'மீ-டூ என்பது எதிர்ப்பு இயக்கம்; எப்போதும் நடவடிக்கையை முன்னெடுக்காது’
புதுடெல்லி: பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் குறைப்பு) சட்டம், 2013 ஏப்ரல் மாதம் கொண்டு வரப்படும் முன், 1997 ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்றத்தால் விசாகா குழு வழிகாட்டல்கள் நிறைவேற்றப்பட்டன. விஷாகா குழு முதல்முறை பாலியல் துன்புறுத்தலை மட்டும் வரையறுக்கவில்லை; பணியிடத்தில் பெண் பணியாளர்கள் முன்னிலையில் பாலியல் கருத்துகளை கூறி வெளிப்படை கருத்துகளால் தாக்குவதும் குற்றமாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 1979இல் ஐ.நா.வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளை நீக்கும் மாநாடு (CEDAW) போன்ற பன்முக மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளைப் பொறுத்து, பாலியல் துன்புறுத்தலை தடுக்க அல்லது தடை செய்ய முதலாளிகள் மீது பொறுப்பு ஏற்படுவதுடன் புகாரை கையாள, தீர்ப்பதற்கான செயல்முறையை உண்டாக்குகிறது.
வேலை மற்றும் அதற்கான வாய்ப்புக்கும், பணியிடத்திலும், பெண்கள் சமஉரிமை உள்ள குடிமக்கள் என்பதை விசாகா குழு ஏற்றுக் கொண்டுள்ளது. "எந்தவொரு தொழில், வர்த்தகம் அல்லது வணிகத்தை தொடருவதற்கான அடிப்படை உரிமை, ஒரு 'பாதுகாப்பான' உழைப்பு சூழல் பெறுதலை பொறுத்தது. வாழ்க்கையில் உரிமை என்பது கண்ணியத்தோடு வாழ்வது, " என்று, நீதிபதிகள் சுஜாதா வி. மனோகர், பி.என். கிருபால் மற்றும் காலஞ்ச்சென்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. 2012 டிசம்பர் மாதம் டெல்லியில் பிசியோதெரபி மாணவி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிற்கு பிறகு, அதுதொடர்பான சட்ட மாற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான குழுவுக்கு தலைமை வகித்தது.
விசாகா குழு பரிந்துரைகள் வந்து 22 ஆண்டுகள் ஆன நிலையில், பணியிட பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க சட்டம் வந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையில், இந்தியாவின் மீ-டு இயக்கத்தின் வெளிச்சத்தில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் சில முக்கியமான பிரச்சினைகள் என்ன? சட்டம் இயங்குகிறதா அல்லது தொடர்ச்சியான பிரச்சனைகள் பற்றி பேசுவது போதுமானதா? நீதிபதி பாத்திமா பீவிக்கு பிறகு உச்ச நீதிமன்ற இரண்டாவது பெண் நீதிபதி என்ற சிறப்பை பெற்ற நீதிபதி சுஜாதா வி. மனோகரன், இந்தியா ஸ்பெண்டிடம் பேசினார்:
இந்தியாவில் சமீபத்திய மாதங்களில், பாலியல் சீண்டல்கள் அல்லது வன்கொடுமை செய்த ஆண்களின் பெயரை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடும் மீ-டூ என்ற இயக்கம் காணப்படுகிறதே. இந்த போக்கு எப்படி இருக்கும்?
மீ-டு என்பது ஒரு சமூக இயக்கம்; இது சட்டபூர்வ இயக்கம் அல்ல. கடந்த காலங்களில் பெண்கள் என்ன செய்யக்கூடாது என்பது இப்போது குறைந்தபட்சம் புகார் அளிப்பது என்ற வகையில் சாத்தியமாகும் என்று இது காட்டுகிறது. ஏனெனில் சமூக அழுத்தம் மற்றும் களங்கம் ஆகிய காரணங்கள். அந்தளவுக்கு இது அதிகாரத்தின் அடையாளமாகும். இது ஒருவழி பாதையாகத் தான் பார்க்கப்பட்டது. இரண்டாவது அம்சம், கடந்த கால பெண்களின் ஒரு பகுதியாக, பதவியில் இருக்கும் ஆண்களால் அவர்கள் துன்புறுத்தப்பட்டது; தற்போது அவமானங்களை துடைக்க, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.
ஆனால், இதை சட்டபூர்வ இயக்கமாக நீங்கள் பார்க்க முடியாது. இதில் புகாருக்கு ஆளானவர் மீது எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க இயலாது. சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுப்பதறகான கருத்தை முன்வைக்கும் யோசனை இதன் இறுதியில் உள்ளது.
மீ-டூ என்பது அதன் வரம்புகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, ஒரு பெண்ணை தெருவில் யாரோஒருவர் தொந்தரவு செய்யலாம்; அந்த நபர், உடன் வேலை செய்யும் ஒருவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இது ஒரு பதிலாக இல்லை. இது, சீண்டலுக்கு எதிரான ஒருமுறையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட பல பெரிய வழக்கு விசாரணைகள் தடுமாறுவது போல் தெரிகிறது. முறையான செயல்முறை வேலை செய்யவில்லை மற்றும் பெரும்பாலும் சட்ட செயல்முறை என்பது ஒரு தண்டனை என்று ஒரு உணர்வு இருக்கிறது.
