதும் இதில் ஈடுபடவில்லை, அது உண்மையில் பிரதமரும் உள்துறை அமைச்சகமும் முடிவுகளை எடுத்தனர். சம்பந்தப்பட்ட கல்வி அமைச்சகத்துடன், விவாதம் மற்றும் உரையாடி முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், பள்ளிகளை மூடலாமா அல்லது திறக்கலாமா என்ற பொறுப்பை, நாம் மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கி இருப்போம். ஒன்றரை வருடங்களுக்கு நாம் எப்படி பள்ளிகளை மூடிவிட முடியும்? தொற்றுநோய் தொடர்ந்த டெல்லி அல்லது மும்பை மற்றும் வேறு சில நகரங்களில் என்னால் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகள் செய்வதற்கு வேறு எதுவும் இல்லாத இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் நாம் ஏன் குழந்தைகளுக்கு இப்படி சூழலை ஏற்படுத்தினோம்? அங்குதான் டிஜிட்டல் பிளவு அதிகபட்சம், பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட உள்ளது.
தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து பள்ளிகளையும் மூடியது ஒரு பெருந்தவறு. குழந்தைகள் எதை இழந்தனர்? இது கல்வி மட்டுமல்ல. உதாரணமாக, பெண்கள் சானிட்டரி பேட்களைப் பெறுவதைத் தவறவிட்டனர். இது ஒரு பேரழிவு. நாங்கள் பள்ளிகளை மூடினாலும், இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம், மதிய உணவு மற்றும் இளம் பெண்கள் பெறும் மற்ற அனைத்து பொருட்களையும் ஏன் தொடர்ந்து விநியோகிக்க முடியவில்லை? வீட்டில் இருப்பதன் மோசமான விளைவு பெண்களின் மீது இருந்தது என்பதையும் நாம் அறிவோம். வீட்டு வேலைகள் அதிகரித்தன மற்றும் பள்ளியில் படிக்க வேண்டிய பெண்கள், இரு மடங்கு வீட்டு வேலைகளை செய்தனர். ஒவ்வொரு பேரிடரின் போதும், இந்த பேரிடரின் போதும் நிறைய பெண்கள் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள். பொருளாதாரத் தாக்கங்களால், பலர் பள்ளிக்கு திரும்பப் போவதில்லை.
பின்னர், குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஒரு பெரிய பிரச்சினை. இது கல்வித் தகுதி மட்டுமல்ல. நான் ஒரு கட்டுரையைப் படித்தேன், அமெரிக்காவில், [தொற்றுநோய்களின் போது] உருவாக்கப்பட்ட கவலை மற்றும் மனநலப் பிரச்சினைகளில் இருந்து இளம் குழந்தைகள் மீள்வதற்கு 10 ஆண்டுகள் ஆகும். இவை அனைத்தும் மேலும் தீவிரமடைந்துள்ளன. ருக்மணி சொன்னது போல், இந்தப் பிரச்சினைகளும் ஒரு பிரச்சனையே அல்ல என்பது இல்லை. எனவே பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாமல், பள்ளிகளை மூடுவதன் மூலம் ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம். ஆசிரியர்களுக்கான கற்றல் வாய்ப்பாக நாங்கள் இதைப் பயன்படுத்தவில்லை, குழந்தைகளுடன் அதிக தொடர்பு கொள்ள அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவோ அல்லது அவர்களுக்கு மனநலப் பயிற்சியை வழங்கவோ, அதனால் அவர்கள் கவலையைத் தணிப்பது எப்படி என்பதை பெற்றோர்களுடன் சமாளிக்க முடியும். படிப்புக்குப் பிறகு கல்வியின் கவலை அளவுகள் மிகவும் அதிகமாக இருப்பதாக நமக்கு சொல்கிறது. நாங்கள் பீகாரில் இளம்பெண்கள் மத்தியில் ஒரு ஆய்வு செய்தோம், 87% பேர் தங்களுக்கு மனநல ஆலோசனை தேவை என்று சொன்னார்கள், அவர்கள் யாரிடமாவது பேச வேண்டும்.
