பணிக்கு செல்லும்போது இந்தியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Update: 2020-06-20 00:30 GMT

மும்பை: 2020 ஜூன் இறுதி வரை, சில கெடுபிடிகளுடன் முழுமுடக்கம் தொடரும் நிலையில், அவற்றிற்கான கட்டுப்பாடுகளை பல கட்டங்களாக இந்தியா தளர்த்தி வருகிறது. இதனால், பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன; மும்பை, டெல்லி போன்ற நகரங்களின் தெருக்களில் ஏற்கனவே மக்கள் நடமாட்டம் - அனுமதிக்கப்பட்ட வழிகளில் மீண்டும் வேலைக்குச் செல்கிறார்கள் - உள்ளது; அதன் மூலம் மீண்டும் மக்கள் கூட்டம் பெருகி வருகிறது.

கோவிட் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, மருத்துவமனைகளிலும் இடமில்லாத சூழல் இருப்பதால், நோய்த்தொற்று பரவாத வகையில் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு வரையறை செய்வது? நியாயமான தேவைக்காக, குறிப்பாக பயணத்தின்போது வரையறுக்கப்பட்ட இடங்கள் மற்றும் பெரிய நகரங்களில் உள்ள பெரிய அடுக்குமாடி வளாகங்களில் முழு பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது? இது குறித்து விவாதிக்க, இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் பேராசிரியரும், லைஃப் கோர்ஸ் தொற்றுநோயியல் தலைவருமான கிரிதர் ஆர். பாபுவுடன் பேசுகிறோம்.

.fluid-width-video-wrapper { display: inherit !important; } Full View

திருத்தப்பட்ட பகுதிகள்:

முழு முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள். ஆனால் அவர்கள் வெளியேறக்கூடாது என்றால், அவர்கள் எதற்காக காத்திருக்க வேண்டும்?

நான் எப்படியும் வெளியே சென்று வேலை செய்ய விரும்புகிறேன் என்ற நிலைக்கு ஆயத்தமாகும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதற்கு தயாராக , மூன்று ‘C’க்கள் உள்ளன, அவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்: மூடப்பட்டுள்ள இடங்கள் ( Closed spaces), நெரிசலான இடங்கள் (Crowded places) மற்றும் நெருங்கிய தொடர்பு அமைப்புகள் Close-contact settings) ஆகும். இந்த மூன்று ‘ C’க்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நாம் பின்பற்ற வேண்டும். அதன் மூலம் நான் பாதுகாப்பாக இருப்பேன்; நான் பாதிக்கப்பட்டிருந்தால் கூட மற்றவர்கள் என்னிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பார்.

வழக்குகள் அதிகரித்து வருவதால், பீதியும் அதிகரிக்கிறது. பாதுகாக்கப்படுகிறேன் என்ற மனநிறைவைப்பெற நான் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கைகள் என்ன - முழு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE -பிபிஇ) உடையில் வெளியே செல்லலாமா?

வெளிப்படையாக சொல்வதானால், நாம் ஒரு முழு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண உடையில் வெளியே செல்ல வேண்டியதில்லை.

நாம் வீட்டை விட்டு வெளியேறும்போது, நகைகள் அல்லது பிடித்தமான கடிகாரம் போன்றவற்றை அணிவது வழக்கம். தற்போதைய சூழலில், எங்கும் எப்போதும் நாம் செல்லும் போது சிறந்த முகக்கவசம் அணியும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கூட்டம் இருக்கும் பகுதிகள், அல்லது எந்தவொரு நபரையும், எங்கிருந்தாலும், நான் தொடர்பு கொள்ள செல்லும் போது, முகக்கவசம் அணிய வேண்டும், மேலும் உடல் ரீதியாக சமூக இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நாம் அலுவலகம் செல்லும்போது கூட, அது ஒரு முழுவதும் மூடப்பட்ட அறையாக, காற்றோட்ட வசதியில்லாமல் இருப்பின், அங்கு சிலவற்றை - போதிய சமூக இடைவெளி-இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்; சந்தேகமான சூழல் இருப்பின், முகக்கவசம் பயன்படுத்த வேண்டும். இதை பின்பற்றுவதன் மூலமும், நாம் எந்தவொரு நபருடனும் - பாதிக்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்படாவிட்டாலும், அது ஒரு பொருட்டல்ல -- நெருங்கிய தொடர்பில் இல்லை என்பதை உறுதி செய்வதன் மூலமும் [நான் பாதுகாக்கப்பட வேண்டும்]. இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், உங்களுக்கு சந்தேகம் இருப்பின், பாதிக்கப்பட்டுள்ளதாக கருதி, நீங்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.

