ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த தவறிய கங்கை திட்டம்; மற்ற நதிகளில் சிறிதே கவனம் செலுத்தப்படுகிறது

Update: 2020-02-27 00:30 GMT

புதுடெல்லி: கங்கை நதியை தூய்மைப்படுத்தி புனரமைக்கும் பணியை முதன்மையாக கொண்ட நமாமி கங்கை திட்டத்திற்கு, 2020-21 பட்ஜெட்டில் ஓரளவு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு  தரவுகளை பகுப்பாய்வு செய்து சராசரியை கணக்கிட்டால், திட்டத்திற்கான ஒதுக்கீடுகள் குறைந்து வருகின்றன.

நமாமி கங்கை திட்டத்திற்கு 2020-21ம் ஆஅண்டு உத்தேச பட்ஜெட்,  கடைசி ஒதுக்கீட்டை விட 6.6% அதிகம்; ஆனால் 2019-20 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகள் எதிர்பார்த்ததை விட 53% குறைவான செலவைகளைத்தான் காட்டுவதை, 2020-21 பட்ஜெட் குறித்த  இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு காட்டுகிறது.

ஒதுக்கப்பட்ட பணத்தை செலவழிக்கத்தவறும் இந்த போக்கு, 2014 ஆம் ஆண்டில் நமாமி கங்கை திட்டத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்கிறது. கடந்த 2014ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட மிக பிரபலமான இந்த திட்டமானது மோசமான நிர்வாகம், திட்டமிடல் இல்லாமை, பல்வேறு மட்டங்களில் அரசியல் விருப்பமின்மை மற்றும் புதிய அமைச்சகத்தை உருவாக்கியதால் ஏற்பட்ட நிர்வாக தாமதங்கள்  ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்  கங்கை தவிர மற்ற ஆறுகள் பட்ஜெட்டில் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை என்று எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.

நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மாசுபட்ட நதிகளை அரசு  அடையாளம் கண்டுள்ளது; அவற்றில் பெரும்பாலானவை நாட்டின் மிகவும் தொழில் முன்னேற்றமுள்ள மாநிலங்களில் அமைந்துள்ளன என்று இந்தியா ஸ்பெண்ட் ஏப்ரல் 28, 2018 கட்டுரை தெரிவித்துள்ளது.

இமயமலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் 2,500 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் கங்கை, உலகின் மிகவும் மாசுபட்ட மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நதிப்படுகைகளில் ஒன்றாகும். இது, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையை விட 500 மில்லியன் அதிக மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

எண்ணிக்கை எதை குறிக்கிறது

பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு தனது சமீபத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2020 அன்று தாக்கல் செய்தது. நமாமி கங்கை திட்டத்திற்கு,  2020-21ம் ஆண்டில் ரூ .800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 2019-20ல் ரூ.750 கோடியாக இருந்தது என்று,  ஜல் சக்தி அமைச்சின் கீழ் உள்ள நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத்துறைக்கான பட்ஜெட் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 

எப்படியானாலும், இந்த திட்டத்திற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடு, 2019-20 நிதியாண்டில் ரூ. 353.42 கோடி மட்டுமே செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டிலும் கடும் வீழ்ச்சி, மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் செலவு ஆகியவை 2019-20 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு ரூ. 750 கோடி பட்ஜெட் கிடைத்தது, இது முந்தைய ஆண்டின் பட்ஜெட்டை விட 67.39% குறைவாகும். எதிர்பார்க்கப்பட்ட செலவு (ரூ .353.42 கோடி) முந்தைய ஆண்டில் செலவிடப்பட்ட ரூ. 687.5 கோடியில் பாதி ஆகும்.

Full View

"பட்ஜெட்டில் குறைந்த ஒதுக்கீடு மற்றும் திட்டங்களுக்கு குறைவாக செல்விடுதல் இரண்டுமே பிரச்சினைக்கான தீர்வை குறைத்து வருவதை காட்டுகின்றன," என்று, லாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வலைப்பின்னலான அணைகள், நதிகள் மற்றும் மக்களுக்கான தெற்காசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹிமான்ஷு தக்கர் கூறினார். "செய்ய வேண்டியது நிறைய உள்ளது" என்றார் அவர். 

இதுவரை அரசு பெரும்பாலும் கங்கையில் கலக்கப்படும் நகர கழிவு நீரை சுத்திகரிப்புக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது;  ஆனால் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று இந்தியா ஸ்பெண்ட் ஏப்ரல் 15, 2019 கட்டுரை தெரிவித்தது.

மோசமான நிர்வாகங்களால் , பட்ஜெட் நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளன என்பது தாக்கூரின் கூற்றாகும். "வைத்திருக்கும் உள்கட்டமைப்பு அல்லது வசதிகள், அவை வடிவமைக்கப்பட்டவையாக செயல்படுவதையும், அவற்றின் நோக்கங்களை அடைவதையும் உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.

