பாதுகாப்பான, வசதியான கருக்கலைப்புக்கு அணுக ஏதுவாக பெண்கள் மீதான களங்கத்தை குறைக்கலாமே!
எனினும், இதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. இந்தியாவில் 1000 ஆண்களுக்கு, 919 பெண்கள் என, பாலின விகிதம் சரிந்துள்ள நிலையில், இதை பயன்படுத்தி, கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவிக்க வாய்ப்பு ஏற்படும் என்று, கவலைகள் தெரிவிக்கப்பட்டன.
பாதுகாப்பான, வசதியான கருக்கலைப்புக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவின் ஐபாஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷன் (ஐடிஎப்) இன் நிர்வாக இயக்குனர் வினோஜ் மானிங் 55, இந்தியா ஸ்பெண்டிடம் கூறும்போது, “எல்லா கருக்கலைப்புகளிலும், 9%க்கும் அதிகமான பாலியல் தேர்வு இல்லை. சுகாதாரம், உரிமைகள் குறித்து விவாதிக்க, பெண் அமைப்புகளை இந்தியா ஏற்படுத்த வேண்டும்,” என்றார். ”பாதுகாப்பான கருக்கலைப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்தல் மற்றும் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் விரிவாக்கம் போன்றவற்றால், பெண்கள் எளிதில் பாதுகாப்பாக கருக்கலைப்புக்கு அணுகுவதை ஏற்படுத்தலாம்,” என்று மேலும் கூறினார்.
கடந்த 2002ஆம் ஆண்டில், ஐ.டி.எப்.-ல் சேரும் முன், ஸ்வீடன் அரசின் உதவி பெறும் அமைப்பான, ஸ்விஸ் அபிவிருத்தி கூட்டமைப்பிலும், தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் – பாத் (PATH) அமைப்பிலும் பணியாற்றினார். கிராமப்புற மேலாண்மை பாடத்தில், பட்டதாரி பட்டயம் பெற்ற அவர், அமெரிக்காவின் போர்ட்லாண்ட் பல்கலைக்கழகத்தின் வணிக பிரிவில், எம்.பி.ஏ. (பிளஸ்) சான்று பெற்றவர். அவரிடம் சில கேள்விகள்…
கருக்கலைப்புகளால் தினமும் 10; ஆண்டுக்கு 3,520 இறப்புகள் என்று திட்டக்குழு மதிப்பீடு கூறுகிறது; பாதுகாப்பான கருக்கலைப்புக்கு என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரீதியில் கருக்கலைப்பு செய்யும் சட்டம் (எம்.டி.பி.)- 1971 நிறைவேற்றப்பட்டு, 47 ஆண்டுகளான போதும், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு என்பது இல்லை.
கருக்கலைப்பு மையங்களின் சேவை குறைபாடுகளுக்கு பல காரணங்கள் உள்ளன. தங்கள் வீடு அல்லது சமூகம் சார்ந்த பகுதிக்கு அருகே, இம்மையங்கள் இருப்பது, சட்டபூர்வ விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நிலவும் பற்றாக்குறை, இந்தியாவில் கருக்கலைப்பு சட்டம் இருப்பது குறித்து, பல பெண்கள் அறிந்திருக்காதது, சட்டப்படி கருக்கலைப்புக்கு அனுமதி இருப்பது தெரியாதது மற்றும் எங்கே, எப்போது, எவ்வாறு இந்த சேவையை அணுகுவது என்று, பெண்கள் அறிந்திருக்காதது போன்ற காரணங்கள் உள்ளன.
கருக்கலைப்பு என்பது தொடர்ந்து புறக்கணிக்கப்படாமல் இருக்க, அந்தை மையங்களை அணுகும் பெண்களுக்கு பாதுகாப்பும், சட்ட உதவிகளும் வழங்க, ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. அப்போது தான் கருக்கலைப்பு மையங்களை வசதியானதாக கருதி, எளிதில் அணுக முற்படுவர்.
இந்தியாவில் கருக்கலைப்பு சேவைகள் சட்டப்பூர்வ வழங்குவோர் எண்ணிக்கை விவரம் உள்ளதா?
