பணப்பரிமாற்றங்கள் ஏன் விவசாயத்தில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மாற்ற முடியாது

Update: 2020-06-27 02:00 GMT

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா (RGKNY- ஆர்.ஜி.கே.என்.ஒய்.) 2020 மே 21 அன்று தொடங்கப்பட்டதன் மூலம், சத்தீஸ்கர் இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தைத் தொடங்கிய ஆறாவது இந்திய மாநிலமானது. இத்திட்டம் மாநிலத்தின் 19 லட்சம் விவசாயிகளின் வருமானத்தை, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10,000 முதல் 13,000 வரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதம மந்திரி கிசான் நிதி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், கோவிட்-19 நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை பரிமாற்றங்களும் முக்கியத்துவம், உற்சாகத்தையும் பெறுகின்றன. பிரபலமாக இருக்கும் நேரடி பணப்பரிமாற்ற அணுகுமுறை பெருகிவிட்ட நிலையில், இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? இதை மதிப்பிடுவதற்கான ஒரு வழி, விவசாயிகளுக்கான இந்தியாவின் முதல் பணப்பரிமாற்றத் திட்டத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்வதாகும். தெலுங்கானாவின் ‘ரைது பந்து திட்டம்’ (RBS - ஆர்.பி.எஸ். ), 2018 மே மாதம் தொடங்கப்பட்டது. ஆர்.பி.எஸ் மற்றும் ரூ.5,700 கோடி மதிப்பிலான ஆர்.ஜி.கே.என்.ஒய். ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியானவை; அவை இரண்டும் நில உரிமை அடிப்படையில் விவசாயிகளை வரையறுக்கின்றன.

தெலுங்கானா அரசின் திட்டம் 79% வரை விரிவடைந்தது, ஆனால் 76% விவசாயிகள் ரபி பருவத்தில் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட தொகையை பயன்படுத்தவில்லை, அதன் நோக்கங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக, மே 2019 இல் இக்கட்டுரையாளர் மேற்கொண்ட கள ஆய்வின் கண்டுபிடிப்புகள் காட்டின. பெரிய அளவில், பெரிய நில உரிமையாளர்களைக் கொண்ட விவசாயிகள் அதிக பணத்தை பெற்று பலனடைவதாக, ஆர்.பி.எஸ் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கான கணக்கெடுப்பு தெரிவித்தது. குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு, நிதி பட்டுவாடா பணப்புழக்க தூண்டுதலாக இல்லாமல், அதை அணுக முடியாதபடி நில உரிமையுள்ள விவசாயகள் பாதுகாப்பு வலையாக செயல்படுகின்றனர்.2018 ஆம் ஆண்டில் ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் மற்றும் 2019 ல் ஆந்திரா ஆகியவை விவசாயிகளுக்கான பண பரிமாற்ற திட்டங்களை செயல்படுத்திய பிற மாநிலங்கள். இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும் ஆறு மாநிலங்களில், ஒடிசா மற்றும் ஆந்திரா மட்டுமே சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை முக்கிய இலக்காக கொண்டுள்ளன. விவசாயிகளுக்கு தொகை பட்டுவாடா கணக்கிடுவதற்காக, ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் 15 குவிண்டால் பயிர் விளைச்சலை, கூடுதலாக மெட்ரிக் அளவீடாக நிர்ணயம் செய்துள்ளது.

விவசாயகளின் துயரம், இந்தியாவில் பல தசாப்தங்களாக பரவலாகவும் உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில், ‘வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள்’ பிரிவில் உண்மையான வளர்ச்சி ஆண்டு விகிதம் நிலையானதாகவே உள்ளதாக, 2019-29 பொருளாதார கணக்கெடுப்பு தெரிவித்தது.

கடன் தள்ளுபடி மற்றும் உரிய விலை கிடைக்காததற்கு பணப்பட்டுவாடா (பி.டி.பி) போன்ற நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு எந்தவொரு நிவாரணத்தையும் வழங்கத் தவறியதால், அதிகரித்து வரும் நேரடி பணப்பரிமாற்ற முறைகளை மத்திய - மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன - உழவர் நலனை ஆதரிப்பதற்கான முக்கிய கருவிகளில் ஒன்றாக மட்டுமல்லாமல் நாள்பட்ட விவசாய துயரங்களுக்கும் இது ஒரு தீர்வாகும்.

