“2019 தேர்தல் நாட்டை காப்பாற்றும் தேர்தல்”. வரும் தேர்தலில் தனது தனித்தன்மையை துறக்கும் ஒரு இளம் கட்சி

Update: 2018-12-11 00:30 GMT

மும்பை: 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், கொந்தளிப்பில் இருந்த, 200 க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். உத்தரவாதமுடன் விளைபொருட்களுக்கு அதிகபட்ச விலை, கடனில் இருந்து விடுபட தள்ளுபடி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகளை களைய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைக்காக, இந்த பேரணி நடந்தது.

இந்த ஆண்டு கரீப் (மழைக்கால) மற்றும் ராபி (குளிர்கால) பயிர்களுக்கு அரசு கொள்முதல் விலையில் ஒரு உயர்வு இருந்தாலும், விவசாயிகளுக்கு நன்மை தந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

இந்திய பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு, 2016-17 ஆம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகளில், 5 சதவீதம் குறைந்து 12.2% ஆக உள்ளது என, 2018 டிச. 3ஆம் தேதி லைவ்மிண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. 2015-16 வரையிலான 40 ஆண்டுகளில் சராசரி விவசாய பண்ணை சாகுபடி அளவு 53% சரிந்து, 1.08 ஹெக்டேர் ஆகிவிட்டது; இதனால் விவசாயத்தில் வருவாய் குறைந்துவிட்டது என்று, அது மேலும் தெரிவிக்கிறது.

திறமையற்ற விவசாய கொள்கைகளால் ஏற்படும் துயரம், கடுமையான கடன், விலை வீழ்ச்சி, வேளாண் விளைபொருட்கள் தேக்கம் போன்ற பல பிரச்சனைகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் நெருக்கடிகளில் இருந்து அவர்களை பாதுகாக்க, விரிவான பாதுகாப்பு சட்டம் தேவை என்று, ஸ்வராஜ் இந்தியா கட்சித் தலைவரான யோகேந்திர யாதவ் நம்புகிறார். இக்கட்சியால் தொடங்கப்பட்ட விவசாயிகள் உரிமை இயக்கமான ஜெய் கிஸான் ஆந்தோலன் அமைப்பின் தேசிய அமைப்பாளராகவும், வாக்களிப்பியல் பொறுப்பாளராகவும் யாதவ் இருக்கிறார். அண்மையில் நாடாளுமன்றத்தை நோக்கி நடந்த பேரணியில், டெல்லி -ஹரியானா எல்லையான பிஜ்வாஸில் இருந்து வந்த நான்கு குழுக்களில் ஒன்றுக்கு, 55 வயதான யாதவ் தலைமை வகித்து வந்தார்.

யாதவ், அகில இந்திய கிஸான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக்குழு - ஏ.ஐ.கே.எஸ்.சி.சி. (AIKSCC) உறுப்பினராகவும் உள்ளார். டெல்லியை நோக்கி விவசாயிகள் நடத்திய பேரணியை, இது தான் ஒருங்கிணைத்தது. நாட்டின் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முக்கிய பிரச்சனைகள் குறித்து நீண்டகால விவாதத்திற்கு பிறகு, விவசாயிகளுக்கு கடன் வழங்கல் உள்ளிட்டவற்றுக்கு கிசான் முக்தி (விவசாயி சுதந்திரம்) மசோதா தேவையென்று, ஏ.ஐ.கே.எஸ்.சி.சி. உருவாக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 2015ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மூன்று உறுப்பினர்களுடன் யாதவ் வெளியேற்றப்பட்டார். எனினும் விரைவில் அக்டோபர் 2016-ல் ஸ்ராஜ் இந்தியா என்ற கட்சியை நிறுவினார். இவரது கட்சியானது வரும் 2019-ல் முதல் முறையாக பொதுத்தேர்தலை சந்திக்கிறது. இது, குடியரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய  ‘அசாதாரணமானது மற்றும் தனித்துமான’ தேர்தல் என்கிறார் யாதவ்.

