2023 ஆம் ஆண்டில் தினைகளின் மீது உலகளாவிய கவனம், இது பல இந்திய உணவு முறைகளுக்கு பாரம்பரியமானது
தினை - அதாவது ஜோவர், பஜ்ரா, சோளம் மற்றும் ராகி - 1983 இல் இந்தியர்களின் தானியத் தேவைகளில் 23% இருந்து கடந்த 2011 இல் 6% ஆக குறைந்தது.;
நொய்டா: 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) அறிவித்துள்ளது. #IYOM2023, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) அழைப்பது போல், தினையின் ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் பாதகமான சூழ்நிலையில் சாகுபடிக்கு ஏற்றது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும்.
தினையானது பகுதி வறண்ட நிலைகளுக்கு ஏற்ற கடினமான தானியங்கள், நீர் மேலாண்மை குறைவாக உள்ள பகுதிகளுக்கு சரியான பயிராக அமைகிறது. பெரும்பாலான வகைகளில் அரிசியைவிட அதிக புரதம் உள்ளது, மேலும் அவை இரும்பு உள்ளடக்கத்தின் அடிப்படையில் அரிசி மற்றும் கோதுமை இரண்டையும் விட உயர்ந்தவை.
இந்தப் பயிர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்டு வருவதில் இந்தியா முக்கியப் பங்காற்றியது. இந்த முயற்சியின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நவம்பர் 24 அன்று, #IYOM2023- என்ற முன் வெளியீட்டு நிகழ்வில் கூறினார். உலகளாவிய உற்பத்தியை அதிகரிக்கவும், திறமையான செயலாக்கம் மற்றும் பயிர் சுழற்சியின் சிறந்த பயன்பாடு மற்றும் உணவுக்கூடையின் முக்கிய அங்கமாக தினைகளை ஊக்குவிப்பதற்கும் கவனம் செலுத்தும் வாய்ப்பை வழங்கும்.
ஜோவர் போன்ற சில வகைகள் இந்தியாவின் கிராமப்புற உணவுகளில் பிரதானமாக இருந்தாலும், உலகின் பல பகுதிகளில் தானியங்கள் விலங்குகளின் தீவனமாக அல்லது பறவை விதைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் இந்தியாவில் தினைகளை உட்கொள்ளும் நீண்ட பாரம்பரியம் இருந்தபோதிலும், 1972-73 மற்றும் 2004-05 க்கு இடையில் தினை அல்லது பஜ்ராவின் நுகர்வு நகர்ப்புறங்களில் 67% மற்றும் கிராமப்புறங்களில் 59% குறைந்துள்ளது. ஜோவர், பஜ்ரா, சோளம் மற்றும் ராகி ஆகியவை 1983 இல் இந்தியர்களின் தானியத் தேவைகளில் 23% பங்களிப்பில் இருந்து 2011 இல் 6% ஆக இருந்தது என்று மற்றொரு ஆய்வு மதிப்பிடுகிறது.
புரதம், நுண்ணூட்டச்சத்துக்கள், வறட்சியைத் தாங்கும் அசத்தல் உணவுகள்: நிபுணர்கள்
பஜ்ரா, ஜோவர் மற்றும் ராகி – இந்தியாவில் பொதுவாக உட்கொள்ளப்படும் சில தினைகள்– பழுப்பு அரிசியில் உள்ள இரும்பைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு மற்றும் ஒரு சேவைக்கு மூன்று மடங்கு ஃபோலிக் அமிலம் உள்ளது. பஜ்ரா, அல்லது முத்து தினை, புரதத்தின் மலிவான மூலமாகும், அவை ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றவை.
தினைகள் பசையம் இல்லாதவை, அவை செலியாக் நோய் (ஒரு நபர் கோதுமையை ஜீரணிக்க முடியாத நோய்) உள்ளவர்களுக்கு ஏற்றது. அவை சமைக்க எளிதானவை மற்றும் தானிய அடிப்படையிலான உணவுகளில் இணைக்கப்படுகின்றன. "இது அரிசிக்கு ஒரு சிறந்த மாற்றாகும், ஏனெனில் இது மிகவும் ஒத்த அமைப்பை வழங்குகிறது மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது" என்று, டோஸ்ட் மற்றும் டோனிக் என்ற பெங்களூரு உணவகத்தின் தலைமை சமையல்காரர் சிராக் மக்வானா கூறினார், இந்த உணவகம் தனது மெனுவில் தினை சார்ந்த பல உணவுகளை வழங்குகிறது. அவை நார்ச்சத்து அதிகம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை, இயற்கையாகவே பசையம் இல்லாதவை, ஒவ்வாமை ஏற்படாதவை மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடியவை என்று அவர் மேலும் கூறினார்.
