அறிகுறி பரிசோதிக்கும் மாநிலங்களில் அதிக கொரோனா நோயாளிகள், ஆய்வு

Update: 2020-03-30 00:30 GMT

மும்பை:அதிக பரிசோதனை மையங்களை கொண்ட இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அதிக மாதிரிகளை பரிசோதிக்கப்படும் நிலையில், அங்கு தான் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதை, 11 மாநிலங்களில் இருந்து சோதனை மற்றும் நோயாளிகளின் தரவுகளை, இந்தியா ஸ்பெண்ட்பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது*.

தற்போது அதிக எண்ணிக்கையில் 109 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை கொண்ட மாநிலமான கேரளா, நாட்டில் 4,516 மாதிரிகளை ஒட்டுமொத்தமாக பரிசோதித்து முன்னிலை வகிக்கிறது.

இப்போது 101 ஆக அதிக எண்ணிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிரா, 2020 ஜனவரி 18 முதல் இதுவரை 2,144 மாதிரிகளை பரிசோதித்துள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட மொத்த நோயாளிகளில் 37% க்கும் அதிகமானவை கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளன. [எங்கள் கோவிட் -19 டிராக்கரை இங்கேகாண்க.]

இதற்கு மாறாக, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா முறையே 200-க்கும் குறைவான கொரோனா மாதிரிகளை பரிசோதித்து, முறையே ஒன்று மற்றும் இரண்டு நோயாளிகளை மட்டுமே கண்டறிந்துள்ளன.

Full View

மார்ச் 19, 2020 கட்டுரையில் நாங்கள் தெரிவித்தபடி, சமுதாய பரவலை நிராகரிக்க இந்தியா கிட்டத்தட்ட போதுமான அளவு பரிசோதிக்கவில்லை. "நமது சோதனை எண்ணிக்கை, உலகின் பிற பகுதிகளுடன் பொருந்தவில்லை என்றால், நாம் அதை சிறப்பாகச் செய்ய வேண்டும்," என்று, மும்பையின் ஜாஸ்லோக் மருத்துவமனையின் தொற்றுநோய் நிபுணர் ஓம் ஸ்ரீவாஸ்தவா எங்களிடம் தெரிவித்திருந்தார்.

அப்போது இருந்து, கடந்த 14 நாட்களில் சர்வதேச அளவில் பயணம் செய்த நபர்கள், உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் தொடர்புகள் மற்றும் அறிகுறி உடைய சுகாதாரப்பணியாளர்கள், தீவிர கடும் சுவாச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் (காய்ச்சல் மற்றும் இருமல்  / அல்லது மூச்சுத் திணறல்) மற்றும் அறிகுறிகள் இல்லாத, ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளுடன் நேரடி மற்றும் அதிக ஆபத்து உள்ளவர்கள் இதில் சோதிக்கப்படலாம். இந்த எண்ணிக்கையை 131 ஆக எடுத்துச் செல்ல தனியார் உள்ளிட்ட பல சோதனை மையங்களையும் இது திறந்துள்ளது.

ஆயினும்கூட, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் குறைவான சோதனைகளையே நடத்துகின்றன. உதாரணமாக, 9.1 கோடி மக்கள் தொகையை கொண்ட மேற்கு வங்கம், இதுவரை 10 லட்சம் பேரில் இருவர் என்ற விகிதத்தில் மட்டுமே சோதித்துள்ளது. 4.2 கோடி மக்கள் வசிக்கும் ஒடிசா, 10 லட்சம் பேரில் மூவருக்கு சோதனை என்ற விகிதத்தில் நடத்தியுள்ளது.

ஆந்திராவில் 5 கோடி மக்கள் உள்ள நிலையில், அங்கு 10 லட்சம் பேரில் ஐவருக்கு என்ற ரீதியில் கொரோனா சோதனை நடந்துள்ளது.

இவற்றுடன் ஒப்பிடுகையில், 3.3 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கேரளா, 10 லட்சம் பேரில் 137 பேர் என்ற விகிதத்தில் கொரோனா சோதனைகளை நடத்தியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா முறையே 10 லட்சம் பேரில் 19 மற்றும் 27 பேரின் மாதிரிகள் என்ற விகிதத்தில் பரிசோதனை செய்துள்ளன.

Full View

இதுவரை, 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோவிட்-19 பாதித்த நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மார்ச் 25, 2020 அன்று காலை 9.15 மணி வரை, இந்தியா 562 கோவிட் -19 நோயாளிகளிய உறுதி செய்திருந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்சமீபத்திய புதுப்பிக்கப்பட்டதரவுகளின்படி, மார்ச் 24 வரை,  21,804 நபர்களிடம் இருந்து 22,694 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனைகளில் 41.5% (9,409), கிட்டத்தட்ட ஐந்து நாட்களில் (மார்ச் 20-24ம் தேதி வரை) நடத்தப்பட்டது; சராசரியாக ஒரு நாளைக்கு 1,882 பரிசோதனைகள் நடந்துள்ளன. 

Full View

கடந்த ஐந்து நாட்களில் நடந்த அனைத்து கொரோனா சோதனைகளில், கேரளாவில் இருந்து மட்டும் 17% நடத்தப்பட்டுள்ளது - அதாவது 1,595 பரிசோதனைகள். மார்ச் 3, 2020 வரை, இந்தியாவில் நோயாளிகள் அதிகரிக்கத் தொடங்கியபோது, கேரளா 520 பரிசோதனைகளை நடத்தி இருந்தது.

Full View

ஒட்டுமொத்தமாக சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளில் 20% (4,516) கேரளா மேற்கொண்டிருந்தது. மகாராஷ்டிரா 2,144 சோதனைகளை நடத்தியுள்ளது (மொத்த எண்ணிக்கையில் 9.4%). இந்த மாநிலங்கள், நாம்  முன்பே கூறியது போல், தலா 100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை கண்டறிந்து, நாட்டின் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றன.

அதிகமான ஆய்வகங்களைக் கொண்ட மாநிலங்கள் அதிக சோதனைகளை செய்கின்றன மற்றும் அதிகம் பேரை கண்டறிந்து வருவதை தரவுகள் காட்டுகின்றன. கேரளா மற்றும் மகாராஷ்டிரா தலா எட்டு ஆய்வகங்களைக் கொண்டுள்ளன, இது இந்தியாவில் மிக அதிகபட்ச எண்ணிக்கையாகும். கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா ஏழு உள்ளன.

Full View

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் தலா இரண்டு பரிசோதனை  மையங்களை மட்டுமே கொண்டுள்ளன. இவை முறையே ஒன்பது மற்றும் இரண்டு நோயாளிகளைக் கண்டறிந்துள்ளன.

(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் தரவு ஆய்வாளர். இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பாளரான ஜமீலா அகமதுவின் உள்ளீடுகள் உதவி மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர் நிதி ஜேக்கப்உதவியுடன்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News