14 ஆண்டில் எந்தவொரு மாநில / யூனியன் பிரதேசமும் உச்ச நீதிமன்ற உத்தரவான காவல் சீர்திருத்தங்களை முழுமையாக செய்யவில்லை

Update: 2020-09-24 00:30 GMT

மும்பை மற்றும் பெங்களூரு: காவல்துறை சீர்திருத்தங்களுக்கான 14 ஆண்டுகளுடைய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எந்த இந்திய மாநிலமும் முழுமையாக மேற்கொள்ளவில்லை என்று சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்பான  காமன்வெல்த் மனித உரிமைகள் முயற்சி (CHRI -சிஎச்ஆர்ஐ) பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. 28 மாநிலங்களில், இரண்டு -- ஆந்திரா மற்றும் அருணாச்சல பிரதேசம்--  ஐந்து பிணைப்பு உத்தரவுகளுக்கு ஓரளவு இணங்கியதாக பகுப்பாய்வில் கூறப்பட்டுள்ளது. சி.எச். ஆர்.ஐ.யின் அறிக்கையின்படி மற்ற எல்லா மாநிலங்களும் அதை இணங்கத் தவறிவிட்டன.

கடந்த 1996ல் தாக்கலான பொதுநலன் வழக்கு (PIL) அடிப்படையில் சீர்திருத்தங்களை தொடங்கும் நோக்கில், ஏழு உத்தரவுகளின் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 1979ம் ஆண்டு முதல் பல்வேறு தேசிய காவல்துறை கமிஷன் பரிந்துரைகள் இருந்தபோதும், அடுத்தடுத்த அரசுகள் பெரிய பரிந்துரைகளை செயல்படுத்தவில்லை. இரண்டு முன்னாள் போலீஸ் டைரக்டர் ஜெனரல்களான பிரகாஷ் சிங் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் தாக்கல் செய்த 1996ம் ஆண்டு பொதுநலன் வழக்கு, பரிந்துரைகளை செயல்படுத்த அரசுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. ஒரு தசாப்தத்திற்கு பிறகு, இந்த ஏழு உத்தரவுகளை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் ஏழு உத்தரவுகள், "சீர்திருத்தத்தைத் தொடங்குவதற்கான நடைமுறை வழிமுறைகளை" வழங்குவதாக, 2010 சிஎச்ஆர்ஐ அறிக்கை குறிப்பிட்டது. இலாப நோக்கற்ற அமைப்பின் சமீபத்திய பகுப்பாய்வு, ஐந்து உத்தரவுகளுக்கு இணங்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை தரம் பிரித்துள்ளது. ஏழு உத்தரவுகள் மத்திய அரசின் கீழ் வருவதால், அது சேர்க்கப்படவில்லை. அதேபோல், விசாரணை மற்றும் சட்டம்-ஒழுங்கு செயல்பாடுகளை பிரிப்பதன் இணக்கத்தை மதிப்பிடுவதற்கு உத்தரவு 4 சேர்க்கப்படவில்லை, அதற்கு “கள அளவிலான தேர்வு தேவைப்படும்”.

முதல் உத்தரவானது, மாநில பாதுகாப்பு ஆணையம் (SSC - எஸ்.எஸ்.சி) அமைக்க வேண்டும் என்பதாகும்,  அத்தகைய ஆணையத்தை அமைக்காத எந்த மாநிலமும், அல்லது அதன் கலவைக்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத  அல்லது அதன் பரிந்துரைகளை பின்பற்றாத மாநிலங்கள், இணங்காதவை என்று குறிக்கப்பட்டுள்ளது. 93% மாநிலங்கள் மாநில பாதுகாப்பு ஆணையத்தை (எஸ்.எஸ்.சி.) அமைத்துள்ள நிலையில்,  ஆந்திரா மற்றும் கர்நாடகா மட்டுமே எஸ்.எஸ்.சி பரிந்துரைகளை கொண்டு மாநில அரசை கட்டுப்படுத்தியுள்ளதை பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

ஆணைக்குழுவின் நோக்கம் "மாநில அரசு தேவையற்ற செல்வாக்கையோ அல்லது அழுத்தத்தையோ மாநில காவல்துறையினருக்கு தரக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவது" ஆகும். இந்தியாவில் மூன்று காவல்துறையினரில் ஒருவர்,  குற்ற விசாரணைகளின் போது அரசியல் அழுத்தத்தை அனுபவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்வாக்குமிக்க நபர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களில், 38% காவல்துறையினர், அத்தகைய அழுத்தத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

இத்தகைய அழுத்தங்களுக்கு இணங்காத காவல்துறையினருக்கு ஏற்படும் விளைவு, பணி இடமாற்றம் என்பது மிகவும் பொதுவானது என்று 63% காவல்துறை பணியாளர்கள் தெரிவித்ததாக, புதுடெல்லியை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான காமன் காஸ் மற்றும் சிந்தனைக்குழுவான லோக்னிட்டி-ஸ்டடி டெவலப்பிங் சொசைட்டி மையம் ஆகியவற்றின் ‘இந்தியாவில் காவல்துறை நிலை அறிக்கை 2019’ கூறுகிறது.