எவ்வாறு ஆயினும் சேமிப்பு, கிடங்கு மற்றும் சந்தை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் முறையான கடன் வழங்கலை உறுதிப்படுத்துதல் போன்ற கட்டமைப்பு திறன்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பொருளாதார வல்லுநர்கள் எடுத்துரைத்து வருகின்றனர்.

அதிக பாதுகாப்பு, குறைந்த செயல்திறன்

விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் கடன்பாட்டை குறைப்பதற்கும் விதைப்பு பருவத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், தெலுங்கானா அரசு பருவத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ .4,000 (பின்னர் ரூ .5,000 ஆக உயர்த்தப்படுகிறது) என்ற விவசாயிகளுக்கு ‘முதலீட்டு ஆதரவு’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

விரைவில், பிற மாநிலங்களும் நேரடி பணப்பரிமாற்றங்கள் மூலம் விவசாயிகளுக்கு நிதி ஆதரவளிக்கத் தொடங்கின; மத்திய அளவில் முதன்மையான பி.எம்-கிசான் திட்டத்திற்கு, ஆர்.பி.எஸ் பெரும் ஊக்கமாக இருந்தது. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ .6,000 வருமான உதவி மூன்று சம தவணைகளில் ரூ .2,000 வீதம் வழங்கப்படுகிறது.

அடிலாபாத் மாவட்டத்தின் தலமடுகு கிராமத்தில் 91 விவசாய குடும்பங்களின் (30 நிலமற்ற குத்தகைதாரர் குடும்பங்கள் உட்பட) நடத்தப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், முதன்மையாக ஐந்து அடிப்படைகளில் ஆர்.பி.எஸ் திட்டம் மதிப்பிடப்பட்டது: அவை, சென்றடையதல், பயன்படுத்துதல், போதுமானதாக இருத்தல், கடனில் இருந்து மீள நிவாரணம் வழங்கும் திறன் மற்றும் குத்தகைதாரர் விவசாயிகளுக்கு அதன் வரம்பில் இருந்து விலக்கப்பட்ட தாக்கம் ஆகியன. கணக்கெடுப்பு மே 2019 இல் (திட்டம் தொடங்கப்பட்ட ஒரு வருடம் கழித்து) நடத்தப்பட்டது மற்றும் பணப்பரிமாற்ற திட்டங்கள் எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் எதை செய்யாது என்பது பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.

சில பொருளாதார வல்லுநர்கள் கடன் தள்ளுபடி / குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி) பணப் பரிமாற்றத்தை பரிந்துரைக்க விரும்புவதற்கான காரணம், அது முழுமையாக சென்றடந்துள்ளதே ஆகும். நிறுவனமயமாக்கப்பட்ட கடன் மற்றும் வேளாண் சந்தைகளுக்கான அணுகல் இல்லாததால், கடன் தள்ளுபடி மற்றும் எம்.எஸ்.பி இரண்டையும் அவற்றின் உற்பத்தி வெளியீடுகள் சிறியதாக இருப்பதால் சிறிய விவசாயிகளால் பெற முடியாது என்று பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். எதிர்ப்புகளை சந்தித்த பணப்பரிமாற்றங்கள், பரந்த அளவில் சென்றடைந்துள்ளன.

கள ஆய்வுகள் இந்த முடிவுகளை ஓரளவுக்கு உறுதிப்படுத்தின. கணக்கெடுக்கப்பட்ட மொத்த நில உரிமையாளர்களில் சுமார் 79% பேர் இரு பருவங்களுக்கும் ஆர்.பி.எஸ். இன் கீழ் செலுத்த வேண்டிய முழுமையான பணப்பரிமாற்றத் தொகையை பெற்றனர். சிறிய விவசாயிகள், குறிப்பாக நேரடி பணப்பரிமாற்றம் பெற்ற எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வலையாக பயனுள்ளதாக இருந்தது. ஏனென்றால், அவர்களுக்கான, பிற பொதுவான விவசாய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.

