மோடி அரசின் செயல்பாடு 'சராசரிக்கு கீழே'; வாக்காளர்களின் முதல் 30 முன்னுரிமை குறித்த ஆய்வில் தகவல்

Update: 2019-03-30 00:30 GMT

மும்பை: பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க. ) தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடு, 30 முதன்மையானவற்றின் அடிப்படையில் சிறந்த வேலைவாய்ப்பு வாய்ப்புகள், சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் வழங்கல் - சராசரிக்கும் கீழே என்று வாக்காளர்கள் மதிப்பிட்டுள்ளதாக, 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அகில இந்திய ஜனநாயக சீர்திருத்த சங்கம் (All India Association of Democratic Reforms) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

"இந்த முரண்பாடானது, இத்துறைகளில் உள்ள நிர்வாக பற்றாக்குறையால் ஏற்படும் ஒரு விளைவாகும்; இது சராசரி இந்திய வாக்காளர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது," என கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. 2017 ஆம் ஆண்டின் நடுவில் நடத்தப்பட்ட ஏ.டி.ஆர். இன் இத்தகைய ஆய்வில், வாக்காளர்களின் முதல் ஐந்து கவலைகளுக்கான மதிப்பீடு ‘சராசரிக்கும் மேல்’ என்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 அக்டோபர் மற்றும் 2018 டிசம்பருக்கு இடையே 'ஆல் இந்தியா சர்வே ஆன் கவர்னன்ஸ் இஷ்யூஸ் வோட்டிங் பிகேவியர்ஸ் -2018' மொத்தமுள்ள 543 தொகுதிளில் 534இல் 2,73,487 பேரிடம் கருத்துகளை கேட்டறிந்தது.

குடிநீர், மின்சாரம், சாலை வசதி, உணவு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்டவை வாக்காளர்களின் முதல் 30 முன்னுரிமைகளில் இருந்ததை ஏ.டி.ஆர். அறிக்கை அடையாளம் காட்டுகிறது. இதை மதிப்பிடுவதற்காக, வாக்காளர்கள் தங்கள் முதல் ஐந்து கவலைகளை பட்டியலிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதில், 46.8% வாக்காளர்கள் 'சிறந்த வேலைவாய்ப்பு இல்லாதது தங்களுக்கு கவலை தருவதாக கூறினர்; அடுத்தடுத்த இடங்களில் சிறந்த சுகாதார பராமரிப்பு (34.6%), குடிநீர் (30.5%) உள்ளன.

இந்த கண்டுபிடிப்புகள் 2018 மே - ஜூலையில் நடந்த பியூ ஆராய்ச்சி மைய ஆய்வை ஒத்திருக்கிறது - அதாவது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசின் கடைசி ஆண்டு தொடக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற 2,521 பேரில் 70% பேர், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியன இந்தியாவின் மிகப்பெரும் சவால்கள் என தெரிவித்தாக, மார்ச் 26, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

ஆய்வின் போது வாக்காளர்களின் 30 முன்னுரிமைகள் ஒவ்வொன்றிலும் அரசின் செயல்திறனை மதிப்பீடு செய்ய ஏ.டி.ஆர் கேட்டுக் கொண்டது. இதில் ‘நன்று’, ‘சராசரி’ மற்றும் ‘மோசம்’ என்ற மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டன. 5 புள்ளிகள் எனில் ‘நன்று’, 3 புள்ளிகள் எனில் ‘சராசரி’ மற்றும் 1 புள்ளி எனில் ‘மோசம்’ என்று மதிப்பீடுகள் தரப்பட்டன.

வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் குடிநீர் தேவை - ஆகிய மூன்று முக்கிய மக்களின் கவலை விவகாரத்தில் அரசின் செயல்பாட்டிற்கான மதிப்பீடு முறையே 2.15, 2.35 மற்றும் 2.52 என்றிருந்தது. இது சராசரிக்கும் கீழ் உள்ளது என்கிறது அறிக்கை. உண்மையில், இந்தியாவின் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பட்டியலிடப்பட்ட 30 பிரச்சனைகளிலுமே அரசின் செயல்பாட்டுக்கான மதிப்பீடு, 5இல் 3க்கு கீழ் இருந்தது.

“வாக்காளர்களின் பட்டியலிடப்பட்ட 30 முன்னுரிமைகளில் அரசின் செயல்திறன் எதுவும் சராசரி அல்லது அதற்கு மேல் இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது தீவிரமாக கவலை கொள்ள வேண்டிய விஷயம்” என்று அறிக்கை தெரிவிக்கிறது.

வாக்காளர்களின் முதல் 10 முன்னுரிமைகளில் இடம் பெற்ற பிற பிரச்சனைகளில் நல்ல சாலை வசதி, சிறந்த போக்குவரத்து, விவசாயத்திற்கு தண்ணீர் வசதி, விவசாய கடன்கள், விளை பொருட்களுக்கு சிறந்த விலை, விதைகள் மற்றும் உரங்களுக்கு மானியம் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.