”நாட்டில் கருக்கலைப்பு சேவை வழங்குவோர் குறித்த சரியான, துல்லியமான தகவல்கள் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன், ஐபாஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷன் (ஐடிஎப்) கணக்கின்படி, கிராமப்புறங்களில், 2,24,000 பெண்களுக்கு, ஒரு பயிற்சி மற்றும் அங்கீகாரம் பெற்ற மருத்துவர் இருக்கிறார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்த விகிதத்தில் வியத்தகு எந்தவொரு மாற்றத்தை நான் கணக்கிடவில்லை. இதற்கான காரணம், போதிய சட்டபூர்வ கருக்கலைப்பு மையங்கள் இல்லாதது அல்லது, கிராமப்புறங்களில் மிக அரிதாக இருப்பது,”
கடந்த 2015ஆம் ஆண்டில், இறந்து பிறந்தவற்றில், கருக்கலைப்புகள் 3% என்ற கணக்கில் உள்ளன; அதாவது, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS-4) படி 200,000 வழக்குகள். ஆண்டுக்கு 7,00,000 கருக்கலைப்புகள் நடத்தப்படுவதாக அரசு மதிப்பிடுகிறது. ஆனால், லான்செட் ஆய்வில், 2015ஆம் ஆண்டில், இந்தியாவில், 15 மில்லியன் கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கர்ப்பத்திலும், மூன்றில் ஒரு பங்கு கருக்கலைப்பை, கிட்டத்தட்ட பாதி பாதிக்கப்படாத நிலையில், இது கணக்கில் காட்டியது. அரசின் கருக்கலைப்பு எண்ணிக்கை குறைவாக இருந்ததா? கருத்தடை அணுகலுக்கு, புதிய மதிப்பீட்டின் பொருள் என்ன?
அரசு மற்றும் லான்சட் புள்ளி விவரங்கள், இரு தனித்தனி நடவடிக்கையை குறிக்கின்றன. 7,00,000 என்ற அரசின் கணக்கீடானது, மருத்துவ வசதிகளோடு நடந்த கருக்கலைப்புகளின் எண்ணிக்கை; 15 மில்லியன் என்பது, நாடு முழுவதும் நிகழ்ந்த கருக்கலைப்புகளின் எண்ணிக்கை. மருத்துவ வசதிக்கு வெளியே, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கருக்கலைப்புகள் நடப்பதை, லான்செட் ஆய்வு அதை தெளிவுபடுத்துகிறது.
இருப்பினும், கருக்கலைப்பு இன்னும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்; இச்சேவையை விரிவுபடுத்துவதற்கான தேவை உள்ளது என்பதை இரு புள்ளி விவரங்களும் உணர்த்துகின்றன.
பாலியல் குற்றங்களில் இருந்து சிறுமியரை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 2012, எவ்வாறு கருக்கலைப்பு சேவை அணுகலை பாதிக்கிறது?
மருத்துவரீதியில் கருக்கலைப்பு செய்யும் சட்டம் (எம்.டி.பி.)- 1971 என்பது, கருக்கலைப்பு சேவையை நிர்வகிப்பது தொடர்பானது; போக்சோ சட்டமோ, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை தடுக்கும் நோக்கம் கொண்டது.
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை, போஸ்கோ சட்டத்தின் கீழ், மருத்துவ சேவை வழங்குவோர் தெரிவிக்க வேண்டும்; அதேநேரம், எம்.டி.பி. சட்டமோ, சிறுமியர் கருவுற்றிருந்தால் அதை மருத்துவ சேவை வழங்குவோர் கலைக்க அனுமதி தருகிறது.இரு சட்டங்களுக்கு இடையே உள்ள முரண்பட்ட தேவைகளால், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சேவை வழங்குவோர் குழம்பிவிடுகின்றனர். கருக்கலைப்பு செய்வோர் விவரம் குறித்த ரகசியத்தை, எம்.டி.பி. சட்டம் பாதுகாக்கிறது. போஸ்கோ சட்டத்தில், அனைத்து கர்ப்பத்தையும், சேவை வழங்குவோர் தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். 18 வயதுக்கு கீழேயுள்ள பாலியல் உறவு, சம்மதமின்றி நடப்பதாக, இதில் கருதப்படுகிறது.
இக்குழப்பங்கள் தாமதத்தை ஏற்படுத்துகிறது; சில நேரங்களில் இளம்பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய மறுக்கப்படுகிறது.
24 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கும் எம்.டி.பி.2014 சட்ட திருத்தத்தை, சுகாதார அமைச்சகம் ஏன் திரும்பப்பெற்றது?
என் அறிவுக்கு எட்டியவரை, பெண்களுக்கும், விசேச பிரிவினருக்கும், 24 வாரங்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படும் உத்தேச எம்.டி.பி. சட்ட திருத்தம் இன்னமும் அமைச்சகத்தின் பரிசீலனையில் தன் உள்ளது.
கடந்த காலங்களில் நீதிமன்றங்களில் நடந்த வழக்குகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுமியர், தனித்துவிடப்பட்ட பெண்கள், வாழ்வதற்காக கருக்கலைப்புக்கு அணுகுகின்றனர். பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள், பல்வேறு காரணங்களுக்கு, தாமதமாகினர்.
இதேபோல் வாழ்க்கைக்கு பொருந்தாததும், கருச்சிதைவுகளும், 20 வாரங்களுக்கு பிறகே தீர்மானிக்க முடியும். கருவுறும் வயதை நீட்டிக்க முன்மொழியப்பட்ட திருத்தத்தை நிறைவேற்றுவது அவசியமாகிறது.
இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு கருக்கலைப்பு மட்டுமே, எம்.எம்.ஏ. (மருத்துவ முறையில் கருக்கலைப்பு) சட்டத்தின் கீழ், சுகாதார வசதியோடு நடக்கிறது; மற்றவை முறையற்ற வகையில், அங்கீகாரமில்லாத வழங்குனர்களால் வழங்கப்படுவதாக, 2017 லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது.பொது சுகாதார வசதிகள் கருக்கலைப்பு சேவைகளை வழங்குவது இல்லையா? மருத்துவ மேற்பார்வை இல்லாமல் எம்.எம்.ஏ. பாதுகாப்பற்றதா?
மருத்துவ மேற்பார்வை இல்லாமல் எம்.எம்.ஏ.வின் பாதுகாப்பை தீர்மானிக்க, போதிய உலகளாவிய அல்லது இந்திய ஆதாரங்கள் உள்ளன. மருத்துவ மேற்பார்வை இல்லாமல், பாரம்பரிய ஆக்கிரமிப்பு முறைகளை விட மிகவும் பாதுகாப்பானது; எம்.எம்.ஏ.-ன் பாதுகாப்பு பதிவை நிறுவ இன்னும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்பதை, எல்லா நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.
சமீபத்தில், உலக சுகாதார அமைப்பு (WHO) கருக்கலைப்பை பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்றதாக வரையறுக்கும் பாரம்பரிய வழியை மாற்றியது. இது தற்போது கருக்கலைப்பை பாதுகாப்பான, குறைவான பாதுகாப்பான மற்றும் குறைந்தபட்சம் பாதுகாப்பானது என்று வகைப்படுத்துகிறது.
பாதுகாப்பற்ற கருக்கலைப்பு என்பது, ”குறைந்த பாதுகாப்பானது”; ”குறைந்தபட்ச பாதுகாப்பு” என்பது எம்.எம்.ஏ (மருத்துவ முறையில் கருக்கலைப்பு) உறவினருக்கும் சுய பாதுகாப்பு உள்ளது. இந்திய சூழலுக்கு இது உகந்தது என்பதால், பெரும்பாலான பெண்கள் எம்.எம்.ஏ. முறையை பயன்படுத்துகின்றனர்.
லான்செட் ஆய்வின் முக்கிய பரிந்துரைகளில் ஒன்று, கருக்கலைப்பு செய்ய செவிலியர்கள், ஆயுஷ் (பாரம்பரிய உள்நாட்டு பயிற்சி) மருத்துவர்கள், பயிற்சி பெற்ற மருத்துவச்சிகளை அனுமதிக்கலாம் என்பது. அவ்வாறு செய்ய எந்த முயற்சியும் இல்லையா? இல்லையெனில், என்ன ஏற்பாடுகளால் அதை பின்னுக்கு தள்ள வேண்டும்?
பெண்களுக்கு பாதுகாப்பான, சட்டரீதியான கருக்கலைப்பு சேவைகள் அதிகளவில் கிடைக்க வேண்டும் என்பதை முதன்மையான இலக்காக, 2014 எம்.டி.பி. சட்டத்திருத்தம் கொண்டுள்ளது. இதன் பரிந்துரைகளில் ஒன்று, செவிலியர்கள், ஆயுஷ் (பாரம்பரிய உள்நாட்டு பயிற்சி) மருத்துவர்கள், பயிற்சி பெற்ற மருத்துவச்சிகளை, உரிய பயிற்சிக்கு பின், கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கலாம் என்பதாகும். கருக்கலைப்பு சேவையாளர் தளத்தின் அத்தகைய விரிவாக்கம், பாதுகாப்பான கருக்கலைப்பு முறையை மேம்படுத்தவும், எளிதில் அணுகவும் உதவும். முன்மொழியப்பட்ட திருத்தங்கள் கைவிடப்பட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. உண்மை நிலை என்னவென்று தெரியாத நிலையில், இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை.
கருக்கலைப்பு சட்டம், 1971 முதல் இருந்தாலும், அதன் பல அம்சங்கள் பொது மக்களுக்கு தெரியவில்லை. கருக்கலைப்பால் வழக்கு சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம், மருத்துவ சமுதாயத்தினர் மத்தியில் உள்ளது. எம்.டி.பி. சட்டத்தில் திருத்தங்கள் பற்றி அறியப்படாத அம்சங்களும் உள்ளன. இதில், கருக்கலைப்பு என்ற சொல்லில் இருந்து பாலினம் அறிதல் என்ற நோக்கத்தை எவ்வாறு பிரிக்கலாம்?
