இந்தியாவின் கோவிட்19 நிதி தொகுப்பு என்பது மறுசீரமைக்கப்பட்ட பழைய திட்டங்களே; சிறிதளவே சிறிதளவே புதிய செலவினம்

Update: 2020-03-31 00:30 GMT

மும்பை / ஜெய்ப்பூர்: கோவிட் -19 வைரஸ் தடுப்பதற்காக அமலான ஊரங்கு உத்தரவால் பாதித்துள்ள ஏழை மக்களுக்கு உதவ இந்தியா அறிவித்துள்ள நிதித்தொகுப்பு, பிரச்சனையின் அளவை குறைத்து மதிப்பிட்டுள்ளது என்று கருதுவதாக, வல்லுநர்கள் மற்றும் அரசின் தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.

கடந்த மார்ச் 26, 2020 அன்று, நிதி அமைச்சகம் ரூ.1.7 லட்சம் கோடி (22 பில்லியன் டாலர்) மதிப்புள்ள நிதித்தொகுப்பு திட்டத்தை அறிவித்தது; அதாவது, பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் கூடுதல் உணவு தானியங்கள் விநியோகம், பெண்கள், விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நேரடியாக பண சலுகைகள் பரிமாற்றம், சுகாதார ஊழியர்களுக்கான காப்பீடு மற்றும் அமைப்புசார்ந்த ஊழியர்களுக்கான சலுகைகள் ஆகியவை அடங்கும். உண்மையில் இதில் பல திட்டங்களுக்கு நிதி அதிகரிப்பு என்பதே கிடையாது; ஏற்கனவே இருக்கும் சில திட்டங்களே மறுசீரமைக்கப்பட்டுள்ளன என்பதை எங்களின் பகுப்பாய்வு காட்டுகிறது. 

கூடுதல் உணவு மற்றும் பண பரிமாற்றம் சலுகைகள் ஏழைகளுக்கு உதவும் என்றாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்) கீழ் ஊதிய உயர்வு போன்றவை உண்மையிலேயே  அதிகரிப்பு அல்ல - ஏனெனில், மத்திய அரசு அறிவித்துள்ள  "மேம்பட்ட" இந்த ஊதியங்களை விட, மாநில அரசுகள் ஏற்கனவே அதிக ஊதியத்தை வழங்குகின்றன. ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) தொகையில் 75% அல்லது மூன்று மாத ஊதியத்திற்கு சமமான தொகையை திரும்பப்பெற அனுமதிப்பது போன்ற சில சலுகைகள், கூடுதல் நிதியாக கருதப்படக்கூடாது; ஏனெனில் அந்த தொகை, அரசு நிதி அல்ல;  ஊழியர்கள் செலுத்தியதுதான்; இதில் உள்ள ஒரே சலுகை, திரும்பப்பெற அனுமதித்திருப்பது என்பது மட்டுமே.

"இந்த நிதித்தொகுப்பு பரந்தளவில் உள்ளது;  ஆனால் ஏழைகளுக்கு உதவவோ அல்லது, தற்போதைய பொருளாதார மந்தநிலையை மேலும் தீவிரமாவதை தடுக்கவோ தேவையான அம்ம்சங்கள் இல்லை,” என்று,  மார்ச் 26, 2020 அன்று 635 பொருளாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவித்தது. "நிதி அமைச்சர் அறிவித்த ரூ.1.7 லட்சம் கோடி என்பது, குறைந்தபட்ச அவசர நடவடிக்கைகளை நிறைவேற்ற தேவையான ரூ.3.75 லட்சம் கோடி தொகையில் பாதிக்கும் குறைவானது" என்று அவர்கள் கூறினர். ஏழை வீடுகளுக்கு ஒருமுறை பரிமாற்றத்துக்கு ரூ.7,000 தேவை என்ற அடிப்படையில், இத்தொகையை கணக்கிடுகிறது.

ஊரடங்கு மற்றும் சமூக விலக்கல் தேவை என்ற நிலையில், இத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது பற்றிய எந்த விவரமும் அரசின் அறிவிப்பில் இல்லை.