வெஜிடபிள் கிப்பே (சிரியா மற்றும் லெபனானைச் சேர்ந்த பாலாடை) மற்றும் பஜ்ரா ரிக்கோட்டா க்னுடி- bajra ricotta gnudi (ஒரு வகை பாஸ்தா)
வெளிப்படையான ஊட்டச்சத்து நன்மைகள் தவிர, தினை சாகுபடிக்கு அரிசியை விட 33% குறைவான தண்ணீர் தேவைப்படுகிறது. அவை நவீன நீர்ப்பாசனத்திற்கு முந்தியவை மற்றும் அவை வளர்க்கப்படும் பகுதிகளின் தட்பவெப்பநிலையுடன் இணைந்து பரிணாம வளர்ச்சியடைந்ததால், அவை உள்ளூர் நிலைமைகளுக்கு மிகவும் மீள்தன்மை கொண்டவை மற்றும் குறைந்த நீர் மற்றும் உரம் தேவைப்படுகின்றன என்று, வாட்டர்ஷெட் சப்போர்ட் அண்ட் ஆக்டிவிட்டிஸ் நெட்வொர்க்கின் இணை இயக்குநரும், அரசாங்கத்தின் ஒடிசா மில்லட்ஸ் மிஷனின் (ஓஎம்எம்) திட்ட அதிகாரியுமான தினேஷ் பாலம் விளக்கினார். "தினைகள் விரைவாக முதிர்ச்சியடைகின்றன மற்றும் கோதுமை மற்றும் அரிசியை விட குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயாராகின்றன, மேலும் நோய்களை எதிர்க்கும்" என்றார்.
அவற்றின் வறட்சி-எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, தினைகளை வளர்ப்பது, குடியேறிய விவசாயத்தின் செயல்முறைக்கு உதவியிருக்கலாம்: 8,700 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் சேமிப்புக் குழிகளில் உள்ள பொதுவான தினை (பனிகம் மிலியாசியம் அல்லது புரோசோ தினை) இருப்பதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உற்பத்தி அதிகரிக்கிறது, நுகர்வு முறைகளில் அதிகரிப்பு இல்லை
தினை நுகர்வு குறைக்கும் போக்கை மாற்றியமைக்கும் முயற்சியில், தினை அல்லது ஊட்டச்சத்து தானியங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வை மேம்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டில், இந்தியா தேசிய தினை ஆண்டாக அறிவித்தது. 2015-16ல் 14.52 மில்லியன் டன்னாக இருந்த தினை உற்பத்தி 2020-21ல் 17.96 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
"நாங்கள் விவசாயிகளிடமிருந்து தினைகளை வாங்குகிறோம், அவர்களில் பலர் பெண்கள், குறைந்தபட்ச ஆதரவு விலையில், மக்களுக்கு அவர்களின் உணவுக்கான பொது விநியோக அமைப்பு [PDS] உரிமைகளாக வழங்குகிறோம். இதன் மூலம், பெண்களுக்கு அதிகாரமளிப்பதோடு தினை சாகுபடி மற்றும் நுகர்வு ஆகியவற்றை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஒடிசா அரசின் வேளாண்மை மற்றும் உணவு உற்பத்தி இயக்குநர் பிரதீப் சந்திர சவுத்ரி தெரிவித்தார். இரண்டு மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தற்போது மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் 19 மாவட்டங்களை உள்ளடக்கியதாக அவர் மேலும் கூறினார்.
"நகர்ப்புற மற்றும் வீட்டு உபயோகத்தை வரும் ஆண்டுகளில் 25% அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம்" என்று பாலம் கூறினார். "நாம் இதுவரை 15% நுகர்வு அதிகரித்துள்ளோம்" என்றார். அடுத்த கட்டமாக தினை சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய உணவகங்கள், உணவு விற்பனையாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களை ஈடுபடுத்த வேண்டும் என்றார்.
இந்தியாவில் தினை நுகர்வு குறைந்திருந்தாலும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் கிராமப்புற உணவுகளில் இது முக்கிய உணவாக இருப்பதாக 2011 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது. நுகர்வு மதிப்பீடுகள் கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நுகர்வோர் செலவின கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது, எனவே தினை நுகர்வு குறித்த சமீபத்திய தரவு கிடைக்கவில்லை. இந்தியாவில் தினை நுகர்வு பற்றி தெரிவிக்குமாறு, நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திற்கும் இந்தியா ஸ்பெண்ட் கடிதம் எழுதியுள்ளது. அவர்கள் பதிலளிக்கும்போது இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.
