COP26: பாதிப்பும், தவறவிட்டதும்
COP26 இன் இறுதி ஒப்பந்தம், உலக வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு நாடுகளை நெருக்கமாக நகர்த்துகிறது, ஆனால் காலநிலை நிதியானது குறைவாக உள்ளது.
மும்பை: 26வது காலநிலை உச்சி மாநாட்டில் கையெழுத்தான கிளாஸ்கோ காலநிலை ஒப்பந்தத்தில், வளர்ந்த நாடுகள் பருவநிலை மாற்றத்திற்கு இரட்டிப்பு நிதியுதவியை ஒப்புக்கொண்டன, ஆனால் 2009 இல் உறுதியளித்தபடி, வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் என்ற காலநிலை நடவடிக்கை நிதியை அதிகரிக்கவில்லை என்று, காலநிலை, ஆற்றல் மற்றும் இயற்கை துறையில் தகவல் தொடர்பு நிபுணர்களின் ஜி.எஸ்.சி.சி. (GSCC Network) நெட்வொர்க்கின் பகுப்பாய்வு கூறுகிறது.
உலக வெப்பமயமாதலால் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகள், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏழை நாடுகளுக்குப் பரிகாரமாகச் செலுத்த, வரலாற்று ரீதியான உமிழ்ப்பாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
நவம்பர் 13 அன்று அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், 2100 ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸிற்கு கீழ் வைத்திருக்க, நாடுகளை நெருக்கமாகக் கொண்டு வருகிறது, மேலும் மாசுபடுத்துபவர்கள் தொடர்ந்து பசுமை இல்ல வாயுக்களை வெளியிட அனுமதிக்கும் கார்பன் சந்தைகளில், சில ஓட்டைகளை மூடுகிறது; மற்றும் அவர்களின் காலநிலை உறுதிமொழிகளில் நாடுகளின் முன்னேற்றத்தில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய ஒரு பொறிமுறையை அமைத்துள்ளது.
காடுகள், நிலக்கரி, கார்கள், மீத்தேன் மற்றும் வெளிநாட்டு புதைபடிவ எரிபொருள் நிதியை நிறுத்துவதற்கான 24 பில்லியன் டாலர் ஒப்பந்தம், இவை அனைத்தும் COP26 இல் கையெழுத்தானது, உமிழ்வைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க அம்சங்களை செய்யலாம் என்று ஒப்பந்தம் கூறியது.
பாதிப்பு மற்றும் தவறவிட்டதன் சுருக்கம் மற்றும் அவை எதைக் குறிக்கின்றன என்பது விளக்கப்படங்கள் மற்றும் வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
நிதி: 2025க்குள், வளர்ந்த நாடுகள் ஏற்க இரட்டிப்பு நிதி அளிக்கும்
கடந்த 2019 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டிற்குள் காலநிலை ஏற்புக்கு இரட்டிப்பு நிதி அளிப்பதாக, வளர்ந்த நாடுகளின் உறுதிமொழி ஒரு நல்ல தொடக்கமாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது காலநிலை நிதியில் கால் பங்கிற்கும் குறைவாகவே செலவிடப்படுகிறது.
காலநிலை நடவடிக்கை இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: ஒன்று தணிப்பு, புதைபடிவ எரிபொருட்களைக் குறைத்தல், காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் விரிவுபடுத்துதல் மற்றும் தூய்மையான உள்கட்டமைப்பை ஊக்குவித்தல் ஆகியவை தேவைப்படுகின்றன; இன்னொன்று தழுவல், சூறாவளி புயல்கள், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளை சமாளிக்க முக்கியமான உள்கட்டமைப்பை உருவாக்குவது இது அடங்கும். பருவநிலை நிதியை, இரு நாடுகளுக்கும் சமமாகப் பிரிக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் கோரியிருந்தன.
கடந்த 2009 இல் உறுதி அளிக்கப்பட்ட காலநிலை நடவடிக்கைக்கான $100 பில்லியன் இன்னும் வழங்கப்படவில்லை, இந்த ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளை "அவசரமாக 2025க்குள்" "முழுமையாக" வழங்குமாறு வலியுறுத்தியது.