இரண்டு ஏக்கர் நிலத்தை பயிரிடும் பட்டியலின சாதி (மடிகா) சமூகத்தைச் சேர்ந்த விவசாயி கோந்திமுக்கல்ல கங்கண்ணாவிடம், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை விரும்பிய அளவிற்கு உயர்த்தப்பட்டால் வருமான ஆதரவைப் பெற விரும்புகிறீர்களா என்று கேட்டோம். அவர், "ஆமாம், இல்லை," என்று அவர் பதிலளித்தார். "எங்களுக்கு எப்படியும் ரைது பந்து திட்டம் தேவை; ஏனென்றால் எங்கள் உற்பத்தி குறைவானது; நாங்கள் எங்கள் தயாரிப்புகளை இந்திய காட்டன் கார்ப்பரேஷனுக்கு விற்கவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவான விகிதத்தில் எங்களிடம் இருந்து பருத்தியை வாங்கும் தனியார் வர்த்தகர்களிடம் நேரடியாக விற்கிறோம். நாங்கள் சிறு விவசாயிகள் என்பதை அறிந்து தனியார் வர்த்தகர்கள் எங்களுக்கு உரிய விலை விகிதத்தை வழங்குவதில்லை. ரைது பந்து, இதில் பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயிர்களை விற்க முடிந்தால், எங்களுக்கு ரைது பந்து தேவையில்லை. ஆனால் இந்த சூழலில் இது உதவியாக இருக்கும்” என்றார்.அத்துடன், கணக்கெடுக்கப்பட்ட விவசாயிகளில் குறைந்தது 45% பேர் தங்கள் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்க முடியாது; பொதுவில் அத்தகைய அணுகல் கிடையாது என்றும் கூறினர். அதன்படி, இத்தகைய விவசாயிகளில் பெரும்பான்மையானவர்கள் (70%) அதிக ஆதரவு விலைக்கான விருப்பம் வழங்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து வருமான ஆதரவைப் பெற விரும்பினர். (குறைந்தபட்ச ஆதரவு விலையில் விரும்பிய அதிகரிப்பு இருந்தபோதும் பணப்பரிமாற்றத்தை அவர்கள் விரும்புகிறார்களா என்று கேட்கப்பட்டது).

தங்களது விளைச்சலை எப்படியாவது குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்கவில்லை என்றும், சாதி அடிப்படையில் பாகுபாட்டை வர்த்தகர்கள் காட்டுவதாகவும், விவசாயிகள் வாதிட்டனர். மற்றவர்கள், அரசு ஒதுக்கிய நிலத்தின் தரம் மிக மோசமாக இருப்பதால், தங்களால் எந்த விளைச்சலையும் பெற இயலவில்லை என்றனர். இத்தகைய விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையை விடவும் நேரடி பணப்பரிமாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

பிற பயன்பாடுகளை கையாளுதல்

"முதலீட்டு ஆதரவு" திட்டத்தின் செயல்திறனை தீர்மானிக்கும் மிகவும் அடிப்படையான ஒன்று, நேரடி பணப்பரிமாற்றம் விவசாயிகளால் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். கரீப் பருவத்தில் பணப்பரிமாற்றத்தை பெற்ற 53 விவசாயிகளில் (பருவமழை, தெலுங்கானாவின் முதன்மை பயிர் பருவம்), சுமார் 68% விவசாயிகள் மட்டுமே தங்கள் பணப்பரிமாற்றத்தின் சில அல்லது முழு பகுதியையும் விவசாயத்திற்காக செலவிட்டனர், 32% பேர் அதை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தினர்; இது, நிதி விரயத்திற்கு வழிவகுத்ததாக, கணக்கெடுப்பு காட்டியது.

