நிலக்கரி அடிப்படையிலான மின்சக்தியை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு 63% குறைவு
பெங்களூரு: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் மாசுபடுத்தும் உமிழ்வைக் குறைப்பதற்கும் உலகளாவிய அர்ப்பணிப்பு இருந்தபோதிலும், இந்தியா தனது நிலக்கரி அடிப்படையிலான மின்சாரத்தை விட மாற்று எரிபொருட்களுக்கு 63% குறைவான நிதியையே பட்ஜெட்டில் ஒதுக்கியது. நிலக்கரி என்பது உலக வெப்பநிலை அதிகரிப்புக்கான மிகப்பெரிய ஒரு ஆதாரமாகும். மேலும் அதன் எரியும் தீங்கு விளைவிக்கும் துகள்களை வெளியிடுகிறது.
கடந்த 2019 ஜூலை 5இல் வெளியான 2019-20 பட்ஜெட்டில், நிலக்கரி அமைச்சகத்துக்கு ரூ.20,121 கோடி (சுமார் 2.8 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துக்கு ரூ.12,353.81 கோடி (சுமார்1.7 பில்லியன்) ஒதுக்கப்பட்டது.
2009-10 இல் இருந்து, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இத்தகைய இடைவெளிகள் இருந்து வந்துள்ளது, கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய பட்ஜெட் குறித்த இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு காட்டியுள்ளது.
2019 வரையிலான 10 ஆண்டுகளில், நிலக்கரி மற்றும் லிக்னைட் ஆய்வுக்கான ஒதுக்கீடு ரூ. 600 கோடியாக உயர்ந்தது. சர்வதேச ஒத்துழைப்புக்கான நிதி உட்பட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு சமீபத்திய பட்ஜெட்டில் 90% - ரூ.60 கோடி - குறைவாக இருந்தது.
"அடுத்த தசாப்தத்தில் 250 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இந்தியாவுக்கு இன்னும் முதலீடு தேவைப்படுகிறது" என்று பொருளாதார ஆய்வு 2018-19 தெரிவித்துள்ளது. இது 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு ரூ. 1.77 லட்சம் கோடிக்கும் (25 பில்லியன் டாலர்) அதிகமான முதலீட்டை குறிக்கிறது, அதே நேரம் தற்போதைய பட்ஜெட் இலக்கை விட 93% - ரூ.12,353.81 கோடி (1.745 பில்லியன் டாலர்) குறைவாக ஒதுக்குகிறது.
2019-20 ஆம் ஆண்டில் மொத்த பட்ஜெட்டில் வெப்ப மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு (PSEs) - நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், தேசிய வெப்ப மின் கழகம் -என்டிபிசி (NTPC), நிலக்கரி இந்தியா மற்றும் சிங்கரேனி கொலீரியஸ் - சுமார் ரூ.40,000 கோடி ($ 5.648 பில்லியன்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 1.43% ஆகும், இது ரூ. 7.86 லட்சம் கோடியாக உள்ளது.
"அரசின் ஆதரவு நிலக்கரிக்கு என்று இருக்கும்போது 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்ற உமிழ்வை குறைப்பதை இந்தியா எவ்வாறு நோக்கமாகக் கொள்ள முடியும்?" என்று கிரீன்பீஸ் கிழக்கு ஆசியாவின் திட்ட மேலாளர் நந்திகேஷ் சிவலிங்கம் கேட்டார். என்.டி.பி.சி மற்றும் கோல் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடுகளை கொண்டுள்ளன; ஆனால் இவை நிலக்கரித் துறையுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இல்லை என்றும் அவர் கூறினார்.
