இந்தியாவின் தெரியாத தகவல்களை கூறும் விருது வென்ற எமது பணிகள்; 2018-ன் விவாதங்களுள் ஒன்றாக மாறின

Update: 2019-01-01 00:30 GMT

மும்பை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வேலைகளில் பெண்களின் பங்கு குறைந்து வருவது தொடர்பாக பொருளாதார ஆய்வறிக்கை மீதான எமது கட்டுரையை மேற்கோள்காட்டி வாதிட்டதன் மூலம், 2018ஆம் ஆண்டில் விவாதிக்கப்பட்டவைகளில் இந்தியா ஸ்பெண்ட் மற்றும் பேக்ட் செக்கர்.இன் கட்டுரைகளும் ஒன்றாகின.

உண்மையான மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் போக்குகளை கண்டறிவதற்கு, தரவுகளை பயன்படுத்தி, நெருக்கடியான சிக்கல்களை எளிதாக்கவும் சரி பார்க்கவும் விரிவான அறிக்கை மற்றும் கள விசாரணைகளை மேற்கொண்டு, தேசிய, பொது நலன் சார்ந்த பிரச்சனைகளின் பின்னே உள்ள உண்மைகளை நாங்கள் 2018 ஆம் ஆண்டில் வெளியிட்டு வந்தோம்.

மதம் சார்ந்தது, பசு தொடர்பான வன்முறைகள் மற்றும் குழந்தை கடத்தல் வதந்தி ஆகிய மூன்று வெறுக்கத்தக்க குற்றங்கள் தலைப்பில் நாங்கள் அளித்த புள்ளி விவரங்களுடன் கூடிய கட்டுரைகள், இச்சம்பங்களை புரிந்து கொள்ளவும், ஆவணப்படுத்தவும் உதவின; பொதுமக்கள், அதிகாரிகள் மத்தியில் புரிதலை ஏற்படுத்தியது. சுகாதாரம் மற்றும் பாலினம் தொடர்பாக சொல்லப்படாத புதிய தகவல்களை நாங்கள் ஆழமாக அலசி வெளியிட்டது, இந்த ஆண்டு எங்களுக்கு விருதை பெற்றுத் தந்தது.

நாங்கள் 2019-ல் உத்வேகத்துடன் பயணிக்க துவங்கும் முன், விருப்பமான சில கட்டுரைகளை கீழே மீண்டும் சற்று நினைவுகூர்வோம்:

விரைவான அனுமதியால் இந்திய வனவிலங்குகளுக்கு ஆபத்து

வனவிலங்குகள் பாதுகாப்பிற்கான இந்தியாவின் கொள்கைகள், அதற்கான உத்திகளை ஏற்படுத்துவது, வனவிலங்கு தேசிய வாரியத்தின் பொறுப்பாகும். அதன் முக்கிய பணிகளில் ஒன்று, வன உயிரினங்களையும் வனங்களையும் பாதுகாப்பதற்கான மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்குபடுத்துவதாகும். ஆனால், பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சியின் நான்கு ஆண்டுகள் காலத்தில் வனப்பகுதிகள், ’பாதுகாக்கப்பட்ட பகுதிகளை’ சேதப்படுத்தும் திட்டங்களை இக்குழு அரிதாகவே நிராகரித்துள்ளது என்பதை எங்களது ஆய்வில் கண்டுபிடித்தோம்.

வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு வன உயிர்பாதுகாப்பு அனுமதிகள் விரைவாக வழங்குவதன் மூலம், இந்த உச்ச அமைப்பின் பாதுகாப்பு நெறிமுறைகள், திட்டங்களை  நீர்க்கச் செய்யப்படுகிறது என்பதை இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு வெளிப்படுத்தியது. நீர் ஆதாரங்களை குறைப்பதன் மூலம் இந்தியாவின் அழிவுகரமான வனவிலங்குகளை மேலும் அழிவின் விளிம்புக்கு தள்ளி, உள்ளூர் மற்றும் உலக வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கிறது.

தலித்துகளின் வளர்ச்சி வன்முறைக்கு எவ்வாறு வித்திடுகிறது; மேல் ஜாதியரின் எதிர்ப்பு

இந்திய சமுதாயத்திற்குள் இருக்கும் ஆழமான தலித் விரோத போக்கு, வன்முறைகள், அண்மை ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்களாக வெளிப்பட்டு வந்துள்ளன. முன்பு தலித்துகள் தீண்டத்தகாதவர்களாகவும், ‘தூய்மையற்ற’ பணிகளுக்கு பொருந்துபவர்கள் என்று உயர் ஜாதி ஆண்கள், பெண்கள் கருதி வந்தனர். ஆனால், இப்போது தலித்துகள் அதிக எண்ணிக்கையில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்றனர்; சிறந்த வேலைகளை தேடிக் கொண்டு பணியில் அமர்வதன் மூலம் நீண்டகால சமத்துவத்தில் ஆர்வமாக உள்ளனர்.

