‘விரைவான மருந்து மேம்பாடு கோவிட்டுக்கு பிந்தைய புதிய இயல்பு’

Update: 2020-10-31 01:34 GMT

மும்பை: கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது, “நாம் 2020 பிப்ரவரி நிலைக்கு  ரும்பப் போவதில்லை”; காசநோய் மற்றும் மலேரியா போன்ற பிற நோய்களை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துகிறோம் என்று, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ட்ரெவர் முண்டெல் கேட்கிறார். அரசு ஒழுங்கு கட்டுப்பாட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்களை, பிற  நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் எவ்வாறு விரைவாக புதுமைப்படுத்தலாம் மற்றும் தொடர்ந்து செயல்படுத்த முடியும் என்பதை, இந்த தொற்றுநோய் காட்டுகிறது என்று, முண்டெல் விளக்கினார். "இது புதிய இயல்பான தரநிலை" என்றார்.

ஒரு தடுப்பூசி ஆரம்ப கட்டத்தில் இருந்து மனித சோதனைகளை உள்ளடக்கிய 3ம் கட்ட சோதனைகளுக்குச் செல்வது, ஏழு எட்டு மாதங்களில் இதுவே முதல் முறை. உலகிற்குத் தேவையான தீர்வுகளைத் தயாரிக்க தேவையான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு என்ன? மற்றும் வேகம் போதுமானதா? என்று நோவார்டிஸில் (Novartis)  வளர்ச்சிப்பிரிவு தலைவராக இருந்த முண்டலிடம் நாங்கள் கேட்டோம், அவர் ஃபைசர் மற்றும் பார்க் டேவிஸில் மருத்துவ ஆராய்ச்சியில் பணியாற்றிவர், சிகாகோ பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பி.எச்.டி முடிந்த மருத்துவரும் கூட.

திருத்தப்பட்ட பகுதிகள்:

Full View

ஒரு மருத்துவர், ஒரு கணிதவியலாளராக இருக்கும்போது என்ன நடக்கும்? இந்த தொற்று வழக்கில் உண்மையில் என்ன விதிகள் உள்ளன?

நல்லது, பயோமெடிக்கல் துறையில் நிறைய வேலைகள், தரவு அறிவியல் திருப்பத்தை கண்டுள்ளதாகவே சொல்ல வேண்டும். பெரும்பாலும் இது சிகிச்சை முறைகளின் அடிப்படையில் இலக்குகள் மற்றும் புதிய வாய்ப்புகளை தேடுவதற்கான ஒரு கேள்வி - அது தடுப்பூசிகளாக இருக்கலாம். அது நிறைய தரவு மூலம் தீவிர ஆராய்ச்சி மூலம் வருகிறது. நிச்சயமாக, பகுப்பாய்வுகளில் பின்னணி இருப்பது மிகவும் உதவியாக இருக்கும். நான் முன்னணி பயிற்சியாளராக இருக்க முடியாது, [ஆனால்] எனது குழுக்களை அவர்களின் கால்தடத்தை வைத்திருக்க முடிகிறது.

உடல்நலம் மற்றும் மருத்துவத்தில் புதுமைகளுக்கு தரவு அறிவியல் பங்களிப்பதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? வேறொரு சகாப்தத்தில் உங்களது சொந்த பயிற்சி இன்று உண்மையில் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும். இந்தியா போன்ற நாடுகளுக்கோ அல்லது இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கோ, இங்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையா?

ஆமாம், உண்மையாக. தரவு அறிவியல் சரியான வழியில் எங்கள் நிறுவனத்தில்  சிறந்த அடித்தளமாக பயன்படுத்தப்படுவதை காண்கிறேன். இது நோயின் சுமை மற்றும் பல்வேறு நாடுகளிலும், தேசிய அளவிலும் எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றிய சிக்கலைப் பெறுகிறது. இந்தியாவில் கூட, வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. வெவ்வேறு பகுதிகளுக்கு இடையில் வேறுபடுகின்ற ஆபத்து காரணிகளை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், எவ்வாறு விகிதமுடன் தலையிடுவீர்கள்? அப்படி செய்தால் உண்மையில் கண்ணோட்டமின்றி  செய்வதாகிவிடும். ஒரு பகுதி மற்றொன்றுக்கு சமம் என்று கருதுவது முழு தவறு. எனவே, [பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ்] அறக்கட்டளையில் எங்களது மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்று, நிச்சயமாக நான் தொடங்கியதில் இருந்து தரவு அறிவியலை மேம்படுத்துவதில் உள்ளது: முதன்மை தரவுகளில் இருந்து முடிந்தவரை உள்ளூர் அளவில் புரிந்துகொள்வது - வெளி கணிப்பு மற்றும் மாதிரிகள் மட்டுமின்றி- நோயின் சுமை என்ன, உள்ளூர் ஆபத்து காரணிகள் என்ன, சிறந்த முறையில் எவ்வாறு தலையிடுவது என்பது எங்களுக்குத் தெரியும்.

