அதிக பெண் எம்.பி.க்களை கொண்ட 17வது மக்களவை

Update: 2019-05-25 03:00 GMT

மும்பை: 17வது மக்களவையில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் - 78 பேர் உள்ளனர்; மொத்தம் 716 பெண்கள் போட்டி இட்டதில் 11% பேர் வெற்றி பெற்றிருப்பது, இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வில் தெரிய வருகிறது.

அதிகபட்சமாக, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 11 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்; அடுத்து மகாராஷ்டிரா (8), ஒடிசா (7) மற்றும் குஜராத் (6) உள்ளன.

அரசியல் கட்சிகளை பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சிவில் (பா.ஜ.க.) அதிக பெண்கள் (41) வெற்றி பெற்றுள்ளனர்; அதாவது அதன் மொத்த மக்களவை உறுப்பினர்களில் (303) இது 14% ஆகும். பா.ஜ.க. வை தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் (9) பேர்; இக்கட்சி, இந்திய ஜனநாயக வரலாற்றில் எந்தவொரு கட்சியும் செய்யாதவாறு, 41% பெண் உறுப்பினர்களை தேர்தலில் நிறுத்தி இருந்தது என, மார்ச் 27, 2019இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

இக்கட்சிகளிய தொடர்ந்து, காங்கிரஸ் (அதன் 52 எம்.பி.க்களில் 7 -13.5%), யுவஜனா ஸ்ரமிகா ரிது காங்கிரஸ் (22 பேரில் 4--18% ); பிஜு ஜனதாதளம் (அதன் 12 பேரில் 4 - 33.3%) பெண் வேட்பாளர்கள்.

இதுவரை இல்லாத சிறந்த செயல்பாடு

கடந்த மக்களவையில் இடம் பெற்றிருந்த அதிகபட்ச பெண் எம்.பி.க்கள் எண்ணிக்கை, 2014இல் 62 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதாகும்; இது மக்களவையில் 11.4% பெண் உறுப்பினர்களை கொண்டிருந்தது.

ஆறாவது மக்களவை அமைந்த 1977இல் மிகக்குறைவாக, மொத்த அவை உறுப்பினர்களில் 19 பேர் அல்லது 3.5% பேரே பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.

Source: Press Information Bureau; *Election Commission of India, PRS Legislative Research

பெண்கள் வேட்பாளர்களின் குறைந்த வெற்றி விகிதம் 1996இல் 11 வது மக்களவையில் இருந்தது; 599 பெண்கள் போட்டியாளர்களில் 6.7% அல்லது 40 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1957இல் இரண்டாவது மக்களவையானது, பெண்கள் வேட்பாளர்களில் மிக உயர்ந்த வெற்றி விகிதத்தை- 48.9% அல்லது 45 பேரில் 22 வெற்றி என்ற எண்ணிக்கை கொண்டிருந்தது.

தேசிய பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களின் விகிதத்தில், 2019 பட்டியலின்படி உலகளவில் இந்தியா, 193 நாடுகளில் 149வது இடத்தில் உள்ளது; 2018இல் 3 இடங்கள் சரிந்து பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை விட பின்தங்கி இருந்தது என, மார்ச் 16, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது.

நாடாளுமன்ற மக்களவையில் (பாராளுமன்ற கீழமை) 66 பெண்கள் எம்.பி.க்கள் இருந்தனர். அவற்றின் மொத்த 524 இடங்களில் இது 12.6%; ஜனவரி 1, 2019ன்படி உலக சராசரி, 24.3% ஆகும்.

17ஆவது மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் -அவையில் மொத்த எண்ணிக்கை அடிப்படையில் 2014 ஆம் ஆண்டில் 11% என்பது, 2019இல் 14% ஆக அதிகரித்துள்ளது. ருவாண்டா (61%), தென் ஆப்பிரிக்கா (43%), இங்கிலாந்து (32%), அமெரிக்கா (24%) மற்றும் வங்கதேசம் (21%) போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது இன்னும் குறைவாக உள்ளது.

செய்திகளில் இடம் பிடித்த பெண் வேட்பாளர்கள்

கடந்த 2014 தேர்தலி வெற்றி பெற்று ஜவுளித்துறை அமைச்சராக இருந்து வந்த ஸ்மிருதி இரானி, அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு, 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தினார்.

போபாலில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சாத்வி பிராக்யா சிங் தாகூர், காங்கிரஸ் துணைத் தலைவர் டிஜிவிஜய் சிங்கை தோற்கடித்து 364,822 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2006 மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக தாகூர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் இருந்தன.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி தொகுதியில் வென்ற பா.ஜ.க. பெண் வேட்பாளர் லாகெட் சாட்டர்ஜி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன் மீது 14 குற்ற வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது, சாட்டர்ஜி 73,362 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் மதுரா தொகுதியில் இருந்து 2,93,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வின் ஹேமா மாலினி, 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு அதிபதி; இது பெண் வேட்பாளர்களில் அதிகபட்சம் என்று, ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ஒரு பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. அவரை தொடர்ந்து, பஞ்சாபில், ஷிரோமணி அகாலிதள் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல், 2019 ஆம் ஆண்டில் ரூ. 217 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளார். அவர், பாந்திண்டா தொகுதியில் இருந்து 21,772 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News