இந்த குறிப்பிட்ட வகையான வழக்குகளுக்கு குறிப்பிட்ட ஒரு புகாரல்ல. இது குற்றவியல் நீதி அமைப்புக்கு எதிரான ஒரு புகாராகும். விசாரிக்கப்பட வேண்டிய எல்லா வகையான குற்றங்களுக்கும் இது ஒரு பிரச்சனை. நாம் குற்றவியல் நீதி அமைப்புமுறையைப் பார்க்க வேண்டும் மற்றும் அதன் முன்னேற்றத்திற்காக வேலை செய்ய வேண்டும் - வழக்குகள் ஒழுங்காக பதிவு செய்தல், ஒழுங்காக விசாரிக்கப்படுதல், ஒழுங்காக வழக்கு தொடரப்படுதல் என மூன்று வெவ்வேறு கட்டங்களில் சரியாக பணி நடக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது பெண்களின் நலனில் மட்டுமல்ல; அவ்வாறு செய்வது தேசிய நலனும் உள்ளது.
இரண்டாவது அம்சம், 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒன்றுக்கு ஏதாவது ஒரு புகாரை கூறினால், மிக பழையதாக இருக்கும். இது போன்ற ஒரு வழக்கில் சரியான ஆதாரம் கண்டுபிடிப்பது கடினமானது. ஆனால் பல ஆண்டுக்கு முன் நிகழ்ந்த ஏதாவது ஒன்றை நிரூபிப்பது என்பது மிக கடினமானது.மேலும் 20 ஆண்டுகளாக இவ்விஷயத்தில் நீங்கள் எதுவும் செய்யவில்லை.
நீங்கள் யாரையாவது குற்றம் சாட்டுகிறீர்களானால், அவரை குற்றவாளியாக்க முடியாது. இது நியாயமான அமைப்பு அல்ல. நீங்கள் பல ஆண்டுகளாக எதுவும் செய்யாத பழைய வழக்குகளால் இங்கு பிரச்சனை.
அதே நேரம் விசாகா குழு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நீங்கள் நினைக்கிறீர்களா? புகழ்பெற்ற பெருநிறுவன வழக்கறிஞர் ஜியா மோடி, இந்தியாவை மாற்றிய 10 தீர்ப்புக்களில் இதுவும் ஒன்று என்கிறார்.
விசாகா தீர்ப்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அது உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு அடிப்படை பிரச்சனையைதொட்டது. பெண்கள் அதிகளவில் வீடுகளுக்கு வெளியே வந்து வேலை செய்யும் சூழலில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்களின் பொருளாதார அதிகாரத்திற்கு முக்கிய தடைகளில் ஒன்றாக பாலியல் தொந்தரவு உள்ளது; இதை, அவர்கள் பணியிடத்தில் சந்திக்கலாம்; இதனால் தங்கள் வீடுகளுக்கு வெளியே திறமையாக செயல்பட கடினமாக்குகிறது.
விசாகா குழு வழிகாட்டுதல்கள் மற்றும் அதிய தொடர்ந்து வந்த சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற விவாதங்கள் எழுந்துள்ளனவே?
சட்டம் ஒரு பழைய தீர்ப்புக்கு அப்பாற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, துன்புறுத்தல் பணியிடத்தில் மட்டும் நிகழ்வதல்ல. இது பணியிடத்திற்கு செல்லும் வழியில் இருக்கலாம்; உதாரணமாக,உங்கள் சொந்த வீட்டில் கூட நிகழலாம். ஒரு பெண் சில அறியப்படாத நபர் மூலம் வேட்டையாடப்படலாம். பாலியல் துன்புறுத்தல் நடைபெறக்கூடிய அனைத்து வகையான சூழ்நிலைகளும் உள்ளன.
ஒரு சிறந்த சட்டம் விரிவானதாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது பல்வேறு வகையான சூழ்நிலைகளை கையாளுவதோடு, அவற்றை எப்படி கையாள்வது என்பதையும் கவனிக்க வேண்டும். சமூக விஞ்ஞானிகள் மற்றும் உளவியலாளர்களின் உதவியுடன் இப்பிரச்சனையை விரிவாக பார்க்க வேண்டும். நீதிமன்ற சட்டத்தின்படி, இதை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். விசாகா தீர்ப்பைத் தாண்டி மேலும் ஏதாவது செய்ய வேண்டும்.
