நல்ல ஆட்சிக்கான 5 கட்டுரைகள்; இந்தியாவுக்கு அதுவே நம்பிக்கை
பெங்களூரு: கடந்த 2018 பிப்ரவரியில் இந்தியா ஸ்பெண்ட், தனது இந்தியா நிர்வாக அறிக்கை -ஐ.ஜி.ஆர். (IGR) என்ற தனது மாதாந்திர செய்திமடல் பிரிவை தொடங்கியது; இதில், இந்தியா முழுவதும் நல்ல ஆட்சி செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் வகுத்தல் குறித்த கட்டுரைகள் ஒருங்கிணைத்து தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
கடந்த 10 மாதங்களில் சுகாதார, பாலின சமநிலை, காலநிலை மாற்றம், கல்வி, கேரளாவின் வெள்ளத்திற்கு பிந்தைய மறுசீரமைப்பு போன்ற சிக்கல்களின் வெற்றிகரமான முயற்சிகளை இணையத்தின் ஐ.ஜி.ஆர். பிரிவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. நமது கவனத்தை ஈர்த்த எமது ஐந்து கட்டுரைகளை தேர்ந்தெடுத்துள்ளோம். இவை, 2018 ஆம் ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்தியோடு, இந்தியாவிற்கு எதிர்கால நம்பிக்கையையும் தந்துள்ளது.
நாடு 2019-ல் பொதுத்தேர்தலை சந்திக்கும் நிலையில், நல்ல ஆட்சியின் தாக்கம் அல்லது அது இல்லாதது கவனத்தை ஈர்க்கும். அரசு நிர்வாக செயல்பாடுகள் பற்றிய எங்கள் கட்டுரைகளை அதிகரிக்க, உங்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறோம்.
சவால்: வரும் 2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிப்பேரின் வாழ்க்கைத் தரத்தை பருவநிலை மாற்றம் குறைத்துவிடும் என்று உலக வங்கியின் 2018 ஜூன் மாத அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நல்ல விளைச்சல் மற்றும் அறுவடைக்கு மழையை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள், குறிப்பாக கர்நாடகா போன்ற பகுதிகளில் அது பெரும் வறட்சிக்கு வழிவகுக்கிறது. 2015 உடன் முடிந்த 15 ஆண்டுகளில் 2005, 2007 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் கர்நாடக வறட்சியை சந்தித்தது என்று, மாநில பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு மையத்தின் 2017 ஆம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு 30 மாவட்டங்களில் 77% பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என்று அறிவிக்கப்பட்டதாக, தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், 2018 செப். 14-ல் செய்தி வெளியிட்டிருந்தது.
செயல்பாடு: வட கர்நாடகாவில் நீர் பற்றாக்குறை உள்ள கலபுராகி மாவட்டம் விவசாய தம்பதியான ஷியாம்ராவ் - லட்சுமிபாய் பாட்டீல், அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகளின் ஆதரவோடு, புதுமையான சாகுபடி முறைகளை கையாண்டு பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொண்டனர். இயற்கை உரங்களை பயன்படுத்தி நல்ல விளைச்சல் கண்ட பாட்டீல் தம்பதி, பால் மற்றும் கோழிப்பண்ணைகளை உருவாக்கினர். தங்களது அனுபவங்களை பிற விவசாயிகளோடு பகிர்ந்து அவர்களையும் புதுமையான சாகுபடிகளை பின்பற்றச் செய்தனர்.
தங்களது விளை பொருட்களை விற்பனை செய்ய, சுய உதவிக்குழுக்களை பாட்டீல் தம்பதி ஏற்படுத்தினர். கலப்பு சாகுபடி முறைகளை கையாண்டு விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருவாய்; அதில் ரூ. 2.5 லட்சம் லாபம் கண்டனர். நாட்டில் 70% வேளாண் குடும்பங்கள் தாங்கள் மாதம் சராசரியாக சம்பாதிப்பதைவிட செலவழிப்பதே அதிகம் என்ற நிலையே உள்ளது.
