மறுகுடியேறியவர்களின் வருகைக்கு கேரளா தயாரா?
கோவிட் 19-இன் பெரிய பொருளாதார தாக்கங்களில் ஒன்று உள்நாடு மற்றும் வெளிநாட்டு அல்லது எல்லை தாண்டிய இடம்பெயர்வு ஆகும். ஒரு பகுதி, குறிப்பாக மத்திய கிழக்கில் குடியேறியவர்கள் அல்லது புலம்பெயர்ந்தோரின் தலைவிதியை, பலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர், அவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வர வாய்ப்புள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து கிட்டத்தட்ட 3,00,000 மலையாளிகள் திரும்பி வர வாய்ப்புள்ளது என்று ஒரு ஆய்வு அல்லது மதிப்பீடு கூறுகிறது. எனவே, - உள்ளூர் பொருளாதாரம் மற்றும் பணம் அனுப்புதல் இரண்டிலும் என்ன நடக்கப் போகிறது, இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? கோவிட் 19 குறித்த அரசு நிபுணர் குழுவில் உள்ள கேரளாவின் மேம்பாட்டு ஆய்வுகள் மையத்தின் பேராசிரியர் எஸ்.இருதயா ராஜனுடன் பேசுகிறோம்.
திருத்தப்பட்ட பகுதிகள்:
சுமார் 20 லட்சம் மலையாளிகள் மத்திய கிழக்கில் வாழ்கின்றனர். கேரளா ஒரு பணம் பெறக்கூடிய பொருளாதாரம் கொண்டது; மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% க்கும் அதிகமானவை வெளியில் வசிக்கும் கேரள மக்கள் அனுப்பும் பணத்தை பெறுவதால் கிடைப்பதாகும். இந்த காரணிகளுடன் சேர்ந்து, பரந்த பொருளாதாரம் மற்றும் எண்ணெய் நாடுகளின் பணம் ஆகியன, வேலைகள், பணம் பெருவது இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஒரு மிகச்சரியானதாக உருவாகிறது. செப்டம்பர் 2020 க்குள் கிட்டத்தட்ட 3,00,000 பேர் சொந்த மாநிலத்திற்கு திரும்பக்கூடும் என்று நீங்கள் கணித்துள்ளீர்கள். இதன் பொருள் என்ன, அது எவ்வாறு வெளியேற வாய்ப்புள்ளது?
கோவிட் 19 பற்றி நாம் பேசும் இன்றைய நிலவரப்படி, வளைகுடாவில் மட்டும் ஒரு கோடி புலம்பெயர்ந்த இந்தியர்கள் (நாம் அவர்களை அழைத்து வர இருக்கிறோம்) உள்ளனர். இதை உலகளவில் பார்த்தால், 210 நாடுகளில் 2 கோடி இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பாதி பேர் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், ஓமான் மற்றும் குவைத் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் உள்ளனர்.
இப்போது நம்மிடம் எந்த தரவுத்தளமும் இல்லை என்பதுதான் பிரச்சினை. தரவுகள் ஏதேனும் கிடைத்தால் தான் நாம் பேசுகிறோம். கேரள புலம்பெயர்ந்தோர் கணக்கெடுப்பு, சில தரவுத்தளங்களை வழங்கியுள்ளதாக நீங்கள் சரியாகச் சொன்னீர்கள்; ஆனால், இந்தியாவில் உள்ள போக்குகளை உங்களுக்கு வழங்க, இந்திய இடம்பெயர்வு கணக்கெடுப்பு என்பது நம்மிடம் இல்லை. ஆனால் கேரள இடம்பெயர்வு கணக்கெடுப்பு மற்றும் இந்திய தரவுகளை பார்த்தால், வளைகுடாவில் உள்ள ஒரு கோடி பேரில் 20 - 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கேரளவாசிகள். எந்தவொரு வளைகுடா நாட்டிலும் நான்கில் ஒருவர் மலையாளியாக இருப்பர். அதனால் தான் சிறப்பு விமானத்தை இயக்குமாறு பிரதமருக்கு கேரள அரசு அழுத்தம் கொடுக்கிறது. வேறு எந்த மாநில முதல்வரும், புலம்பெயர் மக்களைப்பற்றி அதிகம் பேசுவதாக நான் கருதவில்லை. அதை நான் மற்ற முதல்வர்களிடம் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கே நான் குழுவில் இருக்கிறேன், நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவனல்ல, ஆனால் ‘இடம்பெயர்வு கட்சியை’ சேர்ந்தவன். இடம்பெயர்வு என்பது இப்போது மிகப்பெரிய நெருக்கடி. அதன் அம்சம் மிகத்தெளிவாக உள்ளது: இந்திய குடியேற்றத்தினரில் நான்கில் ஒரு பங்கினர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இதில் கேரளா மிகவும் முக்கியமானது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்திய அரசு ஒரு முடிவை எடுக்காவிட்டால், கேரள அரசு மட்டுமே அப்பணிக்கு தள்ளப்படும்; ஆனால் அவர்களால் மீட்டு கொண்டு வர