1901க்கு பின் அனல் வீசும் 6வது ஆண்டு: இது 2019 ஆண்டுக்கான எச்சரிக்கை
மும்பை: கோடையின் தொடக்கமான 2019, ஏப். 1 முதல் அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், 2019 மார்ச் மாதத்திலேயே நாடு முழுவதும் வெப்பநிலை அசாதாரண அளவில் அதிகரித்து காணப்பட்டது. பின்வரும் சமீபத்திய அறிக்கையை கவனியுங்கள்:
- கேரளாவில், 2019 மார்ச் 1, 2019 வரை 288 சூட்டுக் கொப்புளம் / வெயிலால் வலிப்பு நோயாளிகள் கண்டறியப்பட்டதால், அதிகபட்ச எச்சரிக்கை செய்யப்பட்டது. இதே மாதத்தில் வெயில் வலிப்பால் நான்கு பேர் இறந்ததாக சந்தேகிக்கப்பட்டது; அத்துடன் வெப்பநிலையும் 40 டிகிரி செல்ஷியஸ் (°C) என வடக்கு பாலக்காடு மாவட்டத்தில் பதிவானது என்று, 2018 மார்ச் 28இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
- பெங்களூரு நகரில் சராசரி கோடை வெப்பநிலை அரிதாக 26°C ஐ கடக்கும். ஆனால் தற்போது 37°C வெப்பநிலை பதிவாகி வருகிறது. பறவைகள் வெப்பம் தாக்காமல் வானில் இருந்து விழுவதற்கு காரணமாகிவிட்டது என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. மத்திய கர்நாடகாவின் பிற பகுதிகளிலும் - கலபுரகி (40.6°C), பெல்லாரி (40°C) மற்றும் ராய்ச்சூர் (39°C) - கடும் வெப்பம் நிலவி வருவதாக செய்தி வெளியிட்டது.
- மும்பையில், 2019 மார்ச் 25 ஆம் தேதி, அதிகபட்சமாக 40.3°C வெப்பநிலையை பதிவானது. இது, நகரின் இயல்பான அளவை விட ஏழு டிகிரி செல்ஷியஸ் அதிகம்.
- அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை - 40°C க்கு மேல் - வடக்கு இந்தியாவில், குறிப்பாக தேசிய தலைநகரப் பகுதிகளில் பதிவானது. அதேபோல், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் இல்லாத அளவாக, 2019 மார்ச் 22இல் 39°C வெப்பம் பதிவானது.
இந்த நிகழ்வுகள் 2018 கோடைகாலத்தில் பிரதிபலித்தன; 1901இல் இருந்து ஆறாவது வெப்பம் மிகுந்த ஆண்டாக அது அறிவிக்கப்பட்டது என, 2019 பிப்ரவரி 6இல் நாடாளுமன்ற மக்களவையில் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது. 2018இல் நாடு முழுவதும் சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலை 0.39°C ஆகும்; இது 1981 மற்றும் 2010க்கும் இடைப்பட்ட சராசரியைவிட அதிகமாக இருந்தது.
இந்த கோடை ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது சராசரியை விட 0.5°C அதிகமாக இருக்கும்; மத்திய இந்தியாவின் பெரும்பாலான நிலப்பரப்புகளில் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில உட்பிரிவுகளில் இது நிலவும் என்று 2019 ஏப்ரல் 1இல், இந்திய வானியல் துறை (ஐ.எம்.டி.) வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
Heat wave Warning issued on 01st April 2019. pic.twitter.com/Jq7NcqFGXm
— IMD-Weather (@IMDWeather) April 1, 2019
கடந்த 2010 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 6,167 வெப்பம் தொடர்பான இறப்புக்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்ச இறப்பு 2015 ஆம் ஆண்டில் 2,081 அல்லது 34% என்று பதிவாகியுள்ளதாக, மக்களவையில் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (நடப்பு ஆண்டில் 2017 மற்றும் 2018க்கான வெப்பத்தால் ஏற்பட்ட மாநில ரீதியான இறப்புகள் பற்றிய தகவல்களே கிடைக்கும்.).