"பண பரிமாற்றத்திற்கான அறிவிப்புகள், இந்த நிலையில் ஒப்பீட்டளவில் சுமாரானதாகவே தோன்றுகின்றன; மேலும் சமூக விலக்கலின் தாக்கம் மற்றும் ஊரடங்கால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் [ஜி.டி.பி.] வளர்ச்சியை 2019-2020 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 2.4% என்று இருப்பது 2020-2021ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.5% ஆக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என, கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ.வின் முதன்மை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் ட்விட்டர் அறிக்கையில் தெரிவித்தார்; அவர், உணவு தானியம் வழங்கல் அதிகரிப்பு மற்றும் விவசாய சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்களை முன்கூட்டியே வழங்குவத அவர் வரவேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் ஊரடங்கை அறிவித்து, அத்தியாவசியமற்ற அனைத்து வணிக நிறுவனங்கள் மூடவும்,  உள்நாட்டு ரயில்கள் அல்லது விமான சேவை மற்றும் பொது போக்குவரத்து முடக்கம் மற்றும் மக்கள் தங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல கட்டுப்பாடு ஆகியன அறிவித்த 3 நாட்களுக்கு பிறகு, இந்த நிதித்தொகுப்பு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவிட்-19 பரவலை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது; இது ஒரு தொற்றுநோயாக மாறியுள்ளது. உலகளவில் 24,000க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றுள்ளது மற்றும் 5,30,000-க்கும் அதிகமானவர்களை பாதித்தது என்று, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையத்தின்படி (மார்ச் 27 அன்று காலை 9.30 மணி) தகவல் தெரிவிக்கிறது. இந்தியாவில், இந்த நோய் 17 உயிர்களை கொன்றது மற்றும் குறைந்தது 724 பேரைப் பாதித்துள்ளது (காலை 9.15 மணி, மார்ச் 27, 2020 வரை) என்று,  ஹெல்த்செக் தரவுத்தளமான கொரோனா வைரஸ் மானிட்டர் தகவல் தெரிவிக்கிறது. 

பொது போக்குவரத்து மூடப்பட்டதில் இருந்து, குறிப்பாக முறைசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் வருமான இழப்பில் , சிக்கித் தவிக்கின்றனர். வேலையற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்  வீட்டுக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிதி தொகுப்பு, கூடுதல் நிதி ஆகாது

தற்போது அறிவித்த 1.7 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு, அரசின் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை குறிக்காது; ஒவ்வொரு ஏற்பாடும் பி.எம்.ஜி.கே.ஒய். திட்டத்தின் கீழ் வருவதாக, இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு காட்டுகிறது.

உதாரணமாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இருந்து அமைப்புசார்ந்த துறை ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மை, ஊழியர்களின் சொந்த பணத்தையே எடுத்து அவர்களுக்கு உதவுவதாகும். வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 75% தொகையை அல்லது மூன்று மாத ஊதியத்திற்கு சமமான தொகையை திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் என்று அரசு கூறியது. வழக்கமாக, ஒரு தொழிற்சாலை மூடப்பட்டு இருந்தால் அல்லது இரண்டு மாதங்களுக்கு திறக்கப்படாவிட்டால், பி.எஃப் பணத்தின் 100% தொகையையோ, தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கு வேலையில்லாமல் இருந்தால் 75%  பங்கை திரும்பப் பெறலாம்.

இது, தொழிலாளர்களுக்கு ஒரு உண்மையான ஒரு நிவாரணமே அல்ல; ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து கடன் பெற வேண்டும். இங்கே, அரசு அவர்களுக்கு நேரடி நிவாரணம் வழங்குவதை விட, அவர்களின் குறுகிய கால தேவைகளை கவனித்துக்கொள்வதில் தொழிலாளர்கள் ஊக்கமளிக்க ஊக்குவிக்கிறது; மேலும் ஈபிஎஃப் மானியம் குறைவான நிறுவனங்களை உள்ளடக்குவது,  சிறந்த ஒரு பகுதி சார்ந்த நடவடிக்கையாகும்; எல்லாவற்றிற்கும் மேலாக, அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள், இந்த நிவாரணத் தொகுப்பால் ஆறுதலை பெற மாட்டார்கள் என்று, ஜாம்ஷெட்பூரின் சேவியர் ஸ்கூல் மேனேஜ்மென்ட் பேராசிரியர் கே ஆர் ஷியாம் சுந்தர், இந்தியா ஸ்பெண்டிடம்  தெரிவித்தார்.

தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் பி.எஃப் பங்கை (அடிப்படை சம்பளத்தின் 24%) மூன்று மாதங்களுக்கு செலுத்துவதாக அரசு கூறியுள்ளது. ஆனால் இது 100 க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்; அவர்களில் 90% பேர், ரூ.15,000-க்கும் குறைவாக சம்பாதிக்கிறார்கள். இது அனைத்து பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களில் 16% அல்லது இந்தியாவின் 1.6% பணியாளர்களை உள்ளடக்கும் என்று மார்ச் 27, 2020 பிஸினஸ் ஸ்டேண்டர்டு கட்டுரை தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட திட்டங்கள்

