மின்சார வாகனங்களுக்கு அழைப்பு விடுக்கும் உலகளாவிய பருவநிலை மாநாடு; லட்சிய திட்டத்தில் இருந்து அமைதியாக பின்வாங்கிய இந்தியா
புதுடெல்லி: பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவது முக்கிய பங்காற்றும் என்று, போலந்தில் நடந்த 24வது உலகத்தலைவர்கள் மாநாட்டில் (COP) முக்கிய அம்சமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய வாகனச்சந்தையை கொண்டுள்ள இந்தியாவில், மின்சார வாகனங்கள் (EV) அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் 25 மில்லியன் வழக்கமான --உள்ளக எரிப்பு என்ஜின் (IC)-- வாகனங்கள் விற்பனையாகின; இதன் மூலம் பயணியரின் வாகன எண்ணிக்கை 230 மில்லையனாக உயர்ந்தது. இது, 2001 முதல் 2016 வரையிலான அளவை விஞ்சியதாகும்.
உலகளாவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் வாகனங்களில் பங்களிப்பு கால்வாசி என்றுள்ள நிலையில், இந்தியாவின் மிக மோசமான காற்று மாசுபாடு நிலைக்கு வாகனங்கள் காரணமாக உள்ளன. இது, 1.24 மில்லியன் பேரை பலி கொண்டிருக்கிறது; அதாவது, 2017ஆம் ஆண்டில் எட்டில் ஒருவரின் இறப்புக்கு காற்றுமாசுபாடு காரணம் என்று, 2018 டிச. 7-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.
இருப்பினும், இந்தியா 2040 ஆம் ஆண்டில் சாலை வாகனங்களை இருமடங்கு அதிகமாக கொண்டிருக்கக்கூடும். 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களையும் மின்சாரத்தில் இயக்குவது என்ற லட்சிய திட்டத்தை பரிசீலித்த இந்தியா, பின்னர் சத்தம்போடாமல் இதிலிருந்து பின்வாங்கி, 2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 15% வாகனங்கள் மின்சாரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றது.
முன்னுள்ள சவால்கள் தலைகீழானவை என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் அதை இந்தியா தொடருகிறது. மின்சாதன வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மானியம், தள்ளுபடி, வரிச்சலுகை போன்றவற்றை, குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கு பயன்படும் மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகளுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இதில் நீண்ட கால புதிய கொள்கை பற்றி இந்தியா ஸ்பெண்ட் மதிப்பீடு செய்தது. இக்கொள்கை தொடர்பாக அரசின் நோக்கம், தொழில்துறையை அதன் பக்கம் திருப்புவது, உள்நாட்டு உள்ளிட்டவை தொடர்பாக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. உள்கட்டமைப்பு வசூலிக்கப்படுவதற்கு வகை மற்றும் அளவீடு; மற்றும் மானியங்கள், வரிச்சலுகைகள் எவ்வாறு நிதியளிக்கப்படும் என்பது விளக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் மின்சார வாகனத்துறையின் நிலை, அது நடைமுறைக்கு வருவதற்கு செய்ய வேண்டியதை நாம் பார்த்தாக வேண்டும்.
மின்சார வாகனத்துறைக்கு செல்வது அரிது
ஒரு மின்சார கார் என்பது -- பொதுவாக பசுமை இல்ல வாயு-- டீசல் காரை விட 25% குறைவாகவே கரியமில வாயுவை வெளியேற்றுகிறது; இது இந்தியா போன்ற நாடுகளின் கட்டடங்களை “அழுக்கு” (பெரும்பாலும் நிலக்கரி எரிப்பதால்) ஏற்படுத்துகிறது என, மின்சார வாகனங்கள் குறித்து, பருவநிலை மாநாடு (COP24) தொடர்பாக உலக வங்கியின் டிசம்பர் 2018 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்திய கட்டடங்கள் விரைவாக பசுமைக்கு மாறி வருகின்றன. நிறுவப்பட்ட மின்சக்தி திறன்களில் ஐந்தில் ஒன்று புதுப்பிக்கத்தக்க மின்சாரம் என்ற நிலை உள்ளது.