சிலர் மிகவும் கவலைப்படுகிறார்கள். உதாரணமாக, ஏராளமான அடுக்குமாடி வளாகங்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை, மேலும் வெளியேறுவதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இத்தகைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு ஏதேனும் திருப்புமுனை உண்டா? அந்த திருப்புமுனை என்னவாக இருக்கும்?

நான் சொன்னது போல், நாம் எப்போதுமே ‘மூன்று C’களை பின்பற்றி முகக்கவசம் அணிந்தால், பெரிய பீதி அடைய வேண்டியதில்லை. ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் இத்தகைய திருப்புமுனை ஏற்கனவே காணப்பட்டது. ஐரோப்பாவில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் கூட இறப்புகளின் எண்ணிக்கையிலும், நோய் பரவல் எண்ணிக்கையிலும் நிலையான சரிவு உள்ளது. இங்கிலாந்தில், தரப்படுத்தப்பட்ட தேசிய பாதிப்பு சுமார் 8% ஆகும். ஆயினும்கூட, இறப்பு மற்றும் வழக்குகளின் எண்ணிக்கையில் சரிவு உள்ளது.

இந்த நாவல் கொரோனா வைரஸ் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. முன்னதாக, மொத்தமாக நோய் எதிர்ப்பு சக்தியை பெற கிட்டத்தட்ட 60% மக்கள் தொற்றுநோய்க்கு ஆளாக வேண்டும் என்று மக்கள் கூறினர். ஆனால் 8% பரவல் தன்மை மூலம், [இங்கிலாந்தில்] வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் காண்கிறோம். எனவே, ஒன்று வைரஸ் சிலரை மட்டுமே பாதிக்கிறது, பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடியவர்களை கொன்றுவிடுகிறது...ஆனால் அது முடிந்ததும், சமூகத்தின் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்படுவதால், அது குறைந்துவரும் போக்கில் உள்ளது. ஆகையால், இந்தியாவில் வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது, ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை; ஏனெனில் நமது இறப்பு விகிதம் நிச்சயமாக மிகக் குறைவு. நமது சுகாதார அமைப்புகள், வழக்குகளின் எழுச்சியை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு நன்கு ஆயத்தமானவை. மேலும், மக்களில் பெரும் பகுதியினர் தொற்று அறிகுறியற்றவர்களாக உள்ளனர்.

பல நாடுகளில், அவை தளர்வுகளை அறிவித்த போதிலும் - அல்லது அங்கு தளர்வு தொடங்கியதால் இருக்கலாம் - வழக்குகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. எனவே, இது நேரத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?

