உலகின் மோசமான காற்றுத்தரம் கொண்டிருந்தும், தேர்தலை காணும் வாரணாசி அதை அலட்சியம் செய்கிறது

Update: 2019-05-19 00:30 GMT

புதுடெல்லி: உலகின் மோசமான காற்றுத்தரத்தை கொண்டுள்ள நகரங்களில் ஒன்றான வாரணாசி, காற்று மாசை தடுக்க சிறிதளவே பணி புரிந்திருக்கிறது; மற்றும் காற்றை தூய்மைப்படுத்தும் பெரும்பாலான அதன் திட்டங்கள் "ஏட்டளவிலேயே உள்ளன" என்று ஒரு ஆலோசனை அமைப்பான லெட் மீ பிரீத் (Let Me Breathe) புதியய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவின் புனித நகரங்களுள் ஒன்று மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை, போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்ட குறைந்தபட்சம் 10 அரசு அமைப்புகள், 19 ஆண்டுகளில் 2.4 மடங்கு அதிகரித்துள்ள காற்று மாசை- இது உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த அளவை விட 10 மடங்கு அதிகம் - கட்டுப்படுத்த முயன்று வருகின்றன; அடிப்படை தரவுகள் கூட இருப்பதாக தெரியவில்லை.

கழிவுகளை எரிப்பது மற்றும் காற்று மாசுபாடு சட்டங்களை மீறுகின்ற வாகனங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அவர்களது வேலையை பற்றிய விவரங்களை கேட்டால், இத்துறைகள் தகவல்களை வழங்குவதில்லை என்று, உள்ளூர் நிர்வாகம் பற்றிய தகவல் அறியும் உரிமைசட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தொடர் விவரங்கள் அடிப்படையிலான ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு ஒரு 2016 அறிக்கையின் அதாவது திணறும் வாரணாசி’ என்ற சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி மேம்பாட்டு மையம் (CEED), இந்தியா ஸ்பெண்ட் மற்றும் கேர்4ஏர் (Care4Air) அறிக்கையின் தொடர்ச்சியாகும்; இது காற்று மாசுபாட்டின் பிரச்சனை டெல்லிக்கு மட்டுமானதல்ல; 2015இல் வாரணாசியில் கூட சுத்தமான காற்று சுவாசித்த நாள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாகும்.

இந்தியாவின் புனித நதியான கங்கையின் கரையோரம் அமைந்துள்ள வாராணாசியில், 12 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்; 2016 ஆம் ஆண்டில் இருந்து, காற்று மாசுபாட்டில் இந்திய தலைநகர் டெல்லியை இது மிஞ்சி வருகிறது என்று, உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி, 2019 மார்ச் 9இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

2019 மே 19இல் பொதுத்தேர்தலை சந்திக்கும் வாரணாசி, உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு உள்ள 4,300 நகரங்களில் மூன்றாவது இடத்தில் (2019) உள்ளது; அடுத்து உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் மற்றும் பரிதாபாத் உள்ளன. வாரணாசியில் அதிகரித்து வரும் மாசு, சுற்றுச்சூழலை மறுசீரமைப்பதில் மோடி கவனம் செலுத்தி வருகிறார்; ஏனெனில் கட்டிடங்கள் அவற்றை அகற்றும் புழுதியால் மாசு உருவாகுவதாக, ஆய்வு தெரிவிக்கிறது.

காகிதத்தில் திட்டங்கள்

வாரணாசியின் காற்று மாசுபாடு தொடர்ந்து உள்ளது. 2019 ஜனவரி வரையிலான 25 மாதங்களில் நகரின் சராசரி பி.எம். (காற்றில் நுண்துகள் அளவு) 2.5 நிலை 104 μg / m³ இல் பதிவு செய்யப்பட்டுள்ளது; இது தேசிய ஆண்டு பாதுகாப்பு அளவான 40 μg / m³ விட 1.6 மடங்கு அதிகமாகும்; மற்றும் உலக சுகாதார அமைப்பின் ஆண்டு தரநிலை 10 μg / m³ ஐ விட 9.4 மடங்கு அதிகமாகும்.

