அனைத்து கிராம வீடுகளுக்கும் குழாய் நீரை வழங்கும் வாக்குறுதிக்கு கூடுதல் நிதி தேவைப்படும்: பட்ஜெட் 2021-22
பெரும்பாலான தெற்காசிய நாடுகளை விட இந்தியா தண்ணீருக்காக அதிக நிதியை ஒதுக்குகிறது, ஆனால் அதன் நீர்வளங்கள் இன்னமும் நெருக்கடியில் இருப்பதால், அது நீடித்த நடைமுறைகளுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும், மேலும் அதை வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்புடனும் செய்ய வேண்டும்.;
பெங்களூரு: உலக சுகாதார அமைப்பு, மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் 2019 கூட்டு அறிக்கையின்படி, இந்திய மக்கள்தொகையில் 7%, அல்லது 9.1 கோடி மக்கள், அடிப்படை தேவையான நீர் கிடைக்காமல் இல்லாமல் உள்ளனர். 2017 வரையிலான 17 ஆண்டுகளில், நீர் வினியோகத்திற்கான அடிப்படை அணுகலில் 14 சதவீத புள்ளிகள் உயர்ந்த போதும், கிட்டத்தட்ட 60 கோடி இந்தியர்கள் "அதிக நீர் நெருக்கடியை" எதிர்கொள்கின்றனர்.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை புதுப்பிப்பதில் கவனம் செலுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் எதிர்வரும் வருடாந்திர பட்ஜெட்டை, மத்திய அரசு தயார் செய்துள்ள நிலையில், நீர் மற்றும் துப்புரவுக்கான அடிப்படை அணுகலை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும், நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த ஆண்டு தண்ணீருக்கான பட்ஜெட், இன்னும் முக்கியமானது - கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த சுத்தமான நீர், கை கழுவுதல் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைப் பெறுவது மிக முக்கியம், ஆனால் இந்தியாவுக்கு ஒரு முக்கிய சவாலாக உள்ளது, 2020 ஜூன் மாதம் இந்தியாஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. இந்தியாவில், கொரோனா தொற்றுநோய் இதுவரை 1,53,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது.
பட்ஜெட் தொடர்பான தொடரில், முக்கியமான துறைகள் மற்றும் முக்கியமான திட்டங்களுக்கு எவ்வாறு அரசால் நிதி வழங்கப்படுகிறது என்பதை நாங்கள் விளக்கி வருகிறோம். இத்தொடரின் இந்த நான்காவது பகுதியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் குடிநீர் மற்றும் நதி தூய்மை, பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனம் போன்ற மேற்பரப்பு நீர் திட்டங்களுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும், மேலும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறோம்.
விவசாயம், தொழில் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் என்பது மிக முக்கியமானது, ஆனால் இந்த விளக்கத்தில், நாம் பெரும்பாலும் குடிநீர் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம், இது ஒதுக்கீட்டின் பெரும்பகுதியைப் பெறுகிறது. 2024 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசு, மிஷன் மோட் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில், நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு, மற்றும் குடிநீர், துப்புரவு ஆகிய துறைகளுக்கு அரசு பட்ஜெட்டில் ஆண்டு சராசரியாக ரூ.27,413 கோடி (3.8 பில்லியன் டாலர்) அல்லது 1.1% ஒதுக்கியது, அத்துடன் இவற்றை, 2019 இல் ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கி இணைத்தது.
ஒதுக்கீட்டில் சுமார் 71% குடிநீர் மற்றும் துப்புரவுத் துறைக்கும், மீதமுள்ளவை (29%) நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறைக்கும் சென்றன.
குடிநீர் மற்றும் துப்புரவு ஆகியன, மாநிலம் சார்ந்தவையாகும். ஆனால் அவற்றின் தேவைகள் மற்றும் சூழல்களின் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி மற்றும் ஆதரவை மத்திய அரசு ஒதுக்குகிறது. முந்தைய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு மத்திய அரசு நிதியளித்தது, இப்போது அது ஜல் ஜீவன் மிஷனின் கீழ் வந்துள்ளது. ஒடிசாவில் சுஜல் மற்றும் தெலுங்கானாவில் மிஷன் பாகீரதா போன்ற மாநிலம் சார்ந்த குழாய் குடிநீர் திட்டங்களை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
மற்ற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் தண்ணீருக்கான பட்ஜெட், மிகப்பெரியது, இதுபற்றி பின்னர் நாங்கள் விவரிக்கிறோம். ஆனால் இது நிலையான நீர் மேலாண்மைக்கு வழங்க, 2030 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3% ஐ விட அதிகமாக இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.