பட்ஜெட்  நிதி வெட்டுக்கள் உதவாது; ஏனெனில் மாசுபட்ட நதிகளின் மறுசீரமைப்பு என்பது, ஒரு நகரத்தில் விரைவான செயல்முறையாக இருக்க வேண்டும்; இது நகர்ப்புறமயமாக்குகிறது என்று, கங்கைக்கான மகாமன மால்வியா ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிதா ஷா கூறினார்; இது, வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (பிஹெச்யூ) நதி மேம்பாடு மற்றும் நீர்வள மேலாண்மை அமைப்பின் ஒரு பிரிவாகும். 

"கங்கையை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் ஏஜென்சிகளுக்கு சரியான முறையில் நிதி வழங்குவது குறைவு" என்று ஷா கூறினார். "ஏதேனும் காரணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு, நிதி வழங்க மறுக்கப்பட்டது".  பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையம் இவற்றில் ஒன்றாகும் என்று அவர் மேலும் கூறினார்.

நிலையான மாற்றங்கள்

கடந்த 2016ல் பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட மிக உயர்ந்த கொள்கை வகுக்கும் அமைப்பான தேசிய கங்கை கவுன்சிலின் முதல் கூட்டம் 2019 டிசம்பரில் நடந்தது. தேசிய கங்கை  நதி படுகை ஆணையத்திற்கு (என்ஜிஆர்பிஏ) பதிலாக நதியை சுத்தம் செய்வதை மேற்பார்வையிட இது உருவாக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை கூடும் பிரதமர் தலைமையிலான இந்த கவுன்சிலில், கங்கை பாயும்  ஐந்து மாநிலங்களான உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க முதல்வர்கள் இடம் பெற்றிருப்பார்கள். பல மத்திய அமைச்சர்கள் அதன் உறுப்பினர்கள்.

53 நகரங்கள் (50,000-100,000 மக்கள் தொகை கொண்டவை ) மற்றும் 48 நகரங்களின் கழிவுநீரை கங்கையில் கலகக்கச் செய்வதை நிறுத்த 2009 ஆம் ஆண்டில் தேசிய கங்கை  நதி படுகை ஆணையம் (என்ஜிஆர்பிஏ) நிறுவப்பட்டது.

மே 2019 இல், இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், மோடி தலைமையிலான அரசு,  ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியது; இது  நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைச்சகம் ஆகிய இரண்டு அமைச்சகங்களை உள்ளடக்கியது.

தொடர்புடைய அமைச்சகங்களையும் அதன் அதிகாரிகளையும் அடிக்கடி மாற்றுவது பட்ஜெட் ஒதுக்கீட்டில் தடையாக உள்ளது என்று கவிதா ஷா கூறினார்.

மற்ற நதிகளுக்கு சிறிய நிதி ஒதுக்கீடு 

கங்கையின் மாசுபட்ட பகுதிகளை சுத்தம் செய்வதற்காக 1985 ஆம் ஆண்டில் தேசிய நதி பாதுகாப்பு திட்டம் (NRCP) அமைக்கப்பட்டது;  ஆனால் 1995 வாக்கில் இது அனைத்து முக்கிய இந்திய நதிகளையும் உள்ளடக்கியதாக மாறியது.  என்.ஆர்.சி.பியின் ஒரு பகுதி குறிப்பாக கங்கை மற்றும் அதன் துணை நதிகளை வழங்குகிறது, மற்றொரு பகுதி மற்ற நதி படுகைகளில் கவனம் செலுத்துகிறது.

15 மாநிலங்களில் 76 நகரங்கள் / பெருநகரங்களில் 33 நதிகளை உள்ளடக்கிய இரண்டாமவதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 2019-20 மற்றும் 2020-21 க்கு இடையில் 12.24% - இது 196 கோடியில் இருந்து 220 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், என்.ஆர்.சி.பி.யின் கீழ் மற்ற நதிப்படுகைகளுக்கான தற்போதைய ஒதுக்கீடு கங்கை  பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 840 கோடியை விட 74% குறைவாக உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

கங்கையை மையமாகக் கொண்ட என்.ஆர்.சி.பி.க்கான பட்ஜெட் ஒதுக்கீடு சுமார் 31% சரிவை பதிவு செய்தது - கடந்த பட்ஜெட்டில் ரூ.1,220 கோடி (170.45 மில்லியன் டாலர்) என்பது நடப்பு பட்ஜெட்டில் 840 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஜூலை 2019 இல், தேசிய நதி பாதுகாப்பு இயக்குநரகம் ஒருங்கிணைத்த என்.ஆர்.சி.பி. - இது, கங்கையைத் தவிர ஆறுகளில் மாசுபாட்டைக் குறைக்க மாநிலங்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு என்.ஆர்.சி.பி.யின் கீழ் நிதி உதவியை அங்கீகரிக்கும் அரசு அமைப்பு-  சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட ஜல் சக்தி அமைச்சின் நீர்வளக் குழுவுக்கு மாற்றப்பட்டது.

"இது தேவையில்லை," என்று தக்கர் கூறினார், நீர்வள அமைச்சகம் அடிப்படையில் ஒரு வளர்ச்சி அமைப்பு. அதன் தேவை, நதிகளின் பாதுகாப்போடு தொடர்புபடுத்தவில்லை, இது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பங்காகும், இது ஆறுகள் மீது இனி எந்த அதிகாரமும் இல்லை, என்றார்

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News