இந்தியாவில், 2018 மார்ச் மாத கணக்கின்படி, 4,48,000 மின்சார வாகனங்கள் சாலையில் இயங்குகின்றன; இதன் மொத்த விற்பனையில் 90% (4,75,000) இருசக்கர வாகனங்கள். 7,000 நான்கு சக்கர வாகனங்கள், டிரக், பஸ், லாரி என 150 கனரக மின்சார வாகனங்கள் இயங்குவதாக, மின்சார வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SMEV) தெரிவித்துள்ளது.
1.7 மின்சார மூன்று சக்கர வாகனங்களில் பெரும்பாலும் ரிக்ஷாக்கள்; அவற்றில் 8,50,000 (48%) வாகனங்கள் கடந்த 2017-18 நிதியாண்டில் (ஏப்.2017- மார்ச் 2018) வாகனங்கள் விற்பனையாகின.
முன்னணி மின்சார வாகன தயாரிப்பாளர்களான ஹீரோ எகோ- மஹேந்திரா ரேவா, எலக்ட்ரோத்ரம், அவோன், லோஹியா, ஆம்பிரி போன்றவை, ஸ்கூட்டர்கள், கார்கள் (முழுவதும் மின்சாரம்; அல்லது இருவகை இயக்கம்), பேருந்துகள், சிறு லாரிகள், ரிக்ஷாக்கள், மிதிவண்டிகளை தயாரித்து விற்பனை செய்கின்றன. மின்சார கார்கள் பிரிவில் தென்கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் லிட். இந்திய பிரிவான மஹேந்திரா ரேவா மற்றும் மாருதி சுஸுகி ஆகியன முறையே 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் தொடங்கப்படுகின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் 2019ஆம் ஆண்டில் மின்சார வாகன தயாரிப்புகளில் இறங்கவுள்ளதாக, மிண்ட் இதழ் 2018 ஜூனில் செய்தி வெளியிட்டிருந்தது.
வினியோக சங்கிலித்தொடராக, மூலப்பொருட்கள், பேட்டரி செல்கள், பேட்டரி பொதிகள், ஒருங்கிணைந்த வாகனங்கள், விற்பனை, ரீசார்ஜ் மற்றும் சேவைகள், மற்றும் பலவற்றை உற்பத்தி செய்தல் என ஒரு வரம்புக்குட்பட்ட தொழில் வாய்ப்புகள் உருவாகின்றன.
கொள்கை ஆதரவு
அரசு, 2013-ல் ’தேசிய மின்சார வாகன திட்ட இயக்கம் -2020’ (NEMMP) அறிவித்த பிறகு, மானியங்கள், வரி சலுகைகள் மற்றும் சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதி உள்ளிட்டவற்றை தொழில்துறை அனுபவித்தது.
இத்திட்ட இயக்கத்தின் இலக்கு, 6-7 மில்லியன் கலப்பு ரக வாகனங்களை (அதாவது, மின்சாரம் மற்றும் வழக்கமான எரிபொருளில் இயங்குவது) மற்றும் 2020 முதல் தோராயமாக 25% புதிய மின்சார வாகன பயன்பாடுக்கு கொண்டு வருவது என்பதாகும். 2017-ஆம் ஆண்டில் 9,00,000 மின்சார வாகனங்கள் விற்பனையானது; அதே ஆண்டில் விற்பனையான வழக்கமான என்ஜின் வாகன எண்ணிக்கையில் இது 4% என்ற நிலையில், மின்சார பயன்பாட்டுக்கு மாறுவது என்பது பெரிய சவாலாகவே இருக்கும் என, 2018 செப்.17-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘வேகமாக ஏற்று ஹைபிரிட் எலட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு’ (FAME) திட்டமானது, தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொண்டது; மானியங்கள் மூலம் தேவைகளை உருவாக்கியதோடு, பிரதான திட்டங்களை செயல்படுத்தி, உள்கட்டமைப்புகளை அமைத்தது. 2017 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு, மூன்று முறை விரிவுபடுத்தப்பட்டது; தொழிற்துறையானது, பொது போக்குவரத்து மற்றும் தனியார் பயன்பாட்டிற்கான வாகனங்களை கணக்கிட, FAME-II -க்கு காத்திருக்கிறது. இது உள்கட்டமைப்புக்கும், மின்சார வாகன தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு அழுத்தம் தரும்.
