மாநில அரசுகளின் நடவடிக்கையால் ‘அதிகரித்த’ கோவிட் -19 சிகிச்சை கட்டணம் குறைப்பு

Update: 2020-08-08 00:30 GMT

புதுடெல்லி: இந்தியாவில் கோவிட்19 சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை சுட்டிக்காட்டி நீதிமன்றங்களில் மனுக்கள் மற்றும் பல ஊடகங்களில் செய்திகள் வந்ததை தொடர்ந்து, குறைந்தது 10 மாநில அரசுகள் இந்த விகிதங்களை சரிசெய்ய முன்வந்துள்ளன. 2020 மே மாதம் இதைச் செய்த முதல் மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்றாகும். தொற்றுநோய்களின் போது சுகாதார சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான வழிகளை மற்ற மாநிலங்கள் ஆராய்ந்து வருவதால் இந்த செயல்முறை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாஸ்பெண்டின்கோவிட்டுக்கான விலை’ என்ற தொடரில், சுகாதாரம் மீது தொற்றுநோய்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் பல்வேறு அம்சங்கள் ஆராயப்பட்டுள்ளன. இத்தொடரில் முன்னிலைப்படுத்தப்பட்ட பல சிக்கல்கள் இப்போது மாநில அரசுகளால் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன: ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கான செலவு கிட்டத்தட்ட பாதி குறைந்துள்ளது; மருத்துவமனையில் அனுமதிக்க செலவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ரெம்டெசிவிர் போன்ற விசாரணை மருந்துகளின் விநியோகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இருப்பினும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என்-95 முகக்கவசம் மற்றும் டோசிலிசுமாப் போன்ற விசாரணை மருந்துகள் உள்ளிட்ட பல பொருட்கள் தொடர்ந்து கட்டுப்பாடற்ற விலையில் உள்ளன.

இக்கட்டுரையில், தனியார் மருத்துவமனைகளில் கோவிட்19 சிகிச்சைக்கான செலவுகளைக் குறைக்க மாநில அரசுகள் இறங்கியுள்ள வழிகளை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். தனியார் மருத்துவமனைகள், அரசு விகிதங்களை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறி, தங்கள் பங்கிற்கு அதிக கட்டணம் வசூலிக்க விரும்புகின்றன. தனியார் மருத்துவமனைகள் புதிய ஒழுங்குபடுத்தப்பட்ட விலையை மீறுகின்றன என்று நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தியாவில் இப்போது 18 லட்சத்திற்கும் அதிகமான கோவிட்19 வழக்குகள் உள்ளன; இனிமேல் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அனைவருக்கும் அதிகரித்து வரும் கட்டணம் என்பதில் இருந்து ஒழுங்குமுறையால் பயனடையலாம்.

பாதிக்கும் மேல் குறைக்கப்படும் கட்டணம்

தனியார் மருத்துவத்துறையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் (ஐ.சி.யூ) சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் என்றாலும், இந்திய பொது மருத்துவத்துறை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சையை வழங்குகிறது, இது அந்த செலவுகள் அனைத்தையும் ஈர்த்து விடுகிறது.

உதாரணத்திற்கு, டெல்லி சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஜூன் தொடக்கத்தில் ஐ.சி.யூ-வில் ஒரு கோவிட்19 நோயாளிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் ஒருநாளைக்கு ரூ.1 லட்சம் வரை வசூலிக்கப்படும் என்றது. இரண்டு அல்லது மூன்று படுக்கைகள் கொண்ட ஒரு அறைக்கு அவர்களது மலிவு கட்டணத்தொகுப்பு ரூ. 40,000 மற்றும் குறைந்தபட்ச பில் தொகை, தங்கியிருக்கும் காலத்திற்கேற்ப என்று இருந்தபோதும், ஒரு நோயாளிக்கு ரூ.3 லட்சம் ஆகும். கிழக்கு டெல்லியில் பட்பர்கஞ்சில் உள்ள மேக்ஸ் மருத்துவமனை, வென்டிலேட்டர் உதவியுடன் ஐ.சி.யூ.வில் ஒருநாள் கோவிட் சிகிச்சைக்கான கட்டணம் ரூ.72,500 என்ற விகிதங்களை நிர்ணம் செய்திருந்தது. ஜூன் 12 அன்று வெளியிடப்பட்ட கட்டண அட்டை விகிதத்தின்படி, மலிவான “பொருளாதார வகுப்பு அறைக்கு” ரூ.25,000 ஆகும்.

