கடன் தள்ளுபடிகள் தவற்றை ஊக்குவிக்கின்றன, விவசாய மானியம், கடனை மறுஆய்வு செய்க: ரிசர்வ் வங்கி
பெங்களூரு: 2019-20 வரையிலான ஆறு ஆண்டுகளில், 10 மாநிலங்கள் மொத்தம் ரூ. 2.4 லட்சம் கோடி - இது கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கான 2019-20 பட்ஜெட்டைவிட நான்கு மடங்கு அல்லது 2019-20 மத்திய பட்ஜெட்டில் 9% - விவசாய கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளதாக, இந்திய ரிசர்வ் வங்கி விவசாய கடன் குறித்த செப்டம்பர் 2019 அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆறு ஆண்டுகளில், 2017-18ஆம் அதிக தள்ளுபடியை கண்டது, ஏழு மாநிலங்களில் - ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் , பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் மொத்த நிதி பற்றாக்குறை (வருமானத்திற்கு மேல் மொத்த செலவு) 12%-ஐ அடைந்தது. மொத்தத்தில் அவை, 2017-18இல் கடன் தள்ளுபடிக்காக தங்களது பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ரூ. 49,000 கோடியை வழங்கின.
அதிக கடன் உள்ள விவசாய குடும்பங்களுக்கான கடன் தள்ளுபடிகள் “அவர்களை கடனில் இருந்து விடுவிப்பதால், புதிய முதலீடு செய்ய முடியும்”, தள்ளுபடிகள் “விவசாயத்திற்கான கடன் ஓட்டத்தை பாதிக்கின்றன” மற்றும் “தார்மீக ஆபத்தை” உருவாக்குகின்றன, இதன் மூலம் கடன் வாங்குபவர்கள் கடனை எதிர்பார்த்து மூலோபாய ரீதியாக இயல்புநிலையாக உள்ளனர்; தள்ளுபடியால்அவர்கள் பயனடைவார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தப்படுவதில்லை என்று, உள் பணிக்குழு குறிப்பிட்டது.
இதன் விளைவாக, கடன் தள்ளுபடியை அறிவித்த மாநிலங்களில், செயல்படாத சொத்து -என்.பி.ஏ (NPA) அளவு அதிகரிப்பைக் காட்டின, மற்ற பெரும்பாலான மாநிலங்களில் இது குறைவு அல்லது மாற்றத்தைக் காட்டவில்லை.
விவசாயக்கடனில் பிராந்திய ஏற்றத்தாழ்வுக்கான காரணங்களை புரிந்து கொள்வதற்கும், செயல்படக்கூடிய தீர்வுகளை பரிந்துரைப்பதற்கும் உள் பணிக்குழு உருவாக்கப்பட்டது. வேளாண்மையை, ஒரு சாத்தியமான மற்றும் நிலையான துறையாக மாற்ற, வேளாண் உள்ளீடுகள் மற்றும் கடனுக்கான “தற்போதைய மானியக் கொள்கைகளின் செயல்திறனை” மத்திய மற்றும் மாநில அரசுகள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று, அது பரிந்துரைத்தது.
நீடிக்கும் தள்ளுபடி
விவசாயக் கடன்கள் "சமூகநல அடிப்படையில், நகர்ப்புற-கிராமப்புற பிளவு, சமூக அமைதியின்மை மற்றும் விவசாயிகளின் தற்கொலைகளுக்கான நியாயங்களாக வேளாண் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத் திட்டம்- 2008 [ADWDRS] குறிப்பிடுகின்றன" என்று அறிக்கை கூறியுள்ளது.
ஆறு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடியானது, 1990இல் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.10,000 கோடியைவிட 24 மடங்கு (மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பயன்படுத்தி 2016-17 விலையில் ரூ.50,600 கோடி) மற்றும் 2007-08இல் தள்ளுபடி செய்யப்பட்ட கடன், கிட்டத்தட்ட ஐந்து மடங்கு (52,500 கோடி ரூபாய்) (அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி பண வீக்கத்தை பயன்படுத்தி 2016-17 விலையில் ரூ.81,200 கோடி) என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Report of the Internal Working Group to Review Agricultural Credit (September, 2019)
2019-20 வரையிலான ஆறு ஆண்டுகளில், தள்ளுபடிகளுக்காக 10 மாநில அரசுகள் தங்களது பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 64% அல்லது ரூ.1.5 லட்சம் கோடியை ஒதுக்கி உள்ளன. 2017-18 ஆம் ஆண்டில், இது ஏழு மாநில அரசுகளின் மொத்த நிதி பற்றாக்குறையில் கிட்டத்தட்ட 12% ஆகும். பற்றாக்குறை 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் முறையே 4.2 மற்றும் 5.3 சதவீத புள்ளிகள் குறைந்தது.