எனவே, திட்ட A, B மற்றும் C, அல்லது எனது திட்டம் D ஆகியவற்றுடன் ருக்மணி போன்ற ஒருவரின் பேச்சைக் கேட்காமல், பள்ளிகளை முழுவதுமாக மூடப்பட்டிருக்கின்றன. இதையே ஒரு பிரச்சாரமாக மாற்ற முடியும் என்று நம்புகிறேன். உங்கள் A, B மற்றும் C திட்டத்துடன் நான் வேலை செய்வேன், என் திட்டத்தில் நீங்கள் என்னுடன் வேலை செய்கிறீர்கள்.
டாக்டர் பானர்ஜி, நாம் பிரச்சனையை அளவிட முடிந்தால் அதன் அளவை நன்கு புரிந்து கொள்ள முடியும். ஆனால் நாடு முழுவதும் இந்த சிதறிய படிப்புகளைத் தவிர, பள்ளி மூடலின் தாக்கம் குழந்தைகளின் மனதில், குழந்தைகளின் கல்வியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது நமக்கு எப்படித் தெரியும்? குழந்தைகள் எடுக்க வேண்டிய பின்னோக்கி படிகளின் அடிப்படையில், தாக்கம் எப்படி இருக்கும்?
ஆர்பி: முதலாவது அம்சம் என்னவென்றால், நீங்கள் ஒப்பிடக்கூடிய ஒரு கட்டத்தில் சில வகையான அளவீடுகள் செய்யப்பட வேண்டும். இது உயர்ந்ததா அல்லது குறைந்ததா என்று நீங்கள் பார்க்கும் ஒருவித போக்கை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் பள்ளி செல்லும் வயதுடைய 250 மில்லியன் குழந்தைகளுக்கு, கடந்த ஒன்றரை வருடங்கள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பதை அறிய, ஆரோக்கியம் அல்லது கல்வியின் அடிப்படையில் எது சாதாரணமானது என்பதைப் புரிந்துகொள்ள, நம்மிடம் நீண்டகால தரவு இல்லை.
நம்மிடம் மிக அடிப்படையான கற்றல் முடிவுகள், அடிப்படையான கல்வியறிவு மற்றும் எண்ணியல் பற்றிய ASER தரவு உள்ளது. நாம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அதை அளவிடுகிறோம். இந்த வகையான கலந்துரையாடல்கள் தொடங்கியபோது, ASER தரவின் அடிப்படைக் குறிகாட்டிகளின் அடிப்படையில், குழந்தைகளுக்கான வழக்கமான வருடாந்திர ஆதாயம் என்ன என்பதை நான் வெளியேற்றினேன். உத்தரபிரதேசத்தின் ஒரு உதாரணத்தை, நான் உங்களுக்கு தர விரும்புகிறேன், ஏனெனில் இது கல்வியில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாகும். 2010 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், இரண்டாம் வகுப்பு அளவில் உள்ளதைப் போல, ஆரம்பப் பள்ளியில் நான் ஒரு பள்ளியை பார்த்தால், ஒரு குழந்தைக்கு மிகவும் எளிமையான கதையைப் படிக்கும் திறனில் வழக்கமாக ஆண்டுதோறும் 5 முதல் 10 முதல் 15 சதவிகிதம் வரை பலன் இருந்தது. இப்போது, கற்றல் நிலைகள் குறைவாக உள்ளன, ஆனால் காலப்போக்கில் வளர்ச்சியும் மிகவும் குறைவானது.இது, இந்தியா மற்றும் பல வளரும் நாடுகளின் சிறப்பியல்பு. எனவே நீங்கள் பார்ப்பது அதிகபட்சமாக 15 சதவீத புள்ளிகளின் வருடாந்திர ஆதாயமாகும்.
