ஸ்மார்ட் சிட்டி காலக்கெடுவில் தெளிவின்மை, தொலைவிலேயே உள்ள இலக்குகள்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், முதல் சுற்று 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள்ளும், கடைசி சுற்று, வரும் 2023 ஆம் ஆண்டிற்குள்ளும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் கிட்டத்தட்ட 49% பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளன. வள பற்றாக்குறை முதல், சிவப்பு நாடா முறை என பல காரணிகள், இந்த தாமதத்தை ஏற்படுத்துகின்றன;
மும்பை: தற்போது மாசுபட்டுள்ள புதுடெல்லியில், சென்சார்கள் அதன் காற்றின் தரம் 24x7 ஐ கண்காணித்து, ஆண்டு முழுவதும் சுத்தமான காற்றை அனுபவிப்பதாக கற்பனை செய்து பாருங்கள். வறண்டு போன சென்னையில், ஸ்மார்ட் அளவீட்டு முறைஇய்ல் 24x7 மணி நேரமும் தண்ணீர் விநியோகம் நடப்பது போல் சிந்தித்து பாருங்கள். அல்லது போக்குவரத்து நெரிசலில் தத்தளிக்கும் பெங்களூருவில் டிஜிட்டல் சாதனங்கள் வழியாக அவை ஒழுங்குபடுத்துவதாக எண்ணிப்பாருங்கள்.
மாசுபாடு, தண்ணீ தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் கழிவு மேலாண்மை நெருக்கடி போன்ற நகர்ப்புற பிரச்சினைகளுடன் பல ஆண்டுகளாக போராடி வரும் இந்தியாவின் பெருநகரங்களில், இந்த காட்சிகள் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எவ்வாறாயினும், 2016 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் சிட்டிகளுக்கான அரசின் திட்டம் அதன் முதல் காலக்கெடுவை சந்திக்கவுள்ள நிலையில், அதை தொடும்தூரத்தில் பணிகளை முடித்திருந்தால், ஒருவேளை இவை இன்று ஒரு யதார்த்தமாக இருந்திருக்கலாம். ஒரு ஸ்மார்ட் சிட்டி என்பது, அரசின் கூற்றுப்படி, "வாழக்கூடிய", "நிலையான" மற்றும் "செழிப்பான" ஒன்றாகும், இது மக்களுக்கு பல்வேறு நலன்களைப் பின்தொடர்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் (SCM - எஸ்சிஎம்) 100 நகரங்களை அடையாளம் கண்டுள்ளது; அந்த நகரங்கள், இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகையில் 21% ஐ கொண்டுள்ளன, ஜனவரி 2016 முதல் நான்கு சுற்றுகளில் இவை பொலிவூட்டப்பட்டு வருகின்றன (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்). ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டியும் தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் தனது திட்டங்களை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்கள், நகரங்களை மேலும் வாழக்கூடிய, பொருளாதார ரீதியாக துடிப்பான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையானதாக மாற்றுவதற்கான முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதாகும்.
இருப்பினும், இந்தியாவின் 100 ஸ்மார்ட் நகரங்களில் பணி ஆணைகள் வழங்கப்பட்ட 5,196 திட்டங்களில், 49% முடிக்கப்படாமல் உள்ளதாக, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்யவுள்ள 33 நகரங்களில், இன்னமும் 42% திட்டங்கள் முழுமையடையவில்லை என்பதை, எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.
பணி ஏன் பின்தங்கி இருக்கிறது? சிறப்பு நோக்கம் கொண்ட கூறு (SPVs)--நிறுவனத்தை செயல்படுத்த விரும்பும் பொது-தனியார் கூட்டாண்மை-- நிறுவன தடைகள், குறைவான பணியாளர்கள் மற்றும் திறமையற்ற மனிதவளம் மற்றும் குடிமக்களின் பங்களிப்பு இல்லாமை ஆகியவற்றுடன் நிறுவன மற்றும் கட்டமைப்பு சிக்கல்கள், சில உள்ளார்ந்த குறைபாடுகள் என்று, நகர்ப்புற திட்டமிடுவோர் மற்றும் ஆய்வாளர்கள், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர். அதன் அபிவிருத்தித் திட்டங்களில் "நிலையான" மற்றும் "உள்ளடக்கிய" காரணிகளை இணைக்கவில்லை என்பதையும் அவர்கள் விமர்சித்தனர், இதுபற்றி பின்னர் நாங்கள் விளக்குகிறோம்.
