ஆவணங்களோ, சலுகைகளோ இல்லை: இந்தியாவின் கண்ணுக்கு புலப்படாத தொழிலாளர்கள் எவ்வாறு தங்களை காப்பாற்றிக் கொள்கின்றனர்
புதுடெல்லி:உரிய பாதுகாப்பு வலையமைப்பு இருந்திருந்தால், இந்தியாவில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையில் இருக்கும் கூலி தொழிலாளர்கள், கோவிட்-19 ஊரங்கின் போது துயரம் என்ற பாறைக்கு அடியில் சிக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை தரவு காட்டுகிறது. ஆவணங்கள் மற்றும் பதிவு இல்லாததால், பல தொழிலாளர்கள் அரசு நிவாரணத்தை பெருவதில் இருந்து தடுக்கப்பட்டனர் மற்றும் கோவிட்-19 ஊரடங்கின் போது முதலாளிகள் தங்களது தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய பலன்களில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவும் அது அனுமதிக்கப்பட்டனர். இது பல லட்சம் தொழிலாளர்களை வேலையின்றி மற்றும் வீடுகளில் இருந்து தொலைவில் அவர்களைமுடக்கச் செய்தது.
சிக்கலான சுய-பதிவு செய்யும் செயல்முறைகள் மற்றும் சலுகைக்காக முதலாளிகள் தங்களது தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுதல் போன்றவை, பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததற்கான இரு முக்கிய காரணங்கள். முன்னோக்கி செல்லும் வழியாக, தொழிலாளர்கள் பொருளாதார அதிர்ச்சியில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால், வேலைகளின் அமைப்புசாரா தன்மை முறைப்படி மாற வேண்டும் என்று தொழிலாளர் உரிமை ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
"ஆவணப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் நலனில் கூட தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள பலவீனமும் தொழிலாளர் உரிமைகள் பெரும்பாலும் மீறப்படுவதற்கான ஒரு முக்கிய காரணம் - இதபெரிதும் ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்களின் தொகுப்பாகும்" என்று டெல்லியை சேர்ந்த சமூக நிறுவனமான கிராம் வாணியின் இணை நிறுவனர் ஆதிதேஷ்வர் சேத் கூறினார்; இந்த நிறுவனத்தின் மொபைல் வாணிஎன்ற தளம், ஏப்ரல் 14 முதல் ஜூன் 1 வரை 1,040 தொழிலாளர்களிடம் கணக்கெடுப்பைநடத்தியது. அப்போது பதிலளித்தவர்களில் 81% பேர், நான்கு மாநிலங்களில் அமைப்புசாரா துறையில் பணியாற்றினர். 62% பேர் எந்தவொரு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை; 20% பேருக்கு இதுபோன்ற எந்தவொரு திட்டமும் தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் ரெகுலர் ஊதிய தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் அதாவது 49.6%, சமூக பாதுகாப்பில் இல்லை, மற்றும் 71% பேருக்கு 2017-18 ஆம் ஆண்டில் எழுத்துப்பூர்வ வேலை ஒப்பந்தம் இல்லை என்று மிக சமீபத்திய பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ்(PLFS - பி.எல்.எஃப்.எஸ்) கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. கோவிட்-19 நெருக்கடி ஏற்பட்டபோது, நாடு முழுவதும் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்; ஆனால் மிக மோசமான பாதிப்பு முறைசாரா தொழிலாளர்கள் - இவர்கள், இந்தியாவின் தொழிலாளர்களில்92% வரை உள்ளனர் -- தங்களது முதலாளிகளிடம் இருந்து சிறிய ஆதரவையே பெற்றனர்; அவர்களில் பலர் அரசின் நிதி உதவி பரிமாற்றப் பலன்களை பெறவில்லை என்று கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.
