விவசாயம் சாராத தொழிலாளர்கள் எப்படி நாடு முழுவதும் பரவியுள்ளனர்
பெரும்பாலான தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள், உற்பத்தி மற்றும் பிற வேளாண்மை அல்லாத வேலைகளில், அதிக நபர்களைப் பயன்படுத்துகின்றன, அதே நேரத்தில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயத்துறை வேலையில், அதிக மக்கள் ஈடுபடுகின்றனர்.
கடந்த சில தசாப்தங்களில், அதிக வேலை செய்யும் இந்தியர்கள் விவசாயத்தில் இருந்து விவசாயம் அல்லாத துறைகளுக்கு மாறிவிட்டனர். பெரும்பான்மையான இந்தியர்கள், 57%, இப்போது விவசாயம் அல்லாத வேலைகளில் வேலை செய்கிறார்கள். விவசாயம் அல்லாத பிற அனைத்து வேலைகளிலும், சேவைகள் --போக்குவரத்து (9%), கல்வி (7%), அறிவுசார் தொடர்புடைய சேவைகள் (6%), ஹோட்டல்கள் (3%), சுகாதாரம் (2%) மற்றும் பிற சேவைகள் (12%) -- சேர்த்து 39% வேலைகள். அடுத்து, உற்பத்தி மற்றும் கட்டுமானம் தலா 21% பங்களிப்பு செய்கிறது. விவசாயம் அல்லாத வேலைகளில் வர்த்தகம் மேலும் 19% உருவாக்குகிறது.
இந்தியாவில் விவசாயம் அல்லாத வேலைகளின் பங்கில், குறிப்பிடத்தக்க மாநில வாரியான வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலான தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் உற்பத்தி மற்றும் பிற விவசாயம் அல்லாத வேலைகளில் அதிக நபர்களைப் பயன்படுத்துகின்றன, அதே நேரத்தில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், விவசாயத்தில் அதிக மக்கள் உள்ளனர்.
முன்னோக்கிச் செல்லும் வழியாக, வேளாண்மை துறையில் இருந்து மற்ற துறைகளுக்கு தொழிலாளர்களின் மாற்றம் தொடரும். வேளாண்மை துறையை விட்டு மற்ற துறைகளுக்கு நகரும் இந்த பணியாளர்களின் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரவு காட்சிப்படுத்தலுக்கு உதவிய, IIHS நகர்ப்புற தகவல் ஆய்வகத்தை சேர்ந்த டிவிஜ் சின்ஹாவின் பங்களிப்புக்கு ஆசிரியர் நன்றி தெரிவித்துள்ளார்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.