ஏன் 750,000 போலீஸ் வழக்குகள் 'ஆதாரம் இல்லாததால்' ஒவ்வொரு ஆண்டும் முடிக்கப்படுகின்றன

சாட்சியங்கள் இல்லாததால், முடிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இருப்பினும் குறைத்து மதிப்பிடப்பட்டதாகவே உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர், நம்பிக்கையின்மையால், மக்கள் புகார்களை பதிவு செய்வதை முதலில் ஊக்கம் இழக்கின்றனர்.

Update: 2021-11-02 00:30 GMT

பெங்களூரு: ஜனவரி 2017 இல், தெற்கு சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பர்பா கிராமத்தில் இருக்கும் தனது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே, மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான பேலா பாட்டியா உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்தார். அவர், தாக்குதல் நடத்தியவர்களில் சிலரின் பெயரை குறிப்பிட்டார், மேலும் அவர் கும்பலில் சிலரை எடுத்த புகைப்படங்களையும், குற்றவாளிகள் பயணித்ததாகக் கூறப்படும் வாகனங்களில் ஒன்றின் பகுதி நம்பர் பிளேட்டையும் பகிர்ந்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோதும், அந்த கும்பல் இருந்ததாக இந்தியா ஸ்பெண்டிடம், அவர் தெரிவித்தார். ஆனாலும், இந்த ஆண்டு இறுதி நெங்கிவிட்ட நிலையில், சாட்சியங்கள் இல்லை, தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று கூறி, வழக்கை முடித்து வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பாட்டியாவின் வழக்கும் விதிவிலக்கல்ல. அந்த ஆண்டு ஆதாரம் இல்லாததால் முடிக்கப்பட்ட 830,000 புகார்களில், இதுவும் ஒன்று. இந்த எண்ணிக்கை, அந்த ஆண்டு காவல்துறை தீர்த்து வைத்த 4.9 மில்லியன் வழக்குகளில் 15% ஆகும். சராசரியாக, இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் (SLLs; குறிப்பிட்ட பொருள் அல்லது மாநிலத்திற்கு குறிப்பிட்டது) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுமார் 750,000 புகார்கள், 2020 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் இதேபோல் நீக்கப்பட்டதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தொகுத்த கிரைம் இந்தியா அறிக்கை காட்டுகிறது. இந்த வழக்குகள் உண்மையாகக் கருதப்பட்டன, அதாவது, காவல்துறை பதிவுகளின்படி, சம்பவங்கள் நடந்தன, ஆனால் 'போதுமான ஆதாரங்கள் அல்லது கண்டுபிடிக்கப்படாத, அல்லது துப்பு இல்லாததால்' முடிக்கப்பட்டன.

அகில இந்திய அளவில், 2016 ஆம் ஆண்டு முதல், மொத்த புகார்களில் இத்தகைய நீக்கப்படும் வழக்குகளின் விகிதம் அதிகரித்து வரும் போக்கைக் காட்டியுள்ளது, என்சிஆர்பி அதன் குற்றத்தில் 'உண்மை ஆனால் போதிய சான்றுகள் அல்லது கண்டுபிடிக்கப்படாத அல்லது துப்பு இல்லை' என்ற தலைப்பின் கீழ் இதுபோன்ற வழக்குகளின் தரவைப் பகிரத் தொடங்கியது என்று கிரைம் இந்தியா அறிக்கை தெரிவிக்கிறது. அதற்கு முன், இந்த எண்ணிக்கை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத வழக்குகளாக அறிவிக்கப்பட்டன, ஆனால் இறுதி அறிக்கை 'உண்மை' என சமர்ப்பிக்கப்பட்டது. இதுபோன்ற வழக்குகள், 2016 இல் தீர்க்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் 14% ஆகும், இது 2018 இல் சுமார் 17% ஆக அதிகரித்து, 2019 இல் சுமார் 16% ஆக இருந்தது. இதுபோன்ற வழக்குகள் 2020 இல் 12% ஆகக் குறைந்தாலும், ஐந்தாண்டு காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு வழக்கு ஆதாரம் இல்லாததால் முடித்து வைக்கப்பட்டது.

