வேலை மாற்றத்தை ஏற்கத் தயாராகும் ராஜஸ்தானின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புதுடெல்லி:தினமும் காலை 7 மணிக்கு, 32 வயதான வாலா ராம் காமேதி, தெற்கு ராஜஸ்தானின் கோவியா கிராமத்தில் உள்ள தனது வீட்டிலில் இந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள சந்தைக்கு புறப்பட்டுச் செல்கிறார். வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ் மற்றும் சுண்டவைத்த சாஸ்கள் என - அன்றைய தயாரிப்புகளுக்கு அவர் ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்கிறார். காலை 9 மணியளவில், "இப்பகுதியில் முதல் சீன உணவுக் கடை" என்று அவர் கூறும் பாங்க்யாராணி சைனீஷ் கார்னர் கடையின் ஷட்டர்களை அவர் திறந்தார். தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, குஜராத்தில் உள்ள ஒரு துரித உணவு விடுதியில் சமையல்காரராக இருந்த வேலையை இழந்த அவர், மார்ச் மாதம் வீடு திரும்பிய பின்னர், இதை அமைத்தார்.
நாடாளுமன்றத்தில் அரசு சமர்ப்பித்த தரவுகளின்படி, தேசிய ஊரடங்கிற்கு பிறகு கிராமங்களுக்குத் திரும்பிய 1.05 கோடிபுலம்பெயர்ந்த தொழிலாளர்களில் காமேதியும் ஒருவர். அரை வருடத்திற்கு மேலாக நகரங்களில் இருந்துவிட்டு, ஊரடங்கு காலத்தில் நேர்மாறாக கிராமங்களுக்கு திரும்பிய புலம்பெயர்ந்ததொழிலாளர்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர்?
கோவிட்19 நெருக்கடியானது வாழ்வாதாரங்களை எவ்வாறு பாதித்தது என்பது குறித்த மூன்று பகுதித் தொடரில், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு தொழிலாளர்கள் எவ்வாறு பொருந்துகிறார்கள் என்பதை நாங்கள் ஆராயவுள்ளோம். தொடரின் இந்த முதல் பகுதியில், தெற்கு ராஜஸ்தானை மையமாகக் கொண்டு கிராமங்களில் தங்கியுள்ள தொழிலாளர்களை பார்க்கிறோம். முக்கியமாக கட்டுமானம், உற்பத்தி, தினசரி ஊதியம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஈடுபட்டுள்ள 13 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பியுள்ளதாக, அரசால் கூறப்படுகிறது. அடுத்ததாக, நகரங்களுக்குத் திரும்பிய தொழிலாளர்கள் குறித்து ஒடிசாவில் இருந்து செய்தி வழங்குவோம். தொடரின் இறுதிப்பகுதியில், உத்தரபிரதேசத்தில் தொற்றுநோயால் பெண்களின் வாழ்க்கை எவ்வாறு மாறிவிட்டது என்பதை காணவிருக்கிறோம்.
கிராமங்களுக்கு திரும்பி வந்து தங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள், மீண்டும் நகரங்களுக்குச் செல்ல காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை அங்கு அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. தீபாவளிக்குப் பிறகு நிலைமை மாறும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது, இந்தியா ஸ்பெண்ட்பல நேர்காணல் செய்ததில் தெரியவருகிறது. கொரோனா வைரஸ் பற்றி தாங்கள் இன்னும் பயப்படுவதாக, சிலர் சொன்னார்கள். எனவே அவர்கள் திரும்பிச் செல்ல விரும்பவில்லை, மாறாக வீட்டிலேயே தங்கள் வாழ்வாதாரத்தை தேட முற்படுகிறார்கள். இது நீண்ட காலத்திற்கு வேலையின் தன்மையை எவ்வாறு மாற்றும் என்பதை பகுப்பாய்வு செய்வது என்பது மிக அவசரகதி என்று இருந்தாலும், இதில் இரண்டு போக்குகள் தெளிவாக உள்ளன: தொழிலாளர்கள் தங்கள் வர்த்தகத்தை விரக்தியில் இருந்து மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், சிலர் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டனர்; திரும்பி வந்த புலம்பெயர்ந்தோர் நகரங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய சேவைகளை கிராமப்புறங்களில் வழங்க, சிறு நிறுவனங்களை அமைத்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீடு திரும்பிய 426 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஆய்வு செய்வதற்காக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தெற்கு ராஜஸ்தானில் ஐந்து மாவட்டங்களுக்கு பயணம் செய்த அஜீவிகா பணியகத்தின்இதுவரை வெளியிடப்படாத ஆய்வில், தொழிலாளர்கள் பல பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பலருக்கு பெரிய குடும்பங்கள் இருந்தன, ஆனால் ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு மட்டுமே ஊதியத்துடன் வேலைவாய்ப்பை பெற்றிருந்தார். ஊரடங்கால் தொழிலாளர்கள் வேலையற்றவர்களாகவும் பணமில்லாமலும் இருந்தனர், பலருக்கு அவர்களின் கடைசி ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.