ரபி பருவத்தில் (குளிர்கால பயிர் பருவம்) இது மேலும் காணப்பட்டது: கணக்கெடுக்கப்பட்ட மொத்த விவசாயிகளில் 76% வரை, இப்பருவத்தில் எந்த சாகுபடியையும் மேற்கொள்ளவில்லை; அத்துடன் வீட்டு செலவுகள், மகளின் திருமணம் மற்றும் கரீப் பயிர்களின் அறுவடை போன்ற உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய, நேரடி பணப்பரிமாற்றத்தை பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த கணக்கெடுப்பானது, இதுபோன்ற திட்டங்களின் வெற்றிக்கான ஒரு முக்கியமான அளவுரு, நிதி வழங்குவதற்கான நேரம் என்ற முடிவுக்கு வந்தது. ஆரம்ப விதைப்பு பருவத்தில் நிதி வழங்கப்பட்டால், அது விதைப்பு, சாகுபடியின் ஆரம்ப கட்டங்கள், உரங்களை வாங்குவது போன்றவற்றுக்கு பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது. சாகுபடியின் ஆரம்ப வாரங்களுக்கு பிறகு நிதி வழங்கினால், அப்போது திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற அந்த நிதி செல்வதற்கான வாய்ப்பு குறைகிறது.

இதை "தவறான நேரத்தில் வழங்குவதால் ஏற்படும் வீழ்ச்சி" என்று பொருளாதார வல்லுனர் மிஹிர் ஷா கூறுகிறார்; "பிரச்சினை பணத்தை பரிமாற்றம் செய்வதல்ல; அந்த நிதியை உறுதியான சொத்துகளாக மாற்றிவதில் உள்ளது" என்கிறார்.

குத்தகைதாரர்களை விலக்குதல்

முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஆர்.ஜி.கே.என். திட்டத்தை தொடங்கிய போது, திட்ட பயனாளிகளில் 90% சிறு மற்றும் குறு விவசாயிகளாகவும், அவர்களில் பெரும்பாலோர் பட்டியலின சாதியினர் (எஸ்.சி), பட்டியலின பழங்குடியினர் (எஸ்.டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி) இருப்பார்கள் என்றார். தெலுங்கானாவில், 86% நில உரிமையாளர்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருந்தனர். ஆனால் சராசரியாக, இந்தியாவில் ஒரு “பெரிய” விவசாயி ஒரு “குறு” விவசாயியை விட 45 மடங்கு அதிகமான நிலத்தைக் கொண்டுள்ளார் என்று, மே 2016 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. உச்சவரம்பு வரம்பு இல்லாத நில உரிமையின் அடிப்படையில், நேரடி பணப்பரிமாற்றத் திட்டங்கள் அதிக நிலங்களை வைத்திருக்கும் நில உரிமையாளர்களுக்கு பயனளிக்கிறது. இது, ஆய்வில் உற்று நோக்கப்பட்டது.

பகுப்பாய்வு செய்யும் நோக்கில், கணக்கெடுக்கப்பட்ட விவசாயிகளின் வீட்டு வருமானத்தில் அமைக்கப்பட்ட பணப்பரிமாற்ற சதவீதத்தை அளவிட, நாங்கள் 2012-13ம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அறிக்கை எண் 576-ஐ பயன்படுத்தினோம். ஒவ்வொரு அளவு மற்றும் நிலங்களுக்கான விவசாய வீடுகளுக்கு சராசரி மாத வருமானம் மற்றும் நுகர்வு செலவினம் பற்றிய விவரங்கள் அறிக்கையில் உள்ளன. தெலுங்கானா மாநிலம் முழுவதற்கும் தரவை பிரித்தெடுத்தல் மற்றும் சில கணக்கீட்டு மாற்றங்களைச் செய்ததில் பின்வரும் முடிவுகளை அளித்தது:

table,th,td{ font-size: 12px; font-family: arial; border-collapse: collapse; border: 1px solid black; } table{ width:320px; } th,td{ text-align:center; padding:2px; } th.center{ text-align:center; } tr:nth-child(odd) { background-color: #f9f9f9; } tr:nth-child(even) { background-color:#fff; } th { background-color: #1f77b4; color: #FFFFF0; font-weight: bold; }
Cash Transfers Account For 16% Of Marginal Farmers’ Annual Income, 174% Of Large Farmers’
Type(Household Level) Monthly Income as of 2013 (In Rs) Annual Income Adjusted for Inflation (In Rs) Average land-holding size (In acres) Estimated cash transfer (In Rs)* Share of Cash Transfer in Annual Income (In %)
Marginal 4753 63,710 1.25 10000 16%
Small 6290 84,311 3.75 30000 36%
Semi-Medium 7600 1,01,870 7.5 60000 59%
Medium 13040 1,74,788 17.5 140000 80%
Large 8593 1,15,181 25 200000 174%

Source: Author’s calculations, based on National Sample Survey report number 576, 2012-13
*Based on cash transfer of Rs 8,000 per acre.