முடியாது. அடிப்படையில், இது இந்தியாவுக்கு ஒரு நெருக்கடி என்றாலும், அது கேரளாவையே அதிகம் பாதிக்கும். கேரளாவுக்கு என பாஸ்போர்ட் இல்லை, இந்திய பாஸ்போர்ட் தானே உள்ளது. எனவே, கேரளாவால் ஒரு விமானத்தை அனுப்பி கேரள மக்களை அழைத்து வர முடியாது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். போரால் குவைத்தில் ஏற்பட்ட நெருக்கடியின் போது, இந்தியர்கள் அழைத்து வரப்பட்டது போல், அனைத்து இந்தியர்களையும் திரும்ப அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் அல்லது பிரதமர் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் தான் அதை செய்ய முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து விமானங்களையும் கூட அவர்கள் அனுப்பலாம்; அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். கோவிட் 19 தொற்று நேரத்தில் வெளிநாட்டு கேரள மக்கள் வந்தால், அவர்களைப் பார்த்துக் கொள்ள முடியும் என்று கேரளாவால் மட்டுமே சொல்ல முடியும். 2,00,000 பேர் வருகிறார்கள் என்றால், அவர்களை தனிமைப்படுத்த அனுமதிக்க எங்களுக்கு இடம் தேவை…
[ஆசிரியரின் குறிப்பு: வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் பல ஆயிரம் இந்தியர்களை மீட்டு கொண்டு வர, இந்திய கடற்படை மற்றும் விமானப்படை தயாராக உள்ளதாக, பைனான்சியல் எக்ஸ்பிரஸ் 2020 ஏப்ரல் 29 செய்தி தெரிவித்தது. தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்திற்குள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 50,000 இந்தியர்கள், நாடு திரும்புவதற்காக அரசு இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர்].
எனவே, உண்மையில் முதல் கேள்வி என்னவென்றால்: விமானங்கள் தயாராக இருந்து அவர்கள் வருவதாக இருந்தால், 2020 செப்டம்பர் மாதத்திற்குள் 3,00,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? அவர்கள் அவ்வாறு வருவார்கள் என்று நினைக்கிறீர்களா?
உலகளாவிய நெருக்கடியின் போது கூட, 50,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பினர். அது எங்கள் கணிப்பு மற்றும் சரியாக கணித்திருந்தோம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இப்போது, குறைந்தது 10% பேர் வளைகுடாவில் இருந்து திரும்புவார்கள் என்று கருதுகிறோம். இது, 2,00,000 - 3,00,000க்கு இடையில் இருக்கும், ஏனென்றால் குவைத் பொது மன்னிப்பை தந்திருக்கிறது. நம் மனதில், வளைகுடாவில் ஆவணமற்ற குடியேறியவர்களைப் பற்றி நாம் பேசுவதில்லை. முறையான ஆவணங்களைக் கொண்ட புலம்பெயர்ந்தோரை பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் வளைகுடாவில் சில உயர் திறமையான புலம்பெயர்ந்தோர் கூட அதிகமாக இருக்கிறார்கள். கோவிட் 19 அச்சத்தால் குவைத் [ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு] பொது மன்னிப்பு வழங்கியுள்ளது, அடுத்த 3-6 மாதங்களுக்குள் அனைத்து வளைகுடா நாடுகளும் இதை பின்பற்றும் என்று நம்புகிறேன். வளைகுடா நாடு ஒன்றில் ஏதாவது நடந்தால், ஒவ்வொரு நாடும் அதையே பின்பற்றும். ஆவணப்படுத்தப்படாத புலம்பெயர்ந்தோர் அவர்களின் இணையான தொழிலாளர் சந்தைக்கு தேவை என்பதை நாங்கள் அறிவோம். அவை நிழல் உழைப்பு போன்றவை. உண்மையான குடியேறியவர்களுக்கு கூட சந்தை இல்லாததால் அந்த நிழல் சந்தை மிகவும் மந்தமாக இருக்கும். எனவே அந்த மக்கள் திரும்பி வர வாய்ப்புள்ளது. அதனால்தான் இந்த எண்ணிக்கையை 2,00,000 - 300,000 என்று கணிக்கிறோம். அவர்களில் சிலர், சார்ந்துள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
எனவே, அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? இம்மக்கள் கேரளாவுக்கு வரும்போது, கடந்த காலத்தில் -- 2008 நிதி நெருக்கடி மற்றும் நாம் கண்ட தலைகீழ் ஓட்டம் ஆகியவற்றை குறிப்பிடுகிறீர்கள் என்றால்-- உள்நாட்டு பொருளாதாரத்தில் என்ன நடந்தது?