சுத்தமான நீர் மற்றும் துப்புரவு வசதிகள் மேம்பட்டுள்ள நிலையில், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் போன்ற நீர்வளங்களைப் பாதுகாக்க அதிக முதலீடு தேவைப்படுகிறது, இது குழாய்கள் மற்றும் குழாய்களின் உள்கட்டமைப்பை விட அதிகமாக செலவுபிடிக்கும் என்று நிபுணர்கள் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
குடிநீர் மற்றும் துப்புரவுத்துறைக்கு 70% க்கும் அதிகமான ஒதுக்கீடு
குடிநீர் தொடர்பான கொள்கை மற்றும் ஆதரவை, குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை கையாளுகிறது, அதே நேரத்தில் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத்துறை ஆகியன, நிலத்தடி நீர், நீர்ப்பாசனம், வெள்ள கட்டுப்பாடு மற்றும் பல்நோக்கு திட்டங்கள் குறித்த கொள்கைகளை உருவாக்குகின்றன. அவை 2019 இல் உருவாக்கப்பட்ட ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்டன.
கடந்த 2016-17 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளுக்கு இடையே, நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு மட்டும் ரூ.1.37 லட்சம் கோடி (18.8 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டது (இது ஒருங்கிணைந்த நீர் அமைச்சகம் உருவாவதற்கு பல ஆண்டுகளும் அடங்கும்). இதில், 71% க்கும் அதிகமானவை குடிநீர் மற்றும் துப்புரவுத்துறைக்கு (சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக) ஒதுக்கப்பட்டன, அதே நேரத்தில் நீர்வளத் துறைக்கு 29% கிடைத்தது (நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் பல்நோக்கு திட்டங்களுக்கு) .
2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில், நீர்வள அமைச்சகத்துக்கான ஒதுக்கீடு, மத்திய பட்ஜெட்டில் 1.1% ஆகும். இந்த காலகட்டத்தில் அதிக ஒதுக்கீடு, மத்திய பட்ஜெட்டில் ஒரு பங்காக, 2017-18 மற்றும் 2018-19 (1.3%) ஆக இருந்தது, செலவு 2017-18 ஆம் ஆண்டில் மிக அதிகமாக இருந்தது (கீழே உள்ள வரைபடத்தை காண்க).
நாட்டின் பல பகுதிகள் நீர் நெருக்கடிகள் இருப்பதால் நிலத்தடி நீரை இந்தியா நம்பியிருப்பது நிலையான நீர் மேலாண்மைக்கு ஒரு சவாலாக உள்ளது: 400 பில்லியன் கனமீட்டர் (bcm) நிலத்தடி நீரில், நீரில் 230 பில்லியன் பிசிஎம் ((58%) மட்டுமே நிலப்பரப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற காரணிகளால் அணுக முடியும் என்று, இந்தியாஸ்பெண்ட் ஜூன் 2019 கட்டுரை தெரிவித்தது.
தொற்றுநோயானது, பொது சுகாதாரத்தில் நீர் மற்றும் துப்புரவுக்கான இடத்தை முன்னிலைப்படுத்த உதவியது என்றாலும், நீர் மற்றும் சுகாதாரம் குறித்த நடத்தை மாற்றத்தை உறுதி செய்வதும் முக்கியம் என்று, இலாப நோக்கற்ற வாட்டர் ஃபார் பீப்பிள் என்ற அமைப்பின் இந்தியாவுக்கான இயக்குனர் பிஷ்வதீப் கோஸ் கூறினார். நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பது அதிகமாக இருக்கும்போது மேற்பரப்பு நீர் தொடர்ந்து அதிக கவனம் செலுத்துவதோடு முதலீடுகளையும் பெறுவதாக, அவர் சுட்டிக்காட்டினார்.
"இந்தியா இப்போது தண்ணீருக்கு [மேலும்] அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு தேவைப்படும் ஒரு கட்டத்தில் உள்ளது, ஆனால் அதைவிட மிக முக்கியம், பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்," என்று, இந்திய இயற்கை வள பொருளாதாரம் மற்றும் மேலாண்மை (INREM) அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் கிருஷ்ணன் கூறினார்.
(நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவில்) கிட்டத்தட்ட பாதி (48.3%) குடும்பங்களுக்கு, குடிநீர் கிடைப்பதற்கான பிரத்யேக அணுகல் இல்லை, நான்கில் ஒரு பங்கு குடும்பங்கள் பொதுவான, கட்டுப்பாடு இல்லாத ஆதாரங்களின் மூலம் (23.6%) அதை அணுகியதாக, தேசிய மாதிரி கணக்கெடுப்பு தரவு அடிப்படையில், இந்தியாஸ்பெண்ட் ஜூன் 2020 கட்டுரை தெரிவித்தது.
தூய்மை இந்தியா திட்டத்தி இருந்து குடிநீருக்கு மாற்றலாமா?
