சிறு நிறுவனங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர் நலன் எவ்வாறு தொடர்ந்து கவனிக்கப்படாமல் உள்ளது

நடுத்தர மற்றும் சிறு தொழில்களில் இந்தியாவின் 111 மில்லியன் முறைசாரா தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான அரசின் முயற்சிகள் சரிந்துள்ளன;

Update: 2021-12-14 00:30 GMT

மும்பை: நாட்டின் நடுத்தர மற்றும் சிறு தொழில்களில் (எம்எஸ்எம்இ - MSMEs) பணிபுரியும், மேலும் கோவிட் -19 தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழுவினரான, முறைசாரா, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை கொஞ்சம் மட்டுமே மாறியுள்ளது என்று, தொற்றுநோய்களின் போது சிறு நிறுவனங்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கான அரசாங்க உதவிகள் பற்றிய, இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு தெரிவித்தது.

முறைசாரா தொழிலாளர்களைப் பதிவு செய்யும் அரசாங்கத்தின் முயற்சி, அவர்கள் சலுகைகளை எளிதாகப் பெறுவதற்கு, ஓரளவு மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, அதே சமயம் அவர்கள் வரும் மாநிலத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான திட்டங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு உதவவில்லை என்று, எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது. கூடுதலாக, நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் துறைக்கான நிவாரணத் தொகுப்புக்கான அளவுகோல்களில் 90% க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் விலக்கப்பட்டுள்ளன, மேலும் வேலைக்குத் திரும்பும் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவ, நகர்ப்புறங்களில் சில திட்டங்கள் இருந்தன.

நடுத்தர மற்றும் சிறு தொழில்கள், சுமார் 111 மில்லியன் தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்றன, அவர்களில் பெரும்பாலோர் முறைசாரா மற்றும் அவர்களில் பலர் புலம்பெயர்ந்தவர்கள். மார்ச் 2020 இன் பிற்பகுதியில், நாடு தழுவிய கோவிட் -19 ஊரடங்கு விதிக்கப்பட்டதன் மூலம், நகர்ப்புற இந்தியாவில் வேலைவாய்ப்பு மையங்கள் திடீரென மூடப்பட்டதால், பெரும்பாலும் முறைசாரா பணியாளர்கள் ஒரே இரவில் வேலையை இழந்தனர், இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு பெருமளவில் வெளியேறத் தூண்டப்பட்டனர். சுமார் 40 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பினர் என்று, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செப்டம்பர் 2020 அறிக்கையில் மதிப்பிட்டுள்ளது.

தலைகீழ் இடம்பெயர்வு, நகர்ப்புறங்களில் தொழிலாளர் விநியோகத்தை சீர்குலைத்தது, நடுத்தர மற்றும் சிறு தொழில்களின் உற்பத்தித்திறனை பாதிக்கிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஜூன் 2021 இன், எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லியின் அறிக்கையின்படி, ஊரடங்கின் போது இரண்டு மாதங்களில், மே 2020ல் இந்தத் துறையின் உற்பத்தி சராசரியாக 75% திறனில் இருந்து வெறும் 13% ஆகக் குறைந்தது.

நடுத்தர மற்றும் சிறு தொழிகளில் கோவிட்-19 இன் தாக்கம்

நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் துறையானது மொத்த மதிப்பில் 30% பங்களிக்கிறது (ஒரு துறையின் உற்பத்தியின் தயாரிப்பு அளவு). இந்தியாவின் 63 மில்லியன் நடுத்தர மற்றும் சிறு தொழில்களில் வெறும் 13% மட்டுமே ஆகஸ்ட் 2021க்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதனால் இத்துறையில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர், அவர்களுக்கு முறையான துறை நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு, வேலை அல்லது சமூக பாதுகாப்பு இல்லை.

அனைத்து கிராமப்புற பெண் தொழிலாளர்களில் 73% மற்றும் கட்டுமானத் துறையில் 67% நகர்ப்புற பெண் தொழிலாளர்களும், 59% கிராமப்புற மற்றும் 51% நகர்ப்புற பெண் தொழிலாளர்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய நம்பகமான மதிப்பீடுகள் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கூறியது.