கடந்த 2016-20ல், இதுபோன்ற பெரும்பாலான வழக்குகள் திருட்டு (60%) தொடர்பான ஐபிசி பிரிவில், பெரும் 'சொத்துக்கு எதிரான குற்றங்கள்' பிரிவின் கீழ், அல்லது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களில், மின்சாரச் சட்டத்தின் (70%) கீழ் தாக்கல் செய்யப்பட்டவை, மேலும் அவை தீவிரமானவை அல்ல என்று, நிபுணர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். கடந்த ஐந்தாண்டுகளில் ஆதாரம் இல்லாத காரணத்தால் 70% க்கும் அதிகமான இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள், சொத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பானவை. ஆதாரம் இல்லாததால், 10 வழக்குகளில் ஒன்று முடிக்கப்பட்டது, இருப்பினும், 'மனித உடலைப் பாதிக்கும் குற்றங்கள்' என்ற இந்திய தண்டனைச் சட்டம் வகையின் கீழ், மிகவும் கடுமையான குற்றங்கள் ஆகும், இக்குற்றங்களுக்கு, நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் தடயவியல் ஆதாரம் தேவைப்படுகிறது.

காவல்துறை என்பது, ஒரு மாநிலம் சார்ந்த பொருளாக இருந்தாலும், இந்தியா முழுவதிலும் உள்ள காவல்துறைப் படைகள் முறையான திறன், தடயவியல் உதவி மற்றும் பயிற்சி ஆகியவற்றின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன, இது விசாரணைகளின் போது சாட்சியங்களை சேகரிப்பதை பாதிக்கிறது என்று, முன்னாள் மற்றும் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் (BPRD) அறிக்கைகள், குற்றப்பிரிவு போன்ற சிறப்பு புலனாய்வு துறைகள் உட்பட அனைத்து நிலைகளிலும், பெரியளவில் காலியிடங்கள் மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் தடயவியல் புலனாய்வு ஆதாரங்களை, சுருக்கிக் காட்டுகின்றன. காவல் துறையினரால் விசாரணைகள் மற்றும் வழக்குகளை அகற்றுவதற்கு, காவல் நிலையங்களுக்கு தடயவியல் ஆதாரங்கள், பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் அதிகப் பணியாளர்கள் தேவை என்று அவர்கள் கூறினர்.

ஆதாரங்கள் இல்லாததால் வழக்குகள் முடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது

பாட்டியா, தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட, பகுதி நம்பர் பிளேட்டை ஆய்வு செய்தார், அதை காவல்துறை அடையாளம் காணத் தவறியது, மேலும் போக்குவரத்துத் துறையில் இருந்து கார் உரிமை விவரங்களை அணுக முடிந்தது. "என்னாலேயே அடிப்படை ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. விசாரணை நடத்துவது போலீசாரின் பணியே தவிர, மனுதாரருடையது அல்ல,'' என்றார் அவர். தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (CJM) நீதிமன்றத்தில் வழக்கை முடித்ததற்கு எதிராக மேல்முறையீடு செய்தபோது, ​​​​ மற்றொரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ஒரு கும்பல் தலைவரைப் பார்த்து, தன்னை தாக்கியவராக அவரை அடையாளம் காட்டினார். ஆயினும்கூட, அவரது மேல்முறையீடு மே 2019 இல், மாஜிஸ்திரே நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது, எனவே செப்டம்பர் 2021 இல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில், அவர் மேல்முறையீடு செய்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில், 830,000 க்கும் மேற்பட்ட வழக்குகள், காவல்துறையால் தீர்க்கப்பட்டன, இது ஐந்தாண்டு காலத்தில் இரண்டாவது அதிகபட்சம், 2018 க்குப் பின், கிட்டத்தட்ட 860,000 வழக்குகள் தீர்க்கப்பட்டன. மொத்தத்தில், சாட்சியங்கள் இல்லாததால் முடிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையும் விகிதமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது; 2020இல் மட்டும் சற்று சரிவைக் கண்டது, ஆனால் இது பெரும்பாலும் கோவிட்-19 லாக்டவுன்கள் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, அந்த ஆண்டில் குறைவான திருட்டு வழக்குகள் பதிவாகியதால் என்று,காவல் துறைக்கு பதிலாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

Full View


Full View

சொத்துக்கு எதிரான குற்றங்கள் -- திருட்டு, வழிப்பறி, மோட்டார் திருட்டு, கொள்ளை, முதலியன-- சாட்சியங்கள் இல்லாததால் காவல்துறையால் முடிக்கப்பட்ட வழக்குகளில் பெரும்பகுதியை உருவாக்கியது, சுமார் 60% ஐபிசி வழக்குகள் திருட்டு தொடர்பானவை மற்றும் 71% மின்சாரம் தொடர்பானவை, அவை, சராசரியாக சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழ் செயல்படுகின்றன.