ஒரு வாரம் கழித்து, மத்திய அரசு டெல்லிக்காக செயலாற்ற தொடங்கியது. வென்டிலேட்டர் உதவியுடன் ஐ.சி.யூ மற்றும் பிபிஇ செலவுகள் உட்பட ஒரு நாளைக்கு ரூ. 8,000 முதல் ரூ. 18,000 வரை கோவிட்19 சிகிச்சை கட்டண விகிதங்களை பரிந்துரைத்தது.

டெல்லிக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட விலைகளுக்கேற்ப தங்கள் கட்டணங்களை கொண்டு வந்துள்ளதாக, ஜூலை மாத இறுதியில் மேக்ஸ் மருத்துவமனை மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனை இந்தியா ஸ்பெண்டிடம் உறுதிப்படுத்தியன: வென்டிலேட்டர் ஆதரவுடன் ஐ.சி.யூ-வுக்கு ஒருநாளைக்கு ரூ.18,000, வெண்டிலேட்டர் இல்லாமல் ஐ.சி.யூ ரூ. 15,000, ஆக்சிஜன் வசதியின்றி ரூ.10,000 கட்டணமானது.

10 மாநிலங்கள் வெளியிட்டசுற்றறிக்கைகளை, இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு செய்தது; அதில், விலைகளை ஒழுங்குபடுத்திய பெரும்பாலான மாநிலங்கள் ஐ.சி.யூ- சிகிச்சைக்கான விலையை நிர்ணயித்துள்ளன. மேலும், விகிதங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கர்நாடகாவில் ஐ.சி.யூ.வுக்கான உச்சவரம்பு வென்டிலேட்டர் உதவியுடன் ரூ.25,000 ஆக நிர்ணயித்துள்ளது, இது நாங்கள் பகுப்பாய்வு செய்த 10 மாநிலங்களில் மிக அதிகபட்சமாகும், ராஜஸ்தான் நிர்ணயித்த ஒருநாள் கட்டணம் மிகக்குறைந்தபட்சமாக ரூ .4,000 ஆகும்.

ஐ.சி.யூ பராமரிப்பு தேவையில்லாத மிதமான நோயாளிகளுக்கு தனிமை தேவைப்படலாம்; இதற்கான சிகிச்சைக்கு மிக உயர்ந்த விலை மீண்டும் கர்நாடகாவில் ஒருநாளைக்கு ரூ. 12,000 ஆகும். இதில் சத்தீஸ்கரில் ஒருநாளைக்கு ரூ. 2,500 என்ற மிகக் குறைவு விலையாகும்.

இந்த விகிதங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விஷயங்கள் மட்டுமே உள்ளன, மேலும் நோயாளிகளுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், தினமும் மருத்துவர் வருகை மற்றும் பரிசோதனைகள், ஸ்கேன் மற்றும் பிற நடைமுறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்பதை, அரசின் சுற்றறிக்கைகள் பற்றிய எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது. இந்த செலவுகளில் சிலவற்றை நோயாளிகள் அவர்களாகவே செலுத்துவார்கள், அல்லது ஒருசிலவற்றை காப்பீட்டு நிறுவனங்கள் ஈடுசெய்யும்.

"ஒவ்வொரு மாநிலமும் இந்த கட்டணத்தொகையை வித்தியாசமாக வடிவமைத்துள்ளன" என்று ராஜஸ்தானைச் சேர்ந்த சுகாதார ஆர்வலர் சாயா பச்சவுலி கூறினார். “தெலுங்கானாவில், மருந்துகளின் விலை அரசு நிர்ணயித்த விகிதங்களில் சேர்க்கப்பட்டுள்ளது; ஆனால் பிபிஇ கட்டணம் அதில் இல்லை. ராஜஸ்தானில், இதற்கு நேர்மாறாக உள்ளது. ஆனால் மாநிலங்கள் எந்த விலைகளை நிர்ணயித்தாலும், நோயாளிகளுக்கு உண்மையான செலவு இன்னும் அதிகமாக இருக்கும். இதில் நிறைய கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை என்பதால், மருத்துவமனைகள் எப்படியும் போதுமான பணம் சம்பாதிக்கப் போகின்றன,” என்று அவர் கூறினார்.