கடந்த 2020-21 பட்ஜெட்டில், குடிநீர் மற்றும் துப்புரவுக்கென ரூ.3,6.லட்சம் கோடிக்கு (49 பில்லியன் டாலர்) அரசு 11,500 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஜல் ஜீவன் மிஷன் (JJM), வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளிலும், பயன்பாடுள்ள குழாய் நீர் இணைப்பை வழங்குவதோடு ஒரு நாளைக்கு தலா ஒருவருக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் வினியோகிக்க வேண்டும்.
இருப்பினும், 2017 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட ரூ.89,956 கோடியில், 90% செலவிட்டபோதும், என்.ஆர்.டி.டபிள்யூ.பி தனது இலக்குகளை அடைய "தவறிவிட்டது" என்று அரசு தலைமை கணக்கு தணிக்கையாளர் குறிப்பிட்டதை, இந்தியாஸ்பெண்ட் நவம்பர் 2018 கட்டுரை தெரிவித்தது.
கடந்த 2014-15 முதல், மூன்று ஆண்டுகளில், அமைச்சகத்தின் செலவினம் குடிநீரில் கவனம் செலுத்தியது, இது ஸ்வச் பாரத் மிஷன் (SBM) எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் உந்துதலால், 2015-19ஆம் ஆண்டுக்கு இடையில் கிராமப்புற தூய்மைத் திட்டத்திற்கு மாற்றப்பட்டது என்று, ஆராய்ச்சி அமைப்பான பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. "இருப்பினும், 2019-20 முதல், இரண்டு திட்டங்களுக்கும் ஒதுக்கீடு ஏறக்குறைய சமமாக உள்ளது" என்று பிஆர்எஸ் கூறியது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில், ஜல் ஜீவன் மிஷனுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கக்கூடும், இது வீட்டுக்குழாய் இணைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று, இலாப நோக்கற்ற அமைப்பான வாட்டர் எய்ட் இந்தியாவின் தலைமை நிர்வாகி வி.கே. மாதவன் தெரிவித்தார். "இதன் விளைவாக, ஸ்வச் பாரத் மிஷனில் கணிசமான முதலீடு ஜல் ஜீவன் மிஷனில் முதலீடுகளால் மாற்றப்படும்" என்றார்.
ஜல் ஜீவன் மிஷனுக்கான ஒதுக்கீடு 2016-17 (முந்தைய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்காக) மற்றும் 2020-21 க்கு இடையில் கிட்டத்தட்ட 11,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று, அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் பிப்ரவரி 2020 இல் மதிப்பிட்டு உள்ளது. அரசு, 2020-21 ஆம் ஆண்டில் 32% (ஜனவரி 25, 2021 வரை) மற்றும் 2019 இல் 89% ஐ விடுவித்தது.
ஒடிசா, தெலுங்கானா மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள், ஒடிசாவின் சுஜல் உள்ளிட்ட தங்கள் சொந்த குழாய் குடிநீர் திட்டங்களில் முதலீடு செய்துள்ளன, இது 15 லட்சம் நகர மக்களுக்கு 24x7 குடிநீரை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜல் ஜீவன் மிஷன் போன்றவை மிஷன்-மோட் திட்டங்கள் அரசு நடத்தும் நீர் திட்டங்களுக்கு மூலதனத்தையும் உத்வேகத்தையும் அளிக்கின்றன என்று மாதவன் கூறினார். "மத்திய முதலீடு அவசியம் என்றாலும், மாநில முன்னுரிமைகளில் பிரதிபலிப்பைக் கண்டறிவது போதாது என்று சொல்வது நியாயமானது" என்றார். மத்திய திட்டங்களை மாநில அதிகாரத்துவங்கள் எவ்வளவு உற்சாகமாக ஏற்றுக்கொள்கின்றன மற்றும் செயல்படுத்துகின்றன என்பது அவர்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாகும்.
ஜனவரி 27, 2020 நிலவரப்படி, 19.1 கோடி கிராமப்புற வீடுகளில் மூன்றில் இரண்டு பயன்பாட்டில் உள்ள வீட்டு குழாய் இணைப்பு இல்லை என்று, ஆகஸ்ட் 2019 முதல் இணைப்புகளைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிய பின்னரும் கூட, ஜல்ஜீவன் மிஷன் விவரப்பலகை தெரிவித்துள்ளது.
நீர்வளத்துறையில் இருந்து நீர்ப்பாசனம் அதிகம் கிடைத்தது
குடிநீர் மற்றும் உள்நாட்டு தேவைகளுக்கு நீர் அணுகல் முக்கியமானது என்றாலும், நீர்ப்பாசனம் மற்றும் நதி பாதுகாப்புக்கான மேற்பரப்பு நீர் திட்டங்களும் முக்கியமானவை. 2016-17 முதல் 2020-21 வரை நீர்வளத்துறை அமைச்சகம், ரூ .39,153.9 கோடியில் 42% வரை பிரதம மந்திரி கிருஷி சிஞ்சாய் யோஜனாவுக்கு (PMKSY எனப்படும் பிரதமரின் நீர்ப்பாசனத் திட்டம்) இருந்தது. பி.எம்.கே.எஸ்.ஒய் 2020-21ல் அதன் அதிகபட்ச ஒதுக்கீட்டை ரூ .5,127 கோடியாகவும், துறைக்கு 57% ஒதுக்கீட்டாகவும் பெற்றது.