கடந்த 2019 ஆம் ஆண்டின் தரவுகள்படி, சுமார் 470 மில்லியன் மக்கள் இந்திய நகரங்களில் வசித்த நிலையில், இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 2026 க்குள், 38.6% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமான நகரமயமாக்கல் பின்னர் கழிவு மேலாண்மை, காற்று மாசுபாடு, போக்குவரத்து நெரிசல், வளங்கள் பற்றாக்குறை மற்றும் பல இதுதொடர்பான பெரிய சவால்களை ஏற்படுத்தும். இந்த கவலைகளுக்கு ஒரு தீர்வாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் கருதப்பட்டது.
'மிகைப்படுத்தப்பட்ட திட்டங்கள்'
இந்த பணி பெரும்பாலும், தீவிர லட்சியமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. "பல ஆய்வுகள் பெரும்பாலான நகரங்கள் உண்மையில், நிதி மற்றும் மனித வளங்கள் இரண்டையும் பொறுத்தவரை, தங்கள் சொந்த திறனுக்கு அப்பாற்பட்ட திட்டங்களை அனுப்பியுள்ளன என்பதைக் காட்டுகின்றன," என்று, அபிவிருத்தி திட்டங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைக் கொண்டுவருவதற்கு நிதியைக் கண்காணிக்கும் அமைப்பான, நிதி பொறுப்புக்கூறல் மையத்தின் இணை இயக்குனர் கவுரவ் திவேதி கூறினார்.
"ஒவ்வொரு நகரத்திற்கும் ஐந்து ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில அரசிடம் இருந்து ஒதுக்கப்பட்ட பட்ஜெட் சுமார் 1,000 கோடி ரூபாய் (ஆண்டுக்கு சுமார் 196 கோடி ரூபாய்) ஆகும். மறுபுறம், திட்டங்களை நகர அளவிலான மாநகராட்சி (எம்.சி) திட்டமிட்டு வடிவமைத்துள்ளது, "என்று திவேதி விளக்கினார். "எடுத்துக்காட்டாக, சுமார் 1,000 கோடி அரசு மானியத்துடன் இரண்டாம் அடுக்கு நகரம் 2,500-3,000 கோடி ரூபாய் திட்டத்தை அனுப்பியுள்ளது. ரூ .1,000 கோடி என்பது அரசு வழங்கிய விதை நிதி போன்றது, பின்னர் இந்த விதை நிதியத்தின் அடிப்படையில், எஸ்.பி.வி மற்றும் எம்.சி ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்த அதிக நிதி திரட்ட வேண்டும். "இந்த நிதி, பல்வேறு ஆதாரங்களில் இருந்து வரலாம் - பொழுதுபோக்கு, நீர் மற்றும் சுகாதாரம் / திடக்கழிவு மேலாண்மை மீதான வரிகளை உயர்த்துவது, பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் விளம்பர கட்டணங்களை அதிகரித்தல் மற்றும் வங்கிகள் அல்லது உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களின் கடன்களில் இருந்து" என்றார்.
ஒவ்வொரு ஸ்மார்ட் நகரத்திற்கும் சராசரியாக ரூ .100 கோடியை மத்திய அரசு விடுவிக்கிறது. இருப்பினும், இது ஒரு "சிட்டி ஸ்கோர் கார்டு" சமர்ப்பிப்பிற்கு உட்பட்டது, இது நகரத்தின் நிதி மற்றும் அமைப்பு முன்னேற்றம், மைல்கற்கள் தாண்டியது மற்றும் அதன் எஸ்.பி.வி. செயல்பாடுகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய பயன்படும் என்று, வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாநில / யூனியன் பிரதேசம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு (யுஎல்பி) 50:50 ஈக்விட்டி பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனச் சட்டம்- 2013 இன் கீழ் இந்த நோக்கத்தை செயல்படுத்துவதற்கும் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக செயல்படுவதற்கும் எஸ்பிவிக்கள் பொது-தனியார் கூட்டாண்மைகளாக (பிபிபி) உருவாக்கப்பட்டன. அவற்றின் வாரியங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் யுஎல்பிக்கள் மற்றும் எஸ்.பி.வி.யில் பங்கு பங்குகளை வாங்கும் தனியார் நிறுவனங்கள் அல்லது நிதி நிறுவனங்கள் ஆகியவை உள்ளன.
முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 நகரங்களில் (பாஸ்ட் டிராக் உட்பட) 2015-16 மற்றும் 2020-21 நிதியாண்டுகளுக்கு இடையில், மத்திய அரசு நான்கு ஆண்டுகளாக இரண்டு நகரங்களுக்கும், மூன்று ஆண்டுகளாக 13 நகரங்கள், இரண்டு ஆண்டுகளாக 12 நகரங்களும், ஒரு வருடமாக ஐந்து நகரங்களுக்கான பணிக்கு, எந்த நிதியையும் மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று, அரசு தரவுகள் காட்டின.
ஐந்து ஆண்டுகளில் தலா ரூ .48,000 கோடியை செலவிட மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்மொழிந்தன. ஜூன் 23, 2021 க்குள், ரூ .96,000 கோடியில் ரூ .40,622 கோடி (42%) வெளியிடப்பட்டது. இதில், ரூ .27,862 கோடி (69%) பயன்படுத்தப்பட்டது, நகரங்கள் சமர்ப்பித்த பயன்பாட்டு சான்றிதழ்களின் படி, எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.
பட்ஜெட் தடைகள்
டெல்லியை சேர்ந்த சிந்தனைக் குழுவான, கொள்கை ஆராய்ச்சி மையம் (சிபிஆர்) 99 ஸ்மார்ட் நகரங்களில் 2018 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில், சுமார் 70% நிதி பொது மூலங்களில் இருந்து பெறப்பட்டதாகக் காட்டியது, பிபிபி முன்முயற்சிகள் மற்றும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதிகளில் இருந்து 25%, கடன்களில் இருந்து 5% மற்றும் பயனர் கட்டணங்களில் இருந்து 1%.
தற்போதைய உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியைத் தவிர, திட்டத்தின் மாதிரியில் உள்ள சில குறைபாடுகள், நகராட்சி நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதையும் பயன்படுத்துவதையும் கடினமாக்கியுள்ளதாக திவேதி கூறினார். "முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பொது சொத்துக்கள் எஸ்பிவிக்களுக்கு மாற்றப்படுகின்றன, பின்னர் எஸ்பிவிக்கள் அந்த சொத்தை சந்தை விகிதத்தில் விற்கிறார்கள். இலாப வரம்புகளும் உள்ளன, அது சந்தையில் விலகலை உருவாக்கும்; இது விலைகளை கணிசமாக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வதாகத் தெரிகிறது," என்று அவர் கூறினார்.
2019 வழக்கு ஆய்வுக்காக 13 அரசு அதிகாரிகள் மற்றும் ஏழு தொழில்துறை வல்லுநர்கள் / ஆலோசகர்களுடன் வெர்ஜீனியா பாலிடெக்னிக் நிறுவனம் மற்றும் மாநில பல்கலைக்கழகம் ஆகியன. இரண்டு ஸ்மார்ட் சிட்டி நகரங்களான ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் உத்தரபிரதேசத்தின் கான்பூரில் நேர்காணல் செய்ததில், "பட்ஜெட் கட்டுப்பாடுகள்" மற்றும் "நிதி ரீதியாக அணுக முடியாத திட்டங்களை வடிவமைத்தல்" ஆகியன அடிக்கடி தெரிவிக்கப்பட்டன.
நேர்முகத்தில் கூறியவர்கள், ஒப்பந்தக்காரர்களுக்கு "பணப்பட்டுவாடா தாமதம்" மற்றும் "நகர நிறுவனங்களின் மீதான தனியார் மீதான அவநம்பிக்கை" ஆகியவற்றை எடுத்துரைத்தனர்.
இதேபோல், ஸ்மார்ட் சிட்டி இந்தூர், நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டது, இது தனியார் நிறுவனங்கள் அதிக வருவாய் கோரிக்கைகளை (மீட்பு செலவுகள்) பயனர் கட்டணங்களால் பூர்த்தி செய்ய வேண்டிய திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்தன - குடிமக்கள் அதிக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு செலவினங்களை செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அவ்வாறு செய்யமுடியவில்லை. சென்னை மற்றும் லூதியானா ஆகியன, தங்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக, வரம்புடன் கொண்ட நிதி சிக்கல்களை எதிர்கொண்டதாக, ஒரு அறக்கட்டளையான வீட்டுவசதி மற்றும் நில உரிமை வலையமைப்பு (எச்.எல்.ஆர்.என்) இந்தியாவின் 2018 அறிக்கை தெரிவித்தது.
