விவசாயிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள், நடுத்தர வகுப்பு வாக்காளர்களுக்கான இடைக்கால பட்ஜெட்

Update: 2019-02-01 16:15 GMT

மும்பை மற்றும் பெங்களூரு: 2019-20ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின் ஒருபகுதியாக, பிரதமரின் கிஸான் சம்மான் நிதி- பி.எம்.கிஸான் (PM-KISAN) அறிவிக்கப்பட்டு, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண கிராமப்புற குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.500, அதாவது குடும்பத்தில் ஒருநபருக்கு நாளொன்றுக்கு ரூ.3.3 (ஒரு குடும்பம் ஐந்து பேர் கொண்டதாக கணக்கிடப்படுகிறது) கிடைக்கும். இது, கிராமப்புற வறுமைக்கோடு அளவான, நபருக்கு ரூ.27.2 என்பதில் எட்டில் ஒரு பங்கு ஆகும்.

இது தெலுங்கானா ரிதுபந்து திட்டத்தில் சாகுபடி பருவத்தில் நிலமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.4000 வழங்குவதைவிட குறைவு; இது ஒடிசா மாநில அரசின் க்ருஷக் வாழ்வாதார உதவி மற்றும் வருவாய் பெருக்கும் திட்டம் (விவசாயிகளுக்கு வருவாய் ஏற்படுத்துதல்) தொகையை விட குறைவு. இதில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, ஐந்து பருவத்திற்குமாக ரூ.25,000 வழங்கப்படுகிறது; இது, நிலமற்ற மற்றும் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் தரப்படுகிறது.

இதற்கு பொதுகருவூலத்தில் இருந்து ரூ .75,000 கோடி-- அடுத்த நிதி ஆண்டிற்கான மொத்த ஒதுக்கீட்டில் 2.6%-- செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இரண்டு ஹெக்டர் வரை வைத்துள்ள விவசாயிகளை இலக்காகக் கொள்ளும் இத்திட்டம்நாடு முழுவதும் 12 கோடி எண்ணிக்கை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் சட்டசபை தேர்தல் நடந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சியின் (BJP) இழப்பை சந்தித்ததற்கு விவசாயிகளின் துயர், கிராமப்புற கடன் போன்றவை பரவலான காரணம் என்று கருதப்படுகிறது. பி.எம்.கிஸான் திட்டம் மூன்று சமபங்கு தவணையாக ரூ.6,000ஐ பணி, விதை, உரம், உபகரணங்கள் முதலியவற்றை கொள்முதல் செய்வதற்காக மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வழங்கப்படும்” என அமைச்சர் கோஷல் தெரிவித்தார்.

கடும் இயற்கை பேரிடரால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அவர்கள் அனைவருக்கும் உதவி வழங்கும் அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இது-- குறுகிய கால கடனில் விவசாயிகளுக்கு வட்டி மானியமாக- 2 சதவீதம் வட்டி அளிப்பதோடு கடன் வசூலிக்கும் முழு காலத்திற்கு 3 சதவீதம் உடனடியாக திருப்பி செலுத்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தற்காலிக நிதி அமைச்சர் பியூஷ் கோயல், 2018 பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தது இடைக்கால பட்ஜெட்டாக இருந்த போதும், பொதுத்தேர்தலை மனதில் கொண்டு கிராமப்புற மற்றும் நடுத்தர வாக்காளர்களை கவரும் பல அறிவிப்புகள், திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் நடைபெறும் ஆண்டில், ஆளும்கட்சியானது ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இது புதிய அரசு பதவிக்கு வரும் வரை நீடிக்கும்; அல்லது, எதிர்வரும் அரசு ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வரை அரசு இயங்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை அனுமதி பெற வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் தொலைநோக்குடன் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை; எனினும் கூட, பி.எம். கிஸான் திட்டத்துடன், தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.5,00,000 என அதிகரிக்கப்பட்டுள்ளது; அதேபோல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளை விட மொத்த பட்ஜெட்டில் 2019-20க்கான நிதியானது 14% அதிகரித்து ரூ.27.8 லட்சம் கோடி என்றுள்ளது. நடுத்தர வாக்காளர்களை கவரும் வகையில் அமைச்சர் கோயல், தனிநபர் வருமானவரி செலுத்துவதற்கான உச்ச வரம்பை ரூ.2.5 லட்சம் என்பது ரூ.5 லட்சம் என்று உயர்த்தப்பட்டுள்ளது; இதன் மூலம் 3 கோடி வரி செலுத்தும் தனிநபர்கள் பயனடைவர். மேலும், ஆண்டுக்கு ரூ. 6.5 லட்சம் வருவாய் ஈட்டுவோரும், முதலீடு செய்வதன் மூலம் வரி செலுத்தாமல் விலக்கு பெற முடியும்.

