இலக்கு எட்ட இந்தியாவுக்கு 4 ஆண்டுகளே உள்ள நிலையில் சூரியஒளி மின்சார தகடுகள் 6% மட்டுமே நிறுவப்பட்டுள்ளன
சண்டிகர்: வரும் 2022ஆம் ஆண்டுக்குள், சூரியஒளி மூலம், 40 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இலக்கை எட்ட, இன்னும் 4 ஆண்டுகளே உள்ள நிலையில், 2018 மார்ச் மாதம் வரை, 2,538 மெகாவாட் (அதாவது, 6%) மின் உற்பத்திக்கான சாதனங்களே நிறுவப்பட்டுள்ளன; இலக்கில், 94% சூரியஒளி மின்பற்றாக்குறை நிலவுகிறது.
இலக்கை எட்டாத இந்த விகிதம் என்பது, 2022ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த சூரியஒளி மின்சார இலக்கு, 100 ஜிகாவாட் (ஒரு ஜிகா வாட் – 1000 மெகாவாட்) என்பது பாதிக்கப்படக்கூடும்.
உலகின் சமீபகால, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை புரட்சியில், சூரியஒளி மின் தகடுகளின் பங்கு முக்கியமானது; குறிப்பாக, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில். இதன்மூலம், குடியிருப்புவாசிகளும், வணிக நிறுவனத்தினரும், தங்களுக்கு தேவையான மின்சாரத்தை, தாங்களாகவே பசுமை வழியில், குறைந்த செலவில் உற்பத்தி செய்து கொள்ளலாம். அத்துடன், கூடுதல் மின்சக்தி மீண்டும் மின் தொகுப்பிற்கு செலுத்து, வருவாய் ஈட்டலாம்.
உண்மையில், சூரியஒளி இலக்கை எட்டுவதற்கு குடியிருப்பு கட்டடங்களுக்கு 30% மானியம் அளிக்கப்படுகிறது. எனினும், வீட்டு உரிமையாளர்களை ஈர்க்க, இது தவறிவிட்டது. பெரும்பாலானவர்கள், குறைந்த மின் கட்டணத்தையே செலுத்துவதாலும், ஒப்பீட்டளவில் சூரியஒளி மின் உபகரணங்களின் அதிக விலையுமே, இதற்கு காரணம்.
சூரியஒளி மின்சாதன கட்டமைப்புக்கு அதிக நிதி செலவிட வேண்டும் என்ற போதும், மாதாந்திர மின்கட்டணமும் அதிகளவில் இருப்பதால், மானியத்தை அரசு வழங்காத நிலையிலும், சூரியஒளி மின்சாரத்தை நிறுவ, வர்த்தக நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. எனினும், மின்சார வினியோக நிறுவனங்கள், தொழிற்துறையினரின் பங்கேற்பு உள்ளிட்டவற்றுக்கு அரசின் கொள்கைகளும், வழிமுறைகளும் பெரும் தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
”40 ஜிகாவாட் என்ற இலக்கை எட்ட அரசு விரும்புமானால், சூரியஒளி மின்சக்தி நிறுவலில் அரசு இன்னும் பலவற்றை செய்ய வேண்டியுள்ளது,” என்று, இந்தியாவின் மிகப்பெரிய சூரியஒளி தகடு நிறுவனங்களில் ஒன்றான அம்ப்ளஸ் சோலார் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் அகர்வால், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
தற்போதைய சூழல்
கடந்த 2010ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு சூரியஒளி மின்திட்டம் அறிவிக்கப்பட்ட பின், பூஜ்ஜியம் நிலையில் இருந்த இதை நிறுவும் பணிகள், ஆண்டுதோறும் படிப்படியாக வளர்ந்தது. 2013-14 மற்றும் 2017-18ஆம் நிதி ஆண்டுகளில், 117% அதிகரித்தது. (இந்தியாவில் நிதியாண்டு ஏப்ரலில் தொடங்கி மார்ச் மாதம் முடிகிறது).
