அரசு நடவடிக்கை எவ்வாறு ஆன்லைன் தேடல் கவனத்தை பெறும் அல்லது திசை திருப்பும்
மும்பை: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக அரசு அறிவித்த, ஆகஸ்ட் 5, 2019ஆம் தேதிக்கு பிறகு, இந்தியாவில் “வேலை” மற்றும் “வரி” போன்ற ஆன்லைன் தேடலில் பிரபலமாக இருந்த சொற்களை பின்னுக்கு தள்ளி “அரசியல் சாசனம் 370” என்ற சொல் முறியடித்துள்ளது.
கூகிள் தேடலின் போக்குகள் குறித்த தரவுகள் குறித்த இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வின்படி, அதற்கு முன்பு அதிகம் தேடப்பட்ட சொல் “இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்” மற்றும் ஒரு வாரம் முன்பு “பியர் கிரில்ஸ்” என்ற சொற்களாகும்.
பொதுவாக "தேர்வு முடிவுகள்", "செய்தி" மற்றும் "வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்" போன்ற இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட சொற்களுக்கு பதிலாக இவை அந்த இடத்தை பிடித்துள்ளன.
ஆன்லைன் தேடல்களுக்கான நிகழ்ச்சி நிரலை ஊடகங்கள் எவ்வாறு அமைக்கின்றன என்பதைக் குறிக்கும் கல்வி ஆய்வுகள் (இங்கே, இங்கே மற்றும் இங்கே) பகுப்பாய்வு உறுதிப்படுத்துகிறது. இவை பெரும்பாலும் அரசு நடவடிக்கைகளால் தீர்மானிக்கப்படுவதால், அரசு நகர்வுகள் ஆன்லைனில் தேசிய கவனத்தை ஈர்க்கவோ அல்லது திசை திருப்பவோ முடியும் என்பதை இது குறிக்கிறது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி, அதிகம் தேடப்பட்ட முதல் 10 அல்லது பாதி சொற்களில் ஐந்து காஷ்மீருடன் தொடர்புடையவை என்று தரவுகள் கூறுகின்றன. அதாவது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பிற பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பியது. ஆகஸ்ட் 5க்கு பிறகு அடுத்த வாரத்தில் பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றாப்பட்ட 10 மசோதாக்கள், கூகுள் தேடலில் எந்த கவனத்தையும் பெறவில்லை.
ஒரு தலைப்பு அதிக ஊடக கவனத்தைப் பெற்றால், அது தொடர்பான கூடுதல் தேடல்களும் இருக்கக்கூடும் என்று, மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பிரையன் வீக்ஸ் மற்றும் பிரையன் சவுத்வெல் ஆகியோரால் 2010 ஆய்வறிக்கை கணித்துள்ளது.
சில நிகழ்வுகள் அரசு செயல்பாட்டால் இயக்கப்படாமல், மற்றவர்களால் இயக்கப்படலாம்’; ஆனால் இணையதளத்தில் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருக்கும். உதாரணமாக, 2019 பிப்ரவரியில் காஷ்மீர் நெடுஞ்சாலையில் கார் குண்டுத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் இறந்த பின்னர், “புல்வாமா” என்ற வார்த்தை “ரஃபேல்” - என்ற தேடல் போக்கை மாற்றியது; ரபேல் என்பது, சர்ச்சைக்குரிய இந்திய அரசு ஆயுத ஒப்பந்தத்தைக் குறிக்கிறது.
Source: Google trends
இந்த ஆண்டு 2019 பிப்ரவரியில் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு (ரூ. 71.2218) சரிந்தது; இது ஜூலை 2018 இல் அதன் மதிப்புடன் ஒப்பிடும்போது 3.6% சரிவு; ஆனால் இந்த போக்கு, புல்வாமா தாக்குதல் தொடர்பான தேடல் ஆர்வத்தால் மறைந்து போனது.
2019 பிப்ரவரி 10 முதல் 17ஆம் தேதி வரை காஷ்மீர் தொடர்பான ஆர்வம் 257% அதிகரித்து இருந்தது.
அதிமுக்கிய செய்தி வெளியான பிறகு தேடல் ஆர்வம் உடனடியாக மாறக்கூடும் என்பதையும், ஆர்வம் குறையும்போது மீண்டும் தேடுவதையும் எங்கள் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
“அரசியல் சாசனம் 370” இல் இருந்து மீண்டும் “இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்”
இந்தியா - மேற்கு இந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியைக் குறிக்கும் “இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்” என்ற சொற்றொடர், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4, 2019 வரை அதிகம் தேடப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 5 ஆம் தேதி “அரசியல் சாசனம் 370” ஆக தேடல் போக்கு மாறியது.