தொற்று பரவலில் உச்சநிலை எட்டியதும், நோயாளிகளின் எண்ணிக்கை குறைய வேண்டியிருக்கும். அதற்கு, உச்சபட்சம் நிகழ வேண்டியது மிக முக்கியமான விஷயம். ஐரோப்பாவிலும், இங்கிலாந்திலும் உள்ள பெரும்பாலான நாடுகள் கடந்த காலங்களில் உச்சத்தை கண்டிருக்கின்றன; இந்தியாவை பொறுத்தவரை, அதன் உச்சம் இன்னும் வரவில்லை. பல கணிப்புகளின் அடிப்படையில், அது ஜூலை நடுப்பகுதியில் இருக்கும். ஆனால் நாம் ஒரு வேகத்தில் செல்கிறோம், இங்கு வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு கூட சுகாதார அமைப்புகளால் நன்கு கையாளப்படுகிறது. எனவே, பீதிக்கு எந்த காரணமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் நமது வேலையைத் தொடர வேண்டும், ஆனால் அதற்கு முன் குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு, நான் ஒரு விமானத்தில் செல்லவிருக்கிறேன் என்று சொல்லலாம். விமான நிலையத்திற்குச் செல்வது, வரிசையில் நிற்பது, விமானத்தின் உள்ளே நடப்பது, பின்னர் 1.5-2 மணி நேரம் அழுத்தப்பட்ட கொள்கலனுக்குள் உட்கார்ந்துகொள்வது அல்லது நீண்ட தூர பயணம் எனில் நீண்ட நேரம் இருப்பது இதில் அடங்கும். இதில், நான் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் யாவை? நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?

நீங்கள் விமானத்திற்குள் இருக்கும்போது மிகவும் பாதுகாப்பான அமைப்புடன் தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் வைரஸ் அங்கே சுற்றிக் கொண்டிருந்தாலும் கூட அதை விடுவிக்கும் தன்மையில் ஏர் கண்டிஷனிங் அமைப்பு இருக்கும். ஆனால் நீங்கள் இருமடங்கு எச்சரிக்கையாக இருக்க விரும்பினால், விமானத்தில் இருக்கும்போது, பயண நேரம் முழுவதும் முகக்கவசம் அணியலாம். ஒரு முகக்கவசம் என்பது நிச்சயம் ஒரு அத்தியாவசிய துணையாகும். இதை நாம் ஒவ்வொருவரும் எப்போதும் அணிய வேண்டியிருக்கும்.

அத்துடன், முடிந்தவரை குறைந்தபட்சம் உடல்ரீதியான இடைவெளி இருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். சிறிய விமான நிலையங்களில் கூட கூட்டம் அதிகமாக இருக்கும். மக்களுக்கு இருமல் போன்றவை இருக்கும் வரை… வைரஸ் பரவுவதற்கான ஒரே வழியாக இருமல் மற்றும் தும்மல் உள்ளது - வாய் (Mouth), கண்கள் (Eyes) மற்றும் மூக்கு (Nose) (இம்மூன்றின் சுருக்கம் - MEN) ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். எனவே, ‘மென்’ (MEN) என்பதில் கவனம் தேவை. அதற்கு நாம் எப்போதும் முகக்கவசம் பயன்படுத்த வேண்டும் மற்றும் உடல்ரீதியாக இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னது போல்அபார்ட்மென்ட் வளாகங்களில், மற்றவர்கள் உள்ளே வர, வெளியே செல்ல லிஃப்ட் அல்லது படிக்கட்டு பயன்படுத்துவது பற்றி மக்கள் கவலைப்படுகிறார்கள். எல்லாவற்றையும் இயக்கும் ஒரு பயம் இருப்பதாகத் தெரிகிறது: எல்லா கதவுகளையும் மூடி, யாரையும் உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை; மக்கள் வெளியே சென்று தான் தங்களது கூரியர் பெற வேண்டும். இந்த வைரசால் என்ன செய்ய முடியும் அல்லது செய்ய முடியாது என்பது குறித்த அறிவியல் புரிதலை இது பிரதிபலிக்கிறதா?

மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இந்த வைரஸ் பரவக்கூடிய ஒரே வழி, நீங்கள் 20 நிமிடங்களுக்கும் மேலாக பாதித்தவருடன் தங்கியிருந்தால் மற்றும் அவரது சுவாச நீர்த்துளிகள் வழியாக, அவை தும்மல் அல்லது இருமல் வழியாக [வெளியே] வரும். தும்மும்போது, நீர்த்துளிகள் 6 மீட்டர் வரை செல்லலாம்.