நாம் 3,00,000 மக்களைப் பற்றி பேசும்போது, [அதே போல்] அவர்களின் குடும்பங்கள் பற்றியும் பேசுகிறோம். புலம்பெயர்ந்தவர்கள் வெறும் தனிநபர்கள் அல்ல; அதனால்தான் நாம் உள்நாட்டு புலம் பெயர்ந்தவர்களை பற்றி பேசுகிறோம். கேரளாவில் சிக்கித்தவிக்கும் உள்நாட்டு புலம் பெயர்ந்தவர்கள், தங்களது பணத்தை ஒரிசா, ராஜஸ்தான் அல்லது வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்ப விரும்புகிறார்கள். எனவே, வளைகுடாவில் அமர்ந்திருக்கும் ஒரு மலையாளி கேரளாவில் நான்கு பேருக்கு ஆதரவளிப்பதாக அர்த்தம். எனவே, 3,00,000 பேரால் நேரடியாக பாதிக்கப்படும் 15 லட்சம் மக்களை பற்றி நாம் பேசுகிறோம்.
ஆனால் அதே நேரத்தில், அவர்கள் அனைவரும் இங்கு நீண்ட காலம் தங்கியிருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. பிரச்சனை என்னவென்றால், கேரள சமூகம் எப்படியாவது குடியேற்றத்திற்கு அடிமையாகிறது. கேரளத்தவர்களின் உள்ளுக்குள் இருக்கும் டி.என்.ஏ, அவர்கள் கேரளாவில் இருக்கவே விரும்புகிறது. கேரளாவை ‘கடவுளின் சொந்த நாடு’ என்று அழைத்தாலும், அவர்கள் மும்பை அல்லது டெல்லிக்கு செல்ல விரும்புகிறார்கள், எனவே அவர்கள் புறப்படுவார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால், வளைகுடா சிலருக்கு மூடப்படலாம், எல்லோருக்கும் அல்ல; ஏனெனில் வளைகுடாவில் கேரளாவின் இடம் பெயர்வு வரலாறு 50 ஆண்டுகள் பழமையானது. அவை வளைகுடா சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 3,00,000 பேர் தாயகம் வந்தாலும், 17 லட்சம் மக்கள் அங்கேயே இருப்பதை நீங்கள் காணலாம்; அவர்கள் திரும்ப சிறிது காலம் ஆகலாம், ஆனால் அவர்கள் புதிய வாய்ப்புகள், புதிய இடங்களைத் தேடலாம். இப்போது, 90% மலையாளிகள் [குடியேறியவர்கள்] வளைகுடாவில் உள்ளனர், அவர்கள் வேறு சில நாடுகளுக்கு செல்லக்கூடும். அதற்கு தேவை இருக்கலாம்.