நிர்வாக ஒழுங்கீனம் உள்ளது
நாங்கள் முன்பு கூறியது போல, ஒவ்வொரு நகரத்திலும் தனியார் கூட்டாண்மை மாதிரியில் எஸ்பிவிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக செயல்படுவதால், இந்த அமைப்புகள் ஒரு ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான செயல்முறையை கார்ப்பரேட் செய்வதற்கும் அரசியல் ஒழுங்கீனத்தை குறைப்பதற்கும் ஆகும். சுற்றுச்சூழல் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றும் புனேவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான பாரிசரில் திட்ட இயக்குநர் ரஞ்சித் காட்கில் கூறினார்.
ஆனால் ஆய்வுகள் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு பதிலாக, ஜனநாயக வழிமுறையைத் தவிர்த்து சிறப்பு நோக்கம் கொண்ட கூறுகள் முடிவடைந்தன. "முன்னர் பிரச்சினைகள் இருந்தபோது, உள்ளூர் பிரதிநிதிகள், கூட்டுறவு, ஆலோசகர்கள் மற்றும் மாநகராட்சியின் பிற உறுப்பினர்கள் நகராட்சி சபையில் பிரச்சினைகள் குறித்து விவாதித்து விவாதிப்பார்கள். ஆனால் அதிகாரங்கள், சிறப்பு நோக்கம் கொண்ட கூறுகளுக்கு மாற்றப்படுவதால், அத்தகைய வழிமுறை எதுவும் இல்லை, "என்று திவேதி கூறினார். "ஒரு இரட்டை வாமி உள்ளது - முடிவெடுப்பது சிறப்பு நோக்கம் கொண்ட கூறு களுக்கு மாற்றப்பட்டுள்ளது, ஆனால் நிதி இன்னும் மாநகராட்சியின் தோள்களில் உள்ளது".
இது 74 ஆவது திருத்தச் சட்டம்- 1992 க்கு எதிரானது, இது உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுயாட்சியை அளிக்கிறது மற்றும் பரவலாக்கலை ஊக்குவிக்கிறது. முனிசிபல் கார்ப்பரேஷனின் அதிகாரங்களை பலவீனப்படுத்தும் என்ற அடிப்படையில் சிறப்பு நோக்கம் கொண்ட கூறுகளின் தத்துவத்துடன் உடன்படாததால் மும்பை கூட இந்த பணியில் இருந்து விலகியது.
இந்த கட்டமைப்பானது, தனியார் துறை மூலம் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதத்திற்கு வழிவகுத்தது, திட்டங்கள் டெண்டர் கட்டத்தில் சிக்கித் தவிக்கின்றன, அங்கு ஒரு திட்ட பகுப்பாய்வு எஸ்.பி.வி, மாநில திட்டமிடல் வாரியம் மற்றும் மாநில அரசு கூட்டாக செய்ய வேண்டும் என்று, இந்தூர் வழக்கு ஆய்வு தெரிவித்தது.
