முதல் பயிற்சி அலுவலர் கரிமா ஷோரனின் கதையும் இந்திய பெண்களின் எழுச்சியும்
மும்பை: 2016 ஆம் ஆண்டில் அப்போது 17 வயதை எட்டியிருந்த கரிமா ஷேரான், மிகவும் போட்டிவாய்ந்த, உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மாவட்டம் பர்சத்கஞ்சில் உள்ள தேசிய விமான பயிற்சி பள்ளியான இந்திராகாந்தி ராஷ்டிரிய உரான் அகாடமியில் (IGRUA) சேர்ந்தார்; சொந்த ஊரான ஹரியானாவின் ரோதக் நகரை சேர்ந்தவர்களுக்கு அவர் என்ன செய்கிறார் என்று தெரியாது.
"நான் சிறு நகரமான ஹரியானாவில் இருந்து ஒரு ஜாட் குடும்பத்தில் இருந்து வருகிறேன்," என்று தற்போது 20 வயதாகும் ஷேரான், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் முதல் பயிற்சி அதிகாரியாவார். தொலைபேசியில் இந்தியா ஸ்பெண்டிடம் பேசிய அவர், "பெண்களுக்கு அது பெரியதல்ல" என்றார். பெற்றோர்கள் தங்கள் மகள்களின் தொழில்முறை கல்வியில் முதலீடு செய்வது பார்க்க அசாதாரணமானது என்று அவர் விளக்கினார். "சொந்த ஊர் மக்களுக்கு இது தெரிந்தால் 'உங்கள் மகளுக்காக ஏன் அதிகம் செலவிடுகிறீர்கள். உங்கள் மகனை அனுப்பலாமே என்பார்கள். பொறியியல் அல்லது மருத்துவம் படிக்கும் பெண்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.
இரண்டு வருடங்களாக, அவரது பெற்றோர், இளைய சகோதரர் தவிர ஒரு மாமாவுக்கு மட்டுமே இந்த உண்மையை அறிந்திருந்தார். "அக்கம் பக்கம் உள்ள நண்பர்கள், உறவினர்கள் 'கரிமா எங்கே?' அவள் எப்படி இருக்கிறாள்? ' என்று கேட்டபோது “அவள் நன்றாக இருக்கிறாள். தொலைதூர பொறியியல் கல்லூரியில் படிக்கிறாள்” என்று கூறியுள்ளனர்.
வேகமான பேச்சு, நீண்ட கருப்பு முடி, முகத்தில் நம்பிக்கை மிளிரும் அந்த இளம் பெண் ஆங்கிலம் பாப் இசையால் ஈர்க்கப்படுகிறது (அவரது மொபைல்போல் காலர் டியூனில், கியூபா அமெரிக்க பாடகரான கமீலா கபேலோவின் 'ஹவானா' பாடல்) ஒலிக்கிறது. ஷோரான் ஒரு புள்ளிவிவரம், இந்திய பெண்களின் முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது; இந்திய வணிக விமானிகளில் 12.4% பெண் விமானிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது உலக சராசரியான 5.5%, அமெரிக்கா (5%), இங்கிலாந்து (5.2%) என்பதைவிட இரு மடங்கு அதிகம் என, மகளிர் விமானிகளுக்கான சர்வதேச சங்கத்தின் 2018 தரவுகள் தெரிவிக்கின்றன.
மகப்பேறு மற்றும் குழந்தை இறப்பு, சுகாதாரம், மற்றும் முதன்மை, இரண்டாம்நிலை மற்றும் கல்லூரி கல்வி போன்ற பல துறைகளில் இந்திய பெண்களின் இன்றைய தலைமுறை கண்டுள்ள முன்னேற்றத்தை ஷேரோன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரது கதையானது அவரது மாவட்ட மற்றும் மாநிலத்தின் முன்னேற்றம் பற்றிய ஒரு நினைவூட்டலாகும் - மற்றும் உலகில் பின்தொடரும் இந்தியா மற்றும் சில சந்தர்ப்பங்களில், துணைக்கண்டம் இன்னும் முன்னேற்றமடைந்துள்ளன; அவரது கதையானது அவரது மாவட்ட மற்றும் மாநிலத்தின் முன்னேற்றம் பற்றிய ஒரு நினைவூட்டலாகும் - இந்தியா உலகத்துடன் சில சந்தர்ப்பங்களில்துணைக்கண்டத்துடன் இன்னும் முன்னேற்றத்தை எட்ட உதவும்.
