தீவிர ஆய்வின்றி நிலக்கரி சாம்பலை 'பயன்படுத்தும்' சமீபத்திய வழிமுறை பயனற்றது என நிரூபணமாகலாம்

மாசுபடுத்தும் தொழிற்சாலைகளால் மோசமாக நிர்வகிக்கப்பட்ட ஆபத்தான சாம்பலை அகற்றுவது என்ற நாள்பட்ட பிரச்சினைகளுக்கு, சமீபத்திய அறிவிப்பில் தீர்வு இல்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்;

Update: 2021-08-24 00:30 GMT

மும்பை: எரித்த சாம்பலை -நிலக்கரியை எரிப்பதால் எஞ்சியிருக்கும் நச்சு கழிவு- பாதுகாப்பாக, நிரந்தரமாக அகற்றுவதற்கான சமீபத்திய அரசு முயற்சி, இந்தியாவின் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் பிளவுபடக்கூடிய வாழ்விடங்களை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கூறுகின்றனர். பறக்கும் சாம்பல் காற்று மற்றும் நீர் மாசுபாட்டை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.

நிலக்கரி மற்றும் லிக்னைட் அடிப்படையிலான அனல் மின் நிலையங்கள் "சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில், உருவாக்கப்பட்ட சாம்பலை 100% பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்"என்று, ஏப்ரல் 22, 2021 சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) அறிக்கை தெரிவித்தது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்திய அரசாங்கம் பறக்கும் சாம்பலை அகற்றுவது மற்றும் பயன்படுத்துவது குறித்து இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன் பரிந்துரைகள் வேறுபட்டவை: கட்டிடப் பொருட்களைத் தயாரிக்கவும் கட்டுமானப் பணிகளிலும் இதைப் பயன்படுத்தலாம்; விவசாய நிலங்களில் மண் செறிவூட்டியாக பயன்படுத்தலாம், தாழ்வான பகுதிகள் மற்றும் வெற்று சுரங்கங்களை மீட்டெடுக்க பயன்படுத்தலாம் என்று இருந்தது. இருப்பினும், 50% க்கும் அதிகமான தொழிற்சாலைகள், இதற்கு உடன்படவில்லை; பெரும்பாலானவை, சாம்பலை திறந்தவெளியிலும், நீர்நிலைகளிலும் மற்றும் திறந்த வெளியிலும் மற்றும் மூடப்படாத குழிகளிலும் கொட்டுகின்றன.

ஆகஸ்ட் 2019 மற்றும் மே 2021 க்கு இடையில் இந்தியாவில் நிலக்கரி சாம்பல் சம்பந்தப்பட்ட எட்டு முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளதாக, இந்தியா முழுவதும் உள்ள ஆர்வலர் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டான, ஃப்ளை ஆஷ் வாட்ச் குழுவின் (Fly Ash Watch Group) நிலை அறிக்கை தெரிவித்தது. மத்தியப் பிரதேசத்தில் சிங்க்ரவுலி மாவட்டம் சிங்கரவுலி பகுதி மற்றும் உத்தரபிரதேசத்தில் சோன்பத்ரா மாவட்டம் முழுவதும் பரவியி இருக்கிறது.

கடந்த 2019-20ல், இந்தியாவில் 197 அனல் மின் நிலையங்கள், 226 மில்லியன் டன் அளவுக்கு, பறக்கும் சாம்பலை உருவாக்கின. அதில் 1.6 பில்லியன் டன்கள், 2019 நிலவரப்படி, 65,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிதறிக்கிடக்கின்றன.