மேலும், சிறப்பு நோக்கம் கொண்ட கூறுகளின் ஊழியர்களும் நகராட்சிக்காக பணியாற்றுகிறார்கள், இது தனியார் கூட்டாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே உராய்வை உருவாக்குகிறது என்று காக்கிநாடா மற்றும் கான்பூர் வழக்கு ஆய்வுக்காக பேட்டி கண்ட ஒரு தொழில் வல்லுநர் கூறினார். உதாரணமாக, சென்னை சிறப்பு நோக்கம் கொண்ட கூறு, தமிழக அரசின் 11 அதிகாரிகளை இயக்குநர்கள் குழுவாகக் கொண்டுள்ளது, மேலும் ஐந்து அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களில் (தலைமை செயல் அதிகாரி உட்பட) இரண்டு பேர் மட்டுமே, சுயாதீன இயக்குநர்கள் என்று எச்.எல்.ஆர்.என் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனே ஸ்மார்ட் சிட்டி, உண்மையில் புதுமையான எதையும் செய்யவில்லை, இது ஏற்கனவே நகரத்தின் பிற பகுதிகளிலும் பயன்படுத்தப்படவில்லை என்று, காட்கில் கூறினார். "ஏனென்றால், முதலில், ஸ்மார்ட் சிட்டி சாதாரண நகரத்தில் இருந்து சுயாதீனமாக இயங்காது, ஏனெனில் நிறைய நகர ஆணையர்களும் சில நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரிகளாக உள்ளனர். இரண்டாவதாக, ஸ்மார்ட் சிட்டிக்கு கள அளவில் ஊழியர்களின் மீது அதிக கட்டுப்பாடு இல்லை, அது விரும்பியிருக்கும், அவர்கள் திட்ட யோசனைகளை உருவாக்கும் அல்லது அறிக்கைகளை உருவாக்கும் ஆலோசகர்களை முழுமையாக நம்பியிருக்கிறார்கள்; நகர பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் யாரும் அவர்களிடம் இல்லை, அவர்கள் இறுதியில் நகரத்தை இயக்க முடியும், "என்று அவர் கூறினார்.
சிறப்பு நோக்கம் கொண்ட கூறுகளில் உள்ள அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் அல்லது பல பதவிகளை வகிக்கிறார்கள் என்றும் புகார்கள் வந்தன. "அனுமானமாகச் சொல்லலாம், நகர்ப்புற மேம்பாட்டு செயலாளர் அல்லது ஒரு ஆணையர் அகமதாபாத் மாநகராட்சிக்கு நியமிக்கப்படுகிறார்; பின்னர் நாளை அவர் வீட்டுவசதி அல்லது நிதித் துறைக்கு மாறக்கூடும். இது பணியில் தொடர்வதை உடைக்கிறது,"என்று தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் இடைநிலை வடிவமைப்பு ஆய்வுகளின் மூத்த ஆசிரியரான மிஹிர் போலி கூறினார்.
போதுமான நகர்ப்புற திட்டமிடுபவர்கள் இல்லை
2020 ஆம் ஆண்டில் இந்தியா 1.1 மில்லியன் நகர்ப்புற திட்டமிடுபவர்களில் குறைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, 2018 ஏப்ரல் இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது. "நகர திட்டமிடுவோர் பற்றாக்குறை பிரச்சினையில், யுஎல்பிகளுடன் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 5,500, டவுன் பிளானர்கள் மிகக் குறைவு என்று குழு கருதுகிறது," என்று, மார்ச் 2018 பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை கூறியது.
காக்கிநாடா மற்றும் கான்பூர் தொடர்பான விவகாரத்தில், சிறப்பு நோக்கம் கொண்ட கூறுள் குறைவான பணியாளர்களாக இருப்பதை ஆய்வுகள் கண்டறிந்தன. மற்ற காரணங்களுக்கு, திட்ட ஆலோசகர்கள் கிடைக்காததால் கொச்சி அதன் ஆரம்ப கட்டங்களில் மெதுவான தொடக்கத்தைக் கண்டது; குவாலியரும் நிபுணர்களின் பற்றாக்குறையை சந்தித்தது.
"நகர்ப்புற முகாமைத்துவத்தில் எந்தவொரு மார்க்கமும் இல்லை, மேலும் நகர்ப்புற நிர்வாகத்தின் உள்ளீடுகளையும் வெளியீட்டுகளையும் அறிந்த அர்ப்பணிப்புள்ள திறமையான மனித சக்தி, மாநகராட்சிகளுக்கு இல்லை" என்று போலே கூறினார். "எனவே, பொருளாதார, நிதி, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப கண்ணோட்டத்தில் நகர்ப்புற நிர்வாகம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்த மனிதவளத்தின் திறமைத் தொகுப்பை நாம் உருவாக்க வேண்டும்" என்றார்.
அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள்
தலைநகரில் ஏற்கனவே வளர்ந்த பகுதியான லுதியன்ஸ் டெல்லி, இந்த திட்டத்தின் கீழ் ஏரியா அடிப்படையிலான வளர்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல நகரங்கள் வளர்ச்சிக்காக நன்கு சேவை செய்யப்பட்ட தொகுப்புகளை தேர்ந்தெடுத்துள்ளன, இது நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் என்று சிபிஆர் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.