அரசின் கட்டண கட்டுப்பாடுகளால் தனியார் மருத்துவமனைகள் மகிழ்ச்சி அடையவில்லை; மேலும் கோவிட் 19 சிகிச்சை விலைகளை அரசு கட்டுப்படுத்துவதை எதிர்த்து ஏற்கனவே உயர் நீதிமன்றங்களை அவை அணுகியுள்ளன. மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனை, கோவிட்19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 80% படுக்கைகளை ஒதுக்குமாறு மகாராஷ்டிரா அரசு தங்களை கட்டாயப்படுத்தினால், மருத்துவமனையை மூடிவிட வேண்டியிருக்கும் என்றது.

table,th,td{ font-size: 12px; font-family: arial; border-collapse: collapse; border: 1px solid black; } table{ width:320px; } th,td{ text-align:center; padding:2px; } th.center{ text-align:center; } tr:nth-child(odd) { background-color: #f9f9f9; } tr:nth-child(even) { background-color:#fff; } th { background-color: #1f77b4; color: #FFFFF0; font-weight: bold; }
Capped Prices For COVID-19 Treatment
State Severe Very severe
ICU without ventilator ICU with ventilator
Maharashtra Rs 7,500 Rs 9,000
Telangana Rs 7,500 Rs 9,000
Delhi Rs 13,000 to Rs 15,000 Rs 15,000 to Rs 18,000
Uttar Pradesh Rs 13,000 to Rs 15,000 Rs 15,000 to Rs 18,000
Tamil Nadu Rs 15,000
Andhra Pradesh Rs 5,480 to Rs 6,280 Rs 9,580 to Rs 10,380
Karnataka Rs 8,500 to Rs 15,000 Rs 10,000 to Rs 25,000
Kerala Rs 6,500 Rs 11,500
Rajasthan Rs 4,000
Chhattisgarh Rs 3,750 Rs 6,750

Source: Circulars or letters issued by governments of Maharashtra, Telangana, NCT Delhi, Uttar Pradesh, Tamil Nadu, Andhra Pradesh, Karnataka, Kerala, Rajasthan and Chhattisgarh

‘விலைகள் மிகையாக இருந்தன’

இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு செய்த கட்டணங்களை ஈடுசெய்வதற்கான அரசின் சுற்றறிக்கைகளில், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான கட்டணம் "மிகுதியாக இருந்தது" என்பதை பலரும் ஒப்புக்கொண்டனர். சுகாதார சேவையை அணுகவும் வாங்கவும் மக்கள் சிரமப்பட்டதை மாநில அரசுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகள் "கட்டணமாக அதிக பணத்தை" வசூலிப்பது பற்றிய புகார்களை அறிந்திருப்பதாக, தமிழக அரசு ஒப்புக் கொண்டது. மேலும் "கட்டணங்களை நிர்ணயிப்பது அவசரத்தேவை" என்பதை உணர்ந்திருந்தது. தெலுங்கானா அரசு, "அதிக கட்டண விகிதங்கள் தொடர்பாக பல புகார்களை" கொண்டிருந்தது என்றும் இதனால் கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தது. மகாராஷ்டிரா அரசு, சுகாதாரக்காப்பீடு திட்டத்தில் இல்லாதவர்களிடம் "அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், கஷ்டங்களை ஏற்படுத்துகிறது" என்றது.

நிர்ணயிக்கப்பட்ட விலைகளை இறுதி செய்ய, குறைந்த பட்சம் நான்கு மாநிலங்கள் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா), சில தனியார் சுகாதாரத் துறையின் பிரதிநிதிகள் உட்பட குழுக்களை அமைத்தன. டெல்லியைப் பொறுத்தவரை, மத்திய அரசே ஒரு குழுவை அமைத்தது, இது விலைக் கட்டண விகிதங்களை பரிந்துரைத்தது.

‘முழங்கால் முட்டையின் எதிர்வினை’

கட்டணம் தொடர்பான இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வின் போது வெளிப்பட்ட ஒரு விஷயம், மாநிலங்களின் விலை ஒழுங்குமுறைக்கு பின்னால் ஒரு தெளிவான பகுத்தறிவு இல்லை என்பதாகும். "விலைகளை நிர்ணயிக்கும் போது மாநிலங்கள் நிச்சயமாக எந்த தரஅளவையும் பின்பற்றவில்லை, தெளிவற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் இதைச் செய்கின்றன" என்று பச்சவுலி லி கூறினார்.

