இந்தியாவின் முதல் கோவிட்-19 பாலின பட்ஜெட் குறித்த விளக்கம்

கடந்த ஆண்டு, தொற்றுநோய்க்கு பதில் தரும் நடவடிக்கையாக இந்தியா தனது மத்திய பட்ஜெட் செலவினத்தில் 6% பெண்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு ஒதுக்கியது; ஆனால், 2021- 22 மத்திய பட்ஜெட்டில், பாலின பட்ஜெட் செலவினம் 26% குறைக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-02-09 00:30 GMT

புதுடெல்லி: கடந்த 16 ஆண்டுகளில், 'பாலின பட்ஜெட்' என்று அழைக்கப்படும் பெண்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மத்திய பட்ஜெட் ஒதுக்கீடு, மொத்த செலவு பட்ஜெட்டில் 5%-க்கும் குறைவாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1%-க்கும் குறைவாகவும் உள்ளது. பாலின பட்ஜெட் 2021-22, இந்த போக்கைப் பின்பற்றியுள்ளது, உண்மையில், 2020-21 ஆம் ஆண்டில் ரூ.2,07,261 கோடி (28.4 பில்லியன் டாலர்) என்ற (திருத்தப்பட்ட மதிப்பீடு) இருந்து 2021 ஆம் ஆண்டில் ரூ.1,53,326 கோடியாக (21 பில்லியன் டாலர்) இருந்தது, 2021 -22 (பட்ஜெட் மதிப்பீடு) இல் 26% குறைந்துள்ளது.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டம் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்) போன்ற பாரம்பரிய திட்டங்கள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) (நகர்ப்புற மற்றும் கிராமப்புற) எனப்படும் மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டம், குழந்தை பராமரிப்பு மையங்களின் மேம்பாட்டுத் திட்டமான சக்ஷம் அங்கன்வாடி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சமக்ரா சிக்ஷா மற்றும் கிராமப்புற ஏழைகளிடையே வறுமை ஒழிப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் ஆகியன, அனைத்து ஒதுக்கீடுகளிலும் பாதியையே பெற்றன. கோவிட்19 தொற்றுக்கு பின் உருவான சூழலால் ஏற்பட்டுள்ள சமூக பாதுகாப்பு, டிஜிட்டல் கல்வியறிவு, திறன் பயிற்சி மற்றும் வீட்டு வன்முறை போன்ற புதிய முன்னுரிமைப் பகுதிகள், 2% ஒதுக்கீட்டை மட்டுமே பெற்றுள்ளன.

பெண்கள் மீது கோவிட்டின் சமமற்ற தாக்கம்

கோவிட்19 தொற்றுநோய், இந்தியாவில் பெண்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பததை, ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. 2017-18 ஆம் ஆண்டில், மகளிர் தொழிலாளர் பங்களிப்பு கடந்த ஐந்து தசாப்தங்களாக அதன் குறைந்த அளவை எட்டியது, தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் காலநிலை தொழிலாளர் திறன் கணக்கெடுப்பு 2018-19 இன் படி உலகளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் 23.3% ஆக குறைந்தது. தொற்றுநோய் இதை மோசமாக்கியுள்ளது, ஏனெனில் பெண்கள் அளவுக்கதிகமான வேலை இழப்புகளை எதிர்கொண்டனர் - டிசம்பர் 2019 முதல் டிசம்பர் 2020 வரை, தொழிலாளர் திறனில் பெண்களுக்கு 14% மற்றும் ஆண்களுக்கு 1% குறைந்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவு தெரிவிக்கிறது.

மேலும், பாலின டிஜிட்டல் பிளவு ஆன்லைன் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான பெண்களின் அணுகலை தடைசெய்தது, 42% ஆண்களுடன் ஒப்பிடும்போது, 21% இந்திய பெண்கள் மட்டுமே மொபைல் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று ஜிஎஸ்எம் அசோசியேஷனின் (GSMA) மொபைல் இணைய இணைப்பு நிலை அறிக்கை 2020 கூறுகிறது.