table,th,td{ font-size: 12px; font-family: arial; border-collapse: collapse; border: 1px solid black; } table{ width:320px; } th,td{ text-align:center; padding:2px; } th.center{ text-align:center; } tr:nth-child(odd) { background-color: #f9f9f9; } tr:nth-child(even) { background-color:#fff; } th { background-color: #1f77b4; color: #FFFFF0; font-weight: bold; }
Programmes Announced
Benefit Findings
Provident Fund Withdrawals No additional spending. EPFO rules already allow for withdrawal of up to 75% wages after factory-closure and up to 100% if unemployed for a month.
Provident Fund Payments Covers only 16% of PF account holders
MGNREGS Wage Increase Revised wage lower than average wage being paid by states.
Foodgrain benefits No implementation roadmap given the lockdown
Free cooking gas cylinders No implementation roadmap given the lockdown
District Mineral Foundation No additional spending. Funds to help miners and mining-affected communities being diverted.
Cash transfer to Women with Jan Dhan Accounts Rs 500 given to every woman but the amount is too low to run a household, experts say.
Cash transfer to farmers under the PM Kisan Nidhi No additional spending. Payments are only being advanced.
Assistance to construction workers State governments will utilise Rs 31,000 crore of the construction welfare fund to support 35 million construction sector workers. Includes only registered workers and not every worker is registered.
Cash transfer to the disabled Unclear if benefits are in addition to existing cash transfers
Cash transfer to widows Unclear if benefits are in addition to existing cash transfers

Based on an IndiaSpend analysis of data for different schemes.

இதேபோல், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சுரங்கப்பணிகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ, சுரங்க நிறுவனங்கள் மீதான வரியில் இருந்து கிடைக்கும் நிதியை, மாவட்ட கனிம அறக்கட்டளை, கோவிட்-19 நிவாரணத்திற்கு திருப்பி விடும். 

டி.எம்.எஃப்-ல் இருந்து, மருத்துவ பரிசோதனை மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளையும், நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு கூடுதலாக வழங்கும் என்று நிதி அமைச்சகத்தின் பொருளாதார தொகுப்பின் செய்திக்குறிப்பில்  கூறப்பட்டுள்ளது.

உணவு தானிய பலன்கள், சமையல் எரிவாயு ஏழைகளுக்கு உதவும்

உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (எஃப்எஸ்ஏ) கீழ் உள்ள 80 கோடி பேருக்கு,  தற்போதைய உரிமை கோரும் உணவின் அளவை இரட்டிப்பு ஆக்குவதாகவும், மூன்று மாதங்களுக்கு 1 கிலோ பருப்பு வகைகளை வழங்குவதாகவும் அரசு கூறி இருக்கிறது. "உணவு பாதுகாப்பை விரிவுபடுத்துதல் மற்றும் 5 கிலோ கூடுதல் அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு என்பது, பொருத்தமானது; இதை வழங்குவது நிச்சயமாக பாராட்டத்தக்கது மற்றும் உலகளவில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு உதவும் ஒரு நல்லதொரு நடவடிக்கையாகும்" என்று எக்ஸ்எல்ஆர்ஐ அமைப்பின் சுந்தர் கூறினார்.

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முன்னுரிமை குடும்பங்கள் (சொத்துக்களின் உரிமை அடிப்படையில்) ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்களை பெறுகின்றன; அதே நேரத்தில் அந்தோத்யா அன்ன யோஜனா உணவு தானிய திட்டத்திற்கு தகுதியான குடும்பங்கள், 35 கிலோ மானிய உணவு தானியங்கள் பெற தகுதியுடையவை.

இது வெற்றிகரமாக இருப்பதை உறுதிசெய்ய, நாம் மேலே குறிப்பிட்ட 635 ஆர்வலர்கள் குழு, ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாகவதை  தவிர்க்க, வீட்டு வாசலுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தது. அத்துடன், தானியங்களை பயன்படுத்துவதற்கான வழி இல்லாதவர்களுக்கு, இரண்டு சமைத்த உணவுகளை அரசு வழங்க வேண்டுமென்றும் அக்குழு பரிந்துரைத்தது. ஜார்கண்ட், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் தேவையானவர்களுக்கு சமைத்த உணவை வழங்கி வருவதாக ஏற்கனவே கூறியுள்ளன.

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு, மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதாக அரசு தற்போது கூறியுள்ளது, இத்திட்டம் 2016ல் தொடங்கப்பட்டதோடு வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களின் பெண்களுக்கு, அவர்களின் முதல் மாதத்திற்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டரை கொடுத்திருக்கிறது. இலவச எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதைப் பார்க்க வேண்டும்;  இத்திட்டத்தில் முன்பு சிலிண்டர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியால் (சி.ஏ.ஜி.) விமர்சனம் செய்யப்பட்டது. 