பறக்கும் சாம்பல் வழிந்தோடும் அல்லது சாம்பல் குளங்களின் கரையை உடைக்கும் போது விபத்துகள் பெரும்பாலும் நிகழ்கின்றன. ஒரு சாம்பல் குளம் சுற்றிலும் அணை மற்றும் உள் மற்றும் வெளிப்புற வடிகால் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் கசிவுக்காக இது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பறக்கும் சாம்பலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பயன்பாடாக "தாழ்வான பகுதியை நிரப்புவதற்கு" என்பதை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். "தாழ்வான பகுதி" என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை," என்று, உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், வன மற்றும் சுற்றுச்சூழலுக்கான சட்ட முன்முயற்சியின் (LIFE) நிறுவன உறுப்பினருமான ராகுல் சவுத்ரி கூறினார். நதிக்கரை நீளங்கள் மற்றும் ஈரநிலங்கள் கூட தாழ்வானதாக கருதப்படலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தவறிழைக்கும் ஆலைக்கு எதிராக சிறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஏன் என்பதை நாங்கள் பின்னர் விவரிக்கிறோம். பறக்கும் சாம்பளை தவறாக கையாளும் மேலாண்மை குறித்து கருத்து அறிய, நாங்கள் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை தொடர்பு கொண்டோம். அவர்களிடம் இருந்து பதில் கிடைத்தால், இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவில் மிகவும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளில் ஒன்றாகும், இது அதன் மோசமான காற்று மாசுபாடு நிலைகளுக்கு கணிசமான பொறுப்பு என்பதை, ஆய்வுகள் காட்டுகின்றன. நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்கள் அனுமதிக்கப்பட்டதை விட அதிக நீரைப் பயன்படுத்துகின்றன என்று, இந்தியாஸ்பெண்ட் செப்டம்பர் 2019 கட்டுரை தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக நீர்த்துப் போகும் விதிகள்

கடந்த தசாப்தத்தில், 76 க்கும் மேற்பட்ட பறக்கும் சாம்பல் தொடர்பான விபத்துகள் நடந்துள்ளதாக, முக்கிய ஆங்கில ஊடகங்களில் செய்திகள் பதிவாகி உள்ளன, இது மக்களைக் கொன்றது மற்றும் நீர் ஆதாரங்கள், காற்று மற்றும் மண்ணை பெருமளவில் மாசுபடுத்தியது என்று, Healthy Energy Initiative and Community Environmental Monitoring என்ற சுகாதாரமான ஆற்றலுக்கான ஆலோசக அமைப்பின் 2020 ஆய்வு தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகியன, அதிக நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களைக் கொண்டுள்ளன மற்றும் அதிக பறக்கும் சாம்பல் விபத்துக்களை பதிவு செய்துள்ளன.

பறக்கும் சாம்பல் கசிவை சரிசெய்வது கடினம் மற்றும் மாசுபடுத்துபவர்களோ அல்லது அதிகாரிகளோ, அவற்றை அப்புறப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். "தண்ணீர் மாசுபட்டவுடன் [தூய்மைக்கேடு] அகற்றப்படாது, ஆனால் சாம்பல் கசிவு காணக்கூடிய இடங்களை கூட ஆலை அதிகாரிகள் சுத்தம் செய்வதில்லை" என்று, ஃப்ளை ஆஷ் வாட்ச் அறிக்கையின் இணை ஆசிரியரும், மந்தன் அத்யயன் கேந்திரா என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளருமான ஸ்ரீபாத் தர்மாதிகாரி கூறினார். "எட்டு முக்கிய சம்பவங்கள் [ஆகஸ்ட் 2019 - மே 2021] வழக்கமாக நடக்கும் சாம்பல் கசிவை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை" என்றார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு முதல், இந்த பிரச்சனையை சமாளிக்க அரசு முயற்சித்து வருகிறது.

இந்த விஷயத்தில், முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, 1999ஆம் ஆண்டில் வந்தது மற்றும் அது சிலை, கான்கிரீட் தொகுதிகள் மற்றும் செங்கற்களை தயாரிப்பதற்கும், அனல் மின் நிலையங்களின் 100 கிமீ சுற்றளவுக்குள் சாலைகள் மற்றும் தடுப்பணைகளை உருவாக்குவதற்கும் சில முறைகளை கோடிட்டுக் காட்டியது. .

இருப்பினும், அடுத்தடுத்த அறிவிப்புகள் (2003, 2009, 2014, 2016, 2019, 2020 மற்றும் சமீபத்திய, 2021 இல்) மாசுபாட்டாளர்களால் சாம்பல் பயன்பாட்டிற்கான வரையறை மற்றும் காலக்கெடுவை நீர்த்துப்போகச் செய்தது. தாழ்வான பகுதிகளை மீட்கவும், சாம்பலைப் பயன்படுத்தி கைவிடப்பட்ட சுரங்கங்களை அனுமதிக்கவும், மாசுபடுத்துபவர்களுக்கான காலக்கெடுவை நீட்டிக்கவும், பறக்கும் சாம்பலை எடுத்துச் செல்லக்கூடிய தூரத்தை அதிகரிக்கவும் மற்றும் நிலக்கரியில் உள்ள சாம்பல் உள்ளடக்கத்தை அகற்றவும் அவர்கள் அனுமதித்தனர்.