அங்கன்வாடி மையங்களை நீண்டகாலமாக மூடப்பட்டது, பேறு மற்றும் தாய்வழி சுகாதாரச்சேவைகளுக்கான அணுகலை பாதித்தது. பெண்கள் பொது போக்குவரத்து சேவைகளை பெரிதும் நம்பியுள்ளனர். நகர்ப்புறங்களில், அவர்கள் 19% "பிற தொழிலாளர்களை" கொண்டிருந்தாலும், அவர்களின் பயணங்களில் 84% பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி செய்யப்படுவதாக, போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கை நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பொது போக்குவரத்து சேவைகளை சீர்குலைப்பது, மற்றும் நடமாட்ட கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது, இதன் விளைவாக பெண்கள் அதிகளவில் தங்கள் வீடுகளில் அடைக்கப்பட்டனர்.

பள்ளிகள் மூடல் அல்லது முதியோர் கவனிப்பு, குழந்தை பராமரிப்பு என்று, ஊரடங்கின் போது சுகாதாரச் சேவைகளுக்கான அழுத்தம் இருப்பதால், வருமான பிரிவில் உள்ள பெண்கள் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளில் அதிக சுமையைச் சுமக்கின்றனர் என்று, ஐ.நா. பெண்கள் அறிக்கை கண்டறிந்துள்ளது. ஆண்கள் செலவிடும் ஒரு மணிநேரம் அல்லது ஒன்றரை மணிநேரத்துடன் ஒப்பிடும்போது பெண்கள் வீட்டில், செலுத்தப்படாத வீட்டு வேலைகளில் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் செலவிடுகிறார்கள் என்று, தேசிய புள்ளிவிவர அலுவலகம் நடத்திய ஆய்வை மேற்கொள்காட்டி, டைம் யூஸ் இன் இந்தியா -2019 அறிக்கை தெரிவித்தது. கோவிட்19 ஊரடங்கின் போது அதிகரித்த வீட்டு வேலைகள் காரணமாக, நகர்ப்புற பெண் 'தொழில்முனைவோர்'களில் கிட்டத்தட்ட 43% உற்பத்தித்திறன் இழப்பை அறிவித்ததாக, பைன் & கம்பெனி என்ற ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாட்டில், ஏராளமான பெண்கள் சில வகையான வீட்டு வன்முறைகளை எதிர்கொள்கின்றனர், மற்றும் 52% பெண்கள் மற்றும் 42% ஆண்கள், தனது மனைவியை உடல் ரீதியாக தாக்குவது நியாயம் என்று நம்புகிறார்கள், வீட்டு வன்முறையானது, கோவிட் தொற்று காலத்தில், பெண்களின் சவால்களை அதிகப்படுத்தியது.

தொற்றுக்கு பின் முதல் பாலின பட்ஜெட்

மத்திய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக இந்திய அரசு 2005-06 முதல் வெளியிட்டு வரும் பாலின பட்ஜெட் அறிக்கை, பாலின அடிப்படையிலான பாகுபாட்டைக் குறைப்பதற்கான மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய நிதியுதவி திட்டங்கள் முழுவதும் நிதிகளை தெளிவாக வரையறுக்க அனுமதிக்கிறது. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதில் பாலின உணர்வுள்ள சமூக மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பது மத்திய அரசுக்கு ஒரு தனித்துவமான நிதி கருவியாகும். ஆயினும்கூட, பாலின பட்ஜெட் அறிக்கை 2021-22 ஐ, கடந்த 16 ஆண்டுகளில் வெளியிடப்பட்டவற்றுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் முதல் தொற்றுநோய்க்கு பிந்தைய பாலின பட்ஜெட் தொற்றுநோயால் முன்வைக்கப்படும் புதிய முன்னுரிமைகளுக்கு இடமளிப்பதை விட, வரலாற்று போக்குகளைப் பின்பற்றி வருவதையே எங்கள் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