கடந்த 2015ஆம் ஆண்டு, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், 40 ஜிகாவாட் என்ற இலக்கையும், சூரியஒளி கூரை தகடுகளை நிறுவும் வீட்டு உரிமையாளர்களுக்கு மானியத்தையும் அறிவித்தது. அத்துடன், சூரியஒளி மின்சாரத்தை நிறுவும் வீட்டு உரிமையாளர்களுக்கான மாதாந்திர தொகை செலுத்தும் முறை; சூரியஒளி மின்சாரத்தை, மின் தொகுப்பிற்கு பெறும் வழிமுறைகள் குறித்து, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியது.
இப்பிரிவு வளர்ச்சி கண்டு, கடந்த 2018 மார்ச் வரை, 2538 மெகாவாட் நிறுவப்பட்டுள்ளதாக, பிரிட்ஜ் டு இந்தியா என்ற ஆலோசனை அமைப்பு தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் மொத்த சூரிய சக்தி நிறுவலில் 10%; அதே காலகட்டட்தில், 22,000 மெகாவாட் அளவில், பெரிய அளவில் சூரிய மின்சக்திகள், சிறுமின் தொகுப்புகள் நிறுவப்பட்டன.
(பெரிய மின் திட்டங்கள் என்பதில், மெகாவாட் மற்றும் ஜிகாவாட் அளவிலான திட்டங்களாகும். இதில் சூரியஒளி பூங்கா, சூரிய ஒளியியல் மெகா மின் நிலையங்கள் (UMPP) அடங்கும். சிறுமின் தொகுப்புகள் என்பது, கிலோவாட் அளவில் சிறியவை. சூரியஒளி கூரை தகடு திட்டங்கள், கிலோ வாட் மற்றும் மெகாவாட் அளவிலானவை; எனினும், மின்தொகுப்பு மீட்டரில் வழக்கமாக இணைக்கப்படுபவை).
சாதகமாக அம்சம் என்னவெனில், தொழிற்துறை தற்போது உத்வேக புள்ளியில் உள்ளது என்று கூறும் அகர்வால், ”சூரியஒளி கூரை என்பது நன்கு கட்டமைக்கப்பட்ட, புரிந்துகொள்ளத்தக்க துணை துறையாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினாலும், விற்பனை மோசமாக இல்லை,” என்றார். சூரியஒளி கூரையில், தொழில்நுட்பம் நன்கு உள்ளது; செலவும் 40-50% கீழே வந்துவிட்டது; எளிதாக ஏற்கத்தக்கது,” என்றார்.
பிரிட்ஜ் டு இந்தியா கணக்கின்படி, 544 மெகாவாட் மற்றும் 1,088 மெகாவாட் திறன் கொண்ட சாதனங்களை நிறுவ, வணிக மற்றும் தொழிற்துறை பயனாளிகள் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பது தெரியவந்தது. “சூரியஒளி கூரை தகடுகளின் நுகர்வு அதிகளவில் உள்ளது. 3-4 ஆண்டுகளுக்கு பிறகு கூட உடைக்க முடியும்,: என்று, சூரிய ஒளி கூரை விற்பனை மற்றும் நிறுவும் நிறுவனமான சன்கல்ப் எனர்ஜி-யின் இயக்குனர் கனிகா கன்னா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.
வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர், தேய்மானங்களுக்கு சலுகை பெறுவது போல், சூரியஒளி மின்சாதனங்கள் நிறுவ, வரிவிலக்கல் பெறுகின்றனர். அவ்வகையில், வரி சேமிக்கும் கருவியாக உள்ளது. வரி தள்ளுபடி உள்ளிட்ட காரணங்களால், மூலதன செலவு குறைக்க முடிவதாக, ரீ-கனெக்ட் தரவு பகுப்பாய்வு மற்றும் நிர்வாக ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனர் வைபவ் நுவல், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.
உதாரணத்துக்கு, புதிய மற்றும் விரிவாக்க ஆலைகள், நிறுவனங்கள், சோலார் ஜெனரேட்டர்கள் அமைப்பதை, நாகரீக உணர்வாக கருதுவதாக, நுவல் கூறினார். இந்தியாவில் இப்பிரிவுக்கு பெரும் வாய்ப்பு இருப்பதால், ஆம்பிளஸ், கிளீன்மேக்ஸ் மற்றும் போர்த் பார்ட்னர் போன்ற நிறுவனங்கள் உலகளாவிய மற்றும் இந்திய முதலீட்டாளர்களிடம் இருந்து அதிக அளவில் பணம் திரட்டியுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் தொகுப்பு மின்கட்டணம், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும், பொதுவாக, வீடு மற்றும் சிறு பயனாளர்களுக்கு கட்டணம், மானியமாக (கிலோவாட்- ஒரு மணி நேரத்திற்கு ரூ. 5 அல்லது 0.07 சென்ட்) ஆக இருக்கும். ஆனால் பெரிய பயனர்களுக்கு (கிலோவாட் விசுமார் ரூ.7.75) படிப்படியாக அதிகரிக்கும்.