சட்டம் வரம்புக்குட்பட்டது. பணியிடத்தில் துன்புறுத்துதல் வழக்குகளை அது தான் கையாள்கிறது. இது ஒரு நபரைத் தண்டிக்கும் போது பிரச்சினையையும் கொடுக்கப்பட்ட தண்டனையையும் விரிவாக சமாளிக்க வேண்டும். மிக தீவிரமானது முதல் தீவிரமற்றது என, பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன. வெவ்வேறு தரங்களாக உள்ளன. எனவே, நாம் தண்டனையின் பல்வேறு நிலைகளையும் கொண்டிருக்க வேண்டும்.இது குறித்த நிறைய சிந்தனைகள் தேவை.
எனவே, பணியிட பாலியல் துன்புறுத்தல் குறித்த சட்டம், பணியிடத்திற்குள் என்ற வரம்புக்குள் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள்?
இது, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பதற்கு மட்டும் என்ற வரம்பை கொண்டிருக்கக் கூடாது; எங்கெல்லாம் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்கிறதோ அங்கு இருக்க வேண்டும்.
பல பாலியல் துன்புறுத்தல் பல வழக்குகள், ஒரு 'அவர் கூறினார் / அவள் கூறினாள்' என்ற ஒன்றின் கீழே உள்ளது. மூடிய கதவுகளுக்கு பின்னால் அடிக்கடி நடக்கும் பாலியல் துன்புறுத்தலை ஒரு பெண் எவ்வாறு நிரூபிக்க வேண்டும்? பெண்கள் எவ்வாறு புகார் செய்யலாம்?
அதிகமான குற்றங்கள் இவ்வாறு தான் நடக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கொலையை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொலைக்கான நேரடி சாட்சியங்களை பார்க்கப்போவதில்லை.எனவே, நீங்கள் சரியான விசாரணையை செய்ய வேண்டும்.இங்கேயும் அதுதான்.
இந்த சட்டம் சில பெண்கள் தவறாக பயன்படுத்தலாம் என்ற அச்சங்கள் சிலருக்கு உள்ளது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
எதையும் தவறாக பயன்படுத்தலாம். அதற்காக உங்களுக்கு ஒரு சட்டம் இல்லை என்று பொருளல்ல. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தவறாக பயன்படுத்தும் முயற்சியை தடுக்க வேண்டும். தவறான குற்றச்சாட்டுகள் இல்லை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்;அல்லது அவர்கள் உரிய நேரத்தில் நேரடியாக கண்டறியப்பட வேண்டும். ஒரு நியாயமான விசாரணையும் புலனாய்வும் இருக்க வேண்டும். ஒரு உள்நோக்கத்தோடு ஒருவர் அதை செய்தால், நிச்சயம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பெரும்பாலும், பாலியல் துன்புறுத்தல் அதிகாரம் உள்ள முதலாளிகளால், சம நிலையில் இல்லாத, தனக்கு கீழ் உள்ள ஊழியர்கள் மீது துஷ்பிரயோகம் செய்வதாக உள்ளது. ஐ.சி.சி. [உள் புகார்களை கமிட்டிகள்] பாரபட்சமின்றி செயல்படுவதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்துகிறோம்? அப்படியானால் அவர்கள் கீழ்நிலை ஊழியருக்கு சமமானவர்கள் என்று கருத முடியுமா?
இதற்கு ஒரு சுதந்திரமான விசாரணை வேண்டும். இதில் சுதந்திரமான குழுவின் கருத்து என்ன? நிச்சயமாக யாரும் சம்பந்தப்படாத நபரின் நிலைப்பாட்டை கவனிப்பதில்லை. பல சந்தர்ப்பங்களில், அங்கு ஒரு முதலாளி மட்டுமே; எனவே அமைப்பு, அவரை எதிர்த்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடும். அதனால்தான் மாவட்ட அளவிலான குழுக்கள் தேவை. உள் செயல்முறை என்பது ஒரு ஊழியர் அல்லது அதிகாரிக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்ததாகக் கருதப்படும் நிறுவனத்திற்கு எதிராக துஷ்பிரயோக நடவடிக்கையை எடுப்பதற்கான சூழ்நிலைகளுக்கு பொருந்துகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை நிவாரணத்திற்காக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமுன் அது பயனுள்ள நடவடிக்கையை உறுதி செய்கிறது.இது சாத்தியமற்றது எனில், சட்டம் சரியான வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
நண்பர் உள்ளிட்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, விசாகா குழு வழிமுறைகளுக்கு வழிவகுத்த பன்வாரி தேவி மேல்முறையீடு வேண்டுகோள் இன்னும் நிலுவையில் உள்ளதா? பன்வாரி தேவி தனது வழக்கில் நீதி கிடைக்கவில்லை; ஐந்து குற்றவாளிகளில் நான்கு பேர் இயற்கையாக இறந்துவிட்டார்களா? இதில் உண்மையில் உங்கள் கருத்து என்ன?
ஒரு செயல்படாத அல்லது குற்றவியல் நீதி அமைப்பு செயல்பாட்டில் தாமதம் போன்றவற்றை நீங்கள் தவிர்க்க முடியாத ஒன்று.
(நமீதா பண்டாரே, இந்தியா எதிர்கொள்ளும் பாலின பிரச்சனைகள் குறித்து அடிக்கடி எழுதும் டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.