முதலாவதாக, பாலின பட்ஜெட்டின் ஒட்டுமொத்த அளவு 2021-22 மத்திய பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த செலவினங்களில் 5% க்கும் குறைவாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% க்கும் குறைவாகவும் உள்ளது. 2005-06 முதல் 2020-21 வரையிலான காலப்பகுதியில் பாலின பட்ஜெட் மொத்த செலவில் 5% ஒதுக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டின் அசல் பாலின பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.63,800 கோடி (8.7 பில்லியன் டாலர்) ரூ .143,462 கோடி (19.6 பில்லியன்) சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு முதன்மையாக கோவிட்-19 அவசர நடவடிக்கைகளால் இயக்கப்படுகிறது, அதாவது பிரதமரின் ஜன்தன் யோஜனாவின் கீழ் நேரடி பயன் பரிமாற்றம், ஏழை வீடுகளுக்கான எல்பிஜி இணைப்புகள் மற்றும் நூறு நாள் வேலை உத்தரவாத திட்டம். இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டின் பாலின பட்ஜெட் (திருத்தப்பட்ட மதிப்பீடு அல்லது செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்ட தொகை) மொத்த ஒதுக்கீட்டில் 6% ஆக அதிகரிக்கப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஐ தாண்டியது. இருப்பினும், மத்திய பட்ஜெட்டில் 2021-22, மொத்த ஒதுக்கீடு ரூ.1,53,326 கோடியாக (21 பில்லியன் டாலர்) குறைக்கப்பட்டுள்ளது, இது 2020-21 ஆம் ஆண்டைவிட 26% குறைவு. இது மொத்த பட்ஜெட் செலவினங்களில் 4.4% மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7% ஆகும்.

Full View


Full View
Full View
Full View
Full View
Full View




இரண்டாவதாக, பாலின பட்ஜெட், ஒரு சில அமைச்சகங்களுக்குள்ளும் பாரம்பரிய செலவினப் பகுதிகளிலும் குவிந்துள்ளது. 70 க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 34 மட்டுமே 2021-22 ஆம் ஆண்டில் பாலின பட்ஜெட் அறிக்கையில் ஒதுக்கீடு செய்துள்ளன. 2005-06 மற்றும் 2020-21 க்கு இடையில், பாலின பட்ஜெட்டில் 90.3% வெறும் ஐந்து அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் ஒதுக்கப்பட்டன: ஊரக வளர்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, வேளாண்மை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் மனித வள மேம்பாடு. இந்த போக்கு 2021-22 ஆம் ஆண்டுகளில் தொடர்கிறது, அதே ஐந்து அமைச்சகங்களும் 87% ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ளன. பாலின கவலைகள் பிரதானமாக இருக்க, அனைத்து அமைச்சகங்களும் பாலின அக்கறைகளுக்கான ஒதுக்கீடுகளைப் பெற வேண்டும் என்று, நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தைத் தவிர்த்து, இந்த அமைச்சகங்களின் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பாலின பட்ஜெட் 30-40% மட்டுமே உள்ளது. எனவே, பாலின பட்ஜெட் அறிக்கையில் ஒரு பங்கைக் கொண்ட அமைச்சகங்களுக்கு கூட, பெண்களின் தேவைகளுக்கான செலவு என்பது ஒரு சிறிய விகிதமாகும்.

Full View
Full View

ஐந்து திட்டங்கள் - பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY - நகர்ப்புற மற்றும் கிராமப்புற), நூறு நாள் வேலை உத்தரவாத திட்டம், சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 (ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் போன்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் தற்போதைய திட்டங்களை உள்ளடக்கிய ஒரு புதிய பணி, அங்கன்வாடி சேவைகள், போஷன் அபியான், இளம் பருவ பெண்கள் மற்றும் தேசிய கிரெச் திட்டம்), சமக்ரா சிக்ஷா மற்றும் தேசிய கிராமப்புற வாழ்வாதார பணி -- ஆகியன 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாலின பட்ஜெட்டில் பாதி உள்ளன. 2021-22 ஆம் ஆண்டில், இந்த பாரம்பரிய திட்டங்களுக்கான ஒதுக்கீடு மீண்டும் பாலின பட்ஜெட் அறிக்கையில் 53% ஆகும். முதல் 10 திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடு 2020-21 ஆம் ஆண்டில் பாலின பட்ஜெட்டில் 64.6% இலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் 73.4% ஆக அதிகரித்தது, இது அதிக ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது.