இது தொடர்பான எங்களின் இரு பகுதிகளை கொண்ட தொடரின் முதல் பிரிவில் தலித்துகள் அதிக எண்ணிக்கையில் பள்ளியை முடித்தாலும், கல்லூரிகளில் சேர்ந்து அதிக வருவாய் ஈட்டினாலும், ஜாதிகளை கடந்து திருமணம் செய்து கொள்வதற்கு இன்னமும் கடும் எதிர்ப்பு உள்ளதை கண்டறிந்தோம். இது உண்மை என்பதை, நவி மும்பை போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் நடந்த சம்பவங்களே உறுதிப்படுத்துகின்றன; அங்கு 15 வயதான ஸ்வப்னில் சோனாவனே என்ற தலித், 2016ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். அவர், ஒரு உயர் ஜாதி பெண்ணுடன் கொண்டிருந்த காதலே இதற்கு காரணம்.

எமது இரண்டாவது பகுதியானது, எழுத்தறிவு மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறைகள் பெருகி வரும் கிராமப்புறங்களில் ஜாதி நிலை குறித்து தலித்துகள் கேள்வி எழுப்புகின்றனர். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தலித்துகளின் திருமண ஊர்வலங்களை தடுத்து நிறுத்தும் மேல்ஜாதி அமைப்பினர் பலர், பாட்டு பாடி இசைக்கும் உரிமைக்கும், மேல் ஜாதியில் உள்ளது போல் மாப்பிள்ளை அழைப்பு நடத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்ற கேரளா

வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் (TB) முடிவுக்கு வர வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் செயல்படும் இந்தியா, இவ்விவகாரத்தில் கேரளாவில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளக்கூடிய படிப்பினைகள் உள்ளன. இம்மாநிலம், நாட்டின் மிகக் குறைந்த காசநோயாளிகளின் விகிதமாக 1,00,000 பேரில் 67 பேர் என்ற விகிதத்தை கொண்டுள்ளது. இது, 1,00,000 பேரில் 138 பேர் என்ற தேசிய சராசரியைவிட பாதிக்கும் குறைவானது.

இது தொடர்பான எமது நான்கு பகுதிகளை கொண்ட தொடர்களில் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கை, சுகாதார ஊழியர்களை ஈடுபடுத்துவதில் உள்ள முனைப்பு, தடுப்பு மருந்துகளை நிர்வகித்தல், கண்டறிதல் கருவிகள் அணுகலை அதிகரித்தல், பாதிக்கப்பட்ட நபர்களை கண்காணித்தல், சுகாதாரம் மற்றும் பணியாளர்களை ஈடுபடுத்துதல் என நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை முறைகள் அமைந்திருந்தன.

பகுதி 1: How Kerala Is Fighting TB, And Winning

பகுதி 2: How Once ‘Backward’ Idukki Is Leading Kerala And India In Ending TB

பகுதி 3: In One Kerala District, A Community Group Supports TB Patients At No Cost To Govt

பகுதி 4: How Kerala Has Enlisted The Private Sector In Its War Against TB

அதிகரிக்கும் குழு தாக்குதல்கள்

இந்தியா முழுவதுமான செய்திகளை நாங்கள் பகுப்பாய்வு செய்ததில், 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து, 61 குழுவாக சேர்ந்து தாக்கிய சம்பவங்களில் 24 பேர் கொல்லப்பட்டனர்; குழந்தை கடத்தும் கும்பல் நடமாடுவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளை தொடர்ந்து இத்தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன.

2017 ஆம் ஆண்டில் எட்டு குழு தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதைவிட அடுத்தாண்டில் 4.5 மடங்கு இத்தாக்குதல்களும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அனைத்து சந்தர்ப்பங்களிலுமே பாதிக்கப்பட்டவர்கள் மீது சந்தேகத்தின் பேரில் தான் தாக்குதல்கள் நடந்துள்ளன; அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 21 குழு தாக்குதல்கள் தொடர்பாக, 181 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு (அக்டோபர் 2018) பேக்ட்செக்கர்.இன் இணையதளத்தில் வெறுக்கத்தக்க குற்றம் என்ற புள்ளி விவரங்கள் பகுதி அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் உள்ள ஆங்கில இதழ்கள், இணையதள செய்தி ஆதாரங்கள், மத வெறுப்புணர்வு குற்றங்களின் அறிக்கைகளை சரிபார்த்து வருகிறது. உலகம் முழுவதுமான சோதனைகளை  மாதிரியாக கொண்டு, வெறுப்பு குற்றங்களை இந்த தரவுத்தளம் வாயிலாக ஆவணப்படுத்தும் எமது முயற்சி ஆகும். இதில் அதிகமான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை மற்றும் தேசிய குற்ற ஆவணப்பிரிவால் தனித்தனியாக பதிவு செய்யப்படவில்லை.