மற்ற அறிவிப்புகளில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான "உலகின் மிகப்பெரிய ஓய்வூதிய திட்டங்களில் ஒன்று" என்று கூறி திட்டத்தை கோயல் தொடங்கினார். பிரதம மந்திரி ஷ்ரம்யோகி மந்தன் திட்டத்தில் முறைசாரா (அமைப்பு சாராத) தொழிலாளர்கள் 60 வயது கடந்ததும் மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தில் இணைவோர், 29 வயதை கடந்திருந்தால் மாதம் ரூ.100; அதைவிட குறைந்த வயதுடையவர்கள் இதைவிட குறைந்த தொகையை செலுத்த வேண்டும்.

இந்திய தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் உள்நாட்டு சேவை, ஓட்டுனர் அல்லது கட்டுமான பணியாளர்கள் என்று முறைசாரா அமைப்பில் பணியாற்றி வருகின்றன, மேலும் தனது முதலாளியுடன் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணி தொடர்பை கொண்டிருக்கின்றனர். இதுவரை, அவர்கள் எந்தவொரு சமூக பாதுகாப்பையும் அல்லது நலன்களையும் கொண்டிருக்கவில்லை. இந்த திட்டத்தில் நடப்பாண்டு 10 கோடி (100 மில்லியன்) தொழிலாளர்கள் ஓய்வூதிய விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும் என்று கோயல் தெரிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் "ராஷ்ட்ரீய காமதேனு ஆயோக் அமைத்து பசு வளங்களை பாதுகாத்து, நிலையான மரபணுவை மேம்படுத்துதல் மற்றும் பசுக்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தப்படும்"; கால்நடைகளின் பழங்குடி இனங்களை வளர்க்க, பாதுகாக்கும் நோக்கில் ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் - உலகின் மிகப்பெரிய வேலையை உருவாக்கும் திட்டத்திற்கு -- ரூ .60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இது 9% அதிகரிப்பாகும். இது திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (தோராயமான உண்மையான தேவை) ரூ. 61,084 கோடி 1.8% குறைவாகவே இருந்தது.

இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கும் ஊக்கம் தரும் அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. இத்துறைக்கு முன்மொழியப்பட்ட ஒதுக்கீடு "முதல் முறையாக ரூ. 3 லட்சம் கோடி கடந்துவிட்டது". தற்போதைய அரசு, ஒரு நபர் ஒரு பென்ஷன் (OROP) திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ் 35,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா ஒரு "பத்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்" நாடாக திகழும் என்று கூறிய அவர், தேசிய செயற்கை நுண்ணறிவு திட்டத்தை அறிவித்தார்; இது ஒன்பது முன்னுரிமைப்பகுதிகளை இலக்காக கொண்டிருக்கும்; மற்றும் சிறப்பு மையங்கள் உள்ளன. இந்தியாவின் விண்வெளித் திட்டமான ககன்யான் திட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு ஒரு வீரர் அனுப்பப்படுவார் என்று கோயல் தெரிவித்தார்.

இந்தியாவின் இளைஞர்கள் "வேலைதேடுபவர்களாக" இருந்த நிலை மாறி இன்று "வேலை படைப்பாளர்களாக" உருவாகி வருகின்றனர்; இந்தியா "உலகின் இரண்டாவது பெரிய தொழில் தொடங்கும் மையமாக (Startup Hub) மையமாக உள்ளது" என்றார் கோயல். கடந்த 45 ஆண்டுகளில் அதிகபட்சமாக (6.1%) தற்போது வேலையின்மை அதிகரித்து, அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் 17.4% ஆண், பெண்கள் வேலையின்றி சிரமப்படுவதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) அறிக்கை கசிந்த நிலையில், இந்த கூற்று வெளிவந்துள்ளது.

(பலியத், ஒரு ஆய்வாளர்; சங்கேரா எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் ஆராய்ச்சியாளர்.)

Similar News