இதனிடையே, சமீபத்தில் ஏற்பட்டுள்ள சில முன்னேற்றங்கள் நல்ல சமிக்கையை தருவதாக உள்ளது: மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பதிவு செய்ய இயலாது என்பதால் (பொது வீதிகளில் எந்தவொரு வாகனமும் கட்டாயமாக்கப்பட வேண்டும்), மின்சார சைக்கிள்கள் சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அவற்றை பதிவு செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. இது சிறு நகரங்களில் பயன்பாட்டில் உள்ள ஆட்டோ எரிபொருளில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்கள் (அல்லது துணைசார்ந்த), சி.என்.ஜி. வாகனங்களுக்கு மாற்றாக இருக்கும். பெரு நகரங்களில் கடைசி தொலைவு வரை கூட இணைப்பை சாத்தியப்படுத்தும்.
பேட்டரி தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் பயன்கள் தற்போது இலகுவான மற்றும் திறன்வாய்ந்த லித்தியம்-அயன் மற்றும் பிற வேகமாக சார்ஜ் பேட்டரிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, திறன்வாய்ந்த பேட்டரிகள் உற்பத்தி மற்றும் கொள்முதல் அதிகரிக்கும் போது, மின்சார வாகனத்துறையில் உள்ள குறைந்த திறமைனுள்ள அமில பேட்டரிகளின் பயன்பாடு படிப்படியாக மறைந்துவிடும். ”மின்சார மூன்று சக்கர வண்டிகளை பயணிகள் வாகனமாக பதிவு செய்வது, மின்சார வாகனங்களில் உள்ள வழக்கமான பேட்டரிகளை, பேம் திட்டம் - 1ன் கீழ் அகற்றுதல் ஆகியன, மின்சார வாகனங்களின் சிறந்த செயல்பாடு, மற்றும் மலிவாக கிடைப்பதற்கான புதுமை ஆராய்ச்சியை நோக்கி பயணிக்கும்” என்று ப்ளூம்பர்க் புதிய எரிசக்தி நிதித்துறைக்கான இந்திய ஆராய்ச்சிப்பிரிவு தலைவர் சாந்தனு ஜெய்ஸ்வால், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
இதனிடையே, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய ஆறு மாநிலங்கள், மின்சார வாகன உற்பத்திக்கு நிலம் மற்றும் வரிச்சலுகைகளை அளிக்க முன்வந்துள்ளன. இதேபோல் மேலும் பல மாநிலங்களும் இதை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவுகள், முதலீடுகள் தாமதம்
அரசின் தெளிவான கொள்கைக்காக காத்திருக்கும் பல உற்பத்தியாளர்கள், வினியோகிப்பாளர்கள் மற்றும் சேவை வழங்குவோர் உள்ளனர். பேம் திட்டம் -2 குறித்து அரசின் முடிவு வரும் வரை, தங்களது முதலீட்டுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
"நான்கு முறை நீட்டிப்புகளுக்கு பின்னர், திட்டம் -1 ஒரு கட்டத்தில் தேங்கிப் போய், மந்தமடைந்து தனது மதிப்பை இழந்துவிட்டது" என்று ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.எம்.இ.வி. இயக்குனர் சோஹிந்தர் கில், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
மின்சார வாகனத்துறைக்கு ஊக்கமளிக்கும் இறுதி கட்டமைப்பு மற்றும் நாட்டின் தொலைதூரப்பார்வை பற்றி விரைவான தெளிவு தேவைப்படுகிறது என்று கூறும் ஜெய்ஸ்வால், "அறிவிப்பில் ஏற்படும் தாமதங்கள் ... இந்தியாவில் தீவிரமாக செயல்படும் உலகளாவிய பல பெரிய வாகன உற்பத்தியாளர்களின் முதலீட்டு முடிவுகளை தாமதப்படுத்துகிறது" என்றார்.