ஜல் சக்தி அமைச்சகம், வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிலப் பதிவுத்துறை ஆகியன நீர்ப்பாசன திட்டங்களின் பல்வேறு அம்சங்களான துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைகள் திட்டம் மற்றும் பி.எம்.கே.எஸ்.ஒய்-ஹர் கெத் கோ (PMKSY-Har Khet Ko) போன்றவற்றை செயல்படுத்துகின்றன.
கங்கையை சுத்தம் செய்வதற்கான முதன்மை திட்டமானது, 2020-21 ஆம் ஆண்டில் ரூ .800 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பெற்றது, இது 2016-17இல் இருந்து 68% சரிவு. 2019-20 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடு -- அந்த நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட செலவினத்தைக் குறிக்கிறது -- ஆண்டிற்கான ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் பாதி, மற்றும் 2018-19 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட செலவினங்களில் பாதி ஆகும்.
நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் விட குடிநீர் விநியோகத்திற்கான மிகப்பெரிய ஒதுக்கீடு, நீடித்த தன்மையை மேம்படுத்துவதற்காக சரிசெய்யப்பட வேண்டும் என்று, வாட்டர் ஃபார் பீப்புள் அமைப்பின், கோஸ் கூறினார். நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவதால் நீர் தேவையை நிர்வகிப்பது மிக முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் எடுக்கப்படும் நிலத்தடி நீரில் 90% வரை பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், உலகளவில் எடுக்கப்படும் மொத்த நிலத்தடி நீரில் நான்கில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது -- இது, சீனாவும் அமெரிக்காவும் சேர்ந்து பிரித்தெடுப்பதை விட-- அதிகம் என்று, மார்ச் 2019 வாட்டர் எய்ட் இந்தியா அறிக்கை தெரிவித்தது.
உலகளாவிய முன்னோக்கு மற்றும் இலக்குகளை அடைதல்
மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் 2017 ஆம் ஆண்டில் நீர் மற்றும் துப்புரவுக்காக சர்வதேச உதவிகளில் இரண்டாவது பெரிய அளவாக, இந்தியா 21.3 மில்லியன் டாலர் பெற்றது; 2019 ஐக்கிய நாடுகள் உலகளாவிய நீர் பகுப்பாய்வு மற்றும் துப்புரவு தொடர்பான மதிப்பீடு ஆகியவற்றின்படி இலங்கை, 345 மில்லியன் டாலர்களை பெற்றது.
நிலையான மேம்பாட்டு இலக்கு-6 என்பது, வரும் 2030 ஆம் ஆண்டளவில் பாதுகாப்பான குடிநீருக்கான உலகளாவிய அணுகல் மற்றும் அனைவருக்கும் துப்புரவு மற்றும் தூய்மை ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள சமூகங்களுக்கு தண்ணீரைப் பாதுகாப்பதற்கு, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% க்கும் அதிகமாக செலவாகும் என்று உலக வளநிறுவனம் (WRI), ஜனவரி 2020 பகுப்பாய்வில் மதிப்பிட்டுள்ளது: "அமெரிக்கா, பிரான்ஸ், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில், நீர் பற்றாக்குறை என்பது செலவினங்களின் முதன்மையாக இருந்து, செலவுக் கண்ணோட்டத்தில், நிலையான நீர் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துகிறது" என்றது.
வரும் 2030 ஆம் ஆண்டில் நிலையான நீர் நிர்வாகத்தை வழங்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 3.2% எடுக்கும் என்று, உலக வள நிறுவனம் குறிப்பிட்டது.
"மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதாச்சாரமாக நீர் மற்றும் துப்புரவுக்கான இந்தியாவின் முதலீடு, தெற்காசியாவின் பல நாடுகளுடன், வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்தது" என்று மாதவன் கூறினார். "நேபாளம் ஒரு விதிவிலக்கு மற்றும் அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3% ஐ 2019-20 ஆம் ஆண்டில் செலவிட்டது. எவ்வாறாயினும், எஸ்.டி.ஜி இலக்குகளை 6.1 மற்றும் 6.2 ஐ அடைய தேவையான மூலதன முதலீடுகள் உலகளவில் தற்போதைய முதலீட்டு அளவை விட மூன்று மடங்கு அதிகரிப்பு தேவைப்படும் என்று, உலக வங்கியின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.