பல்லுயிர் சட்டத் திருத்தங்கள் வளத்தை பாதுகாப்பில் இருந்து வணிகச் சுரண்டல் மீது கவனம் செலுத்துகின்றன: நிபுணர்கள்
முன்மொழியப்பட்ட பல்லுயிர்ச் சட்டத் திருத்தம், பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டில் கவனம் செலுத்துவதைக் குறைக்கும் மற்றும் உயிரி வளங்களைப் பயன்படுத்துவதற்கும் அணுகுவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும், குறிப்பாக வணிக நோக்கங்களுக்காக என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை: உயிரியல் பன்முகத்தன்மை சட்டம்- 2002 இல் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், இந்தியாவின் உயிரியல் வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவற்றை வணிகமயமாக்குவதை எளிதாக்கும் என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த வளங்களைச் சார்ந்திருக்கும் மக்களின் பாரம்பரிய உரிமைகள் மற்றும் அறிவைக் குறைத்து மதிப்பிற்கு உட்படுத்தலாம்.
டிசம்பர் 2021 இல், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF&CC), உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் - 2002 இல், உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் (திருத்தம்) மசோதா- 2021ன் மூலம் விரிவான திருத்தங்களை முன்மொழிந்தது. உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவதற்கும் அணுகுவதற்கும் அசல் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட நிறுவன மேற்பார்வை கட்டமைப்பை நீர்த்துப்போகச் செய்ய இந்தத் திருத்தம் முயல்கிறது.
உயிரியல் பன்முகத்தன்மை சட்டம்- 2002, உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (CBD)- 1992 க்கு நடைமுறைப்படுத்தப்பட்டது, இது உயிரியல் வளங்கள் மற்றும் தொடர்புடைய பாரம்பரிய அறிவைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகளை நிலையான, நியாயமான மற்றும் சமமான பகிர்வை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2021 திருத்தமானது "உயிரியல் பன்முகத்தன்மை" போன்ற சொற்களை "உயிரியல் வளங்கள்" மற்றும் "அறிவை வைத்திருப்பவர்கள்" "தொடர்புடைய பாரம்பரிய அறிவை வைத்திருப்பவர்கள்" என்று மாற்ற முயல்கிறது.
"மாற்றங்கள் வெட்கக்கேடானவை, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் வெளிப்படையாக இருப்பதைப் பற்றி அவர்கள் எந்த வார்த்தையும் பேசவில்லை " என்று, இந்திய விவசாயத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சமூக சமத்துவம் மற்றும் பொருளாதார நம்பகத்தன்மை ஆகியவற்றை நோக்கிச் செயல்படும் அமைப்புகளின் பான்-இந்தியா கூட்டணியான ஆஷா-கிசான் ஸ்வராஜின் நிறுவனர் கன்வீனர் கவிதா குருகாந்தி கூறினார். ஆஷா-கிசான் ஸ்வராஜ் திருத்தத்தின் பகுப்பாய்வு, மாற்றீடுகளை "ஒரு ஆபத்தான மாற்றம்" என்று அழைத்தது.
"உயிரியல் பன்முகத்தன்மை" என்பது இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்புகளின் சிக்கலான வலையைக் குறிக்கும் அதே வேளையில், "உயிரியல் வளங்கள்", மறுபுறம், சுரண்டல் மற்றும் லாபம் ஈட்டுவதற்காக, பல்லுயிர் பற்றிய குறைப்புவாத, நேரியல் புரிதலைக் குறிக்கிறது என்று பகுப்பாய்வு கூறுகிறது. "குறியீடு செய்யப்பட்ட அறிவு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவதோடு, ஒரு நீதிமன்றத்திலும் சவால் செய்யப்படும் போது எப்படி விளக்கப்படும் என்ற அச்சம் உள்ளது," என்று குருகாந்தி கூறினார்.
"இந்தச் சட்டத்தின் முதன்மை நோக்கமான பல்லுயிர்ப் பெருக்கத்தின் பாதுகாவலர்களாக இருக்கும் சமூகங்களின் உரிமைகளை அங்கீகரிப்பது மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் உயிரியல் வளங்களை எவ்வாறு அணுகக்கூடியதாக மாற்றுவது என்பது பற்றி, குறிப்பாக வணிக நோக்கங்களுக்காக, இந்த திருத்த மசோதா குறைவாகவே தெரிகிறது," என்று, புனேவை சேர்ந்த பான்-இந்திய சுற்றுச்சூழல் நடவடிக்கை குழுவான கல்பவ்ரிக்ஷில் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நீமா பதக் ப்ரூம், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.