காற்றின் நுண் துகள்கள் பி.எ. 2.5 என்பது - அதாவது நிலக்கரி, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், பயோமாஸ், மாட்டுச் சாணம் மற்றும் கழிவுகள் கொண்டது- மனித முடியை விட சுமார் 30 மடங்கு லேசானது. இந்த துகள்கள் நுரையீரலில் ஆழமாக உறிஞ்சப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, காற்று மாசுபாட்டிலிருந்து சுகாதார அபாய அளவின் சிறந்த குறிகளாக அவர்களின் அளவீடு கருதப்படுகிறது.

காற்று மாசுபாட்டால், 2017இல் இந்தியா 12.4 லட்சம் பேரின் மரணங்களை சந்தித்தது என, 2018 டிசம்பர் 7இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

கடந்த 2018 மே மாதம் உத்தரப்பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் (UPPCB) “வாரணாசியில் சுற்றுச்சூழல் மேம்படுத்த, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் செயல் திட்டம்" ஒன்றை அறிவித்தது. வாகனங்கள், சாலை மாசு, பயோமாஸ் மற்றும் திடக்கழிவை எரித்தல், தொழில்கள், கட்டுமானங்கள் ஆகியவற்றில் இருந்து வரும் புழுதி போன்ற மாசுபாட்டை சமாளிக்க, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அல்லது நகர் நிகாம், போக்குவரத்து காவல்துறை, வனத்துறை மற்றும் வாரணாசி மேம்பாட்டு ஆணையம் போன்ற அரசு முகமைகள், இந்த திட்டத்தின் இலக்காக பட்டியலிடப்பட்டன.

Source: Uttar Pradesh Pollution Control Board

நிர்வாக நடவடிக்கை, மிகச்சிறியது

2018 நவம்பர் முதல் பிப்ரவரி 2019 வரை, வாரணாசியில் 10 நகர துறையுடன் காற்று மாசுபாட்டைக் கையாள்வது அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தில் லெட் மீ பிரீத் அமைப்பு மனு செய்தது. ஆர்.டி.ஐ. பதில்களின் பகுப்பாய்வு அடிப்படையில் கண்டறியப்பட்ட சில பின்வருமாறு:

  • நகர் நிஜம் அமைப்பு சாலை புழுதிகளை, மாசை குறைக்க, சாலையோரம் எரிப்பதை தடுக்க, "சில நடவடிக்கைகளை" எடுத்துள்ளது. எவ்வாறு ஆயினும், விதிமீறல் சம்பவங்கள் மற்றும் உதாரணங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
  • போக்குவரத்து காவல்துறையினர், தங்களுக்கு போடப்பட்ட உத்தரவு, போக்குவரத்து நெரிசலைக் கண்காணித்து ஒழுங்கு செய்வது தான்; வாகனங்களின் காற்று மாசுபாடு சட்ட விதிமீறல்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றனர்; இது, "கண்காணிப்பு மற்றும் செயல்பாட்டு இடைவெளிகளை" காட்டுகிறது.
  • வாரணாசியில் வனத்துறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மரங்கள் நட்டு காற்று மாசுபாட்டின் விளைவுகளை குறைக்கின்றன; ஆனால் உள்கட்டமைப்பு - மேம்பாட்டு திட்டங்களுக்காக, பெரும்பாலானவை வெட்டப்பட்டுள்ளன; நிகர அதிகரிப்பு இருக்கக்கூடாது எனக் கூறுகிறது.
  • உத்திரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி எல்லைக்குள் எவ்வித செங்கல் சூளைகள் இருக்கக்கூடாது என பரிந்துரைக்கிறது; இருப்பினும், ஜில்லா பஞ்சாயத்து (மாவட்ட சபை) சில "நகர்ப்புற பகுதிகளில்" மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் இருக்கலாம் தெரிவித்துள்ளது. நகராட்சி எல்லையை காற்று மாசுபாட்டிற்காக ஒரு "சூழியல் எல்லை" என்று கருத முடியாது; மற்றும் "விதிமுறைகள் வெறுமனே காகித வடிவில் மட்டுமே காணப்படுவதாகவும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு ஒற்றுமையாக செயல்பட வில்லை" என்பதை தெளிவாக காட்டுகிறது.