இதன்காரணமாக, வசதி படைத்தவர்கள் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். டெல்லியை சுற்றியுள்ள பண்ணை வீடுகளை, சட்டபூர்வமானது என்று அரசு கருதாததால், அங்கு மின் இணைப்பு தரப்படவில்லை. அதேபோல் குர்கானில், ஒரே வளாகத்தில் இருக்கும் குடியிருப்புகள், ஜெனரேட்டர்களை நம்பியுள்ள இடங்களில் சூரியஒளி மின்சார தேவை உள்ளதாக, கன்னா கூறுகிறார். தெற்கு டில்லியில் உள்ள பல குடியிருப்புகளில் மாதாந்திர மின்கட்டணம், ரூ.30 ஆயிரத்தில் இருந்து ($435), ரூ.1,20,000 வரை ($1,740) வரை இருப்பதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
மானியம் ஏன் போதாது?
பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களுக்கு, மின் தொகுப்பில் இருந்து மானியத்துட மலிவாக மின்சாரம் கிடைத்த போதும், சூரியஒளி மின்சார கட்டமைப்பை நிறுவ பெரும் பொருளாதார பயனில்லை. இதனால் தான் தனியார் வீடுகளில், 503 மெகாவாட் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது.
ஊக்கமளிக்கும் ஒரு செயலாக, மத்திய புதுப்பிக்கத்தக்க அமைச்சகம், வீட்டு உரிமையாளர்களுக்கு சூரியஒளி உபகரணங்களின் செலவில், 30% மானியம் வழங்குகிறது. எனினும், இதற்கான செயல்முறை நீண்டதாக இருப்பதோடு, பலரின் அனுமதியை பெற வேண்டியுள்ளது. இதற்கு 4 மாதங்கள் கூட ஆகலாம் என்று, கன்னா கூறினார். சில மாநிலங்களில் ஒன்றரை ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது; சிறு நுகர்வோருக்கு, இது மிகநீண்ட காத்திருப்பாகும்.
கடந்த 2016 நவம்பர் மாதம், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்ட சில ஏஜென்சிகள் வருமாறு: அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் (நிகர அளவிடல் கட்டுப்பாடு), வழங்கும் நிறுவனங்கள் (நிகர மீட்டர்), தலைமை மின் ஆய்வாளர் (பாதுகாப்பு அம்சங்கள்), மத்திய புதுப்பிக்கத்தக்க அமைச்சகத்தின் நோடல் நிறுவனம் (மானியம் விடுவிக்க), வங்கிகள் (வீடுகள் / மேம்பாட்டு கடன்), மற்றும் நகர்ப்புற உள்ளூர் அமைப்பு (கட்டிட விதிமுறைகளை பின்பற்றுதல்).
இதுபோன்ற காரணங்களுக்காக மானியத்தை யாரும் எதிர்பார்ப்பதில்லை என்று கூறும் அகர்வால், மானியம் குறைவு என்பதால் குடியிருப்போரிடம் இவ்வணிகத்திற்கு செல்வதில்லை; கடிதம் போன்ற பணிகள் அதிகம். அத்துடன், தரம் குறைந்த உள்நாட்டு உபகரணங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். நிறுவனங்கள் அதிக மானியம் பெற வேண்டும் என்பதால், விலைப்பட்டியலும் அதிகமாக இருக்கும் என்றார். உபகரணங்களை வழங்க, மாநில நோடல் ஏஜென்சிகள் குறைந்த விலையையே நிர்ணயிக்கின்றன. அதே அமைப்புகள், பின்னர் தரம் குறித்தும் கேள்வி எழுப்புகின்றன.