"2002 ஆம் ஆண்டின் பல்லுயிர்ச் சட்டத்தில் நகோயா நெறிமுறைக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யக் கோரி, எப்போதாவது அல்லது அடிக்கடி கூட, ஒரு நீடித்த பிரச்சாரம் இருந்ததால், இந்த திருத்தம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது (உயிரியல் வளங்களை அணுகுவதன் மூலம் நன்மைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான சர்வதேச ஒப்பந்தம், அதில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது) மற்றும் பலன்களைப் பகிர்ந்து கொள்வதில் உள்ளூர் அளவில் சிறந்த சமபங்கு இருப்பதை உறுதி செய்தல்" என்று பதக் புரூம் கூறினார். "ஆனால் வந்தது அதற்கு நேர்மாறானது - இது 2002 சட்டத்தை இன்னும் குறைவான சமத்துவமாக மாற்ற முற்பட்டது மற்றும் அது உயிர்-பன்முகத்தன்மை குழுக்களின் அதிகாரத்தை குறைத்தது" என்றார்.
இந்த மசோதா தற்போது பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிப்ரவரி 8, 2022 அன்று நடந்த குழுவின் சமீபத்திய அமர்வு, எட்டு மாநிலங்களின் பல்லுயிர் வாரியங்களின் பிரதிநிதிகளிடம் இருந்து உள்ளீடுகளை எடுத்தது.
இந்த திருத்தம், இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தின் வணிகமயமாக்கலை மேம்படுத்தும் என்ற ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுகள் குறித்து, இந்தியா ஸ்பெண்ட் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்திடம் கருத்து கேட்டுள்ளது. அவர்களின் பதில் கிடைத்ததும், இக்கட்டுரையை புதுப்பிப்போம்.
நிறுவன கட்டமைப்புகளை நீர்த்துப்போகச் செய்தல்
கடந்த 2002 சட்டம், தேசிய அளவில் தேசிய பல்லுயிர் ஆணையம் (NBA), மாநில அளவில் மாநில பல்லுயிர் வாரியங்கள் (SBBs) மற்றும் உள்ளாட்சி அமைப்பு அளவில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் (BMCs) ஆகியவற்றைக் கொண்ட மூன்று அடுக்கு கட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்தது. உள்ளாட்சி அமைப்பு அளவில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களின் முதன்மைப் பொறுப்பு, உள்ளூர் பல்லுயிர் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவை மக்கள் பல்லுயிர் பதிவேட்டின் வடிவத்தில் ஆவணப்படுத்துவதாகும்.
ஆனால் இந்த திருத்த மசோத, உள்ளாட்சி அமைப்பு அளவில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள்மற்றும் மத்திய/மாநில பல்லுயிர் குழுக்கள் போன்ற நிறுவன கட்டமைப்புகளை முழுமையாக நீர்த்துப்போகச் செய்து, தேசிய அளவில் தேசிய பல்லுயிர் ஆணையத்திற்கு முதன்மை அளிக்க முயல்கிறது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். "தேசிய பல்லுயிர் ஆணையத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பல்லுயிர் மேலாண்மைக் குழு" நியாயமான மற்றும் சமமான பலன் பகிர்வை தீர்மானிக்கும் என்று திருத்தம் கூறுகிறது.
34 சிவில் சமூக அமைப்புகள், ஆர்வலர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய இந்தியாவில் சுற்றுச்சூழல் நீதிக்கான கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய நீர்த்தல் உள்ளாட்சி அமைப்பு அளவில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களின் மேற்பார்வையில் சமரசம் செய்யும் என்று கூறியது. "இந்த நீர்த்தலின் பலன் [மல்டி-நேஷனல் நிறுவனங்கள்] உட்பட தனியார் நிறுவனங்களுக்கும், குறிப்பாக ஆயுஷ் [ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா-ரிக்பா மற்றும் ஹோமியோபதி] தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கிடைக்கும்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
புதிய விதிகள் உயிரி திருட்டுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம்
இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் மற்றும் இந்தியாவில் பதிவு செய்யப்படாத அல்லது இணைக்கப்படாத அமைப்புகளை உள்ளடக்கிய சில வகை மக்கள்/கார்ப்பரேட் அமைப்புகளுக்கான உயிரியல் வளங்களை அணுகுவதற்கு, அடிப்படையில் எந்த வகையான "வெளிநாட்டு இருப்பு" என்பதற்கு, தேசிய அளவில் தேசிய பல்லுயிர் ஆணையத்திடம் இருந்து அசல் சட்டத்திற்கு முன் அனுமதி தேவைப்பட்டது என்றார் குருகுண்டி. ஆனால், இந்தத் திருத்தம் இதை இந்தியாவுக்கு வெளியே இணைக்கப்பட்ட "வெளிநாட்டு கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு" கட்டுப்படுத்துகிறது, அதாவது இந்தியாவில் இணைக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட எந்த நிறுவனமும் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை என்று அவர் மேலும் கூறினார்.