Full View


Full View

மூன்றாவதாக, தொற்றுநோயின் விளைவாக உடனடி கவனம் தேவைப்படும் புதிய முன்னுரிமைப் பகுதிகளுக்கான ஒதுக்கீடுகள் பாலின பட்ஜெட்டில் 2021-22 இல் வெறும் 2% மட்டுமே. உலகளவில், பெண்கள் மீது கோவிட்-19 இன் ஏற்றத்தாழ்வான தாக்கத்தை உணர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை பல முக்கிய பகுதிகளை குறுகிய கால முன்னுரிமைகள் என்று அரசு நடவடிக்கைகளுக்காக எடுத்துரைத்துள்ளது, அவற்றில் சமூக பாதுகாப்பு, வீட்டு வன்முறைகளைத் தடுப்பது, திறன் பயிற்சி, பொதுப் போக்குவரத்து, டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளுக்கான ஆதரவு ஆகியன அடங்கும்.

சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான செலவு, 2020-21 ஆம் ஆண்டில் பாலின பட்ஜெட்டில் 21% ஆக உயர்த்தப்பட்டது, பெரும்பாலும் நிதி சேர்ப்பு திட்டம் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கான இலவச சமையல் எரிவாயு திட்டம், பிரதமர் உஜ்ஜ்வாலா யோஜனா ஆகியவற்றின் காரணமாக, ஆனால் இவை எதுவும் 2021-22 பாலின பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. 2021-22ல் பிரதம மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஷார்த்த அபியனின் கீழ் கிராமப்புற டிஜிட்டல் கல்வியறிவுக்காக ஒரு சிறிய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பல் திட்டத்தின் அறிமுகம் (ஒன் ஸ்டாப் சென்டர், மகளிர் காவல் தன்னார்வலர், மகளிர் ஹெல்ப்லைன், ஸ்வாதர் கிரே, உஜ்ஜாவாலா, விதவை இல்லங்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான விடுதி திட்டங்கள் உட்பட தற்போதுள்ள திட்டங்களின் ஒரு குழு) உள்நாட்டு வன்முறைகளை கையாள்வதற்கான, பட்ஜெட்டை கிட்டத்தட்ட 2021-22 பாலின பட்ஜெட் இரட்டிப்பாக்கியுள்ளது.

மறுபுறம், திறன் பயிற்சி மற்றும் பொது போக்குவரத்துக்கான ஆதரவு சரிவாகவே உள்ளது. தேசிய குழந்தைகள் காப்பக திட்டத்தால் ஆதரிக்கப்படும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகள், 2021-22 ஆம் ஆண்டில் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் திட்டம் 2.0 இல் இணைக்கப்பட்டன, எனவே தனி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மேலும், கோவிட-19க்கு பிந்தைய மீட்டெடுப்பின் முக்கிய கருவிகளை உருவாக்கும் முதன்மை மத்திய நிதியளிக்கப்பட்ட திட்டங்கள், ஜல் ஜீவன் மிஷன் (2024ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளிலும் ஒரு செயல்பாட்டு குழாயை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டம்), ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் (இந்தியா முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கான நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம்), மற்றும் ஷியாமா பிரசாத் முகர்ஜி ரர்பன் மிஷன் (கிராமப்புற-நகர்ப்புற பிளவுகளை ரர்பன் கிளஸ்டர்களை உருவாக்குவதன் மூலம் ஒரு உள்ளூர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்) 2021-22க்கான பாலின பட்ஜெட் அறிக்கையில் காணவில்லை. (பாலின பட்ஜெட்டில் வழக்கமாக சில திட்டங்களைத் தவிர்க்கின்றன, ஏனெனில் இந்த ஆண்டு பட்ஜெட்டிற்கு முன்னதாக எங்கள் விளக்கத்தில் நாங்கள் தெரிவித்தோம்). 