புதுப்பிக்கத்தக்க வளர்ச்சி 2018 இல் குறைந்தது
பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் 2015இன் படி, 175 ஜிகாவாட் (GW) - ஒரு ஜிகாவாட் 1,000 மெகாவாட் (MW) - புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலை 2022ஆம் ஆண்டுக்குள் நிறுவ ஒப்புக்கொண்டு இருக்கிறது. இது, புதைபடிவ எரிபொருட்கள் மீதான இந்தியாவின் நம்பகத்தன்மையைக் குறைத்து, காற்று மாசுபாட்டிற்கு எதிரான அதன் போராட்டத்திற்கு உதவியிருக்கும். ஒவ்வொரு எட்டு இறப்புகளில் ஒன்று மற்றும் 2017 இல் இந்தியாவில் 12.4 லட்சம் பேர் இறப்புக்கு காற்று மாசு காரணமாக இருந்துள்ளது.
ஆனால் 2017 வரையிலான நான்கு ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க மின் திறன் நிறுவலில் சாதனை வளர்ச்சிக்குப் பிறகு, திறன் கூட்டல் 2018ஆம் ஆண்டில் குறைந்தது என்பதை, கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட் திட்டத்திற்கு முன்பாக, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜனவரி 24 கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் முடிவுக்கு வர முக்கிய காரணங்கள்: உள்நாட்டு உற்பத்திக்கு உதவ, இறக்குமதி செய்யப்பட்ட சூரிய தொகுதிகள் மீதான அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரி- ஜிஎஸ்டி (GST) கீழ் அதிக வரிவிதிப்பு விகிதங்கள் மற்றும் தெளிவற்ற கொள்கை ஆகியன.
மே 2019 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 22% புதுப்பிக்கத்தக்க மூலங்களைக் கொண்டுள்ளது; நிலக்கரி, லிக்னைட், எரிவாயு மற்றும் எண்ணெய் 63.2% ஆகும் என்று மின் அமைச்சகம் மேற்கோளில் தெரிவித்துள்ளது. இந்தியாவும் 2018 ஆம் ஆண்டில் 2,299 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றியது; இது முந்தைய ஆண்டை விட 4.8% அதிகரிப்பு ஆகும்.
"செயல்திறன் இடைவெளி நிதி மற்றொரு பிரச்சினை," சிவலிங்கம் கூறினார். பொருளாதார இடைவெளி நிதி என்பது பொருளாதார ரீதியாக நியாயப்படுத்தப்பட்ட ஆனால் நிதி ரீதியாக சாத்தியமில்லாத திட்டங்களை ஆதரிப்பதற்கான மானிய வடிவில், அரசு வழங்கும் நிதி உதவி ஆகும். தனியார் துறையில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக, இவ்வகையான ஆதரவு முக்கியமாக வழங்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவன முதலீடுகளின் வடிவத்தில் நிலக்கரிக்கு அரசு ஆதரவை வழங்குகிறது;மேலும் புதுப்பிக்கத்தக்க பொருட்களிலும் இதே போன்ற முதலீடுகள் தேவை என்று சிவலிங்கம் கூறினார்.
புதுப்பிக்கத்தக்க துறையில் பங்கு உயர்கிறது, ஆனால் நிலக்கரி திறன் உள்ளது
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் கீழ் இந்தியாவின் கடமையாக நிலக்கரியை குறிக்கவில்லை என்று எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் எரிசக்தி நிதி மைய இயக்குனர் கனிகா சாவ்லா கூறினார். "இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன்கள் மற்றும் உமிழ்வைக் குறைப்பது பற்றி மட்டுமே பேசுகிறது," என்றார் அவர்.
உமிழ்வுகளில் குறைப்பு என்பது ஆற்றல் கலவையை பசுமைப்படுத்தும் செயல்பாடு, மின்சக்தி இலக்குகள் மற்றும் பல. இந்த சூழலில், இந்தியாவின் எரிசக்தி ஆற்றல் மாற்றம் தனித்துவமானது. "புதுப்பிக்கத்தக்க பொருட்களின் பங்களிப்பு நம்மிடம் இருந்தாலும், நாம் தொடர்ந்து வெப்பத் திறனைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்," என்று சாவ்லா கூறினார். இங்கே, ‘வெப்ப திறன்’ பெரும்பாலும் நிலக்கரி திறனையே குறிக்கிறது. ஏனெனில் வெப்ப ஆற்றலுக்கான மொத்த நிறுவப்பட்ட திறனில் 86% நிலக்கரியை கொண்டுள்ளது (மீதமுள்ளவை எண்ணெய், எரிவாயு மற்றும் லிக்னைட்).
"புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் மட்டுமல்லாமல், எரிசக்தி சேமிப்பு போன்ற தொடர்புடைய சேவைகளிலும் புதிய தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அரசு பொது பணத்தை வைக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்று சாவ்லா கூறினார். இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் பெரும்பாலும் தேவையான கவனத்தைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடுகிறது; ஏனெனில் நாடு பெரும்பாலும் பிற பயன்பாடுகளில் (நீர்ப்பாசனத்திற்கான இயக்கத்திற்கு சூரிய சக்தி போன்றவை) கவனம் செலுத்துகிறது.
பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, என்.டி.பி.சி மிகப்பெரிய பொதுத்துறை நிறுவன பயனாளி ஆகும் - இது பொதுத்துறைகளுக்கு வழங்கப்பட்ட ரூ. 40,121 கோடியில் ரூ .20,000 கோடியை (50%) பெறுகிறது. இது என்.டி.பி.சி தனது சொந்த சூரிய மின்சக்தி அலகு இயக்கும் வரை, சுயமாக மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வாங்குகிறது மற்றும் நாடு முழுவதும் உள்ள விநியோக நிறுவனங்களுக்கு விற்கிறது.
வெப்ப சக்திக்கு பெரும்பாலும் பிற வகையான ஆதரவு
பட்ஜெட் ஒதுக்கீடுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கார்பன் (CO2) தீவிர முறைகளுக்கு அரசு ஆதரவின் ஒரு பகுதியை மட்டுமே உருவாக்குகின்றன. எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரிக்கான மானியங்கள் 2016-17 நிதியாண்டில் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மற்றும் மின்சார வாகனங்களுக்கான மானியங்களின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம் என்று இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சஸ்டைனபிள் டெவலப்மென்ட் -ஐ.ஐ.எஸ்.டி (IISD) இன் 2017 அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஐ.ஐ.எஸ்.டி அறிக்கையில் உள்ள 'மானியங்கள்' என்ற சொல் நேரடி பட்ஜெட் ஒதுக்கீடுகள், வரி விலக்குகளை உள்ளடக்கியது. இதில் நிலக்கரி தவிர வேறு மின்சக்தி ஆதாரங்களுக்கு அதிக விகிதத்தில் வரி விதிக்கப்படும் நிகழ்வுகள் மற்றும் நிலம் வாங்குவதற்கும் கடன்களுக்கும் சலுகை விகிதங்கள் ஆகியவை அடங்கும் என்று, உலகளாவிய மானிய முயற்சி (Global Subsidies Initiative) அமைப்பின் மூத்த மின்துறை நிபுணரான விபுதி கார்க் விளக்கினார்.
உதாரணமாக, நிலக்கரியாந்து மிகக் குறைந்த ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் இடம், 5% விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சூரிய மின் சக்தி ஒரு மதிப்பீட்டு முறையின் கீழ் வரி விதிக்கப்படுகிறது - இங்கு 70% மதிப்பானது பொருட்களாக காணப்படுகிறது மற்றும் 5% வரி விதிக்கப்படுகிறது; 30% ஒரு சேவையாகக் கருதப்படுகிறது மற்றும் 18% வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும், துறை மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் உண்மையான விகிதம் 90:10 என்று கூறி இருக்கிறது.
விகிதத்திற்கான அடிப்படையை ஒதுக்கி வைத்துக் கொண்டால், இத்தகைய வரிவிதிப்பு விகிதங்கள் ஊக்கமளிக்கின்றன, மேலும் 2022 ஆம் ஆண்டில் ‘சூரிய மிஷனின்’ ஒரு பகுதியாக 100 ஜிகாவாட் சூரியசக்தியைச் சேர்ப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் நாட்டின் திறனைக் குறைக்கும் என்று கார்க் கூறினார். "இவை மானியங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, ஏனெனில் அவை நேரடியாக வரி செலுத்துவோரின் பாக்கெட்டிலிருந்து வெளிவருகின்றன, மேலும் இந்தத் தொழில்களுக்கு அவற்றின் மின் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படுகின்றன," என்று அவர் மேலும் கூறினார்.