ஒரு மின்சார வாகனத்தின் வெளிப்படையான விலையில் எவ்வளவு மானியம் வழங்கப்படும்; மேலும், வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜ் நிலையங்கள் அல்லது பேட்டரி மாற்றும் மாதிரியைப் பின்பற்றுவதா என்பதையும் பொருத்து இது அமையும். அத்துடன், உற்பத்தி பேட்டரிக்கு உள்நாட்டில் மானியம் உண்டா, அல்லது இறக்குமதி பேட்டரி மலிவானதா என்பதை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
யார் செலுத்துவது?
திட்டம் -2ல் பல்வேறு மானியங்கள், வரி முறிவுகள், மற்றும் நிதி ஆதரவை அரசு எப்படி வழங்கும் என்பது போன்றவை தெளிவாக இல்லாதது முக்கிய பிரச்சனை என்று, தொழில்துறையினர் கூறுகின்றனர்.
மின்னணு பரிமாற்றத்தில் நிதி ஆதாரங்களை வழங்க வழி செய்யப்படும். 'மாசுபாட்டுக்கான தொகை' என்ற கொள்கையில், ஐ.சி. இயந்திரங்களை உற்பத்தி செய்வோர் மீது ’அபராதம் அல்லது தள்ளுபடி’ வரி விதிக்க அரசு விரும்புகிறது என்று கில் கூறினார். "இதுதான் கருத்தின் நோக்கம், ஏனெனில், ஐசி இயந்திரங்கள் உற்பத்தியாளர்கள், இதுபோன்று நடக்க விரும்புவதில்லை," என்று அவர் கூறினார். அபராதம் அல்லது தள்ளுபடி என்பது வாழ்வா, சாவா என்ற நிலையாகும் என்று, மின்சார வாகன தயாரிப்பளர்கள் கருதுகின்றனர். ஆனால், அது இல்லாமல் போதிய நிதி இருக்காது. புதிய கொள்கையும் இங்கும் அங்குமாக ஒரே மாதியான பணியையே செய்யும்.”
ஒரு மிதமான அபராதம் அல்லது தள்ளுபடி என்பது --இது ‘கட்டணம்’ மற்றும் ‘தள்ளுபடி’யை உள்ளடக்கியது; ஒருவருக்கு தள்ளுபடி வழங்குவதற்காக மற்றொருவருக்கு வரி விதிப்பது -- மின்சார வாகன துறை செலவுக்கான நிதியை தயாரிப்பதற்காக கூட பரந்த வாய்ப்பை தரலாம் என்று கில் கூறினார்.
உதாரணமாக, இருசக்கர வாகனம் ஒன்றின் ஐ.சி. என்ஜின் ரூ.60,000-70,000 விலை எனில், 1.6 - 1.7 % தள்ளுபடி வரி ரூ.1000க்கு இது ஆண்டுக்கு ரூ.2,000 கோடியை உருவாக்கும் (20 மில்லியன் யூனிட்டுகளை விற்பனை செய்வதாக), என எச்.எம்.இ.வி. பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
இந்த யோசனை ஆராய்ச்சி நிறுவனங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இது "மின்சார வாகனங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதற்கு ஒரு வலுவான வழியாகும். அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகைகளுக்கு அவசியமானவை” என்று எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் ஆராய்ச்சியாளர்கள் (CEEW) இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். டெல்லி அரசின் மின்சார வாகன கொள்கை எற்கனவே ஒரு வரி திட்டத்தை முன்வைத்துள்ளது என்று அவர்கள் கூறினர்.
உள்நாட்டு தயாரிப்பா அல்லது இறக்குமதியா?