வன்முறை அதிகரிப்பு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இந்தியா ஸ்பெண்ட் வெளியிட்ட புள்ளி விவரங்களை, அவர் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

உள்ளாட்சிகளின் முகத்தை மாற்றிக்காட்டும் தமிழ்நாட்டு பெண்கள்

கடந்த இருபது ஆண்டுகளாக தமிழக உள்ளாட்சி நிர்வாகங்களின் முகத்தை இப்பெண்கள் தலைவர்கள் மாற்றியுள்ளனர். இன்று, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள் என அனைத்து மட்டங்களிலும் 2,77,160 பெண்கள் தலைவர்களாக உள்ளனர்.

இத்தகைய பெண் நிர்வாகிகள் சட்டசபை மற்றும் நாடாளுமன்றம் என்று பிரதான அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுக்க இயலுவதில்லை? ஏனென்றால் கட்சி கட்டமைப்புகளில் மேல்ஜாதி ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதும், பாலின வேறுபாடு ஆழமாக வேரூன்றி இருப்பதும் தான் என்று, தமிழ்நாட்டு பெண் தலைவர்களிடம் இந்தியா ஸ்பெண்ட் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஐந்து பகுதி தொடரின் மற்ற கட்டுரைகள்:

பகுதி 1: The Triumph Of Sharmila Devi And Tamil Nadu’s Women Leaders

பகுதி 2: Meagre Funds, No Salary: How Tamil Nadu’s Women Leaders Still Succeed

பகுதி 3: Why Muthukanni, A Dalit, Had To Build Her Own Panchayat Office

பகுதி 4: Tamil Nadu’s Women Leaders Live, Work In The Shadow Of Violence

பகுதி 5: Why 277,160 Women Leaders Remain Invisible To Tamil Nadu’s Political Parties

நமது பொது சுகாதார அமைப்புக்கு என்ன நேர்ந்தது?

ஆர்த்தி மற்றும் கைலாஷின் கதையானது, இந்தியாவின் பொது சுகாதார அமைப்பில் உள்ள குறைபாடுகள் வறியவர்களை விட்டு அது எவ்வாறு விலகியிருப்பது என்பதற்கு உதாரணமாக இருந்தது என்ற கட்டுரை ஒரு நினைவூட்டலாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆயுஷ்மன் பாரத்-தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் தொடங்குவதற்கு முன்பு, அது ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது: இந்தியாவின் பல பகுதிகளிலும் நூறு கிலோமீட்டருக்குள்ளாக தனியார் மருத்துவமனை இல்லாதது; அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர் அல்லது பிறவசதிகள் இல்லாதபோது, காப்பீடு திட்டத்தால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது?

போதிய உடல்நலப் பாதுகாப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கையானது, மிகவும் பாதிக்கப்படும் வறிய குடும்பங்களுடையது என்பது எமது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்த நாங்கள் வெளியிட்ட செய்தி, உலக சுகாதார செய்திக்கான பிரிவில் இதழியல் சர்வதேச மையம் (ICFJ) விருதை எங்களுக்கு பெற்றுத் தந்தது.

வேலையில் ஈடுபடும் பெண்கள், ஏன் மறைக்கப்படுகிறார்கள்?

தேசிய அளவில் நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வில், வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கைக்கு பல காரணங்களை கண்டறிந்தோம். குடும்பத்தினரின் அனுமதியை பெறுதல், பெண்களுக்கு பொருத்தமான வேலை என்பதில் சமூகத்தின் மனப்பாங்கு, ஊதியம் பெறாத கவனிக்கும் பொறுப்புகளில் சமமற்ற போக்கு, பாதுகாப்பு பிரச்சனைகளை கையாளுதல், மலிவு இல்லாதது, நம்பகமான போக்குவரத்து போன்ற காரணங்கள் இதில் அடங்கும்.

பணியில் இருந்து வெளியேறும் பெண்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதை பொருளாதார வல்லுனர்கள் ‘தாய்மை தண்டனை’ என்கின்றனர். எமது தொடர் விசாரணையின் 12வது பகுதியில் நாம் கேட்டது: மகப்பேறு விடுப்பு பணி புரியும் பெண்களுக்கு மட்டுமே தடையாக உள்ளதா? பெண் தொழிலாளர்  பங்களிப்பில் திருமணமான பெண்களின் எண்ணிக்கை ஏன் வீழ்ச்சி அடைந்துள்ளது? இதை நாம் எப்படி மாற்றலாம்?

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News