Source: Association of Democratic Reforms, 2018

இந்திய வாக்காளர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சுகாதார வசதிகள், குடிநீர், பயங்கரவாதம் மற்றும் ஒரு வலுவான பாதுகாப்பு /ராணுவம் போன்றவற்றுக்கு முன்னுரிமை தருகின்றனர் என்பதை இது தெளிவுபடுத்துவதாக, அறிக்கை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் நிலங்கள், ஏரிகள், பயங்கரவாதம், வேலைவாய்ப்பு, வலுவான பாதுகாப்பு/ராணுவம், ஊழல் ஒழிப்பு, நுகர்வோருக்கு குறைவான உணவு விலைகள் மற்றும் சுரங்க / குவாரி ஆகியவற்றில் அரசு செயல்திறன் மோசமானது என்று மதிப்பிட்டுள்ளது.

சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மீதுள்ள அரசின் தரவரிசை- வாக்காளர்களின் முதன்மை அக்கறை - 16 வது இடத்தில் உள்ளது. சுகாதார பராமரிப்பு (7ஆம் இடம்) மற்றும் குடிநீர் (3 ஆம் ) ஆகியன பிற முக்கிய கவலைகள் ஆகும்.

Source: Association of Democratic Reforms, 2018

அரசின் செயல்திறன் மதிப்பீடுகள் மீதான முதன்மை வாக்காளர்களின் கவலை 2017இல் குறைவு

ஏ.டி.ஆர். இன் அகில இந்தியா இடைக்கால கணக்கெடுப்பு-2017 உடன் ஒப்பிடுகையில், சிறந்த வேலைவாய்ப்பு, சிறந்த மருத்துவமனைகள் / முதன்மை மருத்துவ மையங்கள் ஆகியன குறித்து வாக்காளர்களுக்கு மிகுந்த கவலையாக இருந்தன. அதேநேரம், வாக்காளர்களின் முதல் ஐந்து முன்னுரிமை வழங்குவதில் அரசின் செயல்திறன் சராசரிக்கும் குறைவாக 2018இல் குறைந்துவிட்டது என்று அறிக்கை சுட்டிக்காட்டியது.

கடந்த 2018 கணக்கெடுப்பில் குடிநீர், சிறந்த சாலை, போக்குவரத்து ஆகியவை முதல் ஐந்து இடங்களில் இருந்தன; இவை, 2017இல் இடம் பெற்றிருந்த விவசாய கடன், சட்டம் மற்றும் ஒழுங்கு, விவசாயத்திற்கு மின்சாரம் ஆகியவற்றுக்கு பதிலாக இடம் பிடித்தன.

உண்மையில் வேலைவாய்ப்பு இன்மை அதிகரிப்பு குறித்த வாக்காளர்களின் கவலை 2017 ஆம் ஆண்டில் 30% என்றிருந்தது, 2018 இல் 47% ஆக அதிகரித்தது. இந்த விஷயத்தில் அரசின் செயல்பாடு மதிப்பீடு 2017 இல் 5க்கு 3.17 என்றிருந்தது 2018ஆம் ஆண்டில் 2.15 ஆக குறைந்தது.

இதேபோல், 2017இல் 25% என்றிருந்த சிறந்த சுகாதார வசதிகளின் தேவை பற்றி வாக்காளர்களின் கவலை 2018 ஆம் ஆண்டில் 35% ஆக அதிகரித்தது. இது சம்பந்தமாக அரசின் செயல்பாடு மதிப்பீடு 3.36 (சராசரிக்கு மேல்), 2.35 (சராசரிக்கும் கீழ்) குறைந்தது.

பருகும் குடிநீர் கவலை அளிக்கும் அம்சம் என்பதற்கான வாக்காளர் முன்னுரிமை, 2017ஆம் ஆண்டில் 12% என்றிருந்தது 2018ஆம் ஆண்டு 30% ஆக அதிகரித்தது. அரசின் செயல்பாட்டு மதிப்பீடு 2.79% என்றிருந்தது 2.52% ஆக சரிந்தது.

Source: Association for Democratic Reforms, 2017 and 2018

Other highlights

  • The government received a below average ranking, ranging from 1.00 to 2.64 on a scale of 5, on 24 governance issues listed as top priorities of urban voters. On the three top priorities for these voters--better jobs, better healthcare centres and traffic congestion--the government’s performance was ranked 14th, 6th and 11th, respectively. Urban voters rated the government’s performance best on ‘Empowerment of Women and Security’ and worst on ‘Terrorism’.
  • On 26 governance issues important to voters in rural areas, the government received a below average rating ranging between 1.02 and 2.67 on a scale of 5. On the three top priorities for these voters--jobs, availability of water and farm loans--the government’s performance was ranked 11th, 10th and 12th, respectively. The government’s best-rated performance was on ‘better public transport’ while its worst rated performance was on ‘training for jobs’.
  • Male voters rated the government’s performance highest (2.59) for ‘Empowerment of Women and Security’, however, even this highest rating represents a ‘below average’ score. Women voters rated the government much lower on this parameter, giving it a score of 2.27.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News