இரண்டாவது, மிக அதிகமான வழக்குகள் --சராசரியாக ஐந்தாண்டுகளில் ஒன்பது வழக்குகளில் ஒன்று-- மனித உடலுக்கு எதிரான கொலை, கடத்தல் மற்றும் கற்பழிப்பு போன்ற மிகக் கடுமையான குற்றங்களின் கீழ், சாட்சியமின்றி நீக்கப்படுகின்றன, அங்கு விசாரணைகளுக்கு உதவ, தடயவியல் ஆதரவு தேவைப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

Full View


Full View

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் இந்தியாவில் உள்ள குற்ற அறிக்கைகளில், 'உண்மையான ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லை அல்லது கண்டுபிடிக்கப்படாத அல்லது எந்த துப்பும் இல்லை' என்று காவல்துறையால் தீர்க்கப்பட்ட வழக்குகளின் தரவுகள் அடங்கும். 2016 ஆம் ஆண்டில் இருந்து வழிமுறைகளில் மாற்றங்கள், இந்த வகையின் கீழ் காவல்துறை மூடப்படுவதற்கான காரணங்கள் மற்றும் மேம்பாடுகளுக்கான பரிந்துரைகள் பற்றி, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம், இந்தியாஸ்பெண்ட் கேட்டது. பதில் கிடைப்பப்பெற்றட்தும் இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

"[ஆதாரங்களை சேகரிப்பது] சரியான விசாரணையை நடத்துவது காவல்துறையின் கையில் உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில், செல்வாக்கு மிக்க ஒருவருக்கு எதிராக வழக்கு இருந்தால், அதை எளிதாக முடித்துவிடலாம் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்," என்று பாட்டியா கூறினார். 2019 இல், தான் பொறுப்பேற்றுக் கொண்டதாலும், பாட்டியாவின் வழக்கு தொடர்பான தகவல்கள் உடனடியாகக் கிடைக்காததாலும், வழக்கு தொடர்பான தகவல்களை அவரால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று, பர்பா காவல் நிலையப் பொறுப்பாளர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

கோவிட்-19 ஊரடங்குடன் காரணமாக நாடு தழுவிய அளவில் வழக்குகள் பதிவாகும் போக்குக்கு ஏற்ப, பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 2020 ஆம் ஆண்டில் இதுபோன்ற வழக்குகளை அகற்றுவதில் சரிவைக் காட்டின. இந்தியாவில் தொற்றுநோய்க்கு முந்தைய, 2019 குற்றத்தரவுகளை 12 மாநிலங்களில், 2018 உடன் ஒப்பிடும்போது, இந்திய தண்டனை சட்டத்தில் வழக்குகளை காவல்துறையால் மூடுவது அதிகரித்துள்ளதாக, கிரைம் இந்தியா அறிக்கை காட்டுகிறது. மற்ற நான்கு மாநிலங்கள் அத்தகைய மூடல்களில் ஒரு சிறிய குறைவை மட்டுமே காட்டின. உதாரணமாக, டெல்லி 2016 மற்றும் 2019 க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் சாட்சியங்கள் இல்லாததால் வழக்குகளை மூடுவது அதிகரித்துள்ளதாகவும், 2020 இல் 35% குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆதாரங்கள் பற்றாக்குறை அல்லது இல்லாமை ஆகியவற்றை மேற்கோள்காட்டி, காவல் துறையினர், இறுதி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு வழிவகுக்கும் பல சிக்கல்கள் உள்ளதாக, அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவின் முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரலும், இந்திய காவல்துறை அறக்கட்டளையின் தலைவருமான என். ராமச்சந்திரன் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "காவல்துறையில் நேர்மையான முயற்சிகள் இருந்தபோதும், பெரும்பாலும் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இருக்கலாம். இதுபோன்ற வழக்குகளில், போலீசார் வழக்குகளை உண்மை என்றும், போதிய ஆதாரம் இல்லை என்றும் கூறி வழக்குகளை முடித்து வைக்கலாம்.

கடந்த 2019 இல், 38% உடன் ஒப்பிடும்போது, ​​2020 ஆம் ஆண்டில் ஆதாரங்கள் இல்லாததால் காவல்துறையால் தீர்க்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்ட வழக்குகளில் 244% அதிகரிப்பு, ஒடிசாவில் தனித்தன்மை வாய்ந்தது. மாநிலத்தில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்படுவதற்கான மாநிலத்தின் முன்முயற்சியே இதற்குக் காரணம், இது அசாதாரணமான உயர்வைக் காட்டினாலும், அது பின்னர் இயல்பாக்கப்படும் என்று ஒடிசாவில் உள்ள உள்துறைத் துறையின் சிறப்புப் பணியில் இருக்கும் அதிகாரி சுதன்சு சாரங்கி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "[அதிக வழக்குகளைச் சமாளிக்க] எங்களுக்கு அதிகமான பணியாளர்கள் தேவை என்பதை, மத்திய அரசுக்கு தெரிவிக்க இது ஒரு வழியாகும்," என்று அவர் மேலும் கூறினார்.