"இந்திய பங்காளிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, இப்போது வெளிநாட்டு நிறுவனங்கள் வளங்களை அணுகும் வகையில் அவர்கள் வரையறைகளை மாற்றியுள்ளனர்" என்று பதக் புரூம் கூறினார். "இந்த ஏற்பாடுகள் உயிரி திருட்டுக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்க வாய்ப்புள்ளது. இவை ஏற்கனவே பலவீனமாக இருந்தன [அத்துடன் ] மேலும் பலவீனமடைந்துள்ளன"
நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சியாளர்கள் பூர்வீக உயிரியல் வளங்களை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும்போது, பெரும்பாலும் மக்களின் பாரம்பரிய அறிவை அடிப்படையாகக் கொண்டு, அனுமதி அல்லது உத்தியோகபூர்வ அனுமதியின்றி உயிர் திருட்டு ஏற்படுகிறது. இது உயிரி வளங்கள் பெறப்பட்ட கலாச்சாரங்களின் சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. வேம்பு, பாசுமதி அரிசி, மஞ்சள் மற்றும் டார்ஜிலிங் தேநீர் போன்ற நீண்ட காலமாக இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பொருட்களுக்கு காப்புரிமை பெற வெளிநாட்டு நிறுவனங்களின் முயற்சிகள் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
"2002 சட்டம் அறிவுசார் சொத்துரிமைகள், குறிப்பாக காப்புரிமைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, ஒரு நுழைவாயில் செயல்பாட்டைக் கொண்டிருந்தது,"என்றார் குருகாண்டி. "ஆனால், திருத்தத்தின் கீழ், வெளிநாட்டு பங்குதாரர்களைக் கொண்ட இந்திய நிறுவனங்களுக்கு, தேசிய அளவில் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் முன்அனுமதி தேவையில்லை. எனவே, உயிரி திருட்டு விஷயத்தில், திருட்டு நடந்தது என்பதை நிறுவுவதற்கான ஒரு போஸ்ட்-ஃபாக்டோ போராட்டமாக, மேலும் பைரசி சிக்கல்கள் வளர்ந்தால், மாறுகிறது" என்றார்.
போதிய ஆலோசனை இல்லாததால் கவலை
ஆலோசனை செயல்முறையின்றி புதிய திருத்தம் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டது என்பது குறித்த கவலைகளையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொருள்கள் மற்றும் காரணங்களின் அறிக்கையில், இந்திய மருத்துவ முறை, விதை, தொழில் மற்றும் ஆராய்ச்சி துறைகள் உட்பட பங்குதாரர்களின் கவலைகளின் விளைவாக இந்த திருத்தம் வந்ததாக அமைச்சகம் கூறுகிறது. "கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் முதலீடுகளுக்கு உகந்த சூழலை ஊக்குவிப்பதற்கும், காப்புரிமை செயல்முறையை எளிதாக்குவதற்கும் இணக்கச் சுமையை எளிமைப்படுத்தவும், நெறிப்படுத்தவும் மற்றும் குறைக்கவும் வலியுறுத்துகிறது (...) "
2021 டிசம்பரில், வனம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான சட்ட முன்முயற்சியின் திருத்தத்தின் ஆரம்ப மதிப்பீட்டில், 2014 ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்கு முந்தைய ஆலோசனைக் கொள்கையின் கீழ் தேவைப்படும் பொதுக் கருத்துகளைப் பெறாமல், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தால், இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
"திருத்தங்கள் அடிப்படையில் ஆயுஷ் தொழில் மற்றும் விதைத்தொழிலில் இருந்து வரும் உள்ளீடுகளால் இயக்கப்படுகின்றன," என்று குருகாந்தி மேலும் கூறினார். "சட்டத்தின் துண்டுகளால் பாதிக்கப்படும் மக்களைக் கலந்தாலோசிப்பது போன்ற, பின்பற்ற வேண்டிய விவாத ஜனநாயக செயல்முறையை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிய அவசர முடிவுகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அனைத்து முன் மசோதா செயல்முறைகள் மற்றும் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள், முக்கியமாக ஆயுஷ் மற்றும் விதை தொழில் பிரதிநிதிகளை கலந்தாலோசித்தது" என்றார்.
இந்தியாவில் சுற்றுச்சூழல் நீதிக்கான கூட்டணியின் அறிக்கையின்படி, 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 என்ற குடை சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் நீதித்துறையில் இருந்து உயிரியல் பன்முகத்தன்மை சட்டம்- 2002 ஐ எடுக்கவும், இந்தத் திருத்தம் முயல்கிறது. 2002 சட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் தொடர்புடைய உரிமைகளுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் கிரிமினல் குற்றங்களாகக் கருதப்படுகின்றன. புதிய மசோதாவின் மூலம், பல்லுயிர்ச் சட்டத்தின் இத்தகைய மீறல்களை, வெறும் சிவில் குற்றங்களாகக் குறைக்க அமைச்சகம் முன்மொழிகிறது.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.