Full View
Full View


புதுமை மூலம் பாலின- நடவடிக்கை மீட்பு

உலகளவில், கோவிட்-19 பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடிக்கான நடவடிக்கையாக, இந்தியா உட்பட 26 நாடுகள் பாலின முக்கியத்துவம் வாய்ந்த அவசர நடவடிக்கைகளை எடுத்தன. இதுபோன்ற மொத்தம் 992 நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன, அவற்றில் 71% பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்காகவும், 11% தொகை செலுத்தப்படாத பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துவதற்காகவும், 9.5% சமூக பாதுகாப்புக்காகவும் இருந்தன. மீதமுள்ள 8.5% தொழிலாளர் சந்தை மற்றும் நிதி ஆதரவு மூலம் பெண்களின் பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்துவதாகும். நடுத்தர காலப்பகுதியில் வளர்ந்து வரும் கோவிட்-19க்கு பிந்தைய முன்னுரிமைகளுக்கு பதிலளிக்க பல நாடுகள் புதுமையான முயற்சிகளைத் தொடங்கின.

பல ஆண்டுகளாக, பல நிபுணர்கள் ஒரு பரந்த, புதுமையான பாலின பட்ஜெட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். செலவினங்களைக் கண்காணிப்பதை மேம்படுத்துவதற்காக பாலின பட்ஜெட் விளைவு, பட்ஜெட்டில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று லேகா சக்ரவர்த்தி தனது, 'Gender Responsive Budgeting, as Fiscal Innovation: Evidence from India on 'Processes' என்ற ஆய்வறிக்கையில் எழுதினார். முக்கியமான மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களின் பாலின பட்ஜெட் தணிக்கை, முக்கிய திட்டங்களில் பாலின கண்காணிக்கை வைக்க உதவும் என்று பொருளாதார நிபுணரும், 15 வது நிதி ஆணைய உறுப்பினருமான அசோக் கே. லஹிரி பரிந்துரைத்தார்.

பாலின பட்ஜெட்டுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு அமைச்சகம் / துறை, எவ்வாறு திட்டமிட்டு, வரைபடத்தின் அடிப்படையில் அவற்றை தயாரிக்க வேண்டும் என்று, மனித மேம்பாட்டு நிறுவனத்தில் பாலின ஆய்வு மையத்தின் தலைவர் ஆஷா கபூர் மேத்தா கூறினார். மிக முக்கியமாக, பாலின பட்ஜெட்டின் மூலம் வழங்கப்படும் பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கு, தொடர்ச்சியான நிதியுதவியுடன், இந்தியாவின் கோவிட்-19க்கு பிந்தைய மீட்புத் திட்டங்களின் மையத்தில் பெண்கள் இருக்க வேண்டும்.

மிதாலி நிகோர், புதுடெல்லியை சேர்ந்த பொருளாதார நிபுணர் மற்றும் இளைஞர்கள் தலைமையிலான கொள்கை வடிவமைப்பு மற்றும் பொருளாதார ஆராய்ச்சி சிந்தனைக் குழுவான நிகூர் அசோசியேட்ஸ் நிறுவனர் ஆவார். அவர் ஐ.நா. பெண்கள், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியுடன் ஆலோசகராக உள்ளார், தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவில் உள்கட்டமைப்பு, தொழில்துறை தாழ்வாரங்கள், சிறு குறு, மைக்ரோ தொழில்கள் மற்றும் பாலினம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறார்.

(
கீதிகா மல்ஹோத்ரா மற்றும் தன்வி மகாந்த் ஆகியோர் செய்திக்கும், இந்த செய்தி ஆராய்ச்சிக்கு அனுஷ்கா பன்சால் மற்றும் சாந்தினி கணேஷ் ஆகியோர் பங்களிப்பு செய்தனர்). 

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Tags:    

Similar News