எனவே, எல்லோரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்திருந்து, ஒருவருக்கொருவர் அருகிலேயே நடமாடிக் கொண்டிருக்கிறீர்கள் எனில், திடீரென்று யாரோ ஒருவர் இருமுவதால்… ஒரு நபரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் கொரோனா வைரஸை, தோராயமாக பெற வாய்ப்பில்லை. சாலை போக்குவரத்து நெரிசல்களில் உள்ள ஆபத்தைவிட அபார்ட்மென்ட் வளாகத்திற்குள் அதற்கான வாய்ப்புகள் குறைவு.

எனது கொள்கை என்னவாக இருக்க வேண்டும்? நான் எப்போதும் அறிந்திருக்க வேண்டிய இரண்டு அல்லது மூன்று விஷயங்கள் யாவை? நீங்கள் அதை சொல்லிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். எனினும் நான் அதை மீண்டும் ஒருமுறை கூறச் சொல்கிறேன்.

மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில எண்ணிக்கையை விட அதிகமாக (5 அல்லது 10 க்கும் மேற்பட்டவர்களை) பார்க்கிறேன் என்றால், நான் அந்த [இடத்தில்] நுழையும்போது, எல்லோரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்; அத்துடன், எனது பாதுகாப்புக்காக நான் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு நடை பயிற்சி அல்லது ஓட்டத்திற்குச் சென்றாலும், உடல் ரீதியான இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும்.

நீங்கள் அலுவலகத்திற்கு [அல்லது பிற] காற்றோற்றமில்லாத மூடப்பட்ட அறைகளுக்கு செல்லும்போது, நீங்கள் உடல் ரீதியான இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்; சந்தேகம் வரும்போதெல்லாம் முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டும். மிக முக்கியமாக, நெருங்கிய தொடர்பு அமைப்புகளில் இருக்கும் போது, இரு கை தூரமே உங்கள் தனியுரிமை என்று நீங்கள் நினைத்தால், அந்த இடத்தில் வேறு நபர் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் இருந்தால், இருவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

நாம் ஒரு மாதத்திற்கு முன்பு பேசினோம்; அத்துடன், தொற்றுநோயுடனான விஷயங்கள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பது பற்றிய நமது புரிதலில் சில மாறியிருக்க வேண்டும். இப்போது உங்கள் பார்வை என்ன?

ஒரு மாதத்திற்கு முன்பு நமக்குத் தெரியாத, இப்போது நமக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், அறிகுறியியல் பெரும்பாலும் தொற்றுநோயைப் பரப்புவதற்கு அறியப்படுகிறது. ஆகையால், பல அறிகுறியற்ற [மக்கள்] நேர்மறையைச் சோதித்துப் பார்க்கக்கூடும், ஆனால் இப்போதைக்கு, அவர்கள் நோய்த்தொற்றின் முக்கிய இயக்கிகள் என்று சான்றுகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இரண்டாவது விஷயம், மூடப்பட்ட பகுதிகள், நெரிசலான இடங்கள் மற்றும் நெருங்கிய தொடர்பு அமைப்புகள் - ஆகிய நான் விளக்கிய ‘மூன்று C’ உத்தியை பின்பற்றுவதன் மூலம், ஜப்பான் தனது நோய் தொற்று பரவல் எண்ணிக்கையை குறைக்க முடியும். இது தவிர, முகக்கவசம் மற்றும் உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றுவதால், தொற்று பரவல் 50%-க்கும் அதிகமாக குறைந்திருப்பதை காட்டுகிறது. எனவே, இந்தியா சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதோடு நமது இறப்பைக் குறைக்கவும், காலப்போக்கில் நாம் அடைந்த லாபங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் முடியும் என்பதில் இப்போது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News