ஏப்ரல் இறுதிக்குள், 57% தொழிலாளர்கள், தங்களிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறினர்; 22% அவர்கள் தங்களது கடைசி கையிருப்பான ரூ .100-500 வரையும் கரைத்துவிட்டதாக கூறினர், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட கடன்களை பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். ஊரடங்கு காலத்தில் உணவு மற்றும் ரேஷன் போன்ற எந்த உதவியும் தங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என்று சுமார் 38% பேர் தெரிவித்தனர். தற்போது வழக்கமான வேலைகள் மற்றும் அரசு ஆதரவு குறைவாக இருப்பதால், 69% தொழிலாளர்கள் தாங்கள் வேலைக்கு நகரங்களுக்கு திரும்ப விரும்புவதாகக் கூறியதை, கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.
"நீண்ட காலமாக வேலை கிடைக்காதது தொழிலாளியிடம் இருந்து கிடைக்கக்கூடிய வளங்களைக் குறைக்கும், இது இறுதியில் அவர்களின் திறனை பேசும் ஆற்றலையும் இயக்கத்தையும் பாதிக்கும்" என்று ஆய்வு கணித்துள்ளது, மேலும், “வளங்கள் இல்லாத நிலையில், தொழிலாளர்கள் நகரத்திற்குத் திரும்பவோ அல்லது அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்கவோ கடன் வலையில் சிக்கிக்கொள்ளவோ முடியாது. இது தொழிலாளர்களின் திறன் பேசும் சக்தியை மிகவும் பாதிக்கும், அவர்கள் தகுதியை விட குறைவான ஊதியத்தை ஏற்றுக்கொள்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நகர வாழ்க்கை கடினமானது’
காமேதி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வாபியில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, உணவகம் மூடப்பட்டது, அவருக்கு ஒரு மாதத்திற்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அவருடன் பணிபுரிந்த தனது இரண்டு சகோதரர்களுடன் தனது கிராமத்திற்கு திரும்பிச் சென்றார். அவர்கள் ராஜஸ்தான் எல்லைக்கு ஒரு பஸ்ஸை பிடித்து, இரண்டு நாட்களுக்கு பிறகு தங்களது கிராமமான கோவியாவுக்கு நடந்து சென்றார்கள். ஜூன் மாதத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், அவரது சகோதரர்கள் வாபிக்குத் திரும்பினர், ஆனால் அவருக்கு நகர வாழ்க்கை இனி போதும் என்ற முடிவுக்கு வந்தார்.
"நகரம் மிகவும் கடினமாக இருந்தது," என்று காமேதி கூறினார், இப்போது அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் அவரது பெற்றோருடன் வீட்டில் இருக்கிறார். “எனது முதலாளி எனக்கு ஊதியத்தை அதிகரிக்க மறுத்துவிட்டார். நான் என் குடும்பத்தைப் பற்றி கவலைப்படுகிறேன். நான் இங்கே இருப்பதே பாதுகாப்பானது என்று உணர்கிறேன், நோய்வாய்ப்படும் வாய்ப்பு குறைவு” என்றார். ஆகஸ்ட் மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஆதரிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பான அஜீவிகா பணியகத்தின் உதவியுடன், உணவுக்கடையை அவர் திறந்தார். அவர் வாபியில் இருந்த போது, மாதத்திற்கு ரூ.13,000 சம்பாதித்தார், அதே நேரம் அவர் திறந்துள்ள சைனீஷ் ஸ்டால், நாளொன்றுக்கு ரூ .1,000 மற்றும் வேறு சிலநாட்களில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வருவாய் ஈட்டுகிறது - இது மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. தவிர, அவர் தனக்காக சுயதொழில் செய்வதையே விரும்புகிறார். "மயின் ஹைலெவல் சைனிஷ் பனதானா ஹுன்[நான் சிறந்த தரமான சீன உணவை உருவாக்குகிறேன்]," என்று அவர் கூறினார்.