பிறகு, நாங்கள் கோவிட் -19 க்கு முன்பே குழந்தைகளை பற்றிக் கொள்ள உதவுவதில் மிகப் பெரிய அளவில் நிறைய மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றியதால், மாநிலம் முழுவதும் 2018-19ல் உத்தரப்பிரதேச அரசுடன் எங்களால் என்ன செய்ய முடிந்தது என்பதை நான் வெளிப்படுத்தினேன். அனைத்து அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் மூன்று மாத தலையீட்டில், ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண் கணிதப்பாடம் கற்பித்தலில் கவனம் செலுத்துகிறது, வகுப்பு -நிலை பாடத்திட்டத்தை ஒதுக்கி, உத்தரபிரதேசம் போன்ற ஒரு அடிப்படை பள்ளி அமைப்பு கூட, 15 முதல் 20 சதவிகிதம் புள்ளி முன்னேற்றம் காண முடிந்தது, அவர்கள் கவனம் செலுத்தியதால், அவர்கள் சீரமைக்கப்பட்டனர், அவர்களால் அதைச் செய்ய முடிந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் மாநிலத்தால் என்ன செய்ய முடிந்தது என்பதைப் பாருங்கள், சில அடிப்படைத் தரங்களுக்கு உங்களால் தள்ளப்பட்ட நேரங்களைக் கண்டறியவும். பின்னர், பள்ளிகள் திறந்தவுடன், அடிப்படைக் கட்டமைப்புக்குத் திரும்புங்கள். உங்கள் வகுப்பு -நிலை போன்ற பாடத்திட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டு, அடித்தளங்களை மீண்டும் கட்டமைப்பதில் கவனம் செலுத்துங்கள். ஆறாம் வகுப்பு வரை தேர்வுகள் பற்றி கவலைப்பட தேவையில்லை. புனரமைப்பதில் கவனம் செலுத்துங்கள் மற்றும் அதைச் சிறப்பாகச் செய்யுங்கள், அடுத்த வருடம் இந்த வருடத்தில் நாங்கள் பல வருடங்களாகப் பார்த்த 5 முதல் 15 சதவிகித புள்ளிகளை விட அதிக லாபம் பற்றி பேச வாய்ப்பு உள்ளது. நமது புதிய கல்விக் கொள்கையின் ஆண்டுவிழா வந்துவிட்டது; அந்தக் கொள்கை என்ன சொல்கிறது என்று சிந்திப்போம்: 'உங்கள் அடித்தளத்தை உருவாக்குங்கள்'. இப்போதே கவலைப்பட வேண்டாம், குறிப்பாக முதன்மை வகுப்புகளில், தரம்-நிலை பாடத்திட்டம் பற்றி, ஏனெனில் பாடத்திட்டம் பல குழந்தைகளை விட்டுச்சென்றது. கோவிட் -19 பல குழந்தைகளை விட்டுச்செல்லும். எனவே குழந்தைகளுடன் ஆரம்பித்து அவர்களுடன் செல்லலாம்.
காலாண்டு அணுகுமுறையைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைத்தீர்கள், அதாவது இந்தியாவின் கல்வி முறையை நமக்குத் தெரிந்தபடி மறுபரிசீலனை ச்மற்றும் மறுவடிவமைப்பு செய்வது. அது எவ்வளவு சாத்தியமானது? அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்?
ஆர்பி: இது மிகவும் சாத்தியமானது. ஹார்வர்ட் செமஸ்டர் அல்லது காலாண்டுகளில் வேலை செய்கிறது. நமது பள்ளிகள், விதிமுறைகளின்படி வேலை செய்கின்றன. எனவே இது ஒரு வெளிநாட்டு கருத்து அல்ல. தெரிந்த அளவுகோல்களுடன் அதைக் கண்டறியவும். நவராத்திரி, தசரா, இவை அனைத்தும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும், ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை ஒரு தெளிவான காலம் எப்போதும் இருக்கும், அங்கு பொதுவாக பல மத செயல்பாடுகள் இருக்காது. இப்போதிருந்து, அந்த காலத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை திட்டமிட வேண்டும். பள்ளிகள் திறந்தாலும், இல்லாவிட்டாலும், ஏ, பி, சி அல்லது டி திட்டம் இருந்தாலும், நாம் எவ்வளவு செய்ய முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, இப்போது நாம் ஒரு பாதையில் இருக்கிறோம் என்று சொல்ல வேண்டும்-மெதுவாக அல்லது வேகமாக- அடுத்த காலாண்டில் அந்த பாதையை உருவாக்குங்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொடக்கப்பள்ளி அமைப்பு உண்மையில் சில அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும். விஷயங்களை சிக்கலாக்காதீர்கள், நீங்கள் பெறக்கூடிய வெற்றிகளைக் கொண்டு செல்லுங்கள்.
கோவிட் -19 தொற்றில் இருந்து நமக்கு மிகப்பெரிய, எதிர்பாராத நன்மை இருக்கிறது, பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றலை கவனிப்பதுதான். கோவிட் -19 க்கு முன்பு, உங்கள் குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவதே பெரிய பொறுப்பாக இருந்தது, பின்னர் அனைத்து கற்றலும் பள்ளியில் நடக்கும். இப்போது, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தாளில் பணி விவரம் வரும் கிராமப்புறக் குடும்பமாக இருந்தாலும், அல்லது உயர்வகை குடும்பமாக இருந்தாலும் சரி, நீங்கள் காகிதத்திலான பணி விவரங்கள் போய், வாட்ஸ்அப்பில் பணித்தாள்கள் வந்தாலும், பாட விஷயங்களில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டும்.