புலனாய்வு தரத்தில், மூன்றில் ஒன்று காலியாக உள்ளது

மனித வளத்தில், இந்த திறன் குறைபாடு காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. 2015 ஆம் ஆண்டில் டெல்லி மற்றும் மும்பை வாசிகளின் உண்மையான குற்ற அனுபவத்தைப் பற்றிய ஆய்வை, டெல்லியை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான, காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி (CHRI) மேற்கொண்டது. இதில், போதுமான பட்ஜெட் நிதி, பணியாளர்கள் பற்றாக்குறை, காலாவதியான பயிற்சி மற்றும் செயலிழந்த காவல் நிலையங்கள் ஆகியன, பயனுள்ள சட்டத்தினை அமலாக்க தடையாக உள்ளனதாக கூறப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2020 இன் தொடக்கத்தில், போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, தேசிய அளவில் காவலர்களின் காலியிடங்கள் 20% ஆக இருந்தது. விசாரணை, மேற்பார்வை மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் பணிபுரியும் மூன்று அதிகாரிகளில் ஒருவர் - "காவல்துறையிடம் இருந்து காணவில்லை" என்று , 2020 இந்திய நீதி அறிக்கை கூறுகிறது, இது 2017 தரவுகளின் அடிப்படையில் குறிப்பிட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டில், புலனாய்வுத் தரத்தில் (இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள்), புலம்-நிலைப் பணியாளர்கள் (தலைமைக் காவலர்கள் முதல் கான்ஸ்டபிள்கள் வரை) உடனடி மேற்பார்வைப் பதவிகளில் உள்ள மூன்றில் ஒருவர் இன்னும் இல்லை; காவல்துறை கண்காணிப்பாளர்கள் முதல் இயக்குநர் ஜெனரல் வரையிலான மூத்த மேற்பார்வைப் பதவிகளில் ஆறில் ஒன்று காலியிடம் என்ற எண்ணிக்கை உள்ளது.

போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் 2020 தரவுகளின்படி, புலனாய்வுப் படைகளின் அனுமதிக்கப்பட்ட பலம், ஒட்டுமொத்த சிவில் காவல் படையில் 19% ஆகும். இந்த அணிகளின் உண்மையான பலம், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிவில் போலீஸ் படையில் சுமார் 17% ஆகும். புலனாய்வுத் தரவரிசைகளில் காலியிடங்கள், இது புல அளவிலான காவலர்களில் 18% காலியிடங்களுடன் ஒப்பிடும்போது, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட 30% ஆக இருந்தது.

Full View


Full View

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), குற்றப் பிரிவு (சிபி) உள்ளிட்ட காவல்துறை புலனாய்வுத் துறைகளில், நிலைமை சிறப்பாக இல்லை. சிஐடி/சிபியில் உள்ள அனைத்து பதவிகளிலும் நான்கில் ஒரு பணியிடம் நிரப்பப்படவில்லை.

Full View


Full View

மேற்பார்வைப் பதவியில் உள்ள, ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, புலனாய்வுத் தரவரிசையில் உள்ள 17 பணியாளர்களை மேற்பார்வையிடுகிறார்; அவர்கள், போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் தரவுகளின்படி, ஜனவரி 1, 2020 நிலவரப்படி சராசரியாக 99 கள-நிலைப் பணியாளர்களைக் கண்காணிக்கின்றனர்.

"விசாரணைகளை மேற்கொள்வதற்காக கண்காணிப்பு மட்டத்தில் சில அதிகாரிகளைக் கொண்ட நமது காவல் படை மிகவும் கடினமாக உள்ளது" என்று காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி (CHRI) மூத்த திட்ட அதிகாரி ராஜா பாக்கா கூறினார். போலீஸாரால் வழக்குகளை அகற்றுவதில் அதிக நிலுவையில் இருப்பது, விசாரணைகளை நடத்தும் போலீசாரின் திறனுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார். 2019 மற்றும் 2020 க்கு இடையில், இந்திய தண்டனைச்சட்ட வழக்குகளில் நிலுவையில் உள்ளவற்றில், காவல்துறை வழக்குகள் 8.9 சதவீத புள்ளிகள் அதிகரித்து 38.2% ஆகவும், சிறப்பு மற்றும் உள்ளூர் சட்ட வழக்குகளுக்கு 7 சதவீத புள்ளிகள் அதிகரித்து 25.1% ஆகவும் உள்ளது.