"புனேவின் ஏரிய அடிப்படையிலான வளர்ச்சியின் கீழ், இந்த நோக்கம் செயல்படுத்தப்பட்டு வரும் பலேவாடி பகுதி, பல குடிசைப்பகுதிகளை கொண்ட ஒரு நன்கு வளர்ந்த பிராந்தியமாகும், இது ஆரம்பத்தில் இல்லை. இது பல ஸ்மார்ட் நகரங்களுக்கு விமர்சனமாக உள்ளது," என்று காட்கில் கூறினார்.
நாங்கள் முன்பு கூறியது போல, இந்தியாவின் நகர்ப்புறவாசிகளுக்கு இந்த நோக்கம் மட்டுப்படுத்தப்பட்ட நன்மைகளைக் கொண்டுள்ளது. மொத்த செலவில் (ரூ. 2.05 லட்சம் கோடி அல்லது. 27.6 பில்லியன்), எஸ்.சி.எம்., சுமார் 20% மட்டுமே பான்-நகர மேம்பாட்டிற்கும் 80% பகுதி அடிப்படையிலான வளர்ச்சிக்கும் அர்ப்பணிக்கப்படும்.
பல சந்தர்ப்பங்களில், நகரத்தின் மக்கள் தொகையில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே இந்த பணியில் இருந்து பயனடைவார்கள்: ஏரியா அடிப்படையிலான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், புனேவின் மக்கள் தொகையில் 0.8% மட்டுமே பயனடைவார்கள்; அகமதாபாத் (1.5%), போபால் (1.7%), லூதியானா (2.2%), பாட்னா (2.3%), அவுரங்காபாத் (2.4%), மற்றும் லக்னோ (2.5%) ஆகியவையும் சிறிய பிரிவுகளுக்கு பயனளிக்கும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஜூலை 27, 2017 அன்று மாநிலங்களவையில் கூறியது. போர்ட் பிளேர் (77%), நம்ச்சி (74%), வேலூர் மற்றும் பாசிகாட் (63%), தானே (57%) மற்றும் தர்மஷாலா (51%) ஆகியவை அடங்கும்.
மேலும், 2018 ஆம் ஆண்டில் மட்டும் எஸ்சிஎம் காரணமாக சுமார் 17,700 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக 'Forced Evictions in India in 2018: An Unabating National Crisis' என்ற, என்.எச்.எல்.ஆர் அறிக்கை தெரிவித்தது. கோயம்புத்தூர், நாக்பூர், போபால் மற்றும் வாரணாசி உள்ளிட்ட 100 ஸ்மார்ட் நகரங்களில் 34 இடங்களில் வெளியேற்றங்களை, அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.
இந்த மக்கள் அனைவரும் மறுவாழ்வு பெற்றார்களா என்பது குறித்த விரிவான தகவல்கள் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், வெளியேற்றப்பட்ட 218 வழக்குகளில் (எஸ்சிஎம் மற்றும் பிற காரணங்கள் அடங்கும்), 173 வழக்குகளுக்கு மறுவாழ்வு தகவல்கள் கிடைக்கின்றன, மேலும் அந்த இடங்களில் இருந்து 53 தளங்களுக்கு மட்டுமே மீள்குடியேற்றம் / மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது. கட்டாய வெளியேற்ற வழக்குகளில் 98% பண இழப்பீடு வழங்கப்படவில்லை.
மேலும், 99 ஸ்மார்ட் நகரங்களில் 28 விளிம்புநிலை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் குறித்த எந்தவொரு நடவடிக்கைகளையும் தங்கள் திட்டங்களில் குறிப்பிடவில்லை என்று எச்.எல்.ஆர்.என் 2018 அறிக்கை கூறுகிறது.
போதுமான 'ஸ்மார்ட்' குடிமக்கள் இல்லை
ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், MyGov இணையதளங்கள், பேஸ்புக், ட்விட்டர், செயலிகள் போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் பின்னூட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன, ஆனால் இந்தியாவில் காணப்படும் டிஜிட்டல் இடைவெளியானது, ஓரங்கட்டப்பட்டவர்களை இந்த செயல்முறையில் இருந்து விலக்கக்கூடும். முதல் 60 நகரங்களில் 40 மட்டுமே டிஜிட்டல் அல்லாத ஊடகம் மூலம் கலந்தாலோசித்த நபர்களின் எண்ணிக்கையைப் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளன, மேலும் குறிப்பிடப்பட்ட 24 உள்ளீடுகள் மட்டுமே கிடைத்தன - ஆனால் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட பொது ஆலோசனைகளில் இருந்தே - என்று சிபிஆர் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.