எந்தவொரு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத காரணத்தாலும், வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்படாததன் விளைவாகவும், நேரடி பணப்பரிமாற்ற (DBT) பலனை அடையாமல், 65% தொழிலாளர்கள் அரசு வாக்குறுதி அளித்தபணப்பரிமாற்ற பலன்கள் எதையும் பெறவில்லை. பணப் பரிமாற்றங்கள் மிகவும் தேவையான கால அவகாசத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும்; ஏனெனில் பதிலளித்தவர்களில் 85% பேர் ஊரடங்கின் போது தங்களுக்கு எந்த வருமானமும் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் , 32% பணம் கடன் வாங்க வேண்டியிருந்தது; 15% பணம் பெற தங்கள் சொத்துக்களை விற்க வேண்டியிருந்ததை கணக்கெடுப்பு கண்டறிந்தது.
தொழிலாளர்கள் ஏன் பதிவு செய்யப்படவில்லை?
பல தொழிலாளர்களை பதிவு செய்வதில் இருந்து தடுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று சிக்கலான சுய-பதிவு செயல்முறை ஆகும். இதில் விரிவான ஆவணங்கள், பெரிய படிவங்களை நிரப்புதல் மற்றும் பல தொழிலாளர்களிடம் இல்லாத, வேலைவாய்ப்புக்கான ஆதாரம் கோருதல் உள்ளிட்டவை அடங்கும் என்று சேத் விளக்கினார். மாநில தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டும்; இது பிற மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு சவாலாக உள்ளது, கூடுதலாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் மற்றும் சம்பந்தப்பட்ட நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை.மறுபுறம், முதலாளிகள் தாங்கள் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைவாகக்காட்டி அதன் மூலம் பல சலுகைகளை அனுபவிப்பதை காண முடிகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, அமைப்பு சார்ந்த துறையின் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) மற்றும் ஊழியர்களுக்கான மாநில காப்பீடு (இ.எஸ்.ஐ) திட்டங்கள் மற்றும் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் (பி.ஓ.சி.டபிள்யூ) போன்ற பல சமூக பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பலங்களை அரசு வழங்குகிறது. இத்திட்டங்களின் கீழ் பதிவு செய்ய, முதலாளிகள் அல்லது ஒப்பந்தக்காரர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும்.
தங்கள் தொழிலாளர் எண்ணிக்கையை குறைவாக தெரிவிப்பதன் மூலம், முதலாளிகள் ஒரு ஊழியருக்கான சமூக-பாதுகாப்பு தொகை செலுத்துவதற்கான செலவுகள், ஊழியர்களுக்கு இடையேயான செலவினங்களை (போக்குவரத்து மற்றும் வாழ்க்கை செலவுகள் போன்றவை) மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டத்தின்கீழ் சேமிக்கிறார்கள்; அதே நேரம், தொழிற்சாலைகள், தொழில், தொழிற்சங்கமயமாக்கல் மற்றும் பலவற்றுடன் தொடர்புடைய பல்வேறு சட்டங்களின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை விட குறைவான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் நன்மைகளை அவர்கள் பெறுகிறார்கள் என்று கிராம் வாணியின் சேத் கூறினார்.
“இதன் பொருள், அவர்கள் [தொழிலாளர்கள்] கண்ணுக்கு புலப்படாதவர்கள் - அவர்கள் யார் என்று அரசுக்கு தெரியாது; அவர்களால் எந்தவொரு காப்பீட்டு சலுகைகள், மகப்பேறு சலுகைகள், வீட்டுவசதி மற்றும் அத்தகைய திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட பிற ஏற்பாடுகளை கோர முடியாது. முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை பற்றி குறைத்து கூறுவதில் ஊக்கத்தை பெறுகின்றனர், ”என்று சேத் கூறினார். தொழில்துறை பிரிவில் விதிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கை வரம்புகள் வெவ்வேறு அளவிலான இணக்கங்களையும் செலவுகளையும் கொண்டிருக்கின்றன; அந்த வரம்பின் கீழ் இருக்க முதலாளிகளுக்கு இடையே பலவிதமான நடைமுறைகள், அவை பெரும்பாலும் ஆவணம் இல்லாமல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்து போன்றவற்றை உருவாகிஉள்ளன என்று அவர் கூறினார்.
