மத்திய நிதியை திறமையாக கையாளும் கல்வி விகிதம் அதிகம் கொண்ட மாநிலங்கள்

Update: 2018-11-16 00:30 GMT

மும்பை: இந்தியாவின் மிகச்சிறந்த கல்வியறிவு கொண்ட சிறிய மாநிலங்கள், கல்விக்காக டெல்லி தரும் நிதியை சிறப்பாக கையாள்கின்றன; பெரிய அல்லது கல்வியில் குறைந்த விகிதம் கொண்ட மாநிலங்கள் கூட இதை முறையாக பயன்படுத்தாத நிலையில் சிறு மாநிலங்கள் திறம்பட செயல்படுவதாக, அரசு தணிக்கையாளரின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உதாரணத்துக்கு, கல்வியறிவு விகிதத்தில் 3ம் இடத்தில் உள்ள சிறு மாநிலமான மிஸோரம், மத்திய அரசின் கல்வி நிதியை, 30 நாட்களில் முகமைகள் வாயிலாக கல்வித் திட்டங்களுக்கு செலவிடுகிறது. கல்வியில் நான்காம் இடத்தில் உள்ள கோவாவும் அரசின்  நிதியை 30 நாட்களில் கல்விக்கென செலவளிக்கிறது என, 2017ஆம் ஆண்டு மத்திய தலைமை தணிக்கை (சி.ஏ.ஜி.) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வசிக்‌ஷா அப்யான் - எஸ்.எஸ்.ஏ (அனைவருக்கும் கல்வி) திட்டத்தில் 2010ஆம் ஆண்டில், 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.10,681 கோடி (1.53 பில்லியன் டாலர்); 2016ஆம் ஆண்டில் ரூ.14,113 கோடி (2.15 பில்லியன் டாலர்) நிதியை ஒதுக்கியது. எனினும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவோ,  வகுப்பு அறை, பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவோ அந்த நிதியை பல மாநிலங்கள் பயன்படுத்தவில்லை என்று சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2015-16ல் மாநிலங்களால் பயன்படுத்தப்படாத ரூ.14,113 கோடி நிதியானது, கேரள அரசின் 2018-19ஆம் ஆண்டு கல்வி பட்ஜெட் நிதியின் 67%க்கு நிகரானது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம்- ஆர்.டி.இ. (RTE) 2009, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அருகாமையில் உள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக்கல்வி அளிக்க வழிவகை செய்கிறது.

மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ. திட்டம், இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான முக்கிய கருவியாக உள்ளது. மாநில, மத்திய ஆர்.டி.இ. சட்ட விதிகளுகேற்ப 2011ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டம் திருத்தம் செய்யப்பட்டது.

செலவழிக்காத எஸ்.எஸ்.ஏ. நிதி 2010-11ஆம் ஆண்டில் ரூ.10,680 கோடி என்பது, 2015-16ஆம் ஆண்டில் ரூ.14,112 கோடியாக, 24% உயர்ந்தது. அதிகபட்ச ஒதுக்கீடான 2014-15ம் ஆண்டு நிதி ரூ.17,281 கோடியும் கல்விக்காக பயன்படுத்தப்படவில்லை.

மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கும்; அங்கிருந்து முதன்மை அதிகாரிகள், திட்டங்களை வட்டார, ஒன்றிய அளவில் செயல்படுத்தும் முகமைகளுக்கு  நிதி தாமதமாக சென்றடைவது, தொகையை முறையாக செலவிடாததற்கான காரணங்களுள் ஒன்று.

மாநில அரசுகளிடம் இருந்து முகமைகளுக்கு நிதி சென்றடைவதற்கு, நாகாலாந்தில் 373 நாட்களும், அதுவே மிஸோராமில் 30 நாட்களுமே ஆகின்றன. திட்டம் செயல்படுத்தும் முகமைகளிடம் இருந்து பள்ளிகளுக்கு நிதி சென்றடைய, அருணாச்சல பிரதேசத்தில் 300 நாட்களும், கோவாவில் 30 நாட்களுமே ஆகிறது.