சூரியஒளி நிறுவனங்கள், நிறுவல்களுக்கு பதில் சூரியஒளி கூரை தகடு பொருத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். எனினும், இங்கும் வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அகர்வால் கூறுகிறார்.
ஏற்கனவே குறிப்பிடப்பட்டவாறு, பல்வேறு ஒப்புதல்களுடன் கூடுதலாக, வணிக மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு, பிற ஒழுங்குமுறை தடைகள் மீண்டும் ஏற்படுகிறது. சூரியஒளி கூரை உரிமையாளர்களை, தங்கள் ஒப்புதல் பெறப்பட்ட விகிதத்தில், மின் தொகுப்பில் மட்டுமே செலுத்த, பெரும்பாலான மாநிலங்களின் நிகர-அளவிடல் கொள்கை அனுமதிக்கிறது.
தானிய சேமிப்புக்கிடங்கு போன்ற பெரிய கூரை உள்ள இடங்களில், வெளிச்சம் போன்ற உடனடி தேவைகளுக்கு மட்டுமே, மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே, அவை சிறிய மின் இணைப்புகளை கொண்டிருக்கின்றன. அதிக சூரியஒளி மின் உற்பத்திக்கேற்ப அகன்ற, பரந்த கூரைகள் இருந்த போதும், அவற்றை நிறுவுவதில் இருந்து தடுக்கப்பட்டு உள்ளதாக, நுவல் கூறினார்.
பலகை பயன்பாடு பெறுதல்
ஒருவேளை, சூரியஒளி கூரை அமைக்கும் பிரிவு சந்திக்க வேண்டிய பெரிய சவாலாக, வினியோகிக்கும் நிறுவனங்கள் இருக்கலாம். குடியிருப்புகளுக்கான கட்டணத்தை குறைக்க, வர்த்தக மற்றும் தொழில் பயன்பாட்டாளரிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக தொகை செலுத்தும் வர்த்த மற்றும் தொழில் வாடிக்கையாளர்கள், சூரியஒளி கூரை முறைக்கு மாறினால், அவர்களிம் மின்கட்டணம் சுருங்கும்; வினியோக நிறுவனங்களில் வருவாய் குறையும். இதனால் வர்த்த, தொழில் வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை உயர்த்தும் நிர்பந்தம் அவற்றுக்கு ஏற்பட்டு, ஒரு பாதகமான சுழற்சி ஏற்படலாம்.
சூரியஒளி கூரை பயன்பாட்டுக்கு அதிக பயனாளர்கள் மாறினால், பயன்பாட்டாளர்கள் லாபம் பெறுவர். ஏனென்றால் அது அவர்களின் பரிமாற்ற மற்றும் விநியோக இழப்புக்களை, அதாவது, 2014 இல் உலக வங்கியால் அதிகளவாக, 19% ஆக பதிவு செய்யப்பட்டது. தங்கள் உரிமப்பகுதிகளில் நிறுவிய அனைத்து கூரைத்திறனும் தங்கள் புதுப்பிக்கத்தக்க கொள்முதலை நோக்கி செல்கின்றன. எந்தவொரு வினியோக நிறுவனமும், (பிற பெரிய பயனாளிகளுக்கு) புதுப்பிக்கப்படக்கூடிய ஆதாரங்களில் இருந்து, மின் பயன்பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி மூலம் பெற வேண்டும்.
இருப்பினும், இதன் பயன்களில் குறைபாடுகள் குறைவாக இருப்பதாக, 2016ஆம் ஆண்டில் சக்தி சஸ்டெய்னபிள் எனர்ஜி பவுண்டேஷன் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சூரியஒளி கூரை திட்டத்தில் மின்விற்பனைக்கான வாய்ப்பு குறைவு என்பதால், அதில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அவற்றை திரும்ப எடுப்பது கடினமாக உள்ளது. அவை, விநியோக உள்கட்டமைப்பை உருவாக்கவும், நீண்டகால மின்சக்தி கொள்முதல் உடன்படிக்கைகளையும் நல்ல முறையில் செய்து வருகின்றன. மேலும், மொத்த மானியத்தொகைகளையும் அவர்களால் மீட்க முடியவில்லை.