ஷேரான் சொந்த மாவட்டத்தில் பாலின வேறுபாடு நீடித்த நிலையில் துரித முன்னேற்றம்
ஹரியானாவின் 2017 பொருளாதார ஆய்வின் படி 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட ரோதக்கை சேர்ந்த ஷேரன், இந்து ஜாட் இனத்தை சேர்ந்தவர்; இச்சமூகத்தவர்களின் பரம்பரை கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இருந்து வருகிறது.
கல்விக்கான மையமாக அறியப்படும் இந்த மாவட்டமானது, 84% எழுத்தறிவு விகிதம் கொண்டுள்ளது; இது தேசிய சராசரியை விட 74% அதிகம். ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 88%; பெண்களின் எழுத்தறிவு விகிதம் 72% என்று, 16% குறைவாக இருப்பது, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான தொடர்ச்சியான பாலின பாகுபாட்டை குறிக்கிறது.
தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் 2016 அறிக்கையின் சமீபத்திய தரவுகள்படி இந்தியா முழுவதுமான பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இது, ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது. தேசிய அளவில் கூட்டு பாலியல் கொடுமைகளில் 1,00,000 பெண்களில் 1.5 என்ற விகிதம் உள்ளது.
அதேபோல், 1,000 ஆண்களுக்கு 879 பெண்கள் என, இந்தியாவின் மிக குறைந்த பாலின விகிதத்தை, , ஹரியானா மாநிலம் கொண்டிருக்கிறது என, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது, 1951ஆம் ஆண்டில் இருந்து 60 ஆண்டுகளில் இருந்த 871 என்பதைவிட வெறும் எட்டு சதவீதமே அதிகம்.
ஹரியானா மாநிலத்தின் 17 மாவட்டங்கள் "பாலின நெருக்கடி" கொண்டவை என வகைப்படுத்தப்பட்டு உள்ளன, இதில் ரோதக்கில் மட்டும் 1000 ஆண்களுக்கு 867 என்றளவில் உள்ளது. 2016 ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், ரோதக்கை சேர்ந்தவர் என்று, 2016ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.
'நான் எங்கிருந்து வருகிறேன், பெற்றோர்கள் மட்டுமே மகன்களுக்காக இதை செய்வர்'
ஒருநாள், அவர் பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளுக்கு (அதை அவர் முடித்திருந்தார்) படித்த போது, பெற்றோர் தங்களது விருப்பமாக விமானி ஆவது குறித்து ஆலோசனை கூறினர்.
"அவர்கள் என்னிடம் வந்து இப்படி கூறியபோது உண்மையில் அதிர்ச்சி அடைந்தேன்," என்ற ஷேரன் , 'சரி! என்னால் செய்ய முடியும் என்று தெரியும். அவ்வாறு ஏதாவது இருக்கலாம் என்று விரும்பியிருந்தேன்.... இப்போது அது என் முன். அதை நான் முயற்சி செய்ய விரும்புகிறேன்” என்றார்.
ஐ.ஜி.ஆர்.யு.ஏ.வில் மருத்துவ பரிசோதனையை முடித்தால் மட்டுமே ஒரு விமானி ஆக முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
"என்னை ஒரு விமானியாக பார்க்க வேண்டும் என்பது என் தந்தையின் கனவு என்பதை அறிந்தேன். அதனால், அவர் முன்பு ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்றார் ஷேரன். அவரது தந்தை, ஹரியானா அரசு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மஹரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தி தகவல் அறியும் அதிகாரி ஆவார். அவரது தாய் ஒரு பள்ளி ஆசிரியராக இருப்பதால் தான் உச்சத்தில் பறக்கும் பள்ளி கட்டணம், செலவினங்களை சமாளிக்க முடிந்தது.