Source: Google trends
ஒருநாள் கழித்து, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு இறந்தபோது, இந்த கூகுள் தேடல் போக்கு தலைகீழானது. ஆனால், ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் “இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்” முதலிடத்தை பிடித்தது, 10 லட்சத்திற்கும் அதிகமாக கூகுள் தேடல்கள் இருந்தன.
இந்தியாவில் வேலை நெருக்கடி வளர்ந்து பொருளாதாரம் மந்தமடைந்து வரும் சூழலில் கூட, ஆகஸ்ட் 2019 முதல் வாரத்தில், இந்தியர்கள் ஆன்லைனில் தேர்வு முடிவுகள், கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பாக அதிகம் தேடியுள்ளனர் என்பதை எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.
ஏனென்றால், அந்த வாரத்தில் வட இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தேர்வுகள், ஆந்திராவின் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு முடிவுகள், ரயில்வே பணியாளர் சேர்ப்பு வாரியம் மற்றும் மாநில மின்சார நிறுவனமான ஜெய்ப்பூர் வித்யுத் வித்ரான் நிகாம் லிமிடெட் ஆகியவற்றுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கும் வெளியாகி இருந்தன.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதம் எனப்படும், மத்திய வங்கி பிற வணிக வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை, ஆகஸ்ட் 7 அன்று 35 புள்ளிகளால் குறைத்தது. இது, அதன் நான்காவது தொடர்ச்சியான வட்டி விகிதக் குறைப்பு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பைக் குறைத்தது என்று இந்த ரிசர்வ் வங்கி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
ரூபாய் மதிப்பிழப்பு மற்றும் பணவீக்கம் சரிவு இருந்தது. ஆனால் “ரெப்போ வட்டி விகிதம்” தவிர, தேடல் போக்குகள் பட்டியலில் பொருளாதாரம் தொடர்பான எந்த சொற்தொடரும் அதிகம் இடம்பெறவில்லை; மாறாக, விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான தேடல்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தன.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் செங்கர், அந்த வாரம் கூகுள் தேடல் போக்குகள் பட்டியலில் இடம் பெறவில்லை; அதேபோல், அவரால் பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமான உத்தரப்பிரதேச நகரம் உன்னாவ் தேடல் பட்டியலில் இல்லை.
பொது கவனம் எங்குள்ளது என்பதை கூகுள் போக்குகள் காட்டுகிறது
கல்வித் தேடல் ஆன்லைன் தேடல் போக்குகளின் பாதையை ஆதரிக்கிறது.
கூகுள் போக்குகள், ஒரு குறிப்பிட்ட காலத்தின் பிரபலமான தேடல்கள், அதன் இயக்கத்தையும் அளவிட்டு, மதிப்பெண்ணை வழங்குகின்றன. ஒரு தேடல் காலத்துடன் தொடர்புடைய வினவல்களின் எண்ணிக்கையை ஒரு காலப்பகுதியில் ஒரு பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட வினவல்களின் எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் இந்த மதிப்பெண் கணக்கிடப்படுகிறது என்று கலிபோர்னியா பல்கலைக்கழக-பெர்க்லி பொருளாதார நிபுணர் ஹால் வேரியன் டிசம்பர் 2011 ஆய்வறிக்கையில் விளக்கினார்.
ஊடகங்கள் ஒரு தலைப்புக்கு அதிக முக்கியத்துவம் தருவதால், பார்வையாளர்களும் அதை முக்கியமானதாக கருதுவார்கள் என்று, ஆராய்ச்சியாளர்கள் மேக்ஸ்வெல் மெக்காம்ப்ஸ் மற்றும் டொனால்ட் ஷா தெரிவித்தனர். இவர்கள், ஊடகத்தின் போக்கு நிரலை அமைக்கும் பங்கு என்பது பற்றி 1972இல் கட்டுரை எழுதினர்.
செய்தி நுகர்வோர் ஒரு தலைப்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும் போது, வீக்ஸ் மற்றும் சவுத்வெல் கூற்றின்படி, கூகுள் தேடல் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து அதைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற முயற்சிக்கிறார்கள்.
(இக்பால், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.