அட்டவணையின் கடைசி நெடுவரிசை, ஆண்டு வருவாய் பங்கின் அடிப்படையில் இந்த திட்டத்தின் பிற்போக்கு வடிவமைப்பை காட்டுகிறது: பணப்பரிமாற்றம் என்பது ஓரளவு குடும்பங்களுக்கான ஆண்டு வருமானத்தின் மிகச்சிறிய சதவீதத்தை (16%) மற்றும் பெரிய வீடுகளுக்கு மிகப்பெரியதை (174%) உருவாக்கியது. அதிக நிலங்களை வைத்திருக்கும் குடும்பங்கள் பணப்பரிமாற்றம் வாயிலாக அதிகளவு பயனடைவதாகத் தோன்றியது.

இது, கடன் பாதுகாப்பு குறித்த உண்மையும் கூட. சிறிய விவசாயங்களை விட பெரிய விவசாய குடும்பங்களின் மொத்த கடனில் பெரும் பகுதியை பண பரிமாற்றத்துடன் உள்ளடக்கியது (படம் கீழே).

இந்த திட்டத்திற்கு சொந்தமான நிலத்தின் விகிதத்திற்கு ஏற்ப பணம் வழங்கப்பட வேண்டும்; நிலமற்ற குத்தகைதாரர்களை அது வரம்பில் இருந்து தானாகவே விலக்குகிறது. அரசு அதிகாரிகள் தெலுங்கானாவில் குத்தகைதாரர்கள் குறைவாக இருப்பதால், அவர்கள் விலகுவதற்கு ஒரு காரணம் என்று கூறியுள்ளனர். இருப்பினும், 2002-03 மற்றும் 2012-13 க்கு இடையில் சுமார் 4.7% நில உரிமையாளர்களிடம் இருந்து 20.1% ஆக குத்தகை உயர்ந்துள்ளதாக, தெலுங்கானா சமூக மேம்பாட்டு அறிக்கை 2017 தெரிவிக்கிறது.ஆர்.பி.எஸ் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, தெலுங்கானா அரசு 1971 ஆம் ஆண்டின் ஆந்திர பிரதேச நில உரிமைகள் மற்றும் பட்டா பாஸ் புத்தகங்கள் சட்டத்தில் -- இது ஒவ்வொரு கிராமத்திலும் நிலப் பதிவுகளை பராமரித்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் புதுப்பித்தலை செய்கிறது -- நில பதிவுகளில் இருந்து குத்தகை விவரங்களை அகற்றுவதன் மூலம் சில சட்ட மாற்றங்களை செய்தது. குத்தகைதாரர்களை அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் அவர்களை விலக்க மற்றொரு காரணம் என்று அரசு அதிகாரிகள் கூறினர்.

இல்லாத நில உரிமையாளர்கள் குத்தகைதாரர்களுடன் பண பரிமாற்றங்களை பகிர்ந்து கொள்வார்கள் அல்லது ஆர்.பி.எஸ்ஸின் நன்மைகள் குறைந்த குத்தகை விகிதங்கள் மூலம் குத்தகைதாரர்களை எட்டும் என்ற ஊகங்களுக்கு மாறாக - கணக்கெடுக்கப்பட்ட விவசாயிகள் யாரும் தாங்கள் குத்தகைதாரர்களுடன் பணப் பரிமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறவில்லை; அத்துடன், 97.5% வழக்குகளில், குத்தகை விகிதம் அதிகரித்தது அல்லது அப்படியே இருந்தது.