ஒரு மாநிலத்தின் செலவில் விவசாயக்கடன் தள்ளுபடி பங்கின் அதிகரிப்பு “விவசாயத்தில் மாநில அரசுகளின் மூலதனச் செலவைக் குறைக்கக்கூடும்” மற்றும் “அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடிகளுக்கான செலவினங்களை பூர்த்தி செய்வதற்கான பட்ஜெட் விதிகளை ஒத்திவைத்தல் என்.பி.ஏ.- இன் அதிகரிப்பு நிலைகள்” என, அறிக்கை குறிப்பிட்டது.
ஆதாரம்: Report of the Internal Working Group to Review Agricultural Credit (September, 2019)
படத்தில் வட்டத்தின் அளவு, 2017-18 ஆம் ஆண்டில் நிலுவையில் உள்ள விவசாய கடனில் மாநிலத்தின் ஒப்பீட்டு பங்கை அடிப்படையாகக் கொண்டது. சிவப்பு நிற வட்டம், 2017-18இல் கடன் தள்ளுபடியை அறிவித்த மாநிலங்களைக் குறிக்கிறது; மஞ்சள் நிற வட்டம், 2018-19இல் விவசாயக்கடன் தள்ளுபடி அறிவித்த மாநிலங்களை குறிக்கிறது.
பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 2017-18 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூ. 2.4 லட்சம் கோடியில் கிட்டத்தட்ட 41% ஆகும்.
குறைவான வேளாண் வருவாய்
சுமார் 70% கிராமப்புற குடும்பங்கள் முதன்மையாக விவசாயத்தை நம்பி உள்ளன, மேலும் இந்தியாவின் 86% விவசாயிகள் "சிறிய மற்றும் குறு" விவசாயிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்; அவர்கள் , இரண்டு ஹெக்டேர்களுக்கும் குறைவான - அதாவது 2 கால்பந்து மைதானங்களின் அளவு - நிலத்தை வைத்திருப்பவர்கள் என்று 2015-16 விவசாய கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜனவரி 28 கட்டுரை தெரிவித்துள்ளது.
சமீப ஆண்டுகளில் விவசாய மற்றும் கிராமப்புற துயரங்கள், இந்திய பொருளாதாரத்தில் உச்சத்தை எட்டியுள்ளன, சிறந்த மற்றும் ஊதியம் தரும் நியாயமான விலையை கோரி விவசாயிகள் பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, 2022ஆம் ஆண்டுக்குள் விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்பதாகும்.
"கடன் தள்ளுபடியைப் போலவே, இது [விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவது] சில மாநிலங்களில் ஏற்கனவே இருப்பதை போல், நேரடியாக அளிப்பது, எளிதான பாதையாக இருக்கக்கூடும்," என்று, அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக மேம்பாட்டு பள்ளியின் ஆசிரியரும், விவசாயத்துறையில் நிபுணருமான சீமா புருஷோத்தமன் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
"சாகுபடிக்கு நிலம் கிடைப்பதை நிவர்த்தி செய்வது நாட்டின் பல பகுதிகளிலும் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடும்" என்று புருஷோத்தமன் கூறினார். நில உரிமையானது குடும்பங்களின் விவசாயத் துயரங்களைத் தவிர்க்கவும் வறுமையில் இருந்து தப்பிக்கவும் உதவுகிறது என்று அவர் விளக்கினார்.
விவசாய விலையை பொறுத்தவரை, அவை சர்வதேச வர்த்தகம் மற்றும் அரசியலில் மையத்தின் அணுகுமுறையை ஓரளவு சார்ந்துள்ளது என்று, புருஷோத்தமன் கூறினார். உலகளாவிய வர்த்தகத்தின் போக்குகளுக்கு பதிலளிக்கும் வகையில், சிறிய நில உரிமையாளர்கள் பயிர் மாற்றங்களை செய்யும் நேரத்தில், சந்தைகள் புதிய சுழற்சிகளில் நுழைந்துள்ளன.
கடன்பாடு மற்றும் துயரம்
இந்தியாவின் 90 மில்லியன் விவசாய குடும்பங்களில் கிட்டத்தட்ட 70% ஒவ்வொரு மாதமும் சராசரியாக சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு ஆகிறது. அவை, கடனை நோக்கி அவர்களை தள்ளுகிறது, இது நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலைகளில் பாதிக்கும் மேலானதற்கு காரணமாகிறது.