Full View


Full View

கடந்த 2019-20 இல், மின் துறை 678 மில்லியன் டன் நிலக்கரியை பயன்படுத்தியது மற்றும் 226 மில்லியன் டன் சாம்பலை உருவாக்கியது. இதில், 187 மில்லியன் டன் (82%) மட்டுமே பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள கழிவுகள் குவிந்து, சுற்றுச்சூழலை சேதப்படுத்தும்.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், 2010 மற்றும் 2019 க்கு இடையில் சாம்பல் உருவாக்கம் மற்றும் பயன்பாடு குறித்த மாநில வாரியான தரவை பகுப்பாய்வு செய்தது மற்றும் இந்த காலகட்டத்தில் சத்தீஸ்கர் மற்றும் உத்தரபிரதேசம் அதிக சாம்பலைக் குவித்திருப்பதைக் கண்டறிந்தது. மேலும் மத்திய பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் பெரிய அளவில் சாம்பல் தேக்கப்பட்டுள்ளது. இந்த மாசுபாட்டைக் குறைக்க, அவசர நடவடிக்கைகள் தேவை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

வரைவு அறிவிப்பில், மந்தன் அத்யாயன் கேந்திரா (Manthan Adhyayan Kendra), "சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு குறித்து போதுமான கவனம் இல்லாமல் பறக்கும் சாம்பலை முழுமையாக அகற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பதாக தோன்றுகிறது" என்று கருத்து தெரிவித்தது. "இணங்காததால் ஏற்பட்ட சாம்பல் பள்ளங்கள் மற்றும் குளங்களின் விதிமீறல்கள் மற்றும் அதற்கான தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்வைத்தல்" என்பதை கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை, கொள்கை ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டது. சட்ட சிக்கல்களைத் தவிர, "பல ஆண்டுகளாக விவசாய நிலங்கள், பொதுவான பயன்பாட்டுப் பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் காற்று போன்ற மாசுபடுதல் போன்ற கடுமையான பாதிப்புகளை" அது சுட்டிக்காட்டியது.

அவ்வப்போது பேரிடர்கள், எனினும் நடவடிக்கை இல்லை

"அறிவிப்பு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் கூட, கடந்த இரண்டு தசாப்தங்களில், பறக்கும் சாம்பல் பிரச்சனை அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த அறிவிப்புகளானது, மீறல்களை அனுமதிக்கின்றன, இது சாம்பல் மீறல் விபத்துகளுக்கு வழிவகுத்தது மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி தெரியாமல் உள்ளனர்," என்று, சுற்றுச்சூழல் நீதி ஆர்வலரும், இந்தியாவில் தீங்கிழைக்காத ஆரோக்கியத்திற்கான பிரச்சாரகருமான சுவேதா நாராயண் கூறினார்.

ஜூன் 2021 இல், சத்தீஸ்கரின் கோர்பா அனல் மின் நிலையத்தில், பறக்கும் சாம்பல் மீறல் விபத்து ஒன்று பதிவானதாக, உள்ளூர் ஆர்வலரும் வழக்கறிஞருமான சவிதா ரத் கூறினார். "ஜிண்டாலின் ராய்கர் மின் நிலையம், கோர்பா வெஸ்ட் ஆலை மற்றும் டிபி மின் நிலையம் ஆகிய மூன்று ஆலைகள் மட்டுமே சாம்பலை அகற்றுவதற்கு குழிகளை கொண்டுள்ளன. சத்தீஸ்கரில் உள்ள பல ஆலைகளுக்கு எந்தவித அமைப்பும் இல்லை. மேலும், இந்த குளங்களில் கூட, சாம்பல் சிறிய மலைகளாக குவிந்துள்ளது. குளங்களில் ஒருவர் எவ்வளவு குவிக்க முடியும் என்பதற்கு வரம்பு இல்லையா?" என்றார்.

முன்னதாக, ஏப்ரல் 2020 இல், மத்தியப் பிரதேசத்தின் சிங்ரவுலி மாவட்டத்தில் உள்ள ரிலையன்ஸ் தெர்மல் ஆலையின் சாம்பல் குழியின் சுவர், குறைந்தது இரண்டு உயிர்களைக் கொன்றது, விவசாய நிலத்தை அழித்தது மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. சிங்ரவுலி பகுதியில் 10 அனல் மின் நிலையங்கள் உள்ளன. அருகிலுள்ள ரிஹாண்ட் நீர்த்தேக்கத்தில் இருந்து நிலக்கரி மற்றும் தண்ணீர் வசதி எளிதில் கிடைப்பதால், இப்பகுதி தொழிற்சாலைகளுக்கான விரும்பான ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், எட்டு பெரிய சாம்பல் குழி உடைப்பு சம்பவங்களில் நான்கு இப்பகுதியில் நடந்தன.