"என் பெற்றோர் பணம் ஈட்டுவதற்காக சில நிலங்களை விற்று அதற்கான வழியை கண்டனர்" என்ற ஷேரன், "ஆனால் நான் இன்னும் உறுதியாக நம்பாமல் இருந்தேன். ஏனெனில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் வழக்கமாக மகன்களுக்காக மட்டுமே இதை செய்கிறார்கள். ஆனால் என் அம்மா என்னிடம் “இதற்கான பணம் எப்படி வந்தது என்று கேட்கக்கூடாது” என்று உறுதி பெற்றுக் கொண்டனர்.
ஷேரன் தனது வர்த்தக விமான பைலட்டின் உரிமத்தை 15 மாதங்களில் பெற்றுக் கொண்டார். (இந்த நிலையை எட்ட ஐ.ஜி.ஆர்.யூ.ஏ பட்டதாரிகளுக்கு பொதுவாக 18 மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை ஆகும்).
"நான் வேலை கிடைத்த பிறகு மட்டுமே நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் இந்த உண்மையைக் கூறினோம்," என்று சிரித்தவாறு கூறினார். தனது முதல் சம்பளத்தில் தாயாருக்கு ஒரு தங்க மோதிரம் பரிசாக கொடுத்தார். தந்தை மற்றும் 15 வயது சகோதரருக்கு விலையுயர்ந்த டேனிஷ் பிராண்ட் ஸ்கெகன் கைகடிகாரங்களை பரிசளித்தார்.
முதல் பயிற்சி விமாய் கரிமா ஷேரன் (20), விமானத்தில் தனது அறையில்.
ஷேரன் ஏற்கனவே தனது விமான போக்குவரத்து பைலட் உரிமத்திற்கான தேர்வுகள், நேர்காணல்களில் வெற்றி பெற்றுவிட்டார். எனினும் அவர் 21 வயதை எட்டும் வரை இது 'முடக்கப்பட்டிருக்கும்'. ஒரு விமானத்தை 2,500 மணி நேரம் இயக்கிய பிறகு, அவர் கேப்டன் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
பாதைக்கு வெளிச்சம் காட்டும் இந்திய பெண்கள் விமானிகள்
ஷேரானின் கதையானது நகர்ப்புற, பகுதி நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் பல பெண்களைபோலவே உள்ளது. அவர்கள் தடைகளிய தகர்த்து கடந்து வந்து, தொழில்உலகத்தை வழிநடத்த விமானிகள் மற்றும் கமாண்டர்களாகவும் ஆக வேண்டும்.
இந்தியாவில் உள்ள 1,092 பெண்கள் விமானிகளில் 384 அல்லது 35% பேர் கமாண்டர்கள் (அல்லது கேப்டன்கள்); இது உலக சராசரியான 28% என்பதைவிட 7% புள்ளிகள் அதிகம். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பெண் விமானிகளில் கேப்டங்களாக இருப்பவர்கள் முறையே 27% மற்றும் 28% என்பதாகும்.
"வேறு வேலைகளில் பெண்கள் இல்லையெனில் பாரம்பரிய சவால்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என பெண் விமானிகள் நினைக்கவில்லை" என்று, ஐ.ஜி.ஆர்.யு.ஏ.வின் முன்னாள் இயக்குனரான ஏர் மார்ஷல் வி.கே.வர்மா (ஓய்வு) தெரிவித்தார். இங்க்கு, தொழிற்சங்கங்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியம், பாதுகாப்பு மற்றும் விமான நிறுவனங்களால் வழங்கப்படும் ஏனைய வசதிகளும் உள்ளன.
"விமானியாக இளம் பெண்களிடையே பெரும் ஆர்வம் இருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம்; மேலும் ஆண்கள் மற்றும் பெண்களின் திறமைகளில் எவ்வித வித்தியாசத்தையும் நாங்கள் பார்க்கவில்லை," என்று அவர் கூறினார். ஐ.ஜி.ஆர்.யு.ஏ.வில் பயிற்றுவிப்பாளர்களாக பல பெண்கள் இருந்திருக்கிறார்கள். அதன் தலைமை விமான பயிற்றுவிப்பாளரும் ஒரு பெண் தான்.