விவசாயிகளுக்கும் விவசாயம்சாரா தொழிலாளர்களுக்கும் இடையிலான குறைந்த வருமானம் மற்றும் ஏற்றத்தாழ்வு ஆகியன, விவசாயத் துயரத்தின் தோற்றத்திற்கு ஒரு காரணியாகும் என்று மார்ச் 2017 நிதி ஆயோக் ஆய்வு தெரிவித்தது.
கடந்த 1980-களின் முற்பகுதியில் விவசாயம்சாரா தொழிலாளியின் வருமானத்தில் 34% விவசாயிகளின் வேளாண் வருமானம் ஆகும், இது 1993-94 ஆம் ஆண்டுடனான ஒரு தசாப்தத்தில் 25% ஆக குறைந்தது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011-12 வரையிலான எட்டு ஆண்டுகளில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டாலும், அது “1983-84 நிலையில் எந்த மாற்றமும் இல்லை” என்பதைக் காட்டியது.
மேலும், ஒரு விவசாயியின் உண்மையான வருமானம் 2015-16 வரையிலான இரண்டு தசாப்தங்களில் ஆண்டுக்கு 3.4% வளர்ச்சியடைந்தது, ஆனால் விவசாயிகளின் உண்மையான வருமானத்தை (பணவீக்கத்திற்கு சரிசெய்யப்பட்ட வருமானம்) 2015-16 ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டில் இரட்டிப்பாக்க, வேளாண் வருமானம் ஆண்டுதோறும் 10.41% வளர வேண்டும் என்று நிதி ஆயோக் ஆய்வு குறிப்பிட்டது.
இதற்கு நேர்மாறாக, அக்டோபர்-டிசம்பர் 2018 உடனான காலாண்டில் வேளாண் வருமான வளர்ச்சி 14 ஆண்டுகளில் மிகக் குறைவாக 2.04% என்றிருந்தது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மார்ச் 3, 2019 செய்தி தெரிவித்தது.
2012 வரையிலான ஏழு ஆண்டுகளில் நாடு முழுவதும் வருமானம் மேம்பட்டிருந்தாலும், மாநிலங்களுக்கு இடையே முன்னேற்றம் சமமற்றதாக இருந்தது, மேலும் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட விவசாயத் துறையில் தமது தந்தை பணிபுரிவது குறைந்துவிட்டதால், அதே தொழிலைத் தொடரும் குழந்தைகளின் வாய்ப்பும் குறைவாக இருப்பதாக இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜூலை 18 கட்டுரை தெரிவித்துள்ளது.
கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சராசரி மாதச் செலவு ரூ.6,646 ஆக இருந்தது. விவசாய குடும்பங்கள் - அதாவது விவசாய நடவடிக்கைகளில் இருந்து ரூ.5,000 க்கும் அதிகமான விளைபொருட்களைப் பெற்ற குடும்பங்கள் - வேளாண்மை அல்லாத குடும்பங்களுடன் ஒப்பிடும்போது 15% கூடுதல் செலவுகளை (ரூ. 6,187) சந்தித்தன என்று, அகில இந்திய கிராமப்புற நிதி சேர்க்கை கணக்கெடுப்பு 2016-17 அடிப்படையில் இந்தியா ஸ்பெண்ட் 2019 செப்டம்பர் 24 கட்டுரை தெரிவித்தது.
செயல்படாத சொத்துக்கள் அதிகரிக்கும்
விவசாயக்கடன் தள்ளுபடியை அறிவிக்காத பெரும்பாலான மாநிலங்கள் “தங்கள் என்.பி.ஏ. அளவில் எந்தவிதமான மாற்றத்தையும் காட்டவில்லை அல்லது உண்மையில் 2016-17 மற்றும் 2017-18 க்கு இடையில் சரிவைப் பதிவு செய்துள்ளன” (பீகார், ஒடிசா மற்றும் ஹரியானாவைத் தவிர), என்.பி.ஏ. 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில் விவசாயக்கடன் தள்ளுபடியை அறிவித்த அனைத்து மாநிலங்களின் நிலைகளும் உயர்ந்தன.
இது ஒரு "தார்மீக ஆபத்து" என்று, ரிசர்வ் வங்கி விவரித்தது, கடன் தள்ளுபடிகள் பயனாளிகள் மற்றும் பயனாளிகள் அல்லாதவர்களிடையே தவற்றை ஊக்குவிப்பதாக தெரிவித்தது.
இருப்பினும், விவசாய உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கார்ப்பரேட் கடன் தள்ளுபடிக்கு இணையாக வரையறுத்து, விவசாயிகள் நியாயமற்ற முறையில் தனிமைப்படுத்தப்படுவதாகக் கூறுகிறார்கள். முதல் 10 இந்திய கார்ப்பரேட் கடன் வாங்கியவர்கள், கடன் வாங்கிய அதே தொகைக்கு (ரூ.7.7 லட்சம் கோடி), ஒட்டுமொத்த விவசாயத்துறையும் கடன்பட்டுள்ளதாக இந்தியா ஸ்பெண்ட 2019 பிப்ரவரி 18இல் வெளியான கட்டுரை தெரிவித்துள்ளது.