தற்போது மின்சார வாகனத்தின் விலையில் 50% க்கும் மேலாக பேட்டரிக்கே போய்விடுகிறது. எனவே, --பேட்டரியின் விலைக்கு பதில் -- வாகனத்தின் விலைக்கு மானியம் அளிப்பது என்பது, பேட்டரியை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமோ என்ற கவலை உள்ளது. உற்பத்தியின் அனைத்து முக்கிய பகுதிகளையும் கைவசம் வைத்திருக்க நினைக்கும் இந்தியாவின் லட்சியத்தை இது தடுக்கக்கூடும் என்று, ஜெய்ஸ்வால் கூறினார். "இத்திட்டம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகளை, அதிகரித்து வரும் தேவைக்கேற்ப படிப்படியாக அனுமதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், இந்தியாவில் விநியோக சங்கிலி இன்னும் ஒரு பெரிய அளவில் தயாராக இல்லை”.
பேட்டரி மாற்றம் அல்லது வேகமாக சார்ஜ் உள்கட்டமைப்பு?
சார்ஜிங் நிலையம் அமைத்து பேட்டரிகளை வேகமாக சார்ஜ் ஏற்றும் முறையா அல்லது, பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும் மாதிரியை பின்பற்றலாமா என்பதை முடிவு செய்ய அரசு முயற்சித்து வருகிறது.
“மற்றவற்றுக்கு முன்னுரிமை இருந்தால், சார்ஜ் ஏற்றும் முறை முன்மாதிரியாக இருக்காது; எனவே, மின்சார வாகனங்களுக்கு இரண்டு முறையும் கலந்த மாதிரியே உதவிகரமாக இருக்கும்” என்று சி.இ.இ.டபிள்யூ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கூறுகையில், மூன்று மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு பேட்டரி மாற்றும் முறை பொருத்தமானது; சார்ஜிங் முறை என்பது பேருந்துகள், வணிக ரீதியான வாகனங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்றனர்.
சார்ஜிங் நிலையம் விஷயத்தில் கவனிக்க வேண்டிய மற்றொன்று, இது சேவை வழங்கும் பிரிவில் (சார்ஜ் வினியோகிப்பதால்) வருமா; அல்லது விற்பனையாளர் (மின்சாரத்தை) பிரிவில் வருமா என்பது தான்.
மின்சார சட்டமானது, மின் வினியோகிக்கும் நிறுவனங்கள் மட்டுமே மின்சாரத்தை விற்க அனுமதிக்கிறது. எனவே, இரண்டாவதாக கூறியது ஏற்கப்படாமல் இருக்க, சட்டம் திருத்தப்பட வேண்டும்.
ஐ.சி. கார் தொழில் துறையின் அழுத்தம்
திட்டம் -1 விற்பனையின் பெரும்பகுதி இரண்டும் கலந்த பிரிவில் இருக்கும் நிலையில், ஐ.சி. ஆட்டோமொபைல் துறை அந்த தாக்கத்தை உணரவில்லை. ஆனால், திட்டம் -2 இல் 100% மின்சார வாகனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படலாம் என்று, வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட் இந்தியா (WRI India) அமைப்பின் ஒருங்கிணைந்த நகர்ப்புற போக்குவரத்து முறை தலைவர் அமீத் பட், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
வழக்கமான வாகனங்கள், சுத்திகரிக்கும் பெட்ரோலியப் பொருட்களில் 30%ஐ பயன்படுத்துகின்றன. ஆனால், மின்சார வாகனங்கள் 2000 பகுதிகளை கொண்டிருக்கின்றன என்று, 2018, டிச.11-ல் தி இந்து பிஸினஸ் லைன் செய்தி வெளியிட்டிருந்தது. எண்ணெய் மற்றும் கார் பாகங்கள் தொழில்துறையினருடன் மின்சார வாகனத்துறைக்கு பலம்மிக்க எதிரிகளாக இருப்பார்கள் என்று, அது மேலும் தெரிவித்துள்ளது.