"ஒரு காவல் நிலையத்தில், காவலர் பற்றாக்குறை இருந்தால், ஒரு சமூகத்திற்கு தேவையான சரியான நேரத்தில் சேவைகளை பூர்த்தி செய்ய முடியாது, மேலும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி மற்றும் சொத்துக் குற்றங்கள் போன்ற வழக்குகள் கண்டறியப்படாமல் போகும், எனவே, அவை ஆதாரம் இல்லாதவை என்று போலீசார் முடிக்கிறார்கள்," சாரங்கி கூறினார்.

மேலும், டெல்லியை சேர்ந்த ஆளுகை மற்றும் பொதுக் கொள்கை ஆலோசக குழுவான காமன் காஸ் வெளியிட்டுள்ள, இந்திய காவல்நிலை அறிக்கை (SPIR) 2019 இன் படி, சராசரியாக ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை செய்யும் காவல்துறையினரின் பணிச்சுமையில், வழக்கு விசாரணை முக்கியப் பங்கு வகிக்கிறது. நான்கு போலீஸ்காரர்களில் மூன்று பேர், கடுமையான பணிச்சுமைகளை மன அழுத்தத்தின் ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளனர், இது விசாரணைகள் உட்பட அவர்களின் வேலையை பாதிக்கிறது.

அதிக பணிச்சுமை பிரச்சனை, இந்தியாவில் காவல்துறைக்கு மட்டும் அல்ல. இந்திய காவல்நிலை அறிக்கை- 2019, தென்னாப்பிரிக்க போலீஸ் சர்வீஸ் டிடெக்டிவ்ஸ் ஆய்வை மேற்கோள் காட்டியது, அதில் அதிக பணிச்சுவை கொண்ட துப்பறியும் நபர்கள் "சான்று சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு போன்ற உண்மையான துப்பறியும் வேலைகளில்" குறைந்த நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்திய காவல்நிலை அறிக்கை- 2020 இன்படி, 2020 ஆம் ஆண்டில், ஐந்தில் ஒரு இந்திய காவல்துறை அதிகாரி (21%) அதிக பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

சில மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போல, புலனாய்வுப் பிரிவுகளில் அதிக வலிமை கொண்ட பெரிய நிலையங்கள் நமக்குத் தேவை என்றார் சாரங்கி. சட்ட அமலாக்கத்தில் முதலீடு செய்து திறனை உருவாக்கினால், நமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, காவல்துறையின் சேவைக்கான சமூகத்தின் எதிர்பார்ப்புகளை சிறப்பாக பூர்த்தி செய்ய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவில் இருந்து, தனியாக ஒரு விசாரணைப் பிரிவை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றி பாட்டியா தனது சொந்த அனுபவத்தைக் கூறி விளக்கினார். அந்த கும்பல் இருந்தபோது, போலீசார் தனது வீட்டிற்கு வந்ததாக அவர் கூறினார், இது அவர்களை சாட்சிகளாகவும் விசாரணையாளர்களாகவும் ஆக்கியது. விசாரணை மற்றும் சட்டம்-ஒழுங்கு செயல்பாடுகள் பிரிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் 2006 உத்தரவுக்கும், பாக்கா அழைப்பு விடுத்தார்.

விசாரணை உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி இடைவெளிகள்

மனித வளங்களில் பற்றாக்குறை தவிர, தடயவியல் ஆய்வகங்கள் போன்ற விசாரணை உள்கட்டமைப்புகளும் குறைவாக உள்ளன. திறமையான குற்ற விசாரணை மற்றும் விசாரணைக்கு நவீன, அதிநவீன தடயவியல் ஆதரவு அவசியம், மேலும் விசாரணைக்கான ஆதாரங்களை சேகரிப்பதற்கு, தடய அறிவியல் ஆய்வகங்கள் (FSLs) மற்றும் நடமாடும் தடயவியல் பிரிவுகள் முக்கியமானவை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். நன்கு பொருத்தப்பட்ட நடமாடும் தடயவியல் பிரிவுகள்/வேன்கள், டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து, நிகழ்விடத்திலேயே பரிசோதனை மேற்கொள்வதற்கான வசதியை கொண்டுள்ளன. எறிவியல், கைரேகை, டிஎன்ஏ மற்றும் பிற சான்றுகளின் பகுப்பாய்வுக்கான ஆதரவை, தடய அறிவியல் ஆய்வகங்கள் வழங்குகின்றன. காவல் நிலையங்களில் உபகரணங்கள் இல்லாததாலும், பயிற்சி பெற்ற பணியாளர்கள் பல்வேறு நிலைகளில் சாட்சியங்களைச் சேகரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதாலும், விசாரணை தாமதமாகிறது மற்றும் உண்மையான வழக்குகள் தீர்க்கப்படாமல் முடிக்கப்படுகின்றன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