இன்று, பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள், தொடக்கக் கல்வியை உலகமயமாக்கியதற்கு நன்றி, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிக கல்வி கற்றவர்கள். இந்த தாய்மார்களுக்கான ஒரு வளம். புதிய கல்வி கொள்கை அவர்களை காட்சியில் கொண்டு வருவது பற்றி பேசுகிறது. பல மாநிலங்களில் முதல் காலாண்டில், அவை என் முக்கிய தூணாக இருக்கும். உதாரணமாக, பஞ்சாப், ஆசிரியர் பயிற்சி செய்வதை விட, ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் அல்லது ஒவ்வொரு முறையும் தாய்மார்களை பள்ளிக்கு அழைக்கவும், அவர்கள் வீட்டில் செய்யக்கூடிய செயல்பாடுகளை கொடுக்கவும் இந்த யோசனையுடன் செயல்படுகிறது. ஏனென்றால் ஜூலை 2021 இல் இரண்டாம் வகுப்பில் இருக்கும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாதவர்கள், பாலர் பள்ளிக்கு சென்றவர்கள் அல்ல. அவர்கள் தாயின் மடியில் இருந்து, அவர்கள் நேராக பள்ளிக்கு வருவார்கள். எனவே நாம் கல்வியை பல வழிகளில் மறுபரிசீலனை செய்ய வேண்டும், இது நமக்குள்ள வாய்ப்பு. பள்ளிகள் தொடங்கியவுடன், வழக்கம் போல் வணிகத்திற்கு திரும்புவதற்கு பெரும் அழுத்தம் ஏற்படும். எனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு நாம் செய்திருக்க வேண்டிய விஷயங்களைச் செய்ய இது ஒரு பெரிய வாய்ப்பாக நினைத்து நான் உண்மையிலேயே ஊக்குவிப்பேன்.
திருமதி முத்ரேஜா, நீங்கள் இந்த சில பிரச்சினைகளை பாலின கண்ணோட்டத்தில் அணுகியுள்ளீர்கள். பாலின சமநிலை மீண்டும் கொண்டு வரப்படுவதை உறுதி செய்ய கூடுதல் முயற்சி எடுக்க வேண்டுமா? கோவிட் -19 காரணமாக பாலினத்தில் ஏற்படும் பாதிப்பு பற்றி, பெண்களை பள்ளியில் வைத்திருப்பதன் அடிப்படையில்போதுமான கொள்கை புரிதல் உள்ளதா?
பி.எம்: போதுமான புரிதல் இருப்பதாக நான் நம்பவில்லை. நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டும். நாம் அதைப் பற்றி எழுத வேண்டும், ஆனால் இன்னும் அதிகமாக, நாம் கல்வி அமைச்சகத்திற்குச் சென்று இந்தப் பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டும். கல்வி, மனிதவள மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சுகாதார அமைச்சகங்களுக்கு இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். ஏன் நரகத்தை வளர்க்கிறோம் என்று நான் கேட்கிறேன். ருக்மணி சரியாக அழைக்கும் நமது கல்வி முறையை நாம் மறுபரிசீலனை செய்யப் போகிறோம் என்றால், இந்தக் குழுக்களிடையே நாம் அதிக ஒத்துழைப்பையும் ஒற்றுமையையும் கொண்டிருக்க வேண்டும்.
பாலினப் பார்வையில், பிஎஃப்ஐ தொடர்ந்து பாலினம் மற்றும் கோவிட் -19 இன் தாக்கம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறது. நாங்கள் தொடர்ந்து புதுப்பித்து பகிர்ந்து கொண்டோம் ஆனால் அதிக தாக்கத்தை நாம் காணவில்லை. ஜிகாவுக்கு பிறகு, 1% ஆராய்ச்சி மட்டுமே பாலினப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது, நான் உலகளவில் பேசுகிறேன், இந்தியாவை விட்டு விடுங்கள். இந்தியாவில், குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். சிலர் அதை உணர்ந்தனர். பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்திருப்பதை அறிந்திருந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அதைப் பற்றி மிகக் குறைவாகவே பணியாற்றியது. பள்ளி இடைநிறுத்தங்களைப் பொறுத்தவரை, செய்தித்தாள்கள் செய்தி வெளியிடுகின்றன, ஆனால் எதுவும் நடக்காது.