இந்தியா ஸ்பெண்டுக்கு அவர் அளித்த ஒரு நேர்காணலில், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல், தற்போதைய ஐந்து மாநில தேர்தல் சூழல்கள், அதன் தாக்கம், அத்துடன் மாற்று அரசியல் சக்தியாக தன்னை அடையாளப்படுத்தும் ஸ்வராஜ் இந்தியாவின் எதிர்காலம் ஆகியன குறித்து யாதவ் நம்மிடம் விவரித்தார்.

ஸ்வராஜ் இந்தியா கட்சியின் குறிக்கோள்களில் ஒன்று பொறுப்புணர்வு, பரவலாக்கப்பட்ட நிர்வாகம், வெளிப்படையான ஜனநாயக நிர்வாக நடைமுறையை உருவாக்குவது என்பதாகும். அரசியல்வாதிகளின் தயக்கம், உள்ளூர் அரசுகளுக்கான அதிகாரங்களை தட்டிக்கழிக்கும் நிர்வாகம் போன்றவற்றுக்கு மத்தியில் இளம் கட்சியான ஸ்வராஜ் இந்தியாவால் இந்த குறிக்கோளை எட்டுவதற்கு என்ன திட்டம் உள்ளது? இது டெல்லிக்கு வெளியே எப்படி நடக்கும் என்பதை ஏற்கனவே கண்டுள்ளோம்.

இது அரசியல் அதிகாரத்தை பரவலாக்க ஒரு அரசியல் தொகுதியை உருவாக்குகிறது. 1990களில் இருந்தே பல்வேறு எதிர்க்கட்சிகள், அரசியல் பிராந்தியமாக்கலை அரசியல் அழுத்தம் கொடுத்து உறுதிபடுத்தின. அது விரிவானது அல்ல. மாநில அரசு மட்டத்தில் ஒருமித்துள்ளது [அதிகாரம்]

ஆனால் இதை மாவட்ட மற்றும் கீழ்மட்ட அளவில் மையப்படுத்துவது சவாலாகவே உள்ளது. நாங்கள் சமூக இயக்கங்களின் அரசியலில் ஈடுபட்டிருக்கிறோம்; இதில் பெரும்பாலானவை உள்ளூர்மட்ட அளவிலானவை. இது ஒரு நீண்ட கால திட்டமாகும், மேலும் ஒரு இரவில் வெற்றியை எதிர்பார்க்கக்கூடாது.

ஆம் ஆத்மி கட்சியில் என்ன தவறு நேர்ந்தது? ஸ்வராஜ் இந்தியாவில் நீங்கள் அந்த தவற்றை எப்படி தவிர்க்க போகிறீர்கள்?

கட்சியில் ஆளுமைத்தன்மையை முறையாக தவிர்ப்பதுடன், ஒரு சித்தாந்த கொள்கை ஆவணத்தை உருவாக்கி, உள்கட்சி ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கியது. தகவல் பெறும் உரிமையை வரவேற்கும் ஒரே அரசியல் கட்சி நாங்கள் தான். வேறு எவரும் செய்யும் முன், நாங்கள் அதை செய்தோம். இந்த கொள்கைகளை நாங்கள் பின்பற்றி வெற்றி அடைந்தாலும் மக்கள் எங்களை நோக்கி கேள்வி கேட்க முடியும். உண்மை என்னவென்றால், அந்த வகையான [தேர்தல்] நம்பகத்தன்மையை நாம் அடைந்துவிடவில்லை.

இந்த கொள்கைகளை கடைபிடித்து, மக்களுடைய பார்வையில் ஒரு வெற்றியை [தேர்தல்] அடைய முடியும். இதன் மூலம் ஒரு மாற்றம் வழங்கக்கூடிய ஒரு உண்மையான கூற்றை நாம் செய்ய முடியும். நாம் அதை நோக்கிச்செல்ல இன்னும் பல படிகள் உள்ளன.

வரும் 2019 பொதுத்தேர்தலுக்காக ஸ்வராஜ் இந்தியா எத்தகைய திட்டம் வைத்துள்ளது?