நடுத்தர மற்றும் சிறு தொழில்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன, ஏனெனில் தொற்றுநோய்களின் பரவல் ஆரம்பத்தில் நடுத்தர மற்றும் சிறு தொழில்களின் பெரும்பகுதியைக் கொண்ட மாநிலங்களில் இருந்தது, ரிசர்வ் வங்கி கூறியது. தொழிலாளர் மற்றும் பொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு தவிர, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் தேவை சரிவினால் நடுத்தர மற்றும் சிறு தொழில்களும் அதிர்ச்சியை சந்தித்தன.

ஜூன் 2020க்குள், 35% நடுத்தர மற்றும் சிறு தொழில்கள்க்களும், 37% சுயதொழில் செய்பவர்களும் செயல்பாடுகளை நிறுத்தத் தொடங்கினர் என்று, பிசினஸ் ஸ்டாண்டர்ட், அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் ஆய்வின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. சராசரியாக, நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் தங்கள் பணியாளர்களில் 44% மட்டுமே தக்கவைத்துக் கொண்டன, மேலும் 69% பேர் மூன்று மாதங்களுக்கு மேல் உயிர்வாழ இயலாமை இருப்பதாக அறிக்கை ஜூன் 2020 இல் வெளியிடப்பட்டது.

இரண்டாவது கோவிட்-19 அலையானது, நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் துறைக்கு மற்றொரு அதிர்ச்சியாக இருந்தது, இது முதல் அலைக்குப்பின் இப்போதுதான் எடுக்கத் தொடங்கியது. நகர்ப்புற வேலைவாய்ப்பு மையங்களுக்குத் திரும்பத் தொடங்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலையில்லாமல் இருப்பதைக் கண்டறிந்தனர் என்று, ஜூன் 2021 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

நடுத்தர, சிறு தொழில்களுக்கு உதவும் அரசு திட்டங்கள்

மே 2020 இல், மத்திய அரசு ஆத்ம நிர்பார் பாரத் அபியான் (ஏபிஏ) கீழ் பல நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தது, இதில் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் துறைக்கான உதவிகளும் அடங்கும்.

செயல்பாட்டு மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் 4.5 மில்லியன் யூனிட்களுக்கு (ஒட்டுமொத்த நடுத்தர மற்றும் சிறு தொழில்களில் 7%) உதவுவதற்காக, ரூ. 3 லட்சம் கோடி பிணையில்லா கடன்களை வழங்குவதாக அரசு கூறியது. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளைக்கு, அரசு ரூ. 4000 கோடி கூடுதல் உதவியை வழங்கியது, இது நெருக்கடிக்குள்ளான நடுத்தர மற்றும் சிறு தொழில்களுக்கு, கடன் வழங்க வங்கிகளை ஊக்குவிக்கிறது.

இருப்பினும், ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் கொண்ட கடன் வாங்குபவர்கள் மட்டுமே இந்தத் திட்டங்களுக்குத் தகுதியுடையவர்கள். நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் அமைச்சகத்தின் தரவுகளின்படி, 99% நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் ஆண்டு வருமானம் ரூ. 5 கோடிக்கும் குறைவான குறு தொழில்களாகும். அதாவது 1% நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் நிறுவனங்கள் மட்டுமே, ஆத்ம நிர்பார் பாரத் அபியான் நிவாரண தொகுப்புக்கு தகுதி பெற்றுள்ளன.

Full View


Full View

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் நிவாரணத் தொகுப்பினை பெற தகுதி பெறாத 99% நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு, என்ன உதவி வழங்கப்பட்டுள்ளது என்று கேட்க, மத்திய அரசின் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் அமைச்சகத்தை அணுகினோம். அவர்கள் பதில் அளிக்கும்போது, இக்கட்டுரையைப் புதுப்பிப்போம்.

உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள், நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் துறைக்கு கடன்கள் மற்றும் மானியங்களை வழங்குவதற்காக, மே 2020 இல், முதலமைச்சரின் ஸ்வரோஸ்கர் யோஜனா (MSY) என்ற திட்டத்தை தொடங்கின, இதில் சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு, வேலைவாய்ப்புக்கென, உற்பத்தித் துறைக்கு ரூ. 25 லட்சமும், சேவைத் துறையில் சுய உதவிக்காக ரூ.10 லட்சமும் அடங்கும். எவ்வாறாயினும், குடியிருக்க வேண்டும் என்பது திட்டத்தின் பலனை பெறுவதற்கான முக்கிய அளவுகோல்களில் ஒன்றாகும், இது மீண்டும் திரும்பி வருபவர்களைத் தடுக்கிறது.

பல்வேறு மாநில அரசுகளும், தொழிலாளர் சட்டங்களைத் திருத்தியுள்ளன, அவற்றில் சில நடுத்தர மற்றும் சிறு தொழில் துறைக்கான கட்டுப்பாடுகளை எளிதாக்கவும் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உதாரணமாக, குஜராத் அரசு, தனது அதிகபட்ச வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 12 மணிநேரமாக உயர்த்தியது மற்றும் மாநிலத்தில் புதிய அலகுகளை அமைக்கும் நிறுவனங்கள் 1,200 நாட்களுக்கு, தொழிலாளர் சட்டங்களில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.

ஆனால், இவற்றால் மட்டும் நடுத்தர மற்றும் சிறு தொழில்களின் உற்பத்தித் திறனில், தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்க முடியவில்லை, இதனால் அவற்றின் தேவை குறைதல் மற்றும் பெரிய நிலுவையில் உள்ள நிலுவைத் தொகைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவர்களின் உழைப்பை உறிஞ்சும் திறன் உள்ளது என்று, தமிழ்நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் வளர்ச்சிக்கு, உள்கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் இந்தத் துறையில் முதலீடு போன்ற பிற இடையூறுகள் உள்ளன என்று, நிபுணர்கள் ஜனவரி 2021 இல் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

புலம்பெயர்ந்தோருக்கு அரசு உதவி

வாழ்வாதார நெருக்கடியைத் தணிக்க, புலம்பெயர்ந்தோர் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, இந்த தொழிலாளர்களை அவர்களின் மூல மாநிலங்களில் உள்வாங்குவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. உதாரணமாக, செப்டம்பர் 2020 இல், அரசு கிராம உத்யோக் விகாஸ் யோஜனாவை (நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் கிராமத் தொழில்களை மேம்படுத்தும் திட்டம்) அகர்பத்தி தயாரித்தல், தேனீ வளர்ப்பு மற்றும் மண்பாண்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியது, ஆனால் ஒரு சோதனை அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட்டது.

ஆகஸ்ட் 26, 2021 அன்று, அமைப்புசாராத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான ஒரு படியாக, இ-ஷ்ராம் ( e-SHRAM) என்ற இணையதள வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. நவம்பர் 20 ஆம் தேதிக்குள், இ-ஷ்ராம் தகவல் பலகையின்படி, 84 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் (22% பணியாளர்கள்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதிலும் தடைகள் உள்ளன. நவம்பர் 2021 இல் இந்தியா ஸ்பெண்டிடம் தொழிலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கூறுகையில், ஆதார் அட்டையின் கட்டாயப் பயன்பாடு, மெதுவான சர்வர் வேகம், திட்டம் குறித்த போதுமான தகவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகள் ஆகியவை, இதற்கான பதிவுகளை மெதுவாக்குகிறது என்றனர்.

"இ-ஷ்ராம் போர்ட்டலில் தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான செயல்முறை மிகவும் சவாலானது, சிக்கலானது. மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட நலவாரியச் சலுகைகள் எவ்வாறு வழங்கப்படும் என்பது இன்னும் ஒரு கேள்வியாகவே உள்ளது" என்று ஆஜீவிகா பணியகத்தின் இடம்பெயர்வு மற்றும் தொழிலாளர், தீர்வுகள் மையத்தின் ஆராய்ச்சியாளர் பக்தி வர்தம் இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

கூடுதலாக, குறு நிறுவனங்களில் பணிபுரியும், குறிப்பாக உற்பத்தித் துறையில் பணிபுரியும், மற்றும் பெரும்பாலும் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கும் குறு சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள், மானியக் கடன்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதில்லை. கடன்களைப் பெறுவதற்கு, ஒழுங்காக எழுதப்பட்ட ஆர்டர்கள், விற்பனையாளர்களிடம் இருந்து முன்கூட்டியே பணிக்கான ஆர்டர்கள் போன்ற ஒரு நிறுவனத்தின் சுயவிவரத்தை உருவாக்கத் தேவையான விவரங்கள் அவர்களிடம் இல்லை.