ஒரு விரிவான கொள்கை
அரசின் நிதி ஆயோக் மூலம் திட்டம்- 2 விரிவுபடுத்தப்படுவது என்பது இன்னும் விரிவான மற்றும் முன்னோக்கி காணக்கூடியதாக இருக்கும், ஏனெனில் அது அனைத்து பங்குதாரர் அமைச்சகங்களிடம் -- கனரக தொழில்கள், சாலை போக்குவரத்து, நகர்ப்புற திட்டமிடுதல், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகள்-- இருந்து குரல்களை எழுப்பும். மாறாக, திட்டம் - 1 மாறாக, கனரக தொழிற்துறை அமைச்சகத்தால் மட்டுமே உருவாக்கப்பட்டது; அதன் நோக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
திட்டம் -2 என்பது, மூன்று சக்கர வாகனங்கள், டாக்சி, பேருந்து போன்ற மின்சார வாகனங்கள் மீதே கவனம் செலுத்தும் என்று, இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு செய்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆண்டு வாகன விற்பனையில் 80% இரு சக்கர வாகனங்கள் என்ற நிலையில், திட்டம்-2 மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு மானியம் தரும்.
மானியங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டு, அது மலிவாகவும் இருந்தால், காட்சிகள் மாறி, தற்போதுள்ள ஐ.சி. வாகன வாடிக்கையாளர்கள், மின்சார வாகனங்களை தேர்ந்தெடுக்கலாம். “மானியங்கள், வரி தள்ளுபடிகள் கட்டுப்படுத்தப்படாத நிலையில், மின்சார வாகனங்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்காத வாகனங்களில் விலையில் பெரும் இடைவெளி உள்ளது” என்று எஸ்.எம்.இ.வி-யின் கில் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு, மானியங்களுக்கு பிறகு, ஒரு மின்சார இரு சக்கர வாகனத்தின் விலை, 30,000 ரூபாய் எனில், இது ஐசி என்ஜின் விலையை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. அத்துடன், மின்சார இருசக்கர வாகனத்தில் அதிகபட்சம் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் தான் செல்ல முடியும். நகருக்குள் இதை வைத்து செல்ல இயலாது. ”அரசும், தொழிற்துறையும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள், ஐ.சி. இயந்திரத்திற்கு மாற்றாக கவர்ச்சிகரமான மின்சார வாகனங்களின் விலையை எப்படியாவது குறைப்பது மட்டுமே இதற்கான ஒரே தீர்வு. அதுவும் குறிப்பிடத்தக்க காலவரம்புக்குள் இச்சலுகையை தர வேண்டும்” என்று கில் கூறினார். இது ஆண்டுக்கு 1- 2 மில்லியன் ஐ.சி. என்ஜின் வாகன உரிமையாளர்களை, மின்சார வாகன உரிமையாளர்களாக மாற்றும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. போன்ற பெரும் வரிச்சலுகைகள் தரப்பட வேண்டும். தற்போது மின்சார வாகனங்களுக்கு 12% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது; பெட்ரோலில் இயங்கும் கார்கள், மற்ற வாகனங்கள், இரு முறைகளிலும் இயங்கும் வாகனங்களுக்கு 28% விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வழியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மின்சார வாகனங்களுக்கு அனுமதி வழங்குதல் என்ற மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள அனுமதி விதிகளை, மின்சார வாகனங்கள் குறித்த புதிய கொள்கையானது, எளிதாக்க வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், வர்த்தக ரீதியான வாகனப்பிரிவில் மேலும் பசுமையான வாகனங்கள் வருவதற்கு வழிவகுக்கும்.
பதிவு செய்யப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் பசுமை வாகனங்களுக்கு சிறப்பு வாகன நிறுத்த அனுமதி, சுங்கச்சாவடியில் சலுகைகள், குறைந்த சாலை வரி மற்றும் பதிவுக்கட்டணம் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது.
அதுமட்டுமின்றி, மின்சார இருசக்கர வாகனங்களை இயக்கும் உரிமத்தை 16- 18 வயதினருக்கு வழங்கப்பட வேண்டும். தற்போது, 18 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது (ஓட்டுனர் பயிற்சி பெறும் வயது, 16-ல் இருந்தே உள்ளது).
(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.