விமான போக்குவரத்து என்பது ஒரு கவர்ச்சியான எடுத்துக்காட்டு ஆகும், ஆனால் கல்வி மற்றும் சுகாதார விளைவுகளை மேம்படுத்தும் போது, பாரம்பரியமற்ற வாழ்க்கை முறைகளை கருத்தில் கொண்டு, இதற்கு வரும் பெண்களின் எண்ணிக்கை, அவர்களிய இத்தொழிலில் தலைவர்களாக்குகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டின்படி, இந்தியாவில் பட்டியலிடப்பட்ட 500 மிகப்பெரிய நிறுவனங்களில், 17ன் தலைமை செயல் அதிகாரிகள் (CEO) பெண்களாக இருந்தனர் என்று, எகனாமிக் டைம்ஸ் இதழ் 2016இல் செய்தி வெளியிட்டிருந்தது. இதில் ஏழு, வங்கிகள் மற்றும் நிதி சேவைகள் துறைகளாக இருந்தன. இது 2005ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளின் எண்ணிக்கை நான்கு என்பதுடன் ஒப்பிடும் போது நான்கு மடங்கு அதிகம்.
கடந்த 1950 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை ஆறு என்றிருந்தது, 229 நீதிபதிகளில் 124 பேர் பேர் பெண்கள் என்று அதிகரித்ததாக, 2016 டிசம்பரில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இத்தகைய முன்னேற்றங்கள், கீழ் நிலையில் இருந்து இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கின்றன.
கல்வியில் குறிப்பாக அறிவியலில் பெண்களின் எழுச்சி
இந்தியாவில் பெண் கல்வியறிவு 1951 ஆம் ஆண்டில் 9 சதவீதத்தில் இருந்து 2011 ல் 65 சதவீதமாக உயர்ந்ததாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
நடுநிலைப்பள்ளிகளில் (வகுப்பு 6-8 வரை) பெண்களின் மொத்த வருகைப்பதிவு விகிதம் 2005-06ல் 66.4% என்றிருந்தது, 2015-16ல் 97.6% ஆக உயர்ந்தது. உயர்நிலைக்கல்வியிலும் (9 - 12 வகுப்புகள்) அதே காலப்பகுதியில் 36% முதல் 69% வரை உயர்ந்திருந்தது.
பல்கலைக்கழகங்களில் படிக்க சேர்ந்த பெண்களின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் 33% உயர்ந்துள்ளது; அதாவது 2011-12 இல் 21 லட்சம் என்றிருந்தது, 28 லட்சமாக (2015-16ல்) அதிகரித்தது.
மேலும், ஆண்கள் பாதுகாப்பாக உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்விகளிலும் பெண்கள் இன்று நுழைந்துவிட்டனர். கடந்த ஆறு ஆண்டுகளில் அறிவியல் பட்டதாரியான பெண்களின் எண்ணிக்கை 130% உயர்ந்துள்ளது; அதாவது 2011- 12ல் 10 லட்சம் என்பது, 2017-18ஆம் ஆண்டில் 23 லட்சமாக அதிகரித்தது.
தொழில் நுட்ப பாடங்களை எடுத்துக் கொண்டால், இது 73% வளர்ச்சி கண்டுள்ளது. அதன்படி, 2011- 12ல் 34,217 என்பது, 2017-18ஆம் ஆண்டில் 59,259 என்றளவில் அதிகரித்தது என அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் சாத்தியமானது.
மேம்படும் சுகாதார குறிகாட்டிகள்
பல ஆண்டுகளாக இந்திய பெண்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டு, அது அவர்களை உயர் கல்வியை தொடர அனுமதித்தன.
“மெலிந்த” பெண்களின் (உடல் நிறை குறியீட்டோடு - உயரத்திற்கான எடை அளவை - 18.5 கிலோ / m2 க்கு குறைவாக) 15-49 வயதுடையவர்கள் எண்ணிக்கை, 2005-06ஆம் ஆண்டில் 36 சதவீதம் என்றிருந்தது, 2015-16 ல் 23 சதவீதம் என, 13 சதவீதம் குறைந்துள்ளது.