இது ஸ்வராஜ் இந்தியா கட்சிக்கு முதல் பொதுத்தேர்தலாக இருந்தாலும், இது ஒரு அசாதாரணமான மற்றும் தனிப்பட்ட தேர்தலாகும். ஏனெனில் இன்றுள்ள சவால், குடியரசை காப்பாற்றுவதே ஆகும். இந்த தேர்தலை ஒரு வழக்கமான தேர்தலாக நாம் அணுகினால், ஒவ்வொரு அரசியல் கட்சியும் சந்தையில் பங்கு பற்றி கவலைப்படுவதால், அத்தகைய வரலாற்று சவாலை நாம் இழந்து விடுவோம்.

ஒரு அரசியல் கட்சியாக நாங்கள், நமது சொந்த தேர்தல் நலனுக்கு பின்னால் இருக்க, நமது அனைத்து ஆற்றலையும் குடியரசை பாதுகாப்பதற்கான பெரிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம். தீர்க்க வேண்டிய உண்மையான பிரச்சினைகள் பற்றிய ஒரு திட்டத்தை கொண்டிருக்கிறோம். அதற்காக ஒரு தன்னார்வ சக்தியை நாங்கள் உயர்த்துவோம். அவர்கள் கட்சி சேவைக்காக இருக்க மாட்டார்கள்; ஆனால் குடியரசை பாதுகாக்கும் சேவையில் ஈடுபடுவார்கள்.

நீங்கள் ஒரு கூட்டணியாக  மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு ஏதேனும் தீர்மானித்திருக்கிறீர்களா; அதற்கு வாய்ப்புகள் உண்டா?

எங்கள் புரிதலில், மஹகாத் பந்தன் [எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி] என்பது பாரதீய ஜனதா கட்சிக்கு சரியான பதில் அல்ல. அது அவ்வாறு இருந்திருந்தால், மஹாகாத்பந்தன் அளவே குடியரசை கவனித்துக் கொள்ளும்.மஹாகாத் பந்தன் அணிக்கு போதிய எண்ண்ணிக்கை இருந்தபோதிலும், நம்பிக்கையைத் தோற்றுவிக்கக்கூடிய நாட்டிற்கான ஒரு மாற்று [பார்வை] அவர்களிடம் இல்லை.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வெளியேற்றப்பட வேண்டும். என்றாலும், மஹாகாத்பந்தனுக்கும் கூட செக் வைக்கப்பட வேண்டும். எனவே இதில் இரு பொருள் உள்ளது. நாங்கள் மஹாகாத் பந்தனுடன் எந்தவொரு பகுதியாகவும் இல்லை.

பரவலாக விவசாயிகள் துயரை சந்தித்த போதும் சமீபத்திய ஆய்வுகள், காங்கிரஸை விட பாரதிய ஜனதாவுக்கே மத்திய பிரதேசம் (பா.ஜ. 43%, காங்கிரஸ் 39%), சத்தீஸ்கரில் (பா.ஜ.க. 42%, காங்கிரஸ் 36%)  விவசாயிகள் வாக்களிக்க விரும்புவது தெரிய வருகிறது. தொடர்ந்து இம்மாநிலங்களில் பதவியில் உள்ள பா.ஜ.க.வுக்கு விவசாயிகள் வாக்களிக்க விரும்பது பற்றி உங்கள் பார்வை என்ன?

இம்மாநிலங்களில் பா.ஜ.க. தான் முன்னணியில் இருப்பதாக, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் கூறுவதை நான் ஏற்கவில்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்னும் வலுவான உருவத்தை வழங்கும். என்னை பொருத்தவரை காங்கிரஸைவிட பா.ஜ.க. முன்னணியில் இருப்பது சரியானது அல்ல என்பதாகும். கடந்த தேர்தலில், அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பைவிட விவசாயிகளிடமும், பொது மக்களிடமும் உள்ள எண்ணத்துடன் ஒப்பிடுகையில், பா.ஜ.க. இம்முறை ஊசலாடுவதை நாம் பார்க்க வேண்டும்.