$100 பில்லியன் இலக்கே இப்போது போதுமானதாக இல்லை -- வளரும் நாடுகளுக்கு 2020 ஆம் ஆண்டு முதல், 2050 ஆம் ஆண்டு வரை, ஆண்டுக்கு $600 பில்லியன் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பணக்கார நாடுகள், 2013 மற்றும் 2019-க்கு இடையில் சராசரியாக 100 பில்லியன் டாலர்களில் 65% மட்டுமே வழங்கியுள்ளன, அதில் 80% அதிக வட்டிக் கடனாக வழங்கியுள்ளன, மேலும் மானியங்களை அல்ல, ஏழை நாடுகளுக்குக் கடன்களைத்தான் வழங்கின.
பாதிக்கப்படக்கூடிய நாடுகள் 2020 ஆம் ஆண்டு மற்றும் 2024 க்கு இடையில் குறைந்தது 500 பில்லியன் டாலர்களைக் கோரியுள்ளன. இந்தியா மட்டும் 2030 ஆம் ஆண்டிற்குள் $1 டிரில்லியன் கோரியது. உலகளாவிய நம்பிக்கையை சரிசெய்ய, இந்த நிதி முக்கியமானது என்று இந்தியாவின் முன்னணி பேச்சுவார்த்தையாளர் நவம்பர் 8 அன்று கூறியிருந்தார்.
ஆப்பிரிக்க நாடுகள் ஆண்டுக்கு 10% மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஏற்புக்காக செலவிடுகின்றன, ஆனால் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் 2050 ஆம் ஆண்டில் ஏழை நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று, கிறிஸ்டியன் எய்ட் என்ற பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.
இழப்பு மற்றும் சேதம்: பணக்கார நாடுகள் இன்னும் செலுத்தாது
இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பங்களாதேஷ் மற்றும் G77 குழுவில் உள்ள பிற நாடுகளும், சீனாவும், "கிளாஸ்கோ இழப்பு மற்றும் சேத ஏற்பாட்டுக்கு" அழைப்பு விடுத்தன, இதன் மூலம் வரலாற்று உமிழ்ப்பாளர்கள், புயல் மற்றும் மோசமான வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு தீர்வு காண, ஏழை நாடுகளுக்கு பணக்கார நாடுகள் பணம் செலுத்துவார்கள். 2022ல் கெய்ரோவில் நடைபெறும் அடுத்த COP இதில் கவனம் செலுத்தும் என்றாலும், இது குறித்து எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது, அதன் மோசமான, தீவிரமான பாதிப்பு
Source: Global Climate Risk Index
Note: The index ranked 181 countries in 2018, 124 in 2017, 182 in 2016, 135 in 2015 and 138 in 2014.
தீவிர வானிலையால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க, வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக, 2019 இல், மாட்ரிட்டில் உள்ள COP25 இல் அமைக்கப்பட்ட சாண்டியாகோ நெட்வொர்க் ஆஃப் லாஸ் அண்ட் டேமேஜ் அமைப்பை செயல்படுத்த, நாடுகள் ஒப்புக்கொண்டன. "வளரும் நாடுகளில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளுடன் தொடர்புடைய இழப்பு மற்றும் சேதங்களைத் தடுக்க, குறைக்க மற்றும் நிவர்த்தி செய்வதற்கான பொருத்தமான அணுகுமுறைகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவியை ஆதரிக்க, சாண்டியாகோ நெட்வொர்க்கிற்கு நிதி வழங்கப்படும்" என்று ஒப்பந்தம் கூறுகிறது. ஆனால் அது நிதியின் அளவு மற்றும் தன்மையைக் குறிப்பிடவில்லை.
கார்பன் சந்தைகள்: சில ஓட்டைகள் சரி செய்யப்பட்டுள்ளன
கிளாஸ்கோ ஒப்பந்தம், கார்பன் வர்த்தகத்திற்கான தூய்மையான மேம்பாட்டு பொறிமுறையில் உள்ள சில ஓட்டைகளை மூடியுள்ளது, இது குறைக்கப்பட்ட உமிழ்வுகளுக்கு கார்பன் வரவுகளை இருமுறை கணக்கிட அனுமதித்தது. உமிழ்வைக் குறைப்பதன் மூலம் கார்பன் வரவுகளை உருவாக்கும் நாடுகள் அவற்றை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதா அல்லது அவற்றின் சொந்த காலநிலை இலக்குகளை நோக்கி அவற்றைக் கணக்கிடுவதா என்பதை முடிவு செய்யும் என்று ஒப்பந்தம் கூறுகிறது -- அவர்களால் இரண்டையும் செய்ய முடியாது.