"மாநிலங்கள் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ததால் என்.பி.ஏக்கள் அதிகரித்திருக்கலாம், ஆனால் கார்ப்பரேட் என்.பி.ஏக்களை ரிசர்வ் வங்கி ஏன் சொல்லவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?" என்று இந்தியா ஸ்பெண்டிடம் விவசாய நிபுணர் தேவிந்தர் சர்மா கூறினார். "விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும் ஒரே வங்கிகளிடமிருந்து கடன் வாங்குகிறார்கள், ஆனால் இரண்டிலும் பொருளாதார சிந்தனை வேறுபட்டது. விவசாயத்திற்கு எதிரான இந்த வகையான பாகுபாடு முடிவுக்கு வர வேண்டும்” என்றார்.
ரிசர்வ் வங்கி அதன் அணுகுமுறையை செம்மைப்படுத்த வேண்டும், மேலும் தள்ளுபடிகளுக்கு மாநில அரசுகளை பொறுப்பேற்கக் கூடாது என்று சர்மா கூறினார். கார்ப்பரேட் எழுதுதல்களை போலவே, விவசாயக்கடன் தள்ளுபடிகளும் வங்கியின் பொறுப்பாக இருக்க வேண்டிய ஒரு சீரான கொள்கை இருக்க வேண்டும்.
கேரளாவின் கடன் வெளியீட்டு விகிதம் தேசிய சராசரியைவிட 3 மடங்கு
அகில இந்திய சராசரி கடன்-க்கு-வெளியீட்டு விகிதம் - வழங்கப்பட்ட விவசாயக் கடனுடன் ஒப்பிடும்போது சேர்க்கப்பட்ட மதிப்பு - 0.32 ஆகும். 11 மாநிலங்களின் விகிதங்கள் அதிகமாக இருந்தன, கேரளாவின் அதிகபட்சம் 0.90 ஆகவும், மேற்கு வங்கத்தின் மிகக் குறைந்த அளவு 0.09 ஆகவும் இருந்தது.
ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் தேசிய சராசரியை விட கூடுதல் விகிதம் கொண்டிருந்தாலும், பயிர் உள்ளீட்டுத் தேவைகளுக்கு அவை போதிய கடன் பெறவில்லை, ஒருவேளை “அவற்றின் ஒட்டுமொத்த பயிர் உற்பத்தியில் குறைந்த மதிப்புள்ள பயிர்களின் அதிக பங்கு காரணமாக இருக்கலாம்”.
மேலும், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் விவசாயக் கடன் 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களின் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 180% ஆகும், இது “விவசாயம் சாரா நோக்கங்களுக்காக கடன் திசைதிருப்பப்படுவதற்கான வாய்ப்பைக் குறிக்கிறது”.
"நில உரிமையாளர் ஆவணங்களை தயாரித்து பயிர் கடன்கள் அல்லது விவசாயிகள் சிறப்பு வட்டி விகிதத்தில் தங்கக்கடன்களை பெறுபவர்கள் உள்ளனர், இருப்பினும் சம்பந்தப்பட்ட நிலம் வேறொருவரால் பயிரிடப்படலாம் அல்லது தரிசு நிலமாக இருக்கலாம்" என்று புருஷோத்தமன் கூறினார்.
வேளாண் வணிகத்தில் ஆர்வமுள்ள பெரிய நிறுவனங்களுக்கு வேளாண் கடன்களைத் திருப்புவது குறித்து ஆய்வாளர்கள் முன்பு கருத்து தெரிவித்திருந்ததாக, மே 26, 2019இல் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது; மகாராஷ்டிராவில் 2000 மற்றும் 2007ஆம் ஆண்டுக்கு இடையில், உண்மையான விவசாயிகளிடம் இருந்து விலகி, விவசாய வணிகங்களால் வேளாண் வரவுகள் பெருகியதை, இது சுட்டிக்காட்டியது. "ரூ.50,000 க்கும் குறைவான கடன்களின் எண்ணிக்கை 50% குறைக்கப்படுகிறது, அதே நேரத்தில் ரூ.10 கோடியில் இருந்து ரூ.25 கோடிக்கு மேல் கடன்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது அல்லது மும்மடங்காக உள்ளது" என்று பீப்பிள்ஸ் காப்பக கிராமப்புற இந்தியா நிறுவனர் ஆசிரியர் பி சாய்நாத் எழுதினார்.
(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.