நிதியுடன் நீண்ட போராட்டத்தைக் கொண்டுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
இந்த போக்குகள் ஆற்றல் துறையில் வெப்ப மூலங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன, அதே நேரத்தில் புதுப்பிக்கத்தக்கவை, குறிப்பாக இந்த துறையில் புதுமைகள், குறிப்பாக நிதிக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து போராடும். இந்தியாவின் நிலக்கரி எரி மின் உற்பத்தி திறன் மூன்று ஆண்டுகளில் 22.4% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் என்டிபிசி அதன் நிலக்கரி எரியும் திறனை 432 ஜி.வா.விலிருந்து 85 ஜிகாவாட்டாக 2032 க்குள் உயர்த்த உள்ளது என்று மின் அமைச்சகத்தின் தலைமை பொறியாளர் கன்ஷ்யம் பிரசாத் 2019 ஜூலை 31இல் தெரிவித்தார். இது 80% அதிகரிப்பைக் குறிக்கிறது.
2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, கோல் இந்தியா முதலிடத்தையும், என்டிபிசி உலகளாவிய 250 நிறுவனங்களின் பட்டியலில் 54 வது இடத்தில் உள்ளது, அவை பசுமை இல்ல வாயுக்களின் உலகளாவிய வருடாந்திர உமிழ்வுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு பொறுப்பாகும்.
அத்துடன், 60% க்கும் அதிகமான துகள்கள், 50% சல்பர் டை ஆக்சைடு உமிழ்வு மற்றும் 80% க்கும் மேற்பட்ட பாதரச உமிழ்வுகளுக்கு பொறுப்பாக இருப்பதைத் தவிர, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) 2015-இல் அறிக்கை செய்தது, அனைத்து தொழில்களாலும் மொத்த நன்னீர் திரும்பப் பெறுவதில் 70% மற்றும் சாம்பல் வடிவில் பெரிய அளவிலான கழிவுகளை கொட்டுவதற்கும் மின் துறை பொறுப்பாகும். "100 கோடி டன் சாம்பல் இன்று பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 16 கோடி டன்களுக்கு மேல் சேர்கிறது" என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
நிலக்கரியை ஆதரிப்பதற்கான பாரம்பரிய வாதமாக இருப்பது என்னவென்றால், இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கான மலிவான மின் உற்பத்திக்கான வழி இது என்பது தான். ஆனால் பிப்ரவரி 2019 இல் இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு இந்த வாதத்தை நிராகரித்தது: சூரிய அல்லது காற்றை அடிப்படையாகக் கொண்ட மின்சார உற்பத்தியை விட அதிக செலவுகள் மற்றும் பசுமை வரிகளின் சுமை ஆகியன, நிலக்கரித் துறை நிதி சிக்கல்களால் சூழப்பட்டுள்ளது என்று நாங்கள் வாதிட்டோம்.
மோசமான நிலக்கரி வினியோகம், நிலக்கரி மூலங்களில் இருந்து தொலைவில் உள்ள இடங்கள், காலாவதியான உபகரணங்களின் பயன்பாடு மற்றும் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் இல்லாதது ஆகியவை நிலக்கரித் துறையில் நிதி அழுத்தத்திற்கு முக்கிய காரணங்களாக இந்தியா ஸ்பெண்ட் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. சமீபத்திய ஏலங்களின் அடிப்படையில், சூரிய மற்றும் காற்றாலை மின் தொகுப்பு இப்போது நிலக்கரியுடன் முழுமையாக போட்டியிடுகின்றன; காற்று மாசுபாடு மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுடன் தொடர்புடைய சுகாதார பிரச்சினைகள் இல்லாமல் ஐ.ஐ.எஸ்.டி.யின் கண்காணிப்பை இது வலுப்படுத்துகிறது.
(பர்திகர், பெங்களூருவை சேர்ந்த பத்திரிகையாளர்).