இது, தொழிலாளர்களுக்கு சிக்கலான சுய-பதிவு செயல்முறைகளுடன், தொழிலாளர் பதிவுகளை குறைக்கவும் வழிவகுத்தது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த மேம்பாட்டு அமைப்பான ஜன் சஹாஸ், ஏப்ரல் மாதம் கணக்கெடுத்த3,196 கட்டுமானத் தொழிலாளர்களில், 18.8% பேர் மட்டுமே கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நலத்திட்ட பதிவு அட்டையை வைத்திருந்தனர்.“இத்தகைய கண்ணுக்கு தெரியாததன் விளைவு, பணப் பரிமாற்றங்களை மட்டும் தடுக்கவில்லை; அது முதலாளிகளை அவர்களது கடமையில் இருந்து நழுவுவதையும் எளிதாக்குகிறது,” என்று புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சேவைகளை வழங்கும் ஒரு முன்முயற்சியான அஜீவிகா பணியகத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கண்டேல்வால் கூறினார். அஜீவிகா பணியகத்தால் இயக்கப்படும் தொழிலாளர் ஹெல்ப்லைனுக்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து, முதலாளிகள் தங்களை நகரங்களில் அப்படியே கைவிட்டு சென்று விட்டது தெரிவிக்கப்பட்டது. மொபைல் வாணி கணக்கெடுப்பின்படி, சுமார் 62% பேர் தங்கள் முதலாளிகளிடம் இருந்து எந்த ஆதரவையும் பெறவில்லை என்றும், ஊதியம் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.தொழிலாளர் சட்டங்களை பலவீனமாக அமல்படுத்துவது, தொழிலாளர் கண்ணுக்குத் தெரியாதது ஆகியன, அமைப்புசார்ந்த துறையில் உள்ள முதலாளிகள் கூட தங்கள் கடமைகளில் பின்வாங்குவதை எளிதாக்கியுள்ளது என்பது, கிராம் வாணியின் மார்ச் 2019 ஆய்வில்கண்டறியப்பட்டது.
வெவ்வேறு அளவுகளில் உள்ள தொழிற்சாலை யூனிட்டுகளில், பல தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆதாரம் -- அதாவது அடையாள அட்டை, சம்பள ரசீது, பணி நியமனக் கடிதம் -- போன்றவை இல்லை; பெரிய யூனிட்டுகளில் 20% தொழிலாளர்கள் மற்றும் சிறிய அலகுகளில் கிட்டத்தட்ட 50% தொழிலாளர்களுக்கு இதுபோன்ற ஆதாரம் இல்லை; இது அவர்களின் உரிமைகளை கோருவதைத்தவிர்த்து, முதலாளிகள் தங்கள் கடமைகளில் இருந்து விலகச் செய்வதை ஆய்வு கண்டறிந்துள்ளது.