சவால்: 2017-ல் தனது வாழ்க்கை துணை அல்லது குடும்ப உறுப்பினர்களின் கொடுமையால் 50,000 பெண்கள் இறந்துள்ளனர். “பெண்களுக்கு மிக ஆபத்தான இடம் வீடுதான்” என்ற நிலையை இது ஏற்படுத்தியது என, மருந்துகள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 2018 நவம்பர் மாத ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பாலியல் வன்முறை, கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளால் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் போன்ற மோசமான சாதனங்களை கொண்ட நாடு, மனித கடத்தல், பெண்களுக்கு குறைந்த பாதுகாப்பு உள்ள நாடு போன்ற கருத்துகள் இந்தியா மீது உள்ளது என, தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை கருத்துக்கணிப்பை மேற்கோள்காட்டி, 2018 ஜூன் 26-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. பாலியல் அல்லது உடல் ரீதியான துன்புறுத்தல்களை சந்திக்கும் இந்திய பெண்களில் 14% பேர் மட்டுமே, இதை தடுப்பதற்காக உதவிகளை கோருகின்றனர்; 77% பெண்கள் இதை யாரிடமும் கூறுவதில்லை; அல்லது எவரிடமும் உதவி கேட்பதில்லை என்று, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (2015-16) அறிக்கைதெரிவிக்கிறது.
செயல்பாடு: மும்பையில் 2001-ல் இருந்து பெண்களுக்கான உடல்நல விழிப்புணர்வு மற்றும் சுகாதார ஆலோசனை விழிப்புணர்வு மையம், திலாஸா என்ற பெயரில் உதவி மையங்களை நடத்தி வருகிறது. குடும்ப வன்முறை, பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களை அடையாளம் கண்டு உதவ, இம்மையங்களுக்கு தேசிய சுகாதார இயக்கம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அரசு சுகாதார மையங்களில் பிரதிபலிக்கக்கூடிய மாதிரிகளை கொண்டு, திலாஸா மையங்கள் 8,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவி வழங்கியுள்ளன.
2018 ஆம் ஆண்டுடனான இரண்டு ஆண்டுகளில் மும்பையில் 11 மையங்கள், குடும்ப வன்முறைக்கு இலக்கான 5,647 பெண்களை அடையாளம் கண்டு உதவி செய்துள்ளது. குடும்ப வன்முறைக்கு 2,554 புகார்கள், பாலியல் வன்முறைக்கு 809 வழக்குகள் அவர்களால் பெறப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அறிக்கை தெரிவிக்கிறது. சிக்கிம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, அசாம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகியன, இந்த மாதிரியை பிரதிபலிக்கின்றன.
சவால்:இந்தியாவில் வளர்ச்சி குறைபாடுள்ள 4.66 கோடி குழந்தைகள் உள்ளன; இவற்றில் 31% பேர் ஐந்து வயதுக்குட்டவர்கள்- இது, உலகளவில் அதிகபட்சம் என்று 2018-ல் வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையை மேற்கோள் காட்டி, 2018 டிசம்பர் 10-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.
ஐந்து வயதிற்குட்பட்ட இந்திய குழந்தைகளில் கிட்டத்தட்ட 20% மோசமாக மெலிந்து போகுதல் (உயரத்திற்கேற்ற எடையின்றி); அவர்களில் 7% பேர் மிக மோசமாக மெலிந்தவர்கள் என்று, 2015-16 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.
கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான சங்கம்-ஸ்னேகா (SNEHA) என்ற தொண்டு அமைப்பு, ஆசியாவிலேயே 3வது பெரிய குடிசைப்பகுதிகளை கொண்டுள்ள மும்பை தாராவி பகுதியில் இயங்குகிறது. ஊட்டச்சத்து விழிப்புணர்வு இடைவெளிகளை குறைத்தல் மற்றும் உள்ளூர் சுகாதார ஊழியர்களுக்கு உதவுவதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்க முயன்று வருகிறது.
செயல்பாடு: ஸ்நேகாவின் நடவடிக்கையால் மூன்று வயதுக்குட்பட்ட வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் எண்ணிக்கை 23% குறைந்ததோடு, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் மூலம் குழந்தைகள் பெற்ற சேவை 109% அதிகரித்துள்ளது. இது சுகாதாரம், உணவு மற்றும் முதன்மை கல்வியை உள்ளடக்கிய ஒரு அரசு திட்டமாகும். சமூகத்தில் ஊட்டச்சத்து தொடர்பான அறிவூட்டல்களில் உள்ள இடைவெளியை இது குறைக்கிறது. இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, குழந்தை பிறப்பு கடினமான உள்ள கர்ப்பிணி குடும்பத்தினரை பற்றி அங்கன்வாடி (காப்பாளர்) தொழிலாளர்களுக்கு தெரிவிக்கின்றனர்.