உதாரணமாக, ஆக்ராவில் உள்ள தடய அறிவியல் ஆய்வகங்களில், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படும்போது அணிய வேண்டிய, ஃபுமிங் ஹூட்கள் இல்லாதது, மாசுபடுத்தும் ஆய்வகங்கள் என்று உத்தரபிரதேசத்தின் தடயவியல் ஆய்வகங்களை, 2017இல் தலைமை கணக்கு தணிக்கை அறிக்கை கண்டறிந்துள்ளது. மேலும், லக்னோ தடய அறிவியல் ஆய்வகத்தில், ஒரே ஒரு மரபணு பகுப்பாய்வி - டிஎன்ஏ சோதனையின் முடிவில் பெற்றோரின் இறுதித் தீர்மானத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. இது, "டிஎன்ஏ மற்றும் செரோலஜி ஆய்வகத்தில் 4,113 மாதிரிகள் (மார்ச் 2016 வரை) நிலுவையில் உள்ளது". துப்பு கையாளும் கருவிகள், துப்பு பகுப்பாய்வு கருவிகள், ஸ்ப்ரே மார்க்கிங் பெயிண்ட், டிஜிட்டல் தூரத்தை அளவிடும் சாதனம், லேசர் லைட் பேனா மற்றும் புற ஊதா ஒளி போன்ற பல்வேறு வகையான விசாரணை கருவிகள் காவல் நிலைய அளவில் வழங்கப்படவில்லை.

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 32 தடய அறிவியல் ஆய்வகங்கள், 80 பிராந்திய ஆய்வகங்கள் மற்றும், 418 நடமாடும் தடயவியல் அலகுகள் உள்ளன. இது 2018 இல் நாட்டின் தடய அறிவியல் உள்கட்டமைப்பை விட, கால் பங்கு குறைவாகும்.

"தடவியல் அறிவியல் உள்கட்டமைப்பில், இந்த முக்கியமான விசாரணைப் பகுதியைப் புறக்கணிப்பதில் மாநிலத்திற்குப் பிறகு, மாநிலம் குற்றவாளியாக இருக்கும் சூழ்நிலை மிகவும் கவலைக்குரியது" என்று காமன் காஸின் இந்திய காவல்நிலை அறிக்கை-2018 குறிப்பிட்டது.

போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் தரவு, தடயவியல் உள்கட்டமைப்பில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுகிறது. உதாரணமாக, 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 68 மில்லியன் மக்கள்தொகை கொண்ட குஜராத்தில், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 33 நடமாடும் தடயவியல் பிரிவுகள் இருந்தன; குஜராத்தின் மக்கள்தொகையை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கொண்ட பீகாரில், இருவர் இருந்தனர். 52 மில்லியன் மக்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில், 13 நடமாடும் தடயவியல் பிரிவுகள் இருந்தன; 45 மில்லியனுடன் ஒடிசாவில், 36. 75 மாவட்டங்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், 75 நடமாடும் யூனிட்கள் உள்ளன; 30 மாவட்டங்களைக் கொண்ட கர்நாடகாவில் 15 யூனிட்டுகள் இருந்தன.

போதுமான எண்ணிக்கையிலான தடய அறிவியல் ஆய்வகங்கள் இல்லாதது, ஒரு பிரச்சனையாக உள்ளது, மேலும் இந்த ஆய்வகங்களில் உள்ள் நோய்ச்சுமை, அவற்றின் இருப்பிடம், குற்றம் நடந்த இடத்திற்கான தூரம் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்களின் இருப்பு ஆகியவற்றைப் பொறுத்தது என்று பாக்கா கூறினார். "போதிய தடய அறிவியல் ஆய்வகங்கள் இல்லாதது, ஆதாரங்களை தவறாகக் கையாளும் வாய்ப்பையும் அதிகரிக்கின்றன. இது தாமதத்தை ஏற்படுத்துகிறது மற்றும் விசாரணையில் ஆதாரங்களின் தரத்தை பாதிக்கிறது" என்றார்.