உதாரணமாக, புதுடெல்லி மாநகராட்சியில், 24 குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்புகளில் இருந்தும், புவனேஸ்வரில் உள்ள ஐந்து குடியேற்றங்களில் இருந்தும் வசிப்பவர்கள், அவற்றைப் பாதிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று எச்.எல்.ஆர்.என். ஆய்வு கூறியது.
ஒவ்வொரு நகரத்திலும் அமைக்கப்படவுள்ள ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை மன்றம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்களை உறுப்பினர்களாக அனுமதிக்கிறது, ஆனால் சிவில் சமூகம் மற்றும் உள்ளூர் சமூக பிரதிநிதித்துவத்திற்கான எந்த தளமும் இல்லை என்று எச்.எல்.ஆர்.என் அறிக்கை தெரிவித்துள்ளது. இது திட்ட நடைமுறைப்படுத்துவதில் குடிமக்களின் பிரச்சினைகள் கேட்கப்படாதது பற்றிய கவலையை எழுப்புகிறது.
ஒரு 'ஸ்மார்ட் குடிமகன்' இல்லாதது பணியின் முன்னேற்றத்தை மேலும் தடுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, கழிவு நிர்வாகத்தில், நகர துப்புரவாளர்களுக்கான ஜி.பி.எஸ் கண்காணிப்பு சாதனங்கள் போன்ற ஸ்மார்ட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில், கழிவு சேகரிப்பாளருக்கும் கழிவு உற்பத்தி செய்வோருக்கும் இடையிலான உறவு அடிப்படையானது. "ஸ்மார்ட் சிட்டி, பெரிய அளவிலான ஆலைகள் போன்ற திறமையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றன, ஆனால் கழிவு சேகரிப்பாளருக்கும் உருவாக்குவோருக்கும் இடையிலான உறவில் அல்ல. விலையுயர்ந்த உள்கட்டமைப்பை சரிபார்க்கவும், நிலைத்தன்மையைக் கொண்டுவரவும் இந்த உறவை சரிசெய்ய வேண்டும்," என்று, நகர்ப்புற மேம்பாட்டு அமைப்பான, ரெசிட்டி நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சூரஜ் நந்தகுமார் கூறினார்.
நிலைத்தன்மை போதுமான முன்னுரிமை அளிக்கப்படவில்லை
பல்துறை இதழான டெலிமாடிக்ஸ் மற்றும் இன்ஃபர்மேடிக்ஸ், கொள்கை பகுப்பாய்வின்படி, எந்த நகரமும் மற்ற பரிமாணங்களை விட ஸ்மார்ட் சூழல்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. ஸ்மார்ட் சூழல் பரிமாணத்தின் முறிவு 17 ஸ்மார்ட் நகரங்கள் தூய்மை மற்றும் தூய்மையான ஆற்றலில் கவனம் செலுத்த உத்தேசித்துள்ளன என்பதைக் காட்டுகிறது. 16 நகரங்களில் இரண்டாவது மிக முன்னுரிமை அளிக்கப்பட்ட துணை பரிமாணங்கள், காற்றின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் திட-கழிவு சுத்திகரிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், பொது கழிப்பறைகள் மற்றும் பசுமை மறைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நிலையான உள்கட்டமைப்பை நிறுவுதல் ஆகும்.
புவனேஷ்வர் மற்றும் கொச்சி ஆகியன, சுற்றுச்சூழலில் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், புது டெல்லி (என்.டி.எம்.சி) மற்றும் கக்கிநாடா ஆகியன, ஸ்மார்ட் சூழலுக்கு ஒரு 'ஓரளவு குறிப்பு' மட்டுமே கொண்டுள்ளன.
"இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி கொள்கை உருவாக்கும் மட்டத்தில் ஸ்மார்ட் சுற்றுச்சூழல் பரிமாணம் இல்லாதது தொடர்பானது - காலநிலை மாற்றங்கள் வெளிவருவதால் உலகெங்கிலும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் வீதத்தை கருத்தில் கொள்ள வேண்டும்" என்று அறிக்கை கூறியுள்ளது.
எஸ்சிஎம் வழிகாட்டுதல்கள் குறைந்தபட்சம் 10% ஆற்றலை, சூரிய சக்தியில் இருந்து வருமாறு கட்டாயப்படுத்துகின்றன; இருப்பினும், இந்தியா உலகின் நான்காவது பெரிய கரியமில வாயு உமிழும் என்று கருதினால், இது போதாது என்று எச்.எல்.ஆர்.என் 2018 அறிக்கை கூறுகிறது.
ஹைதராபாத், புதுடெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு இந்திய நகரங்கள், உலகளாவிய ஸ்மார்ட் சிட்டி இன்டெக்ஸ் 2020 இல் தங்கள் நிலைகளில் சரிவைக் கண்டன, இதில் 109 நகரங்களைச் சேர்ந்த குடிமக்கள் ஐந்து முக்கிய துறைகளில் தொழில்நுட்ப ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டனர்: சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, இயக்கம், செயல்பாடுகள், வாய்ப்புகள் மற்றும் நிர்வாகம். 15 குறிகாட்டிகளின் பட்டியலில் காற்று மாசுபாடு மிக அவசரமான பிரச்சினை என்று கணக்கெடுப்பு பதிலளித்தவர்கள் மேற்கோள் காட்டினர்.
போக்குவரத்து திட்டங்களில் ஏறக்குறைய 40% சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களிலும், 20% பொது போக்குவரத்திலும் கவனம் செலுத்துகின்றன, போக்குவரத்து பட்ஜெட்டில் 2% மட்டுமே பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, சிபிஆர் அறிக்கை கூறுகிறது.
முன்புள்ள வழிகள்
பணியை எவ்வாறு திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதற்கான அறிக்கைகளையும், நிபுணர்களிடம் இருந்து சில பரிந்துரைகளையும், இந்தியாஸ்பெண்ட் தொகுத்தது:
வீடுகள், சேவைகள், நீர் வழங்கல், சுகாதார அணுகல் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகள் நாடு முழுவதும் எங்கும் நிறைந்திருப்பதால் நகரங்கள் முழுவதும் முழுமையான மற்றும் சமமான அணுகுமுறையை நோக்கமாகக் கொள்ள வேண்டும் - எச்.சி.எல்.ஆர் அறிக்கை 2018
ஸ்மார்ட் நகரங்கள் ஒருபடி மேலே இருக்க, ஸ்மார்ட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான, தங்களின் முக்கிய யோசனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: வரையறுக்கப்பட்ட வளங்களில் இருந்து அதிகம் பிரித்தெடுக்க பயன்பாடுகள் மற்றும் கண்காணிப்பு சாதனங்களை எவ்வாறு பயன்படுத்தலாம்? அனைத்து முடிவெடுக்கும் மையத்திலும் குடிமக்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த அவர்கள் புதுமையாக இருக்க வேண்டும், அதாவது பின்னூட்டம் கருத்து இருக்க வேண்டும் - ரஞ்சித் காட்கில்
ஒரு நகரத்தின் மாதிரிகள் சிறியதாகவும், நிர்வகிக்கக்கூடியதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் இருக்க வேண்டும். தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் நிதி ஆகியவற்றில் திறமையானவர்கள் ஒன்றிணைந்த நல்ல நகர நிர்வாகத்தை உருவாக்குவதற்கு சிறிய நகரங்கள் சிறந்தவை - மிஹிர் போலி
தேவை மற்றும் வழங்கலுக்கு தொடர்பு கொள்ளும் வகையில், ஒரு வெளிப்படையான தளத்தின் தேவை உள்ளது. சிக்கலான, பெரிய அளவிலான திட்டங்கள் கூட்டு நன்மைகளைத் தராது -- எஸ்பிவிக்கள் சிறிய அளவில் உருவாக்கப்பட வேண்டும், மேலும் ஒரு சிறிய கால கட்டத்தில் இலக்கு தீர்வுகளை வழங்க அதிக பைட் அளவிலான திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும்-- சூரஜ் நந்தகுமார்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.