பழங்குடி மண்டலத்தில் வரும் காமெட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பாரம்பரியமாக இந்தியா முழுவதும், பெரும்பாலும் குஜராத்தில், சமையல் தொடர்பான வேலையில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு ராஜஸ்தான்-குஜராத் புலம்பெயர்வு மண்டலமானது மூன்று துறை தொழிலாளர்களுக்கு பணியை வழங்குகிறது: கட்டுமானம், ஜவுளி மற்றும் சிறிய ஹோட்டல் மற்றும் உணவகங்கள். தெற்கு ராஜஸ்தானின் ஆதிவாசி சமூகம் குஜராத்தில் "பெரும் சுரண்டலுக்கு" உட்பட்டது என்று 2018 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வுக் கட்டுரைகண்டறிந்துள்ளது, அங்கு முதலாளிகள் அவர்களது வரலாற்று ரீதியாக குறைந்த சமூக-பொருளாதார நிலைமைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அவர்களுக்கு வேலைகள் இருந்தாலும் கூட, இது சமூகத்தின் பின்தங்கிய நிலையை தலைமுறைகளாக நிலைநிறுத்துகிறது.
ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து மே மாத இறுதி அரை 13 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் உதய்பூர், துங்கர்பூர், சிரோஹி, ஜலூர், நாகவுர் , பார்மர் மற்றும் பிகானேர் மாவட்டங்களுக்கு திரும்பியதாக, ராஜஸ்தான் அரசின் தொழிலாளர் வேலைவாய்ப்பு பரிமாற்ற இணையதளம் தெரிவிக்கிறது.
வர்த்தகத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் ஏற்பட்டது
ஊரடங்கிற்கு பிறகு, அந்த பிராந்தியத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருந்தனர் அல்லது அவர்கள் கிடைத்த வேலையை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். பலர் முன்பை விட நகரங்களை இப்போது எதிரி போலக் கண்டனர்.
காமோதியின் கோவியா கிராமத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாத அஜய்புராவை சேர்ந்த 33 வயது பார்த்தா ராம், ஹோட்டல் மற்றும் உணவகங்களில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது ராம், தனது கிராமத்தைச் சேர்ந்த 35 பேருடன் கிழக்கு குஜராத்தின் சோட்டா உதய்பூரில் உள்ள ஒரு பள்ளியில், சமையல்காரராக பணி புரிந்தார். ஊரடங்கின் போது வீட்டிற்கு திரும்பியதால் அவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, அதன் பிறகு எந்தவிதமான நிலையான வேலையும் கிடைக்கவில்லை. தொற்றுநோய்க்கு முன்னர் தனது விவசாய தோட்டத்தில் குழாய் அமைப்பதற்காக, தனது சேமிப்பு ரூ .2.5 லட்சம் முதலீடு செய்ததாக அவர் கூறினார். எந்தவிதமான சேமிப்பும் இல்லை, எந்த வேலையும் வரவில்லை என்பதால், அவர் தனது அன்றாட செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின்கீழ் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்) மற்றும் தனியார் கட்டுமானத்தளங்களில் ஒரு நாளைக்கு ரூ .100 முதல் 200 வரை சம்பாதித்தார், இது ராஜஸ்தானில் திறமை குறைந்த தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய விகிதமான ரூ.225 ஐவிட குறைவாக உள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நூறு நாள் வேலை திட்டத்தில் பயன் பெற்ற 6 கோடி குடும்பங்களில் 65.7 லட்சம் குடும்பங்கள் ராஜஸ்தானில் உள்ளன. உத்தரபிரதேசத்தின் 8 மில்லியன் குடும்பங்களுக்கு பிறகு இது இரண்டாவது முறைதாகும். செயல்படுத்துவதில் இடைவெளிகள் இருந்தன, செலுத்தப்பட்ட ஊதியங்கள் தினசரி ஊதிய விதிமுறைக்குக் கீழே இருந்தன, பணிகள் நிறுத்தப்பட்டன, மேற்பார்வையாளர்கள் பொருள் மற்றும் பணத்தை செலுத்தினர் என்று தொழிலாளர் உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சினைகள் நாடு முழுவதும் குறிப்பிடப்பட்டுஉள்ளன.