நகர்ப்புற நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் புறக்கணிக்கப்பட்டன

அனைத்து இந்திய நடுத்தர மற்றும் சிறு தொழில்களில் கிட்டத்தட்ட 49% நகர்ப்புறங்களில் உள்ளன மற்றும் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் பணியாளர்களில் 55% வேலை செய்கின்றனர் என்று, தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 2015-16 தரவு தெரிவிக்கிறது.

Full View


Full View


Full View
Full View

நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் அமைச்சகத்தின் 2020-2021 ஆண்டு அறிக்கையின்படி, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் (KVIC) செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் போன்ற சில அரசுத் திட்டங்கள், கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இளைஞர்களை "அழைத்துவர" முயற்சி செய்கின்றன.

பெரும்பான்மையான புலம்பெயர்ந்தோர், நகர்ப்புற சுற்றளவில் உள்ளனர், அங்கு முக்கியமான அரசு சேவைகளுக்கான அணுகல் குறைவாக உள்ளது. இருப்பினும், இந்திய மிக்ரேஷன் நவ் அமைப்பு நடத்திய பகுப்பாய்வின்படி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அல்லது திரும்பி வரும் புலம்பெயர்ந்தோருக்கு, நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் துறை மூலம் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கு இலக்கினை நோக்கிய திட்டங்கள், மாநிலங்களில் மிகக் குறைவானவே இருந்தன.

அதற்குப் பதிலாக, கிராம உத்யோக் விகாஸ் யோஜனா போன்ற திட்டங்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதார உத்திகளில் ஒன்றாக இடம்பெயர்ந்தாலும், திரும்பி வரும் மக்களை உள்வாங்கவும், மக்கள் மீண்டும் இடம்பெயர்வதை ஊக்கப்படுத்தவும் முயற்சி செய்கின்றன.

தொற்றுநோயால் வேலை இழந்த பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க, சுயதொழில் செய்தனர். ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க ரூ.10,000 வரை மலிவு விலையில் செயல்படும் மூலதனக் கடன்களை வழங்குவதற்காக, பிரதமர் ஸ்வாநிதி திட்டம் ஜூன் 1, 2020 அன்று தொடங்கப்பட்டது. ஆனால் பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தில் இருந்து 11% மட்டுமே பயனடைந்ததாக இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 2021 இல் தெரிவித்துள்ளது.

மேலும், முக்கியநடுத்தர மற்றும் சிறு தொழில்கள் கிளஸ்டர்களைக் கொண்ட சில மாநிலங்களுக்குள், புலம்பெயர்ந்தோரின் வேலை நிலைமைகள் மோசமடைந்துள்ளதாக, இந்தியா ஸ்பெண்ட், நவம்பர் 2020 இல் தெரிவித்துள்ளது. நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உதவ சில திட்டங்கள் உள்ளன, ஆனால் இ-ஷ்ரம் (e-Shram) மூலம் சமூக பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பிற்குள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சேர்க்க, குறிப்பிடத்தக்க கட்டமைப்பு வளர்ச்சிகள் எதுவும் இல்லை.

நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகங்களை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம், அவர்கள் பதிலளிக்கும் போது இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

மக்கள் மாநிலங்களை மாற்றும் போதும், உணவு தானியங்களுக்கான பொது விநியோக முறை போன்ற அரசு திட்டங்களில் இருந்து பலன்களை எடுத்துச் செல்வதை அரசு உறுதி செய்துள்ளது. உதாரணமாக, இந்தியா முழுவதும் பொது விநியோக முறைக்கான அணுகல், மக்கள் சொந்தமாக ரேஷன் கார்டுகள் மற்றும் கடைகளில் நபரின் அடையாளத்தை சரிபார்க்க தொழில்நுட்பத்தை அணுகலாம் என்று கருதுகிறது என்று, நிபுணர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் கூறியுள்ளனர்.