எனவே, நமக்கு உண்மையில் ஒரு திட்டம் தேவை. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நம்மில் சிலர் ஒன்றிணைந்து, அரசுக்குள் ஒருமித்த கருத்தை கொண்டு வர வேண்டும். தேசிய அளவில் ஒற்றுமையைக் கொண்டு வருவது மிகவும் கடினம், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் இதைச் செய்வது மிகவும் எளிதானது. மாவட்ட அளவில் அல்லது தேசிய அளவில் பணிபுரிபவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் அல்லது ஆட்சியர்களுடன் பணியாற்ற வேண்டும். நாம் மாதிரிகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக, ஆலோசனை ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். அதனால் தான் நான் ஒருங்கிணைப்பு என்றேன்.
பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் கூட வீட்டிலேயே பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தந்தைகள் அல்லது தாய்மாரின் கூட்டாளிகள், அவர்களை அடித்து துன்புறுத்துகிறார்கள். இவ்வளவு அதிர்ச்சிக்கு பின்னர், இந்த குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்லப் போகிறார்கள். நாம் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும். சுகாதார அமைப்பில் பல்வேறு நிலைகளில் ஆலோசகர்கள் உள்ளனர். நாங்கள் இளம்பருவத்திற்கு ஏற்ற சுகாதார கிளினிக்குகளையும் வைத்திருக்கிறோம். பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆன்லைனில் சில பயிற்சிகளை நாம் எப்படி விரைவாக செய்ய முடியும் என்பதைப் பார்க்க ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், தாய்மார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மற்றவர்கள் இந்த குழந்தைகள் தொடர்பு கொள்வார்கள்.
டிஜிட்டல் கல்வி இருக்க முடியும் என்பது இப்போது நமக்குத் தெரியும், நாம் தொலைக்காட்சியைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு போன் அல்லது கணினி தேவையில்லை என்று நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்; நாம் ஏன் தூர்தர்ஷன், மக்களவை மற்றும் ராஜ்யசபா தொலைக்காட்சியைப் பயன்படுத்த முடியாது? பெற்றோர்கள் இந்த புதிய உலகத்திற்கும் அவர்களின் குழந்தைகளின் யதார்த்தங்களுக்கும் மறுசீரமைப்பது உட்பட, ஆலோசனை உட்பட சில விஷயங்களைக் கையாள முயற்சிக்க வேண்டும்.
டாக்டர் பானர்ஜி, டிஜிட்டல் அல்லது ஆன்லைன் கற்றல் மற்றும் கற்பித்தலில் இருந்து விலகுவது கேட்ச் -22 என்பதை போன்றதாகும். ஏனென்றால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாது, அதே நேரத்தில், இந்தியாவில் பல குழந்தைகள் ஆன்லைனில் பங்கேற்க மொபைல் போன்களை கூட அணுக முடியாத நிலை. சிறிய நகரங்கள் அல்லது கிராமங்களில் இது மோசமானது, அங்கு குழந்தைகள் டிஜிட்டல் கற்றலை அணுக முடியவில்லை மற்றும் அடிப்படையில் பள்ளிக்குச் செல்லவில்லை. ஆன்லைன் கற்றல் இயற்கையால் விலக்கப்பட்டது என்பதை அறிந்து முன்னேற என்ன வழி?
ஆர்பி: கடந்த வருடத்தை திரும்பிப் பார்த்தால், பல விஷயங்கள் முயற்சி செய்யப்பட்டு இருந்தாலும், மிகவும் வெற்றிகரமான விஷயங்கள் கற்றலை வழங்குவதற்கான பயிற்சிகள் அல்ல, ஆனால் இருவழி தொடர்பை ஏற்படுத்த முடிந்தது. ஏனெனில் இறுதியில், அது உங்களை ஒரு பரீட்சை செய்ய வைப்பது பற்றியது அல்ல; உங்களுக்கு என்ன தெரியும், நான் உங்களுக்கு என்ன கொடுக்க முடியும் மற்றும் எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதை இது புரிந்து கொள்வது பற்றியது.
