ராஜஸ்தானில் வசுந்தரா அரசு வளர்ச்சியை எட்டியுள்ளது; ஆனால் சமூக முன்னேற்றம் இல்லை
மும்பை: இந்திய மக்கள் தொகையில் ஏழாவது இடத்தில் உள்ள ராஜஸ்தானிலும், அத்துடன், தேசிய சராசரிக்கும் மேல் 7% வளர்ச்சி கண்டுள்ள தெலுங்கானாவிலும் டிசம்பர் 7ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. ஆனால் வளர்ச்சி விகிதம், போதிய வேலைகளை உருவாக்கவோ, பெண்களின் கல்வியறிவை மேம்படுத்தவோ, பிரசவத்தின் போது தாய் அல்லது சேய் இறப்பு விகிதங்களை குறைக்கவோ பயன்படவில்லை.
ராஜஸ்தானில் நிலவும் சுகாதாரம், வேளாண்மை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS), தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO), நிதி ஆயோக் போன்ற அமைப்புகளின் ஆதாரங்களை கொண்டு 11 மாநிலங்களுடன் இந்தியா ஸ்பெண்ட் ஒப்பிட்டது. இதே அளவுள்ள பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் கேரளா என 12 மாநிலங்கள் ஒப்பீடு செய்யப்பட்டவை.
கடந்த 2017-18ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜி.எஸ்.டி.பி..) 7.2%; இது தேசிய சராசரியான 6.7% என்பதைவிட அதிகம். எனினும், ஒப்பீடு செய்யப்பட்ட 12 மாநிலங்களில் ராஜஸ்தான் எட்டாவது இடத்தையே பெற்றுள்ளது (அட்டவணை கீழே).
வேளாண்மை, தொழிற்துறை ஏற்றம்; வேலைவாய்ப்பில் இறக்கம்
ராஜஸ்தானின் விவசாய உற்பத்தி 2011-12 ஆம் ஆண்டில் ரூ. 119,103 கோடியாக (24 பில்லியன் டாலர்) இருந்தது, 23% உயர்ந்து, ரூ.145,948 கோடி ($ 23 பில்லியன்) ஆனது. அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் தற்போதைய பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அரசு ஆட்சியில், விவசாய உற்பத்தியானது 2013-14 மற்றும் 2017-18 க்கு இடையில் 9% மட்டுமே அதிகரித்துள்ளது.
மேலும், உற்பத்தி, கட்டுமானம் மற்றும் மின்சாரம் உள்ளடக்கிய மாநிலத்தின் இரண்டாம் நிலை துறை 28% வளர்ச்சியும், சேவைகள் துறை 40% எட்டியுள்ளதாக, புள்ளியியல் துறை மற்றும்செயலாக்க அமைச்சகத்தின் 2017-18ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படியானாலும், இந்த வளர்ச்சியானது வேலைவாய்ப்பை பெற்றுத்தர இயலவில்லை. பொதுவாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பிரச்சனை, ராஜஸ்தானில் 2011-12ஆம் ஆண்டில் 1.7% என்பது, 2015-16ஆம் ஆண்டில் 7.1% என்று அதிகரித்துள்ளது தொழிலாளர் துறை புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது. 2011-12ல் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை 1.6% ஆக இருந்தது; இது 2015-16ல் 7.7% ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நகர்ப்புற பகுதிளில் வேலையின்மை விகிதம்2%இல் இருந்து 4.3% ஆக அதிகரித்தது.
5 வயதுக்குட்பட்ட குழந்தை, தாய் இறப்பு விகிதம் இன்னும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்
சுகாதாரத்தை பொறுத்தவரை, நிதி ஆயோக்கின் தரவரிசையில் (சுகாதார விளைவு, ஆட்சி நிர்வாகம், தகவல், முக்கிய உள்ளீடுகள் மற்றும் செயல்முறை அடிப்படையில்) ராஜஸ்தான் 4வது இடத்தில் உள்ளது. அதே நேரம், சிசு, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு, தாய் இறப்பு ஆகியவற்றில், மிக மோசமான 3வது மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது நமது ஆய்வில் தெரிய வந்துள்ளது. உண்மை இவ்வாறு இருந்தாலும், 2005-06ஆம் ஆண்டில் 1000 பிரசவங்களில் 65 குழந்தைகள் இறப்பு என்ற விகிதம், 2015-16ஆம் ஆண்டில் 43 ஆக குறைந்தது. அதே காலத்தில் தாய்மார்கள் இறப்பு, 85-ல் இருந்து 50 ஆக சரிந்துள்ளது. 2015-16 மாதிரி பதிவு கணக்கெடுப்புத் தகவல்களின்படி, இதற்கான தேசிய சராசரி, முறையே 41 மற்றும் 49 ஆக இருந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிறப்பு விகிதம் தேசிய சராசரியை ஒப்பிடுகையில் - சராசரியாக 84% என்று உள்ளது; தேசிய சராசரி 78.9% ஆகும். மகப்பேறு பராமரிப்பிலும் (82.7%) தேசிய சராசரியான 79.3% ஐ விட இம்மாநிலம் அதிக சராசரியை கொண்டுள்ளது.
இம்மாநிலத்தில், தாய்வழி ஆரோக்கியம் என்பது கவலை அளிக்கத்தக்கதாக உள்ளது. இங்கு தாய்வழி இறப்பு விகிதம் (MMR) 1,00,000 நேரடி பிரசவங்களில் 199 இறப்புக்களைக் கொண்டுள்ளது; இது நாட்டில் மூன்றாவது மிக அதிகமான எண்ணிக்கையாகும். இங்கு பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 973 பெண்கள் என்றளவில், 12 மாநிலங்களில் 5வது இடத்தில் இருப்பது, எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. தடுப்பூசி போடுவதில் பின்தங்கி மோசமான மாநிலங்களில் 54.8% உடன் நான்காவது இடத்தில் உள்ளது.