"ஊரடங்குக்கு பிந்தைய காலத்தில் நூறு நாள் வேலை உத்தரவாத திட்டம் ஒரு உறிஞ்சியாக உள்ளது," என்று ராஜஸ்தானில் நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்தின் மாநில ஆணையர் பி.சி. கிஷன் கூறினார். "இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாளைக்கு 54 லட்சம் நபர்களை நாங்கள் வேலைக்கு அமர்த்தியுள்ளோம், இது கடந்த ஆண்டு கோடையின் உச்ச மாதங்களில் 30 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டுக்கான 30 கோடி நபர்களுக்கான நாட்களுக்கு அரசு தனது பட்ஜெட்டை 37 கோடியாக திருத்தி உள்ளது. இடம்பெயர்வு தொடங்கியுள்ள நிலையில், ஒருசில துறைகளில் ஒருசில பிரிவு மக்கள் மட்டுமே இன்னமும் வறுமையின் விளிம்பில் இருப்பதால், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்திற்கு அதிக தேவையை எதிர்பார்க்கிறோம். நாங்கள் மீண்டும் பட்ஜெட்டை 40 கோடி நபர்களுக்கேற்ப நாட்களுக்கு திருத்துவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நூறு நாள் வேலை உத்தரவாதத் திட்ட பணிகள் குறைந்து வருவதால் நிலைமை மோசமடைந்து வருவதாக அஜீவிகா பணியகத்தின் அறிவு மற்றும் திட்ட ஆதரவு நிர்வாகி சலோனி முந்த்ரா கூறினார்: "ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொழிலாளர்கள் திரும்பியபோது, அவர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் வெறுங்கையுடன் வந்தனர். சிலர் நூறுநாள் வேலை உத்தரவாத திட்டத்தின் கீழும், மற்றும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் உள்ளூர் அளவிலான வேலையை கண்டனர். ஆனால் ஆகஸ்ட் முதல் அந்த வேலை குறைந்துவிட்டது” என்றார். ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் தொழிலை விரக்தியில் மாற்றியுள்ளனர் என்றார் - அதாவது ஜவுளி அல்லது ஹோட்டல்களில் பணிபுரிபவர்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், மற்ற துறைகள் மந்த கதியிலிருக்கும் போது ஓரளவு பணி கட்டுமானத்துறையில் தான் உள்ளது.
இத்தகைய மாற்றம் நாடு முழுவதும் கவனிக்கப்பட்டுள்ளது. மும்பை பெருநகர பிராந்தியத்தில் இளைஞர் ஒற்றுமை மற்றும் தன்னார்வல நடவடிக்கை(YUVA) என்ற அரசு சாரா அமைப்பால் நடத்தப்பட்ட நகர்ப்புற ஏழைகள் மீதான கோவிட் -19 இன் தாக்கம் குறித்த அறிக்கை, “சில திறமையான தொழிலாளர்கள், சம்பாதிப்பதர்காக மற்ற திறன்குறைந்த வேலைகளுக்கு மாறுவதாக கண்டறியந்தது. தங்கள் கிராமங்களுக்கு மீண்டும் விவசாயத்திற்கு சென்றவர்கள் மீண்டும் அவ்வாறு செல்ல முடியவில்லை என்று தெரிவித்தனர். இத்தகைய சூழ்நிலைகளில் அரசு வழங்கிய நலத்திட்டங்களை சார்ந்திருப்பது அதிகம்”என்றது.