தெலுங்கானாவில் பாதுகாப்பு குத்தகை சட்டத்தின் வரலாறு மற்றும் நில உரிமையாளர்களுக்கு இடையே குத்தகைதாரர்கள் நில அபகரிப்பு குறித்த அச்சம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இப்பகுதியில் நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் மத்தியில் அவநம்பிக்கையை, கணக்கெடுப்பின் பதில்கள் காட்டின. ஒரு விலக்கு திட்டம் விவசாய வரிசைமுறைகளை மீண்டும் நிலைநிறுத்த முனைகிறது என்று கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவித்தன.

சத்தீஸ்கரில் ஆர்.ஜி.கேன்.என்.ஒய். திட்டம் நில உரிமையாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ள நிலையில், அந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக நிலமற்ற தொழிலாளர்களுக்கு பணப்பரிமாற்ற திட்டத்தை வடிவமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆபத்துகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு

கள ஆய்வின் போது மீண்டும் மீண்டும் தோன்றிய கருத்து என்னவென்றால், நாம் முன்பு கூறியது போல் பரிமாற்றங்கள் ஒரு பாதுகாப்பு வலையாகும். விவசாயிகள், குறிப்பாக குறு மற்றும் சிறு விவசாயிகள் தங்களது அனைத்து பிற நடவடிக்கைகள் தோல்வியடைந்த போது, கடைசி வாய்ப்பாக பணப்பரிமாற்றத்தை கருதினர்.நேரடி பணப்பரிமாற்றங்களுக்கு ஆதரவாக ஆராய்ச்சியாளர்கள் வாதிட்டது ஏன் என்றால், அதன் பாதுகாப்பு ஆகும் - அவை ஆபத்துக்கான பாதிப்பைக் குறைக்கின்றன. இருப்பினும், சில அறிஞர்கள் இத்தகைய விவசாய அபாய போக்குகளே, இந்த துறையை அரசு புறக்கணித்ததன் நேரடி விளைவு என்று வாதிட்டனர்.

"சிறப்பான தொழில்நுட்பத்திற்கான அணுகலை மேம்படுத்துவதில் அதிகளவு முதலீடு, புதிய தொழில்நுட்பம், சந்தை உள்கட்டமைப்பு, சேமிப்பு மற்றும் கிடங்கு உள்கட்டமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு உதவும் விரிவாக்க திட்டங்கள் மற்றும் எளிதான மற்றும் உறுதியான கடன் வழங்கல் ஆகியன தேவை" என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஹிமான்ஷு, ஏப்ரல் 2019 பகுப்பாய்வில் கூறினார். பணப்பரிமாற்றங்கள் அத்தகைய அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அரசை விடுவிக்கின்றன. "மாறாக, அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்தை ஆதரிக்க தேவையான பிற ஆதரவு நடவடிக்கைகளில் முதலீடுகளை குறைப்பதன் மூலம், விலைமதிப்பற்ற நிதி ஆதாரங்களை பறிப்பதன் வாயிலாக, பணப்பரிமாற்றம் சந்தை மற்றும் சந்தையல்லாத தூண்டுதல்களால் விவசாயியை பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது" என்றார்.

பெறுவதன் மூலம் நிறுவன திறனை எளிதாக்குவதில் அதன் முறையான தோல்விக்கு ஈடுசெய்ய அரசு முயல்கிறது என்பதை இது குறிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய பொதுநிதி மற்றும் கொள்கைக் கழகத்தின் இயக்குனர் ரத்தீன் ராய், ஒட்டுமொத்தமாக பணப்பரிமாற்றம் ஈடுசெய்யும் திட்டமாக மாறிவிட்டது என்று கூறி, இந்த வாதத்தை பரவலாக்கி உள்ளார். இந்த தெளிவான மாற்றம், பொதுச்செலவினங்களின் கலவையில் (இதில் தனிப்பட்ட வளக்கணக்குகளில் நேரடியாக பணத்தை வைக்க பொது வளங்களைப் பயன்படுத்துவது மதிப்பு முன்மொழிவு) இந்திய அரசின் இயல்பு “வளர்ச்சி” என்பதில் இருந்து “இழப்பீடு” ஆக மாறுவதைக் குறிப்பதாக, ராய் வாதிட்டார்.

(ரமேஷ், அண்மையில் மும்பையின் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸில் தனது முதுகலை முடித்துள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News