இந்திய பெண்கள் மத்தியில் வளர்ச்சியின்மை (வயதுக்கேற்ற உயரமின்மை) என்பது, 2016 உடன் முடிந்த பத்து ஆண்டுகளில் 23 சதவீதம் என்றிருந்தது, 16 சதவிகிதம் வரை குறைந்துள்ளது; மற்றும் அதே காலகட்டத்தில் எடை குறைவு (வயதுக்கேற்ற எடை) சதவீதம் 16% முதல் 11% வரை குறைந்துள்ளது என, 2015-16 தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS) தரவுகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய இருவரின் சுகாதாரங்களில் பெரும் முன்னேற்றத்திற்கான முன்னணி காரணம் தாய்மார்களின் ஆரோக்கியமே என்று, 2018 ஜூலையில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
பிரசவத்தின் போது தாய் இறப்பு வீதம் 1992ஆம் ஆண்டில் 100,000 பிரசவத்தில் 398 இறப்புகள் என்று காணப்பட்டது; இது 2014-16ல் 130 இறப்பு என்று குறைந்தது என, 2013 மாதிரி பதிவு ஆய்வு (SRS) சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.
பெண்களின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் ஒன்றான, திருமணத்தின் சராசரி வயது, 1991ஆம் ஆண்டில் 19.5 வயது என்றிருந்தது, 2013ஆம் ஆண்டில் 21.3 வயது என அதிகரித்துள்ளதாக, 2013 மாதிரி பதிவு ஆய்வறிக்கை காட்டுகிறது.
18 வயதிற்கு முன் திருமணம் செய்து கொண்ட பெண்களின் விகிதம் 1996ஆம் ஆண்டில் 18% என்பது 2013 இல் 2.2 சதவீதமாக சரிந்தது; அதே நேரத்தில் 21 வயதுக்கு பிறகு திருமணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 29 சதவீதத்தில் இருந்து 56 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த குறிகாட்டிகள் கடந்த பல ஆண்டுகளில் பெண்களிடையே அதிகரித்து வரும் முடிவெடுக்கும் அதிகாரங்களை சுட்டிக்காட்டுகின்றன.
திருமணமான பெண்கள் வீட்டின் முடிவுகளில் பங்கெடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள் விகிதம், 2005-06ஆம் ஆண்டில்76.5% என்பது, 2015-16ல் 84% ஆக அதிகரித்துள்ளது என தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவு தெரிவிக்கிறது.
அதிகமான முடிவெடுக்கும் அதிகாரம் பெண்களுக்கு கிடைப்பதற்கான காரணங்களில் ஒன்று, அவர்களுக்கு அதிகரித்து வரும் பொருளாதார சுதந்திரம் என்று தரவு காட்டியது. வங்கி கணக்கு வைத்து அதை சுதந்திரமாக இயக்கும் பெண்களின் சதவிகிதம் 15% என்பது மூன்று மடங்கு அதிகரித்து, 53 சதவிகிதம் என்று அதிகரித்துள்ளது.
இருப்பினும், விமானிகள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி போன்ற பதவிகளில் பெண்களின் முன்னேற்றம் இந்தியாவின் தொழிலாளர் திறனில் போதுமானதாக இல்லை.
ஏராளமான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்; பைலட் பள்ளி போதுமானதாக இல்லை
இந்தியாவின் பெண் தொழிலாளர் திறன் பங்களிப்பு விகிதம் (LFPR) அல்லது 1,000 நபர்களுக்கு தொழிலாளர் பிரிவில் பெண்களின் எண்ணிக்கை என்பது, நகர்ப்புற, கிராமப்புறங்களில், 2011 உடன் முடிந்த 18 ஆண்டுகளில் குறைந்துவிட்டது என, 2019 ஜனவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.
பெண் தொழிலாளர் திறன் பங்களிப்பு விகிதம், நகர்ப்புறங்களில் 1993ஆம் ஆண்டில் 1,000 க்கு 165 ஆக இருந்தது, 2011 ல் 155 ஆக அதிகரித்தது. கிராமப்புறங்களில், அதே காலப்பகுதியில் 330 என்பது, 253 வரை சரிந்தது என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.