எனவே, நீங்கள் சொல்வது, மாநில அரசோ அல்லது மத்திய அரசோ அவர்களுக்காக அதிகம் செய்ய முடியாவிட்டாலும் ஏதோவொரு வகையில், மலையாளிகள் தங்களை கவனித்துக் கொள்ளவதில் அக்கறை காட்டுவார்கள், உங்கள் கூற்றை நான் சரியாக புரிந்து கொண்டேன் எனில்…
அது சரி தான். மக்கள் சொல்கிறார்கள்: நீங்கள் விமானங்களுக்கு ஏற்பாடு செய்கிறீர்கள், நாங்கள் பணம் செலுத்துவோம் என்று. அவர்கள் இலவச விமானங்களை தேடவில்லை. அதுவே மற்ற மாநிலங்களாக இருந்திருந்தால், “தயவுசெய்து எங்களை இலவசமாக அழைத்துச் செல்லுங்கள்” என்று அவர்கள் சொல்லியிருப்பார்கள். சிலர், சொந்த பணத்தை எங்கள் தனிமைப்படுத்திக் கொள்ளலாம், ஆனால் தயவுசெய்து எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். அதுதான் உண்மை.
எனவே, இது ஒரு பக்கம் ஆகும். மற்றொரு பக்கம் என்னவென்றால், வளைகுடாவிலும், உலகின் பிற பகுதிகளிலும், இந்தியாவிலும் கேரளாவிலும் கூட வருமானம் குறையும். நீங்கள் என்ன தாக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள், அது மக்களின் வாழ்க்கை முறைகளையும் வாழ்க்கையையும் எவ்வாறு பாதிக்கும்?
இந்த 40 நாள் ஊரடங்கு பணத்தை எவ்வாறு செலவழிக்கக்கூடாது என்பதை மக்களுக்கு [புரிந்து கொள்ள] உதவும் என்று நினைக்கிறேன். உண்மையில், நாம் இப்போது எந்த பணத்தையும் செலவழிக்கவில்லை; இன்று எல்லோரும் வீட்டில் உட்கார்ந்து, டிவி பார்ப்பது, உணவு சமைப்பது போன்றவை தான் நடக்கிறது. எல்லா மக்களின் உண்மையான செலவுகளும் குறைந்துவிட்டன என்று நான் நினைக்கிறேன்; வருமானமும் குறைந்திருக்கலாம். எந்தவொரு வருவாயும் இல்லாத பலரும் உள்ளனர்... ஊரடங்கால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நாம் செலவினங்களை குறைத்துள்ளோம். அடுத்து என்ன நடக்கப் போகிறது, உலக வங்கி கூட பணம் அனுப்புவதில் 20% குறைக்கப்படலாம் என்று கணித்துள்ளது. கேரளாவிற்கு நாம் கணிப்பது என்னவென்றால், 2020 ஆம் ஆண்டில் பணம் அனுப்புவது 15% வரை குறையக்கூடும். 2018ஆம் ஆண்டில் கேரளாவுக்கு ஆண்டுக்கு ரூ. 85,000 கோடி வந்துள்ளது - இது கேரள மாநில வருமானத்தில் 25% க்கு சமமானதாகும் - என்று மதிப்பிட்டுள்ளோம். தனிநபர் வருமான வழிமுறையை - இந்திய அரசு மாற்றியதால் வருமானம் மாறிவிட்டது. எனவே, நாம் கணித்தது என்னவென்றால், கேரளாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதபடி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிலும் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் வந்தபோது, செல்ல வேண்டாம் என்று முடிவு செய்த குடியேறியவர்களில் பலர், கேரளாவில் இருக்க முடிவு செய்த புலம்பெயர்ந்தோர் (திரும்பி வந்த குடியேறியவர்கள்),வெள்ளம் காரணமாக அவர்கள் தங்கள் வாழ்க்கையின் சேமிப்புகளை, வீடுகளை இழந்தனர். எனவே, அவர்களில் சிலர் மீண்டும் வளைகுடாவுக்குச் சென்றனர்; இது மீள் இடம்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது, வேறுவிதமாகக் கூறினால், சில வகையான கட்டாய இடம் பெயர்வு. அப்போது ரூ. 85,000 கோடி என்று எதிர்பார்த்த நிலையில், 2020ம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கருதுகிறோம். இப்போது கோவிட்19 காரணமாக, பலருக்கு முழு சம்பளம் கிடைக்கவில்லை, வேறு பலருக்கு சம்பளமே வழங்கப்படுவதில்லை - நாம் காத்திருந்து பார்க்க வேண்டும். எனவே, 2020 ஆம் ஆண்டில் கேரளாவில் பணம் அனுப்புவது 2018 க்கு சமமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் மீண்டும் ஒரு வட்டத்திற்குள் வருகிறோம்... அதாவது அதிகரிப்பு இல்லை.