Full View


Full View

"[சாம்பல் குளம்] சுவர் இடிவதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, உள்ளூர் கிராமவாசிகள் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் மற்றும் குளத்தின் சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்று எச்சரித்தனர்" என்று, ரிலையன்ஸ் ஆலை விபத்து குறித்து, உள்ளூர் ஆர்வலர் சந்தீப் சாஹு கூறினார். "இது நீண்டகால அலட்சியத்தின் விளைவாகும்"என்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாம்பல் பள்ளத்தின் ஆபத்தான தன்மை குறித்து ஆலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, நியூஸ்க்ளிக் செய்தி கூறுகிறது.

கண்டிப்புகளால் உண்மையான அலகுகளுக்கு தடையில்லை

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான அஷ்வனி குமார் துபே, ரிஹாண்ட் நீர்த்தேக்கத்தில் பறக்கும் சாம்பலை அகற்றுவது தொடர்பாக, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) பல மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இப்பகுதியில் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் நீர்த்தேக்கத்தின் கரையில் அமைந்துள்ளன என்று, இந்தியாஸ்பெண்டிடம் அவர் கூறினார். "சிங்கரவுலி மற்றும் சோன்பத்ரா மாவட்ட மக்களுக்கு, இந்த நீர்த்தேக்கம் மட்டுமே குடிநீர் ஆதாரமாக உள்ளது; மேலும் முழு நீர்நிலைகளும் மாசுபட்டுள்ளன, இது நுகர்வுக்கு தகுதியற்றது" என்று துபே கூறினார். பல சந்தர்ப்பங்களில், தேசிய பசுமைத்தீர்பாயம், ஆலை அதிகாரிகளை கண்டித்துள்ளது, ஆனால் அது ஆலை செயல்பாட்டுக்கு ஒரு தடையாக இருந்ததாக தெரியவில்லை.

வட சென்னை அனல் மின் நிலையம் ஒரு உதாரணம். சாம்பல் குழம்பு கசிவு தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. சாம்பல் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால் ஆலை மொத்தமாக மூடப்படும் என்று, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2017ம் ஆண்டில் எச்சரித்தது. ஜனவரி 2020 இல், தீர்ப்பாயம் 8.34 கோடி ரூபாய் அபராதம் கூட விதித்தது. இருந்தபோதிலும், மாசுபாடு தொடர்கிறது.

பறக்கும் சாம்பலானது, போக்குவரத்துக்கும் ஆபத்தானது. பங்களாதேஷுக்கு அதிக அளவில் பறக்கும் சாம்பலை, இந்தியா ஏற்றுமதி செய்கிறது, அங்கு அது சிமென்ட் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் இது சுந்தரவனக்காடுகள் வழியாக படகுகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. மந்தன் அத்யாயன் கேந்திராவால் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கையின் பதிலின் படி, 2020 ஆம் ஆண்டில் இதுபோன்ற படகுகள் கவிழ்ந்த ஐந்து சம்பவங்கள் நிகழ்ந்தன.

"மாசுக்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவது தண்ணீரில் மிகவும் கடினமானது மற்றும் அதிக மழை அல்லது சூறாவளிகளுடன் இணைந்தால், அது நீர்த்தேக்கங்களின் நீண்ட மற்றும் பெரியளவுக்கு பரவும் அபாயம் உள்ளது" என்று, மந்தன் அத்யாயன் மையத்தின் ஆய்வாளர் அவ்லி வர்மா, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். பல்வேறு விபத்துகளில் பறக்கும் சாம்பல் நீர்நிலைகளுக்கு ஏற்படும் சேதத்தை மதிப்பிடுவதற்கு என, பொது களத்தில் ஆய்வுகள் எதுவும் இல்லை.

பறக்கும் சாம்பல் தடுப்புகள் கவிழ்ந்தால் ஏதேனும் சேத மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து அறிய, இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தை அணுகினோம். அவர்களிடம் இருந்து பதில் கிடைத்தால், இக்கட்டுரையை நாங்கள் புதுப்பிப்போம்.