தடுப்பூசிகளை பற்றி பேசலாம். தடுப்பூசிகளை வெளிகொணருவதில் உலகம் எங்கே இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம், வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றிய உங்கள் உணர்வு என்ன?  விரைவாகச் செய்யப்படுவது அல்லது இறுதி முயற்சிகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த இன்னும் என்ன செய்ய வேண்டும்?

தடுப்பூசித்துறை என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, இதை நேர்மறையான அர்த்தத்தில் நான் கூறுவேன். அடுத்த சில மாதங்களில் நாம் முன்னணி தடுப்பூசிகளில் இருந்து சில 'ரீட் அவுட்களை' பெறுவோம் -- அவற்றின் 3ம் கட்ட ஆய்வுகளை சற்று முன்னதாகவே தொடங்கினோம் என்ற அர்த்தத்தில் --  அவை உண்மையில் பயனுள்ளவையா மற்றும் பாதுகாப்பானதா என்பதை பொருத்து முதல் அனுபவத்தை பெறுவோம். வாயில்களில் முதலில் எம்ஆர்என் ஏ (mRNA) தடுப்பூசிகள் [மெசஞ்சர் ரிபோநியூக்ளிக் அமிலம்] இருக்கும். மற்றவை, உதாரணமாக ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசி சர்ச்சைக்குள்ளாகும். அங்கே சில தரவுகளையும் பெறலாம். ஆனால், அந்த நிறுவனத்தைப் பற்றி நீங்கள் நினைத்தால், அக்டோபர் - நவம்பர் மாதங்களில், இந்த நிறுவனம் உண்மையில் மார்ச் மாதத்தில் தொடங்கியபோது என்ன நடந்தது என்பதை பார்க்க ஆரம்பிக்கிறோம். எனவே, ஒரு தடுப்பூசி புதிதாக, எபிடோப்களின் வடிவமைப்பிலிருந்து, ஆன்டிஜென், ஏதோவொன்றுக்கு செல்வதை எட்டு மாதங்களில் கணிசமாக 3ம் கட்ட ஆய்வை முடித்துள்ளது - ஒரு வருடத்திற்கு முன்பு நான் உங்களிடம் இதை சொல்லியிருந்தால், அதுகூட தெளிவற்றதாக இருக்கும், என்னை கிறுக்கு என்று நீங்கள் சொல்லியிருப்பீர்கள்.

எனவே, தடுப்பூசித்துறையில் கடலளவு மாற்றத்தை நாம் கண்டிருப்பதாக நினைக்கிறேன், இந்த கற்றல்களை நாம் உண்மையில் கைப்பற்ற வேண்டும். காசநோய், மலேரியா, எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பூசிகளுடன் பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். அது உண்மையில் அவசியமா? இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்பில் நாம் முற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிவேன்.நாள் முடிவில் அது எந்த சமரசமும் இல்லாத ஒரு புள்ளியாக இருக்கும். ஆனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கணிசமானவை - பல்லாயிரக்கணக்கான தனிநபர்கள் பங்கேற்றனர். அவர்களின் பாதுகாப்பு பற்றி நாம் நன்றாகப் படிப்போம் என்று நினைக்கிறேன், பின்னர் விஷயங்களை அறிமுகப்படுத்த வேண்டும். புதிய சிகிச்சை முறைகள், புதிய தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தும்போது, ​​மருந்தியல் ஒழுங்கு முறையைக் கொண்டிருக்க வேண்டும். எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படக்கூடும், ஆனால் நீங்கள் அவற்றைத் தேடாமல் கவனமாக கண்காணிக்கவில்லை என்றால், அது மிகவும் தாமதமாகும் வரை உங்களுக்குத் தெரியாது.

