டெல்லிக்கு தேவை புதிய நெடுஞ்சாலை அல்ல; துரித போக்குவரத்து வசதி; வாகன நெரிசல், மாசை குறைக்கும் சைக்கிள் மற்றும் நடைபாதைகள்
பாஸ்டன்: டெல்லி கடந்த மாதம் குறைந்தபட்சம் இரண்டு புதிய சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது - அவை, 170 கி.மீ. சஹரன்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் 27.6 கி.மீ. நீள வடக்கு பெரிபெரல் சாலை அல்லது துவாரகா எக்ஸ்பிரஸ்வே - போக்குவரத்தை எளிதாக்கவும், நேர சேமிப்பு, போக்குவரத்தில் சிக்கி கார்கள் மாசு புகை உமிழ்வதை குறைப்பதற்கு இது உறுதியளித்தது.
உலகம் முழுவதுமே பெரு நகரங்களில் வாகன நெரிசலை குறைக்க பெரிய சாலைகள் மற்றும் வளைந்து நெளிந்த மேம்பாலங்களை ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் நாம் கார்களுக்கு மேலும் இடத்தை உருவாக்கும்போது அந்த புதிய இடத்திலும் போக்குவரத்து அதிகரிக்கிறது - இதனால் பயண நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை; இன்னும் மோசமாகி "தூண்டப்பட்ட கோரிக்கை" என்ற நிகழ்வாக அறியப்படுகிறது. மேலும் நடைபாதைகளு கூட ஒரு தற்காலிக வேகமான பாதையை உருவாக்குகிறது. ஆனால் இது பயணத்தை “எளிமை” ஆக்குகிறது; அதிக பயணங்கள் ஏற்படுகிறது அல்லது பிற சாலைகளில் இருந்து பயணத்தைத் திசை திருப்புகிறது; நெரிசல் எப்போதும் மோசமாகவே உள்ளது.
கிட்டத்தட்ட இதற்கு ஆட்டோமொபைல்ஸ் சுற்றிலும் உதாரணங்கள் உள்ளன. நியூயார்க் நகரின் டிரிபோரப் பாலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 1936ஆம் ஆண்டு இது திறக்கப்படும் முன்பு வரை, வாகன நெரிசலை இப்பாலம் பாதியாக குறைக்கும் என்று அதிகாரிகள் நம்பியிருந்ததாக, ராபர்ட் கேரோவின் 1977 நகர்ப்புற திட்டமிடுபவரான ராபர்ட் மோசேவின் வாழ்க்கை வரலாறு நூல் தெரிவிக்கிறது. ஆனால், டிரிபோரப் பாலம் திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உள்ளூர் செய்தித்தாள், இதை “நாட்டை குறுக்கிடும் போக்குவரத்து நெரிசல்” என்று இதை வர்ணித்தது.
சீனாவின் 50 வழிச்சாலை கூட அங்கு வாகன நெரிசலை குறைக்கவில்லை; 2010ஆம் ஆண்டில் அங்கு 12 நாட்களுக்கு போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டிருந்தது.
உந்தப்பட்ட கோரிக்கைகளின் விளைவுகள் வேறுபடுகின்றன. ஆனால் 1983 மற்றும் 2003 ஆண்டுகளுக்கு இடையே அமெரிக்க நகரங்களை, டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பொருளியல் வல்லுநர்கள் கில்லஸ் டாரன்டன் மற்றும் மத்தேயு டர்னர் ஆகியோரால் பகுப்பாய்வு செய்து, சாலைகளை கொண்டு போக்குவரத்து எண்ணிக்கையை கணக்கிட்டனர்.
டெல்லியும் அதேபோல் பொறியில் விழுந்து விட்டது. அமைச்சகத்தின் கீழ் வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நகர்ப்புற மேம்பாட்டு உயர் ஆணையம் 2016, "சாலை அமைப்புகள் மற்றும் சாலை மேற்பரப்பு நீளத்தை அதிகரித்து வந்த போதும் போக்குவரத்து நெரிசலும் அதற்கேற்ப அதிகரித்து வருகிறது" என்ற குறிப்பை தெரிவித்தது. இன்னனும் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய, டெல்லி கொள்கை வகுப்பாளர்கள் புதிய திட்டங்களை அறிவிக்கும் போது, அதே தவற்றை மீண்டும் செய்கின்றனர்.
போக்குவரத்து என்பது ஒரு தொல்லையைவிட அதிகமாக உள்ளது. சில மதிப்பீடுகளின்படி, டெல்லியின் அபாயகரமான துகள்களில் 30% வரை போக்குவரத்து தொடர்பானது; வாகனங்கள் மூன்றில் ஒரு பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவதற்கு காரணம் என்று, அரசின் 2016 உமிழ்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி நகரின் போக்குவரத்து நெரிசல் 12 மணி நேர கால அளவிற்கு "உச்சத்தில்” இருக்கிறது - அது ஒருபோதும் முடிவடையாத ஒரு அவசரகால நேரம் என்று, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 2017 பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
டெல்லியின் மக்கள் தொகை மேலும் 1.1 கோடி சேர்ந்து, வரும் 2028 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய நகரமாக டெல்லி மாறும் என, ஐக்கிய நாடுகள் தரவுகளை பகுப்பாய்வு செய்த பொது போக்குவரத்து சர்வதேச கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அவர்களுக்காக மேலும் சாலை உள்ளிட்டவற்றை அமைக்க முயற்சித்தால், நகரம் மேலும் புகை மற்றும் நச்சுவை எதிர்கொள்ள நேரிடும்.