சூரியஒளி கூரை மின்திட்டத்தில், பயனாளர்களும் நிர்வகிப்பது உள்ளிட்ட சில பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதாவது, பகல் நேரங்களில் உற்பத்தியாகும் சூரியஒளி மின்சாரத்தை, இரவில் மின் தொகுப்பிற்கு செலுத்துவது; உச்ச தயாரிப்பு காலங்களில் அதை திரும்பப் பெறுவது போன்றவற்றை குறிப்பிடலாம்.
தொழில்நுட்ப சிக்கல்கள் மட்டுமின்றி, பயனாளர்களுக்கு நிர்வாகச்சுமையும் அதிகரிக்கிறது. அவர்கள் பயன்பாடுகளை செயல்படுத்த வேண்டும்; ஆய்வு நடத்துவது, இணைப்பு வழங்குவது, மீட்டரில் அளவீடு எடுப்பது பில்லிங் செய்தல் போன்றவை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
”தற்போதைய சூழலில், மின்வினியோக நிறுவனங்களுக்கு மானியம் கிடையாது என்று, பிரிட்ஜ் டு இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் வினய் ரஸ்டாகி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ”அதிக கட்டணம் செலுத்து வாடிக்கையாளர்களை மட்டும் அவர்கள் இழக்கவில்லை; விநியோக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு கூடுதல் முயற்சிகளை மேற்கொள்வதுடன், சூரியஒளி திட்டங்களுக்கு இலவச மீட்டர் மற்றும் சேமிப்பு கட்டமைப்புகளை வழங்க வேண்டும்," இதில் சேமிப்பு கட்டமைப்பு என்பது அதிகப்படியான மின்சக்தியை, மின் தொகுப்பிற்கு செலுத்துவது; பின்னர் இதற்கு கட்டணத்தை உரிமை கோரலாம்.
சூரியஒளி கூரை திட்டத்தில் பயனாளர்களுக்கு நிதி மற்றும் செயல்பாடுகளுக்கு ஆதரவு தரப்பட வேண்டும் என்று, ருஸ்டாகி கூறினார். மற்றும், புதிய வணிகர்களில் மாதிரி சேவை என்பது, மின்வினியோக நிறுவனங்களின் பங்கை வழங்கும் வகையில் வடிவமைக்க வேண்டும்.
இம்முடிவுக்கு, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், 2017 டிசம்பரில் இந்திய சூரியஒளி மறுவடிவுக்கான நீடித்த கூரைத்தகடு நடைமுறை (SRISTI) என்ற திட்டத்தை முன்மொழிந்தது. இத்திட்டத்தின்படி, சூரியஒளி தகடு திட்டம் அமைப்பது தொடர்பான அனைத்து பணிகளை, பயனாளர்கள் முன்னெடுக்க வேண்டும். அதாவது, சூரியத்தகடு கூரை உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சூரிய ஆலைகளை நிறுவுதல், தேவையான பல்வேறு அனுமதிகளை பெறுதல், உபகரணங்களை நிறுவுதல் மற்றும் பில்லிங் மேலாண்மை போன்றவற்றை உள்ளடக்கியது.
இத்திட்டத்தை சில நுகர்வோர் ஆதரிக்கின்றனர். நுகர்வோருடன் உள்ள உறவை நல்லமுறையில் பயன்படுத்தலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். நுகர்வோர் மற்றும் பயன்பாட்டுக்கு இடையே உள்ள நம்பிக்கை, நிறுவனர் மற்றும் மேம்பாட்டாளர் இடையே இல்லை என்று, டெல்லியை சேர்ந்த தனியார் பயன்பாட்டு நிறுவனமான பி.எஸ்.இ.எஸ். கூடுதல் துணை தலைவரான ஜிதேந்திர நால்வே, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். வணிக மற்றும் தொழில்துறைக்கான கூரை திறனை பெரிய அளவிலான திறன் நிறுவ வேண்டும் என்று, அவர் கூறினார். ஆனால், நீண்டகால நிலைத்தன்மையின் நலன்களில். புதுப்பிக்கக்கூடிய கூரை தகடுகள் நிறுவல்கள் முதன்மையானது என்ற கலாச்சாரத்தை ஏற்படுத்த, குடியிருப்பு பகுதி திட்டம் முக்கியமானது.