கிராண்ட் சேலஞ்ச்ஸ் [பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின்] முயற்சி கொடை வழங்குவதன் மூலம் புதுமைகளை ஆதரிக்கிறது; கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அமைப்பை வினையூக்குகிறது. நீங்கள் வழங்கிய 3,000 க்கும் மேற்பட்ட கொடைகள் மூலம் எங்களை வழி நடத்துகிறீர்கள். நீங்கள் இப்போது திரும்பிப் பார்க்கையில் ​​அது என்ன செய்தது, என்ன செய்து கொண்டிருக்கிறது?

இது 2005ம் ஆண்டின் ஆரம்பத்தில் 14 கொடைகளுடன் தொடங்கப்பட்டது. அவை 14 வெவ்வேறு தலைப்புகளில் கணிசமான கொடை உதவிகளாக இருந்தன. அவற்றில் ஒன்றை நான் முன்னிலைப்படுத்துவேன், அதன் இலக்கு மலேரியாவாக இருந்தது. இது உண்மையில் நோய் கடத்தி கட்டுப்பாடு வழியாக டெங்கு பிரச்சினையைத் தாக்கும் முயற்சியாக முடிந்தது.இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதாரண ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள் மற்றும் பாக்டீரியா பாதித்த கொசுக்களை வெளியிடுவதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளது - டெங்குவின் முக்கிய நோய்கடத்தி - ஏடிஸ் ஈஜிப்டி கொசுவால் பரவும் நோய்களின் நிகழ்வுகளை, ஓரளவு வியத்தகு முறையில் இது  கைவிடக்கூடும். இதில் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் ஜிகா ஆகியன அடங்கும். இந்தோனேசியாவிலும், தென் அமெரிக்காவிலும் நடந்த ஒரு குறிப்பிட்ட ஆய்வில் எங்களுக்கு சில சாதகமான முடிவுகள் இருந்தன. அந்த நிறுவனம் இப்போது ஒரு மாதிரியை உருவாக்கி வருகிறது, இதன் மூலம் டெங்கு பிரச்சினை அல்லது ஏடிஸ் கொசு தொடர்பான பிற நோய்கள் உள்ள நாடுகளுக்கு இதை விநியோகிக்க முடியும். ஆரம்ப முதலீட்டிற்கு, என் மனதில் இதை ஒரு பெரிய நியாயமானது என்பேன்.

அந்நேரத்தில் இருந்து, நாங்கள் 25 பிற பெரும் சவால்களை (கிராண்ட் சவால்கள்) மற்றும் 110 கிராண்ட் சேலஞ்ச்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன்ஸ் என்று அழைப்படும் சவால்களை சந்தித்தோம். நீங்கள் மிகக் குறுகிய பயன்பாட்டை எழுதலாம், மேலும் யோசனைகள் குறித்து ஆராய நீங்கள் சில 1,00,000 டாலர்களைப் பெறலாம், புதிய யோசனைகள் வெளிவரும் இரண்டாம் கட்டத்திற்குச் செல்லலாம், அங்கு நீங்கள் அதிக கணிசமான நிதியைப் பெறலாம்.

மக்கள் ஒன்றுகூடி பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறார்கள் என்ற கருத்தில் நான் முழுமையாக திருப்தி அடையவில்லை. அவற்றைத் தீர்க்க அவர்கள் என்ன செய்ய முடியும், குறிப்பாக ஒரு கூட்டு வழியில்? எனவே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள், நாம் எதிர்கொள்ளும் சில முக்கிய பிரச்சினைகளைச் சுற்றி ஒத்துழைப்பதற்கான சில புதிய யோசனைகளை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர்களால் கொண்டு வர முடியவில்லையா?

எனவே, இந்த ஆண்டு உங்களிடம் சொந்தமாக யோசனை இருந்து, ஆராய்ச்சிக்கு அது  தேர்ந்தெடுக்கப்பட்டால், நாங்கள் உங்களுக்கு, 100,000 டாலர் மானியம் தருவோம் என்று அறிவித்தோம். உலகின் வேறு பகுதிகளில் இருந்து வேறு ஒருவரின் ஒத்துழைப்புடன் அந்த யோசனையை நீங்கள் ஆராய்வதானால், நாங்கள் உங்களுக்கு, 200,000 டாலர் தருகிறோம். ‘நாங்கள் ஒன்று கூடி விஷயங்களை விவாதித்தோம்’ என்பதற்கு மாறாக, இந்த சந்திப்பில் இருந்து, உண்மையான தீர்வுகள் என்னென்ன யோசனைகள் வெளிவந்தன என்பதைப் படிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்.