Source: National Family Health Survey 2015-16
கூடுதல் சுகாதார வசதிகள்; ஆனால் அவற்றிலும் பற்றாக்குறை
கடந்த 2005-06 முதல் ராஜஸ்தானில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டமைப்புகள் மேம்பட்டுள்ளன. எனினும் காலி பணியிட பிரச்சனையை சமாளிக்க இயலவில்லை. அணுகுதல், மின்சார வசதி போன்றவை கூட போதுமான அளவில் செய்யப்படவில்லை.
Health Infrastructure Indicators For Rajasthan | ||
---|---|---|
Indicators | 2010-11 | 2017-18 |
Sub-centres | 11487 | 14406 |
Primary Health Centres (PHC) | 1528 | 2079 |
Community Health Centres (CHC) | 368 | 579 |
Doctors possessing recognised medical qualifications | 28797* | 40,559 |
Vacancy of specialists in district hospitals | 41.5# | 45.8^ |
District hospitals | 33 | 34 |
Sub-centres without female health worker/ANM | 328 | 1775 |
PHCs functioning without a doctor | 70 | 167 |
Shortfall of surgeons at CHCs | 218 | 452 |
Shortfall of physicians at CHCs | 206 | 390 |
Shortfall of total specialists at CHCs | 980 | 1819 |
Medical officer posts vacant at PHCs | Surplus | 282 |
Sub-centres without regular water supply | 21.80% | 34.90% |
Sub-centres without electric supply | 7.50% | 36.10% |
Sub-centres without all-weather motorable approach road | 2.60% | 10.20% |
PHCs with labour room | 79.30% | 80.00% |
PHCs with 4-6 beds | 99.90% | 77.80% |
PHCs without regular water supply | 0.00% | 10.20% |
PHCs without electric supply | 0.00% | 4.60% |
PHCs without all-weather motorable approach road | 0.00% | 7.80% |
PHCs with referral transport facility | 36.20% | 65.90% |
CHCs with all four specialists | 20.10% | 7.40% |
CHCs with functional laboratory | 98.40% | 96.50% |
CHCs with functional O.T | 81.50% | 77.70% |
CHCs with functional labor room | 98.40% | 95.60% |
CHCs with referral transport facility | 77.20% | 91.50% |
Source: Rural Health Statistics 2017 and National Family Health Survey 2015-16
*refers to 2010, #refers to 2014-15, ^refers to 2015-16
கடந்த 2010-11 மற்றும் 2017-18 ஆண்டுகளுக்கு இடையே, துணை சுகாதார மையங்களின் எண்ணிக்கை 25%, முதன்மை சுகாதார மையங்கள் 36%, மற்றும் சமூக சுகாதார மையங்கள் 57% அதிகரித்துள்ளதாக, 2017 கிராமப்புற சுகாதார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தளவுக்கு சுகாதார வசதிகள் அதிகரித்தாலும் சுகாதார நிபுணர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அதே அளவுக்கு அதிகரிக்கவில்லை.
உதாரணத்துக்கு, ஒரு மருத்துவர் கூட இல்லாமல் செயல்படும் முதன்மை சுகாதார மையங்களின் எண்ணிக்கை 2010-11ஆம் ஆண்டில் 70 என்பது, 2017-187ஆம் ஆண்டில் 167 ஆக உயர்ந்துள்ளது. துணை செவிலியர் அல்லது பெண் சுகாதார ஊழியர் இல்லாத துணை மையங்களின் எண்ணிக்கை 2010-11ஆம் ஆண்டில் 328ஆக இருந்தது, 2017-18ஆம் ஆண்டில் 1,775 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் மைங்களில் உள்கட்டமைப்பு வசதி இல்லாமையும் அதிகரித்துள்ளது. 2010-11ஆம் ஆண்டில் தண்ணீர் வசதியில்லாத துணை மையங்களே இல்லாத நிலையில், 2017-18ஆம் ஆண்டில், 10% என உயர்ந்தது. இதே காலத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான, எக்காலத்திற்கும் உகந்த சாலை வசதி என்பது, 8% அதிகரித்துள்ளதாக, 2010-11 மற்றும் 2017-18 கிராமப்புற சுகாதார புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பெண் கல்வி, வேலைவாய்ப்பில் மோசமான விகிதம்
குழந்தைகள் சுகாதாரம் மற்றும் தாய்வழி ஆரோக்கியத்தில் இம்மாநிலம் மிகவும் பின்தங்கியுள்ளதை, பெண் கல்வி குறிக்காட்டிகள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் அதிக கல்வியறிவுடைய பெண்கள், ஆரோக்கியமாக குழந்தைகளை பராமரிப்பது, 2017 மார்ச் 20 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவிக்கிறது.
ராஜஸ்தானில் பெண்களின் கல்வியறிவு மற்றும் பொருளாதார பங்களிப்பு குறைவாக இருப்பதை, மேலே உள்ள அட்டவணை காட்டுகிறது. பெண்களின் கல்வியறிவில் மிகமோசமான 56.5% என, மாநிலங்களில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது; தேசிய சராசரி 68.4% என, என்.எப்.எச்.எஸ். தெரிவிக்கிறது. அதேபோல், 10-11 ஆம் ஆண்டு கல்வி முடிந்த பெண்களின் பட்டியலில் இது கடைசி இடத்தில் உள்ளது.
தொழிலாளர் திறனில் பெண்களின் பங்களிப்பு 21.5% ஆகும்; தேசிய சராசரி 23.7% என்பதைவிட இது குறைவாக உள்ளது.
(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் திட்ட மேலாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.