சூரியஒளி கூரை திட்டத்தில், குடியிருப்பு நுகர்வோருக்கு குறைந்த கட்டண விகிதத்தை ஏற்படுத்தி தருவது என்ற பயனாளர்களின் நிலைப்பாடு, பயனை தரும் என்று, டெல்லியை சேர்ந்த எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீருக்கான கவுன்சில் (CEEW) திட்டப்பணி இணைப்பாளரான, நீரஜ் குல்தீப், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
இருப்பினும், ஒருமுறை மானியம் என்பது போதாது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த 2018 ஜூனில் சி.இ.இ.இ., பி.எஸ்.எஸ் மற்றும் சக்தி சஸ்டெய்னபிள் எனர்ஜி பவுண்டேஷன் ஆய்வு நடத்தின. இதில், பயன்பாட்டு வணிக மாதிரிகள் சூரியஒளி கூரை அமைப்புகளை நிறுவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது; அதேபோல், பயனீட்டாளர்களிடம் இருந்து கட்டணத்தை சேகரித்து வருவாய் ஈட்டுவதால், கூரைதகடு திட்ட உரிமையாளர்களின் செலவினங்களுக்கான தேவை நீங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'சோலார் பார்ட்னர் மாடல்' என்று அழைக்கப்படும் மாதிரியில், பயன்பாட்டு கோரிக்கை மற்றும் வினியோக ஒருங்கிணைப்பாளரை கொண்டிருக்கும். போட்டி ஏல முறையில் கட்டமைப்பு நிறுவப்படும். சூரியஒளி கூரை உரிமையாளர்கள் தங்கள் மாத வாடகையாக சம்பாதிக்கலாம் அல்லது மின்சார கட்டணத்தில் கடன் பெறலாம். ‘பில் பைனான்சிங்” மாதிரியில், மொத்த பயன்பாட்டு நுகர்வோர்கள் தேவை. அவர்களுக்கு, சூரியஒளி கூரை கட்டமைப்பு நிறுவ, சந்தை விகிதங்களுக்கு கீழே கடன் பெற, இத்திட்டம் உதவும். மின்கட்டணத்தில் இருந்து திருப்பி செலுத்துவார்கள்.
”பயன்பாட்டை முதன்மையாக கொண்ட சமூக சூரியசக்தி” (utility-led community solar) மாதிரியில், நுகர்வோர் குழுக்கள் சூரியஒளி கூரை கட்டமைப்பை கூட்டாக கொண்டிருக்கும்; அல்லது சமுதாய சூரியஒளி கட்டமைப்பில் இருந்து சூரியஒளி மின்சாரத்தை வாங்கும். இரண்டு சந்தா விருப்பங்கள் அல்லது, வெளிப்படையாக கட்டணம் செலுத்தும் முறையை ஏற்றுக் கொள்ளலாம்.
தற்போதுள்ள ஒழுங்குமுறை விதிகள், ’கேபெக்ஸ்’ (சூரியஓளி தகடு உரிமையாளரே கட்டமைப்புக்கு கட்டணம் செலுத்துதல்) மற்றும் 'ரெஸ்கோ' மாடல் (நிறுவனருக்கு சொந்தமான அமைப்பு மற்றும் கூரை உரிமையாளருக்கு மின்சாரத்தை விற்றல்) ஆகியவற்றை மட்டுமே ஆதரிக்கிறது.
சூரியஒளி மின்சக்தி தொடர்பான புதிய நடைமுறைகளின் வரம்பு, உடனடி அனுமதி, புதிய கட்டணங்கள் போன்றவற்றை புதுப்பிக்கும் வகையில், மாநில அரசுகளின் கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
”எந்த மாதிரிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், கடந்த கால நகர்வுகள், அதிகாரத்துவ குறைபாடுகள் பாதிக்கட்ட நிலையில், அதுபோல் இல்லாமல், திறம்பட செயல்படுத்துதல் முக்கியமானது,” என்று கூறும், ரஸ்டகி, “மின்சாரம் ஒரு பரவலான பொருளாக இருப்பதால், மாநில அரசுகளிடம் இருந்து வாங்குவது இச்சந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமானது,” என்றார்.
(சிங், இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பு ஆசிரியராக உள்ளார்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.