அபாயமற்ற கழிவு என்று கருதுதல்

கடந்த 2000 ஆம் ஆண்டில், அமைச்சகம் பறக்கும் சாம்பலை "அபாயகரமான தொழில்துறை கழிவுகளில் இருந்து" திடக்கழிவுகள் என மறுவகைப்படுத்தியது, மேலும் அதை வீட்டு கழிவுகளின் அதே வகைக்குள் வைத்தது. திடக்கழிவுகளாக, பறக்கும் சாம்பல் அபாயகரமான கழிவுகளைப் போலல்லாமல் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பல்வேறு மற்றும் மிகக் குறைவான கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டது என்று, தீங்கு விளைவிக்காத சுகாதாரப்பாதுகாப்பு அமைப்பின் நாராயண் கூறினார்.

கடந்த 2009 முதல், நிபுணர் மதிப்பீட்டுக் குழு -- இது, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கான, சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிடுகிறது-- ஆலை அதிகாரிகளுக்கு, அவர்களின் சுற்றுச்சூழல் அனுமதி நிலைமைகளில் தாழ்வான பகுதிகளில் சாம்பலை அப்புறப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியது (இங்கே, இங்கே மற்றும் இங்கே பார்க்கவும்). இருப்பினும், அமைச்சகத்தின் 2019 அலுவலக குறிப்பு, இந்த நிபந்தனையை பிற்போக்குத்தனத்துடன் நீக்கியது.

கான்பூர் நகரின் கட்டாம்பூரில் உள்ள நெய்வேலி உத்தரப் பிரதேச பவர் லிமிடெட் ஆலை விஷயத்தில், சுற்றுச்சூழல் அனுமதியானது ஆலை அதிகாரிகளுக்கு கதிரியக்கத்தன்மை மற்றும் கன உலோகங்களை பறக்கும் சாம்பலில் தொடர்ச்சியான கண்காணிப்புக்கான வழிமுறைகளை அமைக்க அறிவுறுத்தியது.

"உத்தரவுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. அரசு நிறுவனங்களும் மறுக்கு முனைப்பில் உள்ளன "என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் துபே கூறினார். ரிஹாண்ட் நீர்த்தேக்க வழக்கில் இணங்காதது குறித்து, அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார், ஆனால் தொற்றுநோய் பரவல் காரணமாக, இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

தவறு செய்யும் ஆலைகளுக்கு, தேசிய பசுமைத்தீர்ப்பாயம் பல வழக்குகளில், அபராதம் விதித்து வருகிறது, ஆனால் இது தொடர்ந்து மாசுபடுவதற்கு காரணமாகாது மற்றும் இது அருகில் வாழும் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் மற்றும் அதன் நீண்டகால சுற்றுச்சூழலில் தாக்கத்தில் சேதம் ஏற்படுத்தும் என்று, சவுத்ரி கூறினார்.

நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கும் என்ற அச்சம்

பல ஆண்டுகளாக, இந்தியாவில் மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், சாம்பல் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. பறக்கும் சாம்பலின் அளவு அதிகரித்ததால், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் 100% பறக்கும் சாம்பலை பயன்படுத்துவதை இலக்காகக் கொண்ட அறிவிப்புகளில், பல அறிவிப்புகள் மற்றும் திருத்தங்களை சுற்றுச்சூழல் அமைச்சகம் கொண்டு வந்தது.

"பயன்பாட்டு இலக்குகளை அடைவது கடினம்" என்று மந்தன் அத்யாயன் மையத்தின் தர்மாதிகாரி கூறினார். மரபுச் சாம்பல்-பல வருடங்களாகப் பயன்படுத்தப்படாதது-மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட சாம்பலானது, குழிகள் அல்லது திறந்தவெளிகளில் குவிந்து கிடக்கிறது. மீறுபவர்களுக்கு எதிராக போதுமான சட்ட நடவடிக்கை இல்லாதவரை, இணங்குதலில் பலவீனம் இருக்கும் வரை, விதிமீறல்கள் தடையின்றி தொடரும் என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2018 இல், நிலக்கரி துறை வணிக சுரங்கத்திற்காக தனியார் நிறுவனங்களுக்கு என திறக்கப்பட்டு, அதன் மீதான மேற்பார்வை குறைந்து வருவதால், சாம்பல் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    

Similar News