2017ன் முதல் நான்கு மாதங்களில் ஆண்களுக்கு வேலைவாய்ப்புகள் 0.9 மில்லியன் அதிகரித்தாலும், 2.4 மில்லியன் பெண்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்ததாக, 2017 ஆகஸ்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. இந்திய பெண்களில் 27% மட்டுமே தற்போது தொழிலாளர் பிரிவில் உள்ளனர். இதில், ஜி-20 நாடுகளில் சவுதி அரேபியா மட்டுமே மோசமாக உள்ளது. இந்தியாவில் வேலை செய்யும் பெண்களைப் பற்றிய எங்களது ஆழமான கட்டுரைகளை நீங்கள் இங்கே படிக்கலாம்.
பர்சத்கஞ்ச் விமான பயிற்சி பள்ளியில் பெண்கள் மீண்டும் பிடிக்கப்படுகிறார்கள். பெண்களின் விருப்பங்கள் உயரும் போது அதற்கு இடமளிக்கும் திறன் அதிகரிக்க வேண்டும்.
"குடும்ப அளவில் சிலதடைகள் இருக்க வேண்டும் … [அதிகரித்து வரும் இடங்கள் இருந்தாலும்] ஆனால் விருப்பங்கள் பெரியளவில் பிரமாண்டமாக உயர்த்துகிறது என்பது தெளிவாகும் "என்று முன்னாள் இயக்குனர் ஏர் மார்ஷல் வர்மா தெரிவித்தார்.
"என் தொழில் வாழ்க்கைத் தேர்வு நிச்சயமாக எனது உறவினர்களின் கண்களைத் திறந்தது என நினைக்கிறேன்; அவர்கள் வேறுபட்ட வாழ்க்கை பாதைகளை தேடும் சாத்தியம் உள்ளது" என்ற ஷேரன், "ஆனாலும் இன்னும் அவர்கள் தங்கள் மகன்களை கருத்தில் கொள்ளும் விஷயமாக இருக்கலாம்" என்றார்.
அவரது இன்ஸ்டாகிராம் சமூகவலைதள கணக்கில், அவரது எண்ணிக்கை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஜனவரி மாதம் 1,000 ல் கடந்தது; பைலட் ஆக விரும்பும் பலர் ஐ.ஜி.ஆர்.யு.ஏ. பயிற்சி, தேர்வுகள், உதவித்தொகை ஆலோசனைகள் உள்ளிட்டவை தொடர்பாக ஷேரனுக்கு இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான செய்திகள், பதிவுகள் வருகின்றன.
"குவாலியர், மீரட் மற்றும் உ.பி., ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளிலிருந்தும் நிறைய பெண்கள் என் வேலை சார்ந்த கருத்துக்களை அடிக்கடி கேட்கிறார்கள் என்று ஷேரன் கூறினார். "அது பாதுகாப்பற்றதா இல்லையா என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்; அல்லது பாகுபாடு காண்பித்தால் போராடுவோம் - பெண்கள் விமானிகளுடன் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றிய செய்திகளையோ உடனடியாக நான் பகிர்ந்து கொள்கிறேன் " என்றார் அவர்.
"பெற்றோருக்கு எப்போதுமே விமான பயிற்சி பெற தொகை வழங்குவதற்கு ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை, எனவே படிப்புக்கு நாம் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்," என்றார் ஷேரான். "ஐ.ஜி.ஆர்.யு.ஏ. மட்டுமல்ல, மாநில அரசுகளும் உதவித்தொகை வழங்குகின்றன - ஒருவேளை இது அதிகமாக விளம்பரம் செய்யப்பட வேண்டும். வேலை நேரத்தில் எரிச்சலாக இருக்கலாம். ஆனால் நாள் முடிவில் வேலை திருப்தியையும் மதிப்புள்ளதாகவும் செய்கிறது. இப்பெண்களுக்கு அவர்களின் விருப்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
(சல்தானா, இந்தியா ஸ்பெண்ட் துணை ஆசிரியர்; சால்வி, இந்தியா ஸ்பெண்ட் திட்ட மேலாளர்.)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.