நீங்கள் குறிப்பிட்ட உலக வங்கி புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலர். ஒட்டுமொத்த இந்தியாவிற்கு இது 64 பில்லியன் டாலராக குறைக்கபட்டு வரும் என்று கணிக்கப்படுகிறது. இதில் கணிசமான பகுதி கேரளா போன்ற மாநிலங்களுக்குச் செல்கிறது.
உள்நாட்டு இடம்பெயர்வு குறித்த கேள்வியை முன்வைக்கிறேன். கேரளாவிலும் ஏராளமான உள்நாட்டு குடியேறியவர்கள் உள்ளனர் - நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் வந்து கேரளாவில் வேலை செய்கிறார்கள். அதை மாற்றம் செய்வது எப்படி? அவர்கள் மீண்டும் தங்கள் மாநிலங்களுக்குச் செல்கிறார்களா? வேலை சந்தை மாறுமா? அல்லது அங்கு ஏதேனும் முன்கூட்டியே போக்குகளை பார்க்கிறீர்களா? நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
உள்நாடு மற்றும் சர்வதேச போக்குவரத்து இருவழி போக்குவரத்து. கேரளாவை பொருத்தவரை, உள்நாட்டு இடம்பெயர்வு பற்றி பேசாமல் சர்வதேச இடம்பெயர்வு பற்றி பேசலாம் என்று நான் நினைக்கவில்லை. அதனால்தான், நாங்கள் ஆர்வமாக உள்ளோம் - நாங்கள் அவர்களை ‘விருந்தின தொழிலாளர்கள்’ என்று அழைக்கிறோம், ‘அன்னியன்’ அல்ல (அது கேவலமானது). புலம்பெயர்ந்தோருக்கு கேரளா தேவை என்பதல்ல. கேரளாவுக்கு உள்நாட்டு குடியேறியவர்கள் தேவை; நாங்கள் அந்த நிலைக்கு வந்துவிட்டோம். என்ன நடக்கிறது என்றால், அதை எண்ணிக்கையில் வைப்பது - எங்களிடம் 20 லட்சம் மலையாளிகள் நாட்டிற்கு வெளியே உள்ளனர், 10 லட்சம் நாட்டிற்குள் (கேரளாவுக்கு வெளியே ஆனால் இந்தியாவுக்குள் மும்பை, டெல்லி லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்ற இடங்களில்) உள்ளனர். எனவே, உங்களிடம் 30 லட்சம் மலையாளிகள் உள்ளனர், அவர்கள் கேரளாவின் தொழிலாளர் சக்தியின் ஒரு பகுதியாக வெளியே இருக்க வேண்டும். எனவே, நாங்கள் கிட்டத்தட்ட 30 லட்சம் பிற மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு அவர்களின் இடத்தை நிரம்ப, நாங்கள் அவர்களை அழைக்கிறோம்… மாற்று இடம்பெயர்வு: கேரளாவை சேர்ந்த பிளம்பர் ஒருவர் துபாயில் இருப்பார்; நாங்கள் ஒரிசாவில் இருந்து அவரது இடத்தை நிரப்புகிறோம்; கேரளாவின் எலக்ட்ரீஷியன் கட்டாரில் இருக்கிறார், வடகிழக்கில் இருந்து ஒரு எலக்ட்ரீஷியனைப் பெறுகிறோம். ஒரு கேரள நபர் அதே வேலைக்காக துபாயில் கூடுதல் பணம் பெறலாம், அவர் அந்த வேலையை கேரளாவில் செய்ய மாட்டார் - எப்படியிருந்தாலும் அது குடியேற்றத்தின் பிரச்சினையாகும். எனவே, கேரளாவில் உள்நாட்டு இடம்பெயர்வு அதிகமாக உள்ளது.