கர்நாடகா ஒரு பிரத்யேக தினை ஊக்குவிப்பு முயற்சியைக் கொண்டிருக்கும்போது, மகாராஷ்டிரா, ஒடிசாவால் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது, இதில் வீட்டு உபயோகத்தை அதிகரிப்பது, நிலப்பரப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், பொதுவினியோக முறை, மதிய உணவுகள் போன்றவற்றில் தினைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். .
ஊட்டச்சத்து தானியங்கள் மீதான தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், கர்நாடகா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் எவ்வாறு வழங்கப்படுகிறதோ, அதே போன்று தினைகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும். 2014 ஆம் ஆண்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் தினைகளை கொள்முதல் செய்யவும் விநியோகிக்கவும் மாநிலங்கள் அனுமதிக்கப்பட்டன, மேலும் கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் டிசம்பர் 2021 இல் அறிவிக்கப்பட்டன, இதன் கீழ் பொதுவினியோகத் திட்ட பயனாளிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய்க்கு தினைகள் வழங்கப்பட வேண்டும். ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தினை விநியோகத்தைத் தொடங்கியுள்ளன.
ஊட்டச்சத்து தானியங்கள் மீதான தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து விசாரிக்க உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு, இந்தியாஸ்பெண்ட் கடிதம் எழுதியுள்ளது. பதில் கிடைத்தவுடன் இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.
தினைக்கு முன்பு முன்னால் உள்ள பாதை
பெங்களூரு உணவகமான டோஸ்ட் மற்றும் டோனிக்-கின் தினைகள் பற்றிய பரிசோதனை நேர்மறையான பதிலைப் பெற்றுள்ளது என்று செஃப் மக்வானா தெரிவித்துள்ளார். "வழக்கமான உணவுகளை விட இந்த பொருட்கள் கொண்ட உணவுகளை மக்கள் அடிக்கடி தேர்வு செய்கிறார்கள், இது மிகவும் சாதகமான விஷயம்" என்றார்.
டோஸ்ட் மற்றும் டோனிக், ஒரு உயர்தர உணவகம் என்றாலும் விலையின் மறுமுனையில், ஒடிசா தினை டிபன் மையங்களை அறிமுகப்படுத்தியது, அதன் எண்ணிக்கை 2020 இல் 15 இல் இருந்து 2021 இல் 81 ஆக உயர்ந்தது. ஓ.எம்.எம். ஆனது 25 உணவகங்கள் கொண்ட குழுவுடன் இணைந்து தினை சார்ந்த உணவுகளை உருவாக்கவும், கிராமங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளை சந்தைப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் உள்ளிட்டவற்றை செய்வதாக பாலம் (Balam) அறிக்கை தெரிவிக்கிறது.
ஒவ்வொரு விலை வரம்பிலும் தினை பொருட்களை நுகர்வோருக்கு வழங்க நாங்கள் உத்தேசித்துள்ளோம், 3 ரூபாய்க்கு பிஸ்கட்டுகள் மற்றும் உணவகங்களில் உணவுக்கு 200 ரூபாய்க்கு வழங்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.
மேக் இன் ஒடிசா முயற்சியின் ஒரு பகுதியாக சந்தை சார்ந்த உற்பத்தி இருக்கும் என்று சவுத்ரி கூறினார். "ஆடவர் உலக்கோப்பை ஹாக்கி கோப்பை (இது ஜனவரி 13 ஆம் தேதி ஒடிசாவில் தொடங்குகிறது) தானியங்களை விளம்பரப்படுத்தவும் பயன்படுத்தப்படும், மேலும் கணிசமான ஒன்றுடன் ஒன்று இருப்பதால், தினை பணிக்கு நிலையான வளர்ச்சி இலக்குகளை வரைபடமாக்குவோம்" என்றார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) தீர்மானத்திற்கு நன்றி தெரித்த செஃப் மக்வாஅனா, 2023 ஆம் ஆண்டில் தினைகள் மீதான உலகளாவிய கவனம் உலகளவில் தினைகளின் பயன்பாடு மற்றும் நுகர்வுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்று நம்புகிறார். "இது இந்தியாவிலும் உலக அளவிலும் பல வகையான பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் சாப்பிட தயாராக இருக்கும் உணவுகளை இயக்கப் போகிறது," என்று அவர் கூறினார்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.