நூறு நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 20 அதிகரிப்பு

நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்) கீழ் ஒவ்வொரு தொழிலாளியின் தினசரி ஊதியம், ஏப்ரல் 1, 2020 முதல், ரூ.182 என்பது ரூ.202 என ரூ.20 அதிகரிக்கும் - இது, தோராயமாக 200 கிராம் பார்லி ஜி பிஸ்கட் ஒன்றின் விலை ஆகும். இது ஒரு வீட்டுக்கு கூடுதலாக ரூ.2,000 ஆகும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில் 12 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் செயல்பாட்டில் இருந்தனர்; அவர்கள், ஒரு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை செய்ய தகுதி உடையவர்கள் என்று என்.ஆர் இ.ஜி.ஏ. இணையதளம் தெரிவிக்கிறது.

ஒரு வீட்டுக்கு சராசரியாக ரூ. 2,000 கூடுதலாக கிடைக்கும் என்ற  நிதி அமைச்சரின் அறிவிப்பு “உண்மைகளை தவறாக சித்தரிப்பதாகும்”, என்று, பெங்களூரை சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜேந்திரன் நாராயணன், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். இந்த அறிவிப்பு "உண்மையான சராசரி ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டது, சட்டங்களின்படி என்னவாக இருக்கக்கூடாது" என்பதாகும். ஊதிய விகிதம் பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் திருத்தப்படுகிறது, மேலும் இந்த அதிகரிப்பு கூட எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் தொழிலாளர்களுக்கு மாநிலங்கள் உண்மையில் செலுத்தும் சராசரியை விட குறைவாக உள்ளது என்றும் அவர் கூறினார். 2020 மார்ச் 24 அன்று வெளியிடப்பட்ட 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களின் அடிப்படையில் சராசரி விகிதம் ரூ.238.5 ஆக இருந்தது. ஊரடங்கு நீடிக்கும் போது தொழிலாளர்களுக்கு எந்த ஊதியமும் கிடைக்காது; எனவே இந்த அதிகரிப்பு வேலை தொடங்கியவுடன் மட்டுமே தொழிலாளர்களுக்கு தாக்கத்தை தரும் என்றார்.

தேவைப்படும் அனைவருக்கும் அரசால் வேலை வழங்க முடியுமா என்பதும் தெளிவாக இல்லை. 2019-20 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், 4.7 மில்லியன் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றனர் என்று, புதுடெல்லியை சேர்ந்த சிந்தனைக்குழுவான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன், பிப்ரவரி 2020ன் அரசு  தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது. 

மேலும், இத்திட்டம் ஊதியம் வழங்குவதை  தொடர்ந்து தாமதப்படுத்தியுள்ளது. ஜனவரி 27, 2020 நிலவரப்படி, ரூ. 2,802.59 கோடி ஊதியத்தில் 91% அந்த மாதத்திற்கான ஊதியத்தில் நிலுவையாக உள்ளது என்று அரசு தரவுகளின் அடிப்படையில் 2020 ஜனவரியில், தி இந்து பிசினஸ்லைன் செய்தி தெரிவித்துள்ளது. 2019 டிசம்பரில் சுமார் 54%, 2019 நவம்பரில் 32% மற்றும் 2019 அக்டோபரில் 29% பணம் நிலுவையில் இருந்ததாக, அறிக்கை தெரிவித்துள்ளது.

பெண்கள், மூத்த குடிமக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள்

ஜூலை மாதம் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 145 மில்லியன் விவசாயிகள் நிலுவையில் இருந்த ரூ.2,000 தொகை, ஏப்ரல் மாத தொடக்கத்தில் வழங்கப்படும் - ஆனால் இது சுமார் 87 மில்லியன் பேருக்கு மட்டுமே கிடைக்கும் என்று அரசு கூறியது. சுமார் 98 மில்லியன் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 11 மில்லியன் விவசாயிகள் ஏன் பயனாளிகள் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 2019ல் தொடங்கிய இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வருவாய் ஆதரவைப் பெறுகின்றனர்.

ஆஷா உள்ளிட்ட சுகாதாரப்பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது; ஏனெனில், அவர்கள் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் தான்.

ஜன்தன் யோஜனா திட்டத்தில் கீழ், வங்கி கணக்கு உள்ள சுமார் 20 கோடி பெண்களுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ. 500 பொருளாதார உதவியாக வழங்கப்படும். 

அத்துடன், மாற்றுத்திறனாளி மற்றும் விதவை பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 40 வயதிற்கு மேற்பட்ட விதவைகளுக்கு அரசு ஏற்கனவே மாதத்திற்கு ரூ. 300 மற்றும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 500 வழங்குகிறது. அந்தத் தொகையுடன் கூடுதலாக தற்போது அறிவிக்கப்பட்ட ரூ.1,000 வழங்கப்படுமா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

(ஜேக்கப் மற்றும் கக்வானி பயிற்சியாளர்கள்; கைதன், இந்தியா ஸ்பெண்டில் ஒரு எழுத்தாளர் / ஆசிரியர் ஆவார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News