^ இந்த யோசனைகள் அனைத்தையும் நீங்கள் வினையூக்கிய திரும்பிப் பார்க்கும்போது, சுகாதார மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகளில் ஒரு வினையூக்கியின் பங்கு பற்றி இது என்ன சொல்கிறது?

நான் கண்டறிந்த விஷயம் என்னவென்றால், உலக சுகாதாரப் பிரச்சினைகள், சமூகத்தை பெருமளவில் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு உலகம் முழுவதும் மிகுந்த ஆர்வம் உள்ளது. நிறைய விஞ்ஞானிகள் உள்ளனர் - அது அவர்களின் முக்கிய திசையாக இல்லாமல் போகலாம், அவர்கள் வேறு சில திசைகளிலும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கலாம் - ஆனால் அவர்கள் இந்த சிக்கல்களை பற்றி சிந்திக்கிறார்கள். இந்த சமூக சிக்கல்களின் தொகுப்பிற்கு அவர்களின் புத்தி கூர்மைக்கு உண்மையில் தடையாக இருப்பது, அவர்களுக்கு பெரும்பாலும் நிதி இல்லை, ஏனெனில் அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள் அல்லது அந்த குறிப்பிட்ட பகுதியில் அவர்களுக்கு ஒரு வரலாறு இல்லை. ஆகவே, அந்த விதை நிதியை அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம், உலகளாவிய சுகாதார நிறுவனத்திற்குள் வந்து இந்த சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவொரு துறையிலும் பணியாற்றும் சிறந்த விஞ்ஞானிகள் அனைவரையும் நாம் கொண்டிருக்க முடியும் என்பதே எனது நோக்கம்.

நீங்கள் தடுப்பூசிகளை பார்க்கும்போது, சமமான விநியோகத்தின் சிக்கலும் உள்ளது. இது குறித்த விவாதம் ஆரம்பமாகிவிட்டதாகவே தெரிகிறது, அது கடுமையானதாக இருக்கும். உங்கள் உணர்வு என்ன?

எல்லா முயற்சிகளிலும் -- அதாவது தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள், நோயறிதல்கள் --  இதுதான் நாம் புறப்படும் இடமாகும். அதாவது பணக்கார நாடுகளில் கிடைக்கும் இந்த கருவிகள் அல்லது வாய்ப்புகள் எங்கும் எல்லா இடங்களிலும் மக்களுக்கு அணுகப்பட வேண்டும் என்று அடிப்படையை நாங்கள் நம்புகிறோம், சமமான அடிப்படையில், இந்த உயிர்காக்கும் தலையீடுகளை அணுகுவதற்கான காத்திருப்பு வரிசை இருக்கக்கூடாது.

எனவே, தடுப்பூசி துறையின் வலிமையால் இந்தியா தடுப்பூசி முன்வரிசையில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. உங்களுக்குத் தெரிந்தபடி, GAVI [உலகளாவிய தடுப்பூசி கூட்டணி] என்பது குறைந்த நடுத்தர வருவாய் நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்க நாங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ள நிறுவனமாகும், இது மிகவும் வெற்றிகரமான முயற்சி என்று நினைக்கிறேன். GAVI வழியாக செல்லும் தடுப்பூசிகளில் 70%, உண்மையில் இந்தியாவில் இருந்து வந்தவை.

தடுப்பூசிகளுக்கான சமமான அணுகல் பற்றி நாங்கள் யோசித்தபோது, நிச்சயமாக  முதல் சந்தர்ப்பத்திலேயே மிகச்சிறந்த இந்திய உற்பத்தியாளர்களை நோக்கி  திரும்பினோம். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் நாங்கள் செய்து வரும் சில பணிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அத்துடன் மற்ற உற்பத்தியாளர்களான பயோ-இ [மின் உயிரியல்], பாரத் பயோடெக் உடனும். அனைவரிடமும் இப்போது கோவிட்-19 ஐ நோக்கி வலுவான தடுப்பூசி முயற்சிகள் உள்ளன. எனவே ஈக்விட்டி சிக்கலை தீர்க்கும் விநியோக முறையை நாம் எதிர்பார்க்கலாம். மொத்தத்தில், இந்தியாவில் இருந்து வர வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