பிரச்சனை, வளம் கிடைப்பதில் மட்டும் அல்ல என்று, காமன் காஸ் நிறுவனத்தின் இயக்குநரும், தலைமை நிர்வாகியுமான விபுல் முத்கல் கூறியதாவது: "திறன் சிக்கல்கள் இருப்பதாக நான் சந்தேகிக்கவில்லை, ஆனால் நேரம் மற்றும் வளங்களின் வரம்புகளுக்குள் கூறி, விசாரணைகள் தொழில் ரீதியாக செய்யப்படவில்லை என்று நான் உணர்கிறேன்" என்றார்.

"கள அதிகாரிகளின் திறனில் உள்ள குறைபாடுகள் காரணமாக, ஆதாரங்கள் சரியாக சேகரிக்கப்படாமல் அல்லது சரியாக பேக் செய்யப்படாமல் இருப்பதால், அதன் ஆதார மதிப்பை இழக்க நேரிடுகிறது" என்று, தேசிய போலீஸ் மிஷன் திட்டங்கள் தொடர்பாக போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம்- 2013 அறிக்கை தொகுப்பு கூறியது. "எனவே, தடயவியல் விசாரணைகள், கள அதிகாரிகளிடம் விடப்படுவதில்லை, ஆனால் தடய அறிவியல் பின்னணி கொண்ட அதிகாரிகள், காவல்துறையில் கிடைக்கப்பெறுவது பொருத்தமானது" என்று, அது மேலும் கூறியது. நடமாடும் வாகனங்கள், தரவுகளின் டிஜிட்டல் பரிமாற்றத்திற்காக, பெற்றோர் தடயவியல் ஆய்வகங்களுக்கான தகவல் தொடர்பு இணைப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று, அது மேலும் குறிப்பிட்டது.

நடமாடும் தடயவியல் பிரிவுகள், நாய்ப்படைகள் போன்ற காவல் நிலையங்களில் விசாரணை ஆதரவுப் பிரிவுகளை பயன்படுத்துவதற்கும், இந்த தொகுப்பு ஒரு வழக்கை உருவாக்கியது, இதன் மூலம் "தற்போது 'கேஸ் ட்ரூ நோ க்ளூ' என திரும்பியிருக்கும் ஏராளமான வழக்குகளை வெற்றிகரமாக தீர்க்க முடியும்".

இந்திய காவல்நிலை அறிக்கை-2018 இன் 2009-2016 தரவுகளின் பகுப்பாய்வு, பீகாரில் தடயவியல் ஆய்வகங்களில் கிட்டத்தட்ட, 80% பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், மேற்கு வங்கத்தில், 88% ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. ஆனால் உத்தரபிரதேசத்தில், "தடவியல் உள்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாகத் தோன்றும்", கிட்டத்தட்ட 70% பணியிடங்கள் காலியாக உள்ளன, இது உள்கட்டமைப்பு மற்றும் விசாரணைகளுக்கு உதவ பயிற்சி பெற்ற பணியாளர்கள் ஒரு பிரச்சனையாக இருப்பதைக் குறிக்கிறது.

ராமச்சந்திரனின் கூற்றுப்படி, தடயவியல் முடிவுகள் சிறிது காலம் எடுக்கும் போது, ​​முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நாட்களில் அனைத்து வகையான குற்றங்களும், டிஜிட்டல் தடயத்தை விட்டுச் செல்வதால் அதிக வழக்குகள் டிஜிட்டல் சான்றுகள் மூலம் தீர்க்கப்படுகின்றன, என்றார்.

முன்னதாக, அனைத்து மாநிலங்களிலும் ஆய்வகங்கள் மற்றும் தகுதியான பணியாளர்கள் இல்லாததால், தடயவியல் ஆய்வகத்தில் இருந்து முடிவுகளைப் பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஆனால் இப்போது காவல்துறை மற்றும் தடயவியல் துறையில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப அறிவாளிகள் என்பதால், இது மேம்பட்டுள்ளது என்றார் ராமச்சந்திரன். "ஆனால் விரைவான மாற்றங்களைச் செய்ய, இந்த மேம்பாடுகள் அளவாக இருக்க வேண்டும், அதிமாக அல்ல" என்றார்.

நம்பிக்கை குறைபாடு

ஆதாரங்களின் பற்றாக்குறைக்கு ஆண்டுதோறும் பல வழக்குகள் மூடப்பட்டிருந்தாலும், இவை கூட குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளன, ஏனெனில் மக்கள் காவல் நிலையத்திற்கு செல்ல தயங்குகின்றனர் என்பதால் என்று, கிறீகா கிரகா கூறினார். "மேலும், புகார்களை பதிவு செய்யாத நடவடிக்கை, குறிப்பாக பாலியல் குற்றங்களுக்கு, ஒரு தீவிர கவலை தரக்கூடியது " என்றார்.