கார்பன் சந்தையானது, தங்கள் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடைய முடியாத நாடுகள் மற்றும் நிறுவனங்களை வர்த்தகம் செய்யக்கூடிய வரவுகளை ஈட்டுவதற்காக கார்பன் 'கிரெடிட்'களை வாங்குவதற்கு அனுமதிக்கிறது.
வளரும் நாடுகளில் கார்பன் வரவுகளைப் பெறுவதற்கு, வளரும் நாடுகளில் பசுமைத் திட்டங்களில் முதலீடு செய்ய நாடுகளையும் நிறுவனங்களையும் அனுமதித்த முந்தைய தூய்மையான மேம்பாட்டு பொறிமுறையை (CDM), ஒரு குறைபாடுள்ள அமைப்பு என்று அழைக்கப்பட்டது, ஏனெனில் இது வளரும் நாடுகளில் இரட்டை எண்ணிக்கை மற்றும் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது.
பாரிஸ் விதிப்புத்தகம்: அதிக வெளிப்படைத்தன்மை, தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு (NDC) விரைவில் புதுப்பிக்கப்படும்
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய பாரிஸ் விதி புத்தக வழிகாட்டுதல்கள், நாடுகளை அவர்களின் உறுதிமொழிகளுக்கு (NDC அல்லது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்) மற்றும் அவற்றின் உமிழ்வுகள் குறித்த புதுப்பிப்புகளை தெரிவிக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டளவில், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும். இதன் பொருள, எதிர்கால உமிழ்வு குறைப்பு 2024 அடிப்படையின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.
ஒரு புதிய நடவடிக்கையாக, கிளாஸ்கோ ஒப்பந்தம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா போன்ற பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் முக்கிய நிறுவனங்களை, 12 மாதங்களில் ஐ.நா.விடம், அவர்களின் பொருளாதாரம் சார்ந்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பாரிஸ் ஒப்பந்த இலக்குகளுடன் எவ்வாறு இணைந்துள்ளது என்பதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் இலக்குடன் சீரமைக்க, அனைத்து நாடுகளும் காலநிலை இலக்குகளை உயர்த்த வேண்டும் என்று ஒப்பந்தம் கேட்டுக்கொள்கிறது.
என்.ஜி.ஓ. காலநிலை நடவடிக்கை டிராக்கர் (NGO Climate Action Tracker) நவம்பரில், நாடுகளால் முன்வைக்கப்பட்ட 2030 தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் போதுமானதாக இல்லை என்றும், நீண்ட கால நிகர-பூஜ்ஜிய இலக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், 2100 ஆம் ஆண்டில் உலக வெப்பநிலை, குறைப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 1.5°C என்பதற்கு பதிலாக, 2.1 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் கூறியது.
புதிய & புதுப்பிக்கப்பட்ட என்.டி.சி கீழ் திட்டமிடப்பட்ட வெப்பநிலை
Source: Climate Action Tracker
அக்டோபர் 2021 க்குள், 140 க்கும் மேற்பட்ட நாடுகள் - கிட்டத்தட்ட 70% பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் - 57% உலகளாவிய உமிழ்வுகள் - தங்கள் புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு இலக்குகளை சமர்ப்பித்தன. தசாப்தத்தின் இறுதிக்குள் புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இந்தியாவின் மின்சாரத்தின் பங்கை, 40% ல் இருந்து 50% ஆக உயர்த்துவது உட்பட, 'உயர்நிலைப் பிரிவில்' இலக்குகளின் பட்டியலை இந்தியா திருத்தியது.
பாரிஸ் உடன்படிக்கையின் தேவைக்கு மாறாக, பல அரசாங்கங்கள் 2015 இல் இருந்த அதே இலக்குகளை (ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ரஷ்யா) அல்லது குறைவான லட்சிய இலக்குகளை (பிரேசில், மெக்சிகோ) சமர்ப்பித்தன. சிலர் (துருக்கி மற்றும் கஜகஸ்தான்) புதிய சமர்ப்பிப்புகளைச் செய்யவில்லை .