மார்ச் 2020ல் நாடு தழுவிய கோவிட்-19 ஊரடங்கிற்கு பிறகு பெரும்பாலான மாநிலங்களில், பொது விநியோக முறையின் (PDS) கீழ் 100% பயனாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும், ஏப்ரல் 2019 மற்றும் நவம்பர் 2020 க்கு இடையில் 189 மில்லியன் பரிவர்த்தனைகளில் 22,087 மட்டுமே மாநிலங்களுக்கு இடையேயானவை என்று, பரிவர்த்தனைகள், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவித்தது. ஏனெனில், பிற பல காரணங்களால், பல மாநில அரசுகள் பயனாளிகளின் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை ரேஷன் கடையில் விற்பனை செய்யும் இடத்தில் இன்னும் செயல்படுத்தவில்லை.

குறைந்த நடுத்தர, சிறு தொழில்கள் பதிவு மற்றும் நிவாரண திட்டங்களுக்கான அணுகல்

நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் அமைச்சகத்தின் உத்யம் (Udyam) இணையதள சேவை, ஜூலை 2020 இல் தொடங்கப்பட்டது, டிசம்பர் 8, 2021 க்குள் 5.91 மில்லியன் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் (அல்லது அனைத்து நடுத்தர மற்றும் சிறு தொழில்களில் 9%) பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில், குறு நிறுவனங்கள் 5.59 மில்லியன் (94.6%) ஆகவும், சிறு நிறுவனங்கள் 298,621 (5%) ஆகவும், நடுத்தர நிறுவனங்கள் 33,243 ஆகவும் (0.5%) உள்ளன.

ஆனால் இந்த இணையதளத்தில் ஒரு நிறுவனத்தை பதிவு செய்வது, முறையான துறையில் உள்ள ஒருங்கிணைந்த நிறுவனத்தைப் போல, அதை ஒரு தனி சட்ட நிறுவனமாக மாற்றாது. அரசின் கொள்முதலில் பங்கேற்கும் திறன் மற்றும் கடன் அணுகல் போன்ற பலன்களைப் பெற, பதிவு நிறுவனங்களுக்கு உரிமை உண்டு என்று அரசு கூறியிருந்தாலும், இந்த இணையதளம் இணக்கம் மற்றும் தரவு சேகரிப்புப் பயிற்சியாக விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்யம் ( Udyam) இணையதளத்தில், நடுத்தர மற்றும் சிறு தொழில்களின் பதிவு, முறைசாரா புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று, நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் அரசின் திட்டங்களை அணுகுவதற்கான தொழில்நுட்ப நிறுவனமான, ஹக்தர்ஷக் சொல்யூஷன்ஸின் உதவித் துணைத் தலைவர் சுவாதி முரளி கூறினார். ஆனால் முறைப்படுத்தப்பட்ட வணிகங்கள் தங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பதிவு செய்யும் யோசனைக்கு மிகவும் இடமளிக்கக்கூடும், குறிப்பாக உத்யம் போன்றவற்றை முறைப்படுத்துதலின் மூலம்ம் அவர்கள் பயனடைய முடிந்தால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பதிவு செய்ய நிறுவனங்களுக்கு இது ஒரு மென்மையான தூண்டுதலாகச் செயல்படும் என்று முரளி கூறினார்.

உத்யம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் அலகுகள், முறையான பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறதா என்று கேட்க, இந்தியா ஸ்பெண்ட், நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் அமைச்சகத்தை அணுகியது. மற்றும் உத்யம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட நடுத்தர மற்றும் சிறு தொழில்களில் உள்ள அனைத்து தொழிலாளர்களும், தொழிலாளர் சட்டங்களால் பாதுகாக்கப்படுவார்களா மற்றும் பலன்களுக்கு உரிமையுடையவர்களா என்றும் கேட்டுள்ளோம். பதில் கிடைக்கப் பெற்றால், இக்கட்டுரையைப் புதுப்பிப்போம்.

(இக்கட்டுரைக்கு, ஸ்ரீஹரி பலியத் பங்களிப்பு செய்துள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News