விவசாயிகள் பா.ஜ.க. உடன் இருப்பதாக நான் நினைக்கவில்லை. என் பயணங்களின் அடிப்படையில் பார்க்கும் போது பா.ஜ.கவுக்கு எதிராக பெரும் எதிர்ப்பு உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்காக காத்திருக்க வேண்டும்; தேர்தல் முடிவுகள் மட்டுமே அதற்கு பிந்தைய நிலையை மதிப்பிட உதவும்.

பல மாநிலங்களில் பசுவதை தடுப்பு சட்டம் அமலில் இருப்பதாலும், விழிப்புணர்வாலும், விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்க தயங்கும் சூழல் உள்ளது. அதற்கு பதில் திறந்தவெளியில் விடுகின்றனர். இது அவர்களுக்கு பொருளாதார துயரை ஏற்படுத்துகிறது; மேலும் கால்நடைகளால் பயிர்கள் நாசமாகின்றன. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, விவசாயிகளை மோசமாக பாதித்தது. இதை விவசாய அமைச்சகமே ஒப்புக் கொண்டது (பின்னர், இது திரும்பப்பெறப்பட்டது). இவை, தேர்தலில் பெரும் பிரச்சனைகளாக எதிரொலிக்குமா? விவசாயிகளை பாதிக்கும் பிற விஷயங்கள் என்ன?

நான் பல இடங்களில் பயணித்து, விவசாயிகளை சந்தித்து பேசிய போது, அவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சனைகளில் ஒன்று, விளை பொருட்களுக்கு உரிய விலை இல்லாததாகும். மத்திய பிரதேசத்தில் உள்ள பவந்தர் புக்தன் யோஜனா (விலை குறைபாடு செலுத்தும் திட்டம்) என்பது, ஒரு கொள்கை திட்டமிடலில் இருந்து பார்க்கும் போது பேரழிவு ஏற்படுத்தக்கூடியது. இத்திட்டத்தை திறமையற்ற முறையில் செயல்படுத்தியதால், வர்த்தகர்கள் சந்தையை சூழ்ச்சியுடன் கையாண்டனர்; செயற்கைத்தனமாக விலைகள் குறைக்கப்பட்டன. இதன் விளைவாக, வழக்கமாக கிடைக்கும் தொகையை விட இத்திட்டத்தால், குறைவாக பெற்றனர். அரசானது, மாதிரி விலை [சந்தையில் நிலவும் சராசரி விலை] மற்றும் அரசு வாங்கிய விலை ஆகியவற்றுக்கு இடையே ஒரு வித்தியாசமான முறையால் ஈடுசெய்ய முயற்சித்தது.

சோயாபீன்ஸ் சாகுபடியை எடுத்து கொண்டால், பவனந்தர் திட்டத்தில்  விவசாயிகளுக்கு சந்தை விகிதத்தை விட குறைவாகவே கிடைத்தது, இதனால் அவர்கள் ஆவேசமடைந்தனர். நிவாரண இழப்பீடு எட்டு, பத்து மாதங்கள் தாமதமாகவே கிடைக்கிறது.

வறட்சி காலத்தின் போது பயிர் இழப்பீடு போதியளவு வழங்குவதிலும் பிரச்சினை உள்ளது. பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (PMFBY - பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்) திட்டத்தில் அமைப்பு மற்றும் தகவல் ஆதாரம் மிகவும் குறைவாக உள்ளது; ஒரு குறிப்பிட்ட அளவு விவசாயிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதாக காகிதங்களில் காட்டலாம்; உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் நிதியை பெறுவதில்லை; இத்திட்டம் தோல்வியடைந்துவிட்டது.

எனது விவசாயிகளுடனான உரையாடல்களின் போது, விலங்குகள் பயிர்களை அழிப்பது குறித்து  ​​விவசாயிகள் குறிப்பிட்டனர். இது ஒரு நுண்ணிய நிகழ்வு என்று எல்லோரும் நம்புகிறார்கள். இந்திய விவசாயம் தற்போது எதிர்கொள்ளும் ஒரு பெரிய நிகழ்வு ஆகும். ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் விலங்குகளில் தொல்லையால் சாகுபடியையே விவசாயிகள் நிறுத்தியுள்ளனர்.