"விகித நிர்ணயம் என்பது மிகச்சிறிய அளவிலான மருத்துவமனைகளால், முக்கியமாக ‘லாபத்துக்காக’ மற்றும்‘அறக்கட்டளை மருத்துவமனை’ என்று அழைக்கப்படுபவர்களால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு அரசுகள் அளித்த எதிர்வினையாகும்” என்று உலக மருத்துவ சங்கத்தின் ரவி வான்கேத்கர் கூறினார். "ஆமாம், நோயாளிகள் இடையே உள்ள அச்சத்தையும், அரசு மருத்துவமனைகள் என்றாலே மோசமான தரம் வாய்ந்தவை என்ற கருத்தையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் அரசுகளின் புதிய கட்டண விகிதங்கள் காரணமாக தனியார் மருத்துவமனைகள் நஷ்டத்தை சந்திக்காது. அவை போதுமான உபரி மற்றும் அவர்களின் செலவுகளை ஈடுகட்ட மானியமாக தர முடியும்" என்றார்.

கோவிட்-19 வழக்குகளை கையாள நியமிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளையும் குறைந்தது நான்கு மாநில அரசுகள் கோவிட் -19 நோயாளிகளுக்கு தங்கள் படுக்கைகளில் ஒரு சதவீதத்தை ஒதுக்குமாறு கேட்டுள்ளன. டெல்லி மருத்துவமனைகள் தங்கள் படுக்கைகளில் 60%, கர்நாடகாவில் 50%, தமிழ்நாட்டில் 25% மற்றும் கோவாவில் 20% படுக்கைகளை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. மருத்துவமனைகள் மீதமுள்ள படுக்கைகளை கோவிட் அல்லது கோவிட் அல்லாத பராமரிப்புக்காக பயன்படுத்தலாம், மற்றும் / அல்லது அவற்றின் சொந்த கட்டண விகிதங்களை வசூலிக்கலாம், ஆனால் மாநிலம் அடிப்படையில் மாறுபடும்.

மார்ச் மாதத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஆர்டி-பி.சி.ஆர் சோதனையின் விலையாக ரூ. 4,500 என்ற அறிவுரையை அளித்தது, இது, கோவிட் -19 நோயறிதலுக்கான “பொன்னான தரம்” என்று அழைக்கப்படுகின்றன. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் சோதனைகள் ஏன் இலவசமாக ஆக்கக்கூடாது என்று நீதிமன்றம் கேட்டது. ரூ.4,500 என்பது நியாயமான விலைதான் என்று இந்திய அரசு நீதிமன்றத்தில் கூறியது, நீதிமன்றம் அதற்கு ஒப்புக்கொண்டது.

சில வாரங்களுக்கு பிறகு, குறைந்தது எட்டு மாநில அரசுகள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையின் விலையை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்தன; மிகக் குறைவாக மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் ரூ.2,200 ஆகவும், தமிழ்நாட்டில் ரூ.3,000 ஆகவும் உள்ளது. பிற மாநிலங்களில் உள்ளவர்கள் தனியார் ஆய்வகங்கள் அல்லது மருத்துவமனைகளில் ரூ.4,500 செலுத்துகின்றனர்.

ஆவணத்தின்படி, ​​இந்த விலைகள் துயரில் இருக்கும் கோவிட்19 நோயாளிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பையும் கொண்டு வந்ததாகத் தெரிகிறது, ஆனால் நடைமுறையில் இது வேறுபட்டு செயல்படுகிறது. ஜூலை 25ம் தேதி, 20 சிவில் சமூக அமைப்புகள் டெல்லி அரசிற்கு எழுதிய கடிதத்தில், விலை நிர்ணயம் செய்த போதும் தனியார் மருத்துவமனைகள் இன்னும் நோயாளிகளுக்கு ஆக்கபூர்வமான வழிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குறிப்பிட்டன.

விகிதங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு தெரிவிக்கவில்லை என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; நோயாளிகளின் மருத்துவரது ஆலோசனை, மருந்துகள், சுகாதார ஊழியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றுக்கு இன்னும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அவை சில “டெல்லி அரசலா நிர்ணயிக்கப்பட்ட தொகுப்பு விகிதங்களில் சேர்க்கப்பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.

(பூயான், இந்தியா ஸ்பெண்ட் ஒரு சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News