கடந்த 2015 ல் இருந்து CHRI ஆய்வு, குற்றங்கள் எண்ணிக்கை அனுபவம் மற்றும் காவல் அறிக்கை இடையெ ஒரு "பரந்த வேறுபாடு" இருப்பதாகக் கூறுகிறது. ஏனெனில், காவல்துறை புகார்களை பதிவு செய்ய மறுக்கிறது. திருட்டு மிகவும் பொதுவாக இருக்கக்கூடிய குற்றமாக இருந்தது, தொடர்ந்து தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்து, மற்றும் குற்றங்களை அறிக்கை செய்யாதவர்கள் "அதிகாரத்துவத்தில் பிடிபட்டிருக்க விரும்பவில்லை". ஒவ்வொரு நகரத்திலும் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் தீர்க்கப்படாத குற்றத்தின் குறிப்பிடத்தக்க விகிதாசாரம், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற அளவைக் குறைப்பதை சமிக்ஞை செய்கிறது, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் "என்று கிரைம் இந்தியா ஆய்வு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் தரவுகளில், குற்றத்தில் பிரதிபலிப்பதாக கூறப்படும் அனைத்து குற்றங்களும் இல்லை என்று ஆய்வு கூறுகிறது.

தவறான நிகழ்வுகளின் தாக்கல் என்பது சாட்சியம் இல்லாததால் வழக்குகள் முடிக்கப்படுகின்றன என்று, ராமச்சந்திரன் கூறினார். சில நேரங்களில், தவறான வழக்குகள் மக்களை தொந்தரவு செய்வதற்கான ஒரே எண்ணத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில நேரங்களில், "காவல் அதிகாரிகள் பொய்யான வழக்குகளை பதிவு செய்வதில் உடந்தையாக இருந்தனர், பெரும்பாலும் அரசியல்வாதிகளுடன், அரசியல் எதிரிகளின் கணக்கை தீர்ப்பதில் உள்ளனர்" என்று ராமச்சந்திரன் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பங்களில், சட்டப்பூர்வ ஆதாரங்களை சேகரிப்பது கடினம், இறுதியாக அத்தகைய சந்தர்ப்பங்கள் போதுமான ஆதாரங்களை பெறுவதற்கான வாய்ப்பு மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காவல் முன்னோக்கை முன்பாக, 2019 ஆம் ஆண்டில் 10 காவல் ஊழியர்களில் ஏழு பேர், சாட்சிகள் ஒத்துழைக்க விரும்பவில்லை மற்றும் கிட்டத்தட்ட 2 (58%) பாதிக்கப்பட்டவர்கள் ஒத்துழைக்க விரும்பவில்லை என்று கூறினார். இது "அமைப்பில் ஒரு தீவிர இடைவெளியை சுட்டிக்காட்டியது என்று முட்கல் கூஉறினார். " நீங்கள் பணக்காரர் என்றால், விசாரணைக்கு உட்பட்டால், விசாரணையில் உங்கள் வசதிக்காக ஒரு வேகம் அல்லது சலுகை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை காட்ட முடியும் " என்றார்.

ஆனால் ஒட்டுமொத்தமாக, வழக்குகள் தோல்வி மோசமான சட்டம் காரணமாக என்றல்லாமல், மோசமான விசாரணை, தவறான சான்றுகள் சேகரிப்பு அல்லது சார்பற்ற விசாரணை காரணமாக இருக்கலாம் என்று, ராமச்சந்திரன் கூறினார்.

நிபுணர் பரிந்துரைகள்

  • மாநில, மாவட்ட மற்றும் காவல் நிலையங்களில் ஆய்வகங்கள் மற்றும் நடமாடும் அலகுகள் போன்ற நவீன தடயவியல் உள்கட்டமைப்பு தேவை
  • விசாரணைகளை நடத்துவதற்காக விசாரணை அணிகளில் (ஏ.எஸ்.ஐ. முதல், ஆய்வாளர் வரை)
    • தடயவியல் நிபுணர்களின் பயிற்சி மற்றும் பல்வேறு மாநில தடுப்பு ஆய்வகங்களில் காலி பணியிடங்களை நிரப்புதல்
    • கடந்த 2006 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றத்தில் பிரகாஷ் சிங் தீர்ப்பின்படி, சட்டம் மற்றும் ஒழுங்கு செயல்பாடுகளில் இருந்து விசாரணையின் செயல்பாடுகளை பிரித்தல்

திருத்தியவர், லெஸ்லி எஸ்டீவ்ஸ்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.


Similar News