துறைகளின் விரிவான பதில்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

வாரணாசியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு

உள்ளூர் எம்.பி.யான பிரதமர் மோடியின் கவனம் நகரை "அழகுபடுத்துதல்" மற்றும் உள்கட்டமைப்புகளில் உள்ளது; இது நகர மற்றும் பிராந்திய அளவில் காற்று தரத்தின் பிரதான காரணிகளை முழுமையாக விவாதிக்கவில்லை என்று, கிளைமேட் டிரன்ட்ஸ் அமைப்பின், "இந்தியாவில் காற்று தரம் பற்றிய அரசியல் தலைவர்கள் நிலை மற்றும் நடவடிக்கை" என்ற தலைப்பிலான 2019 ஏப்ரல் அறிக்கை தெரிவித்தது.

கான்பூர், வாரணாசி, டெல்லி, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், பாட்னா மற்றும் லக்னோ உள்ளிட்ட 14 இந்திய நகரங்களை சேர்ந்த எம்.பி.க்களின் பணியை இந்த அறிக்கை ஆய்வு செய்தது. இந்த எம்.பி.க்கள் பெரும்பாலும் இப்பிரச்சினையில் "செயலற்று" மற்றும் "அமைதியாக" இருந்தனர் என்று அறிக்கை கூறியது.

வாரணாசி மாசுபட்டது, ஏனெனில் அதன் சாலைகள் தோண்டப்பட்டு, வடிகால் கட்டப்பட்டு வருகின்றன; எனவே அங்கு "கனரக குடிமை கட்டுமான" உள்ளது என்று கூறும் உத்தரப்பிரதேச மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வாரணாசி மண்டல அலுவலர் அனில் குமார் சிங், எம்.பி.க்கள் குறித்த கிளைமேட் டிரன்ட்ஸ் அமைப்பின் 2019 ஏப்ரல் அறிக்கையை சுட்டிக்காட்டுகிறார்

வரும் 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு மாசு அளவை 20-30% குறைக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தேசிய தூய்மை காற்று திட்டம் தோல்வி அடைந்ததற்கு காரணமாக குறிப்பிடப்படும் 102 நகரங்களில் வாரணாசியும் உள்ளது. காற்று தரம் கண்காணிப்பு நிலையங்கள்,காற்று-தரம் மேலாண்மை திட்டங்கள் மற்றும் காற்று மாசுபாட்டின் ஆரோக்கிய விளைவுகள் பற்றிய ஆய்வுகள் இன்றும் அதிகரிக்க வேண்டுமென்று இது கருதுகிறது.

வாரணாசி மற்றும் இந்திய-கங்கை சமவெளி ஆகியவற்றில் அதிகமான காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக வடக்கில் இமயமலையும், தெற்கில் தக்காண பீடபூமியும் என்று, 2019 மார்ச் 9இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது. இப்பகுதி முழுவதும் வீசும் வடமேற்கு காற்று இந்திய கங்கை சமவெளி முழுவதும் மாசுபட்ட காற்று பரவ வழிவகுக்கிறது.

கடந்த 2015 ஆய்வின் படி, வாரணாசியில் இருந்து வெளிப்பட்ட வந்த வருடாந்திர காற்று மாசுபாடு பி.எம். 2.5 அளவு 31% ஆகும். இந்த "இந்திய-கங்கை சமவெளியில் காற்று மாசு கட்டுப்படுத்த கொள்கைகளில் ஒரு பிராந்திய கண்ணோட்டம் தேவை என்று கூறுகிறது" என்று, கிளைமெட் டிரெண்ட்சின் 2019 ஏப்ரல் ஆய்வு தெரிவிக்கிறது.

வாரணாசியில் காற்றில் மாசு துகள்களின் செறிவு இந்தியாவில் இல்லாத விகிதத்தில் வளர்ந்து வருகிறது: 1.9 μg / m3, இது பி.எம்.2.5 அதிகரித்தது 28.5 μg / m3 மூலம் 71.7 μg / m3; இது 2016 உடன் முடிந்த 17 ஆண்டுகளில் 1.6 முறை அதிகரிப்பு; இது, உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர நிலையைவிட மூன்று மடங்கு அதிகம்; மற்றும் மூச்சுக்குழாய் ஒவ்வாமை, ஆஸ்துமா, மார்பு நோய்த்தாக்கம் உள்ளிட்ட சுவாச நோய்களில் அதிகரித்துள்ளது என்று,2018 மே மாத ஆய்வு கூறுகிறது.

வாரணாசியில் இரண்டு தொடர் காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன, ஆனால் குறைந்தது 11 தேவை என்று, கிளைமெட் டிரெண்ட்ஸ் 2019 ஏப்ரல் ஆய்வு தெரிவிக்கிறது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News