வருமான இழப்பால் தொழிலாளர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது என்று யுவாவின் இணை இயக்குநர் மெரினா ஜோசப் கூறினார். "பிளம்பிங் அல்லது எலக்ட்ரீஷியன் போன்ற கட்டுமானம் துறையில் திறமையாக வேலை செய்தவர்கள் பாரம் தூக்குதல் மற்றும் சுமை ஏற்றுதல் போன்றவற்றை நோக்கி நகர்ந்திருப்பார்கள்," என்று அவர் கூறினார், "பலர் தெரு வியாபாரிகளாக மாறிவிட்டனர்" என்றார்.
"குஜராத்தில் வைரம் வெட்டும் தொழிலில் ராஜஸ்தானில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பணி புரிகின்றனர்; இவர்கள் திறமையான தொழிலாளர்கள், நல்ல ஊதியம் பெறுகிறார்கள்; இப்போது [அவர்கள்] ஒருநாளைக்கு சில நூறு ரூபாய் சம்பாதிக்க சுமை ஏற்றி இறக்குதல் போன்ற திறன் குறைந்த வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்”என்று தொழிலாளர் ஆராய்ச்சி மற்றும் செயல் மையத்தின்கள அலுவலர் மதன் வைஷ்ணவ் கூறினார்.
கேரளாவில் உள்ள மேம்பாட்டு ஆய்வுகள் மையத்தில்இடம்பெயர்வு குறித்த நிபுணர் எஸ்.உருதயா ராஜன் கூறினார்: "தீபாவளி நெருங்கி வருவதால், கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவது எங்களுக்கு மிகவும் சவாலானதாக மாறும், ஏனெனில் பண்டிகை காலங்களில் மக்கள் செலவழிக்க பணத்தை கடனாக பெறுகிறார்கள்". இந்த நெருக்கடியை அரசு அங்கீகரிக்க வேண்டும் மற்றும் வேலை இழந்தவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும். இதனால் தொழிலாளர்கள் உடனடியாக நகரங்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இல்லை, அங்கு அவர்கள் பொருளாதாரத்தின் நிலை காரணமாக சுரண்டலை எதிர்கொள்ள நேரிடும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழுக்கள் ஒன்றிணைந்த கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவது அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் சேவைகளை மேம்படுத்துவதற்கும் ஒரு வழியாகும், ஏனெனில் அது பெரும்பாலும் வளர்ச்சி பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைசெய்துள்ளனர்.
ஆகஸ்டில், குஜராத்தின் துறைமுக நகரமான முந்த்ராவில் அஜய்புராவைச் சேர்ந்த சமையல்காரரான ராமுக்கு வேலை வழங்கப்பட்டது. அவர் தனது கிராமத்தைச் சேர்ந்த 27 ஆண்களுடன் அங்கு சென்றபோது, ஒப்பந்தக்காரர் அவர்களை தவறாக வழிநடத்தியதை அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களுக்கு ஒரு பாத்திரத் தொழிற்சாலையில் வேலை செய்வதாக உறுதியளிக்கப்பட்டு இருந்தது, ஆனால் அங்கு சென்றதும் அது இரும்பு குழாய் தயாரிப்பு தொழிற்சாலை என்பதை கண்டறிந்தனர். குழாய்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் 12 மணி நேர ஷிப்டுகளில் அவர்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. "இந்த வேலைக்கு நாங்கள் பயிற்சி பெறவில்லை, ஒவ்வொரு குழாயும் கிட்டத்தட்ட 50 கிலோவாக இருந்தது" என்று ராம் கூறினார். மேலும், “என் உடல் நொடிந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். நாங்கள் மூன்று நாட்களில் எங்கள் கிராமத்திற்கு திரும்பினோம்” என்றார். தொற்றுநோய் வருவதற்கு முன்பு ஏற்றி இறக்கும் பணிகளுக்கும், அபாயகரமானதாகக் கருதப்படும் பணிகளும் பெரும்பாலும் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்தவர்களால் கையாளப்பட்டன.
ராம் இப்போது தனது கிராமத்தில் திரும்பி வந்து, தனது வயலில் மக்காச்சோளம் பயிரிடுகிறார். நிலப்பரப்பு கடினமானது மற்றும் பாறை மற்றும் சாகுபடி செய்வது கடினம். ஆறு பேரைக் கொண்ட அவரது குடும்பத்தைத் தக்கவைக்க அவரது ஒரு பெரிய(0.25 ஹெக்டேர்) நிலம் போதாது. ஆனால் இந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறித்த எந்த பயமும் இல்லை, ராம் நகரத்தில் போலல்லாமல் கூறினார். "இப்பகுதியில் உள்ள மலைகள் வைரஸை விலக்கி வைக்கின்றன," என்று அவர் வலியுறுத்தினார்.