புதைபடிவ எரிபொருள் நிலை 'படிப்படியாக' அல்ல, 'வெளியேற்றம்'
நிலக்கரி மற்றும் புதைபடிவ எரிபொருட்களை 'படிப்படியாக கட்டமாக வெளியேற்றுவதில்' பேச்சுவார்த்தையில் தடுமாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது, ஏனெனில் இந்தியா இந்த வார்த்தைகளை எதிர்த்தது மற்றும் அதற்கு பதிலாக 'வெளியேற்றம்' என்று கேட்டது. மாலத்தீவு மற்றும் மொரிஷியஸ் போன்ற சிறிய தீவு நாடுகளும், சுவிட்சர்லாந்து மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளும் இந்த மாற்றத்தை ஏற்கவில்லை, இது "மோசமான பொருளாதார தேர்வு" என்று கூறியது.
மிகவும் கார்பன்-அடர்வு புதைபடிவ எரிபொருளாக, நிலக்கரியை படிப்படியாக வெளியேற்றுவது, தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸ் வரை உலகளாவிய வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானது. 2019 ஆம் ஆண்டில், உலகளாவிய ஆற்றல் தொடர்பான கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வுகளில் 30% நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி காரணமாக இருந்தது.
அடுத்த ஆண்டு எகிப்தில் COP27 இல் துறை சார்ந்த உமிழ்வுகள் குறித்த திட்டங்களை நாடுகள் முன்வைக்கும்.
பேச்சுவார்த்தைகளின் போது, 45 நாடுகளில் உள்ள 450 நிதி நிறுவனங்கள், கிளாஸ்கோ நிதிக் கூட்டணியின் (GFANZ) கீழ் சுத்தமான ஆற்றல் மற்றும் நிகர-பூஜ்ஜிய உமிழ்வுக்காக $130 டிரில்லியன் முதலீடு செய்வதாகக் கூறின. மற்றொரு கூட்டறிக்கையில், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் 20 நாடுகள் 2022- ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருட்களுக்கான சர்வதேச பொது நிதியை நிறுத்தப்போவதாக தெரிவித்தன. மேலும், 42 நாடுகளும் 32 நிறுவனங்களும் COP26 தலைவர் அலோக் ஷர்மாவின் புதிய நிலக்கரி ஆலைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அழைப்பில் கையெழுத்திட்டுள்ளன.
மீத்தேன் உமிழ்வுகள்: சில தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஆனால் மிகப்பெரிய உமிழ்வுகள் இல்லை
12 நாட்கள் பேச்சுவார்த்தையின் போது அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகள், இறுதி ஒப்பந்தத்திற்கு முன், மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைத்தல், படிம எரிபொருட்கள் மற்றும் நிலக்கரியை படிப்படியாக வெளியேற்றுதல், காடுகளைக் காப்பாற்றுதல் மற்றும் மின்சார வாகனங்களுக்கு மாறுதல் ஆகியவற்றில் சில முன்னேற்றங்களை பதிவு செய்தன.
2020 ஆம் ஆண்டில் இருந்து 2030 ஆம் ஆண்டளவில் மீத்தேன் வெளியேற்றத்தை 30% குறைக்க இலக்கு நிர்ணயித்த உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியில் 103 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன, ஆனால் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உறுதிமொழியில் கையெழுத்திடவில்லை. மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் 2050-க்குள் உலக வெப்பநிலையை 0.2 டிகிரி செல்சியஸ் குறைக்க முடியும் என்று நாங்கள் தெரிவித்திருந்தோம்.
எலக்ட்ரிக் வாகனங்கள்: 2030-க்குள் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் உறுதிமொழியில் இந்தியா கையெழுத்து
வரும் 2030 ஆம் ஆண்டளவில் மின்சார வாகனங்களை நோக்கி நகருவதாக, இந்தியா கூறியுள்ளது, அதே நேரத்தில் கென்யா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 2040 ஆம் ஆண்டளவில் புதிய புதைபடிவ எரிபொருள் வாகனங்களை வெளியேற்ற, ஜீரோ எமிஷன் வாகனங்கள் மீதான கிளாஸ்கோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், உலக கார் விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய உலகின் முதல் மூன்று வாகன சந்தைகள் நாடுகள், இதில் கையெழுத்திடாததால் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.