அதற்கு பதிலாக டெல்லியின் கொள்கை வகுப்பாளர்கள் மிகவும் திறமையான, தூய்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து அமைப்பு பற்றி தீவிரமாக இருந்தால், வரும் ஆண்டுகளில் அது, பல லட்சம் கூடுதல் மக்களுக்கு இடமளித்து, அவர்களை விரும்பங்களை இருக்கும்.
பேருந்து, மிதிவண்டிகள், பாதசாரிகளுக்கான பாதைகள் சுதந்திரமாக, மாசுபாட்டைக் குறைக்க உதவும்
பேருந்துகளுக்கென தனிப்பாதை அளித்தல் அல்லது துரித பேருந்து போக்குவரத்து வழித்தடம் (டெல்லியின் கடந்தகால பாடங்களை கணக்கில் கொள்ள வேண்டும்) திறமையானது தான்; விலையுயர்ந்த குவியல்களை தவிர்த்து, ஓரளவு வாகனங்களைக் கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த அளவில் குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிகமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. மேலும் பேருந்துகளை வாங்க வேண்டும் என்ற டெல்லியின் தற்போதைய திட்டம் ஒரு நல்ல தொடக்கமாகும். ஆனால் பல பேருந்துகளிய சாத்தியமான வாய்ப்பாக மாற்றுவதற்கு இது மேலும் விரிவாக்கப்பட வேண்டும்.
ஒரு பழமைவாத மதிப்பீடாக, தற்போது பைக் பாதையில் காருடன் ஒப்பிடும் போது ஒருமணி நேரத்தில் மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமான மக்கள் செல்ல முடியும்; மேலும் புதிய மின்சார பைக் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்வதால் இது இன்னும் திறமையானதாக மாறும்.
டெல்லியின் நடைபாதைகளில் மக்களை மேலும் கொண்டு வரலாம்; ஆனால், டெல்லி நடைபாதைகளில் பாதிக்கும் மேற்பட்டவை தடை செய்யப்பட்டவை; இதனால் தெருக்களில் நடைபாதைவாசிகள் தள்ளப்படுவதாக, போக்குவரத்து காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இருசக்கர வாகன மற்றும் பாதசாரிக்கான உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்வது, டெல்லி மக்களுக்கு குறைந்தபட்சம் மாசுபடுதலை வழங்கி , மேலும் சுதந்திரமாக செல்லுவதற்கும், பயணங்களை குறைவாக செலுத்துவதற்கும் அனுமதிக்கும்.
இறுதியாக, டெல்லி அரசு சாலைகளை அணுகுவதற்கான தொகையை அதிகரிக்கலாம்; இது, உண்மையில் கார் தேவையென்றால் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்று மக்களை ஊக்கப்படுத்தக்கூடும்.
உயர் தொழில் வாகன தேவைகள் - நெருக்கடியால் துஷ்பிரயோகம் செய்தாலும்- உண்மையில் ஜகார்த்தா, இந்தோனேசியாவில் நெரிசல் குறைக்க உதவியது என, ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் கொள்கை வடிவமைப்பிற்கான ஆதாரங்களின் இணை இயக்குநர் ரேமா ஹன்னா மற்றும் எம்ஐடி இணை ஆசிரியர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. மற்றொரு பகுப்பாய்வு, லண்டனின் நெரிசல் புகார்கள் 30% குறைந்ததாக கூறுகிறது. ஓஸ்லோ மற்றும் மாட்ரிட் போன்ற சில நகரங்கள், நகர்ப்புறங்களில் இருந்து கார்கள் வெளியேற்றவும், வீதிகளை மக்களுக்கு திருப்பி விடவும் கூட முயற்சி செய்கின்றன.
கடந்த 1939 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் புதிய நெடுஞ்சாலையில் கார்கள் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதை பார்த்த நகர அதிகாரிகள் "அந்த கார்கள் எங்கிருந்து வருகின்றன என்று புரியவில்லை" என்றதாக, ராபர்ட் மோசஸ் வாழ்க்கை வரலாறு நூலில் கூறப்பட்டுள்ளது. நெரிசலை குறைக்க அமைக்கப்பட்ட சாலைகள், “எப்போதும் போல் நெரிசலாகவே” இருந்தன. 80 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் செய்த பிழை, சோதனை மற்றும் ஆராய்ச்சிகள், டெல்லியில் நெரிசல் ஏற்படுவதற்கான பல வாய்ப்புகளாக உள்ளன.
(சுதர், ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் கொள்கை வடிவமைப்புக்கான சான்றுகள் துறை மூத்த திட்ட மேலாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.