அவர்களுக்கு உள்ள வாய்ப்புகளில் ஒன்று இரவு முழுவதும் கண் விழித்து பயிர்களை பாதுகாப்பது அல்லது, நடுத்தர விவசாயிக்கு பெரும் பொருட்செலவை ஏற்படுத்தக்கூடிய இரும்பு முள்வேலி அமைத்தல் என்பதாகும். இப்பிரச்சினை பற்றிய அதிகாரப்பூர்வ ஆய்வு எதுவும் இல்லை; ஆனால் யாரேனும் ஒரு  கணக்கெடுப்பு நடத்தினால், அதன் முடிவுகள் ஆச்சரியமளிக்கும். நாம் ஒரு பெரிய பிரச்சனையுடன் கையாள்கிறோம்.

இப்போது, கால்நடைகள் சந்தை விலையை குறைத்து, விவசாயிகளின் செல்வத்தின் மதிப்பில் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததால், கால்நடை ர்த்தகம் நிறுத்தப்பட்டன. பால் விலைகளும் வீழ்ச்சியடைந்துவிட்டன. ஆயினும்,பண மதிப்பிழப்பு நடவடிக்கை கவலை அளித்தது. விவசாயிகள் கூறுகையில் ‘நோட்பந்தி கே பாத் அபி தக் கமர் சேதி நஹி ஹுய் ஹாய்’ (பண மதிப்பிழப்பு நடவடிக்கை எங்கள் முதுகை உடைத்துவிட்டன). உள்ளூர் வர்த்தகர்களுக்கும் (குறைந்த இருப்புத்தொகை காரணமாக விவசாயிகளின் விளை பொருட்களை) வாங்க முடியாமல் போனது. இதனால் வழக்கம் போல் வாழ்க்கை கடினமாகிவிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சந்தித்ததால், நவம்பர் மாதம் விவசாயிகளுக்கு மிக மோசமானது. இது திருமண மற்றும் விதைப்பு பருவமாகும் என்பதால், விவசாயிகள் தங்கள் பயிர்களை விற்க முயல்வர். அந்நேரத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை செயல்படுத்தியது, விவசாயிகளை காயப்படுத்தியது.

நாட்டிலுள்ள காப்பீட்டு நிறுவனங்கள் பி.எம்.எப்.பி.ஒய். வாயிலாக, 2017-18ஆம் ஆண்டில் ரூ. 15,795 கோடியை லாபம் ஈட்டியுள்ளன. ரபேல் ஒப்பந்தத்தை விட இது ஒரு பெரிய "மோசடி" என்று, மூத்த பத்திரிகை ஆசிரியர் பி. சாய்நாத் கூறுகிறார். விவசாயிகளுக்கு வறட்சி, பூச்சி மற்றும் நோய்களின் போது கருணை காட்டப்படுவது மறுக்கப்படாத நிலையில், காப்பீடு திட்டங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? பி.எம்.எப்.பி.ஒய்.-க்கு மாற்று என்ன?

இயற்கை சீற்றங்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு பாதுகாப்பு தேவை என்று நீங்கள் மறுக்க முடியாது. இது அடிக்கடி நிகழும்; காலநிலை மாற்றமும் மிக அதிகமாக இருக்கும். ஒரே கேள்வி என்னவென்றால் அதற்கு என்ன வகையான பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பது தான். அரசு மதிப்பீடு செய்து இழப்பீட்டை ஈடுசெய்வது அல்லது அது பிரீமியம் அடிப்படையிலான காப்பீட்டு மாதிரிவாக இருக்க வேண்டுமா? துரதிருஷ்டவசமாக, முந்தைய பயிர் காப்பீட்டு மாதிரி என்பது, மிக அதிகாரத்துவமானது, வருவாய் தன்னிச்சையாக இருந்தது. நான், காப்பீட்டு மாதிரிக்கு எதிராக நான் இல்லை; ஆனால் பல விவசாய இயக்கங்கள் அதற்கு எதிரானவை.