ஏழு எட்டு மாதங்களில், ஆரம்ப நிலையில் இருந்து எப்படி வெளியேறினோம் - மற்றும் காசநோய் போன்ற பாரம்பரிய அல்லது மரபு நோய்களுக்கு முரணானது பற்றி நீங்கள் பேசியுள்ளீர்கள். எனவே, நாம் ஒரே மாதிரியான ஃபயர்பவர் மற்றும் முதலீடுகளைச் செய்தால், இந்த பாரம்பரிய நோய்களில் சிலவற்றிற்கு தடுப்பூசிகளை மிக விரைவாகக் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்கிறீர்களா?

நான் அதை உண்மையிலேயே நம்புகிறேன். பெரும்பாலும், நீங்கள் சில புதிய அணுகுமுறையை முயற்சிக்கும்போது, ​​இது முன்பு பரிசோதிக்கப்படாத தடுப்பூசிக்கான எம்ஆர்என்ஏ [மெசஞ்சர் ரிபோநியூக்ளிக் அமிலம்] அணுகுமுறையா, நீங்கள் செய்யும் முதல் முயற்சி நினைத்தபடி பலனளிக்காது, அது நன்றாக வேலை செய்யாமல் போகலாம், அதை மாற்றியமைக்க வேண்டியிருக்கலாம். எனவே அடிக்கடி திரும்பச் செய்ய வேண்டும். ஆனால் மறு செயல்பாட்டில் சுழற்சி ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் என்றால், அதை எத்தனை முறை செய்ய முடியும்? மறு செயல்பாட்டின் வளையம் 12 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால், சில ஆண்டுகளில் நாம் எதையாவது தொடங்கி மிகவும் கடினமான தடுப்பூசி பகுதிகளில் இருந்து அந்த ஐந்தாண்டு காலத்திற்குள் மிகச் சிறந்த கட்டமைப்பிற்கு முன்னேறியிருக்க முடியும். எனவே இது தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளில் புதுமை பற்றியது - நீங்கள் அந்த கண்டுபிடிப்பை நடைமுறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர விரும்பினால், அது மறு செயல்பாடு பற்றியது.

நமது முயற்சிகளை எவ்வாறு அளவிடுவது? அடுத்த ஆண்டின் முதலாவது காலாண்டில் தடுப்பூசிகள் வெளிவரலாம், அடுத்த ஆண்டு 2021 ஆம் ஆண்டின் நடுத்தர மற்றும் மூன்றாம் காலாண்டில், தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் ஒருவித உணர்வு இருக்கிறது. காசநோய், மலேரியா மற்றும் பல ஆண்டுகளாக நீங்கள் போராடி வரும் பாரம்பரிய சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் முயற்சிகளை நாங்கள் எவ்வாறு மறுபரிசீலனை செய்வது?

அதுவே நமது வாய்ப்பு மற்றும் ஆபத்து என்று நினைக்கிறேன். மெதுவாக நகரும் தொற்றுநோய்களில் -- அதாவது எச்.ஐ.வி, காசநோய், மலேரியா மற்றும் போன்ற -- தாமதமாகிவிட்ட எந்தவொரு வேலையும், 2020 பிப்ரவரியில் நாம் புறப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்குவோம் என்பதே, எனது கனவாக இருக்கும். இல்லாவிடில் அது ஒரு பெரிய தவறாகிவிடும். ஏனென்றால் 2020 பிப்ரவரியில் இருந்து, கட்டுப்பாட்டாளர்கள் எப்படியும் புதுமைகளை விரைவுபடுத்தலாம் - பாதுகாப்பற்ற வழியில் அல்ல, ஆனால் நிகழ்நேரத்தில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் கிடைப்பதன் வாயிலாக. நிறுவனத்திற்கோ அல்லது ஒழுங்குபடுத்துபவருக்கோ ஏதேனும் சிக்கல் இருந்தால், வழக்கமான செயல்முறையான இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்களில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது பற்றி நீங்கள் ஒரு குறிப்பை நிறுவனத்திற்கு அனுப்பலாம். அல்லது, சிக்கலைத் தீர்க்க உடனடி தொலைபேசி அழைப்பில் பேசலாம், இது நேரத்தை பெரிதும் மிச்சப்படுத்துகிறது.