சாத்தியமான தீர்வுகள்"வேலையை மீண்டும் தொடங்குவது நேரடியான செயலாக இருக்காது. நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் [MSMEs] மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு செல்ல, நான்கு மாத கெடுவை பரிந்துரைக்கின்றன. நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில், ஒரே நேரத்தில் ஒரு தொழிற்சாலையில் 35% தொழிலாளர்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற நிலையில், அவற்றின் அறிக்கைகள் அதற்கான உறுதியை தரவில்லை,” என்றார் சேத்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இப்போது தங்களது கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர்; அவர்களில் பலர் , வேலைவாய்ப்பைப்பெற ஆர்வமாக உள்ளனர், ஆனால் 90% பேர் தங்கள் கிராமத்திலேயே மீண்டும் தங்க விரும்புவதாகக் கூறியதாக மொபைல் வாணி கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. எவ்வாறாயினும், கிராமப்புற பொருளாதாரம் போதுமான வேலைவாய்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை, எனவே, அவர்கள் நகரங்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் இருக்கும் என்று இந்தியா ஸ்பெண்ட் மே மாத கட்டுரைதெரிவித்தது.கோவிட்-19க்கு பிறகு, இந்தியா தனது பொருளாதாரத்தை முறைப்படுத்துவதை நோக்கி நகரத் தொடங்க வேண்டும், அது பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடியது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சட்ட மற்றும் சமூக பாதுகாப்பில் இருந்து விலக்கும் அவர்களது பணியின் முறைசாரா தன்மை, வேரூன்றி இருக்கும் அவலம் உள்ளது; தாராளமயமாக்கலுக்கு பிந்தைய இரண்டு தசாப்தங்களில் உருவாக்கப்பட்ட 6.1 லட்சம் வேலைகளில் கிட்டத்தட்ட 92% முறைசாராவை . கோவிட்-19 போன்ற பொருளாதார அதிர்ச்சிகளில் இருந்து இந்தியா தனது தொழிலாளர்களை பாதுகாக்க விரும்பினால், அது தனது நடைமுறையை மாற்ற வேண்டும் என்று, அகமதாபாத் பொருளியல் பேராசிரியரும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்(ஐஐஎம்) இயக்குநருமான எரோல் டிசோசா, இந்தியா ஸ்பெண்டிற்கு மே மாதம் அளித்த நேர்காணலில்தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு அடிப்படையிலான சமூக-பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் தொழிலாளர்கள் சுய-பதிவைத் தொடங்க, எளிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று, கிராம் வாணி பரிந்துரைத்துள்ளது - பயன்பாட்டில் உள்ள அடையாள அட்டையை பெற வேண்டும்; அதே அட்டையை பயன்படுத்தி மாநிலத்தில் ரேஷன் போன்ற நலத்திட்ட சலுகைகளைப் பெறலாம். புதிய அமைப்பு தொழிலாளர் தரவுத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு - தொழிலாளர்களின் அடையாளம் (ஆதார், வாக்காளர் அடையாள அட்டை), பணியிடத்தின் இருப்பிடம், சொந்த இடம், வங்கி கணக்குகள், வேலைத்துறை போன்ற தகவல்களைக் கொண்ட அரசால் சேகரிக்கப்பட்ட தற்காலிக தரவுத்தளங்கள், நெருக்கடி காலத்தில் பணப்பரிமாற்ற பலன் பெறத்தகுதியான தொழிலாளர்களை அடையாளம் காணவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்தை எளிதாக்கவும் உதவும் என்று, கிராம வாணி தெரிவித்தது.
வேலைவாய்ப்புக்கான ஆதாரமாக முதலாளிகளிடம் இருந்து வாய்மொழி உறுதிப்படுத்தல்களை கருத்தில் கொண்டு --ஒப்பந்தக்காரர்களால் வழங்கப்பட்ட கச்சா ரசீது போன்றது -- வேலைவாய்ப்பு கோரிக்கைகளை மறுப்பதற்கான ஆதாரச் சுமையை முதலாளியிடம் மாற்றுவதோடு, மேலும் பல தொழிலாளர்கள் சமூகத்தின் கீழ் பாதுகாப்பு திட்டங்கள் கொண்டு வரப்படுவதை உறுதிசெய்ய முடியும் என்று சேத் கூறினார். "முதலாளிகளால் செயலற்ற நிலையில் இருந்தால், குறை தீர்ப்பு பிரிவில் முறையிட உதவும்; அது, இது தொழிலாளர்களின் கைகளில் அதிக அதிகாரத்தை தரும்," என்று அவர் கூறினார்.
(திவாரி, இந்தியா ஸ்பெண்ட்முதன்மை நிருபர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.