அனல் காற்றும் இறப்புகளும்
கடந்த 1901 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் 5 மிக வெப்பமான ஆண்டுகளில், 2016 (+ 0.72°C) அதிகபட்ச சராசரி வெப்பநிலையை பதிவு செய்தது; அதையடுத்து 2009 (+ 0.56°C), 2017 (+ 0.55°C), 2010 (+ 0.54°C) மற்றும் 2015 (+ 0.42°C) ஆண்டுகள் உள்ளன. அதிக அளவாக மேற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் பலோடி என்ற இடத்தில் வெப்பநிலை 51°C ஆக 2016ல் பதிவானது; இது, 1956இல் அல்வாரில் பதிவான முந்தைய அதிகபட்ச அளவான 50.6°C ஐ முறியடித்தது.
இந்தியாவில், 1901 முதல் மிக அதிக வெப்பமான ஆண்டுகளில் பதினொன்று 2004 மற்றும் 2018 க்கு இடையே இருந்ததாக, தரவுகள் தெரிவிக்கின்றன. “கடந்த 1971, 1987, 1997, 2001, 2002, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நிலவிய அபரீதமான வெப்பத்தால், மனித மரணங்கள் இந்தியா பெருமளவில் அதிகரித்தது” என்று, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன், மக்களவையில் தெரிவித்தார்.
ஒவ்வொரு வெப்பக்காற்றும் வேறுபட்டதாக வரையறுக்கப்படுகிறது: சமவெளிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40°C அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்; கடற்கரை பகுதிகளில், 37°C அல்லது அதற்கு மேற்பட்டிருக்கலாம்; மற்றும் மலைப்பகுதிகளில், 30°C அல்லது அதற்கு மேல் என்று, இந்திய வானிலை ஆய்வுத்துறை (IMD) தெரிவிக்கிறது. இந்தியாவில் மார்ச் மற்றும் ஜூலை இடையே பொதுவாக வெப்பநிலை அதிகமுள்ள காலமாகும். கடும் வெப்பநிலை என்பது பெரும்பாலும் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே நிலவுகிறது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக வெப்பமானது, இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கிறது, அவர்கள் புதிய வானிலை சூழலை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவதை, இந்தியா ஸ்பெண்ட்டின் ஆறு பகுதிகள் தொடர் காட்டுகிறது.
செயல் திட்டம்
கடந்த 2013 ஆம் ஆண்டில் அகமதாபாத் மாநகராட்சி, அகமதாபாத்திற்கு ஒரு செயல் திட்டம் ஒன்றை ஆரம்பித்தது. இதை மாதிரியாக கொண்டு அனைத்து மாநிலங்களும் இத்தகைய திட்டத்தை பயன்படுத்துமஆறு தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NDMA) அறிவுறுத்தியது.
முக்கிய கூறுகளாக, கோடைகால மாதங்களில் நீட்டிக்கப்பட்ட ஏழு நாள் முன்னறிவிப்பு என்பது, பொதுமக்களுக்கு ஒரு வண்ண குறியீட்டுடன் எச்சரிக்கை மற்றும் ஒருபொது விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 2015 முதல், இந்திய வானிலை ஆய்வுத்துறை (ஐஎம்டி), 100 முக்கிய நகரங்களில் ஐந்து நாட்களுக்கான குறிப்பிட்ட கோடைகால கணிப்புகளை வழங்கத் தொடங்கியது.
கடந்த 2017இல் ஒடிசா, தெலுங்கானா, பீகார், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் 17 நகரங்கள் வெப்ப தடுப்பு நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டன. இது, 300 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கும் விரிவாக்கங்கள் செய்யப்பட்டதாக, அமைச்சர் வர்த்தன் 2019 பிப்ரவரி 4 ஆம் தேதி மக்களவையில் பதில் அளித்தார்.
இருப்பினும் வெப்பத்தால் ஏற்படும் மரணங்கள், மேம்பட்ட முன்னறிவிப்பு மற்றும் வெப்ப தடுப்பு நடவடிக்கை திட்டங்களால் 97% குறைந்துவிட்டன; அதாவது, 2016இல் 700 மரணங்கள் என்றிருந்தது, 2018இல் 20 ஆக சரிந்தது என்று 2019 பிப்ரவரி 6இல் மக்களவையில் அளிக்கப்பட்ட மற்றொரு பதிலில் தெரிவிக்கப்பட்டது.
"வெப்ப ஆரோக்கிய எச்சரிக்கை அமைப்புகள், வெப்ப மரணங்களை குறைப்பதில் மிக முக்கிய பங்கைக் கொண்டுள்ளன என்பது உண்மை," என்று, டெல்லியை சேர்ந்த ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் கவுன்சிலின் மூத்த ஆராய்ச்சியாளர் ஹெம் தோலாக்கியா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இவை அதிகரிக்க வேண்டும்" என்றார் அவர்.