எனவே, இத்தகைய தொடர்பை மேம்படுத்துவதன் மூலம் புதுமைகளை மேம்படுத்துவதற்கு கட்டுப்பாட்டாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பு, மாற்றத்தக்கதாக இருக்கும். அவை இப்போது நிகழ்ந்த நிகழ்வுகள்.நமது எதிர்பார்ப்பை - இது புதிய சாதாரண தரநிலையில் அமைக்க வேண்டும். நாம் 2020 பிப்ரவரி வரை செல்லவில்லை.

பயிற்சி இல்லை என்றாலும், ஒரு டாக்டராக நீங்கள் கோவிட்-19 முன்னேற்றத்தைக் கண்ட விதத்தில் இருந்து உங்கள் சொந்த கற்றல் என்ன? இந்த முழு காலகட்டத்திலும் உங்கள் தனிப்பட்ட பயணம் என்ன?

வாழ்க்கை முறையின் பாரிய மாற்றம், மக்களுடனான தொடர்பு, அதிலிருந்து விலகி தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் இது எல்லோருக்கும் கடினமாகவே உள்ளது. இப்போது எனது சொந்த குழுவில், எல்லோரும் விநியோகம் செய்கிறார்கள்,  வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள், மக்கள் நிறைய கஷ்டப்பட்டதை நான் அறிவேன். நான் அந்தக் குழுவில் இருந்து விலக்கப்படவில்லை.

இந்த நோய்த்தொற்றின் மூலக்கூறு உயிரியலின் மட்டத்தில் நாம் எதைச் சாதிக்க முடிந்தது, எப்படி கற்றுக்கொண்டோம், இது யாரும் யூகித்ததை விட மிகவும் சிக்கலாக மாறிவிட்டது. இப்போது வெளிவருவது என்னவென்றால், மிகக்கடுமையான நோய்க்கு முன்னேறும் நபர்களில், இரண்டு கட்டங்களும் நம்மிடம் உள்ளன. ஒரு ஆரம்ப கட்டம் வைரஸ் பிரதிபலிப்பால் இயக்கப்படலாம், ஆனால் இரண்டாவது கட்டம் சிறிது தாமதமாக வெளிப்படும், இது ஒரு தன்னுடல் தாக்க எதிர்வினை, ஒரு எண்டோஜெனஸ் விளைவு. டெக்ஸாமெதாசோன் ஸ்டீராய்டு போன்ற எளிமையான ஒன்று பிற்கால கட்டத்தில் உதவியாக இருக்கும், ஆனால் ஆரம்ப கட்டத்தில் அல்ல என்பதை நாம் கண்டோம்.

இந்த விஷயங்கள் எதுவும் நமக்கு முன்பே தெரியாது, ஆனால் மருத்துவ முறையின் திறன் உண்மையில் இந்த கற்றல்களை எடுத்து அவற்றை சிகிச்சை மற்றும் சிகிச்சையில் இணைத்துக்கொள்வதற்கான திறனால் - இறப்பு விகிதங்கள் வியத்தகு அளவில் வீழ்ச்சியடைவதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள், ஏனென்றால் நம்மிடம் முற்றிலும் புதுமையான சிகிச்சை முறைகள் இருப்பதால் மட்டுமல்ல, நோயாளிகளாலும் இத்தகைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஆரம்பத்தில் மக்களை வென்டிலேட்டர்களில் வைப்பதற்கான தேவையை குறைக்கிறது. இந்த கற்றல் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான வளர்ச்சி உள்ளது. ஓரங்கட்டப்பட்டு சில வழிகளில் என்ன நடக்கிறது என்பது பற்றிய சில நுண்ணறிவுகளைக் கொண்டிருப்பது ஒரு மருத்துவருக்கு அற்புதமான பயணம். இந்த எட்டு மாதங்களில் தொலைதூர பார்வயில் ஒரு நோய் நிறுவனம் பற்றிய ஒரு முழு தொழில் மதிப்புள்ள அறிவு கிட்டியுள்ளது. ஆச்சரியமான மற்றும் எழுச்சியூட்டும் ஆனால், அதே நேரத்தில், பல மக்களை பாதித்த விளைவுகளும் இருப்பது தான் சோகம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News