பி.எம்.எப்.பி.ஒய். திட்டத்தில் பிரீமியம் செலுத்துபவர் யார், எவ்வளவு பிரீமியம் செலுத்துகிறார், அதற்கு யார் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்று கேட்கப்பட வேண்டும். பயிர்க்காப்பீடு திட்டங்கள், 30 ஆண்டுகளாக உள்ளன; அவற்றில் ஏற்கனவே 5 முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் அறிவிப்பு, இதன் ஆறாவது பதிப்பாக இருக்கலாம். இதில் பிரச்சனை என்னவெனில், இதை அவர் என்னவோ கண்டுபிடித்தது போல் காட்டிக் கொள்கிறார்.

முன்பிருந்த காப்பீடு திட்டங்களை விட பி.எம்.எப்.பி.ஒய். முன்னேற்றம் கண்டிருந்தாலும் முக்கிய பிரச்சினைகளுக்கு அது தீர்வு காணவில்லை. எந்த காப்பீட்டுத் திட்டமும் விவசாயிக்கு உலகளாவிய பாதுகாப்பு அளிக்கவில்லை.  முந்தைய திட்டம் 24% அளவிற்கு ஒரு பாதுகாப்பு தந்தது. பி.எம்.எப்.பி.ஒய். காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டு, முதல் ஆண்டில் 30% பேர் பயனடைவர்; இரண்டாம் ஆண்டில் 40%, மூன்றாவது ஆண்டில் 50% என்று அதிகரிக்கப்படும் என்று இதில் கூறப்பட்டிருந்தது. உண்மையில் இது 24% முதல் 28% வரை உயர்ந்தது; பின்னர் 24% வரை சரிந்தது, தொடங்கிய இடத்திற்கே திரும்பியது.

ஆனால் இந்த காலத்தில் அரசு செலவினம் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக, ரூ .15,000 கோடியாக அதிகரித்துள்ளது, அதாவது இதில் லாபம், காப்பீட்டு நிறுவனங்களுக்கு செல்கிறது. இத்திட்டத்தில் தனியார் நிறுவனங்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. பேரிடருக்கு காப்பீடு வழங்கும் தனியார் நிறுவனங்கள் பேரழிவுக்கு குறைவாக பாதிக்கப்படக்கூடாது. ஆனால் அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய தொகையில், கோரிக்கைகளுக்கு இடையே, 10 சதவீத புள்ளி வேறுபாடு இருப்பதை காணலாம். இதில், தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின.

இழப்புகளை கண்டறிவதில் போதிய திறமையின்மை காரணமாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீடு திட்டங்களால் பயன்பெறவில்லை. சாதாரண ஆண்டுகளில் காப்பீடு நிறுவனங்கள் லாபம் ஈட்டினால் தான் பேரிடர் காலங்களில் அதிக காப்பீடு வழங்க இயலும் என்று அரசு தரப்பு வாதிடுகிறது. ஆனால் இது ஒரு போலித்தனமான வாதமாகும்.

நீங்கள் [பேரழிவுகள் ஏற்பட்ட ] உத்திரப் பிரதேசம் (2016), பீகார் (2017), தமிழ்நாடு (2017) மாநிலங்களைப் பார்த்தால், விதிவிலக்காக பிரிமியம் செலுத்திய தொகையை விட, இழப்பீடாக வழங்கப்பட்டது அதிகம். அமெரிக்கா போன்ற சில நாடுகளில், இயற்கை பேரழிவு ஆண்டில், காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை நிறுத்திவிடலாம். தமிழ்நாட்டில், 140 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி ஏற்பட்டதால், மூன்றில் ஒரு பங்கு தொகை காப்பீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.

உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது, காப்பீட்டு நிறுவனங்களே லாபம் ஈட்டின. இத்தகைய சூழ்நிலைகளில் சாய்நாத் கூறியது சரிதான். இது ஒரு மோசடி.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி நிவாரணம் மற்றும் உற்பத்தி விலையை விட 50 சதவீதம் அதிக கொள்முதல் விலை என்ற உத்தரவாதத்தை அரசு தர வேண்டும் என்கின்றனர். கரீப், ரபி கொள்முதல் விலையை அரசு அதிகரித்துள்ளது என்றாலும், அது விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிப்பதாக இல்லை. கொள்முதலில் அடிக்கடி விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், விவசாயிகளை தனியாரிடம் விற்கத் தூண்டுகிறது. விவசாயத்தில் வருமானத்தை பெருக்க, அரசும், விவசாயிகளும் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

நாங்கள் [AIKSCC] மசோதாவில் கட்டணங்களின் விவரங்களை அளித்திருக்கிறோம். விவசாயிகளுக்கு சிறந்த விலையை அளிப்பது அரசாங்க கொள்முதல் விலையை உயர்த்துவது மட்டுமல்ல;  ஒரு சரியான மட்டத்தில் அதை சரிசெய்வது, பரந்த கொள்முதல், பயிர்களுக்கான போதிய நிதிச்சந்தை தலையீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. விவசாயிகள் 'லாபத்தை விட வர்த்தகர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கொள்கையை அரசு அமைக்கக்கூடாது. உலகளாவிய அடிப்படையில் பயிர் இழப்பீடு மற்றும் நேரடி வருவாயின் ஆதரவு தேவைப்படக்கூடாது. விவசாயிகளுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் கொள்கைகளின் பூச்செடி இது.

கடன் தள்ளுபடியை நாங்கள் வெறுமனே கேட்கவில்லை. முன்மொழியப்பட்ட வரைவு மசோதாவில், அதிகமாக கடன் எடுக்கப்பட்ட தனியார் கடன் பிரச்சனை குறித்து விளக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி என்பது ஒரு தீர்வாக அல்ல; மாறாக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதே ஒரு துணை நடவடிக்கையாக இருக்கும். விவசாயிகளின் வருவாயை பெருக்காமல் கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்வது என்பது, பொதுமக்களின் பணத்தையே வீணடிக்கும் செயலாகும்.  ஆனால் அத்தகைய தள்ளுபடி இல்லாமல், விவசாயிகள் பயனடைய மாட்டார்கள். இவை இரண்டுமே விவசாயிகளுக்கு கிடைக்க, ஒரு தூய்மையான செயல்பாடு தேவை.

பரந்தளவில் நெருக்கடியைக் கொடுக்கும் பொருட்டு பொதுவான பிரச்சனைக்காக வாக்களிப்பது என்ற வகையில் நாட்டில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, ஒரு தடையை ஏற்படுத்த முடியுமா? விவசாய பாதிப்புகளை விட ஜாதி, மதம் போன்ற காரணிகளை முன்வைத்து வாக்களிக்கிறார்களா?

இந்திய விவசாயிகளை கொண்டு அரசியல் தடையை உருவாக்குவது வரலாற்று சவாலானது. இது இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் திட்டமாகும். மார்க்சிய  கோட்பாட்டின்படி, தனக்குள் ஒரு வர்க்கம் என்பதற்கு, தனக்காக ஒரு வர்க்கம் என்பதற்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. விவசாயிகள் தங்களுக்குள் உள்ள ஒரு வர்க்கம். தற்போது அவர்கள் மண்டலம், பயிர், காலநிலை, வர்க்கம், ஜாதி, மதம் மற்றும் அரசியல் கருத்தியல்களால் பிரிந்து கிடக்கின்றனர்.

விவசாயிகளை ஒன்று சேர்ப்பதற்கான கோரிக்கைகளைச் சிந்தித்துக் கொண்டு எங்களுக்கு [ஏ.ஐ.கே.எஸ்.சி.சி.] நேரத்தை எடுத்துக் கொண்டு, இந்த இரண்டுக்கான  [அரசு கொள்முதல் விலை மற்றும் கடன் தள்ளுபடி] வந்துவிட்டது. சில முக்கிய விஷயங்களைக் கண்டறிவது சவாலான விஷயம். தகவல் தொடர்பு மற்றும் நில உரிமையாளர்களைப் போன்ற பல்வேறு குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்காக, எங்களமைப்பு பொதுவான தளத்தை வழங்கும். விவசாய தொழிலாளர் மற்றும் நில உரிமை உள்ள விவசாயிகள் இருவரின் பிரதிநிதித்துவம் பெற்றவர்கள்  முன் எந்தவொரு வழக்கும் வைக்கப்படவில்லை. இது போதாது என்றாலும், விவசாயிகள் ஒரு அரசியல் தடையாக இருப்பதை ஒழுங்கமைக்க சரியான திசைக்கான ஒரு படி ஆகும்.