ஊரடங்கு முன் - கேரளாவில் எங்களுக்கு மூன்று வகையான உள்நாட்டு புலம் பெயர்ந்த குடியேறியவர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் ஊரடங்குக்கு முன்பே வெளியேறினர் (அதாவது, ஜனதா ஊரடங்கு அறிவித்த பின்னர் இரண்டு நாட்கள் இருந்தன, ஊரடங்கு வரும் என்று மக்கள் கணித்து புறப்பட்டனர்); புலம்பெயர்ந்தோர் புத்திசாலித்தனமான மக்கள், எனவே ஒரு ஊரடங்கு இருக்கும் என்று அவர்கள் கணித்து பின்னர் வெளியேறினர். 5,00,000 பேர் கேரளாவை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று நான் கணித்துள்ளேன். வழியில் சிக்கித் தவிக்கும் மக்கள் உள்ளனர். நான் தமிழக அரசிடம் பேசினேன். சென்னையில், ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால் கேரளாவில் இருந்து புறப்பட்ட பல ரயில்கள் அங்கே நிறுத்தப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு உதவியது - அவர்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் ஒருபோதும் அவர்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல; அவர்கள் கேரளாவில் பணிபுரிந்து வந்த குடியேறியவர்கள்.
அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் - அதனால்தான் அவர்களை திருப்பி அனுப்ப மகாராஷ்டிரா கோரிக்கை விடுத்ததை நாம் பார்த்தோம். மூன்றாவது குழு மக்கள், இங்கே சிக்கித் தவிப்பவர்கள் - கேரள அரசு அவர்களை கவனித்து வருகிறது. பொது உண்வாக, குறைந்தபட்சம் 5,00,000 பேருக்கு உணவளிக்க கேரள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் அவர்களுக்கு உணவு தருகிறோம். ரயில்கள் இயங்கத் தொடங்கும் போது, மலையாளிகள் திரும்பி வர விரும்புவதைப் போல, இந்த மக்களும் செல்வார்கள்.
ஆனால் என்ன நடக்கும், பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல கேரளாவில் தொழிலாளர் பற்றாக்குறை இருக்கும் - கேரள பொருளாதாரம் உள்நாட்டு புலம்பெயர்ந்தவர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. துபாயில் மலையாளிகள் இதே காரியத்தைச் செய்கிறார்கள், அவர்கள் இங்கே அதே வேலையைச் செய்யக்கூடாது - அவர்கள் இங்கே சப்பாத்திகளை உருவாக்கக்கூடாது, அவர்கள் அதை சவுதி அரேபியாவில் செய்யலாம். எனவே தானாகவே, திரும்பி வரும் 300,000 மலையாளிகள், கேரளாவில் கிடைக்கும் வேலைகளை செய்ய முடிந்தால், பாதி சிக்கலை நாங்கள் தீர்க்கலாம். பிரச்சனை என்னவென்றால், அவர்கள் அதைச் செய்யவில்லை, அவர்கள் அவர்களை ‘3டி (3D) வேலைகள்’ அல்லது டி.டி.டி (DDD) வேலைகள் (அழுக்கான, ஆபத்தான மற்றும் தகுதியற்ற) வேலை என்று அழைக்கிறார்கள்.
அவர்கள் அதை செய்ய தயாராக இருந்தால், கேரளாவின் பொருளாதாரம் மேம்படும். இல்லையெனில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பொருளாதாரத்தை இயக்குவதற்கு உழைப்பு பற்றாக்குறை என்ற கடும் சிக்கலை எதிர்கொள்ளப் போகிறோம். நீங்கள் ஒரு ஓட்டலைத் திறக்க முடியாது, ஏனென்றால் யாரும் இல்லை; தொழிலாளர்கள் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். எனவே, சுற்றுலாத்துறை, கட்டுமானத் தொழில் மற்றும் ஓட்டல் துறையில் எங்களுக்கு ஒரு கடினமான நேரம் இருக்கப்போகிறது; ஏனெனில் இந்த குடியேறியவர்கள் அனைவரும் வெளியேறுவார்கள். திரும்பி வரும் கேரள குடியேறியவர்கள் இந்த வேலையை எடுக்க முடிந்தால், உடனடியாக கேரள பொருளாதாரம் [நன்றாக] செய்யும். எனவே புலம்பெயர்ந்தோருக்கான ஆலோசனை நமக்கு தேவை, இது சுகாதார ஆலோசனை மட்டுமல்ல, வேலையின் அர்த்தத்தைப் பற்றிய ஆலோசனையும். நீங்கள் அங்கு என்ன செய்கிறீர்களோ அதை இங்கே செய்ய் அவர்களிடம் சொல்லலாம், சம்பளம் கொஞ்சம் குறைவாக இருக்கும். நீங்கள் அவ்வாறு செய்தால், கேரளா பொருந்தக்கூடியது மற்றும் பிற மாநிலங்களுக்கு ஒரு புதிய மாதிரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.