இதில், மேலும் விழிப்புணர்வு உருவாக்க வேண்டிய அவசியம். இந்தியாவில் பாலின தேர்வுக்கு 9% மட்டுமே கருக்கலைப்பு நடக்கும் நிலையில், பாலினத் தேர்வையும், கருக்கலைப்பையும் தனித்தனியே பிரிக்க வேண்டிய தேவை உள்ளது. இதை, சட்டத்துறை மற்றும் மருத்துவத்துறையினர் கட்டாயம் மதிப்பிட வேண்டும். கருக்கலைப்பு சட்டபூர்வமானது; பாலினத் தேர்வு சட்ட விரோதமானது என்பது தெளிவாக வலியுறுத்தப்பட வேண்டும்.
அண்மை வழக்காக மும்பையை சேர்ந்த பெண், திருமண சச்சரவு காரணமாக, 25 வாரங்கள் வளர்ந்த கருவை வேண்டுகோள் விடுத்தார். இவ்வழக்கில், ”கருக்கலைப்பு, கொலையாக கருதப்படும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. உங்கள் கருத்து என்ன?
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்காதது, கவலை அளிக்கக்கூடிய ஒன்று.
அதேநேரம், பெண்களின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டிய தேவையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களை மையமாகவும், முற்போக்கு தனமாகவும் கொண்டு, தீர்ப்பு அமையவில்லை.
கடந்த காலத்தில், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், சட்டத்தின் கீழ், 20 வார சட்ட வரம்புக்கு உட்பட்டு, விதிவிலக்குகளை தந்துள்ளன. சமீபத்திய தீர்ப்பானது, பெண்களின் இனப்பெருக்கம் மீதான ஆர்வம் மற்றும் உரிமைக்கான பெண்களின் அணுகலை மறுக்கிறது.
வருத்தமான விஷயம், தீர்ப்பில் கருக்கலைப்பு என்பது கொலைக்கு சமம் என்று கூறப்பட்டிருப்பது, அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவில் பெண்களின் உரிமைகள் பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான, 13 வயது சிறுமியின் 31 வார கருவை கலைக்க, அனுமதி தந்தது. அதே நேரம், சண்டிகரை சேர்ந்த சிறுமி வழக்கில், உயிருக்கு ஆபத்து என்பதால், அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தாய் சிறுவயது எனில், கருக்கலைப்பு செய்வதற்கான என்ன நெறிமுறைகள் இருக்க வேண்டும்? பாலியல் வன்கொடுமைக்கு கர்ப்பம் மட்டும் தான் தீர்வா?
ஒவ்வொரு வழக்கிற்கும், ஒரு தனி சூழல் உள்ளது; அதை மனதில் வைத்து கையாள வேண்டும். ஒவ்வொரு பெண்ணிற்கும் தனது பாலியல் தேவைகள் அல்லது இனப்பெருக்கத்திற்கான முழு உரிமையை, நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். பெண்ணின் சுகாதாரம் மற்றும் உரிமை குறித்து விவாதித்து, முடிவெடுப்பதன் மூலம், இதை அடைய முடியும்.
இந்தியாவில் 12.9% தேவையற்ற குடும்ப திட்டமிடல் என்பது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. இந்த எண்ணிக்கை, திருமணமாகாத பெண்களின் கருத்தடை தேவையை பூர்த்தி செய்யவில்லை. பள்ளிகளில் பாலியல் கல்வியை போதிப்பது தொடர்பாகவும் சர்ச்சைகள் உள்ளன. களங்கம் மற்றும் தவறான தகவல் கருத்தடை பயன்பாட்டை பாதித்து, கருக்கலைப்புக்கு வழிவகுக்கிறதா?
ஆமாம். நம் நாட்டில் கருத்தரிப்பு பயன்பாடு பாதிக்கும் பல தொன்மங்கள் மற்றும் தவறான விஷயங்கள் உள்ளன, இது, இளம் திருமணமாகாத பெண்கள் விஷயத்தில் பெரிதாக்கப்படுகிறது. இந்த தொன்மங்கள் மற்றும் தவறான கருத்துக்களை, விழிப்புணர்வு மூலம் அகற்ற வேண்டிய அவசியம். களங்கம் விளைவிக்கும் கருத்துக்களை புறந்தள்ளி, கருத்தடை முறைகள் பற்றி பேசுவதன் மூலம், இதை செய்ய முடியும்.
கருத்தடை பயன்பாடு மற்றும் பாதுகாப்பான பாலியல் நடைமுறைகளை அறிந்து கொள்ள, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் விரிவான பாலியல் கல்வி அறிமுகம் செய்வது அவசியம்.
(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)
திருத்தம்: இந்த நேர்முகத்தின் முந்தைய வெளியீட்டில் ஐ.பி.ஏ.(IPA) என்று தவறாக வெளியானதை, ஐ.டி.எப். (IDF) என்று திருத்திக் கொள்ளவும்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.