2018 செப்டம்பரில், எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிராக தமிழ்நாடு செங்கத்தில் நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளை சந்திக்க சென்ற நீங்கள், பிடித்து வைக்கப்பட்டீர்கள். இதற்கு பதிலளித்த நீங்கள் “காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் மட்டுமே இதற்கு வழியாக தெரிகிறது” என்றீர்கள். ஆனால், அக்டோபர் 2ஆம் தேதி டெல்லியில் பேரணி சென்ற விவசாயிகளை தடுக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்தியா முழுவதும் அரசுகளுடன் ஒரு அர்த்தமுள்ள ஈடுபாடு என்பது சாத்தியமா?

பல நாடுகளை போல் அல்லாமல், விவசாயிகளுக்கு பலம் உண்டு என்பதால் இந்தியாவில் இதற்கு வாய்ப்பு உள்ளது. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் எண்ணிக்கை அடிப்படையில் மிக அதிக பெரிய குழுக்கள் உள்ளன. அவற்றின் தூக்க பெரும்பான்மையை ஒரு விழிப்புணர்வு பெரும்பான்மையாக மாற்றுவது தான் ஒரே சிந்தனை. அதற்கு காந்தீய வழியே சரி. அஹிம்சை வெறுமனே ஒரு தார்மீக கொள்கை அல்ல, அது சிறந்த நடைமுறையாகும்.  விவசாயிகள் வன்முறையற்ற முறையில் தங்கள் வலிமையை உறுதிப்படுத்திக்கொள்ளும் போது, அவர்கள் போராட்டம் தொடரவும், எடைபோடவும் உறுதிப்படுத்தவும் முடியும். இதில் உண்மையான சவால், விவசாயிகளை ஒரு அரசியல் தொகுதிக்கு ஏற்பாடு செய்வது தான்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல்களை தொடர்ந்து வரும் 2019-ல் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தேர்தல்களுமே வெவ்வேறு பிரச்சனைக்கானவை என்று கருதுகிறீர்களா? நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெவ்வேறாக இருக்கும் என்று கருதுகிறீர்களா?

இப்போது நடந்துள்ள அரையிறுதி, ஒரு மோசமான உருவத்தை கொண்டுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல்களின் விளைவு தேசிய அரசியலில் பிரதிபலிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இந்த மூன்று இந்தி பேசும் மாநிலங்களும், என்ன நடக்கக்கூடும் என்று ஒரு பார்வையை அளிக்கும். 2014 தேர்தலில், இந்தி பேசும் மாநிலங்களில், 226 இடங்களில் 203 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. இம்மூன்று மாநிலங்களில், 65 இடங்களில் 62 இடங்களை வசப்படுத்தியது. எனவே, கேள்வி கேட்கக்கூடிய கேள்வி, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்த மூன்று மாநிலங்களில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை முன்னிலைப்படுத்துமா? அதற்கு பதில், ஆம்.

இம்மூன்று மாநிலங்களின் தேர்தல் முடிவு, மோடி அலை தொடர்ந்து வருகிறதா அல்லது பரவலாக உள்ளதா, குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ.க. செல்வாக்கு உள்ளதா என்பதை தெரிவிக்கும். தேர்தல் கணிப்பு தொடர்பாக நாட்டின் மற்ற மாநிலங்களை கணிக்க இது நேரமல்ல. கிழக்கில் பாஜகவுக்கு லாபம் கிடைக்கலாம்; தெற்கு மற்றும் இந்தி பேசாத மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எந்த மாற்றமும் இருக்காது (எண்ணிக்கையில்).  இந்தி பேசும் மாநிலங்களில் அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால், அது (பொதுத்தேர்தலில்) தேசிய அளவில் இழப்பாக அமையும்.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் ஆய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News