ஆனால் இறப்புக்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், வெப்பக்காற்றுக்கு முகம் கொடுப்பவர்களின் ஆரோக்கியத்துடன் இணைக்கப்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார். "2014 இல் ஒரு அனல்காற்று மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை கற்பனை செய்து பாருங்கள்" என்ற அவர் "உயிர் வாழ்கிறவர்கள் ஆரோக்கியமானதாகவும், மிகவும் நெகிழ்வானதாகவும் இருக்கிறார்கள், மேலும் அடுத்த வெப்பக்காற்றுக்கு அவர்கள் தப்பிப்பிழைக்க முடியும்" என்றார்.
"இதில் மிகப்பெரிதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது என்பது, தீவிர நிகழ்வுகள் அதிர்வெண் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றில் அதிகரித்து வருகின்றன என்பது தான்" என்று, தேரி ஸ்கூல் ஆப் அட்வான்ஸ் ஸ்டடீஸ்துணைவேந்தர் லீனா ஸ்ரீவஸ்தவா, 2018 டிசம்பர் 4 இல் இந்தியா ஸ்பெண்ட்டிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். "எனவே, ஒரு பார்வை புள்ளி இருந்து, வரலாற்று அனுபவங்களை நாம் பார்க்க முடியாது; மாறாக, நடக்கக்கூடிய வாய்ப்புகள் என்னவென்பதைச் சித்தரிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அதைத்தன நாம் செய்யவில்லை" என்றார்.
தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கம் சமுதாய மாற்றங்களைச் சார்ந்துள்ளது என்று தோலக்யா கூறினார். "நகர்ப்புற பகுதிகளில் அதிகமான மக்கள் நகர்வதைப் போல, ஒரு சிறிய இடத்தில்தான் மக்களின் அதிகமான செறிவு உள்ளது - எனவே மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் இத்தகைய நிகழ்வுகளின் தாக்கம் அதிகமாக உள்ளது," என்றார் அவர். "மக்கள் வாழ்ந்த அனுபவத்தை கொண்டு நாம் நமது நகரங்களை வடிவமைத்துள்ளோம். பச்சை சுருங்கி, நீர் நிலைகள் மறைந்ததால் ஏற்படும் இடைவெளி, நகர்ப்புற நுண் காலநிலையை கட்டுப்படுத்துகின்றன. நகர்ப்புற வெப்பத்தீவுகள் உயரும் போது வெப்பநிலையும் அதிகரிக்கிறது" என்றார்.
முன்னோக்கிய பார்வை
வெப்பநிலை மற்றும் அதன் விளைவான உயிரிழப்பு பிரச்சனையை போக்க, இரண்டு முன்நிபந்தனைகள் உள்ளதாக குறிப்பிட்ட தோலக்யா, முதலாவது, 2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி, உலகளாவிய வெப்பநிலை 1.5°C-க்கு குறைவாக கட்டுப்படுத்த வேண்டும்; மேலும் உலகளாவிய குறைப்பு முயற்சிகள் என்ற லட்சியம் இத்தகைய உச்சங்களின் குறைந்த நிகழ்தகவுகளாக மாற்றப்படும் "என்றார். தேசிய மற்றும் உள்ளூர் அளவில் அத்தகைய தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்நோக்குவதற்கு முன் எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் உதவக்கூடிய மற்ற நடவடிக்கை ஆகும்.
"எனினும், திட்டமிடல் அறிவுள்ள இடைவெளிகளை நிரப்புவதில் அடங்கும் - இந்தியாவிற்கு உலகளாவிய ஒரு காலநிலை ஆபத்து, தொடர்ச்சியான இடர் மதிப்பீடுகள் மற்றும் புதுப்பித்தல் திட்டங்களை புதுப்பித்தல் - தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் திறனை வளர்ப்பதில் இடைவெளிகளைக் குறைத்தல் மற்றும் புதுமையான நிதி கருவிகளை உருவாக்குதல், பேரழிவு பத்திரங்கள், காப்பீட்டு கருவிகள் மற்றும் நிதி இழப்புக்களை உறிஞ்சி வாழ்வாதாரங்களை பாதுகாப்பது போன்றவை "என்றார் டோலாக்யா.
(மல்லபூர், இந்தியா ஸ்பெண்ட் மூத்த கொள்கை ஆய்வாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.