நான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். பிரதம் அமைப்பில் நாங்கள் நேரடியாக 10,000 கிராமங்களுடன் இணைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் செய்தது ஒரு இணைப்பை ஏற்படுத்த முயற்சிப்பது. நாங்கள் கற்பிக்க முயற்சிக்கவில்லை; பணிகளை நிறைவேற்ற, நாங்கள் கடுமையாக முயற்சித்தோம், உங்கள் குடும்பத்தில் நீங்கள் எப்படி செய்கிறீர்களோ அதுபோல. நாங்கள் எஸ்எம்எஸ் அதிகம் பயன்படுத்தினோம். கடந்த ஆண்டில் நாங்கள் கற்றுக்கொண்ட ஒரு பெரிய விஷயம் ஒரு எஸ்எம்எஸ் மற்றும் உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் தொலைபேசி அழைப்பு. நாங்கள் ஒரு நாளைக்கு 300,000 முதல் 400,000 செய்திகளை அனுப்புகிறோம். மேலும், கடந்த வாரத்தில் அவர்கள் பெற்ற உள்ளடக்கத்தைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை அறிய, இந்த எண்கள் ஒவ்வொன்றும் 10 நாட்களில் அல்லது இரண்டு வாரங்களுக்குள் ஒரு தொலைபேசி அழைப்பைப் பெறுகின்றன. நாங்கள் அமைத்த அந்த இருவழி தொடர்பு எங்கள் உள்ளடக்கம், எங்கள் விநியோகம் மற்றும் பெற்றோருக்கான அணுகுமுறையை மாற்றியுள்ளது. நான் நினைக்கிறேன், எல்லோரும் கற்றல் இழப்பு பற்றி பேசுகையில், எங்களுக்கு ஒரு கற்றல் ஆதாயம் கிடைத்தது, ஏனென்றால் பெற்றோர்களை அவர்களின் சொந்த நிலையில் எப்படி கையாள்வது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம். 'சரியான அளவில் கற்பித்தல்' என்று அழைக்கப்படும் ஒரு முறைக்கு நாங்கள் நன்கு அறியப்பட்டிருக்கிறோம். இந்த வருடத்தில் 'சரியான நிலையை அடைவது' பற்றி நம்மை தயார்படுத்திக்கொண்டோம் என்று நினைக்கிறேன். எனவே பள்ளிகள் மீண்டும் திறந்தாலும், பெற்றோருடனான இந்த தனிப்பட்ட தொடர்பை நான் விட்டுவிட விரும்பவில்லை. இன்று நாம் அதைச் செய்கிறோம், ஆனால் ஒவ்வொரு ஆசிரியரும் அதைச் செய்ய முடியும். பல மாநிலங்களில் ஆசிரியர்கள் செய்திகளை அனுப்புகிறார்கள், தொலைபேசி அழைப்பைச் செய்கிறார்கள் "உங்கள் மகள் எப்படி இருக்கிறாள், நான் நேற்று அனுப்பிய பாடங்களை அவள் சரியாகக் கண்டுபிடித்தாளா?" என்று போனில் கேட்கிறார்கள்.
இரண்டாவது விஷயம் என்னவென்றால், வீதியோர [மொஹல்லா] அல்லது பள்ளிக்கு வெளியே உள்ள ஒரு குழு பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பல அடுக்குகள் உள்ளன: வீடு, தெருக்கள், சமூகம்; பின்னர் நிறுவனம் உள்ளது: பள்ளி அல்லது அங்கன்வாடி (அரசு நடத்தும் குழந்தை பராமரிப்பு மையம்) பகிரப்பட்ட சாதனங்கள், பகிரப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் வீட்டு அளவில் தனிப்பட்ட அனுபவங்கள் இல்லாத சில நல்ல அனுபவங்களை நாங்கள் பெற்றிருக்கிறோம். நீங்கள் 250 மில்லியன் தனிப்பட்ட மின்னணு சாதனங்களை கொடுக்க முடியாது, ஆனால் ஒரு பள்ளி நூலகத்தை பல டேபிளட் கணினி அல்லது மின்னணு சாதனங்களுடன் கற்பனை செய்து பாருங்கள், அவை குழுக்களால் பயன்படுத்தப்படலாம். அதில் இரண்டு பகுதிகள் உள்ளன. நமது முழு கல்வி முறையும் தனிப்பட்ட சிறப்பை அடிப்படையாகக் கொண்டது மற்றும் மதிப்பெண்களால் இயக்கப்படுகிறது, அதேசமயம் உலகில் உங்களுக்குத் தேவைப்படும் திறமை என்னவென்றால், குறிப்பாக உங்களைப் போன்ற பல வழிகளில் இல்லாத நிலையில், நீங்கள் குழுவுடன் எவ்வாறு பழகுகிறீர்கள் என்பதுதான். எனவே, இந்த கூட்டு சாதனங்களுடன் நமக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். நாம் பகிரப்பட்ட சாதனங்களை அமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காலையில் நீங்கள் கல்விக்காகவும், பிற்பகல் டெலி மெடிசினுக்காகவும், மாலையில் வேறு ஏதாவது ஒன்றிற்காகவும் பயன்படுத்தலாம், ஆனால் அது கிராமத்திற்கு ஆதாரமாக உள்ளது மற்றும் அது பல நோக்கங்களுக்கு உதவுகிறது.