நாட்டின் ஒன்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் (ஆந்திரப்பிரதேசம், டாமன் & டயூ, டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் நாகாலாந்து) ஆகியன கல்வி நிதியை கொண்டு ஆராய்ச்சிகள், மதிப்பீடு, கண்காணித்தல் பணிகளுக்கு செலவிடவில்லை. இது, 9% (குஜராத்) தொடங்கி, 65% (ஜார்க்கண்ட்) ஆக உள்ளது.

ஒடிசாவில் உள்கட்டமைப்பு பணிக்கு நிதி பெற்று செலவிடாமல் திரும்பத்தரும் தலைமை ஆசிரியர்கள்

எஸ்.எஸ்.ஏ. திட்ட நிதியை மாநிலங்கள் வேறு திட்ட பணிகளுக்கு செலவழிப்பதாக, சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, எஸ்.எஸ்.ஏ. திட்டத்தில் அருணாச்சலபிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட முறையே ரூ.8.95 கோடி மற்றும் ரூ.5.30 கோடி நிதி, தேசிய பெண்கள் தொடக்க கல்வி திட்டத்திற்கு திருப்பிவிட்டுள்ளன.

மாவட்ட அளவில் நிதி முறைகேடு நடத்திருப்பதும் சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. உதாரணத்துக்கு, 73% கல்வியறிவே கொண்ட ஒடிசாவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1.04 கோடியை பெற்ற 58 தலைமை ஆசிரியர்கள், 80 பள்ளி அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு அவற்றை செலவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த 58 பேரில் 14 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர்; 4 பேர் இறந்துவிட்டனர்; இருவர் தலைமறைவான நிலையில் எஞ்சிய 38 பேர் பணியில் உள்ளனர்.

ஆர்.டி.இ. சட்டம் கோருவது என்னவென்றால், உள்ளூர் அதிகாரிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தி, 14 வயது வரையிலான  குழந்தைகளின் விவரங்களை பராமரிக்க வேண்டும் என்கிறது. ஆனால், 2010- 16ஆம் ஆண்டுக்கு இடையே, 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இத்தகைய கணக்கெடுப்போ அல்லது ஆவணமோ பராமரிகப்படவில்லை என்று சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஆய்வு, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களில் பள்ளியில் சேர்ந்தவர்கள், வெளியே இருப்பவர் விவரங்களை உள்ளடக்கியது.  போதிய தகவல் இல்லாதது, கல்வி அமைச்சகம் உண்டாக்கியுள்ள, இந்திய பள்ளிகள் குறித்த புள்ளி விவரங்களை கொண்ட, கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு -டி.ஐ.எஸ்.இ. (DISE) தரத்தை பாதிக்கும் என, சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.

குறையும் நிகர சேர்க்கை விகிதம்

கடந்த 2012-13 மற்றும் 2015-16 ஆண்டுகளில் தொடக்கப் பள்ளிகளின் நிகர சேர்க்கை விகிதம்- என்.இ.ஆர்.  (NER) அல்லது அதிகாரபூர பள்ளி வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம், சரிந்து வருவதாக சி.ஏ.ஜி. அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

Full View

தொடக்கப் பள்ளிகளின் நிகர சேர்க்கை விகிதம் (NER) அதிகாரபூர்வ வயது வரம்புடன் பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளோடு தொடர்புடையது. அது ஒருபோதும் 100% தாண்டக்கூடாது. எனினும், ஆறு மாநிலங்களில் என்.இ.ஆர். 100% அதிகரித்திருப்பது, ஆர்.டி.இ. தொடர்பாக  அரசு கூறும் புள்ளி விவரங்களின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மிசோரம் மாநில ஆரம்ப பள்ளிகளில் தக்கவைப்பு விகிதம் (5ஆம் வகுப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கையுடன், 4  ஆண்டுகளுக்கு முன் 1ஆம் வகுப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது) குறைவாக உள்ளது. 2015-16ஆம் ஆண்டில் மிசோராமில் 36% பேர் பள்ளியில் இருந்த நிலையில் மகாராஷ்டிராவின் உயர் தொடக்க பள்ளிகளில் 15%க்கு மேல் தங்கியதில்லை.

