#தரவுக்காட்சி: இந்தியாவின் காடுகள் வளர்ந்தன ஆனால் எப்படி என்பதைப் புரிந்துகொள்ள சிறந்த தரவு தேவை என்று அரசாங்கம் கூறுகிறது

நாட்டின் காடுகளின் பரப்பளவு ஒட்டுமொத்தமாக அதிகரித்தாலும், வடகிழக்கு மாநிலங்களில் அது குறைந்துள்ளது என இந்திய வன ஆய்வுத் துறையின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.;

Update: 2022-01-25 04:30 GMT

குருகிராம்: இந்தியாவின் காடுகளது பரப்பளவு, 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் 1,540 சதுர கிலோமீட்டர் (ச.கி.மீ) அதிகரித்துள்ளது என்று சமீபத்திய இந்திய காடுகளின் அறிக்கை (ISFR) தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு இயற்கையான காடுகளின் வளர்ச்சியால் ஏற்பட்டதா– அதாவது, பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்டதா– அல்லது தோட்டங்கள் மற்றும் ஒற்றை வளர்ப்பு –இயற்கை காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை மாற்ற முடியாது- காரணமா என்பது தெரியவில்லை, ஏனெனில் அறிக்கையில் இந்த விவரங்கள் இல்லை.

இந்திய வன ஆய்வு (FSI), ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும், இந்தியாவின் காடுகளது மதிப்பீட்டை மேற்கொள்கிறது. அந்த நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, அதன் உரிமை அல்லது மரங்களின் இனங்கள் எதுவாக இருந்தாலும், மரத்தின் மேல்தளம் 10% அதிகமாகவும், பரப்பளவு 1 ஹெக்டேரைத் தாண்டியதாகவும் இருக்கும் நிலத்தின் அனைத்து திட்டுகளையும் உள்ளடக்கியதாக, இது காடுகளை வரையறுக்கிறது.

ஜூலை 2020 இல் நாங்கள் தெரிவித்தது போல, ஒற்றைப்பயிர் அல்லது இனங்கள் இல்லாத தோட்டங்கள், இந்த வரையறைக்கு இணங்கினாலும், இயற்கை காடுகளால் வழங்கப்படும் காலநிலை ஒழுங்குபடுத்தும் செயல்பாடுகளை மாற்ற முடியாது என்பதில் சிக்கல் உள்ளது.

மேலும், இந்தியா 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 66,000 ஹெக்டேர் அல்லது 0.65% ஈரப்பதமான முதன்மைக் காடுகளை– முதிர்ந்த, இயற்கை, ஈரப்பதமான வெப்பமண்டல காடுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது, இது சமீபத்திய வரலாற்றில் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் வளரவில்லை– இழந்தது என்று, நவம்பர் 2021 கட்டுரையில் தெரிவித்தோம்.

மேலும், காடுகளின் துண்டாடலை இந்தியா அளவிடுவதில்லை, ஏனெனில் சிறிய காடுகளும் அடுத்தடுத்த காடுகளுக்கு சமமான பலன்களை வழங்குவதில்லை என்று, இந்திய வன ஆய்வின் டைரக்டர் ஜெனரல் சுபாஷ் அசுதோஷின் மார்ச் 2020 இல் ஒரு நேர்காணலில் கூறியதை, நாங்கள் வெளியிட்டோம். அத்தகைய பயிற்சிக்கு, ஆள் பற்றாக்குறையை அவர் அப்போது, எடுத்துக்காட்டியிருந்தார்.

Full View


Full View

பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் மற்றும் மேகாலயா உட்பட இந்தியாவின் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களில் மொத்த காடுகளின் பரப்பளவு 1,020 சதுர கி.மீ குறைந்துள்ளது. வனப் பரப்பில் ஏற்பட்ட இந்த இழப்புக்கு, இந்த மாநிலங்களில் பயிர்சாகுபடி மாற்றம், மரங்களை வெட்டுதல், இயற்கைப் பேரிடர்கள், வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் மானுடவியல் அழுத்தம் ஆகியவையே காரணம் என, இந்திய காடுகளின் அறிக்கை தெரிவித்துள்ளது.

Full View


Full View

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News