உற்பத்தி ஒரு சில மாவட்டங்களில் குவிந்துள்ளது

மத்திய சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் 1998ம் ஆண்டின் கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டம், அக்டோபர் 2007 இல் புதுப்பிக்கப்பட்டது, இது சில மாவட்டங்களை சிறப்பு உற்பத்தி மையங்களாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.;

Update: 2021-08-06 01:00 GMT

இந்தியாவின் மொத்த விவசாயம் சாராத வேலைவாய்ப்பில் 21% உற்பத்தித் துறையினுடையது. ஆனால் உற்பத்தி மையங்கள் மேற்கு மற்றும் தென்கிழக்கு கடற்கரை போன்ற ஒரு சில பகுதிகளில் குவிந்துள்ளன, வடக்கில் சில தொகுப்புகள் உள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) அமைச்சகத்தால், 1998 இல் தொடங்கப்பட்ட கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டம், அக்டோபர் 2007 இல் மேலும் புதுப்பிக்கப்பட்டது, இது சில மாவட்டங்களை சிறப்பு உற்பத்தி மையங்களாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொருளாதார கணக்கெடுப்பு தரவு, சிறப்புத் தொழில்கள் மற்றும் இந்தியா முழுவதும் அவர்கள் உருவாக்கும் வேலைவாய்ப்புகளை காண அனுமதிக்கிறது. உதாரணமாக, சூரத்தில் 42% விவசாயம் அல்லாத வேலைகள் ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள் தயாரிப்பில் உள்ளன. ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தியை பொருத்தவரை, திருப்பூரில் விவசாயம் அல்லாத வேலைகளில் 30% மற்றும் லூதியானாவில் 20% ஆகும். இதேபோல், ஃபிரோசாபாத்தில் 47% விவசாயம் அல்லாத வேலைகளான சிமெண்ட், மட்பாண்டங்கள் மற்றும் கண்ணாடி போன்ற உலோகம் அல்லாத கனிம பொருட்களின் உற்பத்தி நடைபெறுகிறது.

கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டத்தால், இந்த உந்துதல் வழங்கப்பட்ட போதும், இந்தியாவில் உற்பத்தி 2011 ஆம் ஆண்டில் இருந்து குறைந்து வரும் போக்கு காணப்படுகிறது. இந்த சிறப்பு உற்பத்தி மையங்களை உருவாக்குவது, பரந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார நன்மைகளுக்கு வழிவகுக்கும். உற்பத்தித் துறையில் உள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள், குறைந்த ஊதியம் மற்றும் வேலை பாதுகாப்பு இல்லாமல் போராடுகிறார்கள் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து, ஒப்பந்த வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன, இதன் மூலம் தொழிலாளர் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நன்மைகளில் இருந்து அதிகளவிலான பணியாளர்களைத் தவிர்த்தது. உற்பத்தி வேலைகளை புதுப்பிக்கும் எந்தவொரு முயற்சியும் இந்த போக்குகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

தரவு காட்சிப்படுத்தலுக்கு உதவிய IIHS நகர்ப்புற தகவல் ஆய்வகத்தை சேர்ந்த, டிவிஜ் சின்ஹா பங்களிப்பை, ஆசிரியர் நன்றி கூறுகிறார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News