காவல்துறை அதிகாரிகளுக்கு குறைந்தபட்ச பதவிக்கால என்ற  கட்டாய உத்தரவுக்கு இணங்க பெரும்பாலான மாநிலங்கள் தவறிவிட்டதாக சி.எச்.ஆர்.ஐ. பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. 28 மாநிலங்களில் ஐந்து மட்டுமே தேர்வுக்கு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC - யுபிஎஸ்சி) அடிப்படையில் தேர்வு செய்கின்றன; ஆறு மாநிலங்கள், இரண்டாவது  உத்தரவுப்படி காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பதவிக்காலம் வழங்கியுள்ளன. அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே இந்த உத்தரவுக்கு முழுமையாக கட்டுப்பட்டுள்ளன.

Full View

நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகள் என்று எடுத்துக் கொண்டால், பெரும்பாலான (ஏழு) மாநிலங்கள், 3 உத்தரவுகளை ஏற்றுக் கொண்டுள்ளன, இது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் பிற அதிகாரிகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலத்தை பரிந்துரைக்கிறது. ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், குஜராத், கேரளா, மத்தியப்பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய ஏழு மாநிலங்கள் இதற்கு  இணங்கி உள்ளன.

அதிகாரிகளை நியமிப்பதில் மற்றும் இடமாற்றம் செய்வதில் அரசியல் குறுக்கீட்டை கட்டுப்படுத்த, குறைந்தபட்ச உத்தரவாதமளிக்கப்பட்ட பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மற்றும் அவர்களுக்கு தன்னாட்சி செயல்பாடு  என்பது அறிமுகப்படுத்தப்பட்டது.  இருப்பினும், 2016 வரையிலான ஒரு  தசாப்தத்திற்கும் மேலாக, காமன் காஸ் அறிக்கையின்படி, சராசரி இரண்டு ஆண்டுகளில் 18% மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர்கள் ஜெனரல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், பதவிகள், பதவி உயர்வு மற்றும் சேவை தொடர்பான பிற விஷயங்களை தீர்மானிக்க தெலுங்கானாவை தவிர பிற மாநிலங்கள், காவல் ஸ்தாபன வாரியங்களை அமைத்துள்ளன. இருப்பினும், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே வாரியங்களின் அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 1,00,000 பேருக்கு 151 காவல் பணியாளர்களே உள்ளனர், இது 1,00,000 பேருக்கு 193 என்ற அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக்குறைவு. ஒன்பது இந்திய மாநிலங்கள் தங்கள் காவல்துறையில் பெண்களின் பங்களிப்பை 33% ஆக அதிகரிக்க, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று, இந்தியா ஸ்பெண்ட் 2019 நவம்பர் கட்டுரை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் ஆறாவது உத்தரவு, காவல்துறை புகார்கள் ஆணையம் (PCA- பிசிஏ) அமைக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகிறது. காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள், கடுமையான மற்றும் தவறான நடத்தை குறித்த புகார்களை இது அமைக்கப்பட வேண்டும். 10 மாநிலங்கள் மட்டுமே காவல்துறை புகார்கள் ஆணையத்தை அமைத்துள்ளன, மற்றும் எட்டு மாநிலங்கள் காவல்துறை புகார்கள் ஆணையத்தின் சுயேட்சை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவை அமைத்துள்ளன. 

போலீஸ் காவலில் சித்திரவதை என்பது "வழக்கமானதுதான்" என்று நிபுணர்கள் கூறியதை, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது. ஜூலையுடனான ஏழு மாதங்களில், 914 பேர் (நீதிமன்ற மற்றும் போலிஸ்) காவலில் இறந்ததாக,  தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிவு செய்துள்ளது. இவர்களில் 53 பேர் போலீஸ் காவலில் இறந்தனர். மேலும், ஐந்து காவல்துறையினரில் ஒருவர் சட்டரீதியான விசாரணையை விட ஆபத்தான குற்றவாளிகளை கொல்வதே சிறந்தது என்று கருதினார், அதே நேரத்தில் நான்கு பேரில் மூன்று பேர், குற்றவாளிகள் மீது காவல்துறையினர் தாக்குலில் ஈடுபடுவது நியாயமானது என்றனர்.

அனைத்து யூனியன் பிரதேசங்களும், காவல்துறை சீர்திருத்தம் தொடர்பான நீதிமன்றத்தின்  பெரும்பாலான உத்தரவுக்கு இணங்கவில்லை. உள்துறை அமைச்சகம் டெல்லிக்கென ஒரு மாநில பாதுகாப்பு ஆணையத்தையும், மற்ற அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்த்து ம்ற்றொன்றையும் ஏற்படுத்தியதாக, சி.எச்.ஆர்.ஐ பகுப்பாய்வு குறிப்பிட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம்- 2019 அமல்படுத்தப்பட்ட பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை.

(ஸ்ரேயா ராமன், தரவு ஆய்வாளர் மற்றும் பல்லியாத், இந்தியாஸ்பெண்ட் கொள்கை பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News