டி.ஐ.எஸ்.இ. புள்ளிவிவரம் முழுமையாக இல்லை. அனைத்து மாநிலங்களின் புள்ளி விவரங்களும் இல்லாமல் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் தக்கவைப்பு விகிதம் என்பது, பிற தனியார் பள்ளிகளோடு ஒப்பிடும் போது மிகவும் மோசமாக உள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வகுப்பறைகளைவிட ஆசிரியர் எண்ணிக்கை அதிகம்

ஒரு ஆசிரியர் மட்டும் இருப்பதை தவிர்க்க, 60 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளில் இரு ஆசிரியர்கள் இருந்தாக வேண்டும் என்று, ஆர்.டி.இ. கூறுகிறது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கேற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளியில் 40 ஆசிரியர்களை பரிந்துரைக்க வேண்டியுள்ளது.

11 மாநிலங்களில் விதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.  உதாரணத்திற்கு பீகாரில் ஆசிரியர் - மாணவர் விகிதம்- பி.டி.ஆர். (ஆரம்ப பள்ளிகளில் இது 30:1 என்றும், உயர்நிலை வகுப்புகளில் 35:1 என்றும் உள்ளது)  ஆரம்ப மற்றும் உயர்நிலை வகுப்புகளில் முறையே 50:1 மற்றும் 60:1 என்று 2012-16ஆம் ஆண்டுகளில் இருந்தது.

பீகாரில் 3,269 ஆரம்ப பள்ளிகள் (8%), 127 உயர்நிலை பள்ளிகளில் (1%) ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

ராஜஸ்தானில் 2012- 2016ஆம் ஆண்டுகளில், 11,071 ஆரம்ப பள்ளிகள் (29%), 365 உயர்நிலை பள்ளிகளில்  (2%), மூன்று அல்லது இரு ஆசிரியர்கள் இருப்பதற்கு பதில் ஒரு ஆசிரியர் என்ற நிலையே இருந்துள்ளது.

வகுப்புகளை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை 2012-13 ஆம் ஆண்டில் 8,94,329 ஆக இருந்தது 2015-16ல் 9,58,820 என, 7% அதிகரித்துள்ளது. அதாவது 2012-13 ஆம் ஆண்டில் 62% பள்ளிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொண்டிருந்தாலும், 2015-16ஆம் ஆண்டில் இது 66% என்றே அதிகரித்துள்ளது.

Source: Comptroller and Auditor General of India

கடந்த 2000-01ஆம் ஆண்டுகளில் 1.7 மில்லியன் வகுப்பறைகள் கட்டப்பட்டதாக சி.ஏ.ஜி.யிடம் (ஜனவரி 2017) கல்வி அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், 2016 மார்ச் மாத ஆசிரியர் வகுப்பறை விகிதம், 9,00,000 பள்ளிகளில் சாதகமற்ற நிலை இருந்ததாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரண உதவி, உள்ளாட்சி, சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல் பணிகள் தவிர பிற கல்விசாராத பணிகளுக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று ஆர்.டி.இ. சட்டம் கூறுகிறது. ஆனால், ஒன்பது மாநிலங்களில் கலெக்டரின் தனி உதவியாளர், வாக்காளர் திருத்தப்பணி, மாவட்ட நிர்வாக அலுவலக ஊழியர் பணி உள்ளிட்டவற்றில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக, சி.ஏ.ஜி. அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. உதாரணத்துக்கு, அசாமில் உள்ள நான்கு மாவட்டங்களில் மூன்றில், 1,559 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், 2014-15ஆம் ஆண்டில் தேசிய குடிமக்கள் பதிவு (NRC) கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் திட்ட மேலாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News