சவால்: குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை அளிப்பது படிப்படியாக அதிகரித்து, இந்தியா இதில் வெற்றி கண்டிருக்கிறது. ஆரம்ப கல்வி வயதுடைய குழந்தைகள் 83% மேற்பட்டவர்கள், 2016- 2017ஆம் ஆண்டில் பள்ளியில் சேர்ப்பட்டுள்ளனர் என, மாவட்ட கல்வி தகவல் மையம் (DISE) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஐந்தாம் வகுப்பு கிராமப்புற மாணவர்களில் பாதிபேர் (47.8%) இரண்டாம் வகுப்பு பாட புத்தகங்களை கூட படிக்க இயலாத நிலை 2016-ல் இருந்தது என்று 2016 ஆம் ஆண்டின் கல்வி ஆய்வு அறிக்கை கூறுகிறது.
செயல்பாடு: வேர்ல்டு விஷன் என்ற லாப நோக்கற்ற, ஒரு மாற்று கல்வி திட்ட அமைப்பின் அபரஞ்சிதா, உத்திரப்பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டத்தில் உள்ள 130 கிராமங்களை சேர்ந்த 4300 குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில் துணை புரிந்துள்ளார். பூஜ்ஜியம் நிலையில் இருந்து, ஓராண்டுக்குள்ளாகவே 1.55% மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டு, உள்ளூர் தகவல்களை (செய்தித்தாளை போல்) வாசித்து புரிந்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை 6.2% (1.8% என்பதைவிட அதிகம்); அதேபோல் கட்டுரைகளை வாசிக்கக்கூடியவர்கள் 10.4% (5.1% என்பதில் இருந்து) அதிகரித்தது. வேர்ல்டு விஷம் அமைப்பானது 2020 ஆம் ஆண்டுக்குள் திட்டத்தை நிறைவு செய்து, சமுதாயத்தை அதிகாரம் மிக்கதாக மாற்றித்தர எண்ணியுள்ளது.
சவால்: 2017ஆம் ஆண்டுடனான இருபது ஆண்டுகளில இந்தியாவில் பருவநிலை மாற்ற பேரிடர்களால் 7950 டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், உலகளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் 2018 அக். 11-ல் தி வயர் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. பேரிடருக்கு தயாராவதில் இந்தியா குழந்தை நடை போட்டு மெதுவாக செல்கிறது. பருவநிலை மாற்றம் தொடர்பான தீவிரமான வானிலை நிகழ்வுகளின் பின்னணிக்கு இதுவே காரணம். நாட்டில் உள்ள 4,862 அணைகளில் 7 சதவீதம் மட்டுமே அவசரகால நடவடிக்கை திட்டங்களை கொண்டுள்ளன என்று, 2017 தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையை காட்டி இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் 2018 செப்.3-ல் செய்தி வெளியிட்டிருந்தது. 2018 ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், 2006- பேரிடர் மீட்பு நிவாரணப்படை அமைக்கப்பட்ட போதும், மீட்பு நடவடிக்கைகளுக்கு ராணுவமே வரவழைக்கப்படுகிறது.
கேரளாவில் ஏற்பட்ட பலத்த வெள்ளம் 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்ததாக மதிப்பிடப்பட்டது; மாநில அரசுக்கு மறுவாழ்வு பணிகளுக்கு ரூ. 30,000 கோடி தேவைப்படுகிறது.
நடவடிக்கை: கேரள மின்வாரியத்தின் ’மிஷன் ரீகனெக்ட்’ என்ற அதிவிரைவு நடவடிக்கையால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் வீடுகளுக்கு இரண்டே வாரத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. வீடுகளுக்கு 100% மின் இணைப்பு தந்த 15 மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்று இந்துஸ்தான் டைம்ஸ் இதழ், 2018, நவ. 28-ல் செய்தி வெளியிட்டிருந்தது. இது, மாநில அளவிலான ஓய்வுபெற்ற ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் தனியார் மின் பணியாளர்கள், தொண்டர்களை கொண்ட குழு ஏற்படுத்தி, அவறை ஒருங்கிணைத்து மீட்பு பணிகளை திறம்பட கையாண்டது.
(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.