நிச்சயமற்ற தன்மை நீடிக்கும்போது இங்குள்ள பொருளாதார நெருக்கடி, உயிர்வாழ்வியலுக்கு சிக்கலான ஒன்றாகும். எனவே, ராம் மீண்டும் நகரத்திற்கு சென்று புதிய வேலைகளை தேடுவதை விரும்பவில்லை, தீபாவளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும், அதனால் ஒரு பள்ளி கேண்டீனில் தனது சமையல் வேலைக்கு திரும்பி வர முடியும் என்று நம்பினார்.
புதிய திறன்களைக் கற்றல்
இவை அனைத்திற்கும் மத்தியில் மீளும் திறனுக்கான அறிகுறிகளும் உள்ளன. சில தொழிலாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது தங்கள் சொந்த முயற்சியால் ஆதரிக்கப்படுகிறார்கள், கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு தங்கள் திறன்களை மேம்படுத்த முயற்சிக்கின்றனர்.
அஜீவிகா பணியகத்தின் பயிற்சியாளரான லோகேஷ் கோர்வால், அவர்களது வாழ்வாதார திட்டத்தில் பணிபுரிகிறார், கிராமப்புற ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கிராமங்களில் கடைகளை அமைக்க உதவும் வகையில், மொபைல் போன்களை சரிசெய்ய பயிற்சி அளித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த பட்டறைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார். "இந்த நெருக்கடியில் இருந்து இந்த பயிற்சிப் பட்டறையில் எங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது, ஒவ்வொரு அணியும் நிரம்பியுள்ளது" என்று கோர்வால் கூறினார். "கிராமத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மொபைல்போன் உள்ளது, ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் மொபைல் பழுதுபார்க்கும் கடை இல்லை, அவர்கள் அனைவரும் அதற்காக வெகுதூரம் பயணிக்க வேண்டும்" என்றார்.
செப்டம்பர் பிற்பகுதியில் ஒரு வாரநாளின் பிற்பகலில், அவர்களை இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்டபோது, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஆண்கள் இரண்டு வாரங்களாக பயிற்சியில் கலந்துகொண்டு ஒரு தேர்வுக்குத் தயாராகி வந்தனர்.
மொபைல் ஃபோனின் மதர்போர்டை எவ்வாறு சரிசெய்வது என்று கற்றுக் கொண்டிருந்த 20 வயதான மகேந்திர தோடியா, பயிற்சிப் பட்டறையில் படிப்பதற்கும் பயிற்சி செய்வதற்கும் நிறைய அழுத்தம் உள்ளது என்றார். ஊரடங்கின் போது வீடு திரும்புவதற்கு முன்பு இரண்டு மாதங்களாக சிக்கித் தவித்த தோடியா, புனேவில் ஒரு தேநீர் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே கிராமச்சந்தையில் ஒரு பிஸியான இடத்தை தேர்வு செய்து அங்கு கடை அமைப்பது பற்றி யோசித்து வந்தார்.
ஒரு மொபைல் பழுதுபார்க்கும் கடையில் இருந்து ஒரு நாளைக்கு ரூ.1,000 முதல் ரூ .2,000 வரை சம்பாதிக்க முடியும் என்று கோர்வால் கூறினார், இது நகரத்தில் பயிற்சியாளர்கள் சம்பாதிக்கும் ஊதியத்தை விட அதிகம் என்று கூறினார். இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்பு மற்றும் வீடுகளுக்கான மின் வயரிங் (கிராமங்களில் சிறு நிறுவனங்களை அமைப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய திறன்கள்) ஆகியவற்றுக்கான பயிற்சிப்பட்டறைகளும் முழுமையாக இயங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
(குமார், டெல்லியை சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர். அவர் சமூக நீதி மற்றும் பாலினம் குறித்து எழுதி வருகிறார்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.