நாம் பார்க்கும் மற்றும் கற்றுக் கொண்டிருக்கும் இந்த விஷயங்கள் எல்லாம் [இயல்பான] பிறகு கூட தொடர வேண்டும். [பீகார் முதல்வர்] நிதிஷ் குமார் உங்கள் நிகழ்ச்சியைக் கேட்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால், அவர் பெண்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் பற்றிய அறிவித்த விதம், அவர்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதற்கு ஒரு பெரிய பிரச்சாரத்தை உருவாக்கியது. இதேபோல், அங்கன்வாடி குழந்தைகளின் இளம் தாய்மார்களுடன் நாம் டேப்ளட் பயன்படுத்தினோம். அவர்களின் கணவரிடம் கூட டேப்ளட் இல்லை, ஆனால் அவர்களிடம் உள்ளது. தொழில்நுட்பம் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன, குறிப்பாக பகிரப்பட்ட மின்னணு சாதனங்கள், சமூகத்திற்குள் இயற்கையாக வளர்ந்த குழுக்களுடன் செல்கின்றன. முன்னோக்கி செல்லும் வழியில் தனிப்பட்ட நபர்களுக்கான தனிப்பட்ட விஷயங்களின் மேற்கத்திய உதாரணத்தை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.
கடந்த கால பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய, இந்த இழந்த காலத்தை பயன்படுத்தும் சூழலில், பள்ளிகளை மீண்டும் திறப்பதை ஒரு பரந்த கொள்கை கண்ணோட்டத்தில் பார்ப்பது, இது பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், குழந்தைகள் பெறும் வெளிப்பாட்டை மேம்படுத்தவும் மற்றும் அவர்களை சிறந்த எதிர்கால குடிமக்களாக மாற்றவும், என்ன நீங்கள் இருவரும் கருத்தியல் ரீதியாக கருதும் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமா?
பி.எம்: பெண்கள் பள்ளியை விட்டு நிற்கும் விஷயத்தில் என்ன செய்வது என்பது பற்றி, பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளூர் எம்எல்ஏக்கள் மீது அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் எத்தனை பெண்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல முடியும் என்பதையும், அதிகமான பெண்கள் பள்ளியை விட்டு வெளியேறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். 15 வது நிதி ஆணையத்திற்கு நன்றி, கல்வி, சுகாதாரம் மற்றும் பல பகுதிகளுக்கான நிதி, முதல் முறையாக பஞ்சாயத்துகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. மறுவடிவமைக்கப்பட்ட கல்வி முறையில் பஞ்சாயத்துகளின் பங்கின் அடிப்படையில், கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நமக்கு ஒருமுன் மாதிரி இருக்க வேண்டும்; அந்த பொறுப்புணர்வு வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் அவை மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். பி.எப்.ஐ. ஆரோக்கியத்திற்கான சமூக நடவடிக்கைக்கு செயலகத்தை நடத்துகிறது, நாங்கள் நாடு முழுவதும் சுமார் 250 கிராமங்களில் வேலை செய்கிறோம், நாங்கள் கிராம மட்ட குழுக்களின் கிட்டத்தட்ட 500 நடவடிக்கைகளை செய்துள்ளோம், நாங்கள் மிகவும் எளிமையான அமைப்புகளை உருவாக்கினோம். சுகாதாரத்திற்கான சமூக நடவடிக்கைக்கான செயலகத்துடன் சுகாதார அமைச்சகம் வைத்திருப்பதைப் போன்ற கல்விக்கான பொறுப்பையும் நாம் கொண்டிருக்க வேண்டும். மாதிரி இருக்கிறது. இறுதியில் பெற்றோர், கல்வி வல்லுநர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பஞ்சாயத்துகள் மற்றும் பிறர் கல்வி நிலைகளை மேம்படுத்துவதற்கும் புதுமைகளைக் கொண்டு வருவதற்கும் தீர்வு காண ஒரு ஜன் சம்வாத் (மக்கள் உரையாடல்) இருக்க முடியும். கல்விக்கு இது ஒரு சிறந்த மாதிரி என்று நான் நினைக்கிறேன். இறுதியாக, தயவுசெய்து திட்டம் D இருக்கட்டும்,அந்த திட்டத்தில் பள்ளிகளைத் திறக்க அல்லது மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.
ஆர்பி: முதலில், மாவட்ட அளவிலான, உள்ளூர் அளவில் முடிவெடுத்தல், எந்த அளவிற்கு பொருத்தமானது, மற்றும் நிதித் தரப்பில் உள்ள நெகிழ்வுத்தன்மை முக்கியமானதாகத் தோன்றுவதற்கு செலவிட அனுமதிக்கிறது. இரண்டாவதாக, பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குகிறது. அவர்கள் மட்டுமே குழந்தைகளுக்கு முக்கியம். அவர்கள் நெருக்கமாக இருப்பதால், அதிக நன்மை பயக்கும். மூன்றாவதாக, நீங்கள் நேரத்தை இழந்துவிட்டீர்கள் என்று நினைக்க அவசரப்பட வேண்டாம், [மற்றும் அது] தண்ணீர் பாய்ச்சப்பட வேண்டிய ஒரு பெரிய பாடத்திட்டம் உள்ளது. இந்த ஆண்டு திரும்புவதற்கும் மீண்டும் கட்டியமைப்பதற்கும் கவனம் செலுத்துங்கள். பள்ளிகள் திறந்தாலும், இல்லாவிட்டாலும், அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய சில நிர்வகிக்கக்கூடிய கற்றல் இலக்குகளை நிர்ணயித்து, நம் குழந்தைகள் அவற்றை அடைய வீடு, பக்கத்து தெரு, சமூகம் மற்றும் பள்ளி அல்லது அங்கன்வாடி என இணைந்து பணியாற்றுவோம்.
ஆரம்பப் பள்ளி மட்டுமல்ல, இப்போது பள்ளியில் இருக்கும் 250 மில்லியன் குழந்தைகளையும் நீங்கள் குறிப்பிடுகிறீர்களா?
ஆர்பி: முற்றிலுமாக. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மிக நெருக்கமாக இருக்கும் குழந்தைகளுக்காக வெவ்வேறு அழுத்தங்கள் உள்ளன, அவற்றை பெரியவர்களான நாம் தான் உருவாக்கியுள்ளோம். நான் அவர்களுக்காக என்ன செய்வது என்று நாம் சிந்திக்க வேண்டும். ஆனால் மற்ற அனைவருக்கும், அவர்களை 10 வது மற்றும் 12 வது பாதையில் வைக்க வேண்டாம். நமக்கு நேரம் இருக்கிறது. நாம் இப்போது மெதுவாகச் சென்று தீவிரமாகச் சென்றால், நாம் பின்னர் மிக வேகமாக செல்ல முடியும். பாடத்திட்டம் ஒரு பிரச்சனை என்பதை நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன், ஏனெனில் இது குழந்தைகளை விட்டுச்செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது சொல்ல வேண்டிய நேரம், பாடத்திட்டத்தை ஒதுக்கி வைப்போம், பெரிய குழந்தைகளுக்கு ஒரு பெரிய பிடிப்பை தருவோம், இளம் வயது குழந்தைகளுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைப்போம். எங்களிடம் புதிய கல்விக் கொள்கையின் குடை உள்ளது, இதன் கீழ் நாம் இதைச் செய்யலாம் மற்றும் கொள்கை மற்றும் நடைமுறை உண்மையில் பொருந்துகிறது என்று சொல்லலாம